NIRAL MOZHI -16.2
NIRAL MOZHI -16.2
காலை, நேரம் 8:30, மருத்துவமனை!
அறையிலிருந்து வெளியே வந்த நிகில், மருத்துவமனைக் கட்டணம் கட்டும் இடத்திற்குச் சென்றான்.
வாங்க வேண்டிய மருந்துகள் வாங்கிவிட்டு, அதற்கான பணத்தையும்… அறை வாடகைக்கான பணத்தையும் கொடுத்துவிட்டுக் காத்திருந்தான்.
அக்கணம் டெல்லியிலிருந்து அழைப்பு!
பொதுவான நல விசாரிப்பகளுக்குப் பின்னர்,
“அண்ணி! இன்னைக்கு ஈவினிங் டிக்கெட் புக் பண்றேன். புக் பண்ணிட்டு, வாட்ஸ்-அப்-ல டிக்கெட் சென்ட் பண்றேன்” என்று சொல்லும் போதே… முரளி அழைப்பில் வருவது தெரிந்தது.
“நிகில்…அப்போ…” என்று ஆஷா கேட்கும் போதே…
“அண்ணி… அண்ணி… நான் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிறேன். ஸோ, வீட்டுக்குப் போயிட்டுக் கால் பண்றேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
முரளியின் அழைப்பை ஏற்று, “சொல்லுங்க முரளி. ஷிப்பிங் அட்ரஸ் பார்த்தாச்சா?” என்று கேட்டான்.
“செக் பண்ணிக்கிட்டு இருக்காங்க நிகில்” என்றார்.
“ஓ!”
“ஆங் நிகில்! இன்னைக்கு… ஹாஸ்பிட்டல் வந்து, உங்களைப் பார்க்க முடியாது. இந்தக் கேஸ் பத்தி, கமிஷனரோட மீட்டிங் போய்க்கிட்டு இருக்கு”
“பரவால்ல முரளி! இன்னைக்கு டிஸ்சார்ஜ். ஸோ, நானும் வீட்டுக்குக் கிளம்பிட்டேன்”
“டிஸ்சார்ஜா?”
“ம்ம்ம், காலையிலதான் டாக்டர் சொன்னாரு”
“சொல்யிருந்தீங்கனா, வெஹிக்கிள் அரேஞ் பண்ணியிருப்பேனே?”
“இட்ஸ் ஓகே! நீங்க செக் பண்ணிட்டு… எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்று நிகில் சொன்னதும்,
“சரி” என்று சொல்லி, முரளி அழைப்பைத் துண்டித்தார்.
காலை, நேரம் 9:15, நல் கேர் இடத்தில்!
பிட்காயின் தனியர் திறவியைக்(Private Key) கொண்டு, பிட்காயின் பணப்பையைத் திறந்தான்.
கணினித் திரையில் தெரிந்ததைக் கண்டவுடன், லேசான கண் சுருக்கல் மற்றும் முக மாற்றம்!
காஃபி கோப்பையை வைத்துவிட்டு, கண்களைத் திரையின் அருகே கொண்டு சென்று பார்த்தான்.
திரையில் தெரிந்தது…
0 BTC = 0.00 INR
1 BTC = 8,00,034.32 INR
அவனது பிட்காயின் இருப்பை பார்த்ததும், தலை கிறுகிறுத்துப் போனது.
ஒருகையால் தலையை பிடித்துக் கொண்டு, ‘எப்படி இது சாத்தியம் ஆகும்?’ என்று தனக்குள் கேள்வி கேட்டான்.
(அனுப்பியது)SENT என்ற இடத்திற்கு நேரே இருந்து பிட்காயின் பொது திறவைப் (Public Key) பார்த்தான்.
‘இது யாருடையது?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
நேற்று இரவு… தான் செய்த, மற்ற பிட்காயின் பணப் பரிவர்த்தனைகளை… மீண்டும் எடுத்துப் பார்த்தான்.
