LogicIllaMagic11

மேஜிக் 11

 

“நான் இப்போ எங்க அப்பா ஹாஸ்பிடல்ல வேலை பண்றேன். உனக்குத்தான் தெரியுமே. அது என் தாத்தா ஒரு சின்ன க்ளினிகா தொடங்கி எங்கப்பா இப்போ பெரிய ஹாஸ்பிடல்லா உயர்த்தி இருக்கார். நான் அங்க வேலை பாக்குற பல டாக்டர்களின் ஒருத்தன் அவளோ தான்.

வெளியிலிருந்துபார்க்கும்போது நான் ஒரு ஹாஸ்பிடலுடய வருங்கால சேர்மேன்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை அப்பாவுடைய உழைப்பை, எந்த முயற்சியும் செய்யாம அப்படியே அனுபவிக்கும் ஒரு சாதாரண பையன்.

எனக்கு அப்படி இருக்கக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.

நான் ஏதாவது சாதிக்கணும். என் பங்கிற்கு ஏதாவது செய்யணும். நிரஞ்சன் இன்னாருடைய பையன் அதுனால பிரபலமான மருத்துவன்னு இல்லாம சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செஞ்ச மருத்துவனா இருக்கணும்.

இப்படி நிறைய திட்டங்கள் வச்சுருக்கேன்.

ஆனா எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு என்கிட்ட மெல்ல மெல்லப் பொறுப்புகளைக் கொடுக்க அப்பா நினைக்கிறார்.

எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் விருப்பமில்லை.

எவளோ சொல்லியும் கேட்காமல் அவர் நண்பருடைய பெண்ணுக்கும், அதான் வைஷாலிக்கும் எனக்கும் கல்யாணம் செய்றேண்ணு அவர் வாக்கு கொடுத்துட்டு, அப்புறம் தான் எனக்கு விஷயத்தையே சொன்னார். நான் எவளோ மருத்தும் அவர் கேட்கலை.

என்னால் ஒரு நிலைக்கு மேல அவர்கிட்ட வாக்குவாதம் பண்ண முடியாம வேண்டா வெறுப்பாய் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.

அப்போ தான் நீ என் வாழ்கையில வந்த. ஏதோ என்னை அறியாமல் பொய்யும் சொல்லிட்டேன்.

நேற்று வரை எனக்குள்ள சும்மா உன்னைச் சீண்டுறது , கோவத்தில உங்க வீட்ல, மேல மேல பொய் சொல்றதுன்னு போச்சு.

என் அப்பா நேற்று என்கிட்ட வறுத்தபட்டப்போ கூட எனக்கு உன்மேல் கோவம் தான் வந்தது .” ஏனோ தானே அமைதியானான்.

அவன் சொன்னவற்றை உள்வாங்கிய நந்தனா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருக்க, நிரஞ்சன் தானே தொடர்ந்தான்.

“இன்னிக்கி தான் பீச்ல ஏனோ திடீர்னு, நான் சொன்ன பொய்யால், நீ எவளோ சங்கட பட்டிருப்பேன்னு யோசிச்சு பார்த்தேன்…சாரி மா” வருத்தமான குரலில் அவன் கூறி அமைதியானான்.

“பரவால்ல விடுங்க நீங்க உணர்ந்ததே போதும். இனி உண்மையைச் சொன்னா போச்சு. ஆமா நீங்க எதுக்கு இந்த பொய்யைத் தொடர சொல்றீங்க ? அது இன்னும் இன்னும் பெத்தவங்களுக்கு சங்கடம் தானே ?” தன்னை உறுத்திக் கொண்டிருந்த விஷயத்தை நேரடியாகக் கேட்டாள்.

“நீ சொல்றது புரியுது ஆனா சரியோ தப்போ இந்தப் பொய் என் கல்யாணத்தை நிறுத்த உதவியா இருக்கும் போல இருக்கு. கொஞ்ச நாள் எப்படியாவது நான் எங்க கல்யாணத்தை நிரிதிடுவேன்!

கண்டிப்பா நான் ஒரு பெண்ணை விரும்பாரேன்னு தெரிஞ்சு எங்கப்பா வைஷுவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை வற்புறுத்தமாட்டார். அதான்.”

‘ நீ தெரிஞ்சு தான் பேசுறியா ? ‘

” சார் உங்க திட்டத்தில் டைனோசார் போற அளவுக்கு ஒட்டை இருக்கே அதை யோசிச்சுப்பாருங்க. ” அவள் குற்றம் சாட்ட

“அதென்ன ?”

“சார் வைஷாலிய கல்யாணம் செய்ய வேண்டாம் சரி. ஆனா அவங்களுக்கு பதிலா நான் இருப்பேனே. கல்யாணம் நடக்கிறது மாறாதே! இதுக்கு நேரா புரியவைக்கப் பார்க்கலாம் ல ?”

இதைக்கேட்டு உறக்க சிரித்தவன் “பேபி இதைக் கூடவா நான் யோசிக்க மாட்டேன் ? அதுக்கும் ஐயாகிட்ட சூப்பர் திட்டம் இருக்கு !”

‘மொதல்ல பிளானை சொல்லு நான் சொல்றேன் சூப்பரா இல்லையான்னு.’

“அது என்னவோ ?”

“பேபி நீ இப்போதான் காலேஜ் போற. நீ மேல படிக்கணும்னு நினைக்கிற. நானும் என் குறிக்கோளை அடையனும். அதுனால இப்போதிக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்வோம்.

பின்னாடி ஏதோ காரணத்தால் பிரேகப்பாகி நாம பிரிந்ததா நம்ப வைப்போம்.

நீ அப்புறம் யாரை வேணுமோ கல்யாணம் பண்ணிக்கோ நானும் கல்யாணம் பண்ணிகாம ஃப்ரீயா இருப்பேன். தட்ஸ் ஆல் ” பெரிய திட்டத்தைத் தீட்டியது போலப் பெருமையாய் அவன் முடிக்க

நந்தனா முற்றிலும் குழம்பி விட்டாள்.

‘ நான் மேல படிக்கப் போறேன்னு எப்போடா சொன்னேன். இப்போ படிக்கிறதையே முடிபேனான்னு தெரியலை. நீ படிக்க விட்டால்தானே ? லவ்வே ஓவர் இதுல ப்ரேக் அப் ? அய்யோ கொலையா கொல்றான்.’

“எனக்கு யோசிக்க அவகாசம் வேணும்.பிளீஸ்.”

“நோப்பிராப்ளம் பேபி. டேக் யுவர் டைம்” புன்னகையுடன் சொன்னவன் காரைச் செலுத்திக் கொண்டிருக்க

“சார்… ஒரு விஷயம் சொல்ல மறந்துகொண்டேன்.” தயக்கத்துடன் அவள் துவங்க

“சொல்லுமா ”

“அது உங்க தங்கை என்னை யார்னு கேட்டாங்க…”

“ஓஹ்! சரி எதிர்பார்த்தது தான். நீ என்ன சொன்ன?” அவன் குரலில் மெல்லிய பதற்றம்.

“நான் என்ன சொல்றதுன்னு தெரியலை. எல்லார் கிட்டவும் சொன்னது போல உங்க லவ்வர்ன்னு… சொல்லிட்டேன்” சொன்னவள் குரலில் நடுக்கம் எங்கே கோவபடுவானோ என்று.

“வெரி குட். தாங்க்ஸ் டா நான் ஏதோ சொதப்பி இருப்பியோன்னு பயந்துட்டேன்”

“உங்களுக்கு கோவம் இல்லையா ?”

“எதுக்கு கோவபடனும்? நான் உதவி இபோதான் கேட்டேன். ஆனா நீயே உதவி பண்ண ஆரம்பிச்சுட்ட அதுவும் நேத்து லேந்தே !”

நந்தனாவிற்கு சொல்வதென்றே தெரியவில்லை. மௌனமாகவே மீதி பயணத்தைக் கழித்தாள்.

வீட்டின் வாயிலில் அவளை இறக்கிவிட்ட நிரஞ்சன் “பேபி எனக்காகக் கொஞ்சம் யோசிச்சு சொல்லு ப்ளீஸ்”

“ம்ம் ட்ரை பண்றேன் சார்”

“குட் நயிட் ” விடைபெற்றான்.

அன்றிரவு ஏனோ நிம்மதியாக உணர்ந்த நிரஞ்சன் உடனே தூங்கிவிட, நந்தனா தான் சிறிதும் தூக்கமின்றி தவித்துக்கொண்டிருந்தாள்.

மடியில் தலையணையை வைத்துக்கொண்டு கைப்பேசியில் நிரஞ்சனின் வாட்ஸாப் ப்ரொபைல் புகைப்படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள்

‘நீ என் லவ்வரா? உனக்கு என் மேல லவ்வுன்னு சொன்னா, உங்க வீட்ல எப்படி நம்புவாங்க?

உங்க வீட்ல நம்பினாலும் எங்க வீட்ல எப்படி சம்மதிப்பாங்க?

இதுல அந்தப் பொண்ணு வைஷாலி பாவம் அவ என்ன நினைப்பா?’

மனம் அவனைக் கேள்வி கேட்க ஏனோ தானே அவனுக்காக விளக்கமும் சொல்லத் துவங்கினாள்

‘இதெல்லாம் ஒரு நல்ல நோக்கம் இருக்கவே தானே செய்றான்? ஏதோ குறிக்கோள் வச்சுருக்கான் அதை அடைய ஏதோ என்னால் ஆன உதவியைச் செய்ய போறேன். ஒரு வகை பொதுச் சேவை’

கேள்விகளும் பதில்களும் ஓயாமல் இரவெல்லாம் தொடர மறுநாளும் குழப்பம் மாறாமல் இருந்தாள்.

“அம்மா நான் இன்னைக்கு காலேஜ் லீவ் போட்டுக்கறேன் ஒரே தலை வலியா இருக்கு பிளீஸ் மா” கெஞ்சி சம்மதம் வாங்கியவள் அன்று முழுவதும் யாருடனும் பேசாமல் தன் அறையில் முடங்கி இருந்தாள்.

வாயைத் திறந்தால் மூடாமல் பேசித் தள்ளும் மகளின் அமைதி பெற்றோரைப் பெரிதும் வாட்டியது.

***

சனிக்கிழமை நந்தனாவை பூசாரியிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்து சுகன்யா, மயூரா இருவரும் காலை அவளின் வீட்டிற்குச் சென்றனர்.

எப்பொழுதும் ஜீன்ஸ் டாப்ஸ் எனச் சுற்றும் தோழிகள் இன்று அடக்க ஒடுக்கமாகப் பாவாடை தாவணியில் இருப்பதைக் கண்ட நந்தனா,

“என்னங்கடி விஷேசம், ஒரே அடக்கம் ஒடுக்கம்?” தோழிகளுக்குத் தண்ணீர் கொடுத்தபடி கேட்டாள்.

திரு திருவென விழித்த மயூரா கேள்வியாய் சுகன்யாவை பார்க்க, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்ற ஜாடை செய்த சுகன்யா,

“அது ஒண்ணுமில்லை, இன்னிக்கி மயூவ பெண் பாக்க வராங்க அதான்!” புன்னகையுடன் சொல்ல

நீரைக் குடித்துக் கொண்டிருந்த மயூரா புறைகேரி “ஏண்டி ?” என்று பதற,

“ஏன் பதர்ற?” நந்தனா சந்தேக பார்வையுடன் கேட்க

“இல்ல அவ உன்கிட்ட சொல்லாம சர்ப்ரைஸ் கொடுக்க நெனச்சா அதான்…” சுகன்யா சமாளிக்க,

“எனக்கு எதுக்கு சர்ப்ரைஸ்? லூசா நீ ” மயூராவின் தலையில் செல்லமாகக் கொட்டிய நந்தனா

“சூப்பர்டி. வாழ்த்துக்கள்! ஆமா எப்போ வராங்க? நீ எதுக்கு இங்க வந்த ? நீ வீட்ல இருக்க வேண்டாமா?”

கேள்விகளை நந்தனா அடுக்க, மயூரா பயம் தலைக்கேற , “நீ வரியா இல்லையா ? சும்மா கேள்வி கேட்டிகிட்டு ! ”

நந்தனாவோ “உன்னைப் பெண் பாக்க நாங்க எதுக்கு வரனும்” கேட்டபடி கைப்பேசியை நோண்ட

சுகன்யா அவசரமாய் “அவ பயப்படுறாடா , அதான் துணைக்கு…இதெல்லாம் என்ன கேள்வி? போப்போய் ரெடி ஆகி வா. பாவாடை தாவணி போட்டு வா. ”

கோபமான நந்தனா “அடியே அவளைப் பெண் பாக்க நாம எதுக்கு பாவாடை தாவணி போடணும் ? கேனத்தனமால்ல இருக்கு ”

சுகன்யா அவசரமாய் “அது வந்து…நாம இப்போ கோவில் போயிட்டு, ஒரு அர்ச்சனை பண்ணிட்டு, மயூ வீட்டுக்குப் போகலாம். அதான் இந்த டிரஸ். சீக்கிரம் வா”

“என்னவோ போங்க எனக்கு ஒன்னும் புரியலை ஆனால் வந்து தொலைக்கிறேன்”

தன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தவள், கண்ணாடியின் முன் தலைவாரிக்கொண்டே ‘இதுங்க முழியே சரி இல்லை. எதையோ மறைக்குதுங்க நந்து பார்த்துச் சூதானமா நடந்துக்கோ’ மனம் சந்தேகிக்க

எப்போவும் போல நல்லதையே யோசிக்கும் மற்ற மனம் ‘சேச்சே அப்படிலாம் இருக்காது. பாவம் மயூ வீட்ல இவளோ சீக்கிரம் கல்யாணம் செய்யப் பாக்குறாங்க’

கெக்களித்த மனம் ‘ஹலோ மேடம் நீங்க அந்த டாக்டர் பேச்சைக் கேட்டா உங்களுக்கும் இந்த வருஷமே கல்யாணம் தான்’ என்று எச்சரித்தது.

தலையை ஒருமுறை உலுக்கி கொண்டவள் ‘இன்னிக்கிதான் தலைவலி கொறஞ்சு இருக்கு, இப்போ எதுக்கு அவனைப் பத்தி யோசிச்சுகிட்டு?’ தயாராகி கீழே சென்றவள் தோழிகளுடன் கிளம்பினாள்.

அவர்கள் கோவிலை அடைந்த நேரம் உச்சி வெய்யில் மண்டையை பிளக்க “என்னடி இது யாரானா இப்படி உச்சி வெயில்ல கோவிலுக்கு வருவாங்களா? ஆமா என்ன யாரையுமே காணும்?” சுற்றும் முற்றும் பார்த்தபடி நந்தனா கேட்க

“அது கோவிலுக்குப் பின்னாடி பக்கம்தான் பூஜை ஏற்பாடு பண்ணி இருக்காங்க, வாப்போகலாம்” மயூரா நந்தனாவிடம் விறைப்பாகச் சொன்னாலும் அவளுக்கு உள்ளூர உதறல்தான்.

சுகன்யாவிற்கோ தான் செய்வது சரியா தவறா என்ற குழப்பமும், என்ன ஆகுமோ என்ற பயமும் அவளை மௌனமாகவே இருக்க வைத்தது.

தோழிகளைத் தொடர்ந்து கோவிலின் பின்புறம் சென்ற நந்தனா மேலும் நகராமல் நின்றுவிட்டாள்.

பெரிய ஆல மரத்தடியில் பூசாரி ஒருவர் அமர்ந்து எதோ மந்திரித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த 2 பெண்கள் இவர்களைக் கண்டதும்

“வாங்க, வந்து இந்த இடத்துல உட்காருங்க” என்று ஒரு இடத்தைக் காட்ட, தோழிகள் மூவரும் அங்கு அமர்ந்து கொண்டனர்.

“யாருக்கு புள்ள மந்திரிக்கணும்?” பூசாரி கேட்க நந்தனா மயூராவை கைகாட்ட மயூராவோ நந்தனாவை கைகாட்ட சுகன்யாவோ மிரண்ட்ஷியுடன் பூசாரியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ரெண்டு பேருக்குமா ?” பூசாரி கேட்க

“இல்ல சாமி இவளுக்குத்தான்” மயூரா நந்தனாவை காட்டி சொல்ல

“ஹே உன்ன பொண்ணு பார்க்க நான் ஏண்டி பரிகாரம் பண்ணனும்?”

“அப்படிதான்டி” மயூரா கடுகடுக்க

“என்ன நொப்படி தண்டி! விட்டேனா தெரியும்” தோழியின் தொடையை அடித்தாள் நந்தனா.

“ஹே மோகினி ஒன்னும் தெரியாத பிள்ளை மேல ஏன் கோவத்தை காட்டரே” பூசாரி மிரட்ட

“மோகினியா?” விழித்தவள் மயூராவை பார்த்து ‘இது யாரடி லூசு?’ என்று கேட்க

“ஹேய் அங்க என்ன மெரட்டுறே? இந்தா பாரு…நீ யாரோ ஒழுங்கா உண்மையா சொல்லிரு! இல்ல உன்னய ப்பிடிச்சு இந்த மரத்துல கட்டிடுவேன்!” பூசாரி கண்கள் விரிய மிரட்ட

“நீங்க யாரோன்னு நெனச்சு, எங்க கிட்ட பேசுறீங்க. நாங்க இவளுக்குப் பரிகாரம் செய்ய வந்தோம்” என்றவள் “அடியே சொல்லேண்டி” மயூராவை இடிக்க

“இவ தான் சாமி நான் சொன்ன பொண்ணு, கொஞ்ச நாளாவே இவளை எதோ ஒன்னு பிடிச்சு ஆட்டுது” மயூரா மிரண்டபடி பூசாரியிடம் சொல்ல

“என்னது பிடிச்சு ஆட்டுதுதா? என்னடி உளர்றே?”

பூசாரி கோவமாய் “நீ என்ன பாரு! என் கேள்விக்குப் பதில சொல்லு! யார்நீ ?”

‘நா யாரு எனக்கேதும் தெரியலையே…அத கேட்டா நான் சொல்லா வழி இல்லையே’ மனதில் எனோ சட்டெனப் பாடல் தோன்ற சிரித்துவிட்டாள் நந்தனா. அதில் கோவமான பூசாரி

“ஒழுங்கா சொல்லிரு நீ எதுக்கு வந்திருக்க?”

“ரெண்டு பரதேசி நாய்ங்க வரச்சொன்னதால வந்தேன்”

“ஏய் மோகினி ! ஏன் இந்த பிள்ளையைப் பிடிச்சிருக்கே?”

“மோகினியா? எந்த பிள்ளையைப் பிடிச்சுருக்கேன்?” நந்தனா குழப்பமாக அவரைப் பார்த்துக் கேட்க,

“ உனக்கு என்ன வேணும்? என்ன கொடுத்தா இந்தப் புள்ளய விட்டுப் போவே?” பூசாரி கையில் விபூதியை எடுத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிப்பாடி ராகத்துடன் மிரட்ட

‘அடப்பாவிகளா நான் என்ன பேயா? பேய் ஒட்டவா என்னைக் கூட்டிட்டு வந்தீங்க? இருங்கடி வச்சுக்குறேன்!’ மனதில் கருவியவள்

“எனக்கு இங்க இருக்காளுகளே இதுக ரெண்டு பேரும் வேணும்! “ அவளும் பூசாரியை வம்பிழுக்க அவரைப் போலவே முன்னும் பின்னும் ஆடியபடி உக்கிரமாய் கண்கள் விரியா மயூராவையும் சுகன்யாவையும் பார்க்க

“ஆத்தி! நீ உசுர காவு கேட்கத்தான் வந்துருக்கியா ? ஐயோ ஐயோ சாமி என்ன காப்பாத்துங்க” மயூரா பதறியபடி எழ

சுகன்யாவோ அழத்துவங்கி விட்டாள் “ஐயோ மயூ நீ சொன்னப்போ நான் கேட்கலையே ! இவளுக்குப் பேயேதான் ! சாமி எங்களைக் காப்பாத்துங்க” அவளும் எழ

“ம்ம் எந்திரிக்க கூடாது! ம்ம்” பூசாரி மிரட்டத் தோழிகள் இருவரும் பயத்தில் கைகால் உதற அமர்ந்திருந்தனர்

“நீ பேயா ? பிசாசா? மோகினியா ? காட்டேறியா? சொல்லு…சொல்லு…”விபூதியைக் கையில் எடுத்து மந்திரித்து நந்தனாவின் மேல் எறிந்தார்!

‘அடப்பாவிகளா! என்ன வச்சு காமெடி பண்றீங்கன்னு பார்த்த…இருங்கடி உங்களைத் தெறிச்சு ஓட விடுறேன்’ முறைத்தவள்

தன் தலையை ஒருபுறமாகச் சாய்த்து பூசாரியைப் பார்த்து

“நான் காட்டேறி, ரத்த காட்டேறி!” ஈ என்று பற்களைக் காட்டி கடி கடியெனக் காற்றைக் கடித்தாள்

‘மவளே சாவு. எத்தனை பேய் படம் பார்த்திருப்பேன்’

“ம்ம் ம்ம்” முன்னும் பின்னும் முறைத்தபடி கண் இமைக்காது ஆடிக்கொண்டிருந்தாள் நந்தனா

“ஐயோ காட்டேறியா ஐயோ ஐயோ அய்யய்யய்யோ ஐயோ” மயூரா கத்த துவங்கி விட்டாள். சுகன்யாவிற்கு பயத்தில் பேச்சே வரவில்லை

“உனக்கு என்ன வேணும்? ம்ம் …” மறுபடி விபூதியை அவள்மேல் எறிந்தார் பூசாரி

‘நான் என்ன சாக்லேட் ஐசுகிரீமா கேட்கப் போறேன்? என்ன சொல்லலாம்? நல்ல டெரர்ரா ?’

“ம்ம் ம்ம்ம்” என்று ஆடிப்பாடி முறைத்திருக்க

மறுபடி கையில் விபூதியை எடுத்துத் தன் நெற்றியில் வைத்து மந்திரித்து மீட்டும் அவள்மேல் எரிய

“ஐயோ எரிகிறது எரியுது” விபூதி கண்ணில் விழ நந்தனா கத்த

“ம்ம் எரியுதா? அப்படிதான் எரியும் மரியாதையா வேண்டியதை கேளு!” பூசாரி மிரட்ட

மயூரா சுகன்யாவின் காதில் “ஐயோ பாருடி பேய் எப்படி அலறுது? சொன்னேன்ல இவரு சூப்பரா பேய் ஓட்டுவாருன்னு!”

இவர்கள் கிசு கிசு காதில் விழுந்ததுதான் தாமதம் , கோவமாய் அவர்கள்மேல் பாய்ந்தாள் நந்தனா.

“ஐயோ சாமி” என்று விழுந்தடித்துக் கொண்டு பூசாரியின் பின்னே ஓடி ஒளிந்து கொண்டனர் இருவரும்

“ஏய் உங்க ரெண்டு பேரையும் பிடிச்சு கடிச்சு…ஈஈஈ” பல்லை நர நறவெனக் கடித்தபடி நந்தனா எழ அங்கே இருந்த இரு பெண்களும் அவளை எழாமல் பிடித்து அழுத்த

‘ஹை சந்திரமுகி எபெக்ட் வரும் போல இருக்கே. லக லக லக’

“ம்ம் ம்ம் ம்ம்ம்” முன்னும் பின்னும் நந்தனா ஆடித் தோழிகளை முறைத்தபடி பற்களைக் காட்ட

“சாமி சாமி ஐயோ முறைக்குது” பூசாரியின் முதுகைப்பிடித்து மயூரா உலுக்க

“ஏய் புள்ள போங்க அங்கிட்டு “ பூசாரி மிரட்டியதால் மிரண்டு நந்தனாவை விட்டுச் சற்று தள்ளி அமர்ந்தனர்

“ஏய் காட்டேறி உனக்கென்ன வேணும்? ஆடா, கோழியா? “ பூசாரி மறுபடி விபூதியை

“அய்ய நான் வெஜிடேரியன்” நந்தனா பதற

“என்ன வெறியேறி கெடக்கியா?” பூசாரி மீண்டும் விபூதியை எடுக்க

“அம் வெஜிடேரியன்!” நந்தனா கத்தி சொல்ல

“ஆதான பார்த்தேன் இதனை முறை துண்ணூறு போட்டும் ஏன் பேயோடலைன்னு” எதையோ கண்டு பிடித்ததைப் போலப் பெருமையாய் மயூராவையும் சுகன்யாவையும் பார்த்தவர்

“என் கிட்டேந்து தப்ப முடியுமா? எப்படிக் கண்டு பிடிச்சேன் பாருங்க” என்று மீசையை முறுக்க

பெருமையாய் அவரைப் பார்த்த இருவரும் “சூப்பருங்க சாமி” என்று சிலாகிக்க

‘என்னத்த கண்டு பிடிச்சாராம்?’ நந்தனா யோசித்திருக்க

“இது வெளிநாட்டுக் கார காட்டேறி! வர்க்கிதெரியான் ஊரிலிருந்த வந்திருக்காம்!” பூசாரி சொன்னதுதான் தாமதம்

மயூரா சுகன்யா இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொள்ள

‘வர்க்கிதெரியான்? என்ன சொல்றாரு?’

“வே…ஜி…டே…ரி…. யன்..” நந்தனா உக்கிரமாகக் கத்த,

“இந்தா பாரு இங்குலீசு கார காட்டேறியே! ஒழுங்கா இங்கிருந்து ஓடிரு” கையில் சாட்டையை எடுத்துக் கொண்டார்

“ஐயோ!” என்று பயத்தில் அலறிய நந்தனா “நான் காட்டெரியுமில்ல ஒன்னுமில்ல நான் நந்தனா”

“அந்த புள்ளய விட்டுப் போன்னு சொல்றேன்ல” கோவமாக எழுந்த பூசாரி அவள்மேல் சாட்டையை வீசக் கையெடுக்க , பாய்ந்து அதைப் பிடித்துக்கொண்ட நந்தனா “சொன்னா கேளுங்க நான் நந்தனா? நம்புங்க. என்ன சொன்னா நம்புவீங்க என்னை எதுவும் பிடிக்கலைன்னு?” அவரை முறைக்க

“நீயே உன் வாயால காட்டேரின்னு சொன்றியே” சாட்டையை இழுத்துக்கொண்டார்

“ஐயோ நான் சும்மா கோவத்துல சொன்னேன். நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க சொல்லுங்க செய்றேன் . என்னை எதுவும் பிடிக்கலை” நந்தனா கெஞ்ச, தோழிகள் இருவரும் குழப்பமாய் அவளையும் பூசாரியையும் மாறி மாறிப் பார்க்க

“இந்தா இந்த கற்பூரத்தை ஆத்தா சன்னதியில ஏத்தி கோவிலை மூணு தரம் சுத்தி வரனும்” கற்பூரத்தை அவள் கையில் கொடுத்தார் பூசாரி.

அவர் சொன்னதைச் செய்து முடிக்கவும் திகைத்தபடி பார்த்திருந்தனர் அனைவரும்.

அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டாள் நந்தனா “ அம்மா எனக்கு எதுக்கு இப்படிலாம் நடக்குது? எல்லாரும் ஏன் என்னை இப்படி படுத்துறங்க? நீதான் எனக்குத் துணையா இருக்கணும் தாயே!”

அவள் அனைத்தையும் செய்துவிட்டு பூசாரியிடம் செல்ல

“இந்தா புள்ள அப்புறம் எதுக்கு காட்டேறினு பொய் சொன்னே?” என்று அவர் மிரட்ட,

“அவங்க ரெண்டு பேரும் பொய் சொல்லி என்ன இங்க கூட்டிட்டு வந்தாங்க, பேய்னு சொல்லவும் கோவத்துல அப்படி செஞ்சுட்டேன். மன்னிச்சுடுங்க!” அவள் வருந்த, தோழிகள் மூவரையும் கண்டபடி திட்டி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார் பூசாரி.

வீடு திரும்பும் வழியில் மெல்லத் தயங்கியபடி மயூரா “சாரிடி நந்து”

“ஒரு வார்த்தை பேசிறாதே கொலகாண்டுல இருக்கேன்” தலையில் உள்ள விபூதியைத் தட்டியபடி கண்கள் கலங்கச் சாலையைப் பார்த்தபடி சொன்னாள் நந்தனா.

“பிளீஸ் நந்து நாங்க எதுக்காக இப்படி செஞ்சோம்னு சொல்ல விடு அப்புறம் உன் இஷ்டம்…” என்ற சுகன்யா , நந்தனாவை பேய் பிடித்ததென்று நினைத்தது முதல் இன்றுவரை நடந்ததை அவர்கள் கண்பார்வையில் சொல்லத் துவங்கினாள்.

தான் நிரஞ்சனால் மண அமைதியின்றி தவித்தது தன் தோழிகள் மனதில் எப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைப் புரிந்துகொண்டவள் “என் மேலயும் தப்பிருக்கு. சாரி என்னை மன்னிச்சுடுங்க பா”

“இல்லைடி நானும் சுகுவும் உனக்கு நல்லது பண்றதா நெனச்சு உன்னைக் கஷ்டப்படுத்திட்டோம் எங்களை மன்னிச்சுடு டி” மயூரா அழ , சுகன்யாவும் ஆம் என்பதுபோல் தலை அசைத்து நந்தனாவை கெஞ்சுதலாய் பார்க்க,

தோழிகளின் தவிப்பைத் தாங்க முடியாதவள் “ஹே விடு விடு, சரி இன்னிக்கி எப்படி என் பர்ஃபார்மன்ஸ்?”

அன்று நடந்தவற்றைச் சிரித்தபடி நினைவுகூர்ந்து மீதி பயணத்தைத் தொடர்ந்தனர் தோழிகள்.