அத்தியாயம் 4 

 

அந்த அறையினுள் :

“சிவா சாரி டா.என்ன சொல்லி உன்னைத் தேத்தறதுன்னு தெரியலை. என்னால் முடிந்ததைக் கண்டிப்பா செய்வேன்” என்று ஆதரவாய் சிவாவின் தோளைப் பற்றிய கௌதம்

“ஆனா அந்தக் கொலை காரனை மட்டும் விடக் கூடாது கொன்று போடணும் ! ஆத்திரமா வருது, நாசமா போறவன் **** … “ என்று விடாமல் பொரிந்து தள்ளினான்.

“ம்ம் … எனக்கும் ஆத்திரமா தான் வருது சொல்லப் போனா கொலை வெறி ஒரு பக்கம், அநியாயமா என்னை விட்டுப் போனவர்களை நெனச்சு வலி ஒருபக்கம் !” என்றவன் ஆழ்ந்த மூச்சைவிட்டு

“சீ அந்த ஆள் மனுஷனே இல்லை குழந்தைக்காகக் கூடப் பார்கலை ! அவன் ரத்த வெறி பிடிச்ச காட்டு மிராண்டி ! “ என்று சிவாவும் ஆத்திரத்தில் துடித்தான்.

குறுக்கும் நெடுக்கும் அமைதியின்றி உலவியவன் “கெளதம் இப்போ நாம முதல்ல செய்ய வேண்டியது உடனே அந்தச் சமயத்தில் அப்பாவுடைய கிளோஸ் பிரெண்ட்ஸ் யார் யாருனு பார்க்கணும். அப்போ தான் நாம அந்தத் துரோகியைக் கண்டு பிடிக்க முடியும்.

இவளோ கனவு வந்த காயத்ரிக்கு கண்டிப்பா கூடிய சீக்கிரம் அந்தக் கையெழுத்தும் கனவில் புலப்பட வாய்ப்பிருக்கு. ஆனா அதுவரை நாம அமைதியா இருக்க முடியாது. நாமும் ஒரு பக்கம் தேட ஆரம்பிப்போம்! ” என்றான் சிவா தீர்க்கமாய்.

“சரிடா சிவா. அப்படியே செய்யலாம்.நான் ஒன்னு சொல்லவா ? கேட்பியா ?” என்று கெளதம் தயங்க.

“சொல்லுடா நமக்குள்ள என்ன ?” சிவா.

“சிவா நாம காயத்ரியை நம்ம கூடவே தங்க வச்சுக்கறது நல்லதுன்னு தோன்றது, எல்லா விதத்திலுமே. புருஞ்சுப்பேன்னு நினைக்கிறேன் டா ! ஒன்னு, அவளுக்கு எப்போ கனவு வரும் நமக்குத் தெரியாது, அப்படி வந்தவுடனே அது நமக்குத் தெரிய உதவியா இருக்கும். மற்றது உனக்குத் தான் தெரியுமே !” என்றான் கௌதம்.

சிவா இதைக் கேட்டபடி உலாவ மேலும் தொடர்ந்த கௌதம் “உதயாவும், காயத்ரியும் ஸ்கூலேந்து கிளோஸ் பிரெண்ட்ஸ் ! ஸோ அவளுக்குச் சங்கடமா இருக்காது, துணையா உதயாவும் இருப்பாளே. நாமமும் நம்ம பக்க காரணத்தை எடுத்துச் சொல்லுவோம் என்ன சொல்றே ? என்று கேட்டவன். அவன் பதிலுக்குக் காத்திராமல் “நீ என்ன சொல்றது, அவ இனிமே நம்ம கூடத்தான் இருப்பா! நான் பேசிக்கிறேன் நீ பேசாமல் இரு பேரும்” என்று தன் தீர்மானத்தைச் சொன்னான்.

அவர்கள் இருவரும் இன்னும் சில நிமிடங்கள் அங்குப் பேசிக்கொண்டு இருந்தனர்.

பின்பு பெண்களிடம் பேச கௌதம் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

சிவா, அந்த அறையிலிருந்த அவனது குடும்பத்தினரின் புகைப்படத்தைப் பார்த்து. “கண்டிப்பா அந்த ஆளை நான் சும்மா விடமாட்டேன் அப்பா! அவனைத் தண்டித்தே தீருவேன் !”. என்று மனதினில் சபதம் எடுத்துக் கொண்டான்.