கடைசியாக நடந்த பிட்காயின் பணப் பரிவர்த்தனையின் நேரத்தைப் பார்த்தான். 12:30-ல் ஆரம்பித்து, 1:25 வரை
SENT BTC
oct, 04 @ 12:30…
SENT BTC
Oct, 04 @ 12:45…
..
..
..
SENT BTC
Oct, 04 @ 1:25
‘நான் 12 மணிக்கே தூங்கிவிட்டேனே? அதன் பிறகு, இந்தப் பரிவர்த்தனைகள் எப்படி நடந்திருக்க முடியும்? எப்படி? எப்படி? எப்படி?’ என்று கண்களைச் சுருக்கி யோசித்தான்.
ஒவ்வொரு பரிவர்த்தனையாக எடுத்து, பிட்காயின் எந்த பொது திறவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது? என்று பார்த்தான்.
எல்லாம் ஒரே பொது திறவு! மொத்த பிட்காயினும், ஒரே பொது திறவுக்கு!!
நாற்காலியில், பின்புறமாகச் சரிந்து அமர்ந்து கொண்டான். காஃபி கோப்பையை எடுத்து, மீண்டும் ஒரு மிடறு விழுங்கினான்.
இந்தப் பொது திறவு(Public Key) யாருடையது? என்று யோசிக்கவும் வேண்டுமா? என்பது போன்ற உடல் மொழியில் உட்கார்ந்திருந்தான்.
இல்லை! யோசிக்கத் தேவையில்லை என்று புரிந்தது!
அவன்தான்! அவனேதான்!! நிகில்!!!
அவனைத் தவிர, யாரும் இதைச் செய்திருக்க மாட்டார்கள்!
நிச்சயம், அவன் சாதாரண ஆள் கிடையாது! கண்டிப்பாக கிடையாது!! ஏதோ ஒரு முக்கிய பதவியில் இருக்கிறான்!!!
‘என்ன பதவி?’ என்ற கேள்வி வந்து நின்றது!
இனி, அது தெரிந்து என்னவாகப் போகிறது? என்ற பதில்… நக்கலாக வந்து நின்று, நல் கேரைப் பார்த்துச் சிரித்தது!!
தான் தோற்றுப் போய்விட்டோம்! நிகிலின் அறிவுடன் போட்டியிட்டு, தான் தோற்றுப் போய்விட்டோம்!! என்ற உண்மை புரிந்தது.
காலை, நேரம் 10:05, நிகில் வீடு!
நிகில்…
வீட்டின் கதவைத் திறந்ததும்… அன்று, ஹோலிப் பண்டிகையின் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு… ஷில்பா மற்றும் மிலா வந்து நின்றது… நியாபகத்திற்கு வந்தது.
எதுவும் செய்யத் தோன்றவில்லை. அப்படியே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
சற்று நேரம்… இரண்டு நாட்களுக்கு முன்னே நடந்த நிகழ்வுகளில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவன், சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டு எழுந்துவிட்டான்.
‘இப்படி இருக்கக் கூடாது. இது நல்லதல்ல’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், நேரே சென்று கதவை மூடிவிட்டு வந்தான்.
பின், குளித்து முடித்து வேறு உடைக்கு மாறினான். ஒரு பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். அந்த நிமிடங்கள் முழுவதும்… மிலா, ஜெர்ரி பற்றிய யோசனையில்தான் கழிந்தன!
அடுத்த இரண்டு நிமிடங்களில்…
முரளி அழைத்தார்
காலை, நேரம் 10:30, நல் கேர் இடத்தில்!
நல் கேர்…
அவசரப்பட்டுவிட்டேனோ?
அவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாமோ?
‘அடிபட்டுக் கிடக்கிறவன் என்ன செய்துவிட முடியும்?’ என்ற மெத்தனமாக இருந்துவிட்டேனோ?’ என்ற எண்ணம் நல் கேருக்குத் தோன்றியது.
நான்கு வருடங்கள் சேர்த்து வைத்தப் பணத்தைக் காணவில்லை. யாரிடமும் சென்று கண்டுபிடுத்துக் கொடுங்கள் என்று நிற்க முடியாது.
