KKA-3

Epi 3

 

இரவு  ஒரு மணிப்போல  திடுக்கிட்டு எழுந்தமர்த்தவள் உடல் முழுதும்  வியர்வையில் குளித்திருக்க முகத்தை தன் இரு கைக்கொண்டு  அழுந்த துடைத்துக்கொண்டாள் கயல்.கட்டில் அருகே இருந்த நீரை  பருகி தன்னை நிதானப் படுத்திக்கொண்டாள்.

 

அவள் சற்று முன் திடுக்கிட்டு எழுந்ததற்கான  காரணமாய் இருந்த கனவு அவள் நினைவுக்கு வந்தது…

 அடர் காட்டு பகுதி ஒன்றில்  அவள் மட்டும் யாரோ ஒருவனால்  கடத்தப்பட்டு தனித்து விடப்பப்பட்டிருந்தாள். அவ்விடத்தின்  அமைதியும் அங்கே கேட்கும் பூச்சிக்களின் ரீங்காரங்களும் அவளை  பயங்கொள்ள செய்ய அவளை யாரோ பின்னின்று அவள் தோளில் கை வைக்க  கனவு கலைந்து எழுந்தமர்த்திருந்தாள்.படத்திலும் சண்டை காட்சிகளையே  பார்க்க பயப்படும் மனம் கொண்டவளுக்கு கனவில் கண்ட நிகழ்வு உடலில்  நடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

 

இரண்டு மாதங்கலில்  கயல் செல்லும் அவளது டென்னிஸ்  பயிற்சியின் போது அவளை யாரோ உற்று  பார்ப்பதை உணர்த்திருந்தாள்.. முதல் நாள்  அவள் கண்ணுக்கு தரிசனம் தனத்தவனையும் அதனை  தொடர்ந்து வந்த நாட்களில் காணவில்லை… 

அவள் தான்  காணவில்லையே  தவிர அவன் கண்கள்  அவளை மட்டும் தான் பார்த்ததை அவள் அறியவுமில்லை. 

முதல் நாளிற்கு  பிறகு தந்தை இன்றி தான்  மட்டுமே தன் இருசக்கர வண்டியில்  வருவதை வளமையாக்கி கொண்டிருந்தாள்….. 

 

அவளை  யாரோ உற்று நோக்குவதை  உணரும் போது அப்பார்வை தப்பானதாக இருக்கும்  எனும் எண்ணமும் அவள் மனதில் எழாமல் இல்லை. அதோடு  அது பற்றி அவளுக்கு அங்கு கூறவும் இது வரையில் யாருடனும்  நெருங்கிய பழக்கம் ஏற்படவில்லை..தந்தையிடம் கூறி ஏதும் நிகழ்ந்தால், மீண்டு அவ்விடம் செல்ல  தன்னால் இயலாது என்பதால் அவரிடம் இருந்து மறைத்திருந்தாள். 

 

தன்  அறையில்  உறங்க பயந்தவள்  தந்தையின் அறையை எட்டிப்பார்க்க, அரசு  நல்ல உறக்கத்தில் இருந்தார்.. மெதுவாக அவரருகே சென்றவள் அவருக்கு சத்தம் எழுப்பாது  அப்படியே உறங்கிப்போனாள். 

 

காலை  எழுந்தவர்  தன் பக்கத்தில்  உறங்கும் கயலை கண்டு  இங்கு எதற்கு வந்து உறங்கி  இருக்கிறாள் என்பதை யோசனையோடு  பார்த்தவர் தலையணை கட்டிக்கொண்டு  துயில் கொள்ளும் தன் கண்ணம்மாவின்  தலைக்கோதி விட்டு எழுந்து தன் காலை கடமைகளை  நிறைவேற்றச்சென்றார்… 

 

இவள்  எழும் போது அவர்  முன்னறையில் தேநீர்  பருகிக்கொண்டு இருக்க  குட் மோனிங் ஹனி என்றவள்  அவரருகே அமர்ந்து அவர் தோளில்  மீண்டும் தலை சாய்ந்து உறக்கத்தை தொடர “கண்ணம்மா  ஆபிஸ் போகல?” எனவும் போகனும் பா. இன்னக்கி வெளில  போலாமா? ” எனக்கேட்டாள் கயல்