கௌதம், காயத்ரி மற்றும் உதயாவிடம் அவர்களின் யோசனையைச் சொன்னவுடன், தன்னால் முடிந்த உதவியைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்த காயத்ரி, கௌதமின் வேண்டுகோளை உடனே ஏற்றுக்கொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கச் சம்மதித்தாள்.

நால்வரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினார். அவர்கள் வீடு வந்து சேரும்பொழுது இரவு ஆகிவிட்டது.

காயத்ரி தன் கனவில் பார்த்த அதே வெள்ளை மாளிகை.

கௌதம் முன்னே செல்ல உதயாவும் காயத்ரியும் பின்னே சென்றனர். உள்ளே நுழைந்தவள் சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழல விடப் படபடத்துத் தலைவலி மண்டையைப் பிளக்கக் கண்களை இருக்க மூடியவள் மயங்கி விழுந்தாள்.

அங்கிருந்த கெளதம் பதறியபடி அவளைத் தூக்கி, பக்கத்திலிருந்த விருந்தினர் அறையில் உள்ள கட்டிலின் கிடத்தினான். உதயா அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

கௌதம் சிவாவை தேடி வீட்டிற்கு வெளியே செல்ல அங்கு அவனோ மெய்க் காப்பாளர்களிடம் எதோ பேசிக்கொண்டு இருக்க சிவாவிடம் நடந்ததை கெளதம் சொல்ல இருவரும் காயத்ரி இருந்த அறைக்குச் சென்றனர்.

அதற்குள் மயக்கம் தெளிந்தவளோ “டைரி ! டைரி!” என்று பதற, உதயா அதை அவளிடம் கொடுக்க வேகமாக எதையோ எழுதிய பிறகே அவள் அமைதி ஆகி தலையணையில் சாய்ந்து கொண்டாள்.

உதயா டைரியை வாங்கி படிக்க அதைத் திறக்கும் பொழுதே கௌதமும் சிவாவும் அங்கு வந்து விட்டனர்.

‘என்னிடம் தா’ என்பது போல் உதயாவிடம் கையை நீட்டி சிவா அந்த டைரியை வாங்கிக் கொண்டான்.

அவள் படுத்திருந்த கட்டிலின் ஒரு ஓரம் உட்கார்ந்து அவள் எழுதிய அந்த டைரியின் அந்தப் பக்கத்தைப் படித்தவன். கெளதமை பார்த்துக் கேள்வியாய் விழித்தான் … “கெளதம் ! ஒண்ணுமே புரியலடா ! எதோ கொட்டேஷன், 23 கோடி, யு எஸ் பி, திவா, ஜெ சி குரூப்ஸ் அவ்வளவு தான் இருக்கு !”

இருவரும் அது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டு இருந்தனர் ! அப்பொழுது காயத்ரி ஓரளவுக்குத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் துவங்கினாள்.

“ஒரு பெரிய ஆபீஸ் ரூம், அதில் ஒருத்தன் யு எஸ் பி (USB) யை ஒரு பொண்ணு கிட்டக் கொடுக்கிறான் ! அந்தப் பொண்ணு தேங்க்ஸ் திவா ன்னு சொல்றா ஒரு காகிதத்தில் கொட்டேஷன் 23 கோடின்னு இருக்கு. ஜெ சி குரூப்ஸ்ன்னு எதோ கார்டு அந்த டேபிள்ள இருக்கு அவளோதான். தலையும் புரியலை வாலும் புரியலை ! இது யாருக்கான கனவோ என்னவோ ! ” என்றாள்.

நண்பர்களும் ஒருவர் பார்த்துக் கொண்டு அதற்கும் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்று யோசிக்கத்துவங்கினர்.

எதையோ உணர்த சிவா “காட் இட் கெளதம் ! நாம அந்தச் சாப்ட்வேர் கம்பனிக்கு என்ன கொட்டேஷன் கொடுத்தோம்? அதான் அந்தச் சைதன்யா குரூப்ஸ்க்கு?” என்று கேட்க.

“இருடா பாக்கறேன்” என்று கெளதம் சென்று அவன் மடிக்கணினியைக் கொண்டு வந்தான். அதைச் சிறிது நேரம் ஆராய்ந்தவன், “நாம அந்தக் நிறுவனத்துக்கு முடிவு பண்ண கொட்டேஷன் 23 கோடி டா ! ” என்று அதிர்ந்தான்.

