Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-13

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் 

 

 

அத்தியாயம் – 13

 

ரகசிய முத்தம் பெற்ற கிருஷ் , 

“என்னடி அள்ளி கொடுப்பன்னு பார்த்தா இப்படி கிள்ளி கொடுக்குற….?”

 

“சும்மா இரு கிருஷ்…. இளா அண்ணா, மீ, லட்டு எல்லாரும் இங்கதான் இருக்கிறாங்க…. பேசாம தூங்கு நாளைக்கு பார்த்துக்கலாம்…..”

 

“ஏண்டி,  பொண்ணுங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தமாமே….. நாளைக்கு பார்க்கலாம்னு சொன்னியே அப்ப இன்னைக்கே அந்த வேலைய பார்க்கணும்னு அர்த்தம் தான….?”

 உல்லாசமாய் கேட்டவனுக்கு ,

உதை விழும்னு பதில் வந்தது ரோஜா விடம் இருந்து….

 

வேதா, 

“ரோ உனக்கு பனி சேராது , கீழே பெட் ரூம்மில் போயி தூங்கு.. இன்னைக்கு பூரா வேலை,வேலைன்னு உக்காரல…கை காலெல்லாம் அசந்து போயிருக்கும்.. இந்த தடியனை கூட்டிட்டு போ, தைலம் தேய்ச்சு விட ஹெல்பா இருக்கும்…”

 

அவர்களது சங்கேதங்களை உணர்ந்தவராய் இங்கிதம் பேசினார்….

 

வழக்கமா தைலம், தடியன் வார்த்தைக்கு எல்லாம் வாய் வார் நடத்தும்  கிருஷ்,

‘தைலத்த நீ வச்சுக்கோ, ரோஜாவை நான் வச்சுக்கிறேன் .. பட் இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குது…’ என்ற தொனியில் இருந்தான்….

 

“பரவாயில்ல மீ…. கொஞ்சம் நேரம் கழிச்சு போறேன்…”

 

‘வடை போச்சே….! ‘ கடுப்பு கிருஷின் முகத்தில்….

 

ரோஜாவும் , கிருஷும்  அப்போதுதான் ஆரா, விக்கு மண்டையனை  அண்ணான்னு   அலற விட்டது…, சிலுக்கை சிலுப்பி எடுத்தது என்று எல்லாத்தையும் சொல்லி சிரிக்க ,வேதாவுக்கு ஒரே பூரிப்பு……..

 

“என் மகன் மங்குனியா இருந்தாலும், மகள் மறத்தமிழச்சி டா ரோ……” என்று பெருமை பீத்தினார்….

 

“யாரு நானா மாத்தாஜி…., தாங்க்ஸ்” என்று கட்டிபிடித்து ஆரா முத்தமிட….., பதிலுக்கு வேதாவும்,

 

“என் தங்கப் பொண்ணுடி நீ”, கொஞ்ச, 

 

 

“ரொம்ப கொஞ்சி குழையாதீங்க வேதாஜீ…… அவ கொடுத்தது முத்தம் கிடையாது……உங்களை பார்த்ததும் ,வெள்ளையா  ,உருண்டையா இருக்குதே இது என்ன புது ஸ்வீட்டுண்ணு இவளோ நேரம் யோசிச்சிட்டு இருந்திருப்பா, நீங்க  இனிக்க இனிக்க பேசினதும் சீனி உருண்டைன்னு கன்பார்ம் பண்ணி  , இப்பத்தான் சாம்பிள் பார்த்திருக்கா….. அவ உங்களை  முழுசா லபக்கரதுக்குள்ள ஓடி போயிடுங்க உள்ள…”  கடுப்பில் புது விளக்கம் கொடுத்தான் கிருஷ்…

 

“பாருங்க மாதாஜீ…”. சலுகையுடன் ஒன்றியவளை ,அவன் கிடக்குறான்னு சமாதானப் படுத்தின வேதா , உள்ள வந்து படுங்க என்று அழைக்க,

 

ஆராவும் இளாவும் , இங்கேயே தூங்குறோம் என்று படுத்து விட்டனர்..  

