Mk 25

FB_IMG_1631334494200-0dbdd27a

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 25

அடம் பிடிக்கும் குழந்தையென இசை ,தனக்கு வெற்றி தான் வேண்டும் அவனில்லாத வாழ்வு நரகத்திற்கு சமம் என மனதில் விதையாய் விதைத்து விருட்சமாய் வளர்ந்திருந்தாள்.

அவளால் வெற்றியை வேறொருத்தியோடு பார்க்கவே முடியவில்லை. அதிலும் அவன் காதல் சொன்ன வீடியோ அவளை தீப்பிழம்பாய் உள்ளுக்குள் எரிய வைத்தது.

 

அத்தனை வன்மமும் இனியா மீது தான் திரும்பியது.

 

அவளை கொன்றே தீர வேண்டும் என்பது போல் ஆத்திரம் அவள் கண்ணை மறைத்தது.

 

இந்த நிலையில் அவளை நெருங்க கூட முடியவில்லை இசையால். கேடயமாக இருந்து அவளை காத்து வருகின்றான் வெற்றி.

 

” இனியா உன்னை எப்படி அவன் வாழ்க்கையில இருந்து நீக்குறேன்னு மட்டும் பாரு ” கிறுக்கு பிடித்தவள் போல் அறையிலிருந்த பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தாள்.

 

அதில் உடைப்பட்ட ஒரு கண்ணாடி பொருள் அவள் கையை கிழித்து விட்டு சென்றது.

 

இரத்தம் சொட்ட சொட்ட சுவற்றில் கையை ஓங்கி குத்தினாள்.

 

அந்த நேரம் பார்த்து தங்கையை பார்க்கலாமென்று வீட்டிற்கு வந்த வாசுதேவிற்கு அலங்கோலமாக இருந்த வீடு தான் கண்ணில் பட்டது.

 

” யாழி ”  அழைத்தவாறே உள்ளுக்குள் அடியெடுத்து வைத்தான்.

 

“வராத அங்கேயே நில்லு ” என அவனை நோக்கி எதையோ எறிந்தாள்.

 

அது சரியாக அவன் நெற்றியை பதம் பார்த்துவிட , தலையை தேய்த்து கொண்டான்.

 

” யாழி என்ன பண்ற நீ ?” கோபமாக வந்தது அவன் குரல்.

 

” என்னமோ பண்றேன் உனக்கென்ன வந்தது ” இதுநாள்வரை அவன் மீது இருந்த பயத்தை தூக்கியெறிந்தாள்.

 

இருட்டாக இருக்கவும் ஸ்விட்ச் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து அதனை போட்டவன் அவளது கோலத்தை கண்டு அதிர்ந்து விட்டான்.

 

” யாழி ” என வாசுதேவ் கத்திவிட 

 

” கத்தாத இன்னும் சாகமாக உயிரோட தான் இருக்கேன். அவ்வளோ சீக்கிரம் செத்திட மாட்டேன் “வஞ்சம் வைத்து பேசினாள்.

 

” கையில இரத்தம் வருது யாழி” என அவளை நெருங்க பார்க்க அவளோ அவனை நெருங்க விடாது தடுத்து நிறுத்தினாள்.

 

” கிட்ட வராத அப்புறம் நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது ” பெண்ணவள் மிரட்ட அண்ணனாக அவள் முன்பு பயத்துடன் நின்றான்.

 

” உன்னால தான் டா ,உன்னால மட்டுமே தான் எனக்கு இன்னைக்கு இந்த நிலை. நீ மட்டும் அன்னைக்கு வராம இருந்திருந்தா என்னோட வெற்றிக்கிட்ட ஒழுங்கா காதலை சொல்லியிருப்பேன். அதை கெடுத்துட்டியே ” என அவனது சட்டையை பிடித்து ஆக்ரோஷமாக கத்தினாள்.

 

“யாழி இப்போ இது பேச நேரமில்லை. வா நாம முதல ஹாஸ்பிடல் போகலாம் ” பதற்றத்துடன் சொல்லி அழைக்க 

 

” முடியாது வர முடியாது. அவளை அழிக்காம நான் எங்கேயும் வராதயில்லை .அவள அழிச்சா தான் வெற்றி எனக்கு கிடைப்பான்” முரண்டு பிடிக்க , இதற்கு மேலேயும் சும்மா விட்டால் தங்கையின் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அவள் வழிக்கே சென்றான். 

