NIRAL MOZHI -15.2

bitcoin

NIRAL MOZHI -15.2

நிகில் சொன்னதுபடி, சென்னை மாநகரத்தின் ஆணையர் (Comissioner) மற்றும் ஸ்டேட் சைபர் கிரைம் கோ-ஆர்டினேட்டருக்கும் (State Cyber Crime Co-Ordinator) தகவல் அனுப்பப்பட்டது.

குறுஞ்செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த நிகிலின் அருகே வந்து, முரளி அமர்ந்தார்.

“முரளி… நீங்க, உங்க ஆஃபீஸ்-க்கு போயிடுங்க”

“ஏன் நிகில்?”

“நீங்க வெளியே இருந்தாதான்… நான் சொல்லச் சொல்ல, மத்த இடத்துக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க கரெக்டா இருக்கும்”

“ஆர் யூ ஸூயர்?”

“யெஸ்” என்றான்.

முரளி கிளம்பிவிட்டார்.

அடுத்து!

நிகில் பார்த்துக் கொண்டிருந்தது என்ன குறுஞ்செய்தி?

அது கிரிப்டோ கரன்சி பயன்படுத்துவோருக்கு வரும் ஒரு சேவை குறுஞ்செய்தி(service message)!  கிரிப்டோ கரன்சி பற்றிய விவரங்களுக்காக, ஏதேனும் தளத்தில் கைப்பேசி எண்ணை பதிவு செய்திருந்தால் வரும் குறுஞ்செய்தி!

PICTURE-1 PLZ CLICK

‘நல் கேர்’ கைப்பேசி எண்ணிற்கு வந்தது, அன்றைய தினத்தில் இந்திய ரூபாய்க்கு நிகரான பிட்காயினின் மதிப்பு என்னவென்ற குறுஞ்செய்தி!!

அதை வைத்து, நிகில் கணித்திருந்தான்! பணப் பரிவர்த்தனை நடப்பது, இதில்தான் என்று!

எதில்?? பிட்காயினில் (Bitcoin)!!

அடுத்து!

யோசித்தான்.

‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தான்.

பணப் பரிவர்த்தனை ‘எப்போது நடந்திருக்க வேண்டும்?’ என்று கணிக்க ஆரம்பித்தான்.

ஒன்று!

அந்த நிறுவனம் தடைசெய்யப்பட்ட(Blocklist) நிறுவனம் என்று அரசு அறிவித்த பின்னர்!

அது இல்லையென்றால்??

‘மால்வேர் அட்டாக்’ நடந்து பிரச்சனை பெரிதாக ஆனதிற்குப் பிறகு!

இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நடந்த பின்தான், பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கும்!

யோசித்து, முடிவு செய்துவிட்டான்.

அடுத்து! நேரம் 9:30

சற்று நேரத்திற்கு, முரளி கொடுத்த கைப்பேசியை உபயோகிக்க ஆரம்பித்ததான்.

கைப்பேசியில் உலாவியை(Browser- Ex : Opera) எடுத்து, http//www.blackchain.com/explorer என்று தட்டச்சு செய்தான்.

என்ன செய்யப் போகிறான்?

இதுவரை நடந்த பிட்காயின் பணப் பரிவர்தனைகளைப் (Bitcoin Transactions) பார்க்கப் போகிறான்!

இத்தனை வருடத்தில் எத்தனை பணப்பரிவர்த்தனைகள் நடந்திருக்கும்?

கிடைக்கும் பரிவர்த்தனை முழுவதும் பார்த்து, அதில் ‘நல் கேர் செய்த பணப் பரிவர்த்தனை எது?’ என்று பார்ப்பது… அத்தனை எளிதான காரியமா?

இல்லை! இயலாத காரியம்தான்!

ஆனால்… ‘நல் கேரின் பணப் பரிவர்த்தனை எது?’ என்று தெரிந்துகொள்ள, நிகிலிடம் ஒரு யோசனை இருந்தது.

அடுத்து!!

தன் (cloud storage – Phsyical Storage Medium like External Hard Disk! But managed by some company) கிளவுட் ஸ்டோரேஜ்-யை திறந்து, சில தகவல்களை எடுத்தான்.

தகவல்கள் என்ன?

ஏற்கனவே அவன் தேடி வைத்திருந்ததுதான்!

ஏழு தேதிகள்!

