Mk 20(1)
Mk 20(1)
20(1)
மூச்சடைக்க ‘ யாழி ‘ ‘ யாழி’ என கத்தியப்படி ஓடிவந்தான் பலராமன்.
அங்கிருந்த கூட்டத்தை நகர்த்திவிட்டு பார்த்தவனுக்கு உயிரே பிரிந்ததது போலான வலி அவன் உடலில் ஊடுருவியது.
” யாழி ” கதறலோடு இரத்த வெல்லத்தில் மயக்க நிலைக்கு சென்றவளை கண்டு கதறினான்.
” ப்ளிஸ் யாராவது அம்ப்லென்ஸ்க்கு கால் பண்ணுங்களேன் ” ராம் கத்த
” இருங்க வந்துட்டு இருக்கு. ஆல்ரெடி இன்ஃபார்ம் பண்ணியாச்சி ” அங்கு வேலை செய்யும் காவலாளி ஒருவர் கூறினார்.
” யாழி யாழி கண்ணை திற மூடாத ” என்று அவள் கண்ணத்தை தட்டி சொல்லிய படியே இருந்தான்.
“பே..பி…” என்ற படியே மயங்கி போனாள்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்ப்லென்ஸ் வந்து அவளை ஏற்றிச் சென்றது.
மருத்துவமனையில் அவளுக்கான சிகிச்சை தொடங்கியது.
சில நிமிடங்களுக்கு முன்பு ,
ராமின் வார்த்தைகளை கேட்டு உள்ளுக்குள் தவித்தாள் பெண்ணவள்.
‘ சாரி டா ராம் நான் உன்னைய ரொம்பவே கஷ்டப்படுத்துறேன். ஆனா எனக்கு வேற வழி தெரியல டா. நாம ஒன்னு சேர்ந்தா வாழ்க்கையே நரகமாயிடும் ராம். இப்போ இல்லன்னாலும் ஒரு நாள் நீ புரிஞ்சிப்ப , உண்மையை சொல்லிட்டு போக தான் ஆசை. ஆனா அத்தை தான் இப்போதைக்கு வேணாம்னு சொல்லி என்னை தடுத்துட்டாங்க ‘ மனதோடு பலராமனுக்கு மன்னிப்பை கேட்டாள்.
ஆனாலும் நெறிஞ்சு முல்லாய் மனதை போட்டு குத்தியது. தனக்கு ஒரு நண்பனாய் ஆசானாய் இத்தனை வருட காலங்கள் தன்னோடு பயணித்த ராமின் நம்பிக்கைக்கு துரோகம் செய்கிறோமே என்ற குற்றவுணர்வு அவளை கொல்லாமல் கொன்றது.
காதல் அவளை எதையும் செய்ய தூண்டியது!
” ஹே எதுனாலும் கூப்பிடுவல ?” எதிர்ப்பார்ப்பை ஏந்தி கேட்டான் ராம்.
” ஹான் , எனக்கு உன்னை விட்டா இங்க யாரு இருக்கா சொல்லு. உன்னை தான் கூப்பிடுவேன் ” என்றதில் அகமகிழ்ந்து போனான் ராம்.
” சரி டா எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன். உன்னை ட்ராப் பண்ணட்டுமா ?”
” இல்ல இல்ல ப்ரெண்ட் பிக் பண்ணிப்பா ” அத்தனை வேகமாக இசை பதில் கூறினாள் .
” ஓகே டேக் கேர் டியர் ” என்று விடைப்பெற்றான் பலராமன்.
கேப் தேடி வெளியே வந்த இசைக்கு வெற்றி கண்ணில் பட , சந்தோஷம் தாளவில்லை .
அதில் சாலையை கடக்க முயன்றவளுக்கு கார் வந்தது தெரியாமல் போக , ப்ரேக் போட்டு நிறுத்த முயன்ற அந்த வண்டிக்கு முடியாது போக அவளை இடித்து விட்டு சென்றது.
கார் பார்க்கிங்கில் தன் காரை எடுக்க வந்தவனுக்கு , இசைக்கு நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ந்து விட்டான்.
அடுத்த நொடியே தான் ‘ யாழி ‘என்ற கத்தலோடு சாலையை கடந்து அவளை காணச் சென்றது எல்லாம்.
ஒருமணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவரை பார்த்தவன் , வேகமாக அவரை நோக்கி வந்தான்.
