KKA-Epi11

“ஹலோ ண்ணா,நான் இப்போ தான்  காலேஜ் வந்திருக்கேன்,ஆனா நான் வர்ரதுக்குள்ள பசங்க கொண்டு போய்ட்டாங்க.அதோட இன்னைக்கு  சொல்ரானுங்க ஏதோ ரெண்டு பொண்ணுங்களும் இதுல இன்வோல்வ் ஆகி இருக்காங்கன்னு.என்ன 

பண்ணட்டும்? “என மாதவன் ருத்ராவிடம்  கேட்க, 

 

“மாதவா நீ அவங்களை பாலோ பண்ணிட்டே இரு அவனுங்களுக்கு உன்னை சந்தேக பட  நடந்துக்காத.அவனுங்க வேலை நடக்க எதுன்னாலும் செய்வானுங்க,பி சேப்.” என்று விட்டு அலைபேசியை வைத்தவன் தனது தலைமை அதிகாரியை  சந்திக்கச்சென்றான். 

 

ருத்ரா படித்த அதே காலேஜில்தான்  மாதவன் மற்றும் மதுமிதாவும் இறுதியாண்டில் கற்கின்றனர்.கடந்த ஒரு வருடமாக மாணவர்கள் இடையே  போதைப்பொருள் பாவனை என்பதை விட விற்பனை நடை பெற்று வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றாலும் மாணவர்கள் என்பதால் அவர்களை  கையாள்வதில் மிகவும் கவனமெடுத்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

 

NCB யில் (போதைப்பொருள் கட்டுப்பாட்டு  பணியகம்)ஏ.டி.எஸ்.பி யை சந்திக்கவந்திருந்தான் என்.சி.பி  யின் டி.எஸ்.பி.ருத்ராவர்மன். 

 

“என்ன ருத்ரா உங்க நேரம் வந்தாச்சா,  என்னை பார்க்க வந்துட்டீங்க “என்று அவன்  உள்ளே வந்ததும் அவனை வரவேற்று பேச, 

 

இவனும் சிரித்தவாறே,”அடுத்த பைலை  கையோடு வெச்சுக்கிட்டேபேசுற போல இருக்கே சார்” என்று இவனும் பேசியபடியே  இருக்கையில் அமர்ந்தான். 

 

அவனது மூத்த அதிகாரி இளமையுடனும், நீதியானவரும்  நேர்மையமவருமாக இருக்க ருத்ராவோடு சேர்ந்து தோழமையுடன் அவர்களது பணிகளை  தொடர்ந்து நேர்மையாக மேற்கொள்கின்றனர். 

 

கல்லூரியில் சமீபத்தில் போதைப்பொருள்  விற்பனைக்கு முக்கிய காரணமாக அதன் பங்குதாரர் ஒருவராக இருக்கும் முக்கிய அரசியல் புள்ளியும் அதே காலேஜில்  கற்கும் அவர் மகனும்,மிக கவனமாக அவனுக்கு எதிராக தகவல்களை ருத்ரா அவனுடனே கடந்த மூன்று மாதங்களாக இணைந்ததிருந்து சேகரித்திருந்தான்.

 

கல்லூரியில் மாதவனின் வகுப்பிலேயே அரசியல் புள்ளியின் மகனும் இருக்க மாதவனும் அங்கு அவனுடன் நட்பு கொண்டு அவனோடு தொடர்பில் இருந்த ஏனையோரையும் அடையாளம்  கண்டுகொண்டான்…

 

மாணவர்களிடையே அவர்களை  போதைக்கு அடிமையாக்குவதை விட  அவர்களை விற்பனையாளர்களாக மாற்றிக்கொண்டு வந்தான் எனலாம்.சிறு அளவிலான விற்பனையும் நிறைய  பணத்தை தருவதோடு கையில் தினமும் பண பரிமாற்றம் இருக்க கற்றலோடு பணம் சம்பாதிக்க ஆசையை தூண்டிவிட பலரும்  அதில் சிக்கிக்கொண்டனர்.

