கலை மற்றும் அருணின் திருமணம் முடிந்து ஒருவரமாகி இருந்தது.
கலை மற்றும் மீனாட்சி எப்போதும் கல்லூரி விட்டு அமர்ந்து பேசும் மரத்தின் கீழ் அமர்த்திருந்தனர்.தேனரசன் அவன் படிப்பு விஷயமாக சென்னை வரை சென்றிருந்தான்.
“என்ன கலை ஒருவாரம் நான் ஊர்ல இல்லை.அதுக்குள்ள கல்யாணத்தையும் முடிச்சிட்ட,இப்போ என்னன்னா முகத்தை சோகமா வெச்சுகிட்டு இப்படி உட்கார்ந்து இருந்தன்னா என்ன அர்த்தம்.நான் என்னன்னு எடுத்துக்கிறது.என்னாச்சு டா உனக்கு பிடிக்கலையா? “கலையின் கைகளை பற்றிக்கொண்டு மீனாட்சி கேட்க,
அவசரமாக மறுத்தவள்,”ச்சே! ச்சே! அதெல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றாள்.
“அப்போ என்னடா பிரச்சினை உனக்கு, சொன்னாத்தானே புரியும்.நானுமே இன்னைக்கு தான் வந்திருக்கேன் அரசு வேற வெளில போயிருக்காங்க.சொல்லு என்னன்னு? “மீனாட்சி அவளைக் கேட்கவும்,
“அவங்க என்னை இன்னும் அவங்க வீட்டுக்கு கூட்டி போகல.கேட்டா,நான் சின்னப்பொண்ணாம்,படிப்பு முடியட்டும் கூட்டி போரென்றாங்க.”
‘இதான் உன் பிரச்சினையா’ என அவளைப் பார்த்தவள்,”கலை நாம இப்போதானே காலேஜ் ஆரம்பிச்சிருக்கோம்,அதான் படிப்பு முடியட்டும் சின்ன பொண்ணுன்னு சொல்லிருப்பாங்க.நீ அண்ணாக்கிட்ட பேசினியா? “
“ஆமா உங்க நொண்ணன் தான் சொன்னாங்க.லவ் பண்றப்ப நா சின்ன பொண்ணுன்னு தெரிலையாமா? கல்யாணமும் பண்ணிகிட்டத்துக்கு அப்றம் தான் நான் சின்ன பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு..
நானே யாருமில்லாம தனியா இருப்பாங்க, அவங்க போறவரைக்கும் அவங்க கூட இருக்கலாம்னு பார்த்தா என் மனசை யாரும் புரிஞ்சிக்க மாற்றாங்க…”
“அதோட இப்போல்லாம் என்னன்னு தெரில.சும்மா சும்மா மனசுக்கு கஷ்டமா இருக்க மாதிரி இருக்கு,அழனும்னு ஒரே தோனிட்டே இருக்கு.இவங்களும் என்னை கூட்டி போக மாட்டேன்றாங்க.”கூறியவள் அழுதே விட்டாள்.
“கலை என்ன இது? “என அவள் தலை சாய்த்துக்கொண்டவள் நான் நாளைக்கி அரசு கிட்ட சொல்லி உன்னை வீட்ல கொண்டுபோய் விட சொல்றேன் டா.
அண்ணாவும் காரணமில்லாம சொல்லமாட்டாங்க.யாராவது கட்டின பொண்டாட்டிய அவங்க வீட்ல வெச்சிட்டு தனியா இருப்பாங்களா?நீ ஒன்னும் யோசிக்காத” என்று அவளுக்கு கூறிக்கொண்டு இருக்க,
அருண் கலையை அழைத்துச் செல்ல வந்தான்.
“ஹாய் ண்ணா,எங்களுக்கு ட்ரீட் எல்லாம் இல்லையா?நான் இல்லாத நேரமா பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க “
” அச்சோ அப்டில்லாம் இல்லம்மா.சந்தர்ப்பம் அப்பிடி அமைஞ்ப் போச்சு.கண்டிப்பா ட்ரீட் இருக்கும் மா.எப்போ வசதிப்படுமோ சொல்லுங்க போகலாம்.”என்றவன் ‘எப்போ போகலாம்’ என்பதாய் கலையை பார்க்க,
அவளோ,”ஆமா மீனாட்சி என்னை அவங்க வீட்ல வெச்சு சோறு போடவே யோசிக்கிறாங்க.இதுல எல்லாத்தையும் வெளில கூட்டிப் போவாராம்.”என்றவள் எழுந்து செல்லப்பார்க்க,அவள் கையை அருண் பற்றிக்கொண்டான்.இருவரும் பேசிக்கொள்ளட்டும் என மீனாட்சி அருணிடம் கூறிக்கொண்டு கிளம்பி விட்டாள்.
