MEM2-20

மறந்துபோ என் மனமே(2) – 20

சுஷிக்கு பார்வதியின் நிலைப்பாடு அப்போதுதான் ஞாபகம் வந்தது.

அவனை ஏறெடுத்துப் பார்த்த சுஷியின் முகத்தில் புன்னகை படர… “நாளைக்கி மார்னிங் நம்ம கிளம்பறோம். ஐ வான்ட் யூ டு பி ஹாப்பி. நம்ம கிளம்பிடலாம்னு நினச்சேன். பட் பாட்டி கேட்டவுடனே நீ சரின்னு சொல்லிட்ட” என்றான்.

“அவங்க அவ்ளோ தூரம் ஆசையா சொல்றப்ப, எப்படி முடியாதுனு சொல்ல முடியும். நீ எனக்காக தான் போகணும்னு சொன்னான்னு தெரியும் க்ரிஷ். பரவால்ல ஒரு நாள் தானே.”

பீச் காற்று அவர்கள் மேல் இதமாக வீச இருவரும் அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தனர்.

“எனக்கும் பிடிச்சிருக்கு க்ரிஷ். நான் இவ்ளோ ரிலேஷன்ஸ்’லாம் பார்த்ததில்லை. எப்பவுமே ஒரு தனிமை என்ன சுத்தி. மிஞ்சினா அம்மா அப்பா… முன்னாடிலாம் நீ ஆண்ட்டி அங்கிள். கொஞ்ச நாள் ராம். அவ்ளோதான்”

அவன் மேலே சாய்ந்த சுஷி… “அதுனால தான் இந்தியா பிளான் போட்டவுடனே, நான் உன் ரிலேட்டிவ்ஸ் வீட்டுக்கு போலாம்னு சொன்னேன். எனக்கு தான் யாரு இருக்காங்கனு கூட தெரியாது” என்றாள் வருத்தத்துடன்.

“ஹ்ம்ம். அதுனால தான் நானும் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா இந்த ரம்யா மேட்டர் ஓபன் ஆகும்னு நினைக்கல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்ல பேசினாங்க. எனக்கு பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல. அத்தையும் மாமாவும் எப்படியாச்சும் முடிக்கணும்னு இருப்பாங்க போல”

“மாமா அப்பா IIT காலத்துல இருந்தே ஃபிரென்ட்ஸ். ஒரே பேட்ச். அம்மா அவங்களுக்கு ஜூனியர். லவ் மேரேஜ். மாமா பிஸ்னஸ்’ல அப்பா இன்வெஸ்ட் பண்ணிருக்காரு… அம்மா ஸ்டேக் ஹோல்டர். சோ எப்படியாச்சும் இதை முடிச்சா எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆகிடும்னு பாத்தாங்க”

“Infact அம்மா அப்பா கூட ரிடையர்மென்ட்’கு அப்புறம் இங்க வரலாம்னு யோசிச்சிருக்காங்க” அவர்கள் குடும்பத்தை பற்றி சொல்லி முடித்தான்.

சட்டென அவன் மேலிருந்து எழுந்தவள் “அப்போ நீ?” சந்தேகத்துடன் கேட்க “நான் அங்க தான் இருப்பேன்” என்றான் புன்னகையுடன். 

“ஆண்ட்டி அங்கிள்’ட்ட நான் பேசுவேன் அங்கேயே இருக்க சொல்லி” நம்பிக்கையுடன் சொன்ன சுஷியை பார்த்து… “ஹ்ம்ம் பாக்கலாம். நானும் சொன்னேன் வேணாம்னு. அதுக்கு இன்னும் டைம் இருக்குல” என்றான்.

சில்லென காற்று அவர்களை வருட… “நைட் பீச் போலாமா க்ரிஷ். நல்லாயிருக்கும்ல” அவள் கேட்டவுடன், சரி என்றான்.

இருவரும் சிறிதுநேரம் காற்று வாங்கிவிட்டு கீழே சென்றனர்.

அங்கே ரம்யா கையில் கிடார் வைத்திருக்க… அவள் கையில் அதை பார்த்தவுடன் “ஆமா கிடார் எடுத்துட்டு வந்தயா?” சுஷி முறைத்துக்கொண் டே கேட்க…  “அவ தான் எடுத்துட்டு வந்துட்டா” முழித்தான் க்ரிஷ்.

மாலை சிற்றுண்டி அனைவரும் சேர்ந்தே சாப்பிட்டனர். சுஷி பாட்டியின் பக்கத்தில் இருந்தாள்.