மேலும், இனி இதுபோல் சம்பாதிக்க முடியாது!
இனி தன் எதிர்காலம்? பெரிய கேள்விக்குறியே!!
தன் எதிர்காலம் முடங்கிவிட்டதா? இல்லை, நிகில் முடக்கிவிட்டான்!!
‘இப்படி இருக்காதே! இப்படி இருக்காதே!!’ என்று தனக்குள் ஆயிரம் முறை சொல்லிக் கொண்டான்.
ஆனாலும் அப்படித்தான் இருக்க முடிந்தது.
‘என்ன செய்ய? என்ன செய்ய?’ என்று தனக்குள் கேள்வி கேட்டுப் பார்த்தான்.
ஒன்றும் செய்ய முடியாது! இனி ஒன்றுமே செய்ய முடியாது!! என்ற பதில்தான் கிடைத்தது.
நிகில்… தன்னை நெருங்கி வர ஏதேனும் வழியிருக்கிறதா? என்று யோசித்துப் பார்த்தான்.
கைப்பேசி எண்கள்… முடியாது!
மின்னஞ்சல், தன் கணினி ஐபி அட்ரஸ்… முடியாது!!
வேறேதேனும் வழியிருக்கிறதா? வழியிருக்கிறதா? என்று யோசித்து… யோசித்துப் பார்த்தான்.
முடியவில்லை! யோசிக்கவே முடியவில்லை!!
மாறாக கோபம் வந்தது!
‘அவனை ஏதாவது செய்தே ஆக வேண்டும்?’ என்று கண்முன் தெரியாமல் கோபம் வந்தது.
காலை, நேரம் 11:00, ஆணையர் அலுவலகம்!
முரளியின் அழைப்பை ஏற்ற நிகில், “சொல்லுங்க முரளி” என்றான்.
“சென்னையில… ஏழு இடத்தில டெலிவரி ஆகியிருக்கு”
“ஏழு இடமா??” என்று நிகில் சுணக்கம் கொண்டான.
“ஏழு அட்ரஸ்-யும் செக் பண்ணச் சொல்லவா?”
“ப்ச்.. இப்போ அத்தனையும் செக் பண்ணினா, டிலே ஆகுமே முரளி ” என்று கவலை கொண்டான்.
“வேற வழியில்லை நிகில்”
கைப்பேசியில் இரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது.
அதன்பின், “நிகில்” என்றார் முரளி!!
“முரளி… இந்த அட்ரஸ்-ல, ஏதாவது ஒன்னு அந்த ஆப்ரேட்டர் வீடு இருக்கிற ஏரியா-ல… இல்லை அதுக்கு பக்கத்தில இருக்கான்னு பாருங்களேன்” என்று கேட்டான்.
“ஒரு நிமிஷம்” என்றவர், தன் கையோடு வைத்திருந்த கோப்புகளைப் பார்த்தார்.
பின் கைப்பேசியைக் காதிற்கு கொடுத்து, “ஆமா நிகில்” என்றார்.
“மை குட்னெஸ்” என்றவன், “அவ்ளோதான் முரளி! அதுதான் நல் கேர் அட்ரஸ்” என்றான்.
“ஆர் யூ ஸூயர்?”
“யெஸ்! ஐ அம் டேம்ன் ஸூயர்!” என்றவன், “ஆப்ரேட்டர பாலோவ் பண்ணனும்னு நினைக்கிறவன்… கண்டிப்பா, அவர் ஏரியா-க்கு பக்கத்திலதான் இருப்பான்.
அன்ட், பர்ஸ்ட் டைம் கான்வெர்சேஷன்ல… ‘நீ ஆப்ரேட்டர பாலோவ் பண்ணியிருப்பன்னு’ நான் சொல்லும்போது…’ஆமா’ அப்படின்னு சொன்னான்.
ஸோ, கன்ஃபார்ம்! அந்த அட்ரஸ்-தான்” என்றான் நிகில் உறுதியாக! ஆனால், வேகமாக!!