அதில் நான்கு தேதிகள்… சமையல் எரிவாயு நிறுவனம், ரசாயன ஆலை, மெட்ரோ ரெயில் சேவை மற்றும் அனல் மின் நிலைய ஆலை… இவைகளில்  ‘மால்வேர் அட்டாக்’ நடந்து, பிரச்சனை பெரிதாகிப் பத்திரிகைகளில் செய்தி வந்த நாள்!

மற்ற மூன்று தேதிகள்…  பிரச்சனைக்குரிய நிறுவனங்களை, தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட நாட்கள்!!

இன்னும் ஷில்பா வேலை செய்த நிறுவனம், ‘ப்ளாக்லிஸ்ட்’ செய்யப்படவில்லை அல்லவா! ஆதலால், மூன்று தேதிகள் மட்டுமே!!

இந்த தேதிகளைக் கொண்டுதான், பணப் பரிவர்த்தனை தேடுதலை எளிதாக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அடுத்து!!

கட்டச்சங்கலி பரிவர்த்தனை (Blackckain Transactions)!!

கணினி உலகில் நடக்கும், இதுபோன்ற நுண்காசு பரிவர்த்தனை எல்லாம் அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். உடனே, இன்னொரு கீற்றை(tab) திறந்தான்.

https://blockchair.com/bitcoin-cash/transactions  – என்று தட்டச்சு செய்தவுடன், ஒரு பக்கம் திறந்தது.

இதுவரை நடந்த, நடந்து கொண்டிருக்கும் பிட்காயின் பணப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள், அந்தப் பக்கத்தில் இருக்கும்.

 PICTURE-2 – PLZ CLICK

அந்தப் பக்கத்தை ஸ்க்ரோல்(scroll) செய்து கொண்டே வந்தான். புலன்கள் (Fields) இருக்கும் பகுதி வந்தது!

பின், அதில் தேதிகள் வைத்து தேடும் சின்னத்தை (Ῡ Symbol) சொடுக்கினான். [வங்கியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்திருக்கும் Money Trasnfer-யை பார்ப்பது போன்று]

PICTURE-3 PLZ CLICK

சொடுக்கியவுடன்(Click)… அந்தப் பக்கத்தில், ஆரம்பத் தேதி மற்றும் முடிவுத் தேதி கொடுப்பதற்கான வழிகள் வந்தன!

PICTURE-4 PLZ CLICK

ஏற்கனவே, தான் எடுத்து வைத்திருக்கும் தேதிகளைப் பார்த்தான்.

இந்த இடத்தில நிகில் கொஞ்சம் யோசித்தான்!

‘நல் கேர்’ வேலை முழுமையடைவது என்பது நிறுவனம் தடை செய்யப்படுவது வரை!

ஆகையால்… சமையல் எரிவாயு நிறுவனம் தடைசெய்யப்பட்ட தேதியிலிருந்து, முன்னே இருபது நாட்கள் என்று கணக்கு வைத்து… ஒரு தேதி எடுத்தான்.

[Example 08.09.2016 after twenty days 28.09.2016]

இதே போல்… ரசாயன ஆலை மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் சிக்கனல் நிறுவனங்களுக்கும் தேதிகளை எடுத்துக் கொண்டான்.

அதை, தேதிகள் கொடுக்கப்படும் பெட்டிகளில் தட்டச்சு செய்தான். பின்,  ‘+’  சின்னத்தைச் சொடுக்கினான்.

PICTURE-5 PLZ CLICK

நிகில்… தேர்ந்தெடுத்த தேதிகளுக்குள் நடந்த, பிட்காயின் பணப் பரிவர்த்தனைகளைப் படம் போட்டுக் காட்டியது.

PICTURE-6 PLZ CLICK

அடுத்து!! நேரம் 9:50

வந்திருந்த பணப் பரிவர்த்தனை முடிவுகளில்… எந்த குறுக்க எண்ணில் (hash value) பிட்காயின் அதிகமாக, அதாவது கோடிக்கணக்கில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தான்.

தேடினான்! ஒவ்வொரு பக்கமாகத் தேடிக் கொண்டே இருந்தான்!

எத்தனை பக்கங்கள்?? ஒவ்வொரு பக்கத்திலும், பொறுமையாகத் தேடினான்.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. தேடுதல் இன்னும் முடியவில்லை!!

நேரம் 10:15

இந்த நேரத்தில்தான், நிகில் தேடியது கிடைத்தது.

