Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-18

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.

 

அத்தியாயம் – 18

 

மனநல மருத்துவர் சொன்னதை கேட்டு,நால்வரும் அதிர்ச்சியில் நிற்க,

 

“என்னது நாங்க ஆராவை விட்டுட்டு இருக்கணுமா…. என்ன டாக்டர் சொல்றீங்க..?” இளா அதிர்ச்சி காட்டினான்…,

 

“அவ ஏதோ சாவு அது இதுன்னு, தத்துபித்துன்னு உளர்றா… அதுக்கு ஏதோ கவுன்சிலிங் போல டிரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவீங்கன்னு பார்த்தா…, என்ன இப்படி குண்ட தூக்கி போடுறீங்க…?” பிக்னிக் மூடு ஸ்பாயில் ஆன வேதா , 

இந்த ட்ரீட்மெண்ட்தான் கொடுக்கணும் அப்படின்னு கூட முடிவு பண்ணி வேகமா பேசினார்…

 

“முதல்ல எல்லாரும் உக்காருங்க… நான் சொல்ல வர்றதை தெளிவா கேளுங்க…எனக்கு தெரிஞ்சி ஆராக்கு உடம்புல எந்த பிரச்சினையும் அவங்க உட்பட உங்க அஞ்சு பேர் கிட்டயேயும் தனி தனியா  பேசினேன் அதுல அவங்க மட்டும் தான் தெளிவா இருக்காங்க… கவுன்சிலிங் தேவைதான்… ஆனால் அது அவங்களுக்கு இல்லை உங்களுக்குத்தான் தேவைப்படுது… அந்த பொண்ண குழந்தையாகவே வச்சிருக்க ட்ரை பண்ணி இருக்கீங்க, அதனாலதான் அவளுக்கு இந்த மாதிரி பிரச்சினையாகி இருக்கு… அவங்கள இன்டிபென்டன்டா இருக்க விட்டாலே, கொஞ்ச நாளில இயல்பு நிலைக்கு திரும்பிடுவாங்க… எனக்கு நாற்பது வருஷம் இந்த பீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நீங்க வந்த உடனேயே உங்க பிரச்சினை என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..”

 

ஒருமுறை இண்டிபெண்டன்ட்டாக இருக்க விட்டதுக்கே, இந்திபண்டிட்டாக மாறி ஒரு வாரம் ஓட விட்டாள். இப்ப ஆரம்பிச்சு திரும்ப எத்தனை வாரமோ… ?’

 

இளாவிற்கு ஆராவின் எட்ஜுகேஷனல் டூர் ,அதைத் தொடர்ந்த அவளது பேச்சு சண்டைன்னு எல்லாம் ஞாபகம் வந்தது.நொந்து போனான்.

 

மேலும் தொடர்ந்த மருத்துவர்,

 

“நீங்க நாலு பேருமே வளைச்சு வளைச்சு அந்த போண்ணுக்கு சின்ன வயசுல இப்படி ஆச்சு அப்படி ஆச்சு இதைத்தான் சொல்லி சொல்லி குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டோம், அப்புறம் ஏன் அவளுக்கு இந்த மாதிரி மன அழுத்தமானது ஆனது….? அப்படின்னு கேட்டீங்க… நான் இப்ப சொல்லறேன் அவங்கள குழந்தை மாதிரி பார்த்துக் கிட்டதால்தான் ஒரு சின்ன பிரச்சினையைக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் இல்லாம போச்சு…”

 

 “யாரோ ஒரு அம்மா தடாலடியா நீ ஒரு அனாதை அப்படின்னு அந்த பொண்ண திட்டினதும், அவங்களுக்கு அதை தாங்கிக்கிற சக்தி கூட இல்ல. ஏன்.. இத்தனை நாளா அந்த பொண்ணுக்கு தான் ஒரு அனாதை அப்படின்னு தெரியாதா…? அப்புறம் ஏன் இப்ப பீல் பண்ணனும், அந்த அம்மா சொன்னதுக்கு யோசிச்சு பாருங்க…”

 

“இத்தனை வருஷமா அந்த பொண்ணு சுயமாக வாழ வேண்டிய, செய்ய வேண்டிய விஷயங்களை நீங்க இருந்து செய்ய வச்சிருக்கீங்க இல்லன்னா செஞ்சு கொடுத்து இருக்கீங்க. அவங்ளுக்கு ஒரு பிரச்சனைனா, அத அவங்கள ஃபேஸ் பண்ண விடாம, நீங்க பேஸ் பண்ணி இருக்கீங்க… அதனால அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு அனுபவமே ஏற்படாமல் போயி, இப்போ இந்த நிலைமையில் இருக்கிறாங்க…”

