KKA-Epi 9

KKA Epi-9

 

 ஓரிரு நாட்கள் சென்றிருக்க,ஓர் காலை நேரம் கலை கல்லூரிக்கு சென்றிருக்க, தேனரசனும் வீட்டில் இல்லாத நேரமாக  அவனது வீட்டிற்கு ஒரு பையும் ஓர் கடிதமும் வந்தது.

 

சிவநேசனே அதைப் பெற்றுக்கொண்டு அதுஅருணுடைய பை என்று தெரியாமல் யாருடையது என பிரித்துப்பார்க்க,அதில் அருணின் சில  பொருட்களும் உடைகளும் இருந்தது. அதைப்பார்த்தவருக்கோ ‘என்ன இது? ‘என மனம் தவித்தாலும் ‘எதற்க்காக பையை அனுப்பியிருக்கார் பின்னாலே வருவார் போல’.மனதில் நினைத்தவர் கடிதத்தை பிரித்தப் பார்க்க,அது கூறிய செய்தி அடுத்த மணித்தியாலத்தில் அவரை அவசர  சகிச்சை பிரிவில் சேர்த்தியிருந்தது. 

 

தேனரசன் விடயம் அறிந்து வர,கலையுமே  வந்துவிட்டாள்,அவளுடன் துணைக்கு மீனாட்சியும்…

 

“அத்தான் என்னாச்சு? “என்று பலமுறை  கேட்டும் தேனரசன் வாய்த்திறந்தான் இல்லை.. 

 

“அரசு, என்னாச்சு மாமாக்கு?”அவன் கையை ஆதரவாக பிடித்த மீனாட்சி கேட்க, 

 

அவர்களுடன் வந்திருந்த அயலவர் ஒருவர்,  “அருண் தம்பிகிட்ட இருந்து எதுவோ வந்துச்சின்னு சொன்னாங்கம்மா,அதை  பார்த்துக்கொண்டு இறுக்கப்பத்தான் அப்டியே சிவநேசன் தலையை பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்தார்.

 

அதோட  ஒரு பக்கம் இழுத்துகிட்டு  போகவுமே இங்க கூட்டிக்கொண்டு  வந்துட்டோம் ம்மா.பயப்புடாத டாக்டர்  பார்த்துகிட்டு தானே இருக்காங்க மாமாக்கு ஒன்னும் ஆகாது “எனக் கூற,

 

கலை தேனரசனை பார்த்தவள் அவனருகே  சென்று “அத்தான் என்னாச்சு அருண் மாமாக்கு?என்ன அனுப்பினாங்க?மாமாக்கு எதுனால இப்படியாச்சு? சொல்லு அத்தான்  என்னன்னு சொன்னாத்தானே புரியும்.அருண் மாமாக்கு என்னாச்சு “என அவன் ஷர்ட்டை இருகைகளால் பறிக்கொண்டவள் கண்களில் ஏதோ ஓர் பயதோடு அருவியென கண்ணீர்  கன்னத்தில் ஓட,உடல் நடுக்கதோடு கேட்டாள். .

 

“கலை ஒன்னும் இல்ல,பொறுமையா  பேசிக்கலாம் டா”என அவள் தோள்களில்  கை வைத்து அவளை அமைதி படுத்த மீனாட்சி முயல,  

 

அவள் கைகளை அப்படியே  பற்றிக்கொண்ட தேனரசன்,  

“அரசி….என்றவனுக்கு அடுத்த வார்த்தையை கூற நா எழ வில்லை.

 

“அது நம்ம அருண் எங்கயோ ஊருக்கு  அவங்க மிலிட்ரி வண்டில போறப்ப விபத்தாகி அங்க கஷ்டப்பட்டு… அவங்களை  மீட்டிருப்பாங்க போல.அதோட ரெண்டு நாள் போராடி அப்றம் உயிர்…”என்று முடிக்கவில்லை..