அதிகளவில் நடுத்தர குடும்ப மாணவர்களே  அதிகம்…

 

பெண்களை கட்டாயப்படுத்தினார். குறிப்பிட்ட சிலரை தேர்தெடுத்து  அவர்களை தகாத முறையில் மறைமுகமாக வீடியோ செய்து அதனை வலைதளங்களில்  வெளியிடுவதாக பயமுறுத்தி அவர்களுக்கு கொடுக்கப்படும் பொருளை பிரிதொரு  நபரிடம் சேர்க்க வழி செய்தனர்.

 

“என்ன ருத்ரா யோசனையா இருக்கீங்க? நான் என்ன ஹெல்ப் பண்ணனும் சொல்லுங்க,பண்ணிரலாம்.உங்களை  வெளிக்காட்டிக்க வேண்டி வந்தா மட்டுமே தான் உங்க பெயர் வெளில வரும்.மற்றபடி உங்க விருப்பம் தான்.”என்று மேலதிகாரி  கூற,    

 

“சார் காலேஜ் பசங்கள்ல தேவையான  தகவல் எல்லாம் எடுத்தாச்சு.அவங்க தந்த வாக்கு மூலங்களும் பதிவு பண்ணியாச்சு. அவங்க நார்மலா காலேஜ் போய்ட்டுதான் இருக்காங்க.அவங்க கைக்கு கிடைக்கிற பொருட்கள் எல்லாம் நம்ம கைக்கு கிடைக்குற மாதிரி எல்லா ஏற்பாடும் இந்த  ஒருவாரமா நடந்துட்டு இருக்கு.

 

இன்னைக்கு அந்த அமைச்சரோட பையன்  மெய்னா பொருள் வாங்குறவனை மீட் பண்ண போறான்.அதோட ரெண்டு  பொண்ணுங்களும் வண்டில போறதா மாதவன் சொல்ரான்.அதான் யோசனையா  இருக்கு சார். “

 

“ஓஹ் !பொண்ணுங்கன்னா யாருன்னு  தகவல் இருக்கா? “

 

“இல்ல சார். மாதவன் போறதுக்குள்ள  வண்டி கிளம்பிரிச்சாம் அவன் இப்போ அவங்களை பாலோ பண்ணி  போய்ட்டிருக்கான்.. “

 

“ஓகே ருத்ரா நீங்க முதல்ல லேட் பண்ணாம ஸ்பாட் போங்க.அங்க நிலைமை உங்க கை மீறி போகாம எதுன்னாலும் பண்ணுங்க.போறப்ப உங்களுக்கு நம்பிக்கையா நாலு பேர் யூனிபோர்ம்லயே வரட்டும்.அவங்களை வெச்சு முடிக்க முடிஞ்சா…இல்லன்னா நீங்களே இறங்கிருங்க” என்றார். 

 

அங்கிருந்து கிளம்பியவன் மாதவனுக்கு  கால் செய்ய, 

“ண்ணா இப்போ ஒரு தர்ட்டி மினிட்ஸ்  முன்னாடி நம்ம மது போற பிரைவேட் கிளாஸ் நடக்குற காம்ப்லெக்ஸ்ல இன்னும்  ரெண்டு பொண்ணுகளை ஏத்திகிட்டு போயிருக்காண்ணா.”

 

“நீ  இப்போ எங்கடா இருக்க”எனவும், 

 

“நா இப்போ தான் அவனுங்க வண்டியை  பாலோ பன்றேன்.எனக்கும் அவனுங்களுக்கும் ஒரு இருநூறு மீட்டர்  டிஸ்டன்ஸ்ல போய்ட்டிருக்கேன்,உனக்கு லொகேஷன் ஷேர் பண்ணிட்டேன்.”

 

“சரி மாதவா எந்த நிமிஷம்னாலும்  அவனுங்க உன்னை கண்டு கொண்டா உனக்கும் அதோட வண்டில இருக்க பொண்ணுங்களுக்ககும் ஆபத்து.பார்த்து போ பின்னாடியே வந்துருவேன்.

