KKA-Epi 10

KKA-Epi 10

KKA -10

 

வெளியே இருள் கவிழ்ந்திருக்க அவள் வீட்டினுள்ளும் செயற்கை ஒளிகூட  ஒளிர விடாது இருளடர்ந்து இருந்தது.அவளோ கட்டிலில் தன் தலையனையை அணைத்தவாறு உறங்கியிருந்தாள்.

 

மீனாட்சியுடன் பேசிவிட்டு வந்தால் ஓர்  முடிவுக்கு வரலாம்,என்றிருந்தவளுக்கு மேலும் அவள் மனதில் பாரம்  ஏறிக்கொண்டது தான் மிச்சம்.கடைசியாய் ‘எனக்கு அம்மாவாக வரமுடியுமா?என்று கேட்டிருக்க படாதோ? எனக்கா இப்போ அம்மா தேவை,ஹனிக்கு தானே ஓர் துணை,அவர் தோள் சாய ஓர் உறவு வேண்டும்.அதற்காக தானே இதெல்லாம் செய்கிறேன்.ஆனால் பட்டென்று எப்படி ‘என் அப்பாவை கட்டிக்கொள்ள முடியுமா?’என கேட்பது.

 

அதனாலேயே மீனாட்சியிடம் ‘தனக்கு தாயாக வருகிறீரா?’எனக் கேட்டது.அவர் திகைத்து ‘என்ன கேள்வி இது?’ எனும் விதமாய் இவளை பார்த்து பேசியது மனதை உறுத்த வீடு வந்தவள் அப்படியே அசதியில் மன உலைச்சலிலும் உறங்கியும் விட்டாள்.

 

மீனாட்சி,கயல் சொல்லி முடித்த  நிகழ்வுகளில் இருந்து தன்னை முழுதாய் மீட்டிருக்காதவர்,கயலின் கேள்வியிலேயே தன்னிலை வந்தார் எனலாம்…

 

மீனாட்சியை பார்த்தவாறே வந்த ருத்ரா  எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்தவன்,

 

“அத்தம்மா,செம பசியெனக்கு.வீட்ல சந்திரமுகி வந்திருக்கா.அங்க போனா என்னை சாப்பிடக் கூட விடாம எதாவது  உளறி என்னை டென்டசன் பன்னிருவா, சோ சாப்பாடு போடுங்க அத்தம்மா நான் சாப்பிட்டு போனதும் தூங்கிருவேன்.” என்றவாறு மேசையில் உற்கார்ந்து விட்டான். 

 

அமர்ந்தவன் அவரைப் பார்க்க அவரும் ஏதோ யோசனையோடே அவனுக்கு உணவை எடுத்து வைத்தவர் “வரு  போட்டுக்கோ டா “எனவும் அவரையும் அமர வைத்து வற்புறுத்தி அவருடன் சேர்ந்தே உணவை உண்டுவிட்டு எழுந்தவன் போகும் போது, 

 

” உங்க பிஏவ நம்பின அளவுக்கு என்னை  நீங்க நினைக்கல போல.சட்டுனு அவளோட ஒட்டி உரிமையா பேசுறது போல என்கூடவும் பேசிருந்தா எப்பவோ உங்க மனசு லேசாகி, நீங்களும் சந்தோஷமா  இருந்திருப்பீங்கன்னு தோணுது அத்தம்மா. அதுக்காக என்ன வேணா நான் செஞ்சிருப்பேன்” என்றான். 

 

“வரு… உன்கூடத்தான் நான் மனசு விட்டு  பேசுறதே.யேன் இப்படி எல்லாம் பேசுற.அந்த  பொண்ணு என்னை பார்க்க வந்துட்டு கொஞ்ச நேரம்  பேசிட்டு போறா.யேன்டா இப்டி பேசுற? ” என அவர் கவலையாக கேட்க, 

 

“அத்தம்மா,மனசுவிட்டு பேசுவீங்க ஆனா  மனசுல இருக்கத எல்லாம் பேசலையே. பரவாயில்லை அத்தம்மா உங்க மனசு  இப்போ லேசா,மனசுக்கு நிம்மதி தருதுன்னா அவகூட பேசுங்க எனக்கொண்ணும் இல்லை.

