Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-11

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – 

 

 

அத்தியாயம் – 11

 

 

சீமா மனதிற்குள் கறுவினாலும்…, வெளியே முகத்தை சீராக வைத்திருக்க தான் முயற்சி செய்தாள்……

அனைவரும் உண்ட களைப்பில் …, உருள…..உட்கார்ந்த படிதான்…

 

இளா அவ்வப்போது …, சீமாவின் முகமாற்றங்களை பதிய வைத்து கொண்டான்…..

வேதாவிடம் இளா கண்ணசைத்து…., சீமாவை சுட்டி காட்டினான்….

உடனே வேதா….,

 

“வீட்டுல சொல்லிட்டு வந்தியாடி சீமா….?. மணி பத்தாகுது…. அண்ணனும் என் அண்ணியும் கவலைபட போறாங்க ….பாவம்டி அவங்க…..”

எப்படி கிளம்பரதா இருக்க….? வந்த.., கொட்டிகிட்ட…, இன்னுமா நடைய கட்டுல…..இவை எல்லாம் அடங்கியிருந்தது அவரது பார்வையில்…… வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஜீராவில் ஊறிய ஜிலேபி போல நாசுக்காக நாவை வந்தடைந்தது….

 

“என்ன ஆன்டி……..? உங்க செல்ல மருமக நான்…. முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்கேன் …. தங்கிட்டு  போனால் தப்பா….? என்ன துரத்தரதுலயே குறியா இருக்கீங்க……?. இளா, ஆராலாம் வேற இருக்காங்க… எனக்கும் ஜாலியா இருக்குமில்ல …?” 

 

இளா , ஆராவெல்லாம் இருக்கிறதினால தாண்டி உன்னை கிளம்ப சொன்னேன்….. உனக்கு ஜாலிதான்…. எங்களுக்கு எம்புட்டு ஜோலி கொடுக்க போறீயோ….

வாயால் சொல்ல முடியாதவரின் கண்கள் அத்தனையும் காட்டியது….. இளாவைப் பார்த்து..,

இதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்று  வேதா மேல் நோக்கி கைவிரித்தார்…

(ஊப்பெர் வாலா வாக பார்த்துஏதாவது பண்ணினா தான் உண்டாம்….) சொந்தக்காரி ஒருத்தி, சோத்துக்கு செத்த ஒருத்தனை திடுதிப்புன்னு கூட்டிட்டு வந்த அதிர்ச்சி.., நம்ம அம்மாடக்கர் வேதாவை  ஆஃப் செய்திருந்தது) இளாவுக்குதான் பாவம் …, கோபத்தில் மூக்கு சிவந்து விடைத்தது……..

 

 “விக்……..தம்பி எப்ப கிளம்புவாரு…..?”வட்டுருட்டாண் மண்டையனை காட்டி வேதா  கேட்க…..

 

“ஆன்டி…அவனை நைட்டுல தனியா எப்படி அனுப்பறது……?”

 

இளா , வேதாவை உள்ளே போகுமாறு சைகைக்காட்ட.., வேதா சத்தமின்றி உள்ளே நகர்ந்தார்..….

 

“ஆமாம் ….இந்த விக்கு மண்டையன் தனியா போகப் போயி.., அவன் மண்டைய பார்த்து நாயெல்லாம்  வளைச்சுகிச்சுன்னா…..? ஆளும் … , அவன் மண்டையும்……..நல்லா பைரேட்ஸ் ஆஃப் தே கரீபியன் படத்தில வர்ற ஜூனியர் ஆர்டிஸ்ட் போல இருக்கான்…..” 

 

“இளா…ஆர் யூ ஜெலஸ்….? ஹீ இஸ் மை பெஸ்டி ஒன்லி……..”

 

“பாருடா….எனக்கு ஏன் பொறாமை….? உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா…? நீ யாரோ நான் யாரோ… இப்போ நாம வெறும் ஃபேமிலி ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்….. நான் உன்னை ப்ரெண்ட்டா மதிச்ச காலமும் உண்டு….. நான் பழைய இளாங்கிற நினைப்பில, வாலாட்டுற வேலை எல்லாம் வேணாம்….?  வாலை மட்டும் நறுக்கிட்டு சும்மாவிட்டுடுவென்னு மட்டும் நினைக்காத….?  ஏதோ பக்காவா பிளான் போட்டுருக்கன்னு மட்டும் தெரியுது……. அப்படி ஏதாவது பண்ணின …, இருந்த இடம் தெரியாமல் அழிச்சிடுவேன் உன்னை….. மைண்ட் இட்……” 

 

 “நான் உன் மேல காதல்ன்னு சொல்றேன்…, ஆனா நீ மோதல்ன்னு நினைச்சிட்டியே இளா……! இல்லைன்னா விக்ரமை பார்த்து ஏன் அப்படி முறைச்ச…..?” சீமா தான்  பிதற்றினாள்…..

 

“பின்ன மொறைக்காம, என் ஆராவை பார்த்த பார்வைக்கு… அவனை நொறுக்கியிருப்பேன்…. என் டாலியொட வீட்டுல எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கணும்னு விட்டுட்டேன்….. 

அப்புறம் ஃபார்  யூவர் கைன்ட்  இன்ஃபர்மேஷன்.., ஐ அம் இன் லவ் வித் மை ஆரா…….. சும்மாவே ஆராவிற்கு எதாவது ஒன்னுன்னா விட மாட்டேன்… இப்ப அவ என்னோட பாதி , அவளுக்கு உன்னாலயோ, உன் பெஸ்டீ ,விக்கு மண்டையனாலயோ ஏதாவது ஆச்சு….. இறங்கி செஞ்சிடுவேன் ரெண்டு பேரையும்….”