 

“எனக்கு இன்னக்கி லெவனுக்கு  ஒருத்தரை மீட் பண்ண போகணும்  டா. உனக்கு அங்க வர முடியும்னா ரெண்டு பேருமா ஒன்னா  லஞ்ச் எடுத்துட்டு வெளில எங்கயாச்சும் போவமா? உனக்கு  வரமுடியும்னா ஆபிஸ் போய்ட்டு கோள் ஒன்னு பண்ணு, நா அங்கேயே  வெய்ட் பண்றேன் டா” என அரசு கூற, 

 

“ஓகே  ஹனி ஆபிசில போய்  பார்த்துட்டு சொல்றேன்  என்றவள் அவர் கன்னத்தில்  இதழ் பதித்து விட்டு செல்ல  ‘கண்ணம்மா…’ என இவர் கத்த “சாரி  ஹனி பிரஷ் பண்ணிட்டு ஒன்னு குடுத்தா  ஓகேயாகிரும் என கூறிக்கொண்டே இவள் குளியலறையில்  நுழைந்தாள்… பிறந்தது முதல் இவகிட்ட மாற்ற முடியாத  பழக்கம்னா இது ஒண்ணுதான் என தினமும் காலையில் எழுந்து தன் தந்தை  கன்னத்தில் இடும் முத்தம் பற்றி நினைத்த வண்ணம் ஆபிஸ் செல்ல ஆயத்தமானார்…. 

 

“ஹலோ  அத்தம்மா. ஆபிஸ்  வந்துடீங்கலா? நா  அந்த ஒபிசரை மீட் பன்னிட்டு  அங்கேயே வரேன் ரெண்டு பேரும் மீட்  பண்ணலாம் என கூறி ருத்ரா போனை வைக்க  அவர் பேசும் வரை காத்திருந்த கயல்” மேம்  இன்னக்கி மீட்டிங் தனியாவா போறீங்க? ” எனவும் 

இல்லடா  என் பெரியமனுஷன்  ஒருத்தன் இருக்கானே  அவனே அந்த அபிசரை மீட்  பண்றதா சொல்லிருக்கான் “என்றார். 

ஓஹ்  வட போச்சே!” என  இவள் மனம் மீனாட்சியின்  பெரியமனுஷனை வெளுக்க…

 

“மேம்  நீங்க போயிருந்தா  தன்மையா பேசலாமே.. உங்க பையன் கோவப்பட்டு  அவர் பேசுறதுக்கு முன்னமே எதாவது சொல்லி  ப்ரோப்லேம் வந்துட்டா? “

இவளுக்கு  மீனாட்சியை  அனுப்பி விட  எதாவது வழியிருக்கா  என பேசிப்பார்க்க 

மீனாட்சி “கயல்  என் பையன் பேசுறதை நீ  கேட்டதில்லைல அதுனாலதான்  இப்படி பேசுற… அவன் என்னை  வரவேணாம்னு சொன்னதே நான் கோவத்துல  எதாவது பேசுவேணாம். அதான் அவன் போறதா சொன்னான்.. 

 

“ஓஹ்!.ஓகே மேம் ” என்றவளிடம், 

“கயல்  நானும் அப்படியே லுஞ்சுக்கு  வெளில அவன் கூட ஜோயின் பண்ணிக்குவேன் நீயும்  வாயேன் அவனை இன்ட்ரோ பண்றேன்”என கேற்க.

” மேம்  நானும் இன்னக்கி  ஹாப் டே லீவ் கேட்கலாம்னு  இருந்தேன்.கொஞ்சம் வெளில போகணும். 

‘ஓஹ்  அப்படியா.. சரி  அப்போ நீ போ வேறொரு நாள் மீட் பண்லாம் ‘ என்றவர்  அவர்களின் அன்றைய வேலையில் மூழ்கி விட்டனர்.  