“ஓகே ஓகே” என்றவர், “இப்பவே அந்த ஏரியா போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணி, வீட்டை வாட்ச் பண்ணச் சொல்றேன். பக்கத்தில இருக்கிற வீட்ல, ‘ஏதாவது சந்தேகப்படற மாதிரி ஆக்ட்டிவிட்டிஸ் இருக்கா’-ன்னு விசாரிக்கச் சொல்றேன்” என்றார், அவரும் அதே வேகத்தில் .
“ப்ச், டிலே ஆகுமே முரளி” என்றான் மீண்டும்!
“ஸீ நிகில்! சரியா விசாரிக்காம, வீட்டை ரவுண்டு-அப் பண்றது வேஸ்ட்” என்றார்.
மீண்டும் கைப்பேசியில் அமைதி!
“நிகில்” என்றார் முரளி.
“ஆங் முரளி! அந்த ஏரியா-ல எல்லாமே தனி வீடுதான். ஸோ, ஒரு கான்ஸ்டபிள் அனுப்பி… அந்த வீட்டுக்கு முன்னாடி.. வீட்டுக்குள்ள… கேரேஜ்-ல ஏதாவது கார், பைக் இருக்கான்னு பார்க்கச் சொல்லுங்க.
இருந்தா… மொபைல் வச்சி நம்பர் பிளேட்டை போட்டோ எடுத்துப் பார்க்கச் சொல்லுங்க. போட்டோல நம்பர்ஸ் தெரியலைன்னா… அந்த வீடுதான்! ரொம்ப கேர்ஃபுல்லா பண்ணச் சொல்லுங்க” என்றான் கடகடவென்று!
“நிகில்… யாருக்கும் டவுட் வரக் கூடாதுன்னு, அன்னைக்கு நைட் யூஸ் பண்ண வெஹிக்கிள்-ல… அவன் ஹைட் பண்ணி வச்சிருக்க மாட்டானா?”
“யார் பார்த்தாலும் சந்தேகம் வரக் கூடாதுன்னு-தான ஆன்டி ரேடார் ஸ்டிக்கர்ஸ் யூஸ் பண்ணியிருக்கான். அப்புறம் எதுக்கு வெஹிக்கிள்-ல ஹைட் பண்ணனும் முரளி” என்றான் அவசரமாக!
அவன் சொல்ல வருவது என்னவென்று புரிந்ததால், “கொஞ்சம் டைம் கொடுங்க” என்று, சட்டென அழைப்பைத் துண்டித்தார்.
துரிதம்! இருவரிடமும் அப்படியொரு துரிதம்!!
காலை, நேரம் 11:20, நல் கேர் இடத்தில்!
கோபம் அடைந்தவனின் கண்கள் இரண்டும், கணினித் திரையில் வெறித்து இருந்தன.
நீடித்துக் கொண்டே போன கோபத்தினால், அவனுள் சினம் சீற்றம் போல் எழுந்தது! அது, ஆத்திரமாக மாறியது!!
தனக்கு வழியில்லாமல் செய்தவனுக்கு, வலி கொடுத்தே ஆக வேண்டும் என்ற வன்மம் வந்தது.
‘நிகிலை ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற வெறி வந்தது.
ஆனால், ‘அவனை எதுவும் செய்ய முடியாது’ என்று… அவன் அறிவு சொன்னது.
ஆனாலும் அவனுக்கு வலிக்க வேண்டும்!
‘என்ன செய்ய? என்ன செய்ய?’ என்று நினைத்தவன், சட்டென திரும்பினான்.
மிலாவும்… ஜெர்ரியும்… அவன் சிவந்த கண்களுக்குள் சிக்கிக் கொண்டார்கள்.
நிகிலின் மேல் உள்ள கோபம் முழுவதும்… அவனின் பிடியில் இருக்கும், இவர்கள் இருவரின் மேல் வந்து நின்றது.
பட்டென்று எழுந்தான்.
தன் முன்னே இருந்த கணினியை இரு கைகளாலும் எடுத்து, சுவரின் மேல் தூக்கி எறிந்தான்.
பலத்த சத்தம்!