 

சொன்னதோடு விடாமல்,

 

“டேய் .., விக்ரம்…. இங்க வா….” 

சொடக்கு போட்டு கூப்பிட்டான் இளா,  திரு திரு விழிகளோடு திருடன் போல வந்து நின்றான் விக்ரம்……

 

“அது என்ன ….?ஆராவை அப்படி பார்க்கிற…..? மன்னிப்பு கேட்டதோட எல்லாரும் மறந்துட்டோம்னு நினைச்சியா….? இன்னொரு முறை உன் கண்ணு அவ மேல இருந்ததை பார்த்தேன்…..

நாளைக்கு விடியும்போது உலகத்தை , பார்க்க மாட்ட நீ. வந்தோமா…, மூக்கு பிடிக்க தின்னோமான்னு போயிக்கிட்டே இருக்கணும்…..இப்ப நீ போகலாம்…..”

  

 இளா  போ என்றதும் , ஹப்பா…….! பெருமூச்சுடன் விக்ரம் நகர…, 

 

“டேய் …..ஒரு நிமிஷம் நில்லு,”

 

“சொல்லுங்க ஜி…”. பம்மிய விக்ரம் தான்…

 

“இந்த வீட்டுல மூணு லேடீஸ் இருக்காங்க தெரியுமா…?” 

“ஆங்……தெரியும் ஜி……”

“தெரிஞ்சும் …, பாதி அண்டர் வேருக்கு டிரெய்லர் போட்டு காட்டிட்டு , அங்கிக்கும் இங்கிக்கும் நடனமாடிக்கிட்டே திரியுற….? ஜாக்கி ஜட்டிக்கு.., அந்த கம்பெனிகாரங்களே விளம்பரம் பண்ணிப்பாங்க…. நீ பண்ண தேவையில்லை புரியுதா…?”

“ எல்லாம் சரி, பேன்ட்டை  எங்கடா போடுவாங்க…..?”

………..

“ஸ்ட்ரிப்பா இடுப்புல நிக்கனும் பேன்ட் இல்லைன்னா பெல்ட் போட்டு டைட் பண்ணனும்.., இப்படி இப்ப விழுமோ , அப்பவிழுமோன்னு , பார்க்கிறவங்களுக்கு பீதிய கிளப்ப கூடாது….ஏன் பெல்ட் வாங்க காசில்லையா….?”  சீரியஸாக கேட்டான்  இளா….

 

“திஸ் இஸ் டூ மச் இளா….. ஹி இஸ் மை கெஸ்ட்….” சீமா இப்போது சீரியஸ் ஆனாள்.

 

“அப்ப உன் கெஸ்ட்ட , கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு போயிருக்கனும்….”.

 

“இது என் ஆன்டி வீடு… என் வீடு போலத்தான்…..”

 

“ஓஹோ அதான் என் மாமா செத்ததும், அத்தையை உங்க வீட்டுல வச்சி சோறு போட்டு காப்பாத்தினிங்களோ…? இத்தனை வருஷத்துல சொந்த அத்தை வீடு இதுதான்னு  தெரியுமா உனக்கு..? முதல் தடவையா எட்டி பார்த்தவளுக்கெல்லாம் இங்க அவ்ளோ சீன் இல்ல….  கிளம்பு…”

 

சொல்லி முடித்தவன்.., விக்ரமை பார்த்து சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ,என்ற பார்வையை தந்துவிட்டுபோயி கொண்டே இருக்க….,

 கண்களில் பீதியுடன், சீமா …  இளாவின் இந்த நேரடி தாக்குதல்…, அதோடு ஆராவுடன் காதல்.,. எல்லாமும் பெரிய அதிர்ச்சி….. திட்டம் போட்டது முதல் கொண்டு மோப்பம் பிடிச்சிட்டானே…..

 

சுற்றி முற்றி பார்த்துவிட்டு…, நல்லவேளை யாரும் பார்க்கல….

(ஆமா… …எதிர் ரூமின் ஜன்னலின் வழியே ஒட்டு பார்த்திருந்த …, கிருஷ், ரோஜா, வேதா அதோட ஆரா, இவங்க நாலு பேர தவிர யாரும் பார்க்கல……….) நிம்மதி மூச்சுவர..,அமைதியாக இருந்து ஆட்டத்தை கலைப்போம்…. முடிவுடன் நகர்ந்தாள் சீமா…..

 

இளா உள்ளே போனதும் , “அனைவருக்கும் சந்தோஷம்” திட்டத்தின் கீழ், இளாவிற்கு கை, கொடுத்து கட்டி பிடித்து பாராட்ட…, ஆரா மட்டும் ஓடி வந்து ஜம்ப் பண்ணி , கிஸ்ஸடித்து விட்டாள்…. (நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை..,  கன்னத்துல தான்)

 

கிருஷ் வழக்கம் போல மூக்கில் பம்படித்து கொண்டிருந்தான்….அனல் காற்று சுற்றிலும்……..

 

இது தெரியாத ஆரா…., வேதாவிடம்..,

 

“மாதாஜி , எனக்கு பசிக்குது……..” (ஆத்தி………. திரும்பவும் சாப்பாடா …..? இது ஏதோ புது நோய் போல இருக்கே….)

 

“ஏன்டி கொட்டிட்டு வந்து முழுசா .., பத்து நிமிஷம் ஆகல….., உனக்கு மட்டும் ,அதுக்குள்ள எப்படிடி….?” – கிருஷ்..