 

” சரி உனக்காக நான் அதை செய்றேன். இப்போ நீ ஹாஸ்பிடலுக்கு வா ” தங்கையின் வழியிலே போய் அவளை சமாதானம் செய்ய முற்பட்டான்.

 

” நம்பமாட்டேன் .நீ என்னை ஏமாத்துற “

 

” இல்ல நிஜமா நான் அந்த பொண்ணை தூக்கிட்டு உன்னோட வெற்றியை உன்கிட்டயே சேர்பிக்கிறேன் ” சத்தியம் பண்ணாத குறையாக சொன்னபின் தான் அவனை நெருங்கவே விட்டாள்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் அவளை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டாள்.

 

**********

 

இங்கே ஊருக்கு திரும்பி வந்த பின் அவர்கள் வாழ்வில் வசந்தம் தான்.

 

தினமொரு சண்டை அதன்பின்னான கூடல் என அழகாய் போய்க்கொண்டிருந்தது அவர்களது வாழ்வு.

 

அந்த நாளுக்கு பின் இருவருமே ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுத்து வாழ்க்கையை அழகாக வாழ கற்றுக்கொண்டனர்.

 

காதலை நொடிக்கொரு முறை கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த , மனைவியோ அதனை செயலில் காட்டுவாள்.

 

விஜயசாந்தி பூங்கோதையையும் பிள்ளை விக்ரமையும் கவனிக்கவென ஊருக்கு சென்றுவிட்டார்.

 

வார நாட்களில் சமைப்பதாக இருக்கட்டும் , வீட்டை சுத்தம் செய்வதாக இருக்கட்டும் அல்லது எந்த வேலையாக இருந்தாலும் இருவருமாக சேர்ந்து தான் செய்வார்கள்.

 

காதலோடு வாழ்க்கையை அத்தனை ரசித்து ருசித்து வாழ்க்கின்றனர்.

 

” சில் , எல்லாத்தையும் பேக் செஞ்சிட்டியா ” சமையலுக்கு காய்கறி நறுக்கி கொண்டே மனைவியிடம் கேட்க 

 

” இதோ பேக் பண்ணிட்டே இருக்கேங்க . திருவிழா அன்னைக்கு எந்த புடவை கட்றதன்னு தான் ஒரே குழப்பமா இருக்கு ” என அவளும் அறையில் இருந்தே சொல்ல 

 

” இரு இரு நான் வரேன் ” என்று வேலையை அப்படியே விட்டுவிட்டு மனைவியை நோக்கி சென்றான்.

 

” என்  இணைவியே! உங்களுக்கு சேவை செய்வதற்காக தான் நான் உள்ளேனே. பின் உங்களுக்கு ஏன் இந்த குழப்பங்கள் ” நாடக பாணியில் சொல்ல , கிளுக்கி  சிரித்தாள் இனியா.

 

” அஹான் ” பெண் நக்கல் பாஷை பேச ,

 

” ஆம் இணைவியே உமக்கு சேவை செய்வதற்காக என் கரங்கள் இரண்டும் காத்திருக்கிறது ” 

 

” பார்ரா  , தலைவர் பிண்ணி பெடல் எடுக்குறீங்க ” என்றதும் கண்ணடித்த வெற்றி ” கூறுங்கள் கூறுங்கள் ” மனைவியை ஊக்குவிக்க அவளோ நான்கைந்து புடவைகளை எடுத்து அவன் முன்பு விரித்தாள்.

 

” இது எல்லாமே நல்லா இருக்கு .எதை எடுக்குறதுன்னு தான் குழப்பமா இருக்கு தரு ” இதழ் சுளித்து கூற 

 

” இவ்வளோ தானா ” என்றவன் மனைவியை தன்னோடு இழுத்தான்.

 

அவன் இழுத்த வேகத்தில் கணவனின் நெஞ்சிலே வந்து மோதினாள்.

 

இது தான் சரியான நேரமென‌ அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன் ,” வா வா உனக்கு ஏத்த புடவையை செலக்ட் செய்யலாம் ” 

 

” வா வான்னா , இதுக்கு மேல எங்க வரது. முதல என்னை விடுங்க தரு ” பெண்ணவள் சிணுங்க , அதுவே கணவனுக்கு ஒரு வித உற்சாகத்தை கொடுத்தது.

