Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-12

Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-12

கண்மணி உனை நான் கருத்தினில்  நிறைத்தேன்  

 

அத்தியாயம் – 12

 

“விக்கி இப்ப நம்ம வேலைய மொட்ட மாடிக்கு போயி பார்ப்போம்… நீ ஆராவ மட்டும் டார்கெட் பண்ணு.. மத்தவங்களை நான் பார்த்துக்கிறேன்…”. நம்பியார் வேலைய நாசுக்காக செய்ய பிளான் போட்ட படி சீமாவும் ,விக்ரமும் தயார் ஆகினர்.. 

 

எல்லாவற்றையும் ஒட்டு கேட்டிருந்த வேதாவின் முகத்தில் புன்னகை.. 

 

“என்ன ஆச்சு டாலி சொல்லு…? அவளை  ஒரு அறை விட்டு, கூட வந்த அந்த கரப்பான் பூச்சியயும் சேர்த்து நசுக்கி வீட்டுக்கு வெளியே தள்ளிட்டு வந்துடுறேன்….” இளா.

 

“அதெல்லாம் பிரச்சினை ஒன்னும் இல்ல இளா.. 

ஏய் லட்டு போயி அண்ணனோட டிரஸ் எதாவது எடுத்து இளாவுக்கு கொடு,  மாத்தினதும் அவனை அழைச்சிட்டு மொட்ட மாடிக்கு வா..”

 

 ரெண்டு பேரையும் அனுப்பியவர், சீமா விக்ரம் பேச்சை ரோஜாவுக்கும் ,கிருஷிர்க்கும் போட்டு காண்பித்தார்….  ரெண்டு பேரும் அதிர்ச்சியாக,

கிருஷ், “அம்மா இவ ஒரு ஆளுண்ணு வீட்டுக்குள்ள விட்டது தப்பு… இளா சொன்னதை நான் செஞ்சிட்டு வரேன்..”

 

 

“நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லையா கிருஷ். இளாவுக்கும், ஆராவுக்கும் எதுவும் தெரிய வேணாம்.. தேவை இல்லாமல் சீம சிங்காரிய சண்டை போட்டு  பெரிய ஆள் ஆக்கிவிட கூடாது… எக்காரணத்தைக் கொண்டும் ஆராவ அவங்க நெருங்க விடக்கூடாது அவ்வளவு தான்…. கற்பகம் அண்ணி மேட்டரை நாளைக்கு பார்த்துக்கலாம்..”

 

“வாங்க மாடிக்கு போகலாம்… ரெண்டு பேரும் போயி படுக்கையை விரிச்சி விடுங்க மொட்டை மாடியில… நான் பழம் தண்ணி எல்லாம் எடுத்திட்டு வரேன்…”. நிலைமையை சுலபமாக கையாண்ட வேதா  ரோஜாவை யும் ,கிருஷையும் அனுப்பி வைத்தார் …

 

 

 

எல்லாரும் மொட்ட மாடிக்கு வர…., நம்ம ஹீரோயின் ஹீரோவுக்கு சட்டை எடுத்து கொடுத்திட்டு இருந்தாள்……. 

இளா ,

“இது வேணாம் அந்த டீ ஷர்ட்ட கொடு லட்டு….”.

 

“இதையே போட்டுக்கோ நல்லாயிருக்கு இளா….” ஆரா எடுத்து தந்த டிராக் பாண்ட், டீ ஷர்ட் சகிதம் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் புகுந்தான் இளா …

 

சீமா அண்ட் கோ முதல் மாடிய கிராஸ்  பண்ணும்போது  ஆராவின் குரல்   காதில் விழ….., ப்ரேக் போட்ட சீமா …, வா உள்ள போவோம்…. உன் குருவி உள்ள தான் இருக்கு என்று விக்ரமிடம் கிசு கிசு த்து  கிருஷ் ரூமிற்குள் அழைத்து சென்றாள்..

