NMK-2

NMK-2

                    நின் முகைக் காதல்

                               2

 

“வாட்?!” கண்களைக் குறுக்கி அவள் சொன்னதைக் கேட்டவன்,

“ஆமா, நான் ஒருத்தன லவ் பண்றேன்.” சொன்னதையே மீண்டும் சொன்னால் தீட்சா.

“இதை சொல்ல இப்போ தான் உனக்கு நேரம் கிடைச்சுதா?” கோபம் இல்லை அவனது குரலில். மாறாக ஒரு புன்னகையே இருந்தது.

‘ அப்படி என்ன காமெடி பண்ணிட்டேன்னு இவன் சிரிக்கறான்’ என நினைத்தவள்,

“எனக்கு இப்போ தான் சொல்ல முடிஞ்சுது. நீங்க பாட்டுக்கு வந்து பொண்ணு பாத்தீங்க, அன்னிக்கே நிச்சயம், அடுத்த மூணு வாரத்துல கல்யாணம். இதுல நான் எப்படி சொல்ல..” தன் பக்கம் ஏதோ நியாயம் இருப்பதாக நினைத்து முறைக்க,

“ஏன் , நான் பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கே.. எனக்கு இவன புடிக்கல. நான் இன்னொருதன லவ் பண்றேன்னு சொல்ல வேண்டியது தான. அப்படி இல்லன்னா, நீ சொன்ன அந்த மூணு வார கேப்ல என்ன பண்ணிட்டு இருந்த? ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே!” கட்டிலின் மீது அமர்ந்து கொண்டு சாதாரணமாகக் கேட்டான்.

“அது.. வந்து…” சொல்லத் தெரியாமல் அவள் தடுமாற,

“சொல்லு..” அவன் விடுவதாக இல்லை.

“என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. என் போன் எல்லாம் கட் பண்ணிட்டாரு.” அவளும் கட்டிலின் மறுபுறம் வந்து மூலையில் அமர்ந்து கொண்டாள். கால்கள் தொய்வதைப் போல ஆனது.

“இது ஒரு காரணமா? உன்ன நாங்க ரெண்டு முறை குடும்பத்தோட வந்து வெளில கூட்டிட்டு போனோம். புடவை எடுக்க நகை எடுக்கன்னு.. அப்போ?” அவன் விடாக் கண்டனாக கேள்விகளால் அவளைத் துளைக்க,

“அப்போலாம், என் அப்பாவும் கூட இருந்தாரு. என்ன நீங்க இப்படி வளச்சு வளச்சு கேக்கறீங்க?” முகத்தைச் சுழித்து சிணுங்கிக் கொண்டாள்.

அவள் சிணுங்கல் அவனை அவளிடம் மயங்க வைத்தது. அப்போதே சென்று அவளைத் தன் கைக்குள் அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் தோன்ற கஷ்டப் பட்டு அடக்கினான்.

“சரி உன் அப்பா இருந்தாரு. உன் ஆளு என்ன சாப்பிடப் போயிருந்தானா? அவன் என்ன பண்றான். லவ்வருக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணது கூட தெரியாம.. அவன் வந்து பேச வேண்டியது தான உன் அப்பா கிட்ட.. அவனுக்கும் பயமா..?” இரு கையையும் கழுத்தின் பின்னால் வைத்து நெட்டி முறித்தவன், கடைசியில் சிரிக்க,

“இப்போ எதுக்கு சிரிக்கறீங்க?” அவளுக்கு எரிச்சல் மண்டியது.