 

“அதோட, ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறைபாடு இருக்கும், ஒரு பழக்கம் இருக்கும்… சிலருக்கு வெளில தெரியும் சிலருக்கு தெரியாது. எல்லாத்தையும் ஸ்லோவா அப்சர்வ் பண்ணிக்கிறது ஆராதனா வோட பழக்கம். அது குறைபாடு கிடையாது. நீங்க அவுங்களுக்கு எதுவும் தெரியாதுன்னே முடிவு பண்ணிட்டீங்க.”

 

“ஷீ இஸ் பேர்பெக்ட்லி ஆல் ரைட்… ஒரு குழந்தை சைக்கிள் கத்துக்க ஆசைப்பட்டா, நாம அந்த குழந்தை பேலன்ஸ் பண்ற வர தான் சைக்கிள பிடிச்சுட்டு ஓட்ட வைக்கனும். அந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்டும் தகுதி வந்தும் நாம் அந்த குழந்தைய சைக்கிளை தனியா ஓட்ட விட்டிரனும்… இல்லைன்னா அவங்க ,எந்த காலத்திலும் தனியா ஓட்ட  மாட்டாங்க… கண்டிப்பா  விழுவாங்கதான். விழுந்தா தான் அடுத்த முறை எப்படி விழாம ஓட்டணும்னு தெரியும்.  அடிபட்டால் தான், வலி என்னன்னு தெரியும் அந்த வலியை தாங்கக் கூடிய மனோ பலமும் கிடைக்கும்… நீங்க எல்லாரும் அந்த பொண்ணு மேல அதீத அன்பு வச்சிருக்கீங்க தான். ஆனால் அந்த பொண்ணு, உங்க அன்பாலதான் இப்போ இப்படி இருக்காங்க அதை முன்னாடி புரிஞ்சிக்கங்க…”

 

“உங்க கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சுக்காதீங்க… கையை விட்டு வெளியில விடுங்க கொஞ்ச நாளில அந்த பொண்ணு தானா அவங்களோட வாழ்க்கையை எதிர்கொள்ள ஆராம்பிப்பாங்க …”

 

“லீவ் ஹெர்… லெட் லிவ் ஹெர் லைஃப் ஆன் ஹெர் ஓன்…”

 

அந்த டாக்டர் மூச்சு விடாமல் பேசி முடித்ததும் , 

வெளியில் இருந்த நர்சை கூப்பிட்டு, 

“சிஸ்டர்…, கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்…?” 

டாக்டர் இல்லைங்க, நம்ம இளா…

 

பேசினது நானு ,தண்ணி உனக்கா…? அப்படி பார்த்திட்டு நர்ஸை எடுத்துட்டு வர சொன்னார் கண்ணாலயே….

 

“டாக்டர் ஆராவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா சரி ஆகிடுமா…?” ரோஜா டவுட்ட,

 

“அவங்களுக்கு நோயாம்மா வந்திருக்கு சரியாக, மிஸ்.ஆராதனாவை அவங்க வாழ்கையை வாழ விடுங்க, முடிவுகளை எடுக்க விடுங்க, அதுக்கப்புறம் அவங்களுக்கு பிடிச்ச பையனா பார்த்து, கல்யாணத்தை பண்ணி வைங்க. அதுதான் அவங்களோட எதிர்காலத்துக்கும் , அவங்களுக்கு பிறக்கப் போற புள்ளைங்களுக்கும் கூட நல்லது.

 

டாக்டர், ரோஜாவையும் , வேதாவையும் பார்த்தபடி   உரையாற்றிக் கொண்டே இருக்க, 

இளா, “என்னடா இப்படி நீட்டி முழக்கிக்கிட்டே போறாரு இவரு. ஏன்டா மச்சான், இதுலாம் நடக்க ஒரு பத்து பதினஞ்சு வருஷம் ஆகுமாடா குத்து மதிப்பா…?” கிருஷ்ஷின் காதை கடிக்க,

 