 

ரோஜாவிடம் சொல்லி விட்டு, 

கீழே போனார் சீமாவைத் தேடி…. ஆராவின்  ரெக்கார்டிங் காக வைத்த ஸ்பை போனை எடுக்கணும், சீமா வை தன் ரூமில் தங்க வச்சி நிறைய பாடம் புகட்டனும், என்ற ஆர்வத்தில் …

 

‘எங்கண்ணா மகளே…..!  சந்து….,’ கவுண்டர் ஸ்டைலில்   பாடியபடி கெஸ்ட் ரூம்மிற்குள் சென்றார்….

 

விக்ரம் சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடியிருக்க,

 

பெட்டில் சீமா, கலங்கிய கண்களோடு இளாவுடன் எடுத்திருந்த பழைய புகைப்படங்களை நகர்த்தி பார்த்து கொண்டிருந்தாள்., வேதா வந்ததை கூட அறியாமல் புகைப்படங்களில் மட்டும் கவனமாய்.

கப்போர்ட்டில் இருந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது….

 

அனைத்தையும் பதுக்கி விட்டு, ரூமுக்கு போயி புது  பெட்ஷீட் விரித்து , சீமாவும் படுக்க தயார் செய்தவர்….., கெஸ்ட் ரூமில் வந்து அவளை உலுக்க, அவள் விழித்த விதமே சொன்னது,

தோல்வியே கண்டிராமல் வளர்ந்த பெண்ணுக்கு விழுந்த முதல் அடி, பார்க்க பாவமாய் இருந்தாலும்.., சில வலிகள் தான் அவள் வாழ்விற்கு நல்லது. நினைத்தவராய்…,

 

விக்கி யை கெஸ்ட் ரூமில் தள்ளிவிட்டு விட்டு சீமாவை ரூமுக்கு அழைத்து சென்றார்…

 

மாடியில் லவ் பேர்ட்ஸ்ஸும், லட்டு பேர்ட்ஸ்ஸும் படுக்க தயாராகி இருந்தது….

 

வேதா விட்டுவிட்டு போன இடத்திலேயே அருகருகில் பேசிக்கொண்டு படுத்திருந்தனர் …..லட்டு பேர்ட்ஸ்..

 

“இளா, நாம மாதாஜி வீட்டுலயே இருந்திடுவோமா…?” ஆரா.

 

“ஏன் நம்ம வீடு உனக்கு பிடிக்கலையா…?”

“வீடு பத்தி இல்லை இளா…..  என்னை மாதாஜி  எவ்ளோ பாசமா பார்த்துக்கிறாங்க….தலைய கோதி விடுவாங்க, மடியில படுக்க வச்சுப்பாங்க, சாப்பாடு ஊட்டி விடுவாங்க , ரோஜா அண்ணியும் தான் பிடிச்ச சாப்பாடெல்லாம் பண்ணி கொடுக்கிறாங்க.., ஆனா இந்த தின்னுருட்டி கிருஷ் அண்ணா தான் புடுங்கி சாப்பிடுவாங்க….” 

 

“கேட்டுக்கொண்டிருந்த கிருஷ் அடிக்கழுதை ,என்னை பன்னு ரொட்டின்னு ஒரு நாள் டீயில நனைச்சி  தின்னுட போறான்னு , இவ டீ டயம்க்கு எதிர்ல போகாம பயந்து பயந்து தலை மறைவாய் வாழ்ந்துட்டு இருக்கேன்…, இந்தம்மாக்கு நான் தின்னுருட்டியாம் காலக்கொடுமை இது காலா…..”

 

முணுமுணுத்தவனை, 

“ அவளுக்கு  மனசுக்குள்ள ஏக்கம் போல கிருஷ்… பாவம்”.