” டாக்டர் யாழிக்கு எதுவும் இல்லையே ” பயந்த மனதை வெகுவாக மறைத்து தைரியமாக இருப்பது போல் கேட்க
” அவுங்களுக்கு இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை. சி இஸ் ஃபைன் நவ் கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாருங்க ” என்று தோள் தட்டி சென்றார்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவளை காண உள்ளே சென்றான் பலராமன்.
இசையோ மயக்க மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘ ஒரு நிமிஷத்துல என் வாழ்க்கையே பாழாக்க பாத்துட்டியே யாழி மா. எனக்கு நீ உயிரு டா , நீ இல்லனா இந்த உடலுக்கு மட்டும் இங்க என்ன வேலை சொல்லு ” அவன் கண்களில் நீர்த்திவலைகள் ஊற்றெடுத்தது.
” நான் உன்கூட சந்தோஷமா வாழ ஆசப்படுறேன் யாழி . சீக்கிரமா நல்லாகிடு” என அவள் நெற்றியில் மென்முத்தமொன்றை பதித்தான்.
இரண்டு மணிநேரம் கழித்து முழித்தவளுக்கு தலையில் விண்ணென்று ஒரு வலி .
“ம்மா..” என்று வலியில் பெண்ணவள் துடிக்க ராமோ மனதளவில் துடித்தான்.
” ஒன்னும் இல்ல டா தலையில அடிப்பட்டதுனால கொஞ்சமா பெயின் இருக்க தான் செய்யும். சீக்கிரமே சரியாகிடும் யாழி”என்க தலையை மட்டும் மெதுவாக அசைத்தாள்.
அவள் மனமெங்கும் வெற்றியை பார்த்த நொடியிலே நிலைத்திருந்தது.
.
.
.
திருச்சி
வெற்றியும் இனியாவும் வருவதை முன்னிட்டு அவர்களை அழைத்து வருவதற்காக காரை எடுத்து சென்றிருந்தான் மணிமாறன்.
” தரு , இந்த ஃப்ளைட் எக்ஸ்பீரியன்ஸ் நல்லா இருந்துச்சி. வானத்துல பார்த்து மட்டுமே பழகுன என்னை நீங்க அதுலையே பறக்க வைச்சுடீங்க ரொம்ப தேங்க்ஸ் “
” உன் தேங்க்ஸ் எல்லாம் குப்பையில தூக்கி போடு அது யாருக்கு வேணும்.”
” ஏன் ஏன் ஏன் தூக்கி போடணும் ?”
” எத்தனை தடவை ஏன் கேட்டாலும் அதுக்கு பதில் கிடையாது. முடிஞ்சா கண்டு பிடிச்சுக்கோ ” என்று சொல்லும் இவனே ஒரு நாள் அவளது மன்னிப்பை ஏற்க மறுக்கப்போறான்.
” ப்ளிஸ் சொல்லுங்களேன் “
” முடியாது வா அங்க அண்ணா வெயிட் பண்றான் நாம போலாம் ” என்று அவளை அழைத்து சென்றான் அவன்.
மூவருமாக வயலூரை நெருங்கிய போது வெற்றி இனியாவிடம் ,” வீட்டுக்கு போனதும் அத்த சொத்தன்னு கத்திட்டு போன வகுந்து புடவேன் வகுந்து ஜாக்கிரதை ” மனைவியை மிரட்டினான் வெற்றி.
” வேணாம் நானே பாவம். அப்டிலாம் எதுவும் பண்ண மாட்டேன் ” முகத்தை குழந்தைபோல் வைத்து கொண்டு சொல்ல
” நடிக்காத அப்டி மட்டும் போய் பாரு இன்னைக்கு நான் கொடுக்கிற தண்டனைல நீ ஓட போற ” கைநீட்டி எச்சரிக்கை விடுத்தான்.
பயந்த பிள்ளை போல் முகத்தை வைத்து கொண்டு வந்தாள்.
வீட்டிற்குள் கார் நுழைந்த அடுத்த நொடியே , ” அத்தான் காரை நிப்பாட்டுங்க ” இனியா அவசர படுத்த
” இரு நிப்பாட்டுறேன்..” என்று வண்டியை நிப்பாட்டினான் மணிமாறன்.
” அத்தை மாமா ” கத்திய படி வண்டியிலிருந்து இறங்கி ஓடினாள் இனியா.
” உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா என்ன அப்டியே கிடைக்கலன்னா கூட சந்தோஷமா இருந்திருப்பேன். இப்போ பாருங்க இவளை கட்டிக்கிட்டு நான் அவதிப்படுறேன்” தன் நிலையை எண்ணி தலையில் அடித்து கொண்டான் வெற்றி.
” போ டா போ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் டா தம்பி. அதான் நமக்கு இப்படி ஒரு மனைவிங்க கிடைச்சிருக்காங்க ”
” சரி டா அண்ணா வா உள்ள போலாம் ” என்று அண்ணனோடு உள்ளே சென்றான்.
அன்றிரவு இனியாவும் விஜயசாந்தியும் சமையல் வேலை செய்து கொண்டிருக்க , உள்ளே வந்த வெற்றி ” நான் ஏதாவது உதவி செய்யனுமா சொல்லுங்க ” என்று கேட்டதும் இனியாவை தவிர்த்து அனைவருக்கும் ஆச்சரியமே.
ஏனெனில் சமையல் குறித்து அவன் இன்னாள் வரை எந்த மாதிரியான உதவியும் அன்னைக்கு செய்ததில்லை.
அவன் என்று இல்லை அந்த வீட்டில் இருக்கும் மற்ற இருவரும் கூட அன்னைக்காகவோ மனைவிக்காகவோ எந்த உதவியும் செய்ததில்லை.
” என்ன டா இது புதுசா இருக்கு ? இத்தனை வருஷத்துல நீ இப்டிலாம் கேட்டது இல்லையே டா ” விஜயசாந்தி ஆச்சரியமாக கேட்கவே பதில் சொன்னான் வெற்றி.
” இதுல என்ன மா இருக்கு எல்லா வேலையும் மனிசங்க செய்றது தானே. இவ்ளோ நாள் கேட்கலைன்னா என்ன இனி கேட்பேன். இப்போ சொல்லுங்க நான் என்ன செய்யனும்னு ” வெற்றியின் பேச்சில் இனியா புன்னகைக்க மனம் நிறைந்து போனது பரமசிவத்திற்கு.
இருவரது வாழ்க்கையும் எப்டியாகபோகுதோ என்று பயந்தவருக்கு இது மகிழ்ச்சிகரமான விடயமாக அமைந்தது.
பிறகு , வெற்றியின் உதவியோடு சேர்ந்து விரைவாகவே சமைத்து முடித்தனர்.
சாப்பிட்டு முடிக்கும்போது , விஜயசாந்தி பேச தொடங்கினார்.
” அடுத்தவாரம் ஒரு நல்ல நாளா பார்த்து தாலி பிரிச்சு கோக்குற ஃப்ங்ஷன் வச்சிக்கலாம் ” என்க
” சரி விஜயா . இது உங்களோட ஃப்ங்ஷன் தானே யார கூப்பிடனுமோ கூப்பிட்டுக்கோ ” என பரமசிவம் கூற ஆமோதிப்பாக மணிமாறனும் தலையை ஆட்டினான்.
” நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க?”விஜயா இருவரையும் பார்த்து வினவ ,
” செஞ்சிடலாம் மா ” என்று வெற்றி கூறவே இனியா மௌனித்தாள்.
பின் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் குடும்பமாக அமர்ந்து பேசியவர்கள் உறங்க சென்றனர்.
போகும் போது தந்தையை மட்டும் நிப்பாட்டிய வெற்றியை கேள்வியாய் நோக்கினார் பரமசிவம்.
” என்ன வெற்றி?”
” தேங்க்ஸ் பா ” மொட்டையாக வெற்றி சொல்ல
” எதுக்கு தம்பி நன்றிலாம் சொல்ற ? என்ன விஷயம் “
” உங்க அம்முவை என்னோட லைஃப்ல கொண்டு வந்ததுக்கு நன்றி பா. இசையை கல்யாணம் பண்ணியிருந்தா எப்படி வாழ்ந்திருப்பேன்னு தெரியாது. ஆனா இப்போ ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் பா. எனக்கு அவ இன்னொரு தாயா இருந்து ஒவ்வொன்னையும் கத்து கொடுக்கிறா . ஐ திங்க் ஐயம் ப்ளெஸ்ட் பா ” உண்மையான சந்தோஷத்தோடு பேசவே அகமகிழ்ந்து போனார் பரமசிவம்.