“நம்ம லட்டுவோட கெப்பாகுட்டிக்கும், டாக்டர் அவளுக்குக்கு வர வைக்க நினைக்கிற மெச்சூரிட்டிக்கும், கூட்டி கழிச்சு கணக்கு பாக்கும் போது, உனக்கு கல்யாணம் ஆக, பத்து பதினஞ்சு நூற்றாண்டு ஆனாலும் ஆகலாம், ஒன்னும் சொல்றதுக்கில்லை மாப்ள…”

 

“டாக்டர் பேசுறாரு , நீங்க ரெண்டு பேரும் தனியா என்னடா மீட்டிங் போடுறீங்க,” வேதா கிசு கிசுப்பாக கண்டித்து அருகில் இருந்த கிருஷின் காலில் ஓங்கி மிதிக்க, 

 

கிருஷ் வலி தாங்காமல் ,’ ஆ ‘ கத்த, இளா அவன் வாயைப் பொத்த, டாக்டர் விசாகன் பேச்சை நிறுத்திவிட்டு ரெண்டு பேரையும் முறைத்தார்.

 

“ஒன்னுமில்ல டாக்டர்… அந்த … ஆ… கிருஷ் சத்தமா ஆ….ரான்னு சொல்ல வந்த ஆ…”  இளா சமாளிக்க, 

 

“ஆ…மா…. டாக்டர், ஆ…..ரா  பத்தி எல்லாம் புரிஞ்சுது. நாங்க கிளம்பலாமான்னு கேட்க வந்தேன்… அதானடா…,”  இளாவைப் பார்த்து கிருஷ் வழிசலாக கேட்க,

 

“அதேதான் டா…”  இளா கிரிஷிடம் சொல்ல வேண்டியதை  விசாகனை பார்த்து கூற,

 

அவர் அவனின் டா வில் கொடூரமாய் முறைக்க,

” அதேதான் டா…க்டர்.” ஹி ஹி ஹி இளித்து சமாளித்தான்.

வேதாவும் ரோஜாவும் இருவரையும் மாறி மாறி முறைத்தபடி இருந்தனர்.

 

இதற்கு மேல் இங்கிருப்பது சரியல்ல, உணர்ந்த வேதா , 

 

“நாங்க கிளம்பலாமா டாக்டர்…?”

 

“கிளம்புங்க, ரிசப்ஷன்ல ஃபீஸை பே பண்ணிட்டு கிளம்புங்க,” டாக்டர் காட்டமாக விடைக் கொடுத்தார்.

 

வெளியில் வந்து ,

 

“உங்களையெல்லாம் நம்பி வந்தா, இங்க என்னங்கடா வேலை பார்த்திருக்கீங்க… ஒருத்தன் கத்துறான் ஒருத்தன் மரியாதை இல்லாம டா போடுறான்..?”

“நம்ம மானமே போச்சு மீ…” ரோஜாவும் எடுத்து கொடுக்க,

 

இளாவும், கிருஷும் மாறி மாறி பார்த்து கொண்டனர்.

 

“பாவம்டா அந்த மனுஷன், இது வரைக்கும் லட்டுக்கு டிரீட்மெண்ட் கொடுத்த டாக்டர்லயே இவருதான் நல்ல டாக்டர். பத்து நிமிஷம் லட்டு கூட பேசிட்டு, பத்து பக்கம், லட்ட பத்தி புட்டு புட்டு வச்சார்.” வேதா பாவப்பட,

 

“லட்டை எங்க புட்டு வச்சார். நம்ம நாலு பேரை தான் லட்டை விட்டு தூரமா,  நாலு எட்டு தள்ளிவச்சார்.” இளா எடுத்து கொடுக்க,

 

“ஆங்காங்… மச்சான்…” கிருஷ் ஆமோதித்தான்.

 

அவர்களோடு வெளியில் இணைந்து கொண்ட ஆரா, 

 

“கிளம்பிட்டோமா  மாத்தாஜி, நான் போயி டாக்டர் அங்கிள் கிட்ட சொல்லிட்டு வரவா…”  உள்ளே செல்ல முற்பட,

 

வேதா மீண்டும் இருவரையும் முறைத்தார்.

 

“மரியாதை தெரியாத பயலுங்க, இவனுங்க பண்ணின வேலைக்கு, இந்த பக்கம் நம்ம குடும்பத்தில் இருந்து யாரு வந்தாலும் மாட்டூசி போட்டு விட்டுருவார். நீ போகாதடி…” ஆராவைத் தடுத்தார்.