ரம்யா கிடாரில் ஏதோ நோண்டிக்கொண்டே இருக்க, அவள் அம்மா… “ரம்யா நல்லா பாடுவா. இங்க ஸோஸைட்டி’ல எல்லாரும் சைந்தவி மாதிரி பாடுவானு சொல்வாங்க” புகழாரம் படிக்க…

“சரி… அப்போ க்ரிஷ் கிடார் வாசிக்கட்டும் ரம்யா பாடட்டும்” என்றாள் பது. டீல் என்று சைகை செய்த ரம்யா க்ரிஷிடம் “உன்னாலே எந்நாளும். ஒகேவா” என கேட்டாள்.

அவன் சுஷியைப் பார்க்க அவள் புன்னகைத்தாள்.

பின் ரம்யாவிடம், “யாரோட மியூசிக்? நான் கேட்டதில்ல. Tabs அண்ட் Chords எடுக்கணும்” க்ரிஷ் கேட்டவுடன் ரம்யா அவனுக்கு உதவினாள்.

க்ரிஷ் சில நிமிடங்களில் தயாரானபின், சுஷியை பார்த்தவரு அங்கிருந்த பார் சேரில் உட்கார்ந்தான். அவன் ஆரம்பிக்க… கன்னத்தில் கைவைத்து சுஷி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன்…’ என்று ரம்யா அவனின் இசைக்கேற்ப பாட ஆரம்பித்த்தாள்.

அதெல்லாம் சுஷியின் காதுகளை எட்டவே இல்லை. கிடாருடன் விளையாடும் அவன் கரங்கள், விரல்களை தொடரும் அவன் கண்கள், இதழில் குடியிருக்கும் புன்னகை, புத்துணர்ச்சியுடன் தெரியும் அவனது முகம் என அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அவன் கிடார் வாசித்தாலும், அவளை பார்க்க தவறவில்லை. கண்கொட்டாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தவன் ‘என்ன’ என்று புன்னகையுடன் புருவம் உயர்த்தி சைகையில் தலையசைக்க ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் பதிலுக்கு தலையசைத்தாள்.

இருவரின் முகத்திலும் புன்னகை குடிகொண்டிருந்தது. இது ஒரு புறம் இருக்க, இவர்களின் மௌன மொழியை பாட்டி பார்க்க தவறவில்லை.

—–

இரவு உணவு முடித்தபின், அவன் மாமா அத்தையிடம் சொல்லிவிட்டு இருவரும் பீச்’சுக்கு புறப்பட்டனர்.

அந்த தனிமையான கடற்கரையில், நிலவின் ஒளி வழிகாட்ட, இருவரும் கரையோரம் கைகோர்த்து நடந்தனர். அவ்வப்போது கடல் தண்ணீர் அவர்கள் கால்களை நனைத்து சென்றது.

அந்தத் தருணம் இருவருக்கும் மனம் திறந்து பேசலாமா என்று தோன்ற, சுஷி ஆரம்பித்தாள்.

“க்ரிஷ்… எனக்கு இதை எப்படி சொல்லும்னு தெரில. ஆனா…” என்று கொஞ்சம் தயங்கி… பின்…

“உன்ன என்னால விட்டுக்கொடுக்க முடியும்னு தோணல. இதுக்குப் பேரு போஸஸிவ்நெஸ்’னா, Yes am possessive. I want to be with you always. ரம்யாவை உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்னு அவங்க சொன்னப்ப என்னால அத ஏத்துக்க முடில. நீ என்ன விட்டு ஹார்வார்ட் போறன்னு தெரிய வந்தப்ப, எப்படி ஃபீல் பண்ணேனோ அதுமாதிரி இருந்துச்சு.  திடீர்னு ஒரு அழுத்தம் மனசுக்குள்ள”

அவள் பிடித்திருந்த அவன் கையைப் பார்த்தவாறு, “இதேபோல… உன் கை கோர்த்துட்டு, என்னோட சந்தோஷம், கவலை, எல்லாம் ஷேர் பண்ணணும்”

“இப்போ தோணுது… ஒருவேளை நீ போறன்னு, நான் மைக்கேல் கூட க்ளோஸ் ஆகாம இருந்திருந்தேன்னா, இப்போ நான் எடுத்த இந்த முடிவை எப்பவோ எடுத்திருப்பேனோன்னு”

“அப்படி நடந்திருந்தா… என் லைஃப்’ல பல கசப்பான சம்பவங்கள் நடக்காமலே இருந்திருக்கும்” என்று சொல்லும்போது அவனின் பிடி இறுக்கமானது ‘நான் இருக்கிறேன் உனக்கு’ என்பதுபோல்.

இருவரிடையே மௌனம் நிறைந்திருக்க… இருவரின் மனது பின்னோக்கி சென்றது.

