KYA – 3

KYA – 3

                             காலம் யாவும் அன்பே 3

 

மெயிலில் தனக்கு வந்திருந்த விலாசத்திற்கு வந்து சேர்ந்தனர் திருக்குமரனும் இயலும்.

அழகிய புன்னை மரங்களும் , வேப்ப மரக் காற்றும் , அந்த இடத்தில் நடுநாயகமாக விளங்கிய பெரிய ஆலமரமும் , அதைச் சுற்றி அமைந்திருந்த கல் பெஞ்ச்சும் அவர்களை வரவேற்றது.

முதல் முறை இங்கு வருவதால் வெளியே ஒரு ஹோட்டலில் தங்கி குளித்து விட்டு பின் தயாராகி வந்திருந்தனர்.

இயலுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் அலைமோதியது. தான் ஆசைப்பட்ட வேலைக்கான முதல் அத்தியாயம் இது. இன்னும் எவ்வளோ தூரம் செல்ல வேண்டும். அந்த பூரிப்பு , குதூகலம் ஒரு புறம் இருந்தாலும், தந்தையைப் பிரிந்து இந்த நாள் வரை இருந்ததில்லை.

அன்று அவரை சம்மதிக்க வைக்க பேசிவிட்டாலும், அவளுக்கும் உள்ளுக்குள் அந்தக் கலக்கம் இருக்கவே செய்தது.

அவளது தந்தைக்கோ சொல்லவே வேண்டாம்! ஒரே மகள்!  வாழ்வில் அவளைத் தவிற வேறு எதுவும் பெரிதில்லை , அவளைத் தாண்டி அவருக்கு வேறு எதுவும் தெரிந்ததுமில்லை. அவளுக்குச் சமைப்பது முதல் துணி துவைத்துப் போடுவது வரை அனைத்தையும் செய்தவர், இன்று திடீரென அவளைப் பிரிவது தன் இதயத்தில் பாதி பிரிந்து செல்வது போல ஆனது.

இருந்தாலும் அவளது விருப்பம் ஒன்றே தனக்கு முக்கியம் என்று தான் இத்தனை தூரம் அவளோடு வந்து நிற்கிறார்.

கனத்த மனதுடன் இருவரும் வளாகாத்தின் வாயிலில் நிற்க, அங்கிருந்த வாட்ச்மேனிடம் வாகீஸ்வரனைப் பார்க்கவேண்டும் என்றனர்.

அவன் ஒரு கட்டிடத்தினைக்  கை காட்டிவிட்டு மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான்.

அவ்விடத்திற்குச் சென்று உள்ளே எட்டிப் பார்க்க, யாரும் தென்படவில்லை.

தூரத்தில் ஒரு பெண் மட்டும்  வேகமாக நடந்து வருவது தெரிய இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அது நம் வந்தனா தான். வாகீஸ்வரன் தான் அனுப்பி வைத்திருந்தான். இவர்களை நெருங்கியதும் ,

“ மிஸ் இயல் ?!” என்று சந்தேகமாகக் கேட்க,

“ எஸ் “

“ ஐ அம் வந்தனா, ஒர்கிங் வித் மிஸ்டர் வாகீஸ்வரன். வாங்க போலாம்” மலர்ந்த முகத்துடன்  கை குலுக்க ,

அவளை மிகவும் பிடித்தது இயலுக்கு.

கூட ஒரு பெண்ணும் வேலைப்பார்க்கிறாள் என்பது தெரியவே திருக்குமரன் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“ இது என் அப்பா. சார்-அ பார்க்கணும்னு சொல்றாரு “ தயங்கி தயங்கி இயல் சொல்ல,

“ வணக்கம் மா “ என்பதோடு நிறுத்திக் கொண்டார் திருக்குமரன்.

