KVI-7

KVI-7

சயனா வீட்டிற்கு வந்ததும், காதல் கிரகத்திலிருந்து, காதல் வந்து நின்று  அழைப்பு மணி அடித்தது. அவளது கைப்பேசி சொன்னது, ‘கூஃபி’தான் அழைப்பு மணி அடித்ததென்று.

முதல்முறையாக அழைப்பை ஏற்க  சயனா தடுமாறினாள். அழைப்பு மணி அடிக்கும் ஓசை நின்றுவிட்டது.

மறுபடியும், அழைப்பு மணி. இம்முறை ஓசை கேட்டவுடனே திறந்து விட்டாள்.

“ஹலோ” – விரும்பி அழைத்தவன்.

“ஹலோ” – தயங்கி அதை ஏற்றவள்.

“என்னாச்சு பர்ஸ்ட் போஃன எடுக்கல”

“அது… அது…கவனிக்கல” – காதலில் முதல் பொய்.

“ட்டேபீ, ஹேக்கரோட லொகேஷன் கண்டுபிடிச்சாச்சா? ”

“இன்னும் இல்ல. பட், நான் உன்கிட்ட ஒன்னு கேட்கனுமே”

“கேளு ட்டேபீ ”

“சப்போஸ்… சப்போஸ் சரியா… நான் உன்ன கன்சிடர் பண்ணலனா என்ன பண்ணுவ?” – காதலை நிராகரிக்கப் போகிறாளோ?

“ஏன்? என்னாச்சி திடிர்னு? ” – காதல் பயம் கொண்டது.

“கேக்குறதுக்கு பதில் சொல்லேன்? ”

“எதுக்கு இப்போ இந்த முடிவு? ”

“நான், இப்ப எந்த முடிவும் எடுக்கல. சப்போஸ், நான் உன்னை கன்சிடர் பண்ணலனா என்ன பண்ணுவ? ”

“ட்டேபீ, இதத்தான ஃபர்ஸ்ட்லருந்து சொல்லிக்கிட்டிருக்க ” – சரிதானே!!

“கடைசி வரை இதையே சொன்னா? ” – இது சரியல்ல!!

“ரீஸன் கேட்பேன்”

“ரீஸன் சொன்னா?? ”

“வேலீடா இருந்தா? விலகிருவேன்”

“…. “- ‘விலகிருவேன்’ என்று சொன்ன ஒற்றை வார்த்தை தந்த வருத்தத்தின் அமைதி.

“ட்டேபீ, சொல்லு என்ன பிரச்சனை? ”

“ஹேக்கர் பேரு சக்திவேல்”

“காலையில ஒரு பேர் சொன்ன? இப்போ வேற பேர் சொல்ற? ” – ‘என்ன கண்டுபிடிக்கிற’ என்ற அர்த்தத்தில் கேள்வி?

“அது காலையில,  கனலினிதான் ஹேக்கர்னு நினைச்சோம். ஆனா, ஈவினிங்தான் தெரிஞ்சது, அவங்க பையன்னு”

“சூப்பர் பேமிலி” – பேச்சில் நய்யாண்டித்தனம் தெரிகிறதோ??

“ச்சே ச்சே, அவங்க அம்மாக்காக பழி வாங்கியிருக்கானு நினைக்கிறேன்” – எதற்காக? வரிந்து கட்டிக் கொண்டு வரும், இந்த ‘வாத’ முன்வைத்தல்.

“என்னமோ போ? சரி இதுல நான் என்ன செய்ய?”

“இந்த கொஸ்டின்ன நான், உன்கிட்ட கேக்கலாம்னு இருந்தேன்”

“சொல்லு ட்டேபீ. உனக்கு என்னதான் பிராப்ளம்?

“தெளிவா இருக்கிற மாதிரியும் இருக்கு, அட் தே சேம் டைம் குழப்பமா இருக்கு” – அதுதானே காதல்!!

“ஹேக்கர் மேல இருக்கிற ஸாஃப்ட் கார்னரா?” – வெளிப்படையான கேள்வி.

“ம்ம்ம் ” – வெள்ளை மனதின் பதில்.