மாதவா, பார்த்துடா… “என தம்பிக்கு  மீண்டும் ஒரு முறை எச்சரித்து விட்டே அலைபேசியை வைத்தவன்,வண்டியை வேகமெடுத்தான். 

 

காலேஜை தவிர்த்து புதிதாக வெளியில் விற்பனையை ஆரம்பிக்க  முடிவெடுத்திருந்த அந்த கும்பல் தேர்தெடுத்த இடம் கயல் செல்லும்  இன்ஸ்டிடியூட். அதோடு அவர்கள் அதற்காக பயன்படுத்த நினைத்த நபரும் அவளே. 

 

மது அப்போது தான் அங்கு சென்றிருக்க  அவளது நண்பன் ஒருவன் அவளிடம் வந்து தன் நண்பன் ஒருவன் கயலை விரும்புவதாக  கூறி அவளை வண்டியருகே அழைத்து வர சொல்ல அவளும் கயலிடம் சென்று “ஹாய்,உங்க கூட என் பிரென்ட் கொஞ்சம் பேசணும்னு சொல்றாங்க கொஞ்சம் வர முடியுமா? “எனவும்    

 

“அச்சோ! எனக்கிப்போ கிளாஸ்  ஆரம்பிச்சுருமே.அப்புறமா மீட் பண்லாமா? “

 

“ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லீலிட்டு  வந்துரலாம் “என்றவள் அவளை கையோடு அழைத்து செல்ல,இவளும் வண்டியருகே போகவும் இருவரையும் சட்டென்று உள்ளே தள்ளி கதவை மூடினர். 

 

“டேய் என்ன பண்ற நீ பேசணும்னு தானே கூப்பிட்ட.இப்போ வண்டில ஏத்துற? “

 என மது கேட்க,முன்னிருக்கையில் இருந்து திரும்பி பார்த்த  இளைஞனோ, 

 

“மது இங்க வெச்சு பேச முடியுமா?அதான் கொஞ்சம் தூரமா போய் பேசிட்டு வரலாம்னு.அவங்களுக்கு பயமா இருக்கும்  தானே அதான் உன்னையும் கூட்டி வந்தேன்”

 

அவன் கூறுவதை நம்பிய மது,

“டேய் மாதவாக்கு தெரிஞ்சது என்னை அடி  வெழுத்துருவான்டா,கிளாஸ் முடிறதுக்குள்ள கூட்டி போயிரு.”

 

“ஓகே மது அதுக்குள்ள திரும்பி வந்துரலாம்..” என்றவன் வண்டியை சிட்டி விட்டு வெளியில் செலுத்துவதை கண்ட கயல் “மது எங்க போறோம்னு கேளுங்களே” எனவும், 

 

முன்னிருக்கையில் இருந்தவன் திரும்பி  

“பயப்புட வேணாங்க போற ஸ்பீடுக்கே  திரும்பிரலாம்” என்று விட, 

 

” பயப்புடாதிங்க கயல் என் கிளாஸ் மெட்ஸ்  தான்.”என மது கூறவும்,

 

 “ஓஹ் ! என்றவளுக்கு ஏறும்போதே  எதுவோ சரியில்லை என உணர்ந்தாள், அதோடு மதுவையும் ஏமாற்றி தான் கூட்டி வந்திருப்பான்கள் என்பதும் தெரிந்தது. 

 

 இவன்ங்களை அன்னக்கி பார்ட்டில  பார்த்திருக்கேனே…அந்த வினோத் கூட இருந்தானுங்களே,மனதிற்கு எதுவோ தப்பாகப் பட அரசுவுக்கு மெசேஜ் செய்தவள்  அதில் “அம் நொட் சேப் ஹனி.பாலோ மீ எஸ் சூன் பொஸ்ஸிப்ல்… “என அனுப்பி அதோடு லொகேஷன் ஷேர் செய்ய,தேனரசன் அடுத்த நொடி வண்டியில் பதட்டத்துடன் ஏறியிருந்தார். 