“ ஓ! யூஷுவலா அவர் யாரையும் பார்க்க மாட்டாரு , கொஞ்சம் மூடி டைப் , சரி வாங்க கேட்டுப் பார்க்கலாம்” அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

வேலைக்குச் சேர்வதற்கு அப்பாவையும் கூட்டி வந்திருப்பதைப் பார்க்க வந்தனாவிற்கு ஆச்சரியமாக  இருந்தது. அவளின் பெற்றோர் இப்படி கைக்குள் வைத்து அவளை வளர்க்க வில்லை தான் அதே சமயம் அவளை கண்காணிக்கவும் தவறியதில்லை.

தமிழ்நாட்டில் இப்படித் தான் வளர்ப்பார்கள் என்று அவளே நினைத்துக் கொண்டாள்.

அங்கே ஆகாஷ் மட்டும் அமர்ந்து சில கற்களில் ஒரு அமிலத்தை ஊற்றி துடைத்துக் கொண்டிருந்தான். அந்த அறையை சுற்றிப் பார்த்து பிரமித்தாள் இயல். சிறிய அறையாக இருந்தாலும் அதில் உலகத்தின் செய்திகள் அனைத்தும் அடங்கியது போலத் தோன்றியது அவளுக்கு.

சுவர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த பேப்பர் கட்டிங், டேபிள் முழுதும் இருந்த சிறு சிறு கற்கள், பழைய புத்தகங்கள், பரிசோதனை செய்ய தேவையான சில அமிலங்கள், பழைய டேபிள் லாம்ப் என அனைத்தையும் ஒரு நிமிடத்தில் மனதில் பதித்துக் கொண்டாள். அறையில் நிறைந்திருந்த அந்தப் பழைய வாசனை அவள் மனதில் சந்தோஷத்தைப் பொங்கி வழியச் செய்தது.

சில வாசனைகள் நம் உள்ளத்தை நிறைப்பதுண்டு. அதே போன்ற நிறைவைப் பெற்றாள் இயல்.

“ ஹே ஆகாஷ் , ஹெட் எங்க?” மெதுவாக அவன் அருகில் சென்று வந்தனா கேட்க,

அவளை நிமிர்ந்து பார்த்தவன் , பின்னால் இருந்த இயலையும் பார்த்தான்.

“ ஹாய், வெல்கம் இயல்” சாதாரணமாகக் கூற,

“ ஹலோ” மெதுவாகவே பதில் அளித்தாள் இயல்.

“ இது இயலோட அப்பா, ஹெட் – அ பார்க்கணுமாம்” வந்தனா சொல்ல,

“ வணக்கம் அங்கிள். அவர் ஒரு முக்கியமான வேலையா இருக்காரு. என்கிட்டே சொல்லுங்க நான் சொல்லிக்கறேன்” அழகாக கை குவித்து அவன் வணக்கம் சொல்ல, அவனது பேச்சும் அவனது செயல்களும் நல்ல அபிப்பிராயத்தை அவன் மேல் விதித்தது.

“ இல்லப்பா, முதல் முதலா அவள வெளில வேலைக்கு அனுப்பறேன். அதான் எல்லாரும் எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்னு. … “ இழுத்தவர் , “நீங்க தப்பா நினைக்காதீங்க” என்று முடித்தார்.

“ இதுல ஒன்னும் தப்பில்லை அங்கிள். நாங்க நாலு பேர் தான் இந்த டீம்ல, நான் ஆகாஷ். இவ வந்தனா, அப்புறம் ஹெட் , இப்போ புதுசா இயல் எங்களோட சேரப் போறாங்க. நானும் இவளும் கிளாஸ் மேட்ஸ்.நாங்க அமெரிக்கா லேந்து எங்க ஹெட் கூட வந்தோம். “ அவன் முடிக்க,

திருமுருகனுக்கு  சற்று திருப்தி அளித்தாலும், அந்த வாகீஸ்வரன் கண்ணில் படுவானா என்றே தேடிக்  கொண்டிருந்தார். அவரது கண்கள் ஆகாஷைக் கண்டாலும், கருத்து இங்கில்லை என்பது வந்தனாவிற்கு நன்றாகவே புரிந்தது.

“ ஒரு நிமிஷம் இருங்க , நான் கூட்டிட்டு வரேன்”

கதவை தட்டிய பிறகு உள்ளே செல்ல ,

அங்கே அறைக்குள் தனது லேப்டாப்பில் மூழ்கி இருந்த வாகீசனை அழைத்தாள்.