“இதில் நீ எல்லாத்துக்கும் முணு முணுவா,” அதட்டினாள், அமைதியாக நடப்பவைகளை இருவரும்கேட்டுக்கொண்டிருந்தனர்….

 

ஆரா தொடர்ந்தாள், “

ஸ்கூல் விட்டு வரும்போதுலாம் அம்மா வீட்டுல இருக்கணும்னு சாமிகிட்ட வேண்டிகிட்டே வருவேன்….. ஆனா அம்மா இருக்கவே மாட்டாங்க,  இளா…….ரொம்ப அழ அழையா வரும்….” கண்ணீரில் நனைந்தபடி பேச…..,

 

இளாவுக்கு நெஞ்சில் இருந்து உதிரம்  கொட்ட தொடங்கியிருந்தது …..,,

 

“ஆனா நான் அப்படியெல்லாம் எதிர்பார்க்கல  ஆரா…. ஏன்னா என் அம்மா என் கூடத்தான் இருந்தாங்க,”

 

விழியுயர்த்தி அவனைப் பார்க்க,

 

“ஆமாம், என்  லட்டு குட்டியா , என் கூடவே இருந்தாங்க….. என்னை அவங்களுக்கு பார்த்துக்க தெரியாது, ஆனா என் மேல அவங்களுக்கு கொள்ளைப் பாசம்   , எனக்கு ஏதாவது ஒன்னுன்னா அழுதுகிட்டே என்னை விட்டு நகர மாட்டாங்க….. என்னை மடியில படுக்க வச்சிக்க மாட்டாங்க ஆனா என் மடியில உட்கார்ந்து கிட்டு என் கஷ்டத்தை எல்லாம் அவங்க எடுத்துகிட்டது போல அழுது தீர்த்துடுவாங்க…. எனக்கு சோறு ஊட்டினது இல்லை ஆனா நான் ஊட்டிவிட்டா மட்டும்தான் சாப்பிடுவாங்க…. எல்லாக் கஷ்டத்துக்கும் இந்த இளாவை மட்டும் தேடிட்டு வருவாங்க…. அவங்களுக்கு  நான், எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சு, குறையே இல்லாம, நல்லா பார்த்துகிட்டேன்னு நினைச்சேன். ஆனா  அவங்க ஏக்கத்தோடவே இவ்வளவு நாள் இருந்திருக்காங்கன்னு எனக்கு தெரியாம போயிடுச்சே….”  கரகரப்பாக பேசினான்…. ஏதோ அறுப்பட்டு விழுந்த வலியோடு…

 

“அம்மா இல்லாத  கொடுமை வீட்டுக்குள்ள நுழையும்போது  தான் தெரியும்….. அப்பா இல்லாத கொடுமை வீட்டை விட்டு வெளியில் காலடி வைக்கும்போதுதான் தான் தெரியும்….. ரெண்டுமே இல்லாத இந்த ரெண்டு பேருக்கும் இன்னதின்னு சொல்லாத  ஏகப்பட்ட ஏக்கங்கள்,துக்கங்கள்.” 

 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரோஜா, அவளது பால்ய கால நினைவுகளில் மூழ்கி, அழுகையோடு ஆதங்கமும் முட்ட, கிருஷின் மனதும் கனத்திருந்தது…..

 

 கனத்திருந்தது அவனுக்கு மட்டுமல்ல, மாடியின் நுழை வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சீமாவுக்கும் தான்…. வேதாவிடம் காற்றோட்டமா மாடிக்கு போயிட்டு வரேன்னு சொல்லிவிட்டு வந்திருந்தாள்… இளாவின் மனதில் நமக்கு ஏன் இவ்வளவு இடமில்லாமல் போனது, என்ற ஏக்கம் அமிழ்த்த  அழுதபடி மீண்டும் வேதாவின் அறைக்கே போய்விட்டாள்….