தூக்கி எறியப்பட்ட வேகத்தில், கணினி சுக்கு நூறாகிப் போயிற்று!
சத்தம் கேட்டதில்… ‘என்னாச்சு இவனுக்கு?’ என்பது போல், மிலா பயந்து போனாள்.
ஜெர்ரியும் எழுந்துவிட்டான். மேலும், பயத்தில் ‘ப்பா…ப்ப’ என்று அழ ஆரம்பித்தான்.
ஜெர்ரியைச் சமாதானம் செய்ய நினைத்து, அவனைத் தூக்கி… தன் தோள்களில் போட்டுக் கொண்டாள். ‘ஒண்ணுமில்லை அழாத ஜெரி. ஒண்ணுமில்லை’ என்று சொல்லி, அவன் முதுகில் தேய்த்துவிட்டாள்.
ஆனாலும், அழுகை நிற்கவில்லை. மூச்சு விடாமல் அழுது கொண்டிருந்தான்
அவளுக்கும் பயம்தான்! அதே பயத்தில்… எட்டி நிற்பவனை, நிமிர்ந்து பார்த்தாள்.
கண்கள் இரண்டிலும் மனிதத்தன்மையே இல்லாமல்… மிலா, ஜெர்ரி இருவரையும் நல் கேர் பார்த்துக் கொண்டிருந்தான்.
காலை, நேரம் 11:45, நிகில் வீடு!
நிகில் சொன்னது போல் செய்து பார்த்துவிட்டு… முரளி, நிகிலை கைப்பேசியில் அழைத்தார்.
“சொல்லுங்க முரளி” என்றான் நொடியும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்று!
“நீங்க சொன்னது கரெக்ட்! அந்த வீடுதான். வீட்டை ரவுண்டு-அப் பண்ண சொல்லியிருக்கேன். அன்ட் தென்…” என்றவர், “நிகில்… இன் ஷார்ட், டன் ஆல் தே அரேஞ்மென்ட்ஸ்” என்றார் வேக வேகமாக!
“ஓகே முரளி. அவ்ளோதான்! ஸ்பாட்-ல நான் இன்வால்வ் ஆக மாட்டேன். சிச்சுவேஷன் பார்த்து நீங்க ஹேண்டில் பண்ணுங்க”
“ஓகே நிகில்” என்றவர், “நீங்க ஸ்பாட்க்கு வர்றீங்களா?” என்று கேட்டார்.
“கிளம்பிட்டேன் முரளி. வந்திருவேன்” என்றவன், “ஓகே முரளி. கேர்ஃபுல்லா எக்சிகியூட் பண்ணுங்க அன்ட் எனக்கு அந்த அட்ரஸ் அனுப்பிடுங்க” என்று சொல்லி, அழைப்பைத் துண்டித்தான்.
இரண்டு நிமிடங்களில்…
வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வந்தவன், ஒரு ஆட்டோ பிடித்து… “இந்த அட்ரஸ் போங்க” என்று நல் கேரின் விலாசத்தைச் சொன்னான்.
காலை, நேரம் 12:00, சென்னை!
துணை ஆணையருடன் சேர்ந்து, முரளி… நல் கேர் இருக்கும் இடத்திற்கு விரைவாகச் சென்று கொண்டிருந்தார்.
காலை, நேரம் 12:05, நல் கேர் இடத்தில்!
உயிருக்குப் பயந்து, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… அந்த வீட்டிற்குள், அங்கேயும் இங்கேயும் ஓடி… ஓடி… மிலா களைத்துக் கொண்டிருந்தாள்.
Discliamer
Here, Online Marketplace (e-bay) and Online Payment Platform (Paypal) names are used. It does not mean that they encourage illegal activities. Rather, the person used these platforms in illegal way.
Out of Story
இணைய வணிக தளம் (Online Payment Platform)
citrus, PayPal, Payu… இப்படி நிறைய வணிக தளங்கள் உண்டு. இவை online payment செய்யப் பயன்படுகின்றன.
