சிறிய வார்த்தை…
ஆனால், கடலைவிட ஆழம் கொண்ட, அர்த்தம் பொதிந்த வார்த்தை.
இறைவன் படைப்பில் அதி உன்னதம், இந்த உயிர் கொண்ட மனிதன்.
தாயின் கருவறையில் தொடங்கி, கல்லறை அடையும் வரை, இந்த உயிரை வைத்து நாம் விளையாடிப் பார்க்கும் ஆட்டம், கொஞ்சம் நஞ்சமல்ல.
இன்னொரு உயிரை வதைப்பது, தனக்கு தேவையென்றால் இன்னொரு உயிரைக் கொல்லவும் தயங்காத மனித மிருகங்கள் இங்கே அதிகம்.
மனிதன் என்ற போர்வையில் ஜாதி, மத, இனம், பதவிவெறி, தன் குடும்பம் வாழ, பணத்திற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக, இங்கே நிகழ்த்தப்படும் கோர தாண்டவங்கள், அதில் பறிக்கப்படும் உயிர்கள் கணக்கில் அடங்காதவை.
இதில் முக்கியப்பங்கு வகிப்பவை, ‘ORGANISED CRIME’ என்பவை.
போதை மருந்து, மனிதர்கள் கடத்தல்/HUMAN TRAFFICKING, பாலியல் வன்முறை/ sexual abuse, sexual exploitation, ஆயுத கடத்தல், தீவிரவாதம் இவையெல்லாம், உயிர்களோடு விளையாடப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்.
ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. பிரித்துப் பார்க்க முடியாதவை.
இந்த organised crime/ underworld என்னும் நிழல் உலக சாம்ராஜ்யங்களின் அதிபதிகளை தான் நாம், ‘தாதா, டான், ganster’ என்று அழைக்கிறோம்.
நிறைய திரைப்படங்கள், கதைகள் இவர்களை மய்யமாக வைத்து வந்து விட்டது.
இதுபோல் ஆட்கள், எல்லாம் நிஜமா?… இல்லை, கற்பனையார்களின் படைப்பின் வெளிப்பாடா?…’ என்ற கேள்விக்கு விடையாகக் கண் முன் விரிந்தது. நிஜ நிழல் உலகம்.
அதன் தாக்கமே, உயிரோடு விளையாடு.’
இந்த, ‘நிழல் உலகம்’ சாதாரண மனிதர்களை, குடும்பங்களைப் பொறுத்தவரை, செய்தியில் கேக்கும் நியூஸ் அவ்வளவு தான்.
அது செய்தியாக இருக்கும் வரை தான் நமக்கும் பாதுகாப்பு.
ஆனால், இந்த நிழல் உலகிற்கு, உயிர் பசி அதிகம்.
தேவைகள் மிக அதிகம்.
அதன் கரங்கள், தங்கள் தேவையைத் தீர்த்துக் கொள்ள நீளும்போது, அதில் சிக்கி, நிஜ வாழ்க்கையில் போன சாதாரண மனிதர்களின் உயிர்களும் மிக ஏராளம்.
இங்குத், ‘தனக்கு மிஞ்சிக் கூட எதுவும் மற்றவர்களுக்குக் கிடையாது’ என்ற கோட்பாடுகள் உண்டு.
அதைத் தடுக்க ஒரு போராட்டம் நடந்தால்!….
இந்தப் போராட்டத்தின் நடுவே, நிழல் உலகத்தில், ஒரு சாதாரண பெண் சிக்கி கொண்டால்?….
யார், யாரின் உயிரோடு, எப்படி விளையாடுகிறார்கள், எந்த உயிர் யாருக்காகத் துடிக்கிறது என்பதே, ‘உயிரோடு விளையாடு’
‘உயிரோடு விளையாடுவது’ ரெண்டு இடத்தில் மட்டுமே நடக்கும்.
ஒன்று காதல்.
இன்னொன்று குற்றங்கள் நடக்கும்போது.
இங்கே, உயிரோடு விளையாடப்படும் ஆட்டம், எதை நோக்கிக் என்பதன் விடையே, ‘உயிரோடு விளையாடு.’
உயிரோடு விளையாடுபவன் – தேஜ்
நிழல் உலக சாம்ராஜ்ஜியம், SYNDICATE CRIME, UNDERWORLD குற்ற உலகத்தின் நூற்றுக்கணக்கான மூடிசூடா இளவரசர்களில் ஒருவன்.
இவன் நிற்பது யுத்த களம்.
‘செய் அல்லது செத்து மடி’ என்ற நிலையில் இருப்பவன்.
‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற ஆபத்தான வாழ்க்கை, இவன் விளையாட்டுக் களம்.
ஓடும் ரத்த ஆற்றில், இவன் சாம்ராஜ்ஜியம். துப்பாக்கி, வெடிகுண்டுகள் இவன் ஆயுதம். இரக்கம், கருணை என்பதை துறந்தவன்.
அவனாகத் தேர்ந்தெடுத்த யுத்த களம் இல்லை அது. அவன்மீது திணிக்கப்பட்ட போர்.
எரிமலை போன்றவனின் முன்னால், சிக்கும் ரோஜா மலர் என்னவாகும்?
ஈஸ்வர்! …
பூக்களின் மென்மை கொண்டவன். அக்மார்க் காதலன். அன்பு, அமைதி, பாசம் இவன் உலகம்.
எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பவன். வண்ணமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவனை, இந்த நிழல் உலகின் கைகள், தங்கள் பசிக்கு, உணவாக்கி கொண்டதில் சிதைந்த ஜீவன்.
வாழ்க்கை பூக்கள் நிறைந்த சோலைவனமாய் இருந்தவனுக்கு, அது வாழ முடியாத கடும் ஆபத்துகள் நிறைந்த பாலைவனம் என்ற கோர முகத்தில் எரிக்கப்பட்டவன்.
மற்றவர்கள் உயிரை வைத்து விளையாடும் ஆட்டத்தில், சிக்கி பலியாகும் அப்பாவி ஜீவன்.
சம்யுக்தா!…
இவள் ரதியினம்.
உயிரைக் காக்கும் தேவதை பெண்ணவள். இவள் வாழ்க்கை மலர்வனம்.
நிழல் உலகம் என்னும் சூறாவளி காற்றில் சிக்கி, அங்கு உயிரை வைத்து விளையாடப்படும் விளையாட்டில் தானும் ஒரு அங்கமாய் மாறப் போகிறோம் என்பதை அறியாதவளாய், இரு அரக்கர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுபவள்.
மீட்பவன் யார்?
மீட்சி எப்பொழுது?
Let the game of cat and mouse and the hunter and the hunted begins….
GAME STARTS
Leave a Reply