 

அதானே வீடு வரைக்கும்  வந்துட்டா.நம்மளை பார்த்தாதான்,  தலைகுனிஞ்சு நல்ல பிள்ளையாட்டம் நடந்துப்பா.நம்மளை பார்க்கத்தான்  யோசிப்பா.”என்று கடைசி வரியை முணுமுணுத்தவன், 

 

“நான் வரேன் அத்தம்மா,ரெண்டு வாரத்துக்கு பிசியா இருப்பேன்.நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை  போட்டுக்கோங்க.எதுன்னாலும் என் பர்சனல் நம்பருக்கு கால் பண்ணுங்க, இல்லன்னா மாதவாக்கு” என்றவன் அவன் வீட்டை அடைந்தான். 

 

போகும் அவனையே பார்த்தவர், ‘இவனென்ன இப்படி பேசுறான் அவகூட பேசுறது இவனுக்கு பிடிக்கலையோ? பொறாமை பிடிச்சவன்,இவனுக்கான பாசம் குறைஞ்சுரும்னு நினைக்கிறான் போல’ என்று எண்ணியவர் இதழ் மெலிதாய் புன்னகை தர அவன் சென்றதும் 

உள்ளே சென்றார். 

 

இரவில் அந்த தனிமை,தேனரசுவின் துயர் மட்டுமே மிஞ்சிய கடந்த காலத்தோடு  தன்னதை நினைவு கூர்ந்தவர் ‘தான் அவ்வளவெல்லாம் படவில்லையே..ஒரே ஒரு முயற்சி மட்டுமே எடுத்திருந்தாள் கயல் இன்று தாய் பாசத்தையும் பெற்றே வளர்த்திருப்பாள்’ என்று எண்ணினார்…

 

மீனாட்சி இருவருடங்களின் பின்னர் திரும்ப தன் ஊரில் தெரிந்த ஒரு வரைக்கொண்டு தேனரசன்,கலை பற்றி விசாரிக்க அப்போது அவர்களுக்கு குழந்தையும் இருக்க அவர்கள்  சந்தோஷமாக இருக்கிறார்கள் எனும் செய்தியே கிடைக்கப்பெற்றது.அதோடு தேனரசன் பற்றி எவரிடமும் இதுவரை தெரிந்துகொள்ள முற்படவில்லை. 

 

தன் சிறிய அண்ணியின் தம்பியை திருமணம் முடித்ததோடு லண்டன் சென்று விட அங்கு தன் அண்ணனுக்கு வேறாகவும் இவர்களுக்கு வேறாகவும் வீடு இருக்க இவளுக்கும் அது சற்று நிம்மதியை தந்தது. 

 

“மீனாட்சி உனக்கு வசதி போல வீட்டை  மாத்திக்கோ,எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும்  இல்லை.உன் விருப்ப படி நீ இருக்கலாம், முதல்ல பிரன்ஸா பலகலாம்,அப்றம் நம்மளால ஈஸியா லைப் ஸ்டார்ட்  பண்ண முடியும்.”

என்றதும் மீனாட்சிக்கு அவன் பேசியது  மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்க இவளும் கை நீட்டி நட்பை ஆரம்பித்தாள். 