 

“இளா நீ அழாத , எல்லாரும் சொல்றது போல நான் லூசுடா….. உளறிட்டேன் ரொம்ப தப்பு தப்பா….” மடியில் வந்து உட்கார்ந்து கொண்டு  கன்னத்தில் கன்னம் வைத்து கண்ணீரை தேய்த்து விட்டாள்…. 

“ஸ்கூல் படிக்கிறப்ப தான் தேடினேன் அம்மாவை….. அப்புறம் அந்த  ஆப்புசட்டி ஆண்டாள் பாட்டி எபிசோட்க்கு அப்புறம் , நான் யாரையும் தேடறதே இல்லை….”

 

அப்புறம் அந்த ஆரா மகமாயி , அருள் வாக்குகளை அள்ளி விட்டுட்டு இருந்தாள்… திடீர்னு,

 

 “நமக்கு உடனே கல்யாணமா ,இல்ல மூணு மாசம் கழிச்சு என் படிப்பு முடிந்ததுமா….?” 

 

ஆப்பு சட்டி ஆண்டாளில் ஒரு குறுநகை எட்டிப்பார்த்தது இளாவிடம், பார்த்து திருப்தி உற்றவளாயி , ஊர்கதை ,உலகத்து கதை சொல்லி அவனை இன்னும் சிரிக்க வைத்து பரிகாரம் செய்து கொண்டிருந்தாள் ஆரா …. 

 

இன்னும் மடியை விட்டு இறங்கவே இல்லை….. அவள் நழுவி கீழே விழாமல் அள்ளி அணைத்து வைத்திருந்தான் இளா….. திடீரென திருமணப் பேச்சு பேச , இளாவிர்க்குள் ஒரே காதல்….. பொங்கியது….. இன்னும் அதிகமாய் அவளை இறுக்கி கொண்டு , அவள் தோள்களில் தாடைக் கொண்டு வலிக்காமல் அழுத்தியவன்,

 

“நீ முழுசா என்னை கல்யாணம் பண்ணிக்க தயார் ஆன மறுநிமிஷம் நீ  மிஸஸ் இளா ஆகியிருப்ப, நான் உன்னோட முழு நேர காதல் அடிமையாய் ஆகியிருப்பேன்….”

“நம்ம வெட்டிங் டே….., எதிர்காலத்துல எப்ப நாம நினைச்சு பார்த்தாலும் , திகட்ட திகட்ட காதலோட இருக்கணும்…., உன்னை என் வாழ்நாள் முழுதும் தீராத காதலோட பார்த்துக்கணும்… அப்படி நான் காதலை அள்ளி கொடுக்குறப்போ உன் மனசுல நம்ம உறவை ஏத்துகிறதுல சின்ன தயக்கம் கூட இல்லாம  என்னை முழுசா எடுத்துக்க நீ தயாரா இருக்கணும்…”.

 

“இதுவரை நாம வாழ்ந்த வாழ்க்கையில, அனாதைகளா ஏகப்பட்ட ஏக்கங்கள்,குறைகள் ….”.

“ஆனா நம்ம கல்யாண வாழ்கையில் அதுபோல எதுவும் வேண்டாம்… நிறைவாய் வாழனும் எனக்கு. நம்மளோட எல்லா சோகங்களும் சந்தோஷத்தில் மூழ்கி காணாமல் போகணும் டா….”

 

எல்லாவற்றையும் கண்களை மூடிக்கொண்டு கனவு காண்பவன் போல சொல்லி முடிக்க ,  ஆரா மேடம்க்கு ஆசை பொங்கிடுச்சி…  லேசாக திரும்பி உட்கார்ந்து அவன் கழுத்தை கட்டி , பூனைக்குட்டியாய் அவனை ஈஷிக் கொண்டு,

 

“ரொம்ப தேங்க்ஸ் இளா , ம்ப்ச்ச்,”

  கன்னத்தில் ஒரு எச்சில் முத்தம் வைத்தாள்….. இளாவின் மனது சிறகில்லாமல் பறந்தது….

