Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-26(2)

கண்மணி 26(2)

 

கிருஷ்,  “ஏண்டி சிலுக்கு கொஞ்சமா அதிர்ச்சி கொடுங்கடி. ஏற்கனவே,  உன் ஆத்தா கற்பகம்,  வந்ததிலிருந்து வாயைத் திறக்காம இருக்கிறதையே என்னால ஜீரணிக்க முடியல. இதுல நீ என்னன்னா எட்டாவது அதிசயம் அதிசயமா, மன்னிப்பெல்லாம் கேட்கிற. நான் சின்ன பிள்ளை. ஐ அம் வெரி பாவம்.  எனக்கு இப்பவே லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.  நான் என் பொண்டாட்டி கூட இன்னும் நூறு வருஷம் வாழனும்னு முடிவு பண்ணியிருக்கேன். இப்படி எல்லாம் ஷாக் மேல ஷாக் கொடுத்து,  அந்த ஆசைல அம்மாவும் பொண்ணும் மண்ணை அள்ளி போட்டு கெடுத்துடாதீங்க தெய்வங்களா.” 

கையை கூப்பி கெஞ்சுவது போல நடிக்க,

 

“ஏன்  கிருஷ் நீ  வாழறத, நானும் எங்க அம்மாவும்  நல்லவிதமா நடந்துதான் கெடுக்கனுமா..? நீ காலேஜ் படிக்கிறப்ப ரம்யா பின்னாடி சுத்தினத சொன்னா , ஆட்டோமேட்டிக்கா உன் குடும்ப பிரிஞ்சிட போகுது. இதுக்காகளாம் டிராமா பண்ணுவாங்களா என்ன..?” சீமா விளையாட்டாய் வத்தி வைக்க,

 

ரோஜா முறைத்துக் கொண்டிருந்தாள் கிருஷ்ஷை.

 

“அடிக்கிராதகி. உனக்கு என்னடி பாவம்  பண்ணினேன் நான்.? இப்படி என் குடும்பத்துல குண்டை போட்டுட்டு போற. இதுக்கு பேருதான் உறவாடிக் கெடுக்கிறதா…? நல்லா கத்து வச்சிருக்க, சம்பவம் பண்ண,  நீ போற வீடு ரொம்ப அமோகமா வரும்.  இப்போவே என் கண்ணு முன்னாடி உன்னோட ஃபியூச்சர் புருஷன் நிலமை அப்படியே தெரியுது. நல்லா இருமா, நல்லா இரு.” கிரிஷ் வயித்தெரிச்சலோடு இரு கையை தூக்கி வாழ்த்த,

 

 “தேங்க்யூ.. தேங்க்யூ …தேங்க்யூ.  யூ  ஆர் வெல்கம்.” குனிந்து அவன் வாழ்த்தை சீமா ஏற்றுக்கொள்ள,

 

இளாவும் ஆராவும் பழைய சீமாவை பார்த்த சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

சீமா சுற்றி முற்றி பார்த்துவிட்டு 

 

“இங்கே பாரு கிருஷ். இந்த மாற்றம் முன்னேற்றம் அன்புமணிலாம், சீமா  கிட்ட மட்டும்தான் இருக்கு. எங்க அப்பா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகாததுக்கு எங்க அம்மாவோட கெட்ட எண்ணம்தான் காரணம்ன்னு சொல்லி, தற்காலிகமா வாயை மூடி வச்சிருக்கார். எங்க அம்மா இன்னும் அதே பழைய மோடுல தான் கெட்டி கற்பூரமா இருக்காங்க.  நீ பாட்டுக்கு கிண்டல் பண்றேன்னு சொல்லி வாயை விட்டு, பழைய கற்பகத்தை பத்த வச்சுடாத, அப்புறம் உன் வீடுதான் எரியும் பாத்துக்கோ.”

 

ரகசியமாய் வார்னிங் கொடுத்தாள் தன் அம்மாவைப்பற்றி. 

 

“வா சீமா சாப்பிடலாம். மன்னிப்பு கேட்டா , அதோட விடாம நக்கல் பண்ணிக்கிட்டு நிக்குது பாரு,” கிருஷ்ஷின் காதைப் பிடித்து திருகி வேதா அழைத்து சென்றார்.