இணையத்தில் பொருட்கள் வாங்கும் பொழுது, வாங்குபவர்களுக்கும் (Buyers) விற்பவர்களுக்கும்(Sellers) இடையே கட்டண பரிவர்த்தனை(Online Payment Transaction) நடக்கும்.
Payment Transaction is… process, verify, accept/decline your card transaction!
இதுபோன்ற வணிக தளங்கள்… விற்பவர்களின்(on behalf of Sellers) சார்பில், இந்தக் கட்டண பரிவர்த்தனையை செய்வார்கள்.
இந்தத் தளங்களைப் பயன்படுத்த நினைக்கும் Buyers, அந்தந்த வணிக தளங்களில்… account வைத்திருக்க வேண்டும். அது, அவர்களின் வங்கிக் கணக்கோடு இணைக்கப் பட்டிருக்கும்.
இணைய வர்த்தகர் தளம் (Online Trader Platform)
இதைப் பயன்படுத்தி, Bitcoin —> Indian Rupee என்று மாற்றிக் கொள்ளலாம். இப்படி மாற்றிக்கொண்ட இந்திய பண மதிப்பை… ஏதாவது ஒரு இணைய வணிக தளத்தில் (Online Payment Platform : PayPal) சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
சேமித்த பணத்தைக் கொண்டு, Online Marketplace-ல் (e-bay) பொருட்களை வாங்கலாம்.
இப்படிச் செய்யும் பொழுது வங்கிக் கணக்குத் தேவையில்லை.
(இதில் விதிவிலக்குகள் உண்டு)
Clipboard Manipulation Software (optional)
இப்படி ஒரு மென்பொருள் உண்டு. இந்த மென்பொருள் கணினியில் இருந்தால்… Clipboard-ல் இருக்கும் data-வை மாற்றி அமைத்துவிடும்.
Example : A,B, and C are Bitcoin users!
A —> B பிட்காயின் பணப் பரிவர்த்தனை நடக்கப் போகிறது.
அதற்கு, B தனது பிட்காயின் Public Key-யை A-க்கு தெரிய படுத்தி… இந்த Bitcoin Public Key-க்கு பிட்காயின் அனுப்பவம் என்று சொல்வார்.
A… B அனுப்பிய Public Key-யைக் Copy பண்ணி… பிட்காயின் பணப்பையில் பெறுநர் பொது திறவு (Bitcoin Wallet Recipient Address) என்ற இடத்தில Paste செய்வார்.
இப்படி Copy செய்தபின், இடையில் Clipboard-ல் அந்த Public Key வைக்கப்பட்டிருக்கும். அதன் பின், Paste செய்யப்படும்.
(Copy—>Clipboard—>Paste)
அதன்பின் பணப் பரிவர்த்தனை (Bitcoin Transaction) நடக்கும்.
This is usual!!
Suppose, A use பண்ற system-ல Clipboard Manipulation Software-யை C run பண்ண வச்சிருந்தா…(this is hacking)
A… B அனுப்பிய Public Key-யை Copy பண்ணி… பிட்காயின் பணப்பையில் பெறுநர் பொது திறவு (Bitcoin Wallet Recipient Address) என்ற இடத்தில Paste செய்யும் முன்பு, சிறிது நொடிகள் Clipboard-ல் Public Key இருக்கும்.
copy location—>buffered at clipboard(இடையக வைப்பு)—>paste location
அப்படி B-யோட Public Key, clipboard-ல இருக்கிற நேரத்தில… C-யோட Public Key-யாக… [ B Public Key—> C Public Key ] இந்த மென்பொருள் மாற்றிவிடும். (not only C! யாரு hack பண்றாங்களோ… அவங்களோட Public Key)
அப்போ… A அனுப்பும் பிட்காயின் முழுவதும், C பிட்காயின் பணப்பைக்கு சென்றுவிடும். B-யின் பிட்காயின் பணப்பைக்குச் செல்லாது.
இதற்குத்தான், இந்த Clipboard Manipulation Software!
Clipboard Stealer Software என்பது கதைக்கான கற்பனை!!
Note
About Darkweb on some other day!