 

மொட்ட மாடிக்கு போன கிரிஷும் , ரோஜாவும் படுக்கையை விரித்து விட்டு,  இரவு உடைக்கு மாற அவர்களின் அறைக்கு திரும்ப… அங்கே இருவரும் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றார்கள்…

ஆரா தாமாக முன்வந்து விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தாள்…

 

கிருஷும், ரோஜாவும்,  ஆரா விக்ரமிடம் பேசியதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தது சில வினாடிகளுக்கு மட்டுமே….. வேகமாக அவர்கள் இருவரையும் நெருங்க……

 

விக்ரம் ஆராவிடம் கடலை போட ஆரம்பித்து இருந்தான் என அவன் உடல் மொழியே காட்டி கொடுத்தது….

 

கிருஷ் கொதித்து போயிருந்தான்….

“இந்த விக்கு மண்டையன் கிட்ட இவ பேச போயி தான அவன் பிட்டு போடறான்.. இந்த லட்டுவ நசுக்கி பூந்தியாக்கிடறேன்..”

ரோஜாவிடம் குஸ் குஸ் பேசி, கண்ணில்  பஸ்பம் காட்டி அடுத்த அடி எடுத்து வைத்தான் உள்ளே போக….

 

நெருங்கியவனின் கண்களில் கனலை கண்ட ரோஜா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்….

 

ஆரா விக்ரமிடம்,

“நீங்க என்ன போட்டுகிறீங்க…?”

 

“என்ன போட்டுக்கணும் ராட்….?”

விக்ரம் போட்ட கடலைக்கு சீமா புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தாள்….

 

“என்னது ராட்  டா…?”

 

“ஆமாம் ஆராதனா லயிருந்து  ‘ஆ’ வயும் ‘னா’ வயும் கட் பண்ணிட்டேன்  ராட், சொல்லு  ராட் நீ என்ன சொன்னாலும் போட்டுக்குறேன்.”

 

மூட்டை மூட்டையாக போட்டு கொண்டிருந்தான் கடலையை….

 

“சரி எதையோ ஒன்னை கட் பண்ணிக்கோங்க…..  உங்களுக்கு ஷர்ட் வேணுமா..? இல்ல டீ ஷர்ட் வேணுமா அண்ணா.?”

 

“என்னது அண்ணனா…? ராட்…. டோன் கால் மீ  லைக் திஸ்..”

 

“கழனியில போட்டா கடலை விளையும்… கடல்ல போட்டா எப்படிடா  விளையும்….பார்த்தீங்களா இதான் நம்ம ஆரா,” கிருஷின் விலாவில் குத்தினாள்.

 

கிருஷிர்க்கு கோபம் சிரிப்பாக மாறியிருந்தது.

 

“ஒஹ்ஹ் அண்ணான்னு சொன்னா பிடிக்கலையா….? நீங்க வேற அல்ட்ரா மாடர்ன்… கேளுங்க ப்ரோ.” ஆரா விக்ரமை விடாது கடுப்பெத்தினாள்.

 

“இந்த விக்ரம், அவ அண்ணன்னு சொன்னப்பவே  டீவி ய மரியாதையா ஆஃப் பண்ணியிருக்கலாம்..…அடுத்து ப்ரோன்னு சொல்லி புரோகிராமிர்க்கு எண்ட் கார்டு போட்டுட்டா…..” ரோஜா கிரிஷிடம் ஸ்லாகித்து பேசினாள்.

 

“மூணாவது ஆளை ரூம்க்குள்ள ரொம்ப நேரம் விட முடியாது  பாருங்க…. சீக்கிரம் சொல்லுங்க ப்ரோ. டிரஸ் எடுத்து தரேன் போயி கெஸ்ட் ரூமில மாத்திக்கொங்க….” ஆரா பேச,

 

“ஏய் ஆரா, யாரை மூணாவது  மனுஷன்னு சொல்லுற….? விக்கி ஈஸ் மை கெஸ்ட்”.  சீமா தான் பொங்கல் வைத்தாள்…

 

“இங்க பாரு சீமா..இது கிருஷ் அண்ணா ரூம்…  அவருக்கு விக்கி ப்ரோ மூணாவது ஆளுத்தான்… நீ வேணுமின்னா உன் கெஸ்ட்ட உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ…. நானே மாதாஜி அனுப்பி விட்டதால  தான் வந்தேன்… இதுல  என்கிட்ட எதுக்கு லா பேசற….? ”.