அவன் எதிர்பார்த்தது போல் ஒரு குறுக்க எண்ணில் கோடிக்கணக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது.

அடுத்து!!

இதே போல்… மற்ற நகரங்களில், அதாவது பரோடா மற்றும் டெல்லி நிறுவனங்களின் தடை செய்யப்பட்ட தேதிகளை எடுத்து, பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறதா? என்று தேடினான்.

இருந்தது!!

பிட்காயின் பணப் பரிவர்த்தனை… நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட நாளிலிருந்து, பத்தாவது நாளில் நடந்திருப்பது தெரிய வந்திருந்தது.

அடுத்து!! நேரம் 10:40

அவ்வளவுதான்!

இனி அந்த குறுக்க எண்ணை(HASH) சொடுக்கினால்… எந்த பிட்காயின் அட்ரஸ்-லிருந்து(Sender Public Key)… எந்த பிட்காயின் அட்ரஸ்-க்கு (Recipient Public Key) பணப் பரிவர்த்தனை நடந்தது என்று தெரிய வரும்!

உடனே, அந்தக் குறுக்க எண்ணைச் சொடுக்கினான். இதோ கீழ்கண்ட திரை வந்தது. அதில் அனுப்புனர் மற்றும் பெறுநர் பிட்காயின் பொது திறவு (Sender and Recipient Public Key) இருந்தது.

குறித்து வைத்துக் கொண்டான்.

PICTURE-7 PLZ CLICK

இதே போல்… மற்ற நிறுவனர்களில் நடந்த பணப் பரிவர்தனைகளில் இருந்து, அனுப்புனர் மற்றும் பெறுநர் பிட்காயின் பொது திறவை (Sender and Recipient Public Key) எடுத்துக் கொண்டான்.

அடுத்து!! நேரம் 10:55

முரளிக்கு அழைத்தான்.

“ஹலோ, சொல்லுங்க நிகில்” என்றார், உடனே அழைப்பை ஏற்று! நேரத்தை வீணாக்காமல்!!

“முரளி.. நான் உங்களுக்கு ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவேன். அதுல மூணு பிட்காயின் பப்ளிக் அட்ரஸ் இருக்கும்! அதுக்கு நேர சிட்டி நேம் இருக்கும்”

“ஓகே”

“அதை, அந்தந்த சிட்டி சைபர் செல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசர்-கிட்ட கொடுத்து, அந்த சிட்டி-ல இருக்கிற எல்லா பிட்காயின் எக்ஸ்சேஞ்-யையும்… அது ஆஃப்லைன் ஆர் ஆன்லைன் எதுவானாலும் இருக்கலாம்! செக் பண்ணச் சொல்லுங்க”

முரளி அமைதியாக இருந்தார்.

“முரளி! ட்ரான்ஸாக்ஷன்-ல ரெசிபியின்ட் அட்ரஸ் நல் கேரோடது. அதை வச்சி நாம ஒன்னும் செய்ய முடியாது. ஏன்னா, அவன் வாலட்ட கிரியேட் மட்டும்தான் பண்ணியிருப்பான். ஸோ, அவனுக்கு யாரோ ஒருத்தர்தான் பிட்காயின் சென்ட் பண்ணியிருக்காங்க”

“ஓகே”

“நான் அனுப்பப் போறது… சென்டர் பப்ளிக் அட்ரஸ்-தான்!”

“ஸோ, ஏதாவது பிட்காயின் எக்ஸ்சேஞ்-ல… நம்ம இந்தியன் கரன்சியை கொடுத்து பிட்காயினா மாத்தியிருப்பாங்க. கரெக்ட்?!”

“எக்ஸாக்ட்லி!!” என்று அழுத்தமாகச் சொன்னவன், “இப்படி நடந்திருந்தா… எக்ஸ்சேஞ்-ல கண்டிப்பா, அவங்களோட ஐடென்டிட்டி கொடுத்திருப்பாங்க. லைக், பேன் கார்டு டீடெயில்ஸ்…”

“ஓகே! அந்த ஐடென்டிட்டி, காம்பெட்டிட்டர் சைட்-லருந்து யாரோ ஒருத்தரோடது. கரெக்ட்?”

“யெஸ் முரளி!! அதைக் கண்டுபிடிச்சா… எந்த சிட்டியில… எந்த காம்பெட்டிட்டர் இன்டஸ்ட்ரி இதைமாதிரி பண்ணாங்கன்னு தெரிய வரும்”

“அஃப்கோர்ஸ் நிகில்” என்றார் நம்பிக்கையாக!