 

“சரி அதை விடுங்க மீ… அவரு சொன்னதை யோசிங்க, பிரச்சனையை நம்ம கிட்ட வச்சுக்கிட்டு,” ரோஜா சொல்ல ஆரம்பித்து விட்டு ஆராவைப் பார்த்து நிறுத்தி கொண்டாலும், அனைவருக்கும் எல்லாம் புரிந்து வருத்தமானது.

 

“என்ன சொன்னாரு…?” ஆரா கேட்க,

 

“உன் வாயைத் தச்சு விட சொன்னாரு..” இளாவின் பதிலில் ஆரா வாயை நீட்டி முழக்கினாள்.

 

எல்லாருக்கும் வக்கேஷன் மூடு வண்டி ஏறி வந்தவாசி போயிட்டு…

மேக்கப் போட்ட மூஞ்சியெல்லாம் பேக் அப் ஆயிட்டு.

 

ஆராக்கு ஒரே பாட்டு , டான்ஸ்ன்னு கும்மாளம் மூடு…

கார்ல எல்லாரும் அந்த பிள்ளையை முறை முறைன்னு  முறைச்சிக்கிட்டே வந்தனர்…

,என்னவோ ஆரா, இவனோட இருக்க மாட்டேன்னு சொன்னா மாதிரி…

 

வீட்டுக்கு போயும் அமைதி அமைதி  அமைதிக்கெல்லாம் அமைதி…

 

கொஞ்ச நேரத்தில் ஆரா, 

“என்ன கிருஷ் அண்ணா…? இவ்வளோ அமைதியா இருக்க..? எல்லாரும் என்னை இப்படி பார்க்குறீங்க… டாக்டர் சீக்கிரம் ஆரா மர்கயா சொல்லிட்டாங்களா..?”

 

“அப்படியே போட்டென்னா பார்த்துக்க… எனக்கு வர்ற கோபத்துக்கு உன் மண்டைய உடைக்கணும் போல இருக்கு.”

 

ஆரா திரு திருங்க…!!!!

வேதா ,கிருஷின் மண்டையில் கொட்டு வைத்தார்… “என்னடா பேசற குழந்……….”

 டபக் வாயை பொத்தி கொண்டார்…

 

எல்லாரும் ஒரே நேரத்தில் நோக்கு வர்மம்…

“பின்ன பதினெட்டு வருஷ பழக்கம்ப்பா…, பத்து நிமிஷத்துல மாத்திக்க முடியுமா…” வேதா சொல்லிவிட்டு பல்லை காட்டினார்.

 

அவ குழந்தை இல்ல… குழந்தை இல்லை… மனசுக்குள்ள வேதா உருப்போட்டுகொண்டார்..

ஆமாம்  அவ குழந்தை கிடையாது இப்போ… இந்த நாலும் குழந்தையா மாறிட்டுதுங்க… எதுக்கும் பசிக்கவும் இல்லை..

ஆனா ஆரா….?

 கிச்சனுக்கு போயி காலையில மீந்த பொங்கல் குண்டானோட வந்துட்டா… 

 

‘எது குண்டான்னு வித்தியாசமே தெரியலடி எருமை… கிருஷோட கவுண்டர் கூட மிஸ்ஸிங்…’

 

தியேட்டர்ல போடுற விளம்பரம் போல ,

என்ன ஆச்சு நம்ம ஊருக்கு…?

எங்க பார்த்தாலும் ஒரே தூசு, புகை மண்டலம்…

டயலாக் ஓடுது எனக்கே….

 

யாரு எக்கேடு கெட்டு போங்க, அயம் அ பிஸி ஈட்டர்… ஆரா, ஒவ்வொரு வாய் திங்கறதும் , ஒவ்வொருத்தர் மூஞ்சை பார்க்கிறதும்….

தட்டுல போட்டு கூட திங்க தெரில அந்த புள்ளைக்கு… ஆரா வித் குண்டான்.. 

முன்னபின்ன பார்க்கு போனால்தான பீர் எப்படி இருக்கும்னு தெரியும்…

 

ஸ்லீப்பிங் டோஸ் ஹெவியானதும் , அதானப்பா பொங்கல் , கண்ணை கட்டிட்டு ஆராக்கு…

 

மிச்ச நாலு பேரும்அடுத்ததா வட்ட மேசை மாநாடு… இனிமே நோ… குயந்த புள்ளை ஆரா…, மிஷன் டிரீட்டிங் ஆரா பெரிய புள்ளை…. ஸ்டார்ட்ஸ் நவ்….