“ஓகே. முதல சக்திவேல் யாரு? ”

“கனலினி பையன், சாப்ட்வேர் என்ஜீனியர். ஆனா, இன்னும் சரியா தெரியாது ”

“ட்டேபீ, நான் அத கேட்கல. உனக்கு அவன் யாருன்னு சொல்லு?”

“…. ”

“ஓகே லீவ் இட். உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணானா? ”

“இல்லை”

“நெக்ஸ்ட், நீ அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணியா?? ”

“இல்லை”

“நெக்ஸ்ட், நீ என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணியா?”

“இல்லை ”

“லாஸ்ட், நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணேனா? ”

“ஆமா”

“எதுக்கு ஆமான்னு சொன்னியோ, அத எடுத்துக்க.. ”

“..” – சிரித்துக் கொண்டிருக்கும் போது எப்படிப் பேச முடியும்.

“பின்ன என்ன ட்டேபீ, என்னமோ அவன், உன் முன்னாடி மண்டி போட்டு நின்னுகிட்டு ப்ரொபோஸ் செய்ற மாதிரியும்… அத நான் வேண்டாம்னு சொல்ற மாதிரியும்… ஏன்? எதுக்கு? ”

“சரி, இப்போ என்ன பண்ண? ”

“ம்ம்ம், அந்த ஹேக்கரோட போட்டோ கிடைக்குமான்னு பாரு. ”

“ஓகே”

“என்னோட போட்டோவ பாரு? ”

“ஓகே”

“என்ன ஓகே? அதுக்கப்புறம் நீதான் முடிவு செய்யனும். நான் ஓகேவா, நாட் ஓகேவானு”

“ஓகே ஓகே, புரிஞ்சிடுச்சு”

“ட்டேபீ, இந்த வேலைக்கு இடையில டைம் இருந்தா,  இன்வெஸ்டிகேஷன் பண்ணு.” – வேலை செய்யற நேரத்துல, வெட்டி வேலை பார்க்காத என்று உரிமையோடு சொல்ல முடியாதால், தரப்படும் உள்குத்து.

“ஸாரி… நான் டைவர்ட் ஆயிடேன்ல” – உள்குத்து உணரப்பட்டது.

“இப்ப புரியுதா?”

“யெஸ், ரொம்ப புரியுது”

“ஆர் யூ கிளியர்? ”

“ஹன்ரெட் பெர்சென்ட் ”

“ஓகே, பை ட்டேபீ, டேக் கேர்”

“…… ” – சயனாவின் அமைதியின் கவலை, இந்தக் காதல் அத்தியாயம் வாடிக்கையாக இப்படி முடியாதே!!

“ட்டேபீ, இத சொல்லலாமனு தெரியல. பட், சொல்லலனா கவலைப்படுவேனு தோனுது. ஸோஓஓஓஓ…”

“…. ” – அவனது அந்த  ‘ஓ’ நெடில் இழுப்பில், அவளது இதழ் ஒய்யாரமாக விரிந்தது.

“ட்டேபீ, ரியலி ஐ லவ் யூ ஸோ மச்”

“…. ” – அவனின் இத்தகைய காதல் அறிவிப்பு, அவளுக்கு எத்துனை அவசியம் என்று புரிந்தது.

காதலின், இந்த அத்தியாயம், இந்த இடத்தில் முடிவு பெறுகிறது.

❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

தனது காரைப் பார்க்கிங்கில் நிறுத்தினாள் ரேவ். 

ஒவ்வொரு அடியிலும் யோசனை மேலோங்கி இருந்தபடியே, நடந்து வந்து, சிஐடி அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள்.

லிஃப்டில் ஏறியவளுக்கு, ஒரே ஒரு  நினைப்புதான்.

அது, இன்று சக்திவேல் அலுவலகம் சென்றால், அவனைப் பற்றிய, அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

சயனாவிற்கு, சக்திவேல் பற்றி முழுவிவரமும் தெரியும் போது, அவளது எதிர்வினை எப்படி இருக்கும்? அது, அவளது கல்யாண முடிவைப் பாதிக்குமா?? ஒரே குழப்பமாகவும், எரிச்சலாகவும் இருந்தது.