காலை  நேரம் பதினொரு  மணி பிரபல ஹோட்டல்  ஒன்றில் தேநீர் ஒன்றினை  அருந்தியவாறு RVC யின் தலைமையாளரை  சந்திக்க காத்திருந்தார் தேனரசன்… 

வாயிலை  பார்த்தவாறே அமர்ந்திருந்தவர்  கண்களுக்கு இவர் மேசையை நோக்கி வந்த இளைஞனை  கண்டு எழுந்தவர் மரியாதை நிமித்தமாக கை குலுக்கி  தன்னை அறிமுகப்டுத்திக்கொண்டார்.. 

 

“ஹலோ  அம் ருத்ர  வர்மன் “என இவனும் பெயர் சொல்லி  அறிமுகமாகியவன் அமரவும் இவரும் அமர்த்துக்கொண்டார்.வெய்ட்டரை அழைத்தவர் “என்ன சாப்பிடறீங்க  ருத்ரா? எனவும் அவனுக்கான பானத்தை ஆர்டர் செய்து விட்டு அவர்கள் வந்ததுக்கான கரந்தை அலசினர்.

உங்க  கம்பனி  பண்ணி கொடுத்த  எல்லா விதமான காண்ட்ராக்டும்  வெரி பேர்பெக்டா இருக்கு. நான் இங்க   வந்து டூ மந்த்ஸ் தான் ஆகுது.சோ நானே  கலெக்ட் பண்ணின தகவல் கொண்டு தான் இந்த முறை  இதை தடை பண்ணேன். 

 

இவ்வளவுக்கும் உங்க  கம்பெனி மற்ற கம்பனிகளை விட  பெரியளவிலான அமௌன்ட் வித்தியாசத்துல இல்ல. நினச்சா  உங்களை அடுத்து இருக்க கம்பனிக்கும் கொடுக்க வாய்ப்புகள்  அதிகம் இருந்தாலும் உங்க கம்பனியுடைய எல்லா விதமான பணிகளிலும்  இருக்க நேர்த்தியும்,தரமும் தான், அதை விட உங்க கம்பனி ஹெட் மேல  இருக்க நம்பிக்கையும் தான் இவ்வளவு நாளும் உங்களுக்கு கான்ட்ராக்ட்களை  தர முன்வந்திருக்கு… ஆனா இந்த முறை உங்க கம்பனியோட தரவுகளின் படி காண்ட்ராக்ட்  அமௌன்ட் ரொம்ப குறைவா இருக்கு உங்களை அடுத்து பண்ணியிருக்க கம்பனியோட கம்பேர் பண்ணும்  போது… 

அது  சாத்தியமே  இல்ல அதோட அந்த அமௌண்ட்ல  அந்த பில்டிங்க கட்டினாலும் அதன்  உறுதி தன்மையை உறுதியா எத்தனை வருஷத்துக்குன்னு  கூற முடியாது… 

 

இந்த காண்ட்ராக்ட் அமௌன்ட்  பைனலைஸ் பண்ணினத்துக்கு அப்றம்  உங்க ஹெட் ஓட பார்வைக்கு வராம போயிருக்கணும், இல்லன்னா  உங்க மேம் பைனலைஸ் பண்ணி நம்மகிட்ட வாரத்துக்கு இடையில யாரும்  மாற்றி இருக்கணும். அதான் நான் டைரக்ட்டா உங்க ஹெட்டுக்கே இந்த லெட்டர்  வராது போல அனுப்பினேன்.. 

நீங்க  தான் இபோ  என்னை பண்ணலாம்னு  சொல்லணும்” என அரசு அவர் கூற  வேண்டியவற்றை கூறிவிட்டு அமைதி  காக்க…

 

அனைத்தையும்  அமைதியாக கேட்டிருந்தவன்….’சிரித்துக்கொண்டே  நான் இந்த கம்பனியோட ஹெட் இல்லன்னு எப்டி சரியா சொல்றிங்க? ‘  எனவும்

” உங்க கம்பனி  ஒரு பெண் சிங்கத்தோட  வலிமையினால உருவாக்கப்பட்டதுன்னு  தெரிஞ்சுக்கிட்டேன்… அந்த இளம் பெண் சிங்சத்தோட மகனாகவும்  உங்களை என்னால நினைக்க முடியலை.. மே பி யூ ர் இன் நியர்  டு தர்ட்டி ரைட் ?” என அவனை இவர் நோக்க யெஸ் அம் டுவெண்ட்டிஎயிட்  என்றான்… 

“தட்ஸ் தே ரீசன், ஆல்சோ  உங்களை பார்க்கும் போது  ஒரு மிலிட்டரி லுக் தான்  தோணுது” என அரசு கூறினார். 