 

அது ஒன்னும் அவங்க நினைச்சது போல அவ்வளவு சுலபமா இல்லை…

 

இப்பத்தான் ஓவரா பாசம் பொங்கிச்சு…கொஞ்ச ஆசை ஆசையா வந்துச்சு…

 

மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடின்னா, இளாவுக்கு நாலு பக்கமும் இடி… 

தோழியா என் காதலியா சொல்லடி என் பெண்ணேன்னு பீஜீயம் , நாம லவ்வரா, கேர் டேக்கரா இல்ல , விதியோட சாக்கெரான்னு ( புட் பால்  கிரவுண்ட் ஆச்சாம் இளாவோட வாழ்க்கை…)

 

இருக்காதா பின்ன ,விரதம் இருக்கிறவன் முன்னாடி வித விதமா பதார்த்தம் வச்சது போல,

இப்பத்தான் நம்ம ஹீரோயின் பூனையாய் ஈஷுறாங்க, மடியில சிட்டுறாங்க, வாய்க்கு கொண்டு போன சாப்பாட்ட புடிங்கி தின்னுறாங்க… இப்படித்தான் ஆரா அடிக்கடி பண்ணினா ஒரே அக்கப்போரா….

 

காஸ்டியூம் டிசைனர் அனு வர்தன் கிட்ட அசிஸ்டன்ட்டா தள்ளி விட்டாய்ங்க… அங்க போயி டிசைனை கத்துக்கிச்சோ இல்லையோ டிசைன் டிசைனா திங்க கத்துகிச்சு… பின்ன புரொடக்ஷன் சாப்பாடு, ஸ்டார் டிசைனர், அவங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்து திங்க, இவங்க மிச்சமெல்லாத்தையும் திங்க, ஒரு நாள் வயிறு சரியில்லாம ஆரா லீவ்…

அனு , இளாக்கு ஃபோனை போட்டு , 

“ஹே இளா, உன் கசின் சோ கியூட்… லவ்லி டூ அசிஸ்ட் ஹெர்… அவளுக்கு பிடிச்ச மேங்கோ ரைஸ் எடுத்துட்டு வந்தேன்… வாட் ஹாப்பெண்ட் டூ ஹெர்…”

 

இந்த இடத்தை நல்லா கவனிச்சிக்கிட்டான், அவங்க சோறு மீந்து போச்சுன்னு ஃபோன் போட்டிருக்காங்க…இவ டிசைன் பண்ண இல்லாம துணி மீந்து போச்சுன்னு கேக்கலை… 

“மினுக்கி…. அங்கேயும் போயி பாப்பா ஃபேஸெய் காட்டி, கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கிட்டா  …” திட்டிட்டான் ரொம்ப ஃபோர்ஸ்ஸா…

 

அதற்கு அடுத்த மாசம் ஸ்டார் டிசைனர் நளினி கிட்ட சேர்த்து விட, அங்க இருந்து விண்டாலூ சிக்கன் வீட்டுக்கே பார்சல் வர வெறுத்துட்டான்…

 

அடுத்த ஐந்து மாதங்களில் ஆராஸ் லேடிஸ் வியர் கலெக்ஷன்ஸ் ஓபனிங் செரிமனி… வேதாஜி ரிப்பன் வெட்ட, அவங்க மருமக ரோஜாஜி குத்து விளக்கு ஏற்ற, ஆராஜி கேக் வெட்டி ….கிராண்ட் ஓபனிங்…

 

“கேக்குலாம் நல்லாத்தான் வெட்டுறா இந்த குள்ள வாத்து…, துணிய ஒழுங்கா வெட்டுவாளா…” கிரிஷ்க்கு அவன் கவலை…

ஆராஸ் பேச்சு எழுந்ததுமே பாதி பணம் நீதான் போடணும்னு வலுக்கட்டாயமாக , வாழைக்காய் பஜ்ஜி சுட்டு கொடுத்து பாட்னர் ஷிப் டீலை முடிச்சிட்டாங்க வேதாவும், ரோஜாவும்…

ஒரு வாழைக்காய் பஜ்ஜிக்கு ஆசைப்பட்டு வாழ்க்கைய அடகு வச்சிட்டான் ஆராஸ்சில்…. 