“சிரிக்காம என்ன பண்ண சொல்ற. உனக்கும் தைரியம் இல்ல. உன் லவ்வருக்கும் தைரியம் இல்ல. அப்பறம் என்ன லவ் வேண்டிருக்கு உங்களுக்கு.?” புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்ல. அவன் இப்போ ஊர்ல இல்ல. ஆஸ்ட்ரேலியா போயிருக்கான். இன்னும் ஆறு மாசம் ஆகும் அவன் வர. உடனே வர முடியாதுன்னு அவன் ப்ரென்ட் கிட்ட சொல்லி அனுப்பி இருந்தான். அதுக்குள்ள எங்க அப்பா இந்த ஏற்பாட்ட பண்ணிட்டாரு. நான் எங்க அப்பா கிட்ட ஒரு தடவ சொல்லி ஒரு நாள் செமத்தியா வாங்கி கட்டிகிட்டேன். அவர் அடிச்சா கூட பொறுத்துக்கலாம். ஆனா பேசியே சாவடிப்பாரு. அன்னிலேந்து போன், இன்டர்நெட் எல்லாம் போச்சு. ஹவுஸ் அர்ரெஸ்ட்.” இப்போதும் அன்று நடந்ததை நினைத்து முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“சரி..! லவர் வர முடியல. உன்னால பேச முடியல. உங்க அப்பா என் தலைல உன்ன கட்டிட்டாரு. வாட் நெக்ஸ்ட்? இப்போ என்னை என்ன பண்ண சொல்ற.?”அவளிடமே முடிவைக் கேட்க,

“ஆங்…” அவள் திடுக்கிட்டு அப்பாவியாய் அவனது முகம் பார்க்க,

‘அடிப்பாவி… இது கூட உனக்கு சொல்லத் தெரியல.. என் மூஞ்சிய பாக்கற.. நீ எனக்கு மட்டும் தான். யாருக்கும் உன்ன தரக் கூடாதுன்னு தான் எல்லா வேலையும் பண்ணிருக்கேன். என்கிட்டே வந்து இன்னொருதன லவ் பண்றேன்னு சொல்ற. நியாயமா. நான் பாவம் டி. உன்ன லவ் பண்ணத தவிற வேற எதுவும் பண்ணல.’ ஊமையாய் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“சொல்லு.. சைலென்ட்டா இருந்தா என்ன பண்றது.”

“இருங்க.. உடனே கேட்டா எப்படி.. யோசிக்க வேணாமா?” நகத்தைக் கடித்தபடி வடிவேலு போலக் கூற,

ஆதவ் உதட்டை மடக்கி சிரித்தான்.

இவள் யோசிக்க ஒரு மண்டலம் ஆகுமென ஒரு பக்கம் தலையணை எடுத்துப் போட்டு வசதியாக கட்டிலில் படுத்துக் கொள்ள, சட்டென அவள் எழுந்து கொண்டாள்.

“பரவால்ல.. உக்காந்து யோசி.. உன்னை நான் எதுவும் பண்ண மாட்டேன்..நீ யோசிக்கற வரைக்கும் என்னால உக்காந்து இருக்க முடியாது. அதுனால சும்மா படுத்திருக்கேன். தூங்கல.. ஓகே??” எனவும்,

அவள் அவசரமாக யோசித்து,

“உங்க போன் தாங்க, நான் அவனுக்கு ட்ரை பண்ணிப் பாக்கறேன்.” என்றாள்.

“ஹ்ம்ம்…” என பெருமூச்சு விட்டு தன் போனை எடுத்து அவளிடம் தந்தான்.

உடனே அவனது எண்களை அழுத்தியவள், காதில் வைத்துக் கேட்க,

அந்த எண் உபயோகத்தில் இல்லை என வந்ததும்.

“ச்ச…” போனை வேகமாக அணைத்தாள்.

“இந்தாங்க..” அவனிடம் நீட்ட,

“என்ன ஆச்சு?” ஆறுதாலக கேட்க,

“நம்பர் நாட் இன் யூஸ் னு வருது!” பாவமாக உதட்டைப் பிதுக்கினாள்.