சுஷி அனீமிக் ஆனபின்… அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அப்போது அவனுக்கு ஹார்வர்டில் படிக்க அட்மிஷன் கிடைக்க, அதை அவளுடன் பகிர்ந்துகொள்ள ஆசையாக வந்த க்ரிஷை சுஷி பார்க்கவில்லை.

‘அவன் தன்னைவிட்டு போகப்போகிறான்’ என்பதை துளியளவும் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவித்தாள். அப்போது அவளைப் பார்க்க வந்த நண்பர்களுடன் வந்தான் மைக்கேல்.

மைக்கேல் பல மாதங்காளாக சுஷியின் மேல் தவறான நோக்கத்தில் கண் வைத்திருந்தான். க்ரிஷ் இருக்கும் வரை அவளிடம் அவனால் நெருங்க முடியவில்லை.

இப்போது இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என்பது அவனுக்கு சாதகமாக, சுஷியிடம் நெருங்குவது சுலபமானது.

‘க்ரிஷ் இல்லாத அந்த வெறுமையை நிரப்ப, மற்றொரு நண்பன் கௌஷல் சிகாகோ’வுக்கு பெற்றோருடன் மாற்றலாகி சென்றிருக்க, அந்த சமயம் அவளுக்கு கிடைத்த ஒரு தோழன் மைக்கேல்’ என்று நினைத்தாள் சுஷி.

ஆனால் அவனோ சுஷியிடம்… “க்ரிஷ் உன்கூட பழக்கூடாதுன்னு மிரட்டுறான். மீறி உன்கூட என்னைப் பார்த்தா… என்னை என்னவேணும்னாலும் பண்ணுவேன்னு சொல்றான். அவனே உன்னை விட்டுட்டு போறான், நீ யார்கூட பழகினா அவனுக்கு என்ன?”

க்ரிஷ் சொல்லாததை சொன்னதாக… ஒன்றுக்கு ரெண்டாக க்ரிஷைப் பற்றி அவளிடம் சொல்ல, அவள் மனதில் க்ரிஷ் மேல் கொஞ்சம் கோபம் வந்தது. இவனும் இருக்கமாட்டான். தனக்காக இருப்பவர்களை மிரட்டவேறு செய்கிறான் என.

‘மைக்கேலின் எண்ணம் என்ன’ என நன்றாக புரிந்த க்ரிஷ், எவ்வளவு சொல்லியும் சுஷி கேட்கவில்லை. ஒரு நாள் அவளுடன் பேச போன் செய்தான் க்ரிஷ்.

“சுஷி ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு. ப்ளீஸ்”

”சரி… என்னனு சீக்கிரம் சொல்லு க்ரிஷ். நானும் மைக்கேலும் வெளிய போகணும்”

“அவன் சரியில்ல சுஷி. அவனோட இன்டென்ஷன் வேற. ப்ளீஸ் அவன்கூட நீ பழகாத. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்”

“எனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும் க்ரிஷ். Don’t try to be over-protective. I need my space. எனக்கு என்ன வேணும்னு நான் முடிவு பண்ணிக்கறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

சுஷி பேசியதை துளியும் அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பேசிய பின்னர் அவளுக்கும் மனது கனமாக இருந்தது. ஆனால் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை அவனை மறக்க.

அவன் ஹார்வர்ட் செல்வதற்கு இரு தினத்திற்கு முன்… தற்செயலாக மைக்கேல் அவனுடைய நண்பர்களுடன் பேசுவதை பார்த்தான்.

அருகில் சென்றபோது… மைக்கேல் சுஷியை பற்றி சில தரக்குறைவான வார்த்தைகளை பேச, அதை கேட்ட க்ரிஷ் அவனை அடித்தான். அந்நேரம் மைக்கேலை பார்க்க வந்த சுஷி, க்ரிஷ் அவனை அடிப்பதை பார்க்க…

கோபத்தில் “க்ரிஷ் அவனை எதுக்கு அடிக்கற? விடுடா. விடு” என தடுத்தாள்.

“உனக்காக தான் அடிச்சேன். அவன் என்ன பேசினான் தெரியுமா? உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா? அறிவில்ல…” என்று பதிலுக்கு க்ரிஷ் கத்தினான்.