ஆனா கிருஷும் இளாவும் ஆராஸின் மார்கெட்டிங் பிசினஸ்ஸ ஹாண்டில் பண்ண, ஆராவும் கடுமையான உழைப்பை போட குட்டீஸ்லயிருந்து பாட்டீஸ் வரைக்கான ஆராஸ் டிசைனர் வேர் செம்ம பிக் அப் காட்டியது…

 

“மா…, உன் பொண்ணு தட்டு தட்டா நிரப்பி ஃபுல்லா கட்டுவான்னு பார்த்தா நல்லாவே கல்லாவும் கட்டுறா, வித்தை தெரிஞ்சவதான் பொழைச்சுப்பா…”

மெச்சி கொண்டான் கிருஷும்…

 

அவங்களோட மிஷன் டிரீட்டிங் பெரிய புள்ளை ஆராவுக்கு, ஆராஸ்ஸின் வளர்ச்சி ரொம்ப உதவியது… கஸ்டமர் ஹாண்டலிங், ஒர்க்கேர்ஸ் ஹாண்டெலிங், டைம் மேனேஜ்மென்ட் என நிறைய அனுபவப் பாடம் படிக்க படிக்க தனிப்பட்ட முறையில் ஆராவிடம் நிறைய மாற்றம்…

 

ஆனால் அந்த நாலு பேர்க்கிட்டயும் அதே ஆரா…, கொஞ்சல்,கெஞ்சல் ஊட்டினாத்தான் திங்கறது…, இளா வந்து முத்தம் கொடுத்தா தான் தூங்கறதுன்னு எல்லாரையும் ஒரே நேரத்தில் டயர்ட் ஆக்கினாள்…

 

இந்த நேரத்தில் ரோஜா பிரக்னன்ட், வெளியில லட்டு பாப்பா ரெண்டு மாச வயித்து புள்ளைக்கு கதைய சொல்லி பீதி கிளப்ப, உள்ள இருக்கிற கிருஷோட வாரிசு பாப்பா தின்னதை எல்லாம் வாந்தியா வெளியில கிளப்ப ஒரே அதிரி புதிரி….

 

அவங்க ஷோ ரூம் இருக்கும் எல்லா ஊர்களிலும் , ஆராஸ் தொடங்கபட்டது… அதே போல திருச்சியிலும்…

 

எல்லா இடங்களிலும் ஆசிர்வாத் கட்டிடத்துக்கு அருகிலேயே ஆராஸ் திறக்கப்பட, திருச்சியில் இடப்பற்றாக்குறையினால் ஆசீர்வாத்தின் பின் புறம்… ஒரே பில்டிங்கில் தான்… வெவ்வேறு தெருக்களை நோக்கினார் போல ஆராஸ்…

 

சென்னை சிட்டியை  விட, சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கோயம்பத்தூர், தஞ்சாவூர் திருச்சியில் டிசைனர் டிரசெஸ்க்கு செம்ம வரவேற்பு… குறிப்பாக காலேஜ் மாணவிகளிடம்…

 

ஆராவொட  இருபத்தி  மூன்றாவது பிறந்தநாள் கடந்து மூன்று மாதங்கள் தாண்ட, ரோஜாவுக்கு வளைகாப்பு….

ரோஜாவினை கொண்டே எளிய காட்டன் உடைகளை கொண்ட பிரேக்னன்சி வேர் கலக்ஷன்ஸ் திறக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தாள் ஆரா…

 

“லட்டு கலக்குறா டாலி…” ஆராவை பார்த்து கொண்டே வேதாவுக்கு முத்தம் வைக்க, 

“என்னடா பண்ற என் தாய்கிழவியை… அவன்தான் முத்தம் தரான்னா, நீ என்ன ஈன்னு பல்லை காட்டிட்டு நிக்கிற….?”

 

“எல்லாம் நல்ல விஷயம் தான்டா யோசிக்கிறேன்… பேசாம, ஆராக்கும் இளாவுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடுவோம்…” வேதா கிருஷிர்க்கு பதில் கூற…

 

“ரோஸ்க்கு நல்ல படியா குழந்தை பிறந்ததும் கல்யாணத்தை வச்சிப்போம் டாலி… நானும் கிரிஷும் யூ எஸ்ஸில் ஆரம்பிக்க போற ‘ லாஹிருஷ்’  பிரான்ச்செஸ் க்கான வேலைங்க நெருங்கிட்டு இருக்கு, ரோஸ் இப்படி இருக்கிறப்போ இந்த தடியனை அங்க வார கணக்கில் தங்க வச்சு வேலை வாங்க முடியாது நான்தான் போகனும்… அடுத்த மூணு, நாலு மாசமும் ஆரா தனியா ஆராஸையும், ஆசீர்வாத்தையும் பார்த்துக்க போறா… ஜஸ்ட் கிருஷ் நிலவரம் என்னன்னு ஃபோன்ல ஃபாலோ பண்ணினா மட்டும் போதும்…எதுவும் பிரச்சனைன்னா அவன் திருச்சியில் இருந்து சென்னை  ஃப்ளைட்ல நம்ம ஹெட் ஆஃபிஸ் போயிட்டு வரட்டும். ”

 

“சரி உன் இஷ்டம் இளா ஆனா இன்னும் நாலு மாசம் தான் டைம்…கிருஷ் பாப்பாவுக்கு பேரு வைக்கிறப்போ நிச்சயம் பண்றோம்…அதுக்கு அடுத்த மாசம் கல்யாணம்… அதுக்கப்புறம் எதுவும் சாக்கு போக்குலாம் கிடையாது பார்த்துக்க…” சொல்லிவிட்டு வேதா நகர,

 

“கண்டிப்பா டாலி…. டேக் இட் ஈஸி பேபிம்மா…” நடந்து போயிகொண்டிருந்தவரிடம் கொஞ்சினான்…, இளா ஆராவை பார்த்து புன்னகைத்தபடியே  ஓக்கே சொல்ல விதிக்கு ஒரே கெக்க பிக்கே… அது எப்படி நான் இருக்கிரப்போ ஆராவை ஈசியா கையை பிடிக்கிறன்னு ஒரே கொக்கரிப்பு… ஒரு வேளை ஒரே ஒரு டும் டும் டும் மிற்கு விதி கும் கும் கும்மென்று கும்ம போகிறதோ….?????

 

“எப்படியோடா சீக்கிரம் நம்ம கணவர்கள் நலசங்கத்துக்கு புது உறுப்பினர் வரவு… வெல்கம் மாப்ள…” கிருஷ் பேசிக்கொண்டே போக….

 

“லட்டு ஒயிட் கலர்ல இருக்குது…”

 

“எங்கடா, யெல்லோ கலர்லதான இருக்குது…” 

 

“இல்லையே……., முழுசா முழுங்க ஆசைப்படுறது போல வெள்ளையா மனச கொள்ளையடிக்குதே….”

 

“உன் வாய் இங்க இருக்குது, கண் எங்கயோ லுக்குதே…”

 

அவன் லுக்கை தொடர்ந்த கிருஷ்க்கு பக்கு…

கிருஷ் பதார்த்ததை சொல்ல, யதார்த்தம்,

ஒயிட் லெகங்காவில்  ஆரா…

ஆராவும் என்னன்னு கேட்டபடி இவனை பார்க்க, இவன் தனியே வர ஜாடை காட்ட, ஆரா மீண்டும் கேள்வியாய் நோக்க, வா இங்க,நம்ம இளா சேதி சொல்லிட்டு பக்கத்து ரூமுக்கு போயிட்டான்…

 

அந்த அப்ரசன்டி ஆராக்கு அப்பவும் ஒன்னியும் புரியாம, 

“என்ன சொல்ல வரான் இந்த இளா, கேட்டு சொல்லு அண்ணா…”, டவுட்ட…

 

“அவன்ட்டயே போயி கேட்டுக்க பக்கி…”  தள்ளி விட்டு கிருஷ் காண்டுல போயிட்டான்…

 

“இப்ப எதுக்கு கூப்பிட்ட…?”

 

கேள்வியோடு உள்ளே போனவளை, பின்னிலிருந்து கட்டி கொண்டான் இளா…

“என்ன இளா…?” 

“ஒன்னும் இல்லை… சும்மா… ரொம்ப அழகா இருந்தியா அதான் சொல்லலாம்னு….” காதல் பொங்கி ஊத்த இளா,

“அதை இங்க கூப்பிட்டு தான் சொல்லனுமா லூசு இளா…”

இன்னும் கொஞ்ச நாட்களில் இதே  வார்த்தை தனியாக வந்து சொல்லலைன்னு ஊடல் கொள்ளபோவது தெரியாத ஆரா…, இளாவை லூசு சொல்லிட்டு போனாள்…

இளா ஸ்தம்பித்து போனான்… ஒரு வேளை ஆராவால் நம்மை கடைசி வரை காதலனாய் பார்க்க முடியாதோ… ரொம்ப அவசரபடுகிறோமோ…??? இளாவிற்க்குள் இருந்த காதலன் தவித்தான்…

பொத்தென்று அருகில் இருந்த மோடாவில் அமர்ந்துவிட்டான்…

மதியஉணவுக்கு  எல்லோரும் இளாவைத் தேட…, ஆரா அவனை , விட்டுவிட்டு வந்த இடத்திற்கே  வந்துவிட்டாள்…  இளா அதே இடத்தில், இலக்கில்லாமல் அவன் மொபைலை பார்த்தபடி , கைகளை கன்னத்துக்கு கொடுத்தபடி,

 

“இளா, சாப்பிட வராம இங்க என்ன பண்ற…?”