இத்தகைய குழப்பத்துடன், சயனாவின் அறைக்குள் நுழைந்தாள், ரேவ்.

“நேத்து மனோகிட்ட  பேசினியா?” – இதுதான் ரேவின் முதல் கேள்வி.

“உட்காரு ரேவ்”

“…”

“உட்கார்ர்ரு பேசனும்” – கோபத்தின் அழுத்தம்.

“நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு”

” பேசியாச்சு ரேவ், போதுமா? ”

“சக்திவேலோட ஆபீஸுக்குப் போய்ப் பார்க்க வேண்டாமா?”

“இல்ல, போக வேண்டாம். உட்காரு”

‘இவளுக்கு என்ன ஆயிற்று – என்று தோன்றினாலும், இதுவும் நல்லது’ என்று நினைத்து அமர்ந்தாள்.

” ஏன் போக வேண்டாம்? ” – ரேவ்.

“கேஸப்பத்தி பேசலாமா? ஏதோ தப்பான பாதைல போற மாதிரி இருக்கு”

“ஏன் இப்படி சொல்ற? இப்படி போயிதான, அவனோட ஆபீஸ் அட்ரஸ் வரைக்கும் கண்டிபிடிச்சாச்சு”

“நாம கண்டுபிடிக்கல, ரேவ். சக்தியா நம்மள கண்டுபிடிக்க வச்சிருக்கான்”

“இது என்ன புதுசா? சும்மா உளறாத”

“ஓகே, லிஸன். ஒரு கொரியர் வருது. அதுலருந்து  இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றோம்”

“ய்ய்யா”

“பேப்பர்ல தேடினா, இன்கம்டேக்ஸ் ஆபிஸர் கனலினி பேர் கிடைக்குது.”

“யெஸ்”

“அதவச்சி இன்கம்டேக்ஸ் ஆபீஸ் போறோம். அங்க யாருனே தெரியாத ஒரு லேடி வந்து, கனலினி வீட்டு அட்ரஸ் தராங்க. ”

“ய்யேஸ் ”

“அதவச்சி வீட்டுக்குப் போனா, அங்க இருக்கிற செக்யூரிட்டி கனலினி, அங்க இல்லன்னு சொல்றாரு ”

“பட், செக்கரட்டரிய மீட் பண்ணச் சொன்னாருல”

“அக்ரீடு. செக்ரட்டரி சக்தி ஆபீஸ் அட்ரஸ் தராங்க”

” என்ன சொல்ல வர்ற? ”

“நாம எந்த பாதையில் போகனும்னு, சக்திதான் டிசைட் பண்றான் ”

“சீக்குவென்ஸ் பார்த்தா, நீ சொல்ற மாதிரிதான் தெரியுது. ஆனா , அவன் எதுக்காக இப்படிப் செய்யனும்”

“எதுக்காகனா? எதுக்காகனா? டிலே பண்ண வைக்கிறான். ”

“என்ன டிலே? எல்லா இடத்திலயும், நமக்கு இன்பர்மேஷன் கிடைக்குதுல”

“ஆனா ரேவ், முழுசா எதுவும் கிடைக்கலையே?

“அக்சப்பட்டடு. பட், அத நோக்கிதான போய்கிட்டு இருக்கோம்”

“இல்ல ரேவ். நாம டைவர்ட் ஆகறோம்”

“ப்ச்”

“ரேவ், நான் கேட்கிற கொஸ்டினுக்குப் பதில் சொல்லு”

“கேளு”

“நமக்கு சக்தியைப் பத்தித் தெரியனுமா? இல்ல கனலினி பத்தி தெரியனுமா ?”