‘ஐயோ.. இவ ஏன் லிப்ஸ்ஸ இப்படி பண்ணி என்னை கொல்றா..’ பெருமூச்சு விட்டவன்,

“சரி அவன் யாரு என்னனு டீடைல்ஸ் சொல்லு. நான் அவன் நம்பர கண்டு புடிச்சு சொல்றேன்.” என்றான்.

“நிஜமாவா..? உங்களுக்கு என் மேல கோபம் வரலையா?” கண்கள் விரிய அவனைப் பார்த்தவள்.,

“கோபம் இருக்கு. ஆனா நீ என்ன பண்ணப் போறன்னு சொன்னப்றம் டிசைட் பண்ணலான்னு இருக்கேன். சொல்லு என்ன பண்ணப் போற?”

“என்னை அவர் கூட சேத்து வச்சுருவீங்களா?”

‘நானா? உன்னை அவனுக்குத் தர்றதா? அந்தப் பொறுக்கிக்கா… பைத்தியாம நானு,,’ அவன் மனம் மட்டும் அவளிடம் பேசிக் கொண்டிருக்க,

“ம்ம் பார்க்கலாம். அவன் யாரு?” தெரியாதது போலவே நடந்து கொண்டான்.

“அவர் பேரு சத்யா. என்னோட காலேஜ் ப்ராஜெக்ட் பண்ணப் போன ஆபீஸ்ல அவரு வொர்க் பண்ணிட்டு இருந்தாரு. அப்போ தான் தெரியும். ஒரு நாள் வந்து ப்ரொபோஸ் பண்ணாரு. எனக்கும் புடிச்சு இருந்துச்சா.. அதான் ஓகே சொன்னேன். ஆனா ஒரு வாரத்துலயே அவருக்கு ஆஸ்ட்ரேலியா ப்ராஜெக்ட் கெடச்சு அங்க போறதுக்கு அவர் பிசி ஆயிட்டாரு. அப்பறம் வரதுக்கு ஆறு மாசம் ஆகும்னு அவரோட ப்ரெண்ட் கிட்ட சொல்லி விட்டாரு. அவர் ப்ரென்ட் தான் இந்த நம்பர் எனக்குக் குடுத்தாரு. அப்போ தான் எங்க அப்பா கிட்ட வந்து பேசினேன். உடனே போன் நெட் எல்லாம் போச்சு..” வருத்தமாகக் கூற,

‘ஏன் டி இதுக்கு பேரு லவ்வா.. இதுல உன்ன வேற அவனோட நான் சேத்து வைக்கணுமாம்..’ அவன் மனம் செல்லமாக அவளை அதட்டியது. இவளுக்குக் காதல் என்றால் என்ன என்பதைப் புரியவைக்க வேண்டும் என அவன் முடிவு செய்தான்.

“ஒ.. ஒரு வாரம் லவ் பண்ணீங்க? அப்படி என்னல்லாம் பண்ணீங்க அந்த ஒரு வாரம்?” அவன் நக்கலாகக் கேட்க,

அதைப் புரிந்து கொள்ளாமல் ஆர்வமாக அவன் அருகில் வந்து நின்று,

“ நாங்க வேற செக்ஷன்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருந்தோம். அவர் வேற செக்ஷன். சோ நான் ப்ரேக்ல தான் அவர பாப்பேன். அப்போ ரெண்டு பேரும் காஃபி குடிச்சுகிட்டே பேசுவோம். அப்பறம் பத்து நிமிஷத்துல நான் போகணும். சோ அப்புறம் லஞ்ச் ல பாப்போம். அவர் அவங்க டீம் கூட இருப்பாங்க. சும்மா பாத்துப்போம். அப்புறம் ஈவினிங் போறப்ப பை சொல்லுவேன். நாங்க சரியா பேசிக்க முடியல. அவர் கூட வேற அவங்க டீம் பொண்ணு இருந்துட்டே இருப்பா. அதுனால பேச முடியல. எனக்கும் அடுத்த வீக் காலேஜ் ல ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும். சோ அதுல பிசி ஆயிட்டேன். அப்புறம் தான் அவர் ஊருக்கு போயிட்டாரே. எங்க அப்பா உடனே எனக்கு கல்யாணம் வேற பண்ணிட்டாரு. இருந்தாலும் ப்ரொபோஸ் பண்ணி லவ்வன்னு கம்மிட் ஆயிட்டோம்ல..”