 

அனைவரும் மதிய உணவு உண்டபின் ஓய்வில் இருக்க,

 

வைத்தியநாதன் ஒரு அறையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்க,

 

ரோஜா சீமாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

 

திவானில் படுத்துக் கொண்டு, எதிரில் இருந்த நாற்காலியில் காலை நீட்டிக் கொண்டு , போனை நோண்டிக் கொண்டிருந்த ஆராவை நோக்கி சென்ற கற்பகம்,

 

“கொடுத்து வச்ச மகராசிடி நீ, எங்க போனாலும் ஓசி சோறு கிடைக்குது. நல்லா தின்னுட்டு கால நீட்டி, நல்லா சவுகரியமா  வாழற.”

கற்பகம் நக்கல் அடிக்க, 

 

அவரைப் பார்த்து விட்டு, எழுந்து,

 

நேராய் அருகில் இருந்த தன் அறைக்குள்  புகுந்தாள் ஆரா.

 உள்ளே எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருந்தனர் இளாவும் கிருஷும்,

 

“அடிக் கூமூட்டையே, என் வீடு, உக்கார்ந்தும் தின்னுவேன், படுத்துக்கிட்டு தின்னுவேன்னு என்கிட்ட உதார் விட்டுட்டு, இப்ப எங்கத்தையை பார்த்ததும், தூக்கி போட்டு மிதிக்கறதை விட்டுட்டு, நேரா அரிசி குடோனுக்குள்ள வந்து பம்மிக்கலாம்னு பார்க்குரியே. வெட்கமா இல்லை. கொஞ்சம் வெய்ட் பண்ணு, உன் அண்ணன் வெளிய போயி கதகளி ஆடிட்டு வந்து உன்னை ஒரு கை பார்க்கிறேன்.  இன்னுமும் என் அத்தைக்கு கொழுப்பு குறையல பாரு.” கோபத்துடன் கிருஷ் கிளம்ப,

 

“நீ எங்கடா போற இவளுக்காக பரிஞ்சுகிட்டா, அவ்வளவு பேசுறாங்க அவங்க, இது பெருசா ஆசிர்வாத் குரூப்ஸ் எம்டினு பெத்த பொசிஷன்ல இருந்துகிட்டு, அமைதியா கேட்டுகிட்டு அப்படியே வருது.

இதுக்கெல்லாம் ரோஷமே  கிடையாதுடா. காமா சோமான்னு, யாராவது இளிச்சவாயன், நம்மள போல, கிடைச்சா , அதட்டி உருட்டும். ஹிந்தி பண்டிட்டினு  சொல்லி பில்டப் கொடுக்கும்.  மத்தபடி சேம் தத்தி கேர்ள் ஆராதான்.” 

 

கிருஷ்ஷை பார்த்து கண்ணடித்து, இளா சொல்ல,

 

அவன் ஓ, சொல்லி புரிந்து கொண்டதை காட்டினான்.

 

“யாரு நானாடா தத்தி, நானாடா பில்டப்பு கொடுக்கிறேன்.” கோபப்பட்டு இளாவை குத்தி விட்டு, பெட்டுக்கு போக,

 

“போம்மா… போ.. என்னை எல்லாம் நல்லாதான் அடிக்கிற. முடிஞ்சா  உன் வீரத்தை சீமா அம்மாகிட்ட காட்டுடி பார்ப்போம். அப்போ ஒத்துகிறேன் நீ கெத்துண்ணு.” இளா

 

“ஏண்டா அந்த காண்டாமிருகத்துகிட்ட, இந்த காட்டெருமை கன்னுகுட்டியை அனுப்புறியே அந்த அளவுக்கு பர்பாமென்ஸ் காட்டுமா..? இல்ல பங்கமாகி திரும்பி குடோன்லயே வந்து பம்மிக்குமா..?” கிரிஷ் சிரித்தபடி டவுட்ட,

 

“அது டவுட்டு தான் மச்சான் வழக்கம்போல, கற்பகம் ஆன்டி அடிக்க,  இவ அடி வாங்க, கற்பகம் ஆன்டி திருப்பி அடிக்க, இவ திரும்ப அடிவாங்க, அவங்க திரும்ப அடிக்கன்னு  ஒரே தமாஷாதான் இருக்கும். வெளிய போயி  வேடிக்கை பார்ப்போம். ஏதாவது டீட்டெயில் மிஸ்ஸாகிட போகுது.” சொல்லி இளா சிரிக்க, கிருஷ் அடக்க முடியாமல் மெத்தையில் உருண்டு சிரித்தான்.