 

மனதில் காதல் நிறைந்த ஒருவனும், காதலை நிறைத்து கொள்ள ஒருத்தியுமாய்  ஏதேதோ ஏகாந்தமாயி நினைவுகளில் மூழ்கியிருக்க, காலம் அடுத்த கட்டத்திற்கு அவர்களை சுழன்றடிப்பதற்கு தயாராய் இருந்தது, இந்த கடைசி அடியை மட்டும் தாங்கிக் கொள்ளுங்கள் பிளீஸ் என்று கெஞ்சியபடி சாட்டையுடன்…..

 

“எனக்கு இடுப்பு வலிக்குது ..”, ஆரா

 

“கோணல் மானலா உக்கார்ந்தா இப்படித்தான்…, நல்லா காலை நீட்டிப் படு….. நேராய் படுக்க வைத்து போர்த்தியும் விட்டான்…..”

 

ஆரா மகாராணி ரொம்ப தோரணையா படுத்திருந்தாங்க….. அவள் ஆளோட கவனிப்பு அப்படி…..

 

இப்போது கிருஷிர்க்கும் , ரோஜாவிர்க்கும் ஆனந்த புன்னகை….

 

எக்ஸ்பீரியன்ஸ் ஜோடி கிசு கிசுப்பாய் பேசுவதில் முனைவர் பட்டம் வாங்கியிருக்க, அந்த ஜோடியை விட்டு இடைவெளியில் இருந்தாலும் ,புது ஜோடி மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமாக பேசினார்கள்…. அவங்களும் கூடிய  விரைவில் மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கித்தனம்  எல்லாம்  வேகமா கத்துகிட்டு, காதல் பல்கலைகழகத்தில் சீக்கிரம் முதுகலை பட்டம் முடிக்க, ஆசிர்வதிப்போம்……. ஏரியாக்கு புதுசு அதான் ஒரே ரவுசு..

 

 

 சிறிது நேரத்தில் ஆரா தூங்க ஆரம்பிக்க, இளாவும் அவளுக்கு போர்த்தி விட்டுவிட்டு கண்களை மூடியிருந்தான்.

 

அக்கம் பக்கம் பார்த்த கிருஷ்ஷிற்குள் இருந்த காதல் கிறுக்கன் மீண்டும் தொபுக்கடீர்ன்னு வெளியே குதிக்க,

 

“ரோசா ரோசா நீதான் என் மார்கரெட் பீஸ்ஸா….

உன்னை கட்டிக்கவா லேசா….”. அணைத்து கொண்டு    பிதற்றினான்…

 

“ஏதேது பித்தம் தலைக்கு ஏறிட்டு போலயே….

கிருஷ் , அண்ணாவும் லட்டுவும் கண்ணுகெட்டுற தூரத்தில் தான் இருக்காங்க…  கையை காலை வச்சிக்கிட்டு சும்மா இரு….”

 

“இனிமே இதுகளை பத்தி நான் பேச மாட்டேன் ….. நீயும் பேசாத…”

 

“ஏன் கிருஷ்…?”

 

“ஆமா , இதுகளே இருக்கு ஆனா இல்ல……, முன்ன இருந்தது……, ஆனா இப்ப இல்ல…,இப்ப இருக்குது…,  ஆனா முன்ன இல்லைன்னு ஏதோ செஞ்சி எனக்குள்ள இருந்த எஸ் ஜே சூர்யாவையே குழப்புதுங்க….. இனிமே நான் அதுங்க பேச்சு ‘கா…..’ நான் அதுகள பத்தி  பேச மாட்டேன், நினைக்க மாட்டேன்….”