“கெளதம், கொட்டேஷன் ஈமெயில் அந்தக் கம்பனிக்கு அனுப்பிடியா இல்ல அனுப்ப போறியா ? ஈஸ் இட்பைனல் ? இல்லைன்னா கொட்டேஷனை 22 கோடின்னு மாத்திடு ! ரைட் நொவ் !” என்று சிவா சொல்ல.

“இன்னும் அனுப்பலா டா ! அனுப்பணும்னு தான் இருந்தேன்,அதற்குள்ள உன் சிக்கெனல் வர அப்படியே வந்துட்டேன் அதான்… இப்போ அனுப்பிடவா ? 1 கோடி கம்மியா கோட் பண்றோமேடா ! எப்படி பரவாலயா ?”என்று தயங்கினான்.

“காரணமாகத்தான் சொல்றேன் டூ இட் ! மெயில் அனுப்பிடு! ஆனால் கொட்டேஷன் மாத்தினது யாருக்கும் கம்பெனில இப்போதைக்குத் தெரிய வேண்டாம். நாளைக்கே திவான்னு யாராவது நம்ம கன்செர்ன்ல வேலை செய்யறானான்னு பார்.” என்றான் சிவா மேலும்.

“காயத்ரி, நான் இந்த டைரியை கொஞ்சம் படிச்சுட்டு தரவா? உனக்கு விருப்பம் இல்லைன்னா வேண்டாம் ! “என்று சிவா கேட்க.

“எடுத்துக்கோங்க எனக்கு ஒரு பேப்பர் பேனா மட்டும் இருந்த போரும், அப்புறம் கூட டைரில காப்பி பணிகிறேன் !” என்றாள் காயத்ரி.

“சரி, இப்போ தூங்கப் போகலாம் மீதியை நாளைப் பேசிக்கலாம் . உதயா நீ காயத்ரிக்கு என் ரூம்க்கு பக்கத்துல இருக்கும் ரூமை காட்டு அது இனிமே அவ ரூம் ! நாளைக்கு உங்களுக்குக் காலேஜ் இருக்கு. எனக்கும் நிறைய வேலை இருக்கு…ஒரு தீவட்டி தடியன் செஞ்ச வேலையால் ரெண்டு நாள் வேலை எனக்கு அப்படியே போட்டது போட்டபடி இருக்கும்” என்றவாறே கௌதமை ஓரக்கண்ணால் முறைதான் !

‘நான் இல்லப்பா.’ என்பது போல் கெளதம் எங்கோ பார்க்க.

ஆசையாய் அவனிடம் நெருங்கிய சிவா. திடீரென்று கௌதமின் முதுகில் டமால் ! டமால் ! என்று அடிக்க ஆரம்பிக்க

“டேய் ஏன்டா என்ன அடிக்கிறே? நான் என்ன பண்னேன்? நான் அப்பாவி டா ! எதுனாலும் பேசி தீர்த்துகலாம் ! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்டா ! ” என்று முதுகைத் தொட்டுத் தடவிக் கொள்ள முடியாமல் நெளிந்தான் கௌதம்.

காயத்ரியோ சிலிர்த்துக் கொண்டு “கெளதம் அண்ணா நீங்க அப்பாவியா? ஒரு வயசு பெண்ணையும், பையனையும் இப்படி யாரவது கொண்டு தனியா விடுவாங்களா ? ஏன் அப்படி செஞ்சீங்க? இப்போவே சொல்லுங்க !” என்று பாய.

கௌதமோ மிடுக்காக “என்ன ஒரு வயசு பையன், பொண்ண ? உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வயசா ஆகுது? எனக்குத் தெரியாதே! நான் எதோ உனக்கு 19, அவனுக்கு 26 அப்படித்தானே நெனச்சேன் …அடடே !” என்று மேல் நோக்கி வாயிலில் விரலை வைத்து யோசிப்பது போல் செய்கை செய்ய.

“நீ திருந்த மாட்டியா ? “என்று அவனை அடிக்க சிவா துரத்த, கெளதம் அந்த அறையைச் சுற்றிச் சுற்றி ஓடினான்.

“ஏண்டி அண்ணனைக் காப்பாற்ற மாட்டியா? இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கியே உதயா! குரங்கே” என்று கெளதம் கத்த.