 

“அண்ணா , இளா உயரத்துக்கு ஜம்புனேன்ல இப்ப… , அப்ப , என் வயித்துக்குள்ள ஒரு பெரிய பள்ளம் விழுந்து , இடம் காலியாயிட்டுண்ணா…….. சீக்கிரம் நிரப்புலன்னா அப்புறம் கேஸ் ஃபார்ம் ஆகிடும்…. 

ஆராவின் , இந்த புது கால்குலெய்சனை பார்த்து வியந்து நின்றான் கிருஷ்… 

“என்னைய விட பெரிய ஆட்டக்காரியா இருப்ப போலயேடி”

 

“இருக்கமாட்டோமா பின்ன, நாங்கெல்லாம் புரோஃபேஷனல் ஈட்டர்ஸ்.” ஆரா டீஷர்ட் காலரில் ஆட்டி பெருமை பட்டுகொண்டாள்.

 

“சரி …, வாடா லட்டு , பாதாம் பால் கலக்கி தரேன்…..” சிரித்தபடி வேதா அவளை அழைத்து போனார்…

 

“ சீக்கிரம் உருட்டிட்டு  போ தாய்கிழவி , இந்த அண்டாவை” கிருஷ்ஷின் விரட்டலுக்கு இளா, அவன் மண்டையில் கொட்டு வைத்தான்.

 

இன்னும் கடுப்ஸ் விழிகளொடு  இளாவை முறைத்து கொண்டிருந்தான் கிருஷ்…

 

“என்னை எதுக்குடா முறைக்கிற மச்சான்……?” என்ற இளாவின் கேள்விக்கு…. கிருஷ்.,

 

“இப்ப இங்க என்ன நடந்ததுன்னு உனக்கு எதுவும் தெரியாது ……?”

 

“அவளுக்கு பசி எடுத்ததுக்கு என்னை ஏண்டா இப்படி பார்க்கிற….? வேணுமின்னா நீயும் போயி பாதாம் பால் குடி….”

 

பல்லை நற நறத்த கிருஷ் …, 

“பாதாம் பால் இல்ல மேட்டர்…. நான் கேட்டதே இங்க நடந்த மேட்டர் பத்தி தான்…அது என்ன நீங்க புதுசா கமிட் ஆனா போல தெரியலையே…? பாய்ஞ்சி வந்து முத்தம் கொடுக்கிறா அந்த பன்னி…..”

 

“ஓஹோ….. அதுதான் உன் பிரச்சனையா….? அவளுக்கு என் மேல காதல்லாம் இல்லை…, நான் காலில் விழுந்து கெஞ்சி கதறுனதை பார்த்து இரக்கப்பட்டு , கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இருக்கா….. பாரேன் ரோஜா… இவன் எப்படி பேசுறான்னு…?” ரோஜாவிடம் நியாயம் வைத்தபடி மீண்டும் கிருஷ்ஷை பார்த்து…,

“அடேய்…அறிவு கெட்ட மச்சான்…. இப்ப ஆரா கொடுத்தாலே முத்தம்…. அது நீ காண்டாகுற அளவுக்கு…, காதல் முத்தமெல்லாம் இல்லை….

டின்னர்ல மொக்கு மொக்குனு மொக்குனாலே மோர்க்குழம்பு.., காலையிலிருந்து காலி பண்ணினாளே குலாப் ஜாமூன்…, சாயங்காலம் தின்னா பாரு பால்கோவா ….. அப்புறம் இப்ப குதூகலமாக குடிக்க போயிருக்காளே பாதாம் பால் அது போலத்தான் இந்த முத்தம் அவளுக்கு…., நான்  சீமாவை சமாளிச்சிட்டு வந்த ஆர்வத்தை வெளிப்படுத்திட்டு…… போயிருக்கா….”

 

கிருஷ், அமைதியாக யோசிக்க…, ரோஜாவிற்கு தான் அதிர்ச்சி…

 

“அண்ணா………? அப்ப லட்டு ……..”

 

“சொல்லுமா…..?” இளா கேள்வியாய் பார்க்க….

 

“புரியலையாடா……?. ஷாக்காமா…..!!!!..”.கிருஷ் உதவிக்கு வந்தான்.

 

“சாயங்காலத்தில இருந்து., ஆரா உங்களை …, காதலிப்பது போல பார்த்தது.., காதலிப்பது போல பேசியது…, காதலிப்பது போல , கன்னத்தில் முத்தமிட்டது…., அத்தனையும் நடிப்பா….????. கோபால்…சொல்லுங்க கோபால்…..????” சரோஜா தேவியாக மாறிய கிருஷ் அலப்பறை கொடுக்க….

 

அவன் முதுகில் இடி விழுந்தது……ரோஜா தான் கடுப்பில் சாத்திவிட்டாள்……. இளாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை….

 

“ஆ……..!!! ஏய் …, ஐராவதம் …, இப்ப எதுக்குடி உன் தும்பிக்கைய வச்சி ,இந்த பச்ச புள்ளைய அடிச்ச….?” 

 

“இப்ப இங்க எவ்வளவு சீரியஸான விஷயம் போயிட்டு இருக்கு….., கோபால், அமலாபாலுன்னு ஆக்டிங் கொடுத்திட்டு இருக்கீங்க……இதுல நான்  யானையா….?” இன்னும் குமுறினாள் ரோஜா….

 

“வெள்ளை யானையின்னு பாராட்டினா கூட தப்பா மக்களே….? என்னை அடிச்சிட்டீல்ல ….? இனி நீ கருப்பு கும்கி …போடி….”