 

மனைவியின் கழுத்தில் கை வைத்து மாலையாக கோரத்தவன் ,” என்னோட மிஸஸ் கிட்ட மட்டும் தான் இப்படி இருக்க முடியும். வா இப்போ உனக்கு ஏத்த புடவையை செலக்ட் செய்யலாம்” என்று அவளை கண்ணாடி முன்பு நிப்பாட்டினான்.

 

ஒவ்வொரு புடவையாக அவள் மீது வைத்து பார்த்தவன் , கிட்ட தட்ட ஒரு புடவையை தேர்ந்தெடுக்க அரைமணிநேரம் எடுத்து கொண்டான்.

 

சில பல சில்மிஷங்களுக்கு பிறகே தான் புடவையை எடுத்தான்.

 

” நீ கிளம்பு நான் சமையல் வேலையை பார்த்துக்கிறேன் ” என்று அவள் கன்னம் தட்டி சென்ற கணவனை காதலாக நோக்கினாள் பெண்.

 

என்ன தவம் செய்தேனோ , இத்தகைய அன்பான பாசமான கணவன் கிடைக்க , ஏதோ ஒரு வகையில் தான் அதிஷ்டம் பெற்றவள் அதனாலே தனக்கு இவன் கணவனாக அமையபெற்றிருக்கிறான்.

 

ஒரு மனைவியாக கர்வம் கொண்டாள்.

 

பின்னர் அடுத்த நாள் ஊருக்கு கிளம்புவதற்க்கு தேவையானவற்றை தயார் செய்து வைத்தாள்.

 

*************

“வீட்டுக்கு எதாவது வாங்கிட்டு போகலாம்னா என்ன வாங்குறதுன்னே தெரியலையே ” புலம்பிய படி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் நுழைந்தான் கௌதம்.

 

” என்ன இது இத்தனை வெரைட்டிஸ் இருக்கு ” என முழித்தவன் குழந்தைகளுக்காக விளையாட்டு பொருட்கள் இருக்கும் இடத்தை நோக்கி மெல்ல நடையிட்டான்.

 

அங்கு சென்றவனுக்கு விதவிதமான பொருட்களை காணவும் விழி பிதுங்கி நின்றான்.

 

‘என்னத்தை வாங்குறதுன்னே தெரிலயே’ முழித்தப்படி நின்றவன் காலில் ஏதோ சுரண்டுவது போல் இருக்கவும் குனிந்து பார்த்தவனுக்கு மகிழ்ச்சியே..

 

” பாப்பு குட்டி” என குழந்தையை தூக்கிக் கொண்டான்.

 

” கௌவு ” குழந்தை முகத்தோடு முகம் உரசி கொஞ்சினாள்.

 

” செல்ல குட்டிக்கு இந்த கௌதமை ஞாபகம் இருக்கா ” என பட்டு கன்னத்தில் முத்தம் பதிக்க 

 

” இக்கு இக்கு ” கண் சிமிட்டியது குழந்தை.

 

” உங்க அம்மா எங்க டா செல்ல குட்டி ?” குழந்தையிடம் கேட்க 

 

ஒன்றரை வயது குழந்தையோ அன்னை இருக்கும் இடத்தை காட்டியது.

 

” அங்க இருக்காங்களா உங்க அம்மா? ” என்றதும் அழகாய் தலையை சாய்த்தாள்.

 

ஆசையாய் கண்டவன் குழந்தையின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டான்.

 

அதற்குள் ரோ குழந்தையை தேடி வர , குழந்தை அன்னையை கண்டு குதித்தது.

 

கௌதம் பின்புறமாக நிற்கவும் , ரோஷினி குழந்தையை யாரோ வைத்திருக்கிறார்கள் என பயந்து வேகமாக ஓடி வந்து , கால் தடுக்கி விழப்பார்த்தாள்.

குழந்தை ” ம்மா ” என்று கத்தும் சத்தத்தில் திரும்பியவன் ரோஷினி விழுவதை பார்த்து வேகமாக அவளது இடையில் கைவைத்து விழுகாமல் பிடித்து கொண்டான்.

” பார்த்துங்க ” என்றவாறே ரோஷினியை ஒழுங்காக நிற்க வைத்தான்.

” தேங்க்ஸ் ” என்றவள் அவனை விட்டு விலகி நின்றாள்.

குழந்தையோ அம்மா தனக்கு ஏதோ விளையாட்டு காட்டுகிறாள் என கிளுக்கி சிரித்தது.

