MA – 4

MA – 4

அத்தியாயம் – 4

திருமணதம்பதிகள் இருவரும் வீடு வந்து சேர சீதா வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல அவளின் பார்வை வீட்டைச் சுற்றி வருவதை சீதாவும் கவனித்தார்.

“இந்த வீட்டில் முதல் முதலாக அடியெடுத்து வைக்கும் பெண்ணே நீதான் மேகா..” என்ற சீதாவின் குரல்கேட்டு அவரைப் பார்த்து வெறுமையாகப் புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள்.

அந்தப் பெரிய ஹாலில் சோபாக்கள் அலங்கரிக்க அதைக் கடந்து சென்றால் ஒருபுறம் சமையலறை மற்றும் டைனிங் ஹால், மறுபுறம் பூஜையறை, ஸ்டோர் ரூம், விருந்தினர்கள் தங்குவதற்கு என்று தனியாக இரண்டு அறைகள்.  விருந்தினர் அறைக்கு அருகே மாடிப்படிகளின் வழியாகச் சென்றால் மேலே இரண்டு பெரிய அறைகள்.

“நீ வந்து பூஜை அறையில் விளக்கேற்று..” என்று அவர்களை அழைத்துச் சென்றார். முகிலன் நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு அமைதியாக இருந்தான். அவனுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல நடந்து கொண்டவனைப் பார்த்துச் சீதாவின் பிபிதான் அதிகரித்தது.

அவள் பூஜையறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு வெளியே வர அவர்களுக்கு பாலும் பழமும் கொடுக்க கடனே என்று வாங்கிய இருவரும் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் அதைச் சாப்பிட்டனர்.

“இன்னும் என்னன்னா சடங்கு இருக்கு..” என்று இழுத்து வைத்த பொறுமையுடன் கேட்ட முகிலனைக் கண்டிக்கும் பார்வை பார்த்த சீதா,

“முகில் நீ உன்னோட அறைக்குப் போப்பா..” என்று அவனை அனுப்பிவிட்டு தனித்து நின்ற மேகாவை பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார் சீதா.

அந்த அறைக்குள் நுழைந்த மறுநொடியே, “என்ன விஷயம் பேசணும்..” என்று நேராக விஷயத்திற்கு வந்தாள்.

“கார்முகிலன் கெட்ட சகவாசத்தில் தவறான பாதைக்குப் போனவன் அவனை நீதான் மேகா மாற்றிக் கொண்டு வரணும்..” என்று அக்கறையுடன் சொன்னா சீதாவின் முகம் பார்த்து மேகாவின் முகம் நொடியில் செந்தணலாக மாறியது.

‘அவனைப் பற்றிச் சொன்னதும் இவளோட முகம் ஏன் மாறுது..’ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. சிறிதுநேரம் அந்த அறையில் அமைதி நிலவிட அந்த அமைதியை முதலில் கலைத்தது மேகாதான்.

“நீங்க என்ன சொன்னீங்க..” அவள் நிறுத்தி நிதானமாகக் கேட்கவே,

“முகிலனை நீதான் திருத்தணும்னு சொன்னேன்..” அவரும் பொறுமையாக ஒரு குழந்தைக்குப் புத்திமதி கூறுவது போலவே கூறினார்.

“நான் இந்த வீட்டுக்கு மருமகளாகத்தான் வந்தேனே தவிர அவரைத் திருத்த வரல. அர்த்தமே இல்லாமல் என்னிடம் இப்படி சொல்றீங்களே. உங்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருது..” என்ற மேகா, “ஹா.. ஹா.. ஹா..” சீதாவைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள்.

அவர் அவளை எரிப்பது போல பார்க்கவே, “இல்ல இவ்வளவு ஈஸியாகச் சொல்றீங்களே. இத்தனை நாளாகத் திருந்தாதவர் நான் போய்ச் சொன்னதும் அவரு திருந்திட்டுத்தான் மற்ற வேலை பார்ப்பாரு..” என்று சொன்னவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவளின் சிரிப்பு சீதாவின் கோபத்தை தூண்டிவிட, “ஆண்கள் தவறான வழியில் போறவங்கதான். அவங்களைத் திருத்திக் கொண்டு வர வேண்டியது பொண்ணுங்களோட கடமை..” என்றவர் அவளுக்கு அறிவுரைச சொன்னவரை நிமிர்ந்து பார்த்தாள் மேகா.

“ஆண்கள் தவறான வழியில் போறாங்க என்றால் அதைத் திருத்தியே ஆகணும் என்பது பெண்களோட கடமை இல்லையே. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. அந்த மாதிரிதான் இதுவும். இவரை எல்லாம் சொல்லித் திருத்த முடியாது..” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு கையை விரித்தாள் மேகா.

“உன்னை எல்லாம் ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சேன்..” என்றார் சீதா கோபமாகவே.

“உங்களை நான் நினைக்கச் சொல்லவில்லையே. நீங்களா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..” என்று அவள் சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தவளிடம் பேசிச் சாதிக்க முடியாது என்று உணர்ந்தவர்,

“மேகா கொஞ்சம் புரிஞ்சிக்கோ. அவன் ரொம்ப நல்லவன் இப்போதான் இப்படி ஆகிட்டான். அவனைக் கொஞ்சம் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வாடா..” என்று அறிவுரை சொன்னார்.

அவரை ஏறயிறங்க ஒரு பார்வை பார்த்த மேகா,  “ஒரு சின்ன விஷயம் சொல்லட்டுமாங்க..” என்று மரியாதையாகக் கேட்டதும், “சொல்லு மேகா..” என்றார் சீதா.

“நீங்க அட்வைஸ் பண்றது எனக்குச் சுத்தமாக பிடிக்கல. நீங்க இதைக் கொஞ்சம் விட்டுட்டா ரொம்ப நல்லா இருக்கும்..” அவள் பொறுமையாகக் கூறினாள். அவர் எது சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகப் பேசுபவளைப்  பார்த்து அவருக்குப் பிபி எகிறியது தான் மிச்சம்.

“ஏய் நீயெல்லாம் ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சு என்னோட அக்கா பையனுக்குக் கட்டிவேச்சேன். நீயென்ன இப்படியெல்லாம் பேசற..” மூச்சு தாறுமாறாக வாங்க கேட்டவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“ஒரு சின்ன விஷயத்தை விடச் சொன்னதுக்கே  உங்களுக்கு இந்தளவுக்கு பிபி எகிறுதே. உங்க அக்கா பையன் கைவசம் வைத்திருப்பது எல்லாம் ரொம்ப நல்ல குணங்கள் சொன்னதும் அவரும் சரின்னு சொல்லி திருந்தப் போறாரு..” எதிரே நின்ற சீதாவின் முகத்தைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

அவளின் பார்வையில் இருந்த கூர்மையைக் கண்டு, “நீ இப்போ என்னதான் சொல்ல வர..” என்று அவளின் வழிக்கு வந்தார்.

“உங்க அக்கா பையனைத் திருத்த நான் இங்கே வரல. என்னோட வாழ்க்கையில் அவர்தான் நுழைஞ்சிருக்கார். தன்னுடைய உடல் கெட்டு போகுதுன்னு அக்கறை இல்லாதவனை திருத்தி நான் என்ன பண்ண போறேன்..” என்று கூறியவளைப் பார்த்துச் சுவற்றில் முட்டிகொள்ளலாம் என்று தோன்றியது சீதாவிற்கு.

அவரைப்  பார்வையால் அருகே அழைத்த மேகா, “இந்தக் கால்கட்டு கைகட்டு போட்ட பசங்க திருந்துவாங்கன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாடும் உங்களைக் கண்டாளே எனக்குப் பிடிக்கல. இனிமேல் அட்வைஸ் சொல்றேன்னு வந்து என்னோட உயிரை எடுக்காதீங்க..” என்று நாசுக்காகச் சொல்லிவிட்டு அமைதியாக அறையைவிட்டு வெளியே சென்றவளைப் பார்த்து வாயடைத்து நின்றார் சீதாலட்சுமி.

அவரைக் கடுப்பேற்றிவிட்டு கூலாக வெளியே வந்த மேகா எதிரே சுவற்றில் சாய்ந்து நின்றவனைப் பார்த்ததும் திகைத்து விழித்துவிட்டு, ‘நான் ரூமிற்குள் பேசியதைக் கேட்டிருப்பானோ..’ என்ற படபடப்பில் அவளின் இதயதுடிப்பு தாறுமாறாக எகிறியது.

இரண்டே எட்டில் அவளை நெருங்கிய முகிலனின் பார்வை அவளின் விழிகளை ஊடுறுவியதில் அவளின் ஆழ்மனதில் ஒரு விதமான சலனம் தோன்றி மின்னல் வேகத்தில் மறைந்தது.

தன்னுடைய உயரத்தைவிட அவன் சற்று உயரம் என்ற பொழுதும் கூட அண்ணாந்து அவனின் முகம் பார்த்தாள் பெண்ணவள். இருவரின் இடையே ஒரு அடி தூரம் இடைவெளி மட்டுமே இருந்தது. நான்கு விழிகளும் மௌனமொழி பேசிக்கொள்ள மேகாவின் இதயத்துடிப்பு எகிறியது..

‘இவன் பார்க்கின்ற பார்வையில் இதயம் வெளியே வந்துவிடுமோ..’ என்று மனதிற்குள் நினைத்தாலும் அவனின் பார்வையை  தாங்கி நின்றது அவளின் பார்வை.

“ம்ஹும். என்னடா கல்யாணம்னு சொல்றாங்க. நமக்கு வரப் பொறவ உண்ணாவிரதம் இருந்து உன்னைத் திருத்தப் போறேன். ஒவ்வொரு விஷயத்திற்கும் அடம்பிடித்து உன்னை மாற்றப் போறேன்னு சொல்லி உயிரை வாங்கி நம்மைத் திருத்த முயற்சி பண்ணுவாளே எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிச்சேன்..” என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் சொல்ல அவளின் உதட்டில் புன்னகை தானாகவே அரும்பியது.

முகிலன் தனக்கு வரும் மனைவி இப்படித்தான் இருப்பாள் என்று ஒரு கணக்கு போட்டு வைத்திருக்க அவள் அதற்கு எதிர்மறையாக இருப்பது கண்டு அவனின் மனம் மெல்ல அவளின் பக்கமாகச் சாயத்தொடங்கியது.

அவளின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனின் மனதை அசைத்துப் பார்த்தது. அவனை அறியாமல் காதல் என்ற விதை அவனின் மனதில் விழுந்தது.

அவளை நெருங்கிய முகிலனின் விரல்களைக் கண்டு அவளின் விழிகள் படபடவென்று அடிக்க, “ஆனா நீ அப்படிபட்ட பொண்ணு இல்ல..” என்று சொல்லி  அவளின் கன்னத்தைத் தட்டிவிட்டு தன்னை மறந்து சிரித்தான்.

அரிசி போன்று இருந்த பல்வரிசையில் மந்தகாசமான புன்னகையில் அவளின் உள்ளம் தடுமாறியது. அவள் தன்னிலை மறந்து அவனின் சிரிப்பை ரசித்தாள் பெண்ணவள்.

“பட் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னோட ஹெல்த் பற்றி நானே கேர் பண்ணிக்கிறேன். இன்னைக்கு நீ இங்க பேசியதை மறைக்காமல் மனசில் வெச்சுக்கோ..” என்று சொல்லிக் குறும்புடன் கண்ணடித்து அவன் நகர அவளின் முகம் குப்பென்று வேர்த்தது.

அவனின் இந்தப் பேச்சு அவளுக்குள் புன்னகையை வரவழைக்கவே, “இவன் எல்லாம் என்ன டிசைனோ தெரியல..” என்று தலையில் அடித்துக்கொண்டே தன்னறையை நோக்கிச் சென்றாள்.

அவள் அறைக்குச் சென்ற சிலநிமிடத்தில் மீண்டும் கீழே வந்த முகிலன், “மாடியில் முதல் ரூம் உனக்குன்னு ரெடி பண்ண சொல்லிருக்கேன். உன்னோட திங்க்ஸ் வந்தும் நீ எல்லாம் எடுத்து வெச்சுக்கோ..” என்று சொல்ல அவளும் சம்மதமாகத் தலையசைத்தாள்.

“ஒரு முக்கியமான வொர்க் சித்தி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்..” வாசலை நோக்கிச் சென்றவனை தடுக்காமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தவளை பார்த்துச் சீதாவிற்கு தான் தலைவலி அதிகமானது.

“டேய் முகில் இப்போ எங்கடா போற..” என்றவரின் கேள்வி அவனின் நடை தடைப்பட்டது.

“உங்களுக்குத் தெரியாதா சித்தி நான் எங்கே போறேன்னு..” என்றான் அவன் திரும்பாமல்.

“முகில் இன்னும் சடங்கு எல்லாம் முடியல. அதுக்குள்ள எதுக்கு பாருக்கு போகணும்னு சொல்லி உயிரை எடுக்கிற..” என்று அவனோடு சண்டைக்குப் போனவர் மேகாவைத் தூண்டிவிடும் விதமாக,

“உன்னைக் கட்டிட்டு வந்தவளுக்கு உன்னைக் கண்டிக்கனும் என்ற எண்ணம் கூட இல்லாமல் சோபாவில் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிற பாரு..” என்று கடுப்புடன் கூறியதும் எழுந்து அவரின் அருகே வந்தாள் மேகா.

“ஹலோ அவரைத் திருத்த நான் இங்க வரல..” என்ற அவளின் குரல்கேட்டு முகிலன் திரும்பிப் பார்க்க முகம் சிவக்க நின்றவளைக் கண்டு அவனின் உதட்டில் மீண்டும் ஒரு மென்னகை எட்டிப் பார்த்தது.

“சோ உங்களோட பஞ்சாயத்தில் என்னை இழுக்காதீங்க. நீங்க ஒண்ணும் என்னைச் சும்மா கட்டிட்டு வரல உங்க சொல்லுக்கு நான் கட்டுப்பட்டு நடக்க..” என்று அவரோடு சரிக்கு சரி சண்டைக்கு நின்றவளின் மீது பார்வையை படர விட்டான் கார்முகிலன்.

வைல்ட் கலர் பட்டுசேலையில் தலைநிறைய மல்லிகை பூவும், கண்ணில் மைதீட்டி இருக்க, காதுகளில் ஜிமிக்கி கதை பேசிட, மூக்கில் வெள்ளை நிற மூக்குத்தி ஒளி வீச ரோஜா இதழுக்குப் போட்டியாக இரண்டு செவ்விதழ்கள்.

அளவான உடல்வாகிற்கு அந்தச் சேலையும் பொருத்தமாக அமைந்திருக்க இமைக்க மறந்து அவளைப் பார்த்த கார்முகிலனின் இதழ்களில் மின்னல் வேகத்தில் ஒரு புன்னகை வந்து சென்றது..

அவனின் பார்வை உணராத மேகாவோ அவரோடு சரிக்கு சரி சண்டையிட்டவள், “என்னோட அண்ணாகிட்ட இருந்து என்னை விலைப்பேசி நீங்க வாங்கிட்டு வந்திருக்கீங்க. அதுக்கு என் அண்ணா உங்களுக்குக் கொடுத்தது பத்து பவுன் அதிகமாகக் கொடுத்திருக்கான். எல்லாத்தையும் கணக்கு போட்டுப் பாருங்க..” கோபத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

சீதாலட்சுமி அன்று சபையில் பேசியதைவிட அதிகமாக பத்து பவுன் கேட்டதாக சேதுராமன் நீலாம்பரியிடம் சொல்வதைக் கேட்ட வாண்டுகள் அந்த உண்மையை அத்தையுடன் ஒப்பித்துவிட்டது. அப்பொழுது அவளால் வேண்டாம் என்று தடுக்க முடியாவிட்டாலும், இப்பொழுது அதை சொல்லியே அவரின் வாயை அடைத்தாள்.

அவள் சொன்ன தகவல் முகிலனுக்கு புதிதாக இருக்க சீதாவின் முகமோ பேயறைந்தது போலானது. அவரின் மகளுக்கு போட்டு அனுப்ப இவனிடம் கேட்டால் கொடுக்க மாட்டான் என்று அறிந்து இவர் இப்படியொரு குறுக்கு வழியைக் கையாள அதுவும் இப்பொழுது மேகாவின் வாய் வழியாக வந்துவிட அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தார்.

அவள் இந்தளவுக்கு பேசுவது கண்டு பிரம்மித்து நின்ற முகிலன்,  “வாவ் வாட் ஏ திங்கிங்..” தன்னை மறந்து வாய்விட்டுக் கூறிவிட்டு அவளைப் பாராட்டும் விதமாகக் கைதட்டியவனைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் தன்னறைக்குள் சென்று மறைந்தாள் மேகா.

“ரொம்ப பிரக்ட்டிலா யோசிக்கிற..” என்று வாய்விட்டுக் கூறிய அக்கா மகனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார் சீதா.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தவர், “முகில் அவளைப் பாரு எப்படி கணக்கு பேசிட்டு போறான்னு. அவங்க அண்ணாகிட்ட நான் பவுன் வாங்கிட்டேன்னு இப்படி சண்டை கட்டிட்டு போறாளே சரியான ராங்கி..” என்றார் அவர் கோபத்துடன்.

“அவ பேசியதில் என்ன தவறு இருக்கு. நீங்கப் பண்ணிய தவறுக்கு பாவம் அவளா தண்டனை அனுபவிக்கணும். அதுக்கு வாய்ப்பே இல்ல. அதைதான் அவ இவ்வளவு தெளிவா சொல்லிட்டு போறா” என்ற முகிலனைப் பார்த்து அவருக்குத் தலையே சுற்றியது.

“நீயாடா முகிலா இது சுத்தம். இனிமேல் இங்க இருப்பதில் அர்த்தமே இல்ல..”  என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அதன்பிறகு வந்த நாளில் அவள் எப்பொழுதும் போலவே இயல்பாகச் சென்றது என்றே சொல்லலாம்.

காலையில் எப்பொழுதும் போலவே நேரத்தில் கண்விழிக்கும் மேகா குளித்துவிட்டு டைனிங் ஹால் வரும் பொழுது அவனும் அலுவலகம் தயாராகிக் கீழே வருவான்.

இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் வேளையில் ஜாலியாக ஒரு குட்மார்னிங், சிறிய புன்னகையுடன் ஒரு குட்நைட் என்று அந்த நிமிடத்தைக் கடந்துவிடுவர்.

அந்த வீட்டில் இருக்க முகிலனும் அவனுடைய வழக்கத்தில் எந்தவிதமான மாறுதலும் இல்லாமல் இருக்க நாட்கள் தான் வேகமாகச் சென்று மறைந்தது. அவன் தன்னை நெருங்காத வரை தனக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று இயல்பாக அந்த வீட்டை வலம்வந்தாள் மேகா.

இவளுக்காக அவனும், அவனுக்காக இவளும் அவரவர் குணங்களை மாற்றிக்கொள்ள சிறிதும் முயற்சிக்கவில்லை. இருவருக்கும் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்தது.

இருவரும் நேருக்கு நேர் பேசுவதில்லை என்றாலும் நேருக்கு நேர் சந்திக்கும் வேளையில் ஒரு புன்னகையை உதறித்துவிட்டு அவரவர் செல்லும் பாதையில் நடந்தனர்.

தன்னுடைய கடந்த காலத்தை மறந்துவிட்டு மெல்ல நிதர்சனத்தை புரிந்து கொண்டவளின் மனதில் நிம்மதி பரவியது. அதைக் கெடுப்பது போல இரண்டாவது புயல்காற்று வீசியது.

error: Content is protected !!