 

“கோபப்பட மாட்டிங்கன்னா உங்க பெயர்  என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? “மீனாட்சி கேட்க,  

 

“அப்போ நீ என் பெயர் கூட  தெரியாமத்தான் என்னை கல்யாணம்  பண்ண சம்மதம் சொல்லிருக்க.ஹ்ம்ம்!  ‘அப்போ எப்டி என்னை நம்பி இவ்வளவு தூரம் வந்த? “எனவும், 

 

“தெரில.இதுக்கு மேல அங்க இருக்கவும்  முடியல அதான்” என்றவளை பார்த்தவன்,   

 

“ஓகே மீனாட்சி நீ ரெஸ்ட் பண்ணு நான்  போய் நைட்க்கு ஏதும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு திரும்பியவன் ‘என் பெயர் கேட்டல்ல அம் விக்னேஷ்.”என்று விட்டு சென்றான்.  

 

அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒரு ஆறு மாதம்  நண்பர்கள் எனும் வகையில் இருவரும் நல்ல பழகினர்.அவனும் அதை மீறி  செல்லவில்லை.இவளும் அவனிடம் ஏதும் கேட்கவும் இல்லை. 

 

தேனரசு கூறிய ‘கடவுள் எதற்கு மறதியை  படைத்தான் என்பதை தெரிந்து கொள்வோம் ‘என்ற வார்த்தைகள் அவளுக்கு அடிக்கடி நினைவில் வந்தது. அதோடு அவன் நினைவும்.. 

 

நினைவென்றால் ‘இருவரும் எப்படி இருப்பார்கள், அங்கு நல்லபடியாக தொழில் கிடைத்ததோ,கலை எப்படி இருக்காளோ, இருவரும் புரிந்து நடந்து கொள்வார்கள்,   ஒன்றாக வளர்ந்தவர்கள் தானே.காலம் கடந்து போக எல்லாமும் கடந்து போகும்’ என்றெல்லாம் எண்ணங்கள் ஓடும்.  

 

எல்லா பெண்களும் கடைசியில்  இப்படித்தான் ஒருவனை உள்ளத்தில் நினைத்து பின் அவனை அடி ஆழத்தில்  புதைத்து அதற்கு மேல் புதிதாய் வரும் உறவை ஏற்று வாழ்கின்றார்கள் போலும்.

 

காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதை  உணர்ந்தவள்,’நண்பனாய் பழகும் தனக்கு தாலி கட்டிய கணவனை நினைத்தவள்    அவருக்கு நான் நல்ல மனைவியாக, அவருக்கு உண்மையாக வாழ வேண்டும்’ என்று மனதில் முடிவெடுத்தவள் இனி அவனுடன் தானே என் வாழ்வு அதை சரி வர அமைத்துக்கொள்வேன்  என்றெண்ணினாள். 

 

அதை தன் கணவரிடமும் தெரிவிக்க,ஓர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டான்.. இப்படியே சில நாட்கள் செல்ல விக்னேஷ்  தன்னிடம் நெருங்குவதும் பின் விலகுவதுமாய் இருக்க அவளுக்குமே ஏன் என்று புரியவில்லை. 

 

ஓர் நாள் இரவு நேரம் மீனாட்சியை  அணைத்து இருந்த விக்னேஷிடம் மது வாடை அடிக்க,

 “என்ன விக்கி ட்ரிங்க்ஸ் எடுத்தீங்களா? ”  எனவும் “கொஞ்சமா” என்றான். 

 

“ஹ்ம்ம் “என்றவள் வேறேதும் கேட்கவில்லை. 

 

அவனது அணைப்பை இருக்கியவன் பின்  தன் கைகளை தளர்த்தியவாறு மீனாட்சியை தன் பக்கம் திருப்பி 

“நான் உன்னை தொடும் போதெல்லாம்  உனக்கு உன் காதலன் தொடுரது போலவே  இருக்குமா?உண்மைய சொல்லிரு மீனாட்சி”  என்று கேட்க, 

 

விக்னேஷ்… ! என்று அவனை உதறி விட்டு விலகியவள், 

“என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான்  பேசுறீங்களா?என் மனசுல எதுவும் இல்லை. நான் உங்ககூட உண்மையா வாழணும்னு தான் என் மனசை சரிப்படுத்தி வாழுறேன்.இப்படியெல்லாம் பேசி என்னை  கஷ்டப்படுத்தாதீங்க.”என்றவள் அப்படியே அமர்ந்து விட்டாள். 