“சோ இது தான் உங்க காதல் கதை..இல்ல..?”

“ம்ம்” என்றாள்.

“சரி அவன தேடி கண்டு புடிச்சு… உன்கிட்ட பேச வைக்கறேன்”

“அப்போ நீங்க? அது வரைக்கும் என்ன பண்றது? எங்க அப்பாவ,உங்க வீட்டுல எல்லாம் எப்படி சமாளிக்கறது?”

“என்னப் பத்தியும் கவலை பட்டத்துக்கு ரொம்ப தேங்க்ஸ். மத்தவங்கள நான் சமாளிச்சுக்கறேன். அதுவரைக்கும் நீயும் நானும் ஹஸ்பன்ட் அண்ட் வைஃப் மாதிரி தான் வெளில காட்டிக்கனும்..புரியுதா?”

“வெளில ஓகே.. ஆனா..இங்க..” அவள் இழுக்க,

‘இதுல மட்டும் எப்படித் தான் தெளிவா இருக்காளோ..என்கிட்ட மாட்டும் போது இருக்கு டி உனக்கு..’ மானசீகமாக அவள் மண்டையில் குட்டினான்.

“அதான் ஆரம்பத்துலையே சொல்லிட்டேனே , உன்னை நான் டச் பண்ண மாட்டேன். போதும்மா.. அதுக்காக என்னை கீழலாம் படுக்க சொல்லக் கூடாது.” பயந்தவன் போல அவளிடம் கேட்க,

“அப்போ நான் கீழ படுத்துக்கட்டுமா?” அவளால் முடியாது என்பது அவளது முகத்தை வைத்தே தெரிந்து கொண்டவன்,

“ச்ச ச்ச .. நான் அவ்ளோ கெட்டவன் இல்ல. நீயும் மேலே படுத்துக்கோ.. வேணும்னா நடுல தலைகாணி வெச்சுக்கலாம்.. பெட் தான் பெருசா இருக்கே..” எப்படியும் அவளை அங்கே படுக்க வைக்க வேண்டும் அவனுக்கு,

“ம்ம்ம்..ச…சரி..” ஒருவாறு தலையாட்டினாள்.

“சரி எனக்கும் காலைலேந்து கல்யாண களைப்புல ஒரே தூக்கமா வருது. தூங்கலாமா?” கொட்டாவி விட்டபடியே கேட்க,

அவன் தூக்கம் அவளையும் தாக்கி, அவளுக்கும் கொட்டாவி வர,

ஒடுங்கி ஒடுங்கி ஓரமாகப் படுத்துக் கொண்டாள்.

‘ஹ்ம்ம் க்கும்.. இவ மௌன ராகம் ரேவதி.. கார்திக்க மனசுல வெச்சுகிட்டு என்கிட்ட தள்ளிப் படுகறா..உன்ன வெச்சு செய்யறேன் டி.. சின்னப் பொன்னாச்சே ன்னு ஒரே ஒரு கர்டசில தப்பிச்சிட்டு இருக்க.’ அவனும் மறு புறம் திரும்பிப் படுத்துக் கொள்ள,

“ஒரு நிமிஷம்” அவளின் குரல் அவன் முதுகுக்கு பின்னால் ஒலிக்க, திரும்பிப் பார்த்தான்.

“என்ன?” படுத்துக் கொண்டே கேட்க,

“லைட்.. ஆஃப் பண்றீங்களா? இல்லனா எனக்குத் தூக்கம் வராது.”

அவள் அறியாமல் மறுபுறம் திரும்பி சிரித்துக் கொண்டே சென்று அனைத்து விட்டு வந்து படுத்தான்.