 

“டேய் என்னை பாத்து சிரிச்சிட்டீங்கள்ள,  ரெண்டு பேரும்,  நான் யாருன்னு இப்பவே காட்டுறேண்டா. ப்ளடி பக்கார்ஸ்.”  கொடூரமாய் ஆரா முறைக்க,

 

“ஐயையோ ரொம்ப பயமா இருக்கு அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ “, கிருஷ் இன்னும் கலாய்த்தான்.

 

“இல்லையா பின்ன, சீமாக்கும், உன் வைத்தி மாமாக்கும்னு ரெண்டு பேருக்கு, சோறு போடுற அவங்களுக்கு, அவ்வளவு திமிர் இருந்தா, ஆசிர்வாத் ஆராஸ்னு ஆயிரம் பேருக்கு சோறு போடுற, எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும். காட்டுறேண்டா உங்க கருப்பு அத்தைக்கு முதல்ல. அப்புறம் வந்து கவனிச்சிக்கிறேன்டா உங்களை. ஏதோ , என் மாதாஜிக்கு ரிலேட்டிவ்னு பார்த்தா, என்னையே சொரிஞ்சு விட்டுட்டீங்கள்ள, குறிச்சு வச்சுக்கோ, காலண்டர்ல, என்ட்ட மாட்டுனிச்சுனா அன்னைக்கு தான் அந்த கற்பகத்துக்கு கருப்பு தினம்னு.”

 

ஆரா சவால் விட்டுவிட்டு செல்ல

 

இளா, சந்தோஷத்தோடு பார்த்து கொண்டிருந்தான் அவளை.

 

“மச்சான் இந்த அரிசி மூட்டையை கொளுத்திவிட்டு இருக்கோமே, இது எரியுமா? ஏன்னா சிங்கிள் கேப் கிடைச்சாலும் எங்கத்தை அதே நெருப்பில் போட்டு வறுத்து, வெறும் அரிசியை, பொரி அரிசியா மாத்தி அனுப்பி விட்டுரும்.”

 

“பிலீவ் மீ டா மச்சான் எரிஞ்சுதான் ஆகணும்.  உள்ள ஊத்தி அனுப்பி விட்டது பெட்ரோல். ஆனா ஒன்னு  எரிஞ்சுட்டு இருக்கும் போதே, கற்பகம் ஆன்ட்டி மாட்டனும்,  இல்லாட்டி எல்லா  பெட்ரோலும், எவாப்பொரெட் ஆகி வேஸ்ட்டா போயிடும்,”

 

இளா சொல்ல மீண்டும் சிரித்தனர் நண்பர்கள்.

 

“ஆனா ஆழாக்கு சைஸ்ல இருந்துகிட்டு, நம்ம லட்டு அடிக்கடி ஜாக்கிசானா மாறிடுறா. எட்டலைன்னாலும் எம்பி எம்பி அடிக்குறா. “

கிருஷ் சொல்ல, 

 

“டேய் , என் ஆளை ரொம்ப ஓட்டுற நீ, வாடா என்ன பண்ணறான்னு போயி பார்ப்போம்.” வயிற்றில் செல்லமாய் குத்தி வெளியே அழைத்து வந்தான் கிருஷ்ஷை.

 

 வெளியில் வந்த ஆரா, கற்பகத்தை முறைத்தபடி, ரோஜாவிடம்  குழந்தையை கேட்டு வாங்கிக்கொண்டு, ரோஜாவின் அறைக்குள் செல்ல,

உள்ளே நுழைந்த கற்பகம்,

 

“என்னடி பார்வைலாம் ஒரு மாதிரியா இருக்கு.  பயம் விட்டுப் போச்சோ.?”