 

ரோஜாவிற்கு கணவனின் உறுதி மொழி பார்த்து, 

 

“ உன்னைய பார்த்தா சிப்பு சிப்பாய் வருது கிருஷ்…”

 

 

“இளா……., இளா. தூங்கிட்டியா………”

 

தூங்கிக் கொண்டிருந்த ஆரா தான் கிசுகிசுப்பாக  இன்னும் ஆழ் உறக்கத்திற்கு செல்லாத இளா, 

“என்னடா லட்டு வேணும்….?” மென்மையான விளிப்பில்  அக்கறையாய் கேட்டான்…

 

“கால் வலிக்குது… ரொம்ப…. தூங்க முடியல…”.

 

 

“சும்மா இல்லாமல், எங்காயாவது தவ்வியிருப்ப, சரி விடு நான் அமுக்கிவிடுறேன்….”

காலை தூக்கி மடியில் போட்டுகொண்டு, பாதங்களை அழகாய் பிடித்து விட, இளாவின் சேவையில்  மீண்டும் ஆரா மகாராணிக்கு ஆழ்ந்த சயனம்.

 

அவளையே அரை வெளிச்ச நிலவொளியில் பார்த்திருந்த இளா, 

“சீக்கிரம் என்னை லவ் பண்ணுடி என் செல்லக்குட்டி…” சொல்லி கன்னத்தை வருடிவிட்டு,

மீண்டும் படுத்துவிட்டான்….

 

அந்த பக்கம் கிருஷ்…. பார்த்தியாடி ரோசா,

“அந்த பாவி மகள…! அரிசி மூட்ட கணக்கா அவன் மடியில இம்புட்டு நேரம் உக்கார்ந்ததுக்கு , லாஜிக்கா அவனுக்கு தான் கால் வலிக்கணும்,  இவளுக்கு வலிக்குது இதைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்குதுடி இப்ப….”

 

“ ஆனா ஒன்னு, உன் அண்ணன், காதலிக்கும் போதே காலமுக்கி விடறான்…, கல்யாணத்துக்கு அப்புறம் காலிலேயே  விழுந்து கிடப்பான் போலயே….. இனிமே தான் அவனுக்கு ,சிறப்பான , தரமான சம்பவங்கள் எல்லாம் வெயிட்டிங்…. சரியான மானங்கெட்டவன்…ஹ…. ஹ …. ஹா.”  சொல்லி சிரித்தான் ….

 

“என்ன புத்திடா உங்களுக்கெல்லாம்…. வெளியில போறப்ப , வேலை பார்க்குறப்ப, கடன் கொடுக்குறவன்கிட்ட, பிசினஸ்க்காகன்னு கண்டவன் காலுல  விழுவீங்க… ஆனா உனக்கு  எல்லாமுமா இருக்கிற கட்டின பொண்டாட்டி கால பிடிச்சு விடறது அசிங்கமா..….. போங்கடா நீங்களும் உங்க வியாக்கியானமும்….., நான் போறேன்….”

 

ரோஜா பெப்பரையும் உப்பரையும் கொஞ்சம் தூக்கலா போட்டு போசுக்குண்ணு பொங்கல் வைத்து விட்டாள்….

 

“அடேய் ஜா,  ஏன்டி  இப்படி பொங்குற….. நான் வேணும்னா நைட் பூரா உன் காலிலேயே தலைய வச்சி தூங்குறன் தாயே……”

“பரம மண்டலத்தில்  இருக்கும் என் பரம பிதாவே, பாவியாகிய  என்னையும் என் ஆண்வர்க்கத்தையும் ரட்சிப்பீராக…!”

கையை  மேலே தூக்கி வேண்டுதல் வைக்க,

 

ரோஜா பாவம் பார்த்து விட்டு விட்டாள்….. 

 

ஆரா மீண்டும் உருள, “இளா…….”

 

“ம்ம் என்னடா….?