 

“சாரி மீனாட்சி.நான் இங்க வந்ததும் தான் எங்கக்கா என்கிட்டே உங்க லவ் பத்தி  சொன்னா.இந்தியால வெச்சே தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்.என் மனைவி என்னை மட்டுமே தான் லவ் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்.இப்ப நீ அப்டின்னு  சொன்னாலும்,முன்ன இன்ன யாரோ இருந்த இடத்துல தானே என்னை இப்போ வெச்சிருக்க.அதை என்னால ஏத்துக்க முடியல அதான்.சாரி மீனாட்சி..”என்றவனை பார்த்தவள்,  

 

“நீங்க என்னை பற்றி தெரிஞ்சுதான்  கல்யாணம் பண்ணி இருக்கீங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.இல்லன்னா நானே உங்ககிட்ட முன்னமே சொல்லிருப்பேன். 

 

உங்களை மட்டுமே மனசுல நினைக்கிறவளை கல்யாணம்  பண்ணனும்னா நீங்க லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிருக்கணும்.மத்தபடி  எந்த பொண்ணுமே தன் கணவனுக்கு கொடுக்கும் மனசு ஏற்கனவே ஒருத்தனுக்கு கொடுத்ததா தான் இருக்கும்.

 

ஆனால் அது கல்யாணத்துக்கு பின்னாடி  முன்னமே கொடுத்தத விட ஆழமானதா மாறி அழகான வாழ்வாகவும்,இதை  இழந்திருப்பேனே என கணவனின் காதலை நினைக்கும் அளவுக்கு தன் மனசை,அதில்  அவங்களுக்காக காதலை கணவனுக்கு திகட்ட திகட்ட கொடுத்திருவாங்க.. 

இது  ஆண்களுக்குமே பொருந்தும்.

 

உங்க லைப்லையும் யாரும் இல்லாம இருக்க முடியாதுங்க.ஏதோ ஒரு வகைல யாரோ உங்க மனசை தொட்டு போயிருப்பாங்க.அது பிழையும் இல்லை.

 

நமக்கு கிடைக்குற வாழ்க்கை நமக்கு ஏற்றது போல நம்மளை மாற்றித்தான் வாழ்ந்தாகனும்.என்ன ஒன்னு  பொண்ணுங்க கொஞ்சம் அதிகமாகவே தன் உணர்வுகளை,மரியாதையை, தன்மானத்தை இழந்து தான் இன்னொருத்தங்களுக்கு அதை    கொடுக்கணும்.  

 

உங்களை கஷ்டபடுதிட்டேன்னா என்னை  மன்னிச்சுருங்க”என்றவள் அவலறைக்கு  சென்றுவிட்டாள்… 

 

ஆனால் இதுவே தொடர்கதையாக  மாறிவிட்டது.அவனே நெருங்கி வருவான். அவனே அவள் காதல் கொண்டவனை  நினைவு படுத்தி மீனாட்சியை படித்தியெடுத்து விடுவான்.

 

‘இவர் என்னை தொடும் போது எனக்கு அவர் நினைவு இல்லையே ஆனால் இவர் மேலும் எல்லை மீறி தீண்டும் போது  எனக்கு தேனரசன் நினைவு வந்துவிட்டால்…நரகம் தான்… ‘

 

மீனாட்சிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.அந்தளவுக்கு அவளை மனதால் வதைத்தான்.அடிக்கடி வார்த்தைகளை தவற விட்டான்.சில  வேளை வார்த்தைகள் போய் ஓரிரு முறை கையும் நீண்டு விட பொறுமை இழந்தாள்.அதனாலேயே மனம் கண்டதையும் நினைக்க தூண்டியது. 