“அதுமட்டுமல்ல முரளி!! அந்த மூணு பேருக்கும் டேரைக்ட்டா நல் கேரோட கான்டாக்ட் இருக்கா? இல்லை, ஏதாவது ஏஜென்ட் வழியா கான்டாக்ட் இருக்கான்னு கண்டுபிடிச்சு சொல்லணும்”

“ஸுயர் நிகில்”

“ம்ம்ம்… எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேள்வி கேட்டான்.

“அது… ஒரு ..”

“எல்லாரும் ரெடியாதான இருக்காங்க?”

“யெஸ் நிகில்”

“ஒவ்வொரு ஸ்டேட்லயும், எத்தனை பேரை டெப்லாய் பண்ணனுமோ… பண்ணிக்கோங்க. பட், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா, நான் கேட்டது கிடைக்கணும்” என்றவன் குரலில், அவன் வகிக்கும் பதவிக்கு உரிய உத்தரவு தொனி தெரிந்தது.

“ஓகே நிகில்”

“டிலே பண்ணிடாதீங்க முரளி”

“ஸூயர் நிகில்”

“அன்ட்… பிரஸ், மீடியா யாருக்கும் நியூஸ் போகக் கூடாது”

“ஓகே நிகில்”

“லோக்கல் போலீஸ் ஹெல்ப் எடுத்துக்கச் சொல்லுங்க. பட், அவங்களுக்கும் பெரிசா எதுவும் தெரிய வேண்டாம்”

“ஓகே நிகில்”

“ஓகே முரளி. நான் டெக்ஸ்ட் பண்றேன்” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தவன்… அடுத்த நொடியே, முரளிக்கு அனுப்பவேண்டிய குறுஞ்செய்தியை அனுப்பினான்.

அடுத்து!!

முரளி இடத்தில், நேரம் 11:05

நிகிலடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

அடுத்த நிமிடமே, முரளி செயல்பட ஆரம்பித்தார்.

தமிழ்நாட்டின் ‘சைபர் கிரைம் ஸ்டேட் கோ-ஆர்டினேட்டரிடம்’ தொடர்பு கொண்டு பேசி, மற்ற மாநிலங்களின் ‘சைபர் கிரைம் ஸ்டேட் கோ-ஆர்டினேட்டருக்கு’, அந்தக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

மேலும், சைபர் செல் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிஸர்ஸ், உள்ளூர் காவல் நிலையத்தின் உதவியுடன்… அனைத்து பிட்காயின் எக்ஸ்சேஞ்சிலும் விசாரணை செய்ய வேண்டும் என்ற செய்தியும் சொல்லப்பட்டது.

இதே அளவு வேகத்துடன், இன்னொரு புறம்… இந்தியாவிலுள்ள பிட்காயின் செயலிகள், ஆன்லைன் பிட்காயின் எக்ஸ்சேஞ்-களின் மூலமாக பிட்காயின் வாங்கியிருப்பார்களா? என்ற தேடலும் நடந்து கொண்டிருந்தது.

சென்னை சைபர் கிரைம் யூனிட் …

முரளி காத்துக் கொண்டிருந்தார்.

எந்த மாநிலத்திலிருந்தாவது, அழைப்பு வராதா? என்று முரளி காத்துக் கொண்டிருந்தார்.

நிகில் சொல்லிய, ‘டிலே பண்ணிடாதீங்க’ என்ற வார்த்தைக்காக… அடிக்கடி, ஒவ்வொரு மாநிலத்தின் ‘சைபர் செல் யூனிட்டில்’ இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு… ‘சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

மருத்துவமனை, சென்னை

நிகில் காத்துக் கொண்டிருந்தான்.

எந்தக்கணம் முரளியிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கின்றான்!

தான் நினைக்கின்றபடி… போட்டி நிறுவனங்களில் சார்பில், யாரோ ஒருவரின் பிட்காயின் அட்ரஸ் என்றால்… நல் கேரை நோக்கி நெருங்குவதில் ஒரு அடி முன்னே எடுத்து வைப்பது போல!

மூளையின் மற்றொருபுறம்… இது இல்லாவிட்டால், அடுத்து என்ன செய்ய்ய வேண்டும்? என்ற திட்டங்களும் உதித்த வண்ணம் இருந்தன.