“ ஹெட், இயல் இஸ் ஹியர். அவங்க அப்பா உங்களைப் பார்க்கணும்னு வெய்ட் பண்றாங்க”

முதலில் இயல் என்றதும் அவனுக்குள் ஒரு சிறு ஆவல் எழுந்தாலும், ‘இது என்ன அவளது அப்பாவைப் பார்ப்பது! நான் என்ன ஸ்கூல் ‘ஹெச் எம்’மா ‘ என்ற சலிப்பும் எழுந்தது.

இருந்தாலும் வயதில் பெரியவர் என்பதால் மரியாதைக் கொடுக்க எண்ணி, எழுந்து வந்தான்.

அதற்குள் அங்கே ஆகாஷ் அவளது ஊர், பள்ளி , காலேஜ் அவள் செய்த ப்ராஜெக்ட் என அனைத்து தகவலையும் வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஹ்ம்ம்” சிறு கனைப்புடன் அங்கே வர, சற்றே ஒதுங்கி நின்றான் ஆகாஷ்.

ஆறடிக்கும் மேல் விரைப்பான நடையுடன் ,கத்தி போன்ற பார்வை கொண்ட  ஒரு இளைஞனை கண்டதும் இயலுக்கு சர்வமும் ஒடுங்கியது போல ஆனது.

திருக்குமரனுக்கோ , அவன் சிறு வயதாகத் தோன்றினாலும் ஏனோ அவன் மேல் ஒரு பெரிய மரியாதை தானாகவே வந்தது.

அவன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிறு தலையசைப்பு மட்டும் தான்.

“ வணக்கம் தம்பி.” என்று ஆரம்பித்தவர், அவனது கண்களைப் பார்த்ததும், தான் சொல்ல வந்தது எதையும் சொல்ல முடியாமல் தவித்தார்.

‘என்ன சொல்வது? என் பொன்னை பத்திரமா பார்த்துக்கோங்க என்றா? இது என்ன பால்வாடி ஸ்கூலா? அவள் வேலைக்கு வந்திருக்கிறாள்! அங்கு வந்து இதைப் போன்று பேசினால் ,இயலைத் தான் கிண்டல் செய்வார்கள் என்று மனதில் படவே எதையும் சொல்லாமல்,

“ வேலை செய்யும் இடம் எங்க இருக்குன்னு பாத்துட்டு உங்களை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுப் போகலாம்னு வந்தேன் தம்பி, நான் கிளம்பறேன்.” அதற்கும் வெறும் தலையசைப்பு மட்டும் தான் பதிலாக வந்தது.

அவரும் மற்றவர்களிடம் விட பெற்றுக் கொண்டு, இயலிடம் ஹோட்டலில் காத்திருப்பதாச் சொல்லி விட்டுச் சென்றார்.

இயல் அவனின் அந்த ஆளுமையைக் கண்ட திகைப்பிலிருந்தே வெளியே வரவில்லை. தனக்கு மெயில் அனுப்பியவர் குறைந்தது ஒரு நாற்பது வயது, ஒரு மூக்குக்கண்ணாடி , ஆங்காங்கே நரைத்த தலை  என்று தான் எதிர்ப்பார்த்தாள்.

ஆனால் இவ்வளவு நேர்த்தியாக உடையணிந்து , ஸ்டைலாக சிறிதும் யோசிக்கவில்லை.

‘தான் படிக்கும் சில நாவல்களில் வரும் ஹீரோ இப்படித் தான் இருப்பானோ! விறைப்பாக ,உயரமாக ! யோசனையில் இருந்தாள்.

வாகீசனோ ஆகாஷிடம் சைகையில் ஏதோ சொல்லிச் செல்ல, அவனும் “ஓகே ஹெட் “ என்றான்.