“ரெண்டும் ஒன்னுதான”

“ஒன்னுதான். பட் சக்திய நோக்கி போன கேஸ்ல டிலே ஆகும். கனலினி பத்தி தெரிஞ்சா கேஸ் முடிஞ்சுரும் ”

“நேத்து அந்த கிளினிங் லேடி, டேக்ஸ் டிபார்ட்மென்ட்ல, கனலினி அட்ரஸ் கொடுத்தாங்கள, அவங்க ஏரியா சைதாப்பேட்”

” ஓ, அப்ப அவங்கதான் கொரியர் போஸ்ட் பண்ணிருப்பாங்களா”

“யெஸ். லைக் தேட், அந்த லேடி சொன்ன மாதிரி மூனு மாசம் ஜெயில் கிடையாது. ரெண்டு மாசம்தான்”

“இதப்பத்தி கிராஸ் செக் பண்ணுவோம், அதனால டிலே வரும்னு நினைச்சிருப்பானோ”

“எக்ஸாக்ட்லி ”

” பட் எதுக்கு இந்த டிலே? ”

“அமைச்சர் சொன்ன அதே ரீஸன். ஏன்னா எலக்சன் வரைக்கும் கேஸ டிலே பண்ணா, அவனுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. அவரப் பழி வாங்க. அமைச்சர் கூட இதான சொன்னாரு. லைக், எலக்சன்குள்ள கேஸ முடிங்கன்னு”

“அப்படி அமைச்சர, எதுக்கு அவன் பழிவாங்கும்?? ”

“அதுக்கு, கனலினிக்கு என்னாச்சுனு தெரியனும்”

” ஓ, ”

“இப்ப சொல்லு, கண்டுபிடிக்க வேண்டியது கனலினியா? சக்தியா? ”

“நீதான சக்தி சக்தினு சொல்ற. நா ”

“ரேவ், நான் சீரியஸா பேசறப்ப… விளையாடத”

“சரி இப்ப என்ன பண்ணப் போற ”

“ஆபீஸ் போக வேண்டாம். கனலினி வீட்டுக்கு போகலாம் ”

“அப்கோர்ஸ்” – எதை நினைத்து பயந்தபடி வந்தோமோ, அது நடக்கப் போறதில்லை என்ற சந்தோஷம்.

தோழியைப் நன்றாகவே புரிந்து கொண்டதால் வந்த, மெல்லிய முறுவல் – சயனாவிடம்.

“நான் போய் மேம்கிட்ட சொல்லிட்டு வரேன். ஏன்னா, அமைச்சரோட பீஏ நேத்து மேம்ம மீட் பண்ணி, பயங்கிற திட்டாம். ”

“மேம்கிட்ட ரிப்போர்ட் பண்ணு. பட், அவங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிரு”

“ஏன்?”

“சொல்றத செய் ரேவ்” – ராயலை ஓட்ட ஆர்வம் வந்ததால், ரத்தினச் சுருக்கமாக பேச்சு முடிக்கப்பட்டது.

******

இப்படி முடிவு எடுத்தவுடன் இருவரும் கிளம்பி, கனலினி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

செக்யூரிட்டியிடம் இந்த முறைத் தெளிவாகச் சொல்லிவிட்டு, எட்டாவது தளத்திற்குச் சென்றனர். கனலினி வீடு பூட்டியிருந்தது.

அருகிலிருந்த வீட்டின் கதவைத் தட்டினர். வெளியே வந்த ஒரு வயதான பெண்ணிடம், விசாரிக்க ஆரம்பித்தனர்.

“கனலினி வீடு பூட்டியிருக்கு, அவங்க எங்கன்னு தெரியுமா?”

“நீங்க ஏன் கேட்கறீங்க? போலீஸா?”

“ம்ம்ம், அப்படியும் சொல்லலாம்” – சயனா.

“அவங்க லஞ்சம் வாங்கினதா சொல்லி, ரெண்டு மாசம் ஜெயில்ல போட்டிருந்தாங்க.”

“இல்ல, அது தெரியும். அதுக்கப்புறம் என்னாச்சுனு சொல்லுங்க? அதாவது ரிலீஸாகி வந்ததுக்கு அப்புறம்”

“ரிலீஸாகி வந்து, இங்கதான் ஒரு பதினஞ்சி நாளு  இருந்தாங்க”

“சரி ”

“அந்த பதினஞ்சி நாள்ள எங்களுக்கு கொஞ்சம் புரிஞ்சிடுச்சு”

“என்ன… என்… என்ன புரிஞ்சது?”