 

“எனக்கு பசிக்கல லட்டு… நீ போயி சாப்பிடு… எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு…நான் கிளம்புறேன்.”

 

“என்ன வேலை…? அதான் எல்லா  ஷோ ரூமும் லீவ் தான இன்னைக்கு…”

 

“இது வேற…………. 

நான் அப்படியே வீட்டுக்கு போயிடுவேன்.. நீ சின்னசாமி அங்கிள் கூட வா, இல்லை தங்குறதுனாலும் தங்கிட்டு வா…” அதற்குள் வேதாவும் அவனை தேடிக் கொண்டு வர,

 

ஆராவிடம் சொல்ல முடிந்த பதிலை வேதாவிடம் சொல்ல முடியாததால் , உட்கார்ந்து, கொஞ்சமா உணவைக்  கொறித்து விட்டு, கிளம்பிவிட்டான்…

 

அவரு அந்தப் பக்கம் ஜூட் வுட்டதும்  மேடமுக்கு இந்த பக்கம் ஜிலோன்னு ஆயிட்டுது…

ஆராவுக்கு ஒரே பரிதவிப்பு… ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது…குழப்பம் அதிகமாக, நல்லாத்தானே இருந்தான் இளா.., அழகா இருக்கேன்னு சொன்னான்… அப்புறம் என்ன ஆச்சு…? ஆராக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எஃபெக்ட்….

 

ரோஜாவிடம் பேசியபடி உண்ண உட்கார்ந்த ஆரா சோற்றை பேருக்கு அளைந்தாள்…

 

“லட்டுக்கு என்ன ஆச்சுடி. ரெண்டே ரெண்டு ஜாமுன் தான் தின்னுது…அதுக்கு மேல எதுவும் திங்காம ஜாம் ஆகி நிக்குது…” கிருஷ் ரோஜாவின் காதை கடிக்க…

 

“ஏன்…, மீந்தா நீங்க அமுக்கலாம்னு  பார்த்தீங்களா…? இளா அண்ணன், ஒரு மாதிரி சோகமா மூஞ்ச வச்சிக்கிட்டு  கிளம்பி போனார் அப்புறம் இவ இப்படி ஆகிட்டா…என்ன பிரச்சனை அண்ணனுக்கு தெரியுமா….?”

 

“பிரச்சனையா அதுவும் இளாவுக்கா…? அவன் இருந்த மூடுக்கும் ,இவ போன ஸ்பீடுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியே ஏதோ கசமுசா ஆகி , நமக்குத்தான் பிரச்சனை வரும்னு நினைச்சேன்… இதுங்க எதுக்கு மூஞ்ச தூக்கி வச்சிருக்குன்னு தெரியலையே…? இரு போயி ஒரு டெஸ்டிங்கை  போடுவோம் , இந்த காட்டுப் பன்னி கிட்ட…”

 

“ஹே… புட் பாண்டா… என்னடி உலக அதிசயமா , சோத்தை  ரெண்டு ரவுண்டு கம்மியா அமுக்கியிருக்க…?”

 

நிமிர்ந்து அவனை முறைத்து விட்டு, மீண்டும் 

ஆரா …, சோற்றில் ஆராய துவங்க,

 “உன்னை நம்பி ரெண்டு அண்டா சோறு வெயிட்டிங்ல இருக்கு…. உன் பெர்பார்மென்ஸ் அந்த அளவுக்கு இல்லையே… வீக்கா இருக்குதே…”

 

திரும்பவும் அதே முறைப்பு….

 

   “கமான், ஃபூட் பாண்டா, கொரில்லா அட்டாக்கை ஆரம்பி, ஆப்பிரேஷன் அண்டா  ஸ்டார்ட்ஸ் நவ்…”

……………………..(சேம் ஆங்கிரி பேர்டு முறை…)

 

 

 

சாஷா…