 

இளா  அவர்களை பார்த்து..,“சரி.. சரி ..விடுங்க… உங்க கொஞ்சல்ஸ் எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க..…. திருப்பி இப்போதைக்கு தனியா பேச முடியாது …, சீமா நாம எப்ப சிக்குவோம் …, எதுல சிக்குவோம்ன்னு ,கண்ணுல வௌக்கெண்ணை விட்டுட்டு திரிவா…”

“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா கேளுங்க…. ஆராவுக்கு என் மேல ,அன்பு,அதீத பாசம், எக்ஸ்ட்டிரா லார்ஜ் அக்கறை எல்லாம் இருக்கு…”

“ஆனால் காதல் இருக்குன்னு என்னால உறுதியா சொல்ல முடியல….. இல்லாமல் போகாது… அவ எனக்காக பிறந்தவ…. வேணுமின்னா என் மேல உள்ள காதலை உணராமல் இருப்பா…..” 

“என் காதலை சொன்னதுக்கு அப்புறம் …, லைட்டா ஒரு மாற்றம் இருக்கு…, அதை இப்ப நாம நம்ப வேணாம்….. அவ கொஞ்சம் ஸ்லோ பிக் அப்…..

இன்னும் படிப்பு முடிய மூணு மாசம் இருக்கில்ல…. கொஞ்சம் கொஞ்சமாக என்னை புரிய வைக்கிறேன்……. என் காதல் அவளை மாற்றும்….”

“சிலுக்கு கிட்ட லட்டுவ லவ் பண்ணறேன்னு சொல்லி அவளை இப்போதைக்கு ஆஃப் பண்ணியிருக்கேன்…ஆனால் ஆரா ஸ்ட்ராங் இல்லைங்கிற  விஷயம் சிலுக்குக்கு தெரியாம நாம பார்த்துக்கணும்… ஆராகிட்ட இருந்து சின்னதா ஒரு க்ளு கிடைச்சிட்டாலும்.., சிலுக்கு சில்மிஷத்தை காட்டிடுவா….அப்புறம் எங்க கல்யாணத்தை உங்க பசங்க கல்யாணத்தோட சேர்த்து நடத்திக்க வேண்டியதுதான்….”

 

இளா சொல்லி முடித்ததும் இருவருக்கும் விஷயம் புரிந்தது…. 

 

“அந்த சிலுக்கு இருக்காளே…. அவள்லாம் ஒரு ஆளுன்னு அவளுக்கு எதிரா நம்மள பிளான் போட வச்சிட்டாளே….!”கிருஷ்  கொந்தளிக்க,

 

ரோஜா .., “பாரு கிருஷ் நாம அவளை .., அப்படி ஈசியா விட்டுட முடியாது…. இன்னைக்கு அவ வீட்டுக்கு வந்தது…, கூடவே அவ அல்லக்கைய கூட்டிட்டு வந்தது…,  அவளும் தங்கி.., முன்ன பின்ன தெரியாத , அவனையும் இங்கேயே ஸ்டே பண்ண வச்சதுன்னு…., அவளோட எல்லாப் பிளானும் சக்சஸ்………. இவ்வளவு தூரம் நாம கலாய்ச்சி, அண்ணா அவங்கள காய்ச்சி எடுத்தும் .., அவ இங்கயிருந்து  அசையல…. அப்போ அவ ரொம்ப டேஞ்சர்…. நாம ஜாக்கிரதையா இருக்கணும்….”

 

ரோஜா சொல்வது மிகவும் சரி என்பது போல இருந்தது…, கெஸ்ட் ரூமில்  சீமா, விக்ரமிடம் பேசியது…

 

 

கெஸ்ட் ரூமில் இருந்த சீமாவும் , விக்ரமும் ….. கடுப்பில் இருந்தனர்….

 

விக்ரம் சீமாவிடம், 

“என்ன சீம்ஸ்…..?  நான் பாட்டுக்கு  பார்ட்டியில என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்…. எனக்கு ஒரு ஷோ காட்டறன்னு , இங்க கூட்டிட்டு வந்து……….., என்னை வச்சி ஷோ காட்டிட்ட..?”

“ஆனா ஒன்னு….., உன்னை கம்பேர் பண்ணும்போது…, எனக்கு பரவாயில்ல போலயே…..அந்த இளா , உன்னை கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டுட்டு போயிட்டான்…..”

 

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல….. ஜஸ்ட் நவ் ஐ கால்ட் வினீத் …ஸ்டில் பார்ட்டி ஈஸ் கோயிங் ஆன் பேபி ……. லெட்ஸ் ஜாயின்……..”

 

பேசி முடிக்கும் முன் ……’சப்’……………… அறை விழுந்திருந்தது விக்ரமின் கன்னத்தில்….. கொதித்து போன சிலுக்கு…,

“ஆரா யாரு, இளா யாருன்னு சொல்லித்தானே கூட்டிட்டு வந்தேன்…, ஞாபகம் இருக்கா… இல்லையா……? அதுக்குள்ள அவங்க சொத்து மதிப்பையும் மறந்துட்டியா..? கோடிக்கணக்கில் சொத்தை வச்சிக்கிட்டு அதோட மதிப்பு தெரியாமல் ,ரெண்டும் பஞ்ச பராரி மாதிரி இங்க வந்து சோத்தை அமுக்குறதை பார்த்ததும் அதுங்க மேல இருந்த ஆர்வம் குறைஞ்சு போயிட்டுதா…?”