 

கயல் செல்லும் வண்டியில் மேலும் இரண்டு பெண்கள் அதற்கு பின்னிருக்கையில் இன்னும் இரண்டு பசங்க என அமர்ந்து பேசிக்கொண்டு அதுவும் நார்மலாக  இருக்க, இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை… 

 

வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவன் டேய்  பின்னாடி வர பைக் நம்மளை ரொம்ப நேரமா பாலோ பண்ற போலத்தான்  இருக்குடா,யாரோட வண்டின்னு தெரிலயே” எனவும், 

 

 கயல் மற்றும் மதுவும் திரும்பி பார்க்க மது வாய்  திறந்து எதுவோ கூற வருவதை உணர்ந் கயல் அவள் வாயை சட்டென முடி  கண்களால் வேண்டாம் என்றவள் ‘வண்டில வர்றது உனக்கு தெரிந்தவங்களா? ‘என போனில் டைப் பண்ணி அதனை அவளிடம்  காட்டிக் கேட்க,அதோடு ‘வி ஆர் நொட் சேப்’ என்றும் சொல்ல “மை ப்ரோ “என்று டைப் செய்து காட்டிய மது நன்றாக பயந்து விட்டாள்.கயலுக்குமே பயம்தான். காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

 

 இவ்வளவு கடத்தல், விற்பனை செய்யும்  நபர்களுக்கு தெரியாதா இவர்களின் மனநிலை.முன்னிருந்தவன்,”என்ன மது  பயந்துட்டியா? “எனவும் 

“எதுக்கு…  நா எதுக்கு பயப்புடனும்…? ” என அவள் தடுமாற, 

“அதானே,எதுக்கு பயப்புடனும்” என்று  கேலியாக கூறினான்.

 

கயல்,மதுவின் கைகளை பற்றிக்கொண்டு ‘ஒன்னும் பேசாதே’என்றவள் அவர்கள் செல்லும் பாதையை பார்த்தபடி வந்தாள். 

 

வண்டி ஒரு மண்வழிப்பாதை ஒன்றில் ஒரு இருநூறு மீட்டர் சென்று நிறுத்த இவர்களை  தொடர்ந்து வந்த இருச்சக்கர வண்டி இவர்களை தாண்டி சென்றது.

 

அதனை பார்த்த மது பயத்தில் கயலை  பார்க்க அவளுக்குமே நடுக்கம்.

 

“மது நீ இங்கயே இரு.உன்கூட இந்த  பொண்ணுங்களும் துணைக்கு இருப்பாங்க.அதோட இந்தப் பொண்ணு  என கயலை காட்டியவன் நாம சொல்றதை நல்ல பிள்ளையா கேட்டுக்கிட்டா எந்த  ப்ரோப்லமும் இல்லாம இன்னும் பத்தே நிமிஷசத்துல நாம திரும்பிரலாம் ஓகே”என்றிட. 

 

இன்னொரு வண்டி அதே பாதையில்  இன்னும் சற்று உள்ளே சென்று நிறுத்த, டேய் பொருள் வசந்துரிச்சு வண்டில  ஏத்திருங்க என்றிட பின்னிருக்கையில் இருந்த இருவரும் இறங்கி அவ்வண்டி அருகே செல்ல அதில் இறங்கிய இருவர் பார்க்கவே பயங்கரமாய் இருந்தனர்.

 

மது கயலின் கைகளை பற்றி “நாம ரொம்ப பெரிய ஆபத்துல மாட்டிக்கிட்டோம்  போலங்க.உங்களையும் சேர்த்து மாட்டி விட்டுட்டேன்.எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றிட,கயளுமே பயத்தில்  நடுங்கிக்கொண்டிருக்க இவளும் அவளிடம் தன் பயத்தை கூறிட இன்னுமே பயந்துபோனாள். 

 

பயங்கரமாய் அவர்கள் பார்வைக்கு இருந்த  இருவரும் இவர்கள் வண்டியருகே வந்து, 

 

“என்னடா செம பீஸ் ரெண்டு தூக்கிட்டு  வந்திருக்க.அட உள்ள இன்னும் ரெண்டு இருக்கே.எப்போல இருந்து இதை  ஆரம்பிச்சீங்க? “என்றிட, 

 

“அண்ணா இது நம்ம பொருள்  விக்கிறதுக்குண்ணா”

 

“அதெல்லாம் நல்லாவே விக்கலாம்டா… “

என்றவன் கயலின் கை பிடித்திழுக்க,அதே நேரம் மாதவன் அவன் வண்டியில் வந்திறங்கினான்.