” குழந்தையை இப்படியாங்க தனியா விடுறது ?நானா போகவும் பரவால்ல வேற யார் கையில்லாவது கிடைச்சிருந்தா என்ன ஆகுறது சொல்லுங்க”

“ஒரு இடத்துல நிற்கிறதே இல்ல. இப்போ தான் நடக்க ஆரம்பிச்சாளா , அதனால ஒரே ஓட்டம் தான். பில் போட்ற கேப்ல ஓடி வந்துட்டா ” என குழந்தையை வாங்க முயல ,குழந்தையோ கௌதமின் கழுத்தை கட்டிக் கொண்டு வர மறுத்தது.

” சரி நீங்க பில் போட்டு வாங்க . அதுவரைக்கும் நான் குட்டிய பார்த்துக்குறேன் ” என்றதும் குழந்தையை விட்டு சென்றாள் ரோஷினி.

” ப்பா ப்பா ” என கௌதமை கட்டி கொண்டு ஒரே ஆட்டம் தான்.

குழந்தையின் அப்பா என்ற அழைப்பு கௌதமை ஏதோ செய்தது. 

அவனால் அதை விவரிக்க முடியவில்லை. யாருமில்லாத நிலையில் தனக்கே தனக்கான இந்த அழைப்பு கௌதமை சந்தோஷத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது.

நிதமும் இவ்வழைப்பு என் காதில் ரிங்காரமிட வேண்டுமென மனம் கடந்து துடியாய் துடித்தது.

” இன்னொரு முறை சொல்லு டா குட்டி ” என்றதும் ” ப்பா ப்பா ” என்று கூறி கிளுக்கி சிரித்தது.

குழந்தையின் புன்னகையில் தன்னையே தொலைக்க தொடங்கினான் கௌதம்.

அதற்குள் ” கௌதம் குழந்தையை கொடுங்க ” என்ற ரோஷினியின் குரலில் துவண்டு போனது மனது.

” ஹான் ” குழந்தையை கொடுக்கவே மனமில்லாமல் கொடுத்தான்.

” தேங்க்ஸ் குழந்தையை பார்த்துக்கிடதுக்கு ” என்றவள் திரும்பி நடக்க போக , எதை சொல்லி அவளை தடுத்து நிறுத்த என யோசித்தவன் ” ரோஷினி” என்றழைத்தான்.

” ஹான் சொல்லுங்க கௌதம் ” 

” எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா ?” தயங்கி கேட்க

” ம்ம் என்னென்னு சொல்லுங்க “

” இல்ல , நாளைக்கு வெற்றியோட ஊருக்கு போறேன். அதான் குழந்தைக்கு ஏதாவது வாங்கிட்டு போகலாம்னு வந்தேன். ஆனா என்ன வாங்குறதுன்னே தெரியல. கொஞ்சம் வாங்க ஹெல்ப் பண்றீங்களா ” என பாவமாய் சொல்ல

” இதுல என்ன இருக்கு வாங்க ” என்றதும் குழந்தை மீண்டும் கௌதமிடம் தாவியது.

” யார்க்கிட்டயும் இவ இப்படி போக மாட்டா ,உங்க கிட்ட தான் இப்படி ஒட்டிக்கிறா ” சங்கடமாய் சொல்ல 

” எனக்கு இது பிடிச்சிருக்கு ” என்றவன் ரோஷினியை ஒரு பார்வை பார்த்து விட்டு முன்னே சென்றான்.

கௌதமின் இந்த பார்வை , பாவைக்கு ஏதோ தவறாக பட்டது. இருந்தும் கௌதமை தவறாக நினைக்க மனம் விளையவில்லை.

” விக்ரம் எப்படியும் பத்து மாத குழந்தையாக இருப்பான் ” என்றவள் குழந்தைக்கு ஏற்ப விளையாட்டு பொம்மையை வாங்கினாள்.

கௌதமோ குட்டி சஷ்வித்தா கூட பேசி விளையாண்டு கொண்டிருந்தான்.

பார்த்த ரோஷினிக்கு ஆச்சரியம் தான். யாருடனும் அண்டாத குழந்தை கௌதமிடம் மட்டும் செல்வது வியப்பாக இருந்தது.

பின்னர் ,பில் போட்டு விட்டு வெளியே வந்தார்கள்.