 

“மத்தவங்க இருக்கிறாங்கன்னு அறிவு இல்ல…? ஆராவ பார்த்து  செக்ஸி புக்ஸ்சின்னு அவங்க முன்னாடியே உளறி வச்சி என் மரியாதையையும் வந்த உடனே டேமேஜ் பண்ணிட்ட..கொஞ்சம் விட்டிருந்தாலும் அவளை அப்படியே முழுசா  முழுங்கியிருப்ப….., இதையெல்லாம் பார்த்திட்டுதான் அவன் கடுப்பு ஆகி ரவுண்ட் கட்டிட்டான். ஒரு பொண்ணை சைலண்ட்டா பிக் அப் பண்ண துப்பு இல்ல…இப்ப எதுவுமே நடக்கல, நான் மட்டுமேதான் அசிங்கப்பட்டென்னு சீன் போடற. தொலைச்சிடுவேன் ராஸ்கல்..என்ன இளாவைப் பார்த்து மிரண்டு போயிட்டியா?”

விக்கியின் கலாய்ப்பிர்க்கு , நெற்றிக்கண்ணை திறந்துவிட்டிருந்தாள் சீமா.

 ( இந்த விக்கு மண்டையன்  யார் அசிங்கப்படுத்தினாலும், வெக்கப் படாம அசிங்கப்படுவான் போலவே…. கவரி மான் ராஜா பரம்பரை..!)

 

 

“அப்படியில்லை சீம்ஸ்.  நீ கிளம்பி வந்த வேகத்தை பார்த்ததும், அவங்கள ஏதோ சிறப்பா செய்யப் போறேன்னு நினைச்சி வந்தேன். ரொம்ப டம்மி பண்ணிட்டாங்க உன்னை.”

 “திரும்பவும் அதையே பேசாத விக்கி கொலை பண்ணிடுவேன் உன்னை….”

 

“ஓக்கே பேபி.., டேக் இட் ஈஸி…… கூல்… அடுத்து நான் என்ன பண்ணனும் ? என் மாமா ஜம்புலிங்கம் பத்தி எடுத்து விடட்டா…?.. அப்படியே அந்த கிருஷும் இளாவும் ஆடி போய்டுவாங்க பாரு சீம்ஸ்…”

 

“உன் மாமா திருச்சிக்கு எம் எல் ஏ   தான ….. என்னவோ திருச்சியே அவரதுங்கரது போல பேசுற…. இவனுங்களுக்கும் நிறைய பொலிட்டிசியன்களை தெரியும்……லாஸ்ட் ஃபோர்  இயர்ஸ்ல இளாவோட வளர்ச்சி என்னன்னு தெரியாமல் ரொம்ப லோக்கலா பிளான் போடுற…. இவனுங்களை மிரட்டவோ பயமுறுத்தரதோ முடியாத விஷயம்… இவனுங்கள நல்லா கதற வைக்கணும் ,பதற வைக்கனும்…. அதுக்கு நம்மளோட டிரம்ப் கார்டு ஆரா..”

 

இருவரும் சதி வேலையில் பிஸியாக இருந்த அதே நேரத்தில், ஆராவிற்கு பால் காய்த்து கொடுத்துவிட்டு ஸ்டவ்வுடன் , ஆராவின் அடங்கா வயிறையும் ஆஃப் செய்த பின் , வேதாவுக்குள் ஒரே யோசனை….  ஏதோ பொறி தட்ட , நேராக போயி கிருஷிடம்,

 

“கிருஷ் உன் ஃபோனை  கொடுடா…”

 

“இருந்த பப்ஜிய  ஆல்ரெடி டெலீட் பண்ணிட்டேன்  புஜ்ஜிமா….  “

 

“அந்த கேம் என் மொபைலிலேயே இருக்கு…

 முன்னாடி உன் ஃபோனை கொடுடா….” 

வேதா கிரிஷிடம் இருந்து பிடுங்க, 

 

“பின்ன வேற எதுக்கு என் போன் ? சீக்ரெட் பேட்டர்ன் கோட் போட்டு லாக் பண்ணியிருக்கேன் மை டியர் மம்மி. இப்ப என்ன பண்ணுவ…….. ,இப்ப என்ன பண்ணுவ…………..?” பழிப்பு காட்டியவனிடம் ,

 

“தெரியும் , தெரியும் …இருக்குற புள்ளியில  மேல இருந்து ஒரு பெரிய ஜி போடணும் அதான….? இதுக்கு இம்புட்டு பில்ட் அப் ஆகாதுடா …! தினம் நைட் என் மொபைல் டேட்டா  டாட்டா காட்டுனதும் , உன்னொடதுலதான் ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணிக்கிறேன் பேட்டா….. நான் உனக்கு  அம்மாடா …… அது ஞாபகம் இருக்கட்டும் வரட்டா….”

என்று வலுக்கட்டாயமாக கிருஷின் ஃபோனை வாங்கி சென்ற வேதாவை அனைவரும் கேள்வியாய் நோக்க கிருஷ் கொலைவெறியுடன் பார்த்திருந்தான்.

 

உள்ளே போன வேதா நேராக கெஸ்ட் ரூமிற்க்கு போய்,

“உனக்கும் அந்த விக்குற தம்பிக்கும் பால் எடுத்துட்டு வரட்டுமாடி சீமா…?”

 என்றபடி உள்ளே நுழைய உள்ளே இருந்த கருப்பு ஆடுகளுக்கு வயிறு கலங்கியது.

 

“வே…ணாம்…ஆன்டி…”. சீமா தயங்கிய படி வாயிலே டைப் அடித்தாள்…

 

“விக்கிற தம்பி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குது..”

 

“நோ ஆன்டி…. ஐ டோண்ட் வாண்ட் மில்க்.”