” இது கடவுள் போட்ட முடிச்சு தம்பி நான் எதுவும் பண்ணல . நீங்க சந்தோஷமா இருந்தாலே அது போதும் எங்களுக்கு. புள்ளைங்களோட சந்தோஷத்துல தான் பெத்தவுங்களுக்கான சந்தோஷமும் நிம்மதியும் அடங்கி இருக்கு”
” ம்ம் பா “
“சரி நேரமாச்சு பாரு போ போய் தூங்கு ” என்று தோள் தட்டி படுக்க சென்றார் பரமசிவம்.
*************
வெற்றி இனியாவை அவனது மாமனார் மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
அங்கே போனதற்கான முக்கிய காரணமே மாமியாரை காண தான்.
” எப்டி இருக்கீங்க ரெண்டு பேரும்?” ஞானவேல் பாசமாக கேட்கவே பதில் கூறினார்கள் இருவரும்.
” எங்க மாமா என்னோட அத்தைய காணோம் ” வெற்றி பார்வையை சுழற்றியபடி கேட்க
” அவ கோவிலுக்கு போயிருக்கா மாப்பிள்ளை . இதோ வர நேரம் தான் “
அடுத்த சில மணி துளிகளில் காந்திமதியும் வந்துவிட , வீட்டிற்குள் வந்தவருக்கு இருவரையும் பார்த்து ஆச்சரிய அதிர்ச்சியே.
தந்தையும் மகளும் பேசுவதையே வாசலில் நின்று பார்த்து கொண்டிருந்த காந்திமதியை நோக்கி மெல்ல நடையிட்டான் வெற்றி.
” என்ன மாமியாரே அப்டியே ஸ்டனாகி நிக்குறீங்க “
” நீ எதுக்கு இங்க வந்த , உன்ன யாரு இப்போ வெத்தல பாக்கு வெச்சு அழைச்சது? ” வெளிப்படையாகவே தன் அதிருப்தியை காட்டினார் காந்திமதி.
” என்னோட மாமியார் வீட்டுக்கு வர யாரும் வெத்தல பாக்கு வச்சி அழைக்கணும்னு அவசியமே இல்லை மாமியாரே ” கிண்டலாய் கூறினான் வெற்றி.
கடுப்பின் உச்சத்தில் இருந்தார் காந்திமதி.
” இங்க வந்ததே உங்களை பார்க்கத்தான் மாமியாரே ” என்றவனை கேள்வியாக நோக்கினார் காந்திமதி.
” நீங்க எனக்கு ஒரு பவளத்தை கொடுத்திருக்கீங்கள அதுக்கான நன்றியை சொல்லியே ஆகணும் இல்லையா “
” ம்ஹூம் எனக்கு உன்னோட நன்றி தேவையே இல்லை . உன்கிட்ட இருந்து பிரிச்சு என் அண்ணன் பையனுக்கு அவளை கட்டி வைக்கத்தான் போறேன் ” ஆங்காரமாய் கூறிவிட்டு புன்னகையோடு நகர்ந்தார் காந்திமதி.
வெற்றிக்கு காந்திமதியின் பேச்சு சிரிப்பை தான் மூட்டியது.
குரைக்கும் நாய் கடிக்காது என்று சாதாரணமாக எண்ணிவிட்டான் வெற்றி.
இது குரைக்குமா கடிக்குமா அல்லது காவலாக நின்று காக்குமா என்று பின்வரும் காலங்களில் தான் தெரியும்.
அன்றிரவே காரில் சென்னைக்கு கிளம்பி வந்தனர்.
அடுத்த வாரத்திலே நல்ல நாள் பார்த்து தாலி பிரித்து கோர்த்தனர்.
முதல் முறை கட்டிய போது விருப்பமில்லாது கட்டியிருக்க , தங்கத்தில் போடும் போது மனம் நிறைந்து சந்தோஷத்தோடு போட்டுவிட்டான்.
*******
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
இந்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள்ளே நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது.
அன்று ஏதோ காலையிலே ஆஃபிஸில் வேலை இருக்கவும் வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் இனியா.
“தரு கொஞ்சம் சீக்கிரமா கிளம்புகளேன்! ” வேகமாக கிளம்பிய படியே கணவனை விரைவுப் படுத்தினாள்.