‘இது என்ன சயன பாஷையா!  அவன்(ர்) பேசவே மாட்டானா(ரா)!?’ குரல் எப்படி இருக்கும் என்று கூட தெரியவில்லையே! ஒரு வேளை வாலி படத்துல வர அண்ணன் அஜித் மாதிரி டெஃப் அண்ட் டம் ஆ’ ஒரே மர்மமா இருக்கே’ ….

இயல்… ஹெட் உங்கள உள்ள வர சொன்னங்க” அவளது முகத்திற்கு முன்பு கையசைத்து ஆகாஷ் கூற, அப்போது தான் அவன் எப்போதோ சென்றுவிட்டான் என்பது புரிந்தது.

“ நீங்களும் வரீங்களா?” இருவரையும் பார்த்து இயல் கேட்க,

“ நாங்க எதுக்கு? “ வந்தனா புரியாமல் கேட்க,

“இல்ல… அது அவர் ஏதோ சைன் லாங்குவேஜ்ல பேசுன மாதிரி இருந்துச்சு, எனக்கு அதெல்லாம் புரியாது ,இனிமே கத்துக்கறேன் .. சோ  கொஞ்சம் அது வரைக்கும் ஹெல்ப் பண்ணுங்க ..ப்ளீஸ்” இருவரையும் பார்த்துக் கெஞ்ச ,

ஆகாஷுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வந்தனாவும் சிரித்து விட , எதற்கு என்று இயலுக்குப் புரியவில்லை.

“ ஹெட் அனாவசியமா பேச மாட்டாரு தான், ஆனா அவரு பேசவே மாட்டாருன்னு அர்த்தமில்ல, பேச்செல்லாம் வரும்” வந்தனா சொல்ல,

“அப்பாடா! நான் தப்பிச்சேன் , அதை வேறு கத்துக்கணுமோ ன்னு பயந்துட்டேன்” இதயத்தில் கை வைத்துச் சொல்ல,

“ சரி லேட் பண்ணாம உள்ளே போய் கேளுங்க “ அனுப்பி வைத்தனர் இருவரும்.

உள்ளே சென்றதும் அவன் மட்டுமே அங்கிருந்த ஒரே ஒரு சேரில் அமர்ந்திருந்தான்.

“ குட் மார்னிங் சார்”  அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் இப்படிச் சொல்ல,

நிமிர்ந்து அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவனது பார்வை தான் ஏதோ தப்பு செய்துவிட்டோமோ என்று யோசிக்க வைக்க,

உடனே மீண்டும் “ குட் மார்னிங்”  நெற்றியில்  கை வைத்து ஒரு முறை சொல்ல,

அவளது செய்கை அவனுக்கு சிரிப்பைத் தந்தது. அதை மனதிற்குள் மட்டுமே செய்தவன், தனது தாடையில் கை வைத்து , சேரில் வாகாக சாய்ந்து கொண்டு அவளைப் பார்த்தான்.

“ ஸ்டில் இன் காலேஜ் மோட்?! .. கால் மீ ஹெட் அண்ட் அந்த கைய இறக்கு”

நாக்கைக் கடித்துக் கொண்டு , உடனே அதைச் செய்தவளுக்கு, முதல் நாளே பல்ப் வாங்கிவிட்டோம் என்பது நன்றாகவே புரிந்தது.

“ குட். நவ் கெட் திஸ் கிளியர்”. தன் இடத்திலிருந்து எழுந்து நடந்தான்.

“ என்னோட ப்ராஜெக்ட் எனக்கு ரொம்ப முக்கியம். அதுல எந்த தப்பும் வரக் கூடாது. ஆகாஷ் அண்ட் வந்தனாவுக்கும் இனிமே வேலை ஜாஸ்தி இருக்கும். அதுனால எங்களுக்கு இன்னொரு ஆள் தேவை பட்டுச்சு . அதுக்கு தான் இந்த வேலை.  சோ நீ எனக்கும் அவங்களுக்கும் ஹெல்பர். இப்போதிக்கு” அதில் அழுத்தம் கொடுத்து நிறுத்தியவன், மேலும் தொடர்ந்தான்.