 

தேனரசனிடம் இருந்து விலகியவள், 

“ச்சே… ச்சே… அவங்களுக்கு அப்டி ஆகியிருக்காது.மாமா என்னை கூட்டி போக வரேன்னு சொல்லிட்டு தான் போனாங்க வருவாங்க வருவாங்க.”என்றவள், 

 

மீண்டும் அவனிடம் வந்து,”அத்தான்,மாமா  வருவாங்கல்ல?வருவாங்கன்னு சொல்லுத்தான்,அவங்களால நான்  இல்லாம இருக்க முடியாது.அவங்க என்னை விட்டு போக மாட்டாங்க,எனக்கு என் அருண் மாமா வேணும்.” என்று கதறியவள் யார் தேற்றியும் அவள் அழுகையும் புலம்பலையும் நிறுத்த முடியவில்லை… 

 

மூன்று நாட்கள் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துக்கொண்டிருந்த  சிவநேசன், கடைசியாக தேனரசனை அழைத்து

 

“அவளை உன்கூடவே வெச்சிருப்பா, எப்பயுமே இனி எதையும் அவளால  தாங்கிக்க முடியாது.உன்னால மட்டுமே தான் அவளை பார்த்துக்க முடியும்.அப்பா  உன்னை நம்பித்தான் என் அரசியை விட்டுட்டு போறேன்பா.நீ நினச்சா மாதிரி சந்தோஷமா நல்லா இருப்பப்பா.என்  அரசன் டா நீ…என் பொண்ணை பார்த்துக்கோப்பா. “என்றவர் உலகை விட்டும் சென்றிருந்தார்… 

 

கடவுளே எதைத் தாங்குவேன். எவ்வளவென்று தாங்குவேன்.அவளை தேற்றுவதா தன் தந்தைக்காக அழுவதா? யாரின் துணையும் இன்றி தந்தைக்கும் அருணுக்கும் இறுதி சடங்குகள்,செய்து முடித்தவன் உள்ளதாலும் உடலாலும் நன்றாக சோர்ந்து போயிருந்தான்…

 

வீட்டிலோ ஜடம் என அமர்ந்திருந்த கலையைக் காணக் காண அவனால் மனம்  பொறுக்கவில்லை..

 

அவனுக்கு ஆறுதலாக இருக்கும் அவன்  காதல் பெண்ணையும் காணமுடியாது தன் மன பாரத்தை இறக்கி வைக்க யாருமில்லாது அவனும் ஒரு பக்கம்  சாய்ந்து அமர்ந்திருந்தான்.

 

ஒரு வாரம் சென்றிருக்க அரசிக்கு சாப்பாடு  ஊட்டிக் கொண்டிருந்தவனுக்கு வீட்டுக்கு தொலைபேசி மணி அடிக்கவும் அவனது நண்பன் மெதிவ்ஸ் பேசியிருந்தான்.  இன்னும் இரண்டு வாரங்களில் கனடா செல்ல அவனுக்காண வீசா மற்றும் டிக்கெட்கள் வந்துவிடும் என்றும் அனைத்தும் தயார்  படுத்திக்கொள்ளுமாறும் கூறியிருந்தான். சரி என்று பேசி வைக்க அவனையே பார்த்திருந்த கலை,

 “என்ன அத்தான் போன்ல யாரு? ” எனவும், 

 

“கனடா போக எல்லாம் சரி வந்துரும் போல டா, நாளைக்கு பேசி வேணாம்னு  சொல்லிறலாம்.நீ அதெல்லாம் யோசிக்காத” என்று அவளுக்கு ஆறுதலாய் இவன் கூற, அவளோ,

“அத்தான் நானும் உங்க கூட வரேன்..என்னால இங்க இருக்க முடில,கஷ்டமா இருக்கு.எனக்கு மூச்சு  முட்டுது இங்க.எனக்கு என் அருண் மாமா வேணும் “என்று அவனை கட்டிக்கொண்டு சிறு குழந்தை மிட்டாய்  கேட்டு அலுவதைப் போல அழ ஆரம்பித்து விட்டாள்..  