 

மனமோ கண்ணாடி துகள்களாய்  உடைந்து சிதறி மேலும் பொறுத்து போக முடியாது எனும் நிலைக்கு வந்து விட்டாள். இருவருக்குமே அது நரகம் அது.

‘தான் விட்டால் அவன் வேறு  அமைத்துக்கொள்வான்.’என்றெண்ணியள் அவனிடம் தனக்கு விடுதலை கேட்க அவனோ மறுத்து விட்டான்.. 

 

பின் ஒரு முடிவாக அவனோடு வாழமுடியாது என்றவள் தன் சின்ன அண்ணன், அண்ணியோடு பேசி போராடி அவர்களுடனான உறவையே  முறித்துக்கொண்டு இந்தியா வந்தடைந்தாள்.வந்தவள் தன் அண்ணனிடமும் அன்னியிடமும் அனைத்தையும் கூறியவள் தன்னை  அவர்களோடு அல்லது எதாவது விடுதியிலோ சேர்த்து விடுமாறு கேட்க, 

 

அவளை தன் தோளோடு சேர்த்த ஜனார்த்தனன், 

“இனி நீ இங்கதான் நம்ம கூடத்தான்  இருக்க.உனக்கு இஷ்டப்படி இருக்கலாம். இனி யார் வந்தாலும் என்னை தாண்டித்தான் உன்கிட்ட வரனும். கல்யாணத்துல தான் என்னால எதுவுமே  பண்ண முடியாம அப்பா முன்ன நின்னு என்னை தடுத்துட்டார்.இனி நா பார்த்துப்பேன்.” என்றவர் அன்று முதல் தன் தந்தையையும் அவளிடம் நெருங்க விடவில்லை.அவர் மனைவி பார்வதியும் அவளுக்கு துணையாக ஆறுதலாக இருந்தார்.

 

அப்போதெல்லாம் அவளுக்கு அதிக ஆறுதலாய் இருந்தது ருத்ரா.அவருடனே அவன் நேரம் செலவிட மெல்ல மீண்டாள். அதோடு மீண்டும் கல்வியை தொடர  விரும்பியவள் அண்ணனுடன் பேசி வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் கற்று வந்தவள் தான்.

மெது மெதுவாக அண்ணன் துணையோடு ஆரம்பித்த தொழில் இன்று பெண் சிங்கமென தொழில்  வட்டாரத்தில் பேசும் அளவுக்கு வளர்ந்தும் விட்டாள். 

 

இனி என்னை செய்யலாம் என்று எண்ணியபடி இருந்த மீனாட்சி,தேனரசனை  சந்திக்க வேண்டும் என்ற எண்ணமே முதன்மையாக மனதில் இருக்க,கயல்விழி  கடைசியாய் அவரிடம் கேட்டதை நினைத்தவர் ‘கயல் ரொம்பவே நிறைவேற்ற கஷ்டமான ஆசை உன்னோடது’ என்று மனதோடு கூறிக்கொண்டவர்,அப்படியே விடியலை தேடி கண்ணயர்ந்தார். 

 

மாலை நேரம் கயல் தேனரசனை எதிர் பார்த்து அப்டபடியே வாசல் படிகளில் அமர்ந்து இருந்தவள் எண்ணமெல்லாம் நேற்று மீனாட்சியோடு பேசியவையே. 

 

கார் அவளருகே வந்து இரு முறை ஹார்ன்  அடித்ததும் தான் சுயத்துக்கு வந்தாள். காரில் அமர்ந்த படியே தேனரசன் அவளது யோசனையோடு இருந்த தோற்றத்தை பார்த்திருப்பதை கண்டாள். 