இதற்கிடையே… டெல்லியில் இருந்து ஆஷா கைப்பேசியில் அழைத்துப் பேசியிருந்தாள். ‘நாளை விமானப் பயணச்சீட்டு ஏற்பாடு பண்ணுகிறேன்’ என்று சொல்லிச் சமாளித்திருந்தான்.

இன்று இன்னொரு சமாளிப்பையும் செய்ய வேண்டியிருந்தது. அது! அனைவரும் ‘மிலா, ஏன் பேசவில்லை?’ என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்!!

ஏதோதோ சொல்லி சமாளித்தான்!!

உடனே, மிலா… ஜெர்ரி நியாபகம் வந்துவிட்டது.

என்ன செய்துகொண்டிருப்பார்கள்? சாப்பிட்டிருப்பார்களா?

இரண்டு இரவுகள் கழிந்துவிட்டன. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கவலை நிகிலிற்கு வந்தது.

உண்மையில், ‘எப்போடா பார்ப்போம்?’ என்றுதான், நிகில் துடித்துக் கொண்டிருந்தான்.

நல் கேர் இடத்தில்!!

மிலா, ஜெர்ரி

நேற்று இரவிலிருந்தே… ஜெர்ரி, ‘ப்பா ப்ப’ என்று அழ ஆரம்பித்திருந்தான். இன்னும், அவனது அழுகை தொடர்ந்தது. அவனைச் சமாளிக்க முடியாமல், மிலா திண்டாடிக் கொண்டிருந்தாள்.

இருவருக்குமே பசிக்க வேறு செய்தது! மேலும், சரியான தூக்கமும் இல்லை!!

இவை இரண்டினால் வந்த சோர்வு, அவர்கள் இருவரின் உடலிலும் தெரிய ஆரம்பித்தது.

நேரம் செல்லச் செல்ல, ‘நிகிலிடம் திரும்பிச் செல்வோமா?’ என்ற பயம் மிலாவிற்கு அதிகமாகியது.

நல் கேர்

யோசித்துக் கொண்டே இருந்தான்.

‘அடுத்து என்ன செய்ய?’ என்ற யோசனைதான்!

செய்வதற்கு சில வேலைகள் இருந்தன. அந்த அடியாட்களுக்கு பணம் அனுப்ப வேண்டும். ‘எப்படித் தப்பிக்க?’ என்று யோசிக்க வேண்டும்.

ஆனால், எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

மேலும் குழப்பங்கள்!

‘நிகில் யாரென்ற?’ குழப்பம்!

‘தன்னைப் பற்றி, காவல்துறைக்குத் தெரியுமா?தெரியாதா?’ என்ற குழப்பம்!

இப்படி நிறைய!!

டெல்லி, மும்பை, பரோடா…

இங்கிருக்கும் ஒவ்வொரு பிட்காயின் எக்ஸ்சேஞ்சிலும் ஓடி ஓடித் தேடிக்கொண்டிருந்தார்கள்.

நிறைய குழுக்கள்! அதிக எண்ணிக்கையில் நகரத்தின் காவல்துறையினர், சர் சரென்று  ஜீப்பில் விரைந்து சென்று தேடிக் கொண்டிருந்தனர்.

மேலிடத்திலிருந்து வந்த கட்டளை! அதை மதித்து… நேரத்தை விரயமாக்காமல், பணி செய்துகொண்டிருந்தனர்.

நேரம் கடந்தது!!

முரளியின் இடத்தில், நேரம் 2:45

காலையில் பதினோரு மணி அளவில் கொடுக்கப்பட்ட வேலை.

இப்பொழுது நேரம் மூன்றை நெருங்குகிறது.

இன்னும் முடிந்தபாடில்லை!!

முரளி கொஞ்சம் நம்பிக்கை இழந்தார்! ‘இதிலும் கிடைக்காவிட்டால், என்ன செய்ய ?‘ என்ற எதிர்மறை எண்ணம், அவருக்கு வந்தது!!

தளர்ந்து போய் அமர்ந்திருந்தார். அவரின் உதவியாளர் வந்து, மதிய உணவிற்கான நேரம் கடந்து செல்கிறது என்று நியாபகப் படுத்திவிட்டுச் சென்றார்.

உணவு உண்ண மனமேயில்லை!!

அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு தேநீர் மட்டும் தருவித்து, குடித்துக் கொண்டார்.

இரண்டு நிமிடங்களில், ஓர் அழைப்பு!