 

இதை பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்,

“பாருடி என் தங்கச்சி தங்கத்தை…… என் செல்லகுட்டிக்கு நாளைக்கு ரெண்டு குண்டான் பால்கோவா செஞ்சி கொடு…”

“நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்” குஷியில் கிருஷ் பாட….?

 

“ம்ம்….நெருப்பையும் பார்த்தேன்….கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவ  மேல உங்க வெறுப்பையும் பார்த்தேன்….நம்ம வீட்டு பொண்ணை நாமளே குத்தம் சொல்லிகிட்டு….அவளுக்கு கடலைன்னா என்னான்னு தெரியிற அளவு கூறு இருந்தா  நாம ஏன் இப்படி பஞ்சர் ஆன பாராசூட்ட வச்சிக்கிட்டு பறக்கிற மாதிரி இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அல்லாடுறோம்.”.  ரோஜா கிடைத்த கேப்பில் கிருஷ்ஷை குட்டினாள்.

 

‘இந்த புருஷங்களாம் ஒரே ஒரு ரியாக்ஷனை ஓவரா கொடுத்திட்டு கபால்ன்னு மாட்டிக்கிறோம்….ஆனா  பொண்டாட்டிங்க  ஒன்னு கொடுத்தாலும் சரி, ஒன்பது கொடுத்தாலும் சரி .., ஏன் எதுக்குன்னு ஒன்னியும் புரிய மாட்டேங்குது…. சாலமன் பாப்பையா ஸ்டைலில் சொல்லனும்னா,    புருஷமார்கள்  வாங்குன சாபம்யா  இது……’  மைண்ட் வாய்சுடன் மண்டையை சொரிந்த படி மல்லு கட்டிய கிருஷ் ரோஜாவை பார்த்து எதுக்குன்னு தெரியாமல் ஏகாந்தமாய் சிரிச்சு வைக்க…,

 

பல்லை காட்டாம வாங்க உள்ள போயி பார்ப்போம்… பல்பு கொடுத்து அழைத்து சென்றாள் அவன் பத்தினி…..

 

“என்னடா லட்டு ஒரே சத்தமா இருக்கு…?” கிருஷ் நானும் உள்ள வந்துட்டேன் அறிவிப்போடு நுழைய

 

“அண்ணா டிரஸ் எடுத்து தரேன் . போயி ரூமில் மாத்திட்டு வாங்கன்னு ப்ரோ கிட்ட சொன்னேன்….அதுக்குதான் சீமா சண்டை போடுறா….” ஆரா ஆத்த….

 

“சீமா சொல்றதுல என்ன தப்பு இருக்கு லட்டு…… வீட்டுக்கு வந்த உன் ப்ரோவை நாமத்தான பார்த்துக்கணும்….. இனிமே உன் ப்ரோ, என் ப்ரோ லட்டு…. நான் கவனிச்சுக்கிறேன் நம்ம ப்ரோ வை…. நான் சொல்றது கரெக்ட் தான சிலுக்கு….”

 

வார்த்தையில் லட்டுக்கு கொட்டு வைப்பது போல பேசினாலும் , நீங்க ஆணியே புடுங்க வேண்டாம் பாணியில் நின்றிருந்த சீமாவின் நடு மண்டையில் தான்  நச்சென்று சுத்தியல் விழுந்தது….

 

ரோஜா , சீமாவிடம் உறவாடினாள்……,

“எங்க லட்டுக்கு யார்கிட்ட எப்படி பேசுறதுண்ணு தெரிய மாட்டேங்குது… என் இளா அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கத்து கொடுத்திடனும்…..” 

 

ஏற்கனவே இன் ஃபிளாமேபில்  சீமாவிடம்  இண்டேன் சிலிண்டரை கனெக்ட் பண்ணிவிட்டு போயிட்டா ரோஜா…. சீமா நல்ல ஜக ஜோதியா கொழுந்து விட்டு எறிந்தாள்…

 

“ரோஜா நீ சீமாவையும் ,லட்டுவையும் மாடிக்கு கூட்டிட்டு போ… நான் நம்ம ப்ரோ வை ரெடி பண்ணி இளாவோட அழைச்சிட்டு வரேன்….” ..கிருஷ்.

 

“அண்ணா , நான் இளா வந்ததும் கூட்டிட்டு போறேன்.. சீமா  வேணும்னா அண்ணி கூட போகட்டும்..” நம்ம ஆரா தான்….

 

கிருஷ் “என்னடி நடக்குது இங்க..?” இது அதுவா இருக்குமோ, இதுவா இருக்குமோ..? இவர்களுக்கு நல்லது செய்ய விழையும் ஆர்வம் குரலில்.

 

 

“நான் கூட இளா அண்ணன் சொல்ற வரைக்கும் அப்படித்தான் நினைச்சேன். நம்ம லட்டு இருக்கே,  இளா அண்ணன் கல்யாணத்தை பத்தி பீலிங்கா பேசினதில்  இருந்து , அவரு மனசு நோகாம காப்பாத்துறேன் பேர்வழின்னு, இப்படித்தான் திங்கிற நேரத்தை தவிர மிச்ச நேரமெல்லாம் அண்ணன் கூட பெவிகால் ஆயிடுது போல… அதுக்குதான் இந்த  கட்டி புடிக்கிறதென்ன, முத்தம் கொடுத்து பாராட்டுறதென்ன கவனிச்சு, கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்தராலாமா…” ரோஜா நீண்ட விளக்கத்தை கணவனின் காதில் சொல்ல,

 

“ அப்போ அவளா எதையும் லிங்க் பண்ணல…அவ உளறல் எல்லாம், சம்பவத்தோட தானா சிங்க் ஆகுதா…” கிரிஷின் கேள்விக்கு ரோஜா தலையை ஆட்டி ஆமாம் போட்டாள்.

 

 

இளா டிரஸ் மாத்திட்டு வெளியே வர,

“ஐ…! இளா உனக்கு இந்த டீ ஷர்ட் செம்மயா இருக்கு… நாம கிருஷ் அண்ணா கிட்ட இருந்து ஆட்டைய போட்டுருவோம்….” ஆரா குதித்தாள்.

 

“பேருதான் ஆசீர்வாத் டெக்ஸ்டைல்ஸ் ஓனர்….,  அடுத்தவன் சட்டய ஆட்டைய போடுறதுலாம் ஒரு பொழப்பு..… என்ன பழக்கம் இது… பக்கிகளா…?”. கிருஷ் நொடிக்க, இளாவோ,

 

“லட்டு நீ சொல்லிட்ட இல்ல, இனிமே இது என் டீ ஷர்ட்…,”

“டேய் மச்சான், இனிமே என்னோட  டீ ஷர்ட்ட தொட்ட…, அதோட நீ கெட்ட,”

கிரிஷிடம் வார்நிங் கொடுத்து விட்டு,

 

“ரோஸ் மாடிக்கு போறேன் டா வரும்போது இந்த காண்டான காண்டா மிருகத்தை ஓட்டிட்டு வா,” என்று சொல்லிவிட்டு,

 

“வாடி போகலாம்னு”  ஆராவ கூப்பிட்டு, தோள் மேல் கையை போட்டு இறுக்கி கொண்டு, லட்டுவ லவட்டிட்டு போயிட்டான் இளா…. சீமா விக்ரமை ஒரு பொருட்டாக கூட பார்வையில் பார்க்காமல் இளா கிளம்பியதில்,  சீமா கொள்கலன் இப்போது வெடிக்கும் தருவாயில்….

 

“விக்கி வா என் கூட, நாம போகலாம்….”. அபவுட்டர்ன்னில் சதி கூடாரத்துக்கு மீண்டும்  சென்றாள் சீமா…..

 

மூட் அவுட் டில் மொட்ட மாடிக்கு போக மறந்துட்டு மறுபடியும் கிளம்பின இடத்துக்கே போய்விட்டாள் சீமா.

 

ஆரா, என்கிட்ட எப்படி இருப்பா தெரியுமா டா… நில்லுன்னா நிற்பா ,உக்காருன்னா உக்காருவா.. சீமா சீமானு என் பின்னாடியே சுத்தும் அந்த லூசு…  அவ என் கிட்டயே லா பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளா..? 