 

கேட்டபடி, அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர,

படுக்கையில் அமர்ந்தபடி குழந்தையை, மடியில் வாகாய் வைத்து கொண்டு,

கால் மேல் கால் போட்டு, 

 

“ஆமா , பயம் விட்டுப் போச்சு, அதுக்கு என்னாங்குறீங்க இப்போ.”

 

அசால்ட்டாய் கேட்டபடி, குழந்தையைய் கொஞ்சியபடி, ஆரா விளையாட்டு காட்ட,

 

“ஏய், என்னடி , மரியாதைலாம் குறையுது. திமிரா?”.கற்பகம்.

 

“நீங்க யாருக்கிட்ட பேசிட்டு இருக்கீங்க தெரியுமா, ஆராகிட்ட. ஆசிர்வாத் எம்டி. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கோங்க.” ஆரா

 

“பொல்லாத ஆசிர்வாத் எம்டி. என் பொண்ணு உக்காந்திருக்க வேண்டிய இடம். நீ உக்கார்ந்துட்டு நாட்டாமை பண்ற,” 

 

“ஹலோ , உங்க பொண்ணு எம்டி சேர்லயா..? ஆசிர்வாத் குரூப்பில, கற்பகம்ன்ற பேர்ல, ஷேர்ஸ் எதுவும் யார் பேருலயும் , பார்த்ததா நியாபகம் இல்லையே.” ஆரா யோசிப்பது போல நடிக்க,

 

“ரொம்ப கொழுப்பு ஏறிப்பொச்சுடி உனக்கு, என் பொண்ணு இளா பொண்டாட்டி ஆகியிருந்தா , அவதான எம்டி. உன்னையை தூக்கி தெருவில் வீசிட்டு, அவ பேருக்கு மாத்தியிருப்பேன் நான்.”

 

“ஓஹோ, அப்படி வர்றீங்களா நீங்க, அப்படி கல்யாணம் பண்ணிக்குறேன்னு இளா சொன்னானா.? யாரு ஆசைப்பட்டாலும் சரி இளாக்கு, எங்கேயும் எப்போதும் நான் மட்டும்தான் எல்லாம். எங்க மாதாஜிக்காக மரியாதை கொடுத்துதான் கம்முன்னு இருந்தேன். இனிமே இப்படி ஆராகிட்ட, மரியாதை இல்லாம நடந்துக்கிட்டா, இப்படி ரூமுக்குள்ள அசிங்கப்படுத்தின மாதிரி, எல்லாரும் இருக்கிற இடத்தில் அசிங்கப்படுத்துவேன், மிஸ்ஸர்ஸ் கற்பகம். மைண்ட் யூவர் பிசினஸ்.”

 

ஆராவின் பதிலில், கற்பகம் காண்டாகி கத்தினார்.

 

“ஏய், அனாதை கழுதை நீ, என்கிட்டே எதிர்த்து பேசுறியா..?”

 

கற்பகம் கத்தலில் குழந்தை வீறிட்டு அழ,

 

வாயில் விரலை வைத்து, “உஷ்… சத்தம் வரக்கூடாது,” புருவத்தை உயர்த்தி அவரை மிரட்டியபடி,

 

“ஜோ, ஜோ குட்டி, அத்தமா இங்கதான் இருக்கிறேன். அழக்கூடாதான்.” ஆரா குழந்தையை கொஞ்ச,

 

“என்ன..? அத்தை நொத்தைன்னு உறவுலாம் பலமா இருக்கு. பார்த்துமா, நீ எங்க போனாலும் அங்க யாரையாவது முழுங்கிடுவ. இங்க யாரை முழுங்க வந்துருக்கியோ..?” கடைசி ஆயுதத்தை வீசி வெளியே செல்ல,

 

பின் தொடர்ந்து வெளியே வந்த ஆரா, குழந்தையை வெளியே வந்து ரோஜாவிடம் ஒப்படைத்து விட்டு, அப்போதுதான் வெளியே வந்து அமர்ந்த, வைத்தியநாதனிடம் சென்று,

 

“அங்கிள், நான் உங்க வீட்டுல வந்து, ஒன் வீக் தங்கலாமா…? பிளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க.” கேட்க,

 

அவர், அனைவரையும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு,

“அதுக்கென்னமா, தங்கிக்கோ, அதுவும் உன் வீடுதான். ஆனா,  கூப்பிட்டாலும் வர மாட்ட, இப்ப நீயா வரேங்கிறியே மா..?”