 

அப்படியே அவரை பார்த்திருக்க அவர்தான் இறங்கி வந்து கை கொடுத்து அவளை  எழுப்ப அவரை அனைத்து கொண்டவள் “ரெண்டு நாள் சொல்லிட்டு என்னை அஞ்சு நாள் தனியா விட்டுட்டு  போய்ட்டல்ல…” என்றவள் அப்படியே இருந்தாள். 

 

அவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்  என்பதை நன்கு உணர்ந்த தந்தையோ “கண்ணம்மா,அங்க போனதுக்கப்புறம்  ஒன்னும் பண்ண முடியலடா.சாரிடா” என அவள் தலையில் தன் கண்ணம் வைத்துக்கொண்டு அவளை கையால்  அனைத்திருந்தவர்,அவள் முதுகை தடவிக்கொடுத்தார்.

 

அவள் விசும்புவதை உணர்ந்து அவள்  மனதுக்கு இதுமட்டுமல்ல வேறெதுவோ கஷ்டத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது என்பதையும் விளங்கிக்கொண்டார்.அவளை சகஜமாக்கும் பொருட்டு, 

 

“அப்போ… அப்பாக்கு பெருசா பனிஷ்மென்ட் இருக்க போகுது.ரொம்ப டயர்டா  வந்திருக்கேன் டா.எதுன்னாலும் பார்த்து குடு கண்ணம்மா” எனவும் தன்னிலை  மீண்டவள்.

“முழுசா ஒரு நாள் என்கூட எப்போன்னு சொல்வேன் அன்னைக்கு.அதோட  நான் ஒன்னு கேட்பேன் பட் அதுவும் இப்போ இல்ல.கண்டிப்பா ஒத்துக்கணும்.” என்றாள். 

 

“கண்டிப்பா கண்ணம்மா.என் பேபிக்கு  இல்லாத உரிமை இனி யாருக்கு கொடுக்கப்போறேன்.உனக்காக எதுன்னாலும் மீ சரண்டர்.” என்று இரு கையையும் உயர்த்தி கூற, 

 

“எனக்காக இல்ல உங்களுக்காக ஒத்துக்கணும்”என்றவளை பார்த்தவர்,   

 

“அப்போ என்னை வெச்சு எதுவோ பெருசா  பிளான் பண்ணி வெச்சிருக்க…’ என்று விட்டு  

 

“இப்போ சரி உள்ளே போகலாமா? “எனவும் 

 

“வை நொட் ! “என்று அவரோடு கைகோர்த்து  சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள். 

 

சென்றவர் முதலில் பார்த்தது அவள்  அறையை தான். 

 

“ஹனி கண்ணால பார்க்கமட்டும் தான் செய்யணும் வாய் திறந்து பேசப்படாது.”

 

“நா பேசப்படாதுன்னா நீ அது போல  வெச்சிருக்கணும்.பாரு இருக்க மாதிரி. பசங்க நல்லம் போல.கலட்டி போட்ட ட்ரெஸ் எல்லாம் ஒரெடத்துல,கபட்ல இருக்க பாதி ட்ரெஸ் பெட்ல.நான் போனதுல இருந்து குடிச்ச காபி கப் எல்லாம் சிங்க்ல…”என அவளை பொய்யாக திட்டிக்கொண்டே ஒவ்வொன்றாய் எடுத்து  வைக்க, 

 

“ஹனி,இப்போ தானே வந்த மெதுவா கிளீன் பண்ணு.நா வேணும்னா ஹெல்ப்  பண்றேன்” எனவும் அவளை முறைக்க  

அவளோ பாவமாக முகத்தை  வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள். 

 

“உன்னை கட்டிக்க போறவன் அடுத்தநாளே  ஓடப்போறன்…”

 

“அது என்னை எவனாச்சும் கட்டிக்கிட்டா பார்க்கலாம்,எனக்கந்த நம்பிக்கையே போச்சு.”என சலிப்போடும், வெறுமையாகவும் கூறி எழுந்து சென்று விட, கயல்  தன்னிடம் எதுவோ மறைத்துக்கொண்டு அவளை அவளே வருத்திக்கொண்டு இருக்கிறாள் என்று புரிந்தவர்,அவளோடு பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டார். 