ஆராவை டிரம்ப் கார்டாக மாற்ற முடியாத வேதனை, தனக்கு ரொம்ப பிடித்த ஆணின் புறக்கணிப்பு, எதையோ முக்கியமானதை இழந்து விட்டாய் நீ என்பதை சொல்லாமல் சொல்ல,

இழந்தது தூய்மையான ஆராவின் அன்பும், அழகான இளாவின் நட்பும் என்பதே தெரியாமல், 

 

பைத்தியம் போல , கவுச்சை குத்துவது, தலையணையை விசிறி எறிவது என்று தொடர்ந்து கொண்டிருந்தாள். 

 

 

என்ன செய்வது என்றே தெரியாமல் , சீமாவினை எப்படி சமாதானப்படுத்த புரியாமல், விக்ரம்.

 

பத்து பேரு கொண்ட ஒரு நட்பு மந்தை இருந்தால், அதுல ஒரு ஆடு கோபமா, முசுடா கொம்பு சீவிக்கிட்டே திரியும், அதுதான் சீமா…அதுல ஏன் எதுக்குன்னு கேட்காமல் தானாவே ஒரு அடிமை ஆடு சிக்கிருக்கும் , அந்த முசுட்டு ஆடு முட்டி மோதி பயிற்சி எடுக்க களப்பலி யா அதுதான் விக்ரம்…

 

வேதா அன் கோ மொட்ட மாடியில் ஆஜர்…..

 

படியில் ஏறும் போதே கிருஷ்ஷிர்க்கு ஒரே குஷி…

 

“மொட்ட மாடி , மொட்ட மாடி….,

ஒரு லவ் ஜோடி, லவ் ஜோடி……,

இலவசமா ஒரு சினிமா……..,

நமக்காக நடக்குது டோய் …….டோய்……

சம் திங்…….”

 

பாடி விட்டு ,

ரோஜாவின் இடுப்பில் ஒரு கிள்ளு……..

 

ஆத்தி….. நம்மாளு ஒரு மார்க்கமாயிட்டான் போலவே….,  மனசுக்குள் மார்க் செய்த ரோஜாவிற்கு இன்ஸ்டன்ட் கவிதை  கொப்பளித்தது…..

 

‘ஒரு பக்கம் அந்த திருட்டு பூனை விக்கு….

லட்டுவ நினைச்சாலே நெஞ்சுக்குள்ள பக்கு……

இதுக்கிடையில் மை புருஸ்க்கு என் மேல கிக்கு….

எதுவும் பேச முடியாமல் என் வாய் திக்கு…

என் மனசோ  கிருஷ் மீது ரொம்ப சொக்கு……’

 

 

பாடிக்கொண்டே கிருஷ் முன்னே நடந்த ரோஜாவை  முதுகைப் பிடித்து தள்ளி கொண்டு போக…..,

 

சிரிப்பை அடக்கிக் கொண்டு, 

 

“புள்ளையில்லா வீட்டுல கிழவன் துள்ளி விளையாண்டானாம்….கட்டி கொடுக்கிற வயசுல ஒரு பொண்ணு வீட்டுல இருக்குது உங்களுக்கு மாடியில சினிமா கேட்குதா……?”

ரோஜா  குசும்பினாள்.

 

“கோதண்டமும்  ஹோகையா, அப்புறம் யார்ரா இங்க கிழவன்…?, அதுவும் எனக்கு தெரியாம, உன் பெரியப்பா சித்தப்பான்னு இருக்குற   அதர பழசுகளை எல்லாம் கூட்டிட்டு வந்திட்டியா ஜா குட்டி…?”

 

சிரிப்பு இன்னும் பீறிட…., அவனை முறைத்து அடக்கினாள் ரோஜா…

 

அதற்குள் மொட்டை மாடி வந்திருந்தது….,

 

வேதா அமர்ந்திருக்க, அவரது மடியில் ஒரு புறம் இளாவும் , மறுபுறம் ஆராவும் தலையை வைத்து ஆக்குபை பண்ணியிருந்ததை பார்த்த கிருஷ்..,

 

“பார்த்தியாடி ரோசா, இந்த தாய் கிழவி அடிக்கடி பெத்த புள்ளை எதுன்னு மறந்தே போயிடுது……அந்த பன்னி குட்டிங்க மேலதான் பாசம்,  என்னை பெத்த தாயி ரொம்ப ரொம்ப மோசம்…,”

 

“பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துப் புட்டா…..