 

“ஹ்ம்ம்.நான்  அவங்க அண்ணன் பையன் பட்  அவங்களுக்கு எல்லாமே நாந்தான்.ஷி  இஸ் மை ரோல் மாடல் என்றவன் பட் கம்பெனியோட   பார்ட்னரும் கூட… “

 

“சமீப காலமா  நீங்க கம்பனி  பக்கம் போகல போல. நீங்க இருந்திருந்தா  இந்த மிஸ்ட்கே வணர்த்திருக்காதுன்னு தோணுது  எனக்கு “அரசு கூற யா இதுக்கப்றம் இப்படி நடக்குதுன்னு  ஐ கேன் ப்ரோமிஸ், “என்றவன் ” இவ்வளவு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி  இருக்கீங்க, யாரு இதுக்கான காரணம்னும் தெரிஞ்சு இருக்குமே” என ருத்ரா  அரசுவிடம் கேற்க. 

 

“அது  உங்க கம்பனில ஒருதரா  இருக்க முடியாது ரெண்டோ மூணு பேர் சேர்ந்து தான்  பண்ணி இருக்கணும் என்றார்.. இது எனக்கு வந்த காண்ட்ராக்ட்  பைல் உங்க கம்பனில இருக்குமே நம்ம கம்பனிக்கி அனுப்பினது, ரெண்டையும்  வெச்சு பாருங்கக் உங்களுக்கு எதுன்னாலும் ஒரு முடிவுக்கு வரலாம் ” என்றார்… 

 

“கண்டிப்பா ” என அதனை  பெற்றுக்கொண்டவன் அவரிடம்” சாரி  உங்களை தப்பா மீண் பண்ணித்தான் வந்தேன், பட்…. ” என  எதுவோ கூற முன் அரசு அவனை முந்திக்கொண்டு “நான் லண்டன்ல  சம்பாரிச்சு முடிச்சிட்டேன் இங்க தொழில் பண்றது மனசுக்கு  சும்மா இருக்கோமேன்னு நினைக்காம இருக்கவும் ரிலாக்ஸா இருக்கத்துக்கும் … ” சோ  பணம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை அதற்கான தேவையும் எனக்கில்லை என்பது போல பேச… அவரிடம்  கை குலுக்கியவன்,” வில் மீட் சம் அதர் டைம்ஹாப்பி டு மீட் யூ ” என நன்றியை கூறிக்கொண்டவன்  விடைபெற்று சென்றான்.  

 

அரசுவும்  எழுந்து அந்த ஹோட்டலில்  வெளிப்பகுதியில் ஒரு மேசையை  தெரிவு செய்து தன் மகளுக்காக காத்திருக்க  ருத்ரா அவன் அத்தம்மாவுக்காக உள்ளேயே இன்னுமொரு  மேசையில் அமர்ந்திருந்தான். 

 

 ‘ஹேய்  ஹனி!’ என இவள்  உள் நுழையவுமே தன்  தந்தைக்கு கை அசைத்து   காட்டிவிட்டு வர, அத்தைக்காக  காத்திருந்தவனும் இதைக்கான மனதில்  ஏதோ ஒரு உறுத்தல் அவள் யாரை காண வந்திருப்பாள்  எனும் எண்ணத்தோடு அவள் செல்லும் திசை பார்க்க அவன் சந்தித்து வந்த  அதே நபரிடம் சென்றாள்.