 

“நோ எம்டி மிலுக்கு …., விக்கிற தம்பி….. ஃபுல் பாதாம், பிஸ்தா மிக்சிங் எனர்ஜி மிலுக்கு …. யூ டிரிங் இம்பார்ட்டன்ட் விக்கிற தம்பி……”

 ( அது வெறும் பாலில்லை, விக்கிற தம்பி… நிறைய பாதாம், பிஸ்தா சேர்த்த புத்துணர்வு பால்.. நீங்க கண்டிப்பா குடிச்சே ஆகணும்  விக்கிற தம்பி)

 

“இட்ஸ் ஓகே ஆன்டி…….” வேதாவின் ஆங்கிலப் புலமை, விக்கிக்கு இன்னும் பதட்டத்தை கூட்டியது….. 

 

“சரிடி சீமா , இந்த கப்போர்டுல  தான் மூஞ்சி தொடைக்குற துண்டு , புது பெட்ஷீட் எல்லாம் இருக்கு ,எடுத்து படுக்கை மேல பரத்திவிட்டு ,விக்கிற தம்பிய தூங்க சொல்லிட்டு என் ரூமில வந்து நீ படுத்துக்க..…. நாங்க எல்லாம் பதினோரு மணிக்கு மொட்டை மாடிக்கு போகப் போறோம்… ஆராவுக்கு மாடியில தூங்கணுமாம்.” என்றபடி பெட்ஷீட்டை எடுத்து காட்டி விட்டு வெளியே வந்தார் வேதா…  

 

வெளியில அனைத்து கூட்டமும்  வேதாவிற்கு காத்திருக்க… , வேதாவோ..,

“ஏண்டி ரோ, அந்த வெள்ளை கலரு ஹெட் செட் வச்சிருந்தியே ,அதை எடுத்திட்டு வா….”

ரோஜா கொண்டு வந்து கொடுத்ததும், வேதா அவரது ஃபோனில் இணைத்து , காது மாட்டியை, காதில் மாட்டிக்கொண்டு உட்கார,

 

“இந்த தாய் கிழவிக்கு என்னா லொள்ளு பார்த்தியா இளா…?”

“இங்க ஓடிச்சு, அங்க ஓடிச்சு,……. கடைசியா என் ஃபோனை புடிங்கிட்டு போய் நேரா.., நம்ம எதிரி கூடாரத்துக்குள்ள நுழைஞ்சது….. இப்ப இத்தனை பேரும் என்ன விஷயம்னு அந்தம்மா மூஞ்சை பார்த்துட்டு இருக்கோம்…. கூலா போயி, ஹெட் செட் போட்டு பாட்டு கேட்க்குது பாரு..”

கிருஷ் தான் இளாவிடம் கொந்தளித்தான்…

 

“அடேய் கம்முனு இருடா…. சதி திட்டத்தை லைவ்வா கேட்டுட்டு இருக்கேன்….”

 

“என்னா சதி திட்டம்…? என்னை போட்டு தள்ள  ஏதாவது  கூலிபடைக்கிட்ட ஆலோசனை நடத்திட்டு இருக்கியா தாய்க்குலமே….?”

 

“ஆமாண்டா நீ பெரிய இவன் பாரு , கூலிப்படை கேட்குது இந்த முகர கட்டைக்கு……ஆன் தி வேல எறும்ப பார்த்தோமா என்ஜாய் பண்ணி நசுக்குநோமான்னு இல்லாம…, எறும்ப கொல்றதுக்கு, எமதர்மன  ஃபிக்ஸ் பண்ணுவாங்களாம் … … ஆனாலும் உனக்கு ஏத்தம் ரொம்ப அதிகம் டா…..” 

 

“அதானே பார்த்தேன்…. என்னடா ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்னை ஓரண்டை இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே , ரெண்டு மணி நேரம் ஆகப் போகுது, இன்னும்  ஒரு எஃபெக்டும் இல்லையேன்னு நினைச்சேன் இழுத்துட்ட….. சரி என் ஃபோன் எங்க…?”

 

“அட …, இவன் ஒருத்தன்.., வாட்ஸ்அப்புல வாய் உடுறதும் இல்ல மூஞ்சி புக்குல மூஞ்ச காட்டுறதும் இல்ல, எவனும்  காலும் பண்ணாம, எவனுக்கும் நீய ஃபோனும் பண்ணாம , மெஸேஜும் அனுப்பாம  அதெல்லாம் ஒரு ஃபோன்…     ஃபோட்டோ மட்டும் எடுக்கரத்துக்கு ஒரு கேமரா போதுமேடா எதுக்கு உனக்கு அண்ட்ராய்டு….?”

 

“அம்மா நான் ஃபோட்டோ பிடிக்கிறேன் இல்ல,  என் ஃபோனை வச்சி பொறி உருண்டை விக்கிறேன்…..  அது  இல்லாம கை ஒடிஞ்சது போல இருக்கு…… கொடு சீக்கிரம்……”

 

“  2.0 படத்துல என் ஆளு அக்ஷய்குமார்  என்ன சொன்னார்..? ஒவ்வொரு மொபைல் வச்சிருக்கவனும் ஒரு கொலைகாரன்….. புல்லினங்காளை கொல்லுற பாவம் நமக்கு எதுக்குடா…? ஃபோன்லாம் உனக்கு வேணாம் டா ராசா…..”

 

“சரி ,அப்ப உன் ஆளு சொன்னதுக்கு உன் ஆன்டிராய்டு ஃபோனை தொலைச்சு தலை முழுக  வேண்டியது தானே……. நானாவது நிம்மதியா இருப்பேன் உன் டிக்  டோக் டப் மாஷை  பார்க்காம….” 