பெத்த கடனுக்கு தான் என்னை வித்து வட்டிய கட்டிபுட்டா……”

 

பாடிக்கொண்டே…,

 

“என் கிட்டயும் ஆள் இருக்கா….. நாங்களும் மடியில படிப்போம்…..

 

தாய் மதிக்கலன்னா தாரம்…,

கிருஷ் என்னைக்கும் போக மாட்டான் சோரம்…

ரோசாப்பூ வின் மடி தான் குஷன்,

இன்னைக்கு இதுதான் என் மிஷ்ஷன்….

நீ உட்காருடி என் ரோசாப்பூ,”

 

வலுக்கட்டாயமாக பொண்டாட்டியின் மடியில் படுத்து கொண்டான் கிருஷ்….

 

சும்மா இருக்காமல் , “ஏன்டி ரோசா….,”

“உன் மாமியார் மடியில இதுக ரெண்டும் படுத்திருக்கிறத பார்த்தால்,  உனக்கு என்ன தோணுது….?”

 

“ பெட்டரா  நீயே எதையாவது யோசிச்சு வச்சிருப்பியே கிருஷ் சொல்லு கேட்போம்…..”

 

“சேத்துல பிறல்ற  பன்னிங்க கூட்டமா குடும்பத்தோட படுத்திருக்கிற மாதிரி இல்ல…” சொல்லிவிட்டு எக்களித்து சிரித்தான்…..

 

இளா, காலால் எட்டி உதைக்க,

எங்க யாருக்கும் சிரிப்பே வரல….வேற ….?என அனைவரும் அவனையே பார்த்திருக்க……

 

“சிரிக்கலன்னா போங்க…. நான் ரொமான்ஸ் பண்ண போறேன் ….. என்ன பார்த்து ஆரும் வவ்ரு எரியாதீங்க…”என்று சொல்லிவிட்டு,

 

“ரோசா வானத்துல இருக்கிற நிலாவுக்கும் உனக்கும் ஒரே ஒரு டிஃபர்ரன்ஸ் தான் இருக்கு தெரியுமா…?”

 

“என்ன…?” ரோஜா கேட்க…,

 

“நிலா வட்டமா உருண்டையா இருக்கும், நீ  குட்டமா உருண்டையா இருக்க….” என்று சொல்லி சிரித்தான் கிருஷ் …,

 

ரோஜா மொத்தி எடுக்க இடையில் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவா வந்து கிருஷின் உடம்பை பதம் பார்த்து விட்டு போனது…..

 

“என்னடி புல்டோசர் ஆளு வச்சி அடிக்கிறியா….? யம்மா …” என்று உடம்பை தேய்த்து கொண்டான்…..

 

ரோஜாவும் பாவப்பட்டு தேய்த்து விட்டாள்…..

 

“அடிக்கிற கை அணைக்குமா….?”

என்று மீண்டும் ரொமான்ஸ …

 

“நீயே ஆசைப்பட்டு கேக்குற கண்டிப்பா மச்சான்” என்று இளா உருண்டு வந்து கிருஷை கட்டி பிடிக்க,

 

“இடையில் கையை விட்டு குமுறுணது நீதானாடா பிளாக் ஷீப்…..”

 

“ரெண்டு பேர் ரொமான்ஸ் பண்ணும்போது இடையில ஒரே கொசு தொல்லை…போய் தொலைடா….” உதைத்து, வந்த இடத்திற்கே இளாவை அனுப்பி வைத்தான்.