 

அவனுக்கும் நெஞ்செல்லாம்  அடைத்துக்கொண்டு வந்தது.’கடவுளே!  இவளுக்கு ஏன் இப்படி ஓர் தண்டனை… அவசரமாக தான் விரும்பியவனையே கல்யாணம் செய்து முடித்து,கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் ஒன்றாக வாழ்ந்து கணவன் இறந்தும் விட்டால் எப்படித்தான் தாங்குவாள். ‘

 

இவர்களது வீட்டை  ஊரில் நம்பிக்கையான ஒருவருக்கு பொறுப்பில் விட்டு விற்று தருமாறு கேட்டவன்,அருணின் மூலம்  கிடைத்த பணத்தை வைத்து கலையும் கனடா செல்ல தேவையான ஏற்பாடுகளை கவனித்தான்.

 

தேனரசனின் இக்கட்டான சூழ்நிலையை  பயன்படுத்திய மீனாட்சியின் தந்தை அவளது திருமணத்தை அவர்களது ஊரிலேயே வெகு விமர்சையாக நடத்த ஏற்பாடுகளை செய்துக்கொண்டிருந்தார். 

 

கலை இரு முறை வீசா தேவைகளுக்காக  வெளியில் சென்று வந்தாள்.அது தவிர வெளியில் எங்கும் செல்லாது இருக்க ஊரில் நடக்கும் எதுவும் அறிந்திருக்கவில்லை. அதோடு அவள் உயிர் தோழி பற்றி சிந்திக்கும் நிலையிலும் இருக்க வில்லை அவள். தன்னை பார்க்கவும் அவள் வரவில்லையே என்பது கூட அவள் உணரவில்லை. அவளோ அருணின் உயிர் பிரிய அதோடு அவள் உலகமும் நின்று போனதாக இருக்கிறாள். 

 

நாளை திருமணம் மீனாட்சிக்கு.தேனரசன் நிலை?  

முதல் முறை அவள் வீடு செல்கிறான். சென்றவனை உள்ளே அழைத்து சென்ற அவளின் தந்தை மீனாட்சி இருக்கும் அறைக்கே அழைத்து சென்று அவனை விட்டவர், “பேசுங்க.”என்றுவிட்டு சென்றார். 

அவர் கையில் காயத்திற்க்காக ஒரு கட்டு போடப்பட்டிருந்தது.அதையும்  கண்டுகொண்டான்.

 

“மீனாட்சி”என்ற இவன் குறலைக்கேட்டு  திரும்பியவள் சர்வ அலங்காரத்துடனும் மேடையேற தயாராகிஇருந்தாள்.. 

 

‘தேனு…’அவள் இதழ் அவன் பெயர் உச்சரிக்காமலேயே அவள் உள்ளம் அவனை அழைத்ததைக் கேட்டான்.

 

“மீனாட்சி இன்னும் ரெண்டு நாளைக்குள்ள  அரசியை கூட்டிக்கொண்டு நான் கனடா போறேன்.இனி அவளுக்கு நான் மட்டுமே தானே…உங்கப்பா உனக்காக பார்த்திருக்கவங்க நல்லா  சொயிசாகத்தான் இருப்பாங்க…

கடவுள் நமக்கு சொந்தமானத தரணும்னு இருந்தா அது எதுன்னாலும் நமக்கிட்ட சேர்க்காம இருக்க மாட்டான்.கிடைக்காதது நமக்கு உரிமையில்லாததுன்னு நினச்சுக்குவோம்..

 

நீ என்ன நிலைமைல இருக்கன்னு  உங்கப்பா கையை பார்த்தே புரிஞ்சிக்கிட்டேன்.உன் மனசு நீ சொல்லாமலே புரிஞ்சுக்குவேன்.காலம்  எல்லாத்தையும் மாற்றும்.மறதின்னு ஒன்னும் கடவுள் படைச்சிருக்கத்துக்கு அர்த்தம் புரிஞ்சிக்கலாம் இனி… 

 

சந்தோஷமா இருடா.” என கண்கள் கலங்க  அவள் தலையில் கை வைத்து அவள் தலையை தடவிக்கொடுத்தவன்,வரேன்” என்று விட்டு அவளை திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.