அழைப்பு பரோடாவிலுருந்து!! சட்டென அழைப்பை ஏற்று பேசினார்.

பேசி முடித்ததும், நிகிலிற்கு அழைத்தார்.

நிகில்-முரளி கைப்பேசியில்…

“சொல்லுங்க முரளி, அந்த பிட்காயின் பப்ளிக் அட்ரஸ் மூனும் யாரோடாதுன்னு கண்டுபிடிச்சாச்சா?” என்றான் படபடவென்று, அழைப்பை ஏற்ற அடுத்த நிமிடமே!

“பரோடா-ல மட்டும் கண்டுபிடிச்சிருக்காங்க. மத்த ரெண்டு ஸ்டேட்-லயும் இன்வெஸ்டிகேஷன் போய்கிட்டிருக்கு நிகில்”

“ஓகே!” என்றவன், “அப்போ பப்ளிக் அட்ரஸ் ஓனர் யாரு?” என்று விவரம் கேட்டான்.

“லோக்கல் பெர்சென்”

“ஓ! அப்போ இது வேற கேஸா?” என்று நிகில் சந்தேகமாகக் கேட்டான்.

“ச்சே ச்சே! அவனை வச்சிதான், நல் கேரோட பிட்காயின் வாலட்டுக்கு (Bitcoin Wallet) பிட்காயின் சென்ட் பண்ணியிருக்காங்க. “

“வேற ஏதும் இன்பார்மேஷன் இருக்கா?” என்று நிகில் கேட்டான்.

“இருக்கு நிகில்! காம்பெட்டிட்டர் இன்டஸ்ட்ரி சேல்ஸ் எக்சிகியூடிவ் டீம்-ல இருக்கிற ஒருத்தன் சொல்லிதான்…  அந்த லோக்கல் பெர்சன், இதைப் பண்ணியிருக்கான்”

“ஓகே! அடுத்து, அந்த டீம் மெம்பர இன்வெஸ்டிகேட் பண்ணியாச்சா?”

“அதுவும் முடிஞ்சிடுச்சு! பட், அவன் சேல்ஸ் எக்சிகியூடிவ் ஹெட்-அ கை காட்டினான்”

“நெக்ஸ்ட்?”

“அவரையும் விசாரிச்சதுல ஹோல் இண்டஸ்ட்ரி டாப் லெவல் மேனேஜ்மேண்ட் சம்மந்தப்பட்டிருக்காங்க-ன்னு தெரிய வந்திருக்கு”

“கண்டிப்பா இருக்கும்! அப்புறம் இவ்வளவு பணம் எப்படி வரும்?” என்றவன், “பட், எப்படி ஒத்துக்கிட்டாங்க?” என்று கேட்டான்.

“பிட்காயின் ட்ரான்ஸாக்ஷன் காட்டினதும், அந்த லோக்கல் பெர்சன் ஒத்துக்கிட்டான். அன்ட், அவனுக்கு மணி ட்ரான்ஸ்பர் பண்ணது சேல்ஸ் டீம் மெம்பெர்ஸ்”

“மொத்தமா இவ்வளவு பெரிய அமௌன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணா, பேங்க்-ல டவுட் வராதா?”

“அதுக்காகத்தான், ஒவ்வொருத்தர் அக்கௌன்ட்-ல இருந்தும் மணி ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. இது பேங்க் ட்ரான்ஸாக்ஷன்-ல தெரிய வந்தது”

“ம்ம்ம்” என்று யோசித்தவன், “எனி இல்லீகல் வே ஆஃப் மணி ட்ரான்ஸாக்ஷன்? ஏன்னா, ஒரு நார்மல் பெர்சன் அக்கௌன்ட்-ல இவ்வளவு மணி வந்தா… கண்டிப்பா டவுட் வரும்” என்றான்.

“யெஸ் நிகில்! இல்லீகல் வே ஆஃப் மணி ட்ரான்ஸாக்ஷன், நிறைய நடந்திருக்கு!!” என்று அழுத்திச் சொன்னவர், “அதைப் பத்தி இன்வெஸ்டிகேஷன் நடந்துகிட்டு இருக்கு” என்றார்.

சட்டென, “ப்ச் முரளி! அந்த இன்வெஸ்டிகேஷன் இப்போ வேண்டாம்! ஈஸியா, மீடியா ஸ்மெல் பண்ணிடுவாங்க. அன்ட் இன்டஸ்ட்ரி மேனேஜ்மென்ட்-க்கு நியூஸ் தெரிய சான்ஸ் இருக்கு. ஸோ, அதை ஸ்டாப் பண்ணுங்க” என்றான்.