 

“அண்ணா…”என மது கத்த,அங்கே இருந்தவர்களுக்கிடையே  ஒருத்தன் நீ எதுக்குடா இப்போ வந்த கிளம்பு என அவனை கிளப்ப அவனை  மதன் விட்ட அடியில் தூர விழுந்தான்.அதோடு அங்கே அடிதடி ஏற்பட,கயலின் கைப் பிடித்திருந்தவனோ அவளது கையை விடாது அவள் கத்தக்கத்த அவளை  இழுத்துக்கொண்டு மற்றவர் கவனத்தில் படாது,அவன் வண்டி நின்றிருந்த இடத்தையும் தாண்டி சற்று உள்ளாக மரங்கள் அடர்ந்த பகுதி நோக்கி சென்றான்.

 

இதை கவனித்து விட்ட மாதவன் அவன் முன்னே இருந்தவர்களை அடித்து விட்டு  அவளிடம் செல்லப்பார்க்க வந்திறங்கினான் ருத்ரா… 

 

மாதவன் தன்னை பார்த்துவிட்டு தான்  வந்திருப்பான் என்றெண்ணியிருந்த மது ருத்ரா வந்திறங்கிய தோரணையும்  அவனோடு வந்தவர்கள்,அவன் வண்டி என பார்த்திருந்தவள் வியந்து போனாள். 

 

சட்டென தன் கைக்கு நிலைமையை  மாற்றிக்கொண்டவன்,அங்கிருந்தவர்களை பிடித்திருக்க,பொருட்களையும் தன் வண்டிக்கு மாற்றியிருந்தான்.பெண்களை பார்க்க அதில் தன் தங்கையை  பார்த்தவனுக்கு கோபம் எல்லையை கடந்திருந்தது.

 

“ஏறு வண்டில…”என அவன் பற்களைக் கடித்துக்கொண்டு கூறிய விதம் அவனின்  கோபத்தின் அளவை காட்ட பயந்து போன மது மற்றைய இரு பெண்களுடன் அவன் வந்த வண்டியில் ஏறிக்கொண்டாள். 

 

அங்கிருந்த ஒருவன் ருத்ராவை பார்த்து டேய் நம்மகூட  இருந்து அண்ணனும் தம்பியும் நம்மளை பிடிச்சிருகீங்க.மவனே எங்கண்ணனுக்கு தெரிஞ்சது நீ என்ன ஆவுரன்னு மட்டும் பாருடா என கத்த, 

 

“போடா டேய் உங்க அண்ணன் நீ வர்ர  வரைக்கும் தான் வண்டில வெய்ட் பண்ணிட்டு இருக்காரு.தம்பி போய் ஏறுங்க  என்று அவனுக்கு ஒரு அரைவிட்டு வண்டியில் ஏற்றியவன் திரும்ப ஒருவன் மாதவனை நோக்கி கத்தியை  வீசியிருந்தான்.

 

மாதவன் சட்டென அவன் கையை உயர்த்த கத்தி அவன் முழங்கைக்கு மேல் கையை  கிழித்துக்கொண்டு விழுந்தது.

 

மாதவா என அவனை நெருங்கிய ருத்ரா  அவன் கையை உயர்த்தி பிடித்து அவனோடு வந்திருந்த அதிகாரி ஒருவருடன்  ஹாஸ்பிடல் அனுப்பப் பார்க்க 

 

“அண்ணா இன்னொரு பொண்ண ஒருத்தன் உள்ளே இழுத்துட்டு போனான்ண்ணா  அதை பார்க்க போய் தான்… “

 

“மாதவா நீ முதல்ல இங்க இருந்து போ நான் பார்த்துக்கிறேன்.அதோட என் வண்டிய  அனுப்பசொல்லிரு “என்று விட்டு இவனும் கயலை இழுத்து சென்ற வழி சென்றான். 