” இதுக்கு நீ என்னைய சீக்கிரமே எழுப்பி விட்டிருக்கணும் சில் “
” இப்போ நான் இருக்கேன் சரி , நான் இல்லாத போது என்ன பண்ணுவீங்க . எந்துரிச்சிருக்கணும் தரு “
” இப்டி பேசாதன்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்றது இனியா ” கண்டன பார்வை பார்த்தான் வெற்றி.
” சரி சரி இனி பேசமாட்டேன். நான் கீழ வெயிட் பண்றேன் நீங்க வாங்க ” என்று சொல்லி அங்கிருந்து அந்த பேச்சிலிருந்து தப்பித்து கொண்டு கீழே ஓடிவிட்டாள்.
அவளை அவள் வேலை செய்யும் இடத்தில் விட்டவன் ஸ்டூடியோவிற்கு விரைந்தான்.
ஆறு மணி ஷோ முடித்து ஆற அமர வந்து அமர்ந்தவனுக்கு காப்பியை நீட்டினான் கௌதம்.
” என்ன இது ?”
” தெரியல காப்பி. சீக்கிரமா குடி எனக்கு வேலை இருக்கு ” என்க
” எதுக்கு இப்படி காப்பியை கொடுத்து சீக்கிரமா குடிக்க சொல்ற ?”
” நீ இப்போ குடிக்கலன்னா என் தங்கச்சி என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவா. அண்ணா அவரு காலையில பால் ஏதும் குடிக்கல ஒரு காப்பி வாங்கி குடுத்து , அவர் குடிச்சதும் எனக்கு மெசெஜ் பண்ணுங்கன்னு சொல்லிருக்கா பா . சோ சீக்கிரம் ” நண்பனின் கூற்றில் மனைவி தன் மீது வைத்திருக்கும் அக்கறையை கண்டு பெருமிதம் கொண்டான்.
மதியம் போல் இருவரும் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்க , அப்போது வரவேற்ப்பாளர் வந்து ” வெற்றி” என்றழைக்க ,
” ஹான் சொல்லுங்க , என்ன வேணும் “
” உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க வெற்றி” வரவேற்ப்பாளர் கூற ,
” யார் வந்திருகாங்க ?”
” ஒரு பொண்ணு சார் . பேர் கேட்டா அவருக்கு முக்கியமானவர்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க “
” சரி நான் வரேன்னு சொல்லுங்க ” என்று அந்த பெண்ணை அனுப்பி வைத்தவனுக்கு யோசனையாக இருந்தது.
” யாரு மச்சான் உன்னை பார்க்க வந்தது ?” பக்கத்திலிருந்து கௌதம் கேட்க ,
” தெரியலையே டா “
” தங்கச்சியா இருக்குமோ ” கௌதம் சொல்ல
‘ ம்ஹூம், அப்படியே மேடம் வந்துட்டாலும். அவ இப்போ வேலையில இருப்பா டா. காலையிலயே அறக்க பறக்க கிளம்பி போனா ” என்க
” தெரியுது . அப்போ யாரா இருக்கும்?”
” போயே பார்ப்போம் ” என்று சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான்.
அங்கே அவனுக்காக காத்திருந்தது வேறுயாருமில்லை இசையே தான். அதுவும் தலையில் சிறு கட்டு வேறு
” உன்னோட காதலியா மச்சான்” அவனது அதிர்ச்சியை கண்டு கௌதம் கேட்கவே அவனை எரிப்பது போல் பார்த்தான்.
அவனது பார்வைக்கு பயந்து திரும்பி கொண்ட கௌதம் பார்த்தது என்னவோ லிஃப்டிலிருந்து வெளியே வந்த இனியாவை தான்.
” மச்சான் உனக்கு எங்கேயே மச்சம் இருக்கு டா ” என்க
” நேரங்கெட்ட நேரத்துல உன்னோட சென்ஸ் ஆஃப் ஹ்யூமரை (humour) காட்டி கடுப்படிக்காத ” வெற்றி கடுப்பாக கூற ,
” இல்ல மச்சான் இந்த பக்கம் பாரேன் என் தங்கச்சி வரா ” என்றதும் திரும்பி பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி தாங்காது நெஞ்சில் கைவைத்து விட்டான்.
இனி அவன் வாழ்வில் இனியாவா ? இசையா?