“ஓகே நிகில். நான் அவங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுறேன்” என்று ஒத்துக் கொண்டார்.

முரளிக்குப் புரிந்தது. நல் கேரை வெளியே வரவைக்க வேண்டும்.

அதுதான் முக்கியம்! ஆதலால். எதிர் கேள்வி எதுவும் கேட்காமல் ஒத்துக் கொண்டார்!!

“லோக்கல் கைய்-க்கும்(Guy), நல் கேருக்கும் இடையில பிட்காயின் ட்ரான்ஸாக்ஷன் நடந்திருக்கு! தேட்ஸ் ஓகே!! பட், இன்டஸ்ட்ரி ப்யூபிளுக்கும்… நல் கேருக்கும் எப்படி லிங்க்?”

“ஏஜென்ட்! டார்க் வெப் ஏஜென்ட்-ன்னு சேல்ஸ் டீம் ஹெட் சொன்னாரு!! அவன் மூலமாத்தான் இன்டஸ்ட்ரி ஆளுங்க, நல் கேரை கான்டாக்ட் பண்ணியிருக்காங்க”

“ஸோ, டேரைக்ட் கான்டாக்ட் கிடையாது!” என்றவன், “ஏஜென்ட் டீடெயில்ஸ் ஏதாவது சொன்னாரா? இல்லை, ஏஜென்ட் போட்டோ ஏதும் இருக்கா?” என்று கேட்டான்.

“டீடெயில்ஸ் சொல்லியிருக்காரு. போட்டோவும் இருக்கு!”

“கிரேட்! அதை வச்சி, ஏஜென்ட்டை தேடச் சொல்லுங்க. நாட் ஒன்லி பரோடா… எதுக்கும் எல்லா ஸ்டேட்-லயும் தேடச் சொல்லுங்க”

“பரோடா-ல மட்டும் சர்ச் பண்ணறாங்க. மத்த ஸ்டேட்-லையும் சர்ச் பண்ணச் சொல்லிடுறேன்”

“ஓகே!” என்றவன், “மத்த ஸ்டேட்ஸ்-லருந்து ஏதும் அப்டேட் இருக்கா??” என்று கேட்டதும்,

“இன்னும் வரலை நிகில்” என்றார்.

“ஓகே முரளி! மத்த ஸ்டேட்ஸ்-லருந்து அப்டேட் வந்ததும்… மூணு இடத்திலேயும் ஒரே ஏஜென்டா-ன்னு கன்பாஃர்ம் பண்ணுங்க”

“ஓகே நிகில்”

“அந்த ஏஜென்ட்டை கண்டுபிடிச்சு… அரெஸ்ட் பண்ணி விசாரிங்க! அவன்கிட்டயிருந்து, நல் கேரைப் பத்தி எவ்வளவு டீடெயில்ஸ் வாங்க முடியுமோ வாங்குங்க” என்றான்.

“ஸூயர் நிகில்! வேற ஏதும் சொல்லனுமா?” என்று முரளி கேட்டதும்,

“பரோடால கஸ்டடியில இருக்கிற ஆளுங்க பத்தின விவரம் எதுவும், அவங்க வேலை பார்க்கிற இன்டஸ்ட்ரிகோ… மீடியாவுக்கோ போகக் கூடாது முரளி. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கச் சொல்லுங்க”

“ஏற்கனவே சொல்லிட்டேன் நிகில்” என்றார்.

“நல் கேர் வெளியே வர்ற வரைக்கும், இதையே மெயின்டெயின் பண்ணச் சொல்லுங்க. அன்ட் இம்பார்ட்டன்ட் ஒன்! இல்லீகல் மணி பத்தின இன்வெஸ்டிகேஷன், இப்போ வேண்டவே வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னான்.

“ஓகே நிகில்! நான், இதை அவங்ககிட்ட கன்வேய் பண்ணிடுறேன்! வேற ஏதும் இருக்கா?” என்று கேட்டார்.

“இல்லை முரளி!  வேற டீடெயில்ஸ் கிடைச்சதும், திரும்பக் கால் பண்ணுங்க”

“ஓகே நிகில்” என்று முரளி சொன்னதும், இருபக்கமும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!