 

“மீ என்னை விட ஒரு வயசு  கூட சீமாவுக்கு , ஆனா ஏன் இன்னும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கல ….?” ரோஜா  , வேதாவிடம் டவுட்ட,

 

“அவ ஆத்தாக்காரிய தாண்டி கேட்கணும் ரோ…. உன் புருஷனை கூட கேட்டுப் பார்த்தேன் கட்டிக்கிறியான்னு வேணாம்னு சொல்லிட்டான்…”

 

காலரை  தூக்கிவிட்டு , கிருஷ்,   தூக்கு துரை எஃபெக்ட் கொடுத்தான் ,

 

“இவன் சிலுக்க கட்டியிருந்தால் அட்லீஸ்ட் நானும்  என் தங்கச்சியும் நல்லா இருந்திருப்போம்…இப்ப எனக்குத்தான் இம்சை”.

“அத்தை பொண்ணு மட்டும்  இவருதாமா, ஆனா அல்லோலப்படுறது நானாமா….. நல்ல நியாயம்டா உங்களுது…..” இடையில் இளா குறைப்பட….

 

“மீ, சீமாவுக்கு எப்படி சிலுக்குன்னு பேரு வந்தது….” மீண்டும் ரோஜா…

 

“பேரு எங்கடா தானா வந்தது…, உன் புருஷன் சில்க் ஸ்மிதா ரசிகன்…. ரூமில அவ போட்டோவா ஒட்டி வச்சிருப்பான்…. இத கோந்துகிட்ட சொல்லி என்னான்னு போயி அவனை  கேளுய்யான்னு சொல்லி அனுப்பினா , அவரு இவன்கிட்ட போயி என் ரூமுக்கு ரெண்டு  ஃபோட்டோ கொடுடா…, எல்லாத்தையும் நீயே வச்சிக்காதன்னு  கேட்குறாரு.….. இந்த கூத்துக்கு இடையில தான் என்ன நினைச்சானோ தெரியில சீமாவை சிலுக்குவார்பட்டி சீமான்னு  கூப்பிட ஆரம்பிச்சிட்டான் கிருஷ்…. சரி ஊர் பேர்ன்னு நினைச்சு விட்டால், படார்ன்னு சிலுக்குன்னு அவளுக்கு பேரை மாத்திட்டான். புடிச்ச நடிகையோட பேர வச்சி கூப்பிடறானே , அவள மனசுல வச்சிருக்கான் போலன்னு , கட்டிக்க கேட்டு பார்த்தா வேணாம்னு சொல்லிட்டான்…. என்ன கதையோ இவன் கதை….”

 

ரோஜாவின் கண்களில் அனல்…..

 

கிருஷ்,

 

“ஆஹா தாய்கிழவி , நெடி ஏறுற அளவுக்கு ஹெவியா மசாலா போட்டு தாளிச்சு விட்டுட்டியா…? என் ஆளு சிலுக்கு சீலிங் ஃபேன்ல தொங்குணதுக்கு  அப்புறம் நான் நமீதா ஃபேன் ஆயிட்டேன், இது தெரியாம நல்லா சொல்லுறாங்கையா டீட்டெய்லு…… நீ நம்பாதடி ரோசா…..”

 

“ புடிச்ச நடிகையோட பேரு வைக்கிற அளவுக்கு, சீமா மேல ஆசை இருந்திருக்கு….…..இப்பவும் ஒன்னும் குறைஞ்சு போகல, போயி அவளையே ரெண்டாவதா வச்சிக்குங்க… ஓஹோ நான்தான் ரெண்டாவதா…, இது தெரியாம இருக்கிறேன் பாருங்க இந்த கிறுக்கி….” ரோஜா புலம்பினாள்….

 

ரோஜா மடியில் இருந்து , கிரிஷின் தலையை  டோம்மென்று கீழே விட….. தரையில விழுந்ததுல தலை கிறு கிறுத்து தூக்குதுரைக்கு நாக்குல நுரை…..

நுரை நல்லது……!

 

கொஞ்சி கரெக்ட் பண்ணலாம்னு தப்பான நேரத்துல சரியான முடிவெடுத்த கிருஷ்,

 

“கோபப்படாதடி குண்டுமா…..”  ரொமான்ஸ்ஸ…,

 

ரோஜா முறைக்க…, உஷாராகி,

 

“குட்டிமான்னு தாண்டி சொல்ல வந்தேன் ,  நேரம் பார்த்து நாக்கு நர்த்தனம் ஆடி குட்டில பள்ளம் விழுந்து குண்டுமா ஆயிட்டுடி.. …., என் காதல் வானத்தில் நீதாண்டி நிலா…”.