 இப்போதுதான்  அவரை எங்கோ பார்த்த நினைவு  என யோசித்தவனுக்கு ஹேய் இவன் தானா  அவன் மரியாதையை எல்லாம் எங்கோ ஓடி இருந்தது.  இன்னொருவனுக்கு சொந்தமானவளையா தான் பார்க்கிறேன்  என மனம் ஒரு பக்கம் உறுத்தினாலும் அவன் அவளது வேறு  யாராகவும் இருக்கலாம் இல்ல’ அறிவு எடுத்துக்கொடுத்தாலும்  ஓஹ்வென மனம் ஊமையாய் ஓலமிட்டு அழ “ஹேய் வரு என இவ்வளவு  யோசனை? “என தோளை தொட்ட அத்தையின் குரலுக்கு செவி சாய்த்தவன் “ஹேய் அத்தம்மா. கம் கம்  என அவரை தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டான்.. 

“என்னாச்சு  ஏன் ஒரு மாதிரியா  இருக்க? அந்தாளை பார்த்தியா? என்னாச்சு  வரு? “என மீனாட்சி அவனை கேள்வி கேற்க இவனோ  “அத்தம்மா அந்த அபிசரை இதுக்கு முன்ன பார்த்திருக்கீங்களா? ஏன்  இவ்வளவு கோவம் ? 

 

‘தெரில  வரு.. சரி சொல்லு என்னாச்சு? ஏன்  டல்லா இருக்க? ‘

“நான்  டல்லா எல்லாம்  இல்லை.. அதோட அந்த  ஆபிசர் நாம நினச்சமாதிரி  இல்ல.. நம்மகிட்ட தான் ப்ரோப்லம்  இருக்கு” என அரசு கூறிய அனைத்து விடயங்களையும்  கூற அதனை கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சிக்கு கோபம் என்றாள்  அவ்வளவு உச்சத்தில் இருந்தது…. “யாரு பண்ணிருப்பா வரு… என்கூடவே இருந்து எனக்கே  இப்படி துரோகம் பண்ணி இருக்கான்னா ப்ச்.. வெளில ஒருத்தர் நம்மகிட்ட சொல்லி நம்மள  அலெர்ட் பண்ற வரைக்கும் நான் எவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருக்கேன்.. யாருன்னு மட்டும் தெரியட்டும்  இருக்கு.. “என அவரது கோபத்தை தனித்து கொள்ள பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தார்.. 

 

அவரை பார்த்துக்கொண்டிருந்தவன்  “அத்தம்மா” என அவர் கையை எடுத்துக்கொண்டவன்  “காம் டவுன் எதுக்கு இவ்வளவு கோவம்.ஹ்ம்ம் பார்த்துக்கலாம்  நான் இருக்கேன்ல.. என்ன எல்லா தவறையும் உங்க மேல மட்டும் போட்டுகொள்றல்றீங்க. நானும்  தான் இந்த கம்பனியோட பொறுப்புள இருக்கேன்… சோ பார்த்துக்கலாம். 

அதை  விடுங்க,நீங்க  முன்ன மாதிரி இல்லையே  இப்போ அடிக்கடி கோவப்படுறீங்க, எப்பவுமே நிதானமா  எதையும் யோசிச்சு முடிவெடுக்குறவங்க இந்த கொஞ்சம் நாளாவே  ஏதோ ஒரு மாற்றம். என்னாச்சு?? நானும் பார்த்துகிட்டே இருக்கேன்  என்கிட்டயும் ஒன்னுமே சொல்ல மாட்டேங்குறீங்க “என ருத்ரா வருந்திக்  கூற 

“ஹ்ம்ம்  எனக்கும் தோணுதுடா  நான் கோவ படறது அதிகம்னு.மனசுக்கு   ஏதோ மாதிரி இருக்கு. என்னனு சொல்ல தெரில…ஏதோ ஒன்னு  புரியமாட்டேங்குது. ” என மீனாட்சி கூற ருத்ராவுக்கு  மனம் கனத்து போனது.  