மறக்காமல் நடுவில் தலையணை வைக்க, இப்போது அவனறியாமல் சிரிப்பது அவள் முறையானது.

ஒரு பத்து நிமிடம் சென்றதும் மீண்டும் அவளது குரல் அந்த இருளில் மிதந்து அவன் காதைத் தழுவியது.

“தூங்கிடீங்களா..?” மென்மையிலும் மென்மை அவன் மனதை வருடியது.

‘இதற்குத் தானே ஆசைப்பட்டேன். என் பெட்டுல என் பொண்டாட்டியா என் மேல மொத்த உரிமை உள்ளவளா.. இப்படி என் காதுல வந்து நீ காதலோட என்னைக் கூப்பிடனும்.’

“அல்மோஸ்ட்.. எதாவது வேணுமா?” அவனும் அதே ஹஸ்கி வாய்சில் பேச, அவளது இதயத்தின் அருகில் அவன் குரல் கேட்பது போல உணர்ந்தாள்.

‘ரொம்ப அழகான மேன்லி வாய்ஸ் இவனுக்கு’ அவள் நினைக்காமல் இல்லை.

“வந்து.. சாரி. நான் உங்க மனச கஷ்டப் படுத்தறேன் இல்ல. அதுவும் ஃபஸ்ர்ட் நைட்ல வந்து இப்படி ஒரு பொண்ணு சொன்னா கண்டிப்பா யாரா இருந்தாலும் கோபம் வரும். நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர். உங்களுக்கும் கண்டிப்பா ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணும்னு நான் வேண்டிக்கறேன்.” என்றாள்.

‘இது வேறயா.உன்ன ப்ளான் பண்ணி தான் கல்யாணம் பண்ணேன். வேணும்னு தான் உன்னை எவனும் நெருங்க விடலன்னு சொன்னா இதே மாதிரி என்னை நல்லவன்னு சொல்வியா டி.. அதுனால இப்போவே சொல்லிக்க, நான் கேட்டுக்கறேன். உனக்கு இன்னும் பக்குவம் வரணும் டா. அதுக்கு தான் நான் வெய்ட் பண்றேன். நீ இப்படி எதுவும் சொல்லனாலும் நமக்கு இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்திருக்காது. உனக்கு கொஞ்சம் மெச்சுரிட்டி வரணும். என்னை லவ் பண்ணனும். இது தான் லவ் னு உணரனும். அதுவரைக்கும் இதெல்லாம் இல்ல.’ தன் மனதில் லயித்திருந்தவனை,

“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க. என் மேல கோபம், இருக்கா.. ஒரு வேளை காலைல எங்க அப்பா கிட்ட சொல்லணும்னு ஐடியா பண்றீங்களா?” அவள் குரலில் பயம் தெரிய,

“அடடா.. அதெல்லாம் இல்ல. நீ தான் வேற ஒருத்தன புடிச்சிருக்குன்னு சொல்லிட்டியே… அப்பறம் எப்படி உன்னை நான்…! கோபப் பட எனக்கு என்ன உரிமை இருக்கு.. நீ கவலைப் படாத. தூங்கு”.

அவன் குரலும் வார்த்தைகளும் அவளை ஒரு வித நிம்மதி கொள்ளச் செய்தது.

அதில் உறங்கியும் போனாள். சிறிது நேரத்தில் குழந்தை போல குப்புறப் படுத்துக் கொண்டாள்.

அந்த இரவு வெளிச்சத்தில் அதைக் கண்டவன் அவளது தலையை மென்மையாக வருடி தன் கையை முத்தமிட்டுக் கொண்டான்.

“ஐ லவ் யூ தக்ஷி” புன்னகைத்தான்.

அவள் அருகாமை தந்த சுகத்திலே அவனும் அவளைப் பார்த்த படியே உறங்கினான்.

Leave a Reply

error: Content is protected !!