 

வைத்தி கேள்வி எழுப்ப,

 

“அது ஒன்னும் இல்லை அங்கிள். நான் எங்க போனாலும் அங்க யாரையாவது போட்டுத் தள்ளிடரெனாம். அதான் உங்க வீட்டுல தங்கினா, உங்க ஓயிஃப் மண்டைய போடுறாங்களா, என் ராசிக்குன்னு ஒரு டெஸ்டிங்கை போடத்தான் கேட்டேன்.”

 

ஆரா சொல்ல, அவர், திரும்பி,

 

“உன்னை என்னை சொல்லி கூட்டிட்டு வந்தேன். இங்க வந்ததும் உன் புத்தியை காட்டிட்டியியா..?” கேட்டபடி கற்பகத்தை முறைத்தார்.

 

“என்னம்மா இதெல்லாம்..?” சீமாவும் கேட்க,

 

கற்பகம் தலையை குனிந்தபடி நின்றிருந்தார்.

 

“விடுங்க, ஆன்டி , பழைய ஆராவா இருக்கிறேனா இல்ல, பிசினஸ் ரன் பண்ற அளவுக்கு விவரம் ஆகிட்டேனான்னு  டெஸ்ட் பண்ணியிருப்பாங்க, யாரும் பெருசா எடுத்துக்காதீங்க.”

 

சொல்லியபடி, இளாவையும் கிருஷ்ஷயும் முறைத்தபடி  தன் அறைக்கு செல்ல,  மையமாய் சிரித்தபடி இளாவும் பின்னாலேயே சென்றான்.

ஆரா உள்ளே சென்றதும், ஓடிச்சென்று கட்டிக்கொண்டான் இளா.

 

“ப்பா… என் ஆரா, இப்படித்தான் இருக்கணும். யார் முன்னாலயும் தலை குனியாம, கெத்தா,”  சொல்லியபடி 

 

“லவ் யூ டா,” கன்னத்தில் முத்தம் வைக்க,

 

“கருப்பு காயின் முன்னால போகுது. சிவப்பு காயின் பின்னாடியே போகுதே. சரி இல்லையே”, சிந்தித்தபடி, இளாவை ஃபாலோ செய்து  உள்ளே நுழைந்த கிருஷ்,

 

“இதுக்குதான் இவ்வளோ அவசரமா உள்ள வந்தியாடா.  இந்த அரிசி குடொனுக்கு நான் தான் வாட்ச்மேன்னு சொன்னேன்ல. ராஸ்கல்ஸ். தள்ளிப் போங்க ரெண்டு பேரும்.” இரண்டு பேரையும் விரட்டினான்.

ஆரா சிரித்தபடி வெளியே செல்ல,

 

“இப்ப எதுக்குடா..? ஒரு லவ் பேர்ட்ஸ்சை அத்து விட்ட?” இளா,

 

“ம்ம்… நான் வந்து அத்து விடலைன்னா , நீங்க எனக்கு போட்டியா எதையாவது பெத்து விட்டுருவீங்கங்கிற பயத்துல தான்,” 

கிருஷ் விளக்க,

 

“போடா, நாங்களே, இன்னும் முழுசா லவ் பண்ண ஆரம்பிக்கில, ஆரா ரியாக்ஷன் பாக்குறதுக்குள்ள  வந்து கெடுத்துட்டியே. பாவி.”

 

“ஏன்டா , தொட்ட தொண்ணூறுக்கும் டபக்கு டபக்குண்ணு கட்டி பிடிச்சுக்கிட்டு, முழுசா லவ் பண்ணல பாதியா கிஸ் பண்ணலன்னு ,கதையா விடுற?”

 

“அதுலாம் லவ் டச் டா மச்சான். உனக்கு புரியாது.”

 

“கேட்காத காதுக்கு ஹெட் செட்டாம். இன்னும் வராத காதலுக்கு லவ் டச்சாம்.” கிருஷ் அங்களாய்க்க.