 

‘இன்று மட்டுமே தான் இன்றோடு நான் இனி அழமாட்டேன்’ என்று சபதம் எடுத்தவள் அழுது தீர்த்து தன்னை  

சமன் படுத்திக்கொண்டாள்…

 

“லவ்  பண்ணினவனை முடிச்சு ரெண்டு மாசம் ஆகல.புருஷன் இறந்துட்டான்.அந்த பையனோட அப்பனும் தனியாத்தான்  பசங்களை வளர்த்தான்.இப்போ இவனும் என்ன ராசியோ.அவனுக்கு இன்னும் இருபத்தி ஒன்னுதான் ஆகுது.கல்யாணம்  பண்ண இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்கணும்.அப்பயும் நம்ம தரத்துக்கு வந்துருவானா? 

 

அதோட உனக்கு நல்ல வாழ்க்கை தான் அப்பா செஞ்சு வைக்கப்போறேன். பெத்தவங்க பிள்ளைக்கு தப்பா பண்ண மாட்டாங்களே..பிள்ளையா நீயும் நல்ல  படியா இந்த வாழ்கைய அமைச்சுக்கோ மீனாட்சி.இல்லன்னா அப்பாவை உயிரோடு பார்க்க மாட்ட.” என்றவர் அதோடு நிறுத்தாமல் தன் கையையும் கிழித்துக்கொண்டார்..

 

“அச்சோ மாமா! என்ன இது? என் தம்பிக்கு இவ லவ் பண்ணின விஷயம் எல்லாம் தெரியாது.நீங்களே காட்டி  கொடுத்திருவீங்க போல.வாங்க என அவரை அழைத்து செல்ல, அவள் சின்ன அண்ணனோ” மீனாட்சி,உன் வாழ்க்கைல தான் இனி என் வாழ்க்கை நல்ல படி அமையப்போகுது.நல்ல யோசிச்சு முடிவு பண்ணு”என்று சொல்லிவிட்டு சென்றிருந்த  சில மணிநேரங்களில் தான் தேனரசன் வந்தான்.

 

‘கலைக்கு,தேனு மட்டுமே தான் இப்போ  துணையாக இருக்க முடியும்.யாரு யாருக்குன்னு கடவுள் எழுதினது  அவங்களிடம் வந்து சேரும்’ என்று மனதை தேற்றியவள் தன் அண்ணனின் மச்சினன் கையால் தாலியை கழுத்தில் சுமந்தவள் அடுத்த நாளே அண்ணன் குடும்பமும் சேர்ந்து லண்டன் சென்றுவிட்டாள்…    

 

“அச்சோ அப்பா! நான் கல்யாணம்  பண்ணிக்குறேன்.யாரும் எனக்காக ஒன்னும் பண்ணிக்காதிங்க.என்னால  முடில.தன்னால் யாரும் கஷ்டப்படாதிங்க…என்னால யாருக்கும் எந்த  விதத்துலயும் நஷ்டம் இருக்காது”என்றவள் கல்யாணத்தை ஏற்றுக்கொண்டாள்…

 

பலரது காதலும் மனதில் இன்றும் ரணமாக  இருக்கும். நாம் நினைத்த வாழ்க்கையே எல்லோருக்கும் அமைவதில்லை.கிடைத்ததை ஏற்று குடும்பத்திற்க்காகவென, சமூகத்துக்காகவென,பெயர்,புகழுக்காக  வாழ்வோர் பலர்.அதில்வெற்றியும் கண்டுள்ளனர்.சிலர் தத்தளித்துக் கொண்டும் இருக்கின்றனர்.கடந்த காலத்தில் நாம் செய்த காதலை விட, நமக்கு பெற்றோர் அமைத்து தரும் துணையின் காதல் அதிகமாய், நிறைவாய் கிடைக்கும் போது அங்கே அழகான இல்லறம் அமைந்து சிறப்பாகி விடுகிறது… 

 

கலையை  அழைத்துக்கொண்டவன் கனடா  சென்று இரண்டு மாதங்களில் கலை ஐந்து  மாத கர்ப்பிணி என்பதை அறிந்துக்கொண்டான். அவளுக்கும் அவள் உடலோ உணர்வுகளோ அதனை உணர்த்தவில்லை.அதன் பின் பகுதிநேர வேலைகளுக்கு சென்றுக்கொண்டு கலையரசியை தாயென தாங்கிக்கொண்டான். 