 

“காடு வா வாங்குது…..வீடு போ போங்குது……. இந்த வயசுக்கு மேலே  சிட்டுக்குருவியோ ,சிங்கமோ எதை கொன்னாலும் ஒரே கணக்கு தானடா… அதான் அந்த  பாவத்தை  இந்த குடும்பத்திற்காக நான் ஏத்துகிடறதுன்னு  முடிவு பண்ணிட்டேன் …” (அய்யோ ராமா…..,  முடியலையே…., )

 

 

கிருஷ் , #…………#?…!?????#…

குறு குறுவென பார்த்து கொண்டிருந்தான்…..  தம்பி இன்னும் டீ வரல அதே மாடுலேஷன்……..( பேசியே டயர்ட் ஆக்கிவிட்டுட்டு அந்த அம்மா, பாவம் புள்ள அதிர்ச்சியில் ஊமை ஆயிட்டு போல…கிருஷ் ரியாக்ஷனை  பார்த்தா வேதாவே இரக்கப்பட்டு, இறங்கி வந்து,

 

“சரி ,சரி… மூஞ்ச மூஞ்சுறு மாதிரி வச்சிக்காத…..அதை ஸ்பை வேலைக்கு வச்சிருக்கேன்.. முடிஞ்சதும் தரேன்… சீமா இருக்கிற ரூமுக்குள்ள என் ஃபோன் கூட உன் ஃபோன் கால் ஆன்ல இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருக்கேன்…”

 

ஆஆ………. அப்படின்னு ஒபன்ல இருந்தது எல்லாருடைய வாயும்…

 

“அட கேடி ஆத்தா….. உனக்கு என்ன ஜேம்ஸ் பாண்டுண்ணு நினைப்பா…? சரி எங்க வச்சிட்டு வந்த..?” 

 

“சீமாக்கிட்ட அந்த விக்கிறவனுக்கு பெட்ஷீட் போடுன்னு சொல்லிட்டு , அந்த பெட்ஷீட்க்கு கீழ வச்சிட்டு வந்திருக்கேன்டா.”

 

“அந்த பெட்ஷீட்டை போட சொல்லிட்டு அதுக்கு கீழேயே வச்சிட்டயா….? ரொம்ப அறிவு உனக்கு… இன்னும் கொஞ்ச நேரத்துல என்  ஃபோனை எடுத்துகிட்டு அந்த காட்டேரி வரும்… ரெடியா இரு…”

 

“யாருடா இவன்… நான் அந்த சீம சிங்காரியோட அம்மாவையே பாத்தவடா…. இவளுக என்னைக்கு பெட்டுக்கு ஷீட் போட்டாளுக…. தலகாணி உறை தவறி விழுந்தாலே குனிஞ்சி எடுக்க மாட்டாளுக… அவதான் செய்யப்போறா சேவை…. முன்னாடி என்ன பேசுதுங்கன்னு என்னை கேக்க விடு. அதுங்க ரெண்டும் சரியா பதினொரு மணிக்கு மாடிக்கு  பக்கா பிளான் போட்டுட்டு வருங்க பாரு….” பதில் சொல்லிய வேதா கிரிஷி டம் நிற்காமல் ஃபோனை நோக்கி போனவர்….

“கால் ரெக்கார்டு போட்டுட்டு வந்தேன்.. … முக்கியமான கட்டத்துல தான் இவனுக்கு டவுட் வரும்… இவனுக்கு விளக்கம் சொல்லியே எனக்கு ஓவர் டயர்ட் ஆவுது….”. புலம்பியபடியே ஹெட் செட் டை மீண்டும் காதுக்கு கொடுத்தார்…

 

அனைவரும் மீண்டும் அவரையே பார்த்திருக்க…, அண்ணி நான் இன்னும் கொஞ்சம் பால்கோவா சாப்பிட்டுகவா…? வேற யாரு நம்ம ஆராதான்……

 

“சாப்பிட்டிட்டு பல்ல விளக்கிடனும் லட்டு… ஒரு பவுல் தான் தருவேன்….”

போயி எடுத்திட்டு வந்து பால்கோவா வை  கொடுத்த ரோஜா ,மீண்டும் வேதாவிடம் செல்ல….

 

“ஏன்டி கையேந்தி பவன்….நீ என்ன வயிறு வச்சிருக்கியா இல்ல வண்ணாஞ்சாலு வச்சிருக்கியாடி…?  எவ்வளவு போட்டாலும் கொள்ளுது… இங்க உனக்கு கல்யாணத்தை பண்றதுக்கு நாங்க எல்லாரும் களவாணித்தனம் பண்ணிட்டு இருக்கோம்.. ஆனா நீ யாருக்கோ கல்யாணமுன்னு உன் கல்லாப்பெட்டிய நிரப்புறதிலயே குறியா இருக்க….? ஈவ்னிங் சரியா சாப்பிடல , எனக்கும் கொஞ்சம் கொடேண்டி…”

கிருஷ்  கேட்டுவிட்டு நிமிர்ந்து பார்க்க ….., அனைவரது முகத்திலயும் ரெட் லைட் எரிந்தது…

 

ரோஜா, “ஏன் கிருஷ்… ….. எப்ப பார்த்தாலும் லட்டுகிட்ட மல்லு கட்டுற… உன்னை விட அவ வயசுல சின்னவன்னு நினைப்பு இருக்கா உனக்கு… அவளே எப்பவாவது வர்றா… பிடிக்கறதை கேட்டு சாப்பிடுறா…. அது பொறுக்காதோ உனக்கு…..?”

 

வேதா…, முறைத்துவிட்டு துப்பறிவதில் பிஸியாக,

 

இளா,” ஏண்டா அவகிட்ட புடுங்கி திங்குற…? வேணுமின்னா கேட்டு திங்க வேண்டியது தானே..?” என,

 

அனைவரும் கிருஷை தாளித்து முடிக்க, பாவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அவனையே பார்த்திருந்த ஆராவைப் பார்த்து….. 