 

“ரொம்ப அன்  ஈசியா இருக்கு, முதுகு வயிறு வலிக்குது…..,”

 

‘வயிறு வலி’யில் மின்னலடிக்க, எபிசோட் மூணுல கூட நியாபகம் இருந்ததே…, கூடிய சீக்கிரம் என்னைத் தேடி நீயா வருவன்னு சவால் வேற விட்டோம்….. எப்படி மறந்தோம்…. இது  ப்ரீ மென்ஸ்ட்ரல்  எஃபெக்ட்ஸ், ஆராவின் ஸ்வீட்ஸ் கார்விங்  ஃபீல்,  எமோஷனல் பிஹேய்வியர்  என வரிசைப்படுத்தியவனுக்கு , பாவமாய் இருந்தது…. ஆரா வுக்கு நடந்த அந்த விபத்துக்கு அப்புறம் அவளோட மாதாந்திர வலிகளை கூடவே இருந்து பகிர்ந்து கொள்வான்…. இதுவரை கேர்  டேகெராய் …, இப்போது காதலும் நிரம்பியிருந்த போது மிக அதிகமாக வலித்தது அவனுள்….

 

“சரிடா ஒண்ணுமில்ல…., எப்போதும் போலத்தான் மென்சஸ்…., நான் கூட இங்க  இருந்ததில மறந்துட்டேன்…. சாரி…. தேவையானதுலாம் வச்சிருக்கியா போயி வாங்கிட்டு வரவா….”

 

“நாம நம்ம வீட்டுக்கு போயிடுவோமா….?” அவனின் இத்தனை வார்த்தைகளுக்கும் ஒற்றை பதிலாய், ஆரா.

 

இதுவரை இனித்திருந்த இந்த இல்லம் , வலிகள் வரும்போது அன்னியமாய் போனதும், அவரவர் கூடு தரும் வலிமை , வலிகளின் போது  அன்னியோன்மையாய் தெரிவதும் விநோதமாக உணர்ந்தான் ஆராவை…

 

“ம்…..கண்டிப்பா…, காலையில போயிடலாம்…. இப்ப தூங்கு “,

தன் போர்வைக்குள்ளேயே அவளையும் இழுத்து  அரவணைத்தப்படி ஆராவோடு , இளாவும் உறங்கிப்போனான்…..

 

“லைசென்ஸ் இல்லாதவன்லாம் ஒரே போர்வையை போர்த்தி கிட்டு  லவ்ஸ் விடறாங்க,  கல்யாணம் பண்ணி கால்கட்டு போட்டும் , காலமுக்கி விடற மேட்டர்ல  , வீரியத்தை காட்டி,  காரியத்த கோட்டை விட்டுட்டேன்….” கிருஷ் ரோஜாவிடம் பாவம் காட்டினான்…

 

“யாரோ அவங்க பேச்சு கா, இனிமே அவங்கள  பத்தி  பேசமாட்டேன், பார்க்கமாட்டேன்னு சொன்னாங்க…..” ரோஜா உசுப்பேத்த, 

 

“அந்த ரோஷக்காரன் , ரொமான்ஸ் பண்ண முடியாத வருத்ததுல ரோமியோ வா மாறி ஃபீல் பண்ணிட்டு இருக்கான்…. வழக்கம் போல நீ தூங்க போ, நான் ஏங்கப்பொறேன்…..”

 

கிருஷ், அப்படியே சோகம் கொப்புளிக்க விட்டதில், ரோஜாவுக்கு காதல் கொப்புளித்தது……

 

“சரி வா நம்ம ரூமுக்கு போவோம்…..” பெர்மிஷன் கிராண்டட்.

 

படிகளில் செல்லும் போது,

“கட்டின பொண்டாட்டிய, கட்டிலுக்கு தள்ளிட்டு போகரத்துக்குள்ள நான் படுற பாடு இருக்கே….. அய்யய்யய்யோ , அம்மம்மா…. அப்பப்பப்பா….”

 

மீண்டும்  வாயைத் திறந்தவனை, எம்பி வாயடைத்து போக செய்துவிட்டாள் ரோஜா……

 

தினம் தினம் செய்தாலும் புதிதாய் தெரிவது காதல் செய்வது மட்டுமே………!

 

 

சாஷா…