குழந்தையை ரோஷினியிடம் ஒப்படைத்த கௌதம் , ” ரோஷினி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் ” தயங்கி நிற்க

” சொல்லுங்க ” 

” எனக்கு குட்டியோட அப்பாவா இருக்க ஆசைப்படுகிறேன் ரோஷினி. உங்க பாஸ்ட்ல என்ன வேணா நடந்திருக்கலாம் ஆனா இனி உங்களுக்கும் குழந்தைக்கும் துணையா நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன் ” என்று சொன்னதும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.

” வாய மூடுங்கு கௌதம். இந்த மாதிரியான ஒரு எண்ணத்தோட இனி என்கிட்ட பேசாதீங்க ” என்று கிளம்பிவிட்டாள் அழும் குழந்தையோடு..

” என்னைக்கா இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு தான் ” என்று கத்தி சொன்னான்.

***********

இனியாவும் வெற்றியும் வீட்டை பூட்டி வெளியே  வந்து காரில் ஏறி அமரவும் மணி வெற்றிக்கு அழைத்தான்.

உடனே ப்ளூடூத் வழியாக காரோடு கனெக்ட் செய்தவன் ,” ஹலோ” என்றான்.

” கிளம்பிட்டியா டா ?”எடுத்த எடுப்பிலேயே கேட்க

” ஏன் உனக்கு ஹலோ சொல்லி ஆரம்பிக்க முடியாதோ “

” உனக்கெல்லாம் ஹலோ ஒன்னு தான் கேடு . முதல்ல கிளம்பிட்டியா இல்லையான்னு சொல்லு ” 

” அதெல்லாம் கிளம்பியாச்சி கிளம்பியாச்சி ” அலுத்து போன குரலில் உற்சாகமின்றி சொன்னான்.

” என்ன கொழுந்தனாரே ஊரு பக்கம் வர ஐடியா இல்ல போலையே ” பூங்கோதை வெற்றியை கலாய்க்க 

இனியாவிற்கு சிரிப்பு வந்தது. இதழ் மடக்கி சிரிப்பை வெளிவராமல் பார்த்து கொண்டாள்.

அதை ஓரக்கண்ணால் பார்த்து வெற்றி, ‘ சிரிக்கிறியா சிரி உனக்கிருக்கு கச்சேரி’ நினைத்தவன் வெளியில் மௌனமாய் இருந்தான்.

” என்ன கொழுந்தநாரே பேச்சையே காணோம்” 

” இல்ல அண்ணி ஒரு வேலை வந்துடுச்சி உங்க தங்கச்சிக்கு அதான் நேத்து கிளம்ப முடியல ” சமாளிப்பாக பதில் சொல்ல , பூங்கோதையோ சத்தமாக சிரிக்க , இனியாவிற்கு வெட்கமாக போய்விட்டது.

” மானத்தை வாங்காதீங்க தரு ” மெல்லிய குரலில் இனியா கூற 

” நான் இப்போ என்ன பண்ணேன்” புரியாது அதையும் சத்தமாக கேட்க 

” அதுக்கு நான் பதில் சொல்றேன் கொழுந்தனாரே ” என பூங்கோதை சொல்ல 

இனியா வெட்கத்தில் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

” உங்க அவுங்க என்கிட்ட உங்களுக்கு வேலை இருந்ததால தான் கிளம்ப முடியல்லைன்னு சொன்னாங்க ” என்றதும் இப்போது வெற்றிக்கு வெட்கமாகி போனது.

‘அய்யோ இப்படி சொதப்பி இருக்கோமே ‘ எண்ணி நொந்து கொண்டான்.

” சரிங்க அண்ணி நாம நாளைக்கு நேரலையே பேசலாம் ” என்று வைத்து விட்டான்.

அவள் கோர்த்திருந்த கையில் அழுத்தம் கொடுத்தவன் , அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.

இதேபோல் இவ்வளோடான வாழ்வில் தான் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.

எங்கே அவனுக்கு தெரியபோகுது , அடுத்த சில நாட்களிலே அவளை தன்னியே விட்டுவிட்டு வரபோகிறான் என்று. தெரிந்திருந்தால் இந்த பயணத்தை தடுத்திருக்கலாம்.

எல்லாம் விதி.

காலத்தின் போக்கில் எல்லாம் நடந்தே தான் தீரும். எதையும் மாற்றியமைக்க முடியாதே.