 

அவனுக்க அழுவதற்க்கோ,அவன் வாழ்க்கை பற்றி சிந்திப்பதற்க்கோ காலம் தராது அவனது படிப்பையும் தொடர்த்தவனுக்கு, பெரிதும் உதவியது மெதிவ்ஸ் மற்றும் அவன்  மனைவி மேரி….

அவனின் கல்லூரிநண்பனின் உறவினன் ஒருவன்.

 

கயல்விழி பிறந்து அவளை ஓர் நொடி பிரியாது அவளுடனே தன் நேரத்தை செலவழித்தவள் தேனரசன்,கயல்விழி  இருவர் மட்டுமே உலகம் என்று இருந்தாள்.தேனரசன் மேலே படிக்குமாறு எவ்வளவு வற்புறுத்தியும் கலை மறுத்துவிட்டாள்.. 

 

தேனரசன் கயலுக்கு இரண்டாவது  பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு பண்ணியிருந்த நாளுக்கு முதல் நாள் மடியில் கயல்விழி தூங்கியிருக்க தன் தோள்களில் சாய்ந்துக்கொண்டு தொலைக்காட்சியில் கண்  பதித்திருந்தவளிடம், “அரசி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? நம்ம கண்ணம்மாக்காக,இப்படியே எவ்வளவு நாள் வாழலாம் டா.கண்ணம்மா இன்னும் பெருசாகும் போது நீ இப்படி இருந்தா அவ  நிலைமை..நல்லா யோசிச்சு முடிவு பண்ணுடா.என்னைய முடிலன்னாலும், நீ உன் மனசை கொஞ்சம் தயார் பண்ணிக்கோ..இப்படியே வாய் வார்த்தைக்கு இருந்திடலாம் மா.ஆனா வாழும் போது கஷ்டம்டா.”

 

கலை எதுவுமே கூறவில்லை.”தூங்கட்டுமா  அத்தான்? “என்றவள் குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டு சென்றவள்,அவளை அணைத்தவாறு யோசனையில் மூழ்கிப்   போனாள்.

 

நினைவில் மீனாட்சியிருந்தாலும் மனதில்  ஆழப்பதிந்தாலும், நிதர்சனத்தை ஏற்று வாழ முடிவு செய்த தேனரசன் கலையிடம் அவ்வாறு கேட்டிருந்தான்.முடித்தால் அதன்  பின்னர் காலம் யாவையும் மாற்றும் என்றும் நம்பினான்.ஆனால் ‘இன்னொருவரை ஏற்க முடியுமா?அது கலை என்பதாலா இவ்வாரு கேட்க முடிந்தது’என பலமுறையும்  தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். 

 

பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்கள்  சென்றிருக்க வேலை விட்டு தேனரசன் வீடு  வர கயல் மேரியின் கையில இருப்பதை கண்டவன்,’கண்ணம்மாவ தனியா வெளில விட்டுட்டு இருக்கமாட்டாளே’என்றவாறு குழந்தை அருகே வந்து மேரியிடம் கலை  எங்கே என கேட்க

 

 “இப்போதான் குழந்தையை தந்துட்டு உள்ள போனா,முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கவும் நான் ஏதும் கேட்கல நீ போய் பாரு,இவள் இங்கேயே இருக்கட்டும்” எனக்  கூற, 

 

இவன் அவசரமாக “அரசி… என்ன பண்ற” என கேட்டுக்கொண்டே  உள்ளே செல்ல இவன் குரல் தான் அவள் காதை சென்றடையவில்லை….

 

அவள்  அறைக்கதவு தட்டத்தட்ட  திறக்கப்படாததால் இவன் மேரி…மெத்யூஸ்… என உரக்க கத்தியவன் அவள் இருந்த அறைக்கதக்கவை  பலம் கொண்டு தள்ளித் திறந்தவன்  

 

அவனும் கயலும் இருந்த பிரேம் இட்ட  புகைப்படம்,அருணின் படம் என இரண்டையும் அனைத்திருந்தவள் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்தவாறு  இருந்தாள்.