 

ஒரு வாரம் சென்றிருக்கும்.கயல்  வழமையாக ஆபிஸ் சென்று வர மீனாட்சியும் அன்றைக்கு பிறகு தேனரசன் பற்றி எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை. கயலும் அவளது வேலையை பற்றி மட்டுமே  அவருடன் பேசினாள்.மனதில்’அவர் ஏதும் கேட்க மாட்டாரா’ என்று அவ்வப்போது அவரை பார்ப்பதையும் விடவில்லை. மீனாட்சி அதை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ள வில்லை. 

 

தேனரசனுக்கும் கயலோடு தனித்து பேச அவள் நேரம் கொடுக்கவே இல்லை.அவள் வேண்டுமென்றே தவிர்ப்பது உணர்ந்து அதன் பிறகு அவளே சொல்லட்டும் என விட்டுவிட்டார். 

 

இவர்கள் இருவரால் கயல்விழி தான்  தவித்து போனாள்… 

அதோடு இப்போதெல்லாம் ருத்ராவின்  நினைவுகளும் அவளை இம்சை செய்ய, அவனை அடிக்கடி பார்க்க நினைக்க தூண்டும் மனதையும் அடக்கி வைத்தாள்.

உள்ளம் அவனை தன்னவனாக நினைத்து  விட்ட பிறகு வேறெவனையும் அவ்விடம்  நிறுத்தி பார்க்கவும் இனி இயலாது என்பதனையும் புரிந்து கொண்டாள். 

 

ருத்ரா மீனாட்சியின்  வீட்டினனாக இருக்க, இவள் காதல் அவர்களை சேர்த்து வைக்க தடையாக இருந்து விடும் என்றஞ்சியவள் தன் காதலை மனதோடு பூட்டி விட முடிவெடுத்து அதனை யாருமாறியாது பூட்டியும் விட்டாள்.ஆனால் அவள் முகம் அகத்தின் சோகத்தை வெளிப்படையாக  காட்டிக்கொண்டிருந்தது.அதை மறைக்க தெரியாது திண்டாடிக்கொண்டிருந்தாள்.

 

வேலை விட்டு வந்தால் அதிகம் அறையினுள் முடங்கினாள்.எல்லோருடனும் பேசமாட்டாள் என்றாலும் அவள் அதிகம் பேசும் தேனரசனோடும் பேச்சுக்கள் குறைந்து போனது.

 

வார இறுதி நாட்களில் செல்லும் அவள் வகுப்புக்கள் மாலை முடியவும் அப்படியே வண்டியில் ஒரு இரண்டு மணிநேரம் பாதை  நெடுவிலும் சுற்றிவிட்டு தான் வீடு வருவாள்.

டென்னிஸ் விளையாடவும் இந்நாட்களில் செல்லவில்லை,ருத்ராவை பார்க்க நேர்ந்தால்  வேண்டாம் என அதையும் நிறுத்திக்கொண்டாள். 

 

கயலின் வகுப்புகள் நடக்கும் இடத்திற்கு  வந்து செல்லும் ருத்ராவின் தங்கை மதுவோடு சிறு அறிமுகம் ஏற்பட்டிருந்தது.பார்க்கும் போது  இன்முகத்துடன் ஒரு ஹாய்! ஹலோ.அதோடு ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொள்வார்கள். 

 

மது இங்கு அவளது நண்பர்கள்  வருவதாலும் கல்லூரி இறுதி ஆண்டு  என்பதால் அவர்களோடு நேரம் செலவிடுவதற்க்காகவுமே வருகிறாள்.

 

அவளது வருகையால் கயலுக்கு  ஏற்படவிருக்கும் ஆபத்து? தெரிந்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!