“ஆமா உன்ன இன்னமும் நம்பறேன் பாரு… எனக்கு அறிவில்ல தான். நீ மைக்கேல்ல அடிச்சது தப்பு. அதுவும் எனக்காக அடிச்சேன்னு சொல்ற பாரு… என்னால அத ஏத்துக்கவே முடியாது. அவன்கிட்ட மன்னிப்பு கேளு”

“மைக்கேல் நல்லவன் இல்ல சுஷி. அவனோட இன்டென்ஷன் வேறன்னு எவ்ளோ தடவ சொல்றது. He stalked you and waited for this opportunity ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”

“நீ பேசாத க்ரிஷ். நீயும் என்ன விட்டுட்டு போய்டுவ. என்னோட பேசறவங்களையும் விடமாட்ட இல்ல? நீ அவன்கிட்ட ஸாரி கேட்கல… என்கூட பேசவே பேசாத க்ரிஷ்”

“உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன். அவன்ட்ட என்னால ஸாரி கேட்கமுடியாது. அவன் தான் உன்கிட்ட கேட்கணும். அவன……”

“என் முன்னாடி அவனை இனி அடிச்ச நடக்கிறதே வேற. வேணாம் க்ரிஷ். நீ இங்கிருந்து போ. ப்ளீஸ் போ. என்கூட பேசவே பேசாத”

“ஓ அந்த அளவுக்கு ஆச்சில்ல. சரி… நான் இனி பேசமாட்டேன். நீயே வந்து பேசினா கூட நான் பேசமாட்டேன். Get Lost” விருட்டென கோபத்துடன் சென்றுவிட்டான் அங்கிருந்து.

அதன் பின் மைக்கேலின் உண்மையான முகம் ஒரு நாள் அவனுடன் பப்’பிற்கு சென்றபோது சுஷிக்கு தெரியவர, அவனிடம் இருந்து விலகினாள்.

அப்போது புரிந்தது… க்ரிஷ் எதற்காக எச்சரித்தான் என்று. அவனுடன் பேச வேண்டும் என்றிருந்தாலும், அவள், முன் அவனிடம் நடந்து கொண்ட விதம்… அவளுக்கு குற்ற உணர்வு ஏற்பட, அவனுடன் பேசவேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தாள்.

அவனோ, அவளாக வந்து பேசும்வரை பேசப் போவதில்லை என்றிருந்தாலும், அவளிடம் தவறாக நடந்து கொண்ட மைக்கேலை சும்மா விடவில்லை.

இருவரும் அதே எண்ணவோட்டதுடன் கரையில் நடந்துகொண்டிருக்க… அங்கிருந்த ஒரு கல் தடுக்கி அவள் விழச்செல்லும்போது தன்னிலைக்கு வந்தனர் இருவரும்.

‘அவள் விழப்போகிறாள்’ என்பதைப் பார்த்த அந்த நொடி… அவளின் இடை பற்றி தாங்கினான் க்ரிஷ். அவனின் அந்த பிடி, அவன் தொடுகை, முதல் முறை அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உணர… அவள் சற்று நெளிந்தாள்..

இருவரின் பார்வை நேர்கோட்டில் இருந்தது.

அவளை தன்னருகே இழுத்த க்ரிஷ், மார்போடு அணைத்துக்கொண்டு, அவள் காதருகில்… “நானும் ஹார்வர்ட் போனப்ப உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். அந்த வயசுல அதுக்கான அர்த்தம் என்னனு புரியல”

“ஒருவேள உன்கூட அப்போ பேசி இருந்தேன்னா, நம்ம லைஃப் இப்போ வேற மாதிரி இருந்திருக்கலாம். பட், சில விஷயங்கள் எப்போ நடக்கணும்னு இருக்கோ… அப்போ அது இயல்பா நடக்கும், அதுக்கான நேரம் வர்றப்ப சுஷி”

“நம்ம பிரியனும்னு இருந்திருக்கு. இப்போ சேரனும்னு இருக்கு. இனி பாஸ்ட் பத்தி பேசவே கூடாது… நினைக்கவும் கூடாது. நேத்து பிரிஞ்சோம் இன்னிக்கி சேர்ந்துட்டோம்… அதுவும் இப்படி சேர்ந்திருக்கோம்” என சொல்லி இறுக கட்டிக்கொண்டு புன்னகைத்தான்.

அவன் பிடியில் இருந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கண்கள் லேசாக கலங்கியிருந்தது.

அவன் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்பது போல் புன்னகையுடன் கேட்க… அவனை செல்லமாக அடித்தாள்.

மறுபடியும் அவன் மேல் சாய்ந்தவளின் தலை உச்சியை நுகர்ந்தபடி முத்தமிட்டான். பதிலுக்கு அவன் இதயத்துடிப்புடன் அவளுடைய முத்தத்தையும் கலந்தாள்.

அந்த இரவு நிலவின் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த கடல் நீர், அழகான நிலவு, தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த இருவர்…. என்று அந்த காட்சி ஒரு சில்லுவட் போல் ரம்மியமாக இருந்தது.