 

“வரலைன்னு யாரு சொன்னா..? வந்துட்டு மச்சான். ஆனா புரியல. அவளுக்கு.”

இளா கூற, 

 

“ஐய்யோ நல்லா இருந்தவனை குழப்பி பைத்தியமாக்கி விட்டுருவானுங்க போலயே.”

 

“கிருஷ் ஓடிடுடா”, தப்பிச்சு ஓட, 

 

“நில்லூடா,” இளாவும் பின்னாலேயே ஓடினான்.

 

அன்றைய பொழுது வீட்டிலேயே செல்ல,

 

அடுத்த நாள் , வைத்தி குடும்பம், குலதெய்வம் கோவிலுக்கு செல்ல, குழந்தைக்கு இன்னும் புண்ணியாதானம் செய்யல, தீட்டு கழிக்காம வர முடியாது, மறுத்து விட்டார். வேதா.

 

அதற்கும் கற்பகத்தை முறைத்தவாறே வைத்தி செல்ல, அன்றைய நாள் அப்படியே கழிந்தது.

 

அடுத்த நாள் , குழ்ந்தைக்கு துணி வாங்க, அதோடு சீமாவுக்கும் பிடித்தபடி ட்ரெஸ் எடுத்து தர, ஆராஸ்க்கு அனைவரையும் அழைத்து கொண்டு வேதா வந்திறங்க,

 

உண்மையில் ஆசிர்வாத் , ஆராஸ் வளர்ச்சி, ஆரா அனைவரையும் வேலை வாங்கி கொண்டிருந்த விதம், கற்பகத்திடம் பொறாமையை கிளப்பி இருந்தது. 

 

ஆராஸ்சில், அவளறையில் இருந்தபடி,

 

 “ஆம்ஸ் , போன மாசம் நாம புதுசா வாங்கியிருந்த ஹோல்சேல் பர்சேஸ் டீடெய்ல் ஸ் எடுத்துட்டு வாங்க. என்னால இப்போ அங்க வரமுடியாது. இங்க வீட்டுல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. இங்கதான் இளா வருவான். அவன் கிட்ட காட்டிடலாம். அவன்கிட்ட ஒப்பீனியன் கேட்க வச்சிருந்த மத்த ஃபைல்சையும் எடுத்துட்டு வந்திருங்க .”. அறிவித்து விட்டு போனை வைக்க, 

 

டிரெஸ்ஸை பார்ப்பது போல, ஆராவையே வெறியோடு பார்த்திருந்தார் கற்பகம். 

 

அவளின் பதிலடி, அவருள்  கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது. வழக்கமாக பேசி அடுத்தவரையே காயப்படுத்தி பழக்கமாகி இருக்க, ஆராவின் எதிர்ப்பு அவரை காயப்படுத்தி இருந்தது.

 

யாரும் பார்க்காத போது ஆராவின் அறைக்குள் நுழைந்த கற்பகம்,

“என்னடி, பெருசா வாழ்வு வந்துட்டுன்னுதான், அன்னைக்கு என்னை எடுத்தெறிஞ்சு பேசினியா..? பாக்குறெண்டி, எத்தனை நாள் நீ சந்தோஷமா வாழுறன்னு பாக்குறேன்.”

 

சுதாரித்த ஆரா,

 

“அச்சச்சோ, இப்பவே உங்களுக்கு ஒரு அறுபது வயசு இருக்குமா..? உடம்பை பார்த்துக்கங்க பாட்டி, இப்படியே எல்லாரையும் பார்த்து வயிறெரிஞ்சா, சீக்கிரம் டிக்கெட் வாங்கி, மேல அப்பீட்டு ஆயிடுவீங்க, அப்புறம் நான் நல்லா வாழ்றதை , பார்க்க முடியாமலேயே போயிடும்.”

“திமிராடி உனக்கு. இளாவை கல்யாணம் பண்ண போற திமிர்ல பேசுறியா நீ.? அனாதை கழுதை, முதல்ல குடும்பம் நடத்த தெரியுமா..? உனக்கு. ஏதோ, அரை லூசா இருக்குறன்னு இளாவும் மத்தவங்களும் உன்னை சகிச்சுகிட்டு வாழுறாங்க. இவங்களை விட்டா, ஊருல, உன்னை வச்சு ஒருத்தரும் குப்பை கொட்ட மாட்டாங்க.?” கற்பகம் சபிக்க,

 

“முழு லூசா திரியிற உங்களை வச்சே, மிஸ்டர் வைத்தியநாதன் குப்பை கொட்டிட்டார். என்னை வச்சு மத்தவங்க குப்பை கொட்ட மாட்டாங்களா..? போங்கங்க போங்க, போயி பொண்ணுக்கு கல்யாணம் பன்ற வேலைய பாருங்க.”

 

ஆராவின் பதிலில்,

 

கற்பகம், கோபமாய் சேரை நகர்த்தி எழ,

 

உள்ளே நுழைந்த மாலினி,

 

“யாருங்க நீங்க, எங்க மேடம் கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கிறீங்க..?”

மிரட்ட,

 

“அய்யோ ஆம்ஸ், இவங்களை தெரியாதா..? இவங்கதான், அம்பானிக்கு கசின் சிஸ்ஸ்டர், பெரிய பிசினஸ் மேக்னட். மேடம்க்கு மூக்கு ரொம்ப நீளம், அதனால எப்பவும் அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்குறதையே,  முழு நேர பிசினஸா வச்சிட்டு இருக்காங்க.”

 

ஆராவின் நக்கலில், கற்பகம் கிளம்பி வெளியே செல்ல,

 

“யாருங்க மேடம் இவங்க.? ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?” மாலினி கேட்டாள்.

 

“நம்ம பழைய ஆடிட்டர் வைத்தியநாதன் ஒயிப் இவங்க.அங்க ட்ரெஸ் எடுக்கிராங்க பாருங்க, சீமா,  அவங்க இவங்க பொண்ணுதான். அவங்க பொண்ணுக்கு இளாவை கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாங்க, அது நடக்காத கோவத்தை இப்படி காட்டுறாங்க.”

 

“ஓ, அவங்க பொண்ணு கூட லாஸ்ட் இயேர் , பாஸை பார்க்க வந்திருந்தாங்க. பாஸம்மா சொல்லிட்டு, உள்ளே போயிட்டாங்க. சார் திட்டிட்டார். என் முன்னாலேயே. ஏன் அனுப்பினேன்னு என்னையும் திட்டினார்.”

 

“அவ்வளவு நடந்துருக்கா.? பாருடா எனக்கு தெரியாம போச்சு.”

 

“உங்களுக்குத்தான், பாஸ்சை பத்தி தெரியுமே மேடம். அவரோட அழகுக்கு எத்தனை பொண்ணுங்க பார்த்தாலும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். சச் ய ஜென்டில்மேன்.”

 

மாலினி மனம் திறந்து, மெய் மறந்து பாராட்ட,

 

அவளைப் பார்த்த ஆரா,

 

“மத்த பொண்ணுங்க இருக்கட்டும், நீங்க சைட் அடிச்சுருக்கீங்களா உங்க பாஸ்ஸை..?”

 

“அய்யோ மேடம், அப்படிலாம் இல்ல,” பதறினாள்.

 

“சும்மா சொல்லுங்க ஆம்ஸ். கேர்ள்ஸ் டூ கேர்ள்ஸ் டாக் தான,” ஆரா தூண்ட,

 

“இவ்வளவு ஹெண்ட்சம்மா இருக்கிறப்போ எப்படி மேடம்,. சைட் அடிச்சுருக்கென் ,” வெட்கப்பட்டபடி சொல்ல,

 

“இதுவரைக்கும் எப்படியோ, இனிமே அப்படி இளாவை பார்த்தா, கண்ணை நொண்டிடுவேன் ஆம்ஸ்.” மிரட்ட,

 

மாலினி வாயைப் பிளந்து ஆ என்று ஆராவைப் பார்த்தபடி நிற்க, அவளைப் பார்த்து,

 

கண்ணடித்தபடி கேபினை விட்டு, வெளியே சென்றாள் ஆரா.

சாஷா…