 

அவளருகே சென்றவனோ இருந்த  பதட்டத்தில் “கலை… கலை… என உசுப்பி  அவளை எழுப்ப மற்ற இருவருமே அவனருகில் வந்து விட்டனர்… 

அவள் எழும்பாது இருக்கவும் பயந்து அவளை உலுக்கவும் பெரு  இருமல் ஒன்றோடு கண் திறந்தவள் அவள் இட்ட இருமலில் தேனரசன்  சட்டையெல்லாம் இரத்தக்கரை.

 

“கலை என்னாச்சு என்னாச்சுடி? என்ன பண்ணின, எனக் கேட்டவாறு அவளை மடி  தாங்க “அ.த்தா..ன்… இனிமே என் பொண்ணு உன்னை பாத்துப்பா…அவளை உன..க்காக..த்தான்.. வி.ட்டு..ட்டு.. போறேன்… என் மாமா…கிட்டயே… போறேன்.. 

இந்த.. மனச… இ…ந்த…  கலைய வேற யா…ருக்கு…ம்…  என்னா…ல… தரமுடியாது… இருந்தேன். னா தந்திரு…வேனோ…ன்னு.. பயம்ம்மா  இருக்கு… அ…த்தான்…” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தவள் எனக்கு என்… என்… அருண் மாமா…க்கு… விட என் மனசுல உங்களுக்கான இடம் ரொம்ப…. உச…த்திதான்…உங்க பொண்ணை நல்லா  பார்த்துக்கோங்க.”என்றவள் நிம்மதியா அவள் காதல் கணவனிடம் செல்ல, 

 

இவனோ இன்று வரை கயல்விழி எனும்  அவன் தேவதைப் பெண்ணுக்காக வாழ்கிறார். 

 

“ஹனி இன்னைக்கு வரைக்கும் அழுந்து  ஏன் சோகமா,யோசனையா இருந்து நான் பார்த்ததில்லை மேம்.என் முன்னாடின்னு  இல்ல எப்பயுமே அவங்க அவங்களோட மனம் திறந்து யார்கூடவும் பேசினதை பார்த்திருக்க மாட்டேன்.

 

அதுக்கான பர்சன் அவங்களுக்கு இவ்வளவு நாளைக்கும் கிடைக்கலன்னு தான்  நினைக்கிறேன்..எனக்கும் இப்போ ஒரு ஐந்த வருஷமா தான ஹனியோட நிலை புரிய ஆரம்பிச்சது. இந்த புக்க எங்கம்மா  எனக்கு ஒரு பத்து வயசு இறுக்கப்பவே குடுங்கன்னு சொல்லிருக்கலாம்…

எல்லாமே  கடந்து போச்சு..”என்றவள்,  

 

கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு மீனாட்சியின் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டாள்.

 

“எனக்கு அம்மாவா எங்ககூட  எங்க வீட்டுக்கு வந்துர்றீங்களா? என்று கேட்டு  அவர் முகம் காண, இன்னுமே தேனரசனின் கடந்து சென்ற பாதைகளின் கடினத்தை விட்டு வெளி வர முடியாது இருந்தவருக்கு கயலின் பேச்சைக் கேட்கவும், 

 

“ஹேய்! கயல் என்ன பேசுற நீ? “என்ற மீனாட்சியின்  குரலோடு 

“அத்தம்மா… “என்று ருத்ராவின் குரலையும் சேர்த்தே கேட்ட கயல்,   

 

மீனாட்சியின் முகமும் யோசனையில்  இருப்பதைக் கண்டு, 

“அம் சாரி மேம்.உங்களை ரொம்ப  கஷ்டப்படுத்திட்டேன் போல. நான் வரேன்.” என்று எழுந்துக்கொண்டு வெளியே செல்லப்பார்க்க,

“கயல்,இரு சாப்பிட்டு போ”என்றவரிடம் 

 

“இன்னொரு நாள் பார்க்கலாம் மேம்”என்று  கூறிக்கொண்டே எதிரே வந்தவனை நிமிர்த்தும் பார்க்காது சென்று விட்டாள்.