“மேடத்துக்கு மனநிலை சரியில்லாம  போயிடுச்சுனு.”

“என்ன சொல்றீங்க? மனநிலை சரியில்லையா?? ” – இது ரேவ்தான்.

சயனாவால் பேச முடியவில்லை. மூச்சை அடைப்பது போல் இருந்தது.

“ஆமா. அவங்க பையன்தான் கூட இருந்து பார்த்துக்கிட்டுச்சி”

தாயின் நிலையைப் பார்த்து எப்படி இருந்திருக்கும் அந்தப் பிள்ளைக்கு? – சயனா, ரேவ் இருவரின் மனக்குரல்.

“வீடு பூட்டி இருக்கே? இப்ப எங்க இருக்காங்க? ” – ரேவ்.

ரேவின் மனம், எளிதாக தன்னை மீட்டுக் கொண்டு வந்தது. சயனாவின் மனம் மாட்டிக் கொண்டது.

“ரொம்ப மோசமானதால, அதுக்கு மேல வீட்ல வச்சிருக்க முடியாம, அவங்க பையன்தான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருச்சி. ”

மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவிற்கா.? மனதின் பாதிப்பு – கேட்ட தோழிகளிடமும் பாதிப்பு.

“எந்த ஹாஸ்பிட்டல்னு தெரியுமா? நாங்க அவங்கள பாக்கனும்” – ரேவ்.

“இப்ப ஹாஸ்பிட்டல்ல இல்ல, ஒரு காப்பகத்தில இருக்காங்க. அது ஏதோ அவங்க ப்ரண்ட் நடத்திறதால, அங்க தங்கிருக்காங்க”

” காப்பகத்தோட அட்ரஸ் தெரியுமா? ”

“ம்ம்ம்.. போன வாரம்கூட போய் பார்த்திட்டு வந்தேனே” என்று சொல்லி, காப்பகத்தின் விலாசம் கொடுக்கப்பட்டது.

“அவங்க பையன் இங்க வருவாரா? ” – இன்னும் மீண்டு வராமல், பாதிப்புடன் இருக்கும் சயனா.

“இல்ல மேடம். அவங்க அம்மாவுக்கு, இப்படி ஆனதிலிருந்து இங்க வர்றது இல்ல ”

“ஓகே தேங்க்ஸ்” என்று நன்றியுடன் அந்த விசாரணை முடிந்தது.

வெளியே வந்தவர்களுக்கு என்ன பேசவென்று தெரியாமல் அமைதி காத்தனர்.

” சயனா” என்று அழைத்தாள்.

“போதும், முடியல ரேவ். சக்தி பண்ணதே தப்புன்னு தோனல. இப்ப சக்தி செஞ்சதுக்கு காரணமும் இருக்கு. சக்திய இனிமே குறை சொல்ல முடியாது. ” – சக்தி புராணம்.

“தப்பில்லன்னு நாம எப்படி சொல்ல முடியும்? ”

“ஒருத்தங்க, அவங்க கடமையைச் செஞ்சிருக்காங்க. அதுக்கு பொய்யா ஒரு கேஸைப் போட்டு, ஜெயிலுக்கு அனுப்பி, அவங்க மனநிலை பாதிக்கிற அளவு போயிருக்கு ” – சயனாவின் குரலா? குமுறலா?

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ் சயனா ”

“உனக்கு, அவன் செஞ்சது சரின்னு தோனுதில்ல? ”

“தோனுது. ஆனா நாம ஒன்னும் ஜட்ஜ் கிடையாது, தீர்ப்பு சொல்றதுக்கு. ”

“அப்கோர்ஸ். ஆனா, தீர்ப்பத் தள்ளி வைக்க என்ன செய்யனுமோ அதச் செய்வோம்”

“தப்பு சயனா. ஹேக்கர் இவங்கதான், இந்த இடத்தில இருக்காங்கன்னு காட்டிட்டு போயிரலாம். தேட் இஸ் பெஸ்ட். ”

“தப்பு ரேவ். அது ரொம்ப தப்பு. அது நியாயமும் இல்ல” – ரேவின் முகத்திற்கு நேரே ஒற்றை விரல் நீட்டி, சயனா.