 

‘எவ்வளவுதான்  ஒன்றிய உறவாக இருந்தாலும்  ஒரு ஆண் மகனிடம் ஓரளவுக்கு மேல்  பெண்கள் எதையும் பகிர்ந்து கொள்ள பிரியப்பட மாட்டார்களே.அது அவர் கணவனால்  மட்டுமே முடியுமான காரியம்.. தோழமை என அவருக்கு நெருங்கிய நண்பர்களும் இல்லை. அவரிடம் எப்படி அவரே  கூறாது கேட்பது ‘ மனதில் யோசனையை ஒரு பக்கம் தள்ளி வைத்தவன் அவரை சகஜமாக்கும் பொருட்டு “அத்தம்மா அன்னக்கி  ஒரு பொண்ண பார்த்தேன்னு சொன்னனே அந்தப் பெண்ணை இன்னைக்கும் பார்த்தேன் பட் அதே ஆளுகூட… 

‘டேய்  வரு இது  தப்புடா வேறு  ஒருத்தரோட இருக்க பொண்ண சைட்  அடிக்கிறது. அதுக்குதான் சொன்னேன்  காலா காலத்துல ஒரு பொண்ண பார்த்து முடின்னு..  பாரு இப்போ யாரை எல்லாம் பார்க்குறன்னு…’ மீனாட்சி சகஜமாகி  அவனை கிண்டல் செய்ய,

“அத்தம்மா  பார்க்கத்தானே  போறே என் ஹைட்டுக்கும்  வெய்ட்டுக்கும் ஏத்த பொண்ணா  பார்த்து உன் முன்னாடி கொண்டது வந்து  அம்சமான பிகரா நிறுத்தல நான் RV இல்ல…

‘ஹ்ம் அப்றம்   RV இல்லன்னா அப்போ? 

“அத்தம்மா…. “இவன் காண்டாக.. 

 

‘சரி சரி  விடு வரு உனக்காக பிறந்தவள்  இங்க எங்கயோ பக்கத்துல தான் இருப்பா.உன் கண்ணுக்கு  விளங்காம இருக்கா இல்லன்னா இவ்வளவு நாள் என் அழகு பையனை  தனியாளா விட்டிருக்க மாட்டா.சரி எனக்கிப்போ பசிக்குது சாப்பிட வான்னுடு  நீ பாட்டுக்கு பேசியே என்னை கொள்ளுற என கூறி இருவருக்குமான உணவை வரவழைத்து  உண்டனர். 

 

‘நானுமே  பிழையா நினைச்சுகிட்டு  தான் போனேன் பட் ஜெம் ஒப்  பர்சன் அத்தம்மா.. அந்த ஆளு செம்ம ஸ்மார்ட்.. என்ன ஒரு 45 வயசு போல தான்  இருக்கும்…

“நல்ல  வேல நான்  போகல.இல்லன்னா திட்டி  விட்டிருப்பேன் ” என உணவு உண்டவாரு மீனாட்சி  கூற நீ திட்டிருந்தாலும் உனக்கு பொறுமையா சொல்லிருப்பார்னு  தான் நினைக்கிறேன் என இவன் கூற “? 

“அப்படின்ற.. மீனாட்சி. 

“ஆமாங்குறேன்   “இது ருத்ரா.

இனிமையாக அந்நேரத்தை  கழித்து இருவருமாக உண்டு வெளி வர  ஒரு முறை அவள் அமர்ந்திருந்த இடம் காண மனம் கூறி  இவனும் அவளைக்கான, 

  அரசு  ஸ்பூனால்  ஊட்ட கயல்  உண்பதைக் கண்டவன் பெரு   மூச்சொன்றை வெளியிட்டவன் வண்டியை  கிளப்பினான். . 