“அரிசிமூட்டை இந்த மூஞ்ச எங்கடி வாங்கிட்டு வந்த, எனக்கே பாவமா இருக்கு…..நீ மட்டும் எதுக்குடி சும்மா இருக்குற…? உன் பங்குக்கு ஏதாவது கேளு….”  கிருஷ்  கேட்டான்.

 

ஆரா அவனிடம்,

“அண்ணா குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வந்து தாயேன் …” என கெட்டதும் கிருஷ் மண்டையிலேயே கொட்ட, ஓடிப் போய் இளாவின் கையணைப்பில் பதுங்கி கொண்டாள்…. இன்னும் கடுப்ஸ் ஆன கிருஷ்…,

 

“இது வேறயா..?. பெருசா லவ் பண்ணிகிழிக்கிறது  மாதிரி  பொசுக்கு பொசுக்குண்ணு அவனை கட்டி பிடிச்சிக்குது….”

“கொடூரமான முறையில் கடுபேத்துறாங்க மை லாட்…” என்றபடி வேதாவை வேடிக்கை பார்க்கும் பணியில் சேர்ந்துவிட்டான்.

 

அங்கே வேதா வந்து சென்றதும் , பெருமூச்சுடன் சென்று கதவை தாள் போட்ட சீமா,

“இந்த கிழவி வேற…இம்சை, பெரிய இதுன்னு நினைப்பு இதுக்கு…”

 

“அவங்களுக்கு நம்ம மேல ஒரு டவுட்டோஹ்…? நம்மள ரொம்ப வித்தியாசமா பார்த்தது போல இருந்தது….” விக்ரம் கேட்க,

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… அவ்வளவு அறிவு கிடையாது அதுக்கு..” சீமா மட்டம் தட்டினாள்.

 

“சரி நம்ம விஷயத்துக்கு வா சீம்ஸ்… ஆராவை எப்படி டிரம்ப் கார்டா யூஸ் பண்றது..?”

 

“இப்ப வந்துட்டு போச்சே என் சொத்தை, அதுக்கு அது பெத்ததை விட அந்த ஆராதனா தான் உயிரு. அதுக்கு மட்டுமில்ல, ஆராவுக்கு ஒன்னுன்னா உள்ள இருக்குற அத்தனை கூமூட்டைகளும் செத்துருங்க……  அவளை எப்படியாவது உன்னை லவ் பண்ண வை.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்…”

 

“அட நீ வேற சீம்ஸ்… நான் ஆராவை பார்க்கிறத இந்த வீட்டுல இருக்கிற கதவு ,ஜன்னல் முதல் கொண்டு  பார்த்திருக்கும், ஆனா அவ என்னை ஏறெடுத்தும் பார்க்கல…. பொண்ணா அவ…? யூ நோ சீம்ஸ் ,  திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் டைம்  ஒரு கேர்ள் என்னை  பார்க்கவே இல்லை…, என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தெரிஞ்சுதான்னே தெரியல… அவ என்ன லவ் பண்ணுவான்னு நீ நம்பற..?”

 

“விக்கி ஆர் யூ ஸ்டுபிட்..? அவ உன் லுக்ல இம்ப்ரஸ் ஆகலன்னா, செயல்ல இம்ப்ரஸ் பண்ணு.. ஒரு பொண்ணை ஒர்கவுட் பண்ண முடியாதா உன்னால?”

 

“ம்……கும் நீ கூட இளாவை லவ் பண்ண வைக்கிறேன்னு தலை கீழா நின்னு பார்த்த ஒன்னும் நடக்கலையே…!”

 

அவனை முறைத்து வாயை மூட வைத்த சீமா…. 

“நீ தயவு செஞ்சி என்னை கடுப்பெத்தறத விட்டுட்டு, ஆராவா எப்படி மடக்குறதுன்னு யோசி.”

 

“நீ ஏதாவது பண்ணினால் சப்போர்ட் பண்ணலாம். நானா என்ன பண்றது. நான் இங்க கெஸ்டோட கெஸ்ட்.” இளாவின் கோபம் அவனை பயமுறுத்தியிருந்தது.

“இதுங்கள ஒரு வழி பண்ணாமல், இந்த வீட்டை விட்டு கிளம்ப மாட்டேன். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட… இரு என் மம்மிய  கூப்பிடுறேன்…. ஷீ ஈஸ் த ரைட் பெர்சன் டூ ஹேண்டில் தெம்..”

சீமா அவளின் தாய் கற்பகத்தை உடனே ஃபோனில் அழைத்தவள்,  

“மம்மி ஐ நீட் யூ…”

…………….

“ உனக்கு பிடிக்காத வீடா இருந்தாலும்,    எனக்கு  கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை பட்டீன்னா உடனே கிளம்பி கிருஷ் வீட்டுக்கு வா…” 

…………..

“எல்லாமே நமக்கு எதிரா தான் இருக்கு… அப்பா வேணாம்.. நீ மட்டும் வா மம்மி. உன்னால தான் அவங்கள சமாளிக்க முடியும்….”

……….

“ஓகே மம்மி தாங்க்ஸ்.. நாளைக்கு காலையிலேயே எதிர்பார்க்கிறேன் உன்னை…பை….”

 

பேசி முடித்ததும் விக்ரமிடம்,

 “மம்மி காலையிலேயே இங்க இருப்பாங்க.. மிச்சத்தை அவங்க பார்த்துப்பாங்க…”

 

சீமா விக்ரம் முகத்தில் நிம்மதி புன்னகை.

 

 

……