“வேறென்ன செய்ய முடியும். அதான அமைச்சர் நம்மகிட்ட கேட்டாரு. நியாயத்த, அவர் பார்த்துப்பாரு” – அநியாயம் அனாதை ஆகிவிடாதா?

“அந்த ஆளு கேட்டா?” – ‘அமைச்சர் டூ ஆள்’ – இதுவே அவரது அரசியல் பயணம்.

“சரி வா, நம்ம அந்த டிரஸ்ட் இருக்கிற இடத்துக்குப் போய், கனலினிய பார்க்கலாம். அதுக்கப்புறம் டிசைட் பண்ணலாம். ஓகே”

“முடியல ரேவ். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அங்க போக வேண்டாம்” – எந்த ஒரு தாயின் வேதனையையும் பார்க்கும் சக்தி, சயனாவுக்கு இல்லை.

“சரி வா, ஆபீஸ் போகலாம் ”

“ஆபீஸ் போக பிடிக்கல”

” சரி வா, வீட்டுக்குப் போலாம்”

“வீட்டுக்குப் போகவும் பிடிக்கல. ”

“அப்போ என்ன பண்ணப் போற”

‘மனசு சரியில்லனா, ஆபீஸ் போக மாட்ட? வீட்டுக்குமா போக மாட்ட? ‘ – ரேவ் இப்படி கேட்டிருக்க வேண்டும்.

“சக்தியோட ஆபிஸ் போகலாம் ”

‘இதுக்குத்தான் இவ்வளவுமா’ என்று ரேவின் முகத்தோற்றம்.

“அம்மாக்காக இவ்வளவு பண்றானா? அந்த முகம் எப்படி இருக்கும்னு பார்க்க… பார்க்க ” – இது ரேவை இம்சிக்க விடப்பட்ட இடைவெளி.

” பார்க்க…??? ”

“யெஸ்… ஆசையா இருக்கு ” என்று கண் சிமிட்டினாள் சயனா.

‘ங்நே’ என்று நின்றிருந்தாள் ரேவ்.

******

சோழிங்கநல்லூர் வந்து சேர்ந்தது, சோக்கான வேகத்தில் ராயல்.

கணினி அலுவலகத்தின் உள்ளே நுழைந்தனர்.

சக்திவேலின் நண்பர்களில் ஒருவரிடம் பேச வேண்டும் என்று மட்டும் சொல்லி, முன்னறையில் காத்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பின், ஒருவன் வந்தான்.

“ஹாய்… நீங்க?” – கேள்வியாக நின்றது சாப்ட்வேர்.

“சக்திவேல் பத்திக் கொஞ்சம் விசாரிக்க வந்திருக்கோம்?”

“ஓஓஓ! ஏதாவது அலையன்ஸா? பையனோட கேரக்டர் பத்தி விசாரிக்க வந்திருக்கீங்களா?” – சாப்ட்வேரின் பிழை.

‘அழையாத விருந்தாளியாக வந்த பிழையும் அழகே!!’ – சயனாவின் மனக்குரல்.

“ஹலோ, நாங்க சிஐடி ஆபிஸர்” – ரேவின் மனக்குமுறல்.

“ஸோ வாட்? நீங்களும் மேரேஜ் பண்ணுவீங்கள?”

“ப்ச்.. ஆனா… ”

“ரேவ் விடு… சக்திவேல் கான்டாக்ட் இன்பர்மேஷன் வேனும்” – சயனா

“இல்ல மேடம். அவன் வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிட்டான். என்கிட்ட, அவன் பழைய நம்பர்தான் இருக்கு.”

“சரி அப்புறம்..” – கதை கேட்பவள் போல சயனா.

“அப்புறம்னா? புரியல”

“இந்த வேலய விட்டுட்டு எங்க போயிருக்காரு, உங்க ப்ரண்ட்டூ”

“யூஎஸ் போயிருக்கான்”

“வ்வ்வாவ், அங்க போயி?” – சயனா.