” என்ன கலை இது சின்ன பசங்களாட்டம்.உன்னால என்னை புரிஞ்சிக்க முடிலயா? “
“ஆமா என்னால புரிஞ்சிக்க முடியல.புரிய வெய்ங்களேன்…இல்லனா என்னை புரிஞ்சிக்குங்க.நீங்க என்னோட இப்போல்லாம் முன்ன போல இல்லை.தள்ளித் தள்ளி போறீங்க”என்றவள்,அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
“பட்டு என்னடா இது?” என அவள் கையை பற்ற அவன் கையை தட்டி விட்டவள்,
“நாளைக்கு காலைல என்னை வந்து கூட்டிக்கொண்டு போங்க.இல்லன்னா நானே வந்துருவேன்.என்றவள் அவனை திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.
சென்றவளை சிரிப்போடு பார்த்திருந்தவன் அடுத்த நாளே சிவநேசனோடு பேசி அவளை அழைத்து செல்ல வந்திருந்தான். அவன் வருவான் எனும் நம்பிக்கையில் காலையிலேயே குளித்து புது சேலை அணிந்து அழகாக தயாராகி இருந்தாள் கலையரசி.
“அரசி,தம்பி எவ்வளவு நேரமா வெய்ட் பண்ணுது, கிளம்புடா” எனவும்,
“இதோ வரேன் மாமா”என்றவள் முன்னறைக்கு வர அவள் பைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அவள் பின்னே தேனரசனும் வந்தான்…
“வண்டியெல்லாம் எதுக்கு மாமா?நடந்தே போயிருப்போம்”என்று அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கும் வீட்டிற்கு செல்வதற்காக வர வழைத்திருந்த வாடகைக்காரை பார்த்து கேட்க,
“அது நல்லாருக்காது தம்பி.என் பொண்ணு எந்த குறைவுமில்லாம சந்தோஷமா இருக்கணும்”என அவள் தலைகோதி கூறியவர்,அவளை தேனரசனோடு சேர்ந்து சென்று விட்டு அங்கேயே பகல் உணவையும் முடித்துக்கொண்டு அவளை வாழ்த்தி வந்தனர்…
வீட்டுக்கு வந்தது முதல் அவனுடன் பேசாது இருந்தவளை பின்னிருந்து அனைத்துக்கொண்டவன்,
“வீட்டுக்குத்தான் வந்தாச்சில்ல கலை.எதுக்கிப்போ என்கிட்ட பேசாம இருக்க? “என்றவன்,அவள் தோள்களில் இதழ் பதித்தான்.
“மாமா நான் ரொம்ப கோவமா இருக்கேன் போயிரு…”என்றுக் கூறி அவன் அணைப்பில் பொருந்திக்கொண்டாள்.
“என் பட்டு என் கூட ரொம்ப பாசம்னு காட்டும் போது தான் மாமான்னு கூப்பிடுவா.அப்போ இப்ப கோவமில்லைனு தானே அர்த்தம் “என்றவன் தொடர்ந்து,
“இன்னக்கி நாள் முடிஞ்சா இன்னும் இருபது நாள் தான் இருக்குடா அதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒன்னா, சந்தோஷமா இருக்கலாம்”என்றவனை அவன் பக்கம் திரும்பி அனைத்துக்கொண்டாள்.
அவள் அணைப்பு இருகிக்கொண்டே போக “கலை என்ன இது…”அருண் அவளை அணைத்தவாறே கேட்கவும்,
“தெரில எனக்கு,என்னன்னு சொல்லத் தெரியல”என்றவள்,சிறிது நேரம் அவன் அணைப்பிலேயே இருந்தவளிடம்,
“பட்டு என்னால இப்படி கட்டிக்கிட்டு மட்டுமே இருக்க முடியும்னு தோணல.அதான் உன்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வர விரும்பல.காலேஜ் முடிச்சிடீன்னா உன்னை என்கூடவே கூட்டிக்கொண்டு போயிருவேன்”என்றான்.
அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து இருந்தவள் “நான் சின்னப்பொண்ணல்லாம் இல்லை மாமா.நான் நல்லபடி படிச்சு காலேஜ் முடிச்சுருவேன்.”என்றுவிட்டு நிமிர்ந்து அவனின் கண்களை பார்த்து,
“மாமா,நான் இங்க வந்தது என்னால உங்களுக்கு தரக்கூடிய எல்லா சந்திஷத்தையும் தர்ரதுக்காகத்தான்…” என்று கூறியவள் அவனை விட்டு விலகி “நைட்க்கு என்ன பண்ணட்டும்? ” என்றவாறு நழுவி சமையலறை சென்றவளுக்கு தன் வார்த்தைகளின் அர்த்தம் புரிய உடலில் ஓர் படபடப்பை உணர்ந்தாள்.
இரவுணவையும் இருவரும் பேசாது உண்டு விட்டு வந்தவளுக்கு சமையலறை சுத்தம் செய்த பின்னரும் முன்னறைக்காவது செல்ல ஒரு மாதிரி இருந்தது.
‘தப்பா ஏதும் பேசிட்டோமோ? எனக்கென்னாச்சு,எதுக்காக இப்படியெல்லாம் தப்பா பேசுறேன்.’மனதில் உழன்றவளைத் தேடி வந்த அருணைக் கண்டு மறு பக்கம் திரும்பிக்கொண்டவள்,
“சாரி மாமா.நான் தப்பா ஏதும்… “
அவள் கூறி முடிக்கவில்லை அவளை பின்னிருந்து அனைத்தவன்,”என்னாச்சுடி என் வாயாடிக்கு,எப்பவும் வம்பு பண்ணிக்கிட்டும்;துரு துருன்னு இருக்க இந்த என் அழகு பட்டுக்காகவும்; இந்த முகத்துல இருக்க சிரிப்புக்காகவும் தானே உன்னை எனக்குள்ள கொண்டு வந்தேன்.அதை நான் இப்போல்லாம் பார்க்க முடியலையே.எப்போ பாரு அழுமூஞ்சாவே இருக்க.” என்றவன் அவளை தன் பக்கம் திருப்பி இடையோடு உயர்த்தி தூக்கிக் கொண்டவன்,
அப்படியே நடந்து தன் அறைக்கு வந்து தான் இறக்கி விட்டான்.விட்டவன் அவள் கன்னங்களை தாங்கி அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு முதல் இதழ் முத்தத்தை இனிதாய் கொடுத்தவன்,
“பட்டு…என்னை தாங்கிப்பியா? “என்று கேட்டு அவள் பதில் கூறக்கேட்டவன்,
நாளைய விடியலை அவளைக் காண விடாது அவளை முழுவதுமாய் தனதாக்கிக் கொண்டு தன்னை அவளுக்காக கொடுத்தும் விட்டான்.
நிலவு மகள் ஒழிந்து கதிரவன் ஒளி பரப்பி மிக நீண்ட நேரம் சென்ற பிறகே அவளை எழும்ப விட்டிருந்தான்.
அவனுக்கு இருந்த விடுமுறை நாட்களுடன் இன்னும் பதினைந்து நாட்களை அதிகமாக பெற்று அவளுடன் இனிதான, இன்பமான, பூரண வாழ்வொன்றை வாழ்ந்தவன் அவளிடம் விடைப்பெற்ற நாள் என்றும் இல்லாது அழுது தீர்த்து விட்டாள் கலையரசி.
அவனுக்கும் மனதில் அதிக பாரம், சொல்லொண்ணா துயர் தான்.அதனை அவளை பலமுறை அனைத்தும் இதழொற்றியும் வெளிப்படுத்தியவன் விடைபெற்றுச் சென்றான்…
ஒரு வாரமாக அவன் வீட்டிலேயே தங்கி அவன் நினைவுகளுடன் இருந்தவளை மெதுவாக பேசி,தேனரசன் அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்தான்.அதோடு கல்லூரிக்கும் செல்ல ஆரம்பிக்க சீராக நாட்களும் சென்றது..
போய் சேர்ந்தவனும் இரண்டு மாதமாக முடியுமான நேரங்களில் தொலைபேசியில் அழைப்பும் கடிதமும் போட்டிருந்தான் அருண்.
அன்று தேனரசன் சென்னை சென்றிருந்த நாள் மீனாட்சியின் அப்பாவை சந்தித்திருந்தான்.சந்தித்தவரோ சிறிது நேரம் சகஜமாக பேசியவர் இவர்களின் காதல் பற்றி கேட்டிருந்தார்.அதோடு அவரது தரத்தோடு தேனரசன் குடும்பம் பற்றி தரம் தாழ்த்தி பேசி அவனை தலைக்குனிய செய்திருந்தார்.
மீனாட்சியின் சிறிய அண்ணன் குடும்பத்தில் அவளுக்கு நல்லதொரு வரன் வந்திருப்பதாகவும் அவள் படிப்பு முடியும் வரையும் காத்திருக்க முடியாது.கூடிய சீக்கிரமே அவள் திருமணம் முடித்து அவளையும் அவள் அண்ணன் குடும்பத்தோடு சேர்த்து லண்டன் அனுப்ப போவதாக கூறினார்.
அவளது வாழ்வு நன்றாக அமையும் போது அவனால் தடைகள் வராது இருக்கவே இன்று சந்தித்து பேசியதாகவும் கூறியிருந்தார்.
மீனாட்சி அவள் அண்ணன் வீடு சென்றிருந்த வேளை அவளும் தன் அண்ணன் மற்றும் அண்ணியிடம் தேனரசனை விரும்புவதாக கூறியிருந்தாள்.
அதோடு அவனுக்கு இன்னும் சிலகாலம் வேண்டும் அவனது வாழ்வில் ஒரு முன்னேற்றம் காண.அதன் பின்னரே கல்யாணம் பண்ணிக்க வேண்டும். அதுவரைக்கும் அப்பாவோடு பேசி எதாவது
செய்யுமாறு கேட்க,ஜனார்தனனும்,
“தேனரசன் நல்ல சொய்ஸ் தான் டா. குறைன்னு பணம் மட்டுமே தான் சொல்லலாம்.அது அவர் படிப்புக்கு இனி தானா அமையும்.வயசும் அப்படியே இன்னும் இருக்கே.
அது தவிர நம்மளால தேடினாலும் கிடைக்காத பையன் தான்.”என்றவர், நமக்கு சின்னதா இருக்க பண விஷயம் தான் அப்பாக்கு பெருசா இருக்கும் டா.. பேசிப் பார்க்கலாம் அப்பா என்ன சொல்லறாருன்னு.நீ படிப்பை நல்ல படியா முடி”என்று அவளுக்கு ஆதரவாய் பேசி ஊருக்கு அனுப்பியிருந்தார்.
ஆனால் இவர்கள் பேசுவதை கேட்டிருந்தவரோ தன் இளைய மகனின் மச்சினனை தனது மகளுக்கு பேசி கல்யாண திகதியையும் குறித்து விட்டதை பெரிய அண்ணனும் தங்கையும் தெரிந்திருக்கவில்லை.
அருண் சென்ற நாள் முதல்,சந்திக்க நேரும் சந்தர்ப்பங்களில் மீனாட்சியை தேனரசன் தவிர்ப்பதாக விளங்கியவள் அவனிடமே கேட்டிருந்தாள்.
“அரசு,என்னாச்சு இப்போல்லாம் என்கூட உங்களால சகஜமா பேசக்கூட முடில.ஏதோ யோசனைலயே இருக்கீங்க.”
“மீனாட்சி,என்னால உனக்கு நல்லதொரு வாழ்க்கை தரமுடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கதனாலத் தான் உன்னை நான் லவ் பண்ணவே செஞ்சேன்.அது இப்பயும் எனக்கு இருக்கு.
அதே நம்பிக்கை உனக்கும் கடைசி மட்டுமே என்மேல இருக்கும்னா;எப்பயுமே உனக்காக மட்டுமே தான் நான்.”என்றவன் இதுக்கு மேல என்கிட்ட வேணாம் டா… பார்த்துக்கலாம் விடு.” என்றிருந்தான்.
‘ஏதோ அவர் மனம் நோகும் படி நடந்திருக்கு’ என்று உணர்த்தவள் அவன் வார்த்தைகளின் அர்த்தமும் புரிந்தவள்,
‘நானுமே உங்களுக்காக மட்டுமே தான் தேனு..’என்று மனதில் பதித்து கொண்டவள்.அவனை அதன் பின்னர் ஏதும் கேட்கவில்லை…