 

“ஓஹோ, குண்டா இருக்கிறதை தான் நீங்க அப்பவே என்னை நிலா போல உருண்டைன்னு சொன்னிங்களா…. என்னை கிண்டல் பண்ணினது கூட தெரியாமல் நான் ஈன்னு பல்லை காட்டிட்டு இருந்திருக்கேன்……”

 

இங்க ஃபுல் டேமேஜ் ஆன கிருஷ்  ரோஜாவிடம் கெஞ்சி கொண்டிருக்க, யார் வீட்டுலயோ டீவி வால்யூம் அதிகமா வச்சுட்டாங்க தோரணையில் மிச்ச மூணு பேரும் அரட்டை….

 

“சரிடி இனிமே, நீ என் நிலா உருண்டை கிடையாது…என் மனசை பொறி வச்சி பிடிச்ச  என் பொரி உருண்டை …. நான் உன்னை கடிச்சி சாப்பிடப்பொறேன்டி என் பொறி உருண்டையே….!”

 

ரோஜாவுக்கு தெரியாத கிருஷா…. கோபப்படுவது போல நடித்து கொண்டிருந்தவள்,  பாவம் சிரிப்பை அடக்கத்தான் ரொம்ப  சிரமப்பட்டாள்…

 

“ஐ…! பொரி உருண்டையா அண்ணா, எங்க வச்சிருக்கீங்க…? என்னை விட்டுட்டு சாப்பிடலாமுன்னு ஒளிச்சி வச்சிருந்தீங்களா….? எனக்கு  இப்பவே வேணும்…..உட்டுட்டு சாப்பிட்டா வயிறு வலிக்கும்…..”ஆரா பொரி உருண்டைக்காக இளா மீது உருண்டு வந்து கிருஷிடம் ஆர்வம் காட்ட…

 

“ஆமாண்டி ஃபுட் பாண்டா…..,

அந்த பொரி உருண்டைய தரேன்… முழுசா முழுங்கு….. பத்தலன்னா , என்னையும் அப்படியே முழுங்கிடு  ….. பன்னி குட்டி… நல்லா வச்சோம் பேரு உனக்கு லட்டுன்னு …. லபக்குன்னு வச்சிருக்கனும்.. எப்போ எதை லபக்குறதுன்னே அலையிற….. போடி அந்த பக்கம்…”.

 

“சொந்தமா கல்யாணம் பண்ணி சொந்த பொண்டாட்டிய கொஞ்சுரதுக்கு , இவ்வளவு சோதனை….. போங்கடி நான் தனிக்குடித்தனம் போகப் போறேன்….”.

 

“எப்ப போகப் போற கிருஷ்….? உன் டிரஸ்செல்லாம் லாண்டரி பண்ணாம இருக்கு…. சொண்ணீன்னா சீக்கிரம் பண்ணி தரேன்…. போகும் போது நல்ல ட்ரஸா எடுத்துட்டு போ…..” ரோஜா சீரியஸாக காமெடி பண்ண,

 

“என்னது தனிக்குடித்தனம் நான் மட்டுமா…? போடி நல்லா உன் மாமியார் ஆக்கி போடறதை அமுக்கிக்கிட்டு இங்கேயே ஷேமமா இரு…. இருக்கிறவனுக்கு ஒரு பொண்டாட்டி இல்லாதவனுக்கு இருக்கவே இருக்கு நாயர் கடை போண்டா…….. டீ………”.

 

கிரிஷை நோக்கி  குனிந்த ரோஜா,

“போதும் கிருஷ்  வாயை மூடு,ரொம்ப அதிகமா பேசுது… என்ன செய்யலாம் இதை…? தண்டனைய கொடுத்திடலாமா….?” என்று கேட்டவாறே , கிருஷின் உதட்டை கிள்ளி, ஒரு கிள்ளு முத்தா வைத்தாள் கிசு கிசுப்பாக…

 

 

சாஷா…

 

Leave a Reply

error: Content is protected !!