“யூஎஸ்ல எம்எஸ் படிக்கிறதுக்காக போனான். ”

“ஓகே. அவரோட பாஸ்போர்ட் ஜெராக்ஸும், அவர் போட்டோவும் வேனும்” – ஒன்று வழக்குக்குத் தேவை, மற்றொன்று வாழ்க்கைக்குத் தேவை.

“சயனா பாஸ்போர்ட் ஜெராக்ஸ்  ஓகே, பட், போட்டோ எதுக்கு ? ” – உன் வாழ்வின் தேவை, அவனல்ல என்ற அர்த்தத்தில்.

“இல்ல. போட்டோ கொடுக்கிறேன். பாஸ்போர்ட் ஜெராக்ஸ்  எதுக்கு?” – என் நண்பன் வாழ்வில், வழக்குத் தேவையில்லை என்று!!

சந்தேகப் பார்வையுடன் இருவரையும், பார்த்தாள்.

“இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல, இது வேனும். போங்க போய் எடுத்திட்டு வாங்க. இல்லன்னு சொல்லாதீங்க, கண்டிப்பா நம்ப மாட்டேன்”

அதற்குமேல் என்ன செய்ய? நண்பன், சென்றான். எடுத்து வந்தான். கொடுத்துவிட்டான்.

“நம்பர் சொல்லுங்க. வாட்ஸ் அப்ல சக்தி போட்டோ செண்ட் பண்றேன்”

சயனா வாய்திறந்து சொல்ல வருவதற்கு முன், ரேவ் “இந்த நம்பருக்கு அனுப்புங்க” என்று தன் கைப்பேசி இலக்கங்களைக் கூறினாள் .

புகைப்படமும், பாஸ்போர்ட் ஜெராக்ஸும் பகிரப்பட்டது.

“ஆங். ஆங்… அப்புறம் சக்திவேலுக்கு கல்யாணம் ஆயிருச்சா?” – சயனா .

“இதுவும் கேஸுக்குத் தேவையா?” – சாப்ட்வேர்.

‘இல்லை, இது இந்த லூசுக்குத் தேவை.’ – ரேவின் மனக்குரல்.

“ஆமாம் ” – சயனா.

“இல்ல மேடம். அவனுக்கு கல்யாணம் ஆகல.யாரையும் லவ்கூட பண்ணல”

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க” – சயனா.

“இல்ல அடுத்து இந்த கொஸ்டின் கேட்பீங்கனு… நானே..”

“தேங்க்ஸ்” என்று சொல்லிச் சிரித்து, சந்தோஷப்பட்டாள் சயனா.

விடைபெற்று, தோழிகள் வெளியே வந்தனர்.

“அவன்தான் யூஎஸ் போய்யிருக்கானு சொல்றாங்கல. அப்புறம் எதுக்கு இவ்வளவு டிடெயில்ஸ்?? ” – ரேவ்.

“நீ வேனா, இந்த பாஸ்போர்ட் ஜெராக்ஸ் வைச்சி, ஏர்போர்ட்ல செக்  பண்ணு. அவன் போயிருக்கவே மாட்டான்”

” ப்ச் எப்படிச் சொல்ற?? ”

“அம்மாக்கு இப்படின்னு தெரிஞ்சதும், கூட இருந்து பார்த்துக்கிட்டவன்,இந்த நிலைமைல அவங்கள விட்டுவிட்டு எப்படி எம்எஸ் படிக்கப் போவான்? ஸோ சிம்பிள்”

“….. ”

“உனக்குத் தேவைனா, செக் பண்ணு. இதுவும் டிலே பண்ற வேலைதான் ”

இந்த உரையாடலின் பொழுதில், ரேவின் கைகளிலிருந்து கைப்பேசி வாங்கப்பட்டிருந்தது.

அதிலிருந்த சக்திவேலின் புகைப்படம்  சயனாவின் கைப்பேசிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

“ஹேய், உனக்கு எதுக்கு அவன் போட்டோ? ”

“இங்கதான இருக்கான் ரேவ். ஸோ, பார்த்தா பிடிக்கனும்ல”

” வ்வ்வாட்??”

“ஹே… ஐ மென்ட் கைதி பண்றது”

“???” – சிஐடி ஆபிஸர் சிறைப்பிடிக்க முடியுமா??? – ரேவின் மனக் கேள்வி.

“நாளைக்கு அந்தக் காப்பகம் போறோம். சரியா??” – சயனா.

“ம்ம்ம் ” – ரேவ்.

ரேவிற்கு, சயனாவின் இந்த நகர்வு கடுகளவும் பிடிக்கவில்லை. எந்த ஒரு தோழியும், தன் தோழி ஒரு தண்டனைக் குற்றவாளியைக் காதல் செய்வதை விரும்பமாட்டாள்.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 தத்தித் தத்தி தாவிடம் குருவி போல, படிக்கட்டுகளில் ஒருவித மெட்டுக்கள் எழும்பிடும் விதத்தில், குதித்து வந்தாள்.

 வாரிவாரி ‘பைப்பில்’ வந்த நீரை பிடித்து, முகத்தை நோக்கி வீசினாள்.  முகத்தில் மோதிக் கொண்ட நீர், அங்கும் இங்கும் சிதறியது.

அங்கிருந்து நகரத் திரும்பியவள், சற்றுப் பின்னோக்கி சாய்ந்து, சுவரில் இருந்த கண்ணாடியில், ஒரு முறை தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.

பின், தன் தாயாரின் அறைக்குச் சென்றாள். இது வழக்கம்தான்.  அவரது அறையை, ஒரு முறை திறந்து பார்த்துவிட்டுத் தூங்குவது.

இது நாள் வரை, அந்த அறையைத் திறக்கும் போது வரும் இழப்பு உணர்வு, இன்று வரவில்லை.

கைப்பேசியை எடுத்தவள், சக்திவேல் புகைப்படத்தைப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த முகமும் திரும்ப தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாள்.

அகர்பத்தி புகையாய், சயனாவை வருடிச் சென்றது சக்திவேல் முகம்.

காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு வந்தது. ‘கூஃபி’ என்று பெயர் தொடுதிரையில் தெரிந்தது.

‘இதை எப்படி மறந்தேன்’ என்று நினைத்து அழைப்பை ஏற்றாள்.

“ஹாய் ட்டேபீ”

“…..” – ‘எப்படி சொல்ல தன் மனதை’ என்ற தவிப்பினால் வந்த அமைதி.

“ட்டேபீ.. சயனா… ”

“….” – ‘எப்படி ஏற்றுக் கொள்வான் தன் நிராகரிப்பை’ என்ற பரிதவிப்பில் வந்த அமைதி.

“சயனா, சொல்லு என்ன ஆச்சு?”

“சக்திவேல் போட்டோ பாத்துட்டேன்”

“….” – ‘கன்சிடரா’ அல்லது ‘காதலா’ என்ற கேள்வியின் பதில் தெரியப் போவதால் வந்த அமைதி.

“தப்பா நினைக்காத. நான் உன் போட்டோவையும்  பிளாக்ஸ்பாட்ல பார்த்தேன். பட், சக்திவேல் போட்டோவ பார்க்கிறப்போ இருந்த பீல்… உன் போட்டோ பார்க்கிறப்போ வரல” – காதலை மறுத்துவிட்டாள்.

“சயனா, நாம அப்புறமா பேசலாமா? ”

“இல்ல.. நான் சொல்றத.. ”

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… ஐ வில் கால் யூ லேட்டர். உடனே கால் பண்ணாத. ஐ மீன் இட். ” –  காதல் கிரகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.

” கூஃபி.. கூஃபி.. ” – பூட்டிய கதவின் முன் நின்று கொண்டு, முதல் முறையாகச் செல்லப் பெயர் கொண்டு, காதலை அழைத்துப் பார்க்கிறாள்.

யாரென்றே தெரியாத ஒருவனுக்காக, யாருமே இல்லாத ஒருவனைக் காயப் படுத்தி விட்டேனோ? – இந்த உணர்வில், உறக்கம் ஒதுங்கிக் கொள்ள, உழன்று கொண்டிருந்தாள், சயனா.

???????????????

error: Content is protected !!