 

மாதவனை ஏற்றிக்கொண்டு அதோடு  பெண்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு 

ருத்ரா வந்த வண்டி கிளம்ப 

“மாதவா அந்த பொண்ணு” என மது மாதவனை கேட்க,

“அண்ணா பார்த்துப்பான்”என்றவன் அவளை பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டாள். 

 

ருத்ரா மரங்கள் அடர்ந்திருந்த பகுதியில்  சென்று பார்க்க அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை சில மரங்கள் வெட்டி  போடப்பட்டிருந்தது சிறிது நேரம் அவ்விடம் தேடிப்பார்த்தவன் எவ்வித சத்தமோ யாரும் இருக்கும் படியான  தடயமோ இல்லாது இருக்க ‘முன்னே சென்றாளோ’ என்றெண்ணி அவன் திரும்பி பாதைக்கு வர,அவன் முன்னே கார் ஒன்று படு வேகமாய் வந்து வந்த  வேகத்துக்கு ஈடாக பிரேக் அடித்து நிறுத்தப்பட்டது.

 

ருத்ராவும் திடீரென வந்த வேகத்தில் பின்னாடி ஓரடி எடுத்து நிற்க,காரை  விட்டிறங்கினார் அரசு…

 

இறங்கியவர் ருத்ராவைக் காணவும் யோசனையானவர் “நீங்க இங்க… ” என ருத்ராவிடம் கேட்க,ருத்ராவோ அவரிடம்  

 

“நான் தான் அதை கேட்கணும்  மிஸ்டர்.அரசு” என்றான்.

 

இவரோ தன் தொலைபேசியில் காட்டும் இடம் சரிதானா என ஒருமுறை பார்த்துக்கொண்டவர்,”என் பொண்ணு இங்க இருக்கதா தான் சொன்னா” என்று விட்டு சுற்றும் கண்களை சுழல விட, 

 

‘இவர் பொண்ணா?சின்ன பசங்களை கூட்டி வந்ததா மாதவன் சொல்லல்லயே.’என்று யோசித்தவன் மறுநொடியே “மிஸ்டர்.அரசு  அம் டி.எஸ்.பி ஒப் என்.சி.பி எனவும் அவர் அவனை புரியாது பார்க்க அவனது அடையா அட்டையாள காட்டியவன் என்ன ப்ரோப்லம் என்று வினவ,கயல் அனுப்பிய மெசேஜையும் லொகேஷனையும் காட்ட  இங்க தான் காட்டுது வாங்க பார்க்கலாம். என்று அவருடன் சேர்ந்து ருத்ராவும் மீண்டும் அப்பகுதிக்கு சென்றனர். 

 

ருத்ரா அங்கே ஒருவன் எதையோ தேடுவதைக்கண்டு அவனை  விரட்டிப்பிடித்தவன் என்னடா தேடுற,எங்க அந்த பொண்ணு? “எனவும், 

  

“நானும் அந்தப் பொண்ணைத்தான் சார்  தேடுறேன்.”என்றுவிட 

 

“கண்ணம்மா.. எங்க இருக்க? ” என அரசு  கூப்பிட்டு பார்க்க,அவர் தவிப்பை உணர்ந்து கொண்டவன்  

“சார் இங்க தான் இருப்பாங்க,நான் இப்போ ஒரு ஒன் அவரா இங்கதான்  இருக்கேன்.போறதுன்னா என்னை தாண்டித்தான் போயிருக்கணும்.சோ பயப்புடாம தேடலாம் என்றவன்,

 

கண்ணம்மா  என்று அரசு பேசியதை  வைத்து அவள் பெயர் அதுவென  நினைத்தவன், 

“மிஸ் கண்ணம்மா,யு ஆர் சேப்,நீங்க பயப்புடாம இருக்க இடத்துல இருந்து வெளில வாங்க.”என்று ருத்ரா சொல்ல

 