உதயாவோ “சிவா அண்ணா நான் இவன பிடிச்சுக்கறேன் வாங்க! ” என்று அவனைப் பிடிக்க அவளும் ஓட.

“காயத்ரி நீதான் என்னைக் காப்பாத்தணும் !” என்று காயத்ரியின் பின் ஒளியப் பார்த்தான் கெளதம்.

அவளோ முடியாது என்பது போல் தலையசைத்து உதட்டைப் பிதுக்க !

“அட பாவிகளா எல்லாருமா கூட்டணியா ? எனக்கு நேரம் வரும் பொது வச்சுக்கறேன்! ” என்று மேலும் ஓட முடியாமல் மூச்சு வாங்கி நின்றபடி

“இப்போ சரண்டர், இன்னிக்கி விட்டுடுடாச்சாமி ! “ என்று கையை உயர்த்தினான்.

“பொழச்சு போ ! “ என்று சிவா விட …” நண்பேன்டா!” என்று குதூகலம் ஆனான் கெளதம் ! மற்றவர்களும் அன்றைய இறுக்கமான மனநிலையை மறந்து சிரித்தனர்.

பிறகு நேரம் ஆவதை கவனித்து “குட் நைட் கேர்ள்ஸ் ! ” என்றபடி கௌதமும் சிவாவும் சென்றுவிட.

பெண்களும் மேலே அறைக்குச் செல்ல வெளியே வந்தனர்.

அந்தப் பிரமாண்டமான ஹாலில் இடது புறம் ஓரு அகலமான படிக்கட்டு இருந்தது.

“நாம லிஃப்டுல போலாம்டி காயு, என்னால படி ஏற முடியாது ! கால் வலிக்குது ! ” என்று உதயா, ஹாலின் வலது மூலையிலிருந்த லிஃப்டை நோக்கி நடக்க.

“என்னடி இது வீட்டுக்குள்ள லிஃப்டா ? கொஞ்சம் ஓவரா இல்லையா ?“ என்றபடி அவளைப் பின் தொடர்ந்தாள்.

“இல்லடி காயு கௌதமுக்கு ஒரு 3 வருஷம் முன்னாடி விபத்தில் ரெண்டு காலிலும் எலும்பு முறிவு ஆயிப்போச்சு. அவனைக் கீழ் ரூம்ல தங்க வைக்க சிவா அண்ணாவுக்கு மனசில்லை ஸோ, அவன் டிஸ்சார்ஜ் ஆகி வர முன்னாடி இந்தப் பக்கம் இருந்த ரூமை இடிச்சு லிப்ட் ஏற்பாடு பண்ணி வச்சுட்டார் ! “

“அவங்க ரெண்டு பேரும் அப்படியொரு திக் பிரெண்ட்ஸ் ! நம்மளை மாதிரியே !” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

முதல் தளத்தில் நான்கு அறைகள் இருந்தது.லிஃப்டிலிருந்து வெளியே வந்ததும் வலது புறம் இரண்டு அறைகளும், லிஃப்டிற்கு நேர் எதிரே இரண்டு அறைகளும் இருந்தது.

வலது புறம் இருந்த முதல் அறையைக் காட்டி “இது கெளதம் ரூம்” என்று அந்த அறையைக் காட்ட. உள்ளே கெளதம் அவன் பெட்டியை எடுத்துக் கட்டில் மேல் வைத்துக் கொண்டு இருந்தான். அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறே பெட்டியைத் திறக்க ஆரம்பித்தான்.

அந்த அறையைக் கடந்து அதன் பக்கத்திலிருந்த தனது அறையை ஆர்வத்துடன் உதயா காண்பித்தாள்.

“இது என் ரூம்! நல்ல இருக்கா ? இது சிவா அண்ணாவுடைய தங்கை பாப்பாவுக்காக ஒதுக்கப் பட்ட ரூம். இப்போ இந்தப் பாப்பா இருக்கேன்” என்றாள் தன்னை காட்டி

காயத்ரியின் மனதில் அந்தப் பிஞ்சு குழந்தையின் முகம் வந்து மனதைக் கனக்கச் செய்தது ! அந்த அறையினுள் செல்ல தயங்கி வெளியே நின்றிருந்தாள்.

“என்னடி அங்கேயே நிக்கிறே ? உள்ளே வந்து பார்”என்று அவ கைப்பிடித்து இழுