Maane – 27

download (27)-b38dfd13

அத்தியாயம் – 27

ரகுவரனை ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்தர் அவர்களின் வீட்டின் முன்னே காரை நிறுத்திடவே “நான் அங்கே வீட்டில் போய் இருக்கேன் மாப்பிள்ளை” என்றவரை இந்தர் தனியாக தங்க அனுமதிக்கவில்லை.

“அதெல்லாம் வேண்டாம் மாமா.. நீங்க இங்கே எங்களோடு இருங்க..” என்றவன் மறுத்துவிடவே அவரும் அவர்களோடு தங்கிவிட்டார். இந்தர் ஆபீஸ் சென்றுவிட தந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டு வாசலுக்கு வந்த மித்ரா அப்போதுதான் பிரம்மகமலம் பூமொட்டு விட்டிருப்பதை கவனித்தாள்.

பிரம்மகமலம் பூ வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மலரும். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் பூத்து காலை விடியலுக்கு முன்னரே வாடிவிடும். அங்கிருந்த ஒரு நிர்வாகியின் வீட்டில் இருந்து செடியின் இலையைப் பறித்து வந்து நட்டுவைத்து வளர்த்திருந்தாள் மித்ரா. அனைத்து செடிகளுக்கும் விதைகள் போட்டால் மட்டுமே முளைக்கும்.  இந்த செடி மட்டும் இலையை கிள்ளி வைத்தால் மட்டுமே வளரும்.

மெல்ல செடியின் அருகே சென்று பார்த்தவள், “இன்று இரவு பூ பூக்கும் போது பார்க்க வேண்டும்” என்றவள் அப்போதுதான் எதிர் வீட்டைக் கவனித்தாள். ஆள் ஆரவாரம் இன்றி காணப்படவே சுற்றிலும் பார்வையைச் சுழற்றிவிட்டு வீட்டிற்குள் செல்ல திரும்பியவள் கைப்பிடி சுவற்றின் அருகே நின்றிருந்த மாமியாரைப் பார்த்தும் புன்னகையுடன் அவரை நோக்கி நடந்தாள்.

“என்ன அத்தை அமைதியாக வந்து நிற்கிறீங்க?” என்று கேட்க, “மித்ரா உன்னோடு கொஞ்சம் பேசணும்” என்றார்.

அவரின் முகத்தில் இருந்த கலக்கத்தை கண்டு, “என்னாச்சு அத்தை சொல்லுங்க” என்றாள் மருமகள்.

அவர் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, “நான்தான் மித்ரா தவறு பண்ணிட்டேன். அன்னைக்கு அவரிடம் உண்மையைச் சொல்லியிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்திருக்காது” குற்ற உணர்ச்சியுடன் கூறினார்.

அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கே வந்துவிட்ட பாஸ்கரன் மனைவி சொன்னதை கேட்டுவிடவே, ‘என்னை என்ன கல்நெஞ்சம் கொண்டவன்னு நினைச்சிட்டாளா? ஒரு வார்த்தை என்னிடம் சொல்லாமல் இருந்து வாழ்க்கையை வீணடித்து விட்டாளே’ என்று மனதிற்குள் வருந்தினார்.

அதே நேரத்தில், “அத்தை புருஷனிடம் என்னத்தை வீம்பு வேண்டி இருக்கு. நீங்க உங்க அம்மாவுக்கு செய்தது தவறுன்னு சொல்ல அவருக்கு உரிமையே இல்ல. இது அவரோட உரிமை. நீங்க அன்னைக்கு பொய் சொன்னதால் இப்போ என்னாச்சு என்று யோசிச்சி பார்த்தீங்களா? நல்ல குடும்ப பின்னணி இல்லாமல் விஷ்வாவும், இந்தரும் வளர்ந்து இருக்காங்க” என்றவள் சொல்ல அவரோ அமைதியாக இருந்தார்.

பாஸ்கர் வாசலில் நிற்பதை கவனிக்காமல், “தாய் – தந்தை இருந்தும் அநாதை மாதிரி வாழ்வது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? பார்ப்பவர்கள் எல்லோரும் கேள்விக்கும், கேலிகளுக்கும் இடையே சிக்கி தவிக்கும்போது அவங்க மனநிலை எப்படியிருக்கும்னு தெரியுமா உங்களுக்கு” என்று கேட்கவே மரகதம் மௌனமாகவே இருந்தார்.

ஆனால் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, “இனிமேலாவது அவரிடம் உண்மைச் சொல்ல முயற்சி பண்றேன் மித்ரா” என்றவர் அங்கிருந்து நகரவே பாஸ்கர் கேட்டைத் திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

மரகதம் அங்கேயே நின்றுவிடவே, “என்ன மாமா நாங்க பேசிய அனைத்தையும் கேட்டுட்டீங்க போலவே.. முகமே களையிழந்து இருக்கு. முதலில் யாரோ சொல்வதைக் கேட்டு மனைவியை சந்தேகப்படுவதை நிறுத்துங்க மாமா. உங்க பொண்டாட்டியை நீங்க நம்பாமல் பேசியதும், கடைசியாக அவங்க சொல்ல வந்தபோது கேட்காமல் இருந்தது இரண்டுமே தவறு. சந்தோசமோ, துக்கமோ அவங்க தேடுவது உங்க தோளைத் தான். அது புரியாமல் இருந்துட்டீங்களே” என்று அவள் சொல்லவே அவரும் மறுத்து எதுவும் பேசவில்லை.

மரகதம் கணவனை குற்ற உணர்வுடன் பார்க்க, “இந்தம்மா எதிர்வீட்டு சாவி. நான் வீட்டைக் காலி பண்ணிட்டேன்” என்றவர் கொடுத்தவரின் பார்வை மனைவியின் மீது படிந்து மீண்டது.

“எங்கே மாமா போறீங்க” என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் வெளியேறிவிட கலங்கிய கண்களை முந்தானையில் துடைத்துவிட்டு வீடு நோக்கி நடந்தார் மரகதம். இருவரையும் மாறி மாறி பார்த்த மித்ரா வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.

அன்றிரவு இந்தர் வந்தவுடன் தந்தைக்கும், கணவனுக்கும் உணவு பரிமாறிவிட்டு சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்து பார்க்கும்போது கடிகாரம் மணி பத்து என்றது. சங்கமித்ரா குஷியுடன் குளித்து உடைமாற்றிக்கொண்டு அலங்காரம் செய்வதை கவனித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான் இந்தர்.

அவனை கண்டுகொள்ளாமல் கையில் செல்லை எடுத்துகொண்டு சென்றவளைப் பின் தொடர்ந்தது இந்தரின் பார்வை. நேராக பிரம்மகமலம் செடியின் அருகே சென்றவள் பூ பூத்திருப்பதை வீடியோ எடுத்தாள். பிறகு செடியின் அருகே நின்று செல்பி எடுத்துவிட்டு போட்டோவை வரிசையாக பார்த்து கொண்டிருந்தாள்.

இரவு நேரத்தில் வானில் வெண்ணிலா நட்சத்திர பட்டாளத்துடன் உலா வரவே நிலவொளியில் செடியின் அருகே தேவதை போல நின்றிருந்தவளின் மீது பார்வையை பதித்தபடி மெல்ல அவளின் இடையோடு கைகோர்த்து, “என்னடி பண்ணிட்டு இருக்கிருக்கிற” என்றான் இந்தர்.

அவனின் குரலில் இருந்த மாறுதலைக் கவனிக்காமல், “இந்த பூ இரவின் இளவரசி என்று சொல்வாங்க இந்தர். நான் செடி வைத்து இரண்டு வருடம் ஆகிடுச்சு. இப்போதான் பூக்குது அதுதான் போட்டோ எடுத்துட்டு இருக்கேன்” என்றவளின் காதோரம் முகம் பதித்தான் இந்தர்.

அவனின் மீசை முடிகள் ஏற்படுத்திய குறுகுறுப்பில் அவளின் உடல் சிலிர்த்தது. இந்தரின் கரங்கள் மெல்ல அவளின் இடையில் அழுத்தமாக பதியவே, “நம்ம வீட்டுக்கு வெளியே நிற்கிறோம் ஜித்து” என்று நினைவுபடுத்தியபடி அவனின் கைகளை விலக்கிவிட முயற்சித்தாள்.

அவனோ சுற்றிலும் பார்வையை சுழற்றிவிட்டு அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழையவே, “ஜித்து என்னடா பண்ற” என்று பதறினாள் மித்ரா.

அதற்குள் வீட்டிற்குள் அவளை இறக்கிவிட்டு கதவை தாழிட்டு திரும்பிய இந்தரின் பார்வையில் வழிந்த தாபத்தை கண்டு, “ஜி..த்..து..” வார்த்தைகள் தந்தியடிக்க பின்வாங்கினாள் சங்கமித்ரா. அவளின் கண்களில் தெரிந்த காதலில் கள்ளுண்ட வண்டாக மாறியது இந்தரின் பார்வை.

அவனின் தாபம் நிறைந்த பார்வை அவளை வாயடைக்க வைத்துவிடவே, “இன்னைக்கு எனக்கு நீ வேண்டும்” என்று அவளை இரு கரங்களில் தூக்கிக்கொண்டு  அறையை நோக்கி நடந்தான். அவனின் கழுத்தில் மாலையாக கோர்த்தது அவளின் கரங்கள்!

தனியறைக்குள் நுழைந்த இந்தர் அவளை படுக்கையில் விட்டு அறையின் கதவைத் தாழிட்டு அவளின் நெருங்கினான். அவனின் பார்வையில் தெரிந்த தாபத்தை எதிர்கொள்ள முடியாமல் விழிமூடி கொண்டாள். அவளை இழுத்து அணைத்து இந்தரின் விரல்கள் அவளின் மேனியை அழுத்தமாக பதிந்து அவனின் தேவையை அவளுக்கு புரிய வைத்தது.

அவனின் கரங்களை தடுக்க தைரியம் இல்லாமல் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தவளின் முகத்தை நிமிர்த்து அவளின் இதழில் இதழ் பதித்தான் இந்தர். அதன்பிறகு அவனின் கரங்கள் எல்லை மீறிட அவளோ அவனை தடுக்க முடியாமலும், அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் துவண்டாள்.

அவளின் நெஞ்சில் இருந்த பயத்தைப் போக்கி மெல்ல பூவிலிருந்து தேனை எடுக்கும் வண்டாக மாறிப்போனான். அவன் தாபத்தில் அவளுக்குள் மூழ்கினான். இரு மனங்களும் சங்கமம் ஆகி இல்லறம் என்ற நல்லறத்தில் அடியெடுத்து வைத்தனர்.

தன் தேவையைத் தீர்த்துக்கொண்டு அவன் விலகியபோது விடியற்காலை ஆகிவிடவே, “ஐயோ போச்சு பூவெல்லாம் பூத்து வாடியிருக்கும்” என்று சிணுங்கியவளின் முகத்தை மறைத்திருந்த கூந்தலைக் காதோரம் ஒதிக்கிவிட்டு அவளைப் பார்த்து குறும்புடன் சிரித்தான் இந்தர்.

“நீ சிரிக்காதே.. அந்த பூ பூக்க தொடங்கிய நாளில் பார்க்க விடாமல் பண்ணிட்டியே” என்று அவனின் மார்பில் குத்தியவளின் கையைத் தடுத்தவன், “இனிமேல் அந்த பூ பூக்கும்போது எல்லாம் என் நினைவு வருவதை உன்னால் தடுக்க முடியாது இல்லையா?” என்றவனின் கேள்வி கேட்க வெக்கத்தில் முகம் சிவக்க அவனின் மார்பிற்குள் தஞ்சம் புகுந்தாள் தாரகை பெண்ணவள்.

அடுத்த இரண்டு நாளும் சம்யுக்தாவுடன் செலவிட்ட விஷ்வா அன்று வினோத்துடன் இலங்கை கிளம்பிட அவளின் முகமே களையிழந்து போனது. இந்த இரண்டு நாட்களில் அவளின் மனதைப் படிக்க கற்றுக்கொண்டான். தன்னைவிட வயதில் சின்னவனாக இருந்தாலும் அவன் சம்யுக்தாவை தெளிவாக புரிந்து வைத்திருப்பதைக் கண்டு வியந்தான் வினோத்.

அவளின் முக மாறுதலை வைத்தே மனதைப் படித்தவன், “கொஞ்சநாள் தான் சம்மு. அப்புறம் நீ அங்கே நிரந்தரமாக என்னோடு இருக்கலாம் சரியா? நான் போய் மித்ராவிடம் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க சொல்றேன்” என்றான்

ஏற்கனவே மித்ராவிற்கு தங்களின் காதல் விவகாரம் தெரியும் என்பதால் சம்மதமாக தலையசைத்து இருவரையும் வழியனுப்பும் முன்னே, “அண்ணா சும்மா விளையாட்டுக்கு தான் அடிச்சேன். என்மேல் கோபம் இருந்தால் வாய்விட்டு திட்டிவிடுங்க அண்ணா” என்று வினோத்திடம் மன்னிப்பு கேட்டாள்.

அவளின் தலையைச் செல்லமாக பிடித்து ஆட்டிய வினோத், “எனக்கு நீ வேற மித்ரா வேற இல்ல. அதனால் நீ வருத்தபடாமல் இரு” என்றவன் சொல்லவே அவளும் சரியென்று தலையசைத்தாள். இருவரையும் ஏர்போர்ட் வந்து வழியனுப்பி வைத்தனர் சுரேஷ் மற்றும் சம்யுக்தா.

சென்னையிலிருந்து மஸ்கெலியா வந்ததும் ஹாலில் அமர்ந்திருந்த ரகுவரனை கண்டவுடன், “மாமா இப்போ உடம்பு எப்படி இருக்கு” என்று விசாரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தான்.

“இப்போ ரொம்ப நல்ல இருக்கேன் விஷ்வா. சென்னையில் வேலையெல்லாம் முடிந்துவிட்டதா?” என்று கேட்கவே அவன் புன்னகையோடு அருகே வந்து அமர்ந்தான்.

அவனின் குரல்கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தவள், “விஷ்வா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட.. சென்னையில் சுரேஷ் பக்கத்திலிருந்து அனைத்தும் செய்து கொடுத்தானா?” அக்கறையோடு விசாரித்தாள்.

சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்த விஷ்வா, “சுரேஷ் உன்னை மாதிரியே நல்ல டைப் மானு. எங்களோடு இருந்து அனைத்து இடத்தையும் சுற்றிக்காட்டி இடத்தை ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்துவிட்டார்” என்றான்.

“நீ மட்டும் இல்லன்னு சொல்லியிருந்தால் அவனை உண்டு இல்லன்னு செய்யலாம்னு நினைச்சேனே.. ச்சே இந்த முறையும் பயபுள்ள தப்பிச்சிடுச்சே..” பிசைந்த மாவின் மீது குத்துவதைக் கண்டு வாய்விட்டு சிரித்தான் விஷ்வா.

அதற்குள் இந்தரும் வந்துவிடவே அந்த இடமே கலகலப்பாக மாறிப்போனது. ஆண்கள் மூவரையும் அமரவைத்து சாப்பாடு பரிமாறிய மித்ரா, “விஷ்வா எப்போ கல்யாணத்திற்கு சரின்னு சொல்ல போகிற” வேண்டுமென்றே அவனை வம்பிற்கு இழுத்தாள்.

இந்தர் அமைதியாக சாப்பிட, “எனக்கு கல்யாணம் வேண்டான்னு சொன்னால் கேட்கவே மாட்டியா மானு. நான் இப்படியே இருந்துக்கிறேன்” என்றவன் எழுந்து செல்வதை கண்டு அவளுக்கு ஏமாற்றமாக இருந்தபோதும் அதை தனக்குள் மறைத்துக் கொண்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ரகுவரனுக்கு ஓரளவு உடல்நிலை தெரிவிடவே அவர் வீட்டிற்கு செல்வதாக கூறவே, “அப்போ நான் சாப்பாடு கொண்டுவந்து தருவேன் நீங்க சாப்பிடனும்” கண்டிப்புடன் கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள் சங்கமித்ரா.

இதற்கிடையே இந்தர்ஜித், விஷ்வா இருவரும் தொடங்கிய நிறுவன வேலைகள் மும்பரமாக நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் அவன் வேலையை ரிசைன் செய்துவிட்டு அண்ணனோடு அவனின் நிறுவனத்திற்கு சென்றுவர தொடங்கினான்.

அன்று காலை வழக்கம்போல அவரவர் வேலைகளில் கவனமாக இருக்க விஷ்வா மட்டும் டிவி சேனலை மாற்றியபடி ஹாலில் அமர்ந்திருந்தான். மித்ரா சமையலறையில் வேலையாக இருக்க, இந்தர்ஜித் குளித்துவிட்டு ஹாலிற்கு வந்தான்.

“பட்டாம்பூச்சி சிறகடித்து கூட்டைவிட்டு பறக்கிறதா?” என்ற பாடல் ஒளிபரப்பாகவே விஷ்வா எரிச்சலோடு சேனலை மாற்ற போகும்போது, “ஏய் அந்த பாட்டை விடுடா” என்று இருவரின் குரலும் ஒரே நேரத்தில் ஒலித்தது.

 “பட்டாம்பூச்சி சிரிக்கடித்து கூட்டைவிட்டு பறக்கிறதா?

பச்சை புல்லில் நீர் தெளிக்க பன்னீர் மழை பொழிகிறதா?

பூவுக்கு வண்டு சொன்ன சேதி எல்லாம் நெஞ்சுக்கு தெரிகிறதா?

காதல் மெட்டுபடிக்க ஹே ஹே வானம் கிட்ட வருதா?

 

காதுக்குள் சொன்னது கனவில் வந்து கேட்டதா

விழி வந்து தூக்கத்தை சுற்றுகின்றதே..

நெஞ்சுக்கு சொன்னது நிலவைத் தொட்டு விட்டதா

காற்றுக்கும் ஆசைவந்து கட்டிக்கொண்டதே..

காதலை ஆழச் சொல்லும்வோம்.. பூமியை வாழச் சொல்லுவோம்..

குயிலின் சத்தம் கொஞ்ச கொஞ்ச..கண்கள் மெல்ல கெஞ்ச கெஞ்ச..

வெக்கம் வந்து விழிகள் ரெண்டை பூட்டிச் செல்லுகின்றதே ஹே.. ஹே..

ஆசை துள்ளுகின்றதே..

 

வெக்கத்தை தள்ளவா கற்றுக்கொடு மன்னவா

பெண்ணுக்கு சோதனை நாணம் அல்லவா..

மூச்சுக்குள் செல்லவா முத்தெடுத்து கொள்ளவா

முத்தத்தில் நானே கொஞ்சம் மூழ்கி கொள்ளவா..

தீண்டினால் தீ பிடிக்கும் தாண்டினால் மழையடிக்கும்..

இதயச்சிறையில் சிக்கிக்கொள்ள

இரவு கைகள் அள்ளிக்கொள்ள..

கனவு காட்டில் காதல் வேட்டை

ஆடச் சொல்லுகின்றதே ஹே ஹே..

தேடி தேடிச் செல்லுகின்றதே..

அவன் பாடல் முடியும் வரையில் அமைதியாகிவிட பாடல் வரிகள் கணவன்  – மனைவி இருவரும் ரசித்து கேட்க தொடங்கினர். இருவரின் மனநிலையை துல்லியமாக கணித்துவிட்ட விஷ்வா சத்தமில்லாமல் அறைக்கு நழுவிவிட்டான்.

இருவரும் போட்ட சேலஞ்சில் தொற்றிவிட்ட விஷ்வா வேண்டுமென்றே பொய் சொல்லி அவளிடம் விளையாட நினைத்தான். தன் விளையாட்டால் தமையனின் வாழ்க்கை ஸ்தம்பிக்க போகிறதென்று உணராமல் இருந்தான். அவன் உணரும்போது காலம் கடந்திருக்குமோ?