வெட்டப்பட்டு கீழே ஒன்றின் மேல் ஒன்றாக கிடந்த மரக்குற்றிகளின் அருகே ஒழிந்திருந்த கயல் அவன் குரல் கேட்க அப்போதும் எழுந்து கொள்ள முடியவில்லை. அவள் ஆடையில் முதுகு பகுதி கிழிந்து  முதுகில் காயமும் ஏற்பட்டிருக்க கால் வேறு வழி உயிரெடுத்தது.அரசு அவள் இருக்கும் பக்கம் வரும் வரை அப்படியே அதில் சாய்ந்து நின்றிருந்தவள்,முகமெல்லாம் பயத்தில் வெளுத்து கண்ணம் ஒரு பக்கம்  கன்றி சிவந்திருந்தது… 

 

அரசு, “கண்ணம்மா எங்கடா இருக்க? “என  அவர் அம்மரத்தின் அருகே ஓர் பதினைந்தடி இடைவெளியில் நின்றிருக்க 

 

” அப்பா…. “என்று கத்தியவள் அவரிடம்  ஒரு காலை இழுத்தவண்ணம் சென்று அவரை தாவி அனைத்திருந்தாள்.

 

அவள் சத்தம் கேட்டு திரும்பிய ருத்ரா அவ்விடம் கயலை காண அவர்களை  பார்த்தவனுக்கு அவள் வார்த்தை கேட்ட நொடி எப்படி உணர்ந்தான் என்றே  விவரிக்க முடியவில்லை,அதோடு இவள் எப்படி வந்தாள் என்றெண்ணியவன் அருகிலிருந்தவனை அடி பின்னியெடுத்து விட்டான். 

 

“ஹனி இங்கேயிருந்து போயிரலாம்.”எனக் கயல் கூற 

“போலாம் டா” என்று ஓரடி எடுத்து வைக்கவும்

“ஹனி என்னால நடக்க முடில.”

அவள் காலை பார்க்க காலில்  காலணியையும் காணவில்லை.அதோடு கணுக்காலில் வீக்கம் இப்பதை கண்டு

 “இரு  நான் வண்டியை எடுத்துட்டு வரேன்” என அவளை விட்டு விலகப்பார்க்க “நானும் கூடவே வரேன்” என அவள் நொண்டிக்கொண்டே வரப்பார்க்க,

 

“மிஸ்டர்.அரசு வெய்ட் பண்ணுங்க இதோ வரேன் என்ற ருத்ரா அவன் வண்டி வந்திருக்க அதனருகே விரைந்து அவனது டீஷர்ட்  ஒன்றை எடுத்து வந்தவன் அவரிடம் கொடுத்து போட்டு விடுங்க என்றிட அப்போதுதான் அவளுமே அவள் நிலை உணர்ந்தாள். 

 

அரசுவை அனைத்தவாரே கயல் இருக்க அவள் முதுகுப் பகுதியே அவனுக்கு காணக்கிடைத்தது.ஆடையில் கிழிசலும் அதில் இருந்த காயமும் அவன் கண்ணில் பட்டது.  

 

“தேங்க்ஸ் ருத்ரா” என்று அதை மகளுக்கு போட்டு விட்டுக்கொண்டே கண்ணம்மா  நான் வரதுக்கு முன்னாடியே சார் தேடினாங்களாமே நீங்க பார்க்கலயா? 

 

“எனக்கு யாரையும் தெரில ஹனி ரொம்ப  பயந்துட்டேன்.கண்கள் கலங்கி குரல் கம்மக்கூறியவள் அவனை நிமிர்ந்தும்  பார்க்கவில்லை. 

 

அரசு அவளை அப்படியே கைகளில்  தூக்கிக்கொண்டவர் அவளை அவர்கள் வண்டியில் ஏற்ற ருத்ராவும் கதவை திறந்து உதவினான்.

 

“மிஸ்டர்.அரசு வில் மீட் என் டாக் அபௌட்  திஸ் லேட்டர்…இப்போ அவங்களை பார்த்துக்கோங்க “என்று கைகொடுத்து  விடை பெற்றவன் அவனது வண்டியிலும் அரசு அவரது வண்டியில் கயலுடனும் சென்றனர்.