இங்கு  தந்தை அருகே  வந்தமர்ந்த கயல்  “ஹேய் லேட் பண்ணிட்டேனா  ஹனி என்றவள் செம பசி இன்னக்கி. என்ன சாப்பிடலாம்  என தந்தையை கேட்டவள் அவளே இருவருக்குமாக ஆர்டர் செய்து விட “கைல  என்னாச்சு என அவள் வலக்கையில் இரு விரல்களில் பிளாஸ்டர் போட்டுருக்க அதைக்  கண்டவர் அவள் கையை ஆராய்ந்த வாரு கேட்க, “அச்சோ ஹனி ரொம்ப வலிக்கிது” என்றவள்  “இன்னக்கி வர்ற அவசரத்துக்கு மேசை மேல இருந்த கிளாஸ் தவறி விழவும் அதை பொறுக்கினேனா  கைல வெட்டிக்கிச்சு ..மேடம் வேற முன்னமே போய்ட்டாங்களா பியன் அங்கிள் தான் பிளாஸ்டர் போட்டு  விட்டாங்க.. ஒரு விரல்ல கொஞ்சம் ஆழமா வெட்டிக்கிச்சு என கூறினாள். 

.சிறு பிள்ளைகள்  விழுந்தால் அழுதழுது கதைகள் கூறுவது போலத்தான்  இருந்தது அவள் கூறும் போது. 

தந்தை  வருத்தப்படுவார்  லேசான காயம் தான்  சரியாகிரும் என கூறாது  சிறிய கீறல் என்றாலும் முழு  பாகமும் வலி என்றுதான் கூறுவாள்.. 

 

“சரிடா கண்ணம்மா  வீட்டுக்கு போய் என்னன்னு பார்த்து மருந்து போடலாம்.சரியாகிரும்  சின்னதா தான் காயம் இருக்கும்.பார்த்து பண்ணமாடியா கண்ணம்மா? “என தந்தை  அவள் கை விரல்களை தடவிக்கொடுத்தவாறு பேச தந்தையின் அவ்வார்த்தைக் கேட்கவே  இவ்வளவும் கூறியவள் “சாரி ஹனி ஆனா இப்போ சாப்பிட முடியாதே என்ன பண்ணட்டும்? “

“நான் ஊட்டி விடுறேன்”என அரசு  கூற 

” டன்”  என இருவருமாக அரசு ஊட்டிவிட  இவள் அவருடன் கலகலத்தவரே உண்டு முடித்தனர்… 

 அதனையே ருத்ரா  பெருமூச்சு விட்டவாரு  பார்த்து சென்றான்.. 

 

“இன்னக்கி  ஒரு பையனை மீட் பண்ணேன்  டா.. நீ பார்த்து இருக்கணுமே  செம ஸ்மார்ட்” என ருத்ரா பற்றி கூறிக்கொண்டே  அரசு வண்டி ஓட்ட அவரருகே அமர்ந்து வந்த கயல் “ஹனி   பொண்ண பார்த்து இம்ப்ரெஸ் ஆனேன்னா ஓகே. இதென்ன பையனை  பார்த்து.. ரொம்ப தப்பு” என கூற

 

‘வாலு  மட்டும் தான்  இல்ல உனக்கு மத்தபடி … ‘இடையில் நிறுத்த… “ஓகே  ஓகே கண்டினு” என காய்சல் கூறவும் 

 

“உனக்கும்  அதுமாதிரி பையன்  ஒன்ன பார்க்கணும்னு  தான் எனக்கு ஆசைடா ” என  அரசு கூறினார்.அதை கேட்டவளுக்கோ  மனதில் மின்னல் என அவன் முகம் வந்து செல்ல  அவள் முகமோ கதிரவன் ஒளி பட்டுத் தெறித்தது  போல பிரகாசமாய் மாறியது… 

 

“என்னடா  சத்தமே இல்ல  என அவளை திரும்பி  பார்த்தவர் “ஜஸ்ட் சொன்னேன்டா  கண்ணம்மா. உன் விருப்பப்படிதான் உனக்கு பையன். அது நீயே  செலக்ட் பண்ணினாலும் சரிதான். இல்லன்னா நான் செலக்ட் பண்ணாலும்  உனக்கு பிடிக்கலைன்னா ரிஜெக்ட் தான்…. ஓகே “

“பார்க்கலாம் ஹனி  யார் தலைவிதி என்கிட்ட  வந்து மாட்டிகிட்டு சின்னா  பின்னமாகணும்னு இருக்கோ….”கூறிக்கொண்டு  இருவருமாக கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்து விட்டு  வீடு சென்றனர்…