“ உன்னோட ப்ரோஜெக்ட்ஸ் கொஞ்சம் இம்ப்ரசிவா இருக்கு . சூன், உன்னோட இன்வால்வ்மென்ட் அண்ட் கெபாசிட்டி பார்த்து அதுக்கு தகுந்த வொர்க் தருவேன். உன்னோட டாஸ்க் என்னனு வந்தனா அண்ட் ஆகாஷ் சொல்லுவாங்க, இப்போ கொஞ்சம் காஃபி ப்ளீஸ்”

அவனது அந்தக் குரல் அவளது இதயத்தில் எங்கோ ஒலிப்பது போல இருந்தது. நெற்றியில் வியர்வை பூத்தது. அவனையே பார்த்தபடி நிற்க,

அவள் நிற்பதைப் பார்த்து அவன் அருகே வந்து சொடக்குப் போட, ஆறடியில் அவனை அருகே கண்டவள்  தடுமாறி பின்னால் நகர ,

உடல் சிலிர்த்து “ ஒ..ஒ..ஓகே ஹெட்” என்றுவிட்டு உடனே அங்கிருந்து சென்றாள்.

வெளியே வந்ததும் ஏதோ இத்தனை நேரம் மூச்சைப் பிடித்து வைத்திருந்தது போல பெருமூச்சு விட்டாள்.

ஆகாஷ் , “என்ன ஆச்சு , ஏதாவது மூட்டை தூக்குனியா, இப்படி மூச்சு வாங்கற “ எனவும்,

“ அவர பாத்தாலே ஏதோ பண்ணுது” மொட்டையாகக் கூறிவிட்டாள்.

“ ஓஓஓஓ!!!!!!!” வந்தனா ஓ போட ,

அப்போது தன் வார்த்தை விளங்க, “ இல்ல இல்ல, அந்த ஓ க்கு வேலை இல்ல, கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதை சொல்ல வந்தேன்” இயல் விளக்கம் கொடுக்க,

“ ஓகே ஓகே “ இருவரும் கோரஸ் பாடினர்.

“ ஐயையோ!” தலையில் கை வைத்து இயல் சொல்ல,

“ என்ன !?” இருவரும் பதற,

“ காஃபி கேட்டாரு!”

“ அங்க இருக்கு பாரு காஃபி மிசின்” ஆகாஷ் கை காட்ட,

“ ப்ளீஸ் ஹெல்ப், எனக்கு காபி போடத் தெரியாது” சிறு பிள்ளை போல விழித்தாள்.

“ என் இனமடி நீ” வந்தனா அவளது தோளில் கை போட, பின் இருவரும் சிரித்துக் கொண்டே ஹைஃபை கொடுத்துக் கொண்டனர்.

அவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ஆகாஷ்.

“ யம்மா , என்னை ஹெல்பர் ஆக்கிடாதீங்க, வாங்க வந்து கத்துக்கோங்க, அடுத்த முறை நீங்க தான் போடணும்” கையெடுத்துக் கும்பிட்டு அவளை அழைத்துச் சென்றான்.

அதை எடுத்துக் கொண்டு போய் வாகீசனின்  டேபிளில் வைத்தாள்.

கப்பின் ஹாண்டில் அவன் எடுப்பதற்கு வாகாக இல்லாமல் எதிர்புறம் இருக்க, அந்தக் கப்பைப் பார்த்துவிட்டு அவளை முறைத்தான் .

அவள் புரியாமல் நிற்க,

“ ஹாண்டில் எனக்கு லெஃப்ட் சைடு வைக்கணும். இட்ஸ் எ பேசிக் திங்” என்று வார்த்தைகளை கடித்துத் துப்ப, அவளுக்குக் கொடுத்த முதல் வேலையே சரியில்லாமல் போனதை நினைத்து அழுகை வந்தது. உதடு துடிக்க நின்று கொண்டிருந்தாள்.

வாகீசன் அவளைப் போகுமாறு சைகை செய்ய, கண்ணில் நீர் துளிர்க்க வெளியே வந்தாள்.

 திருவாசகம் 

 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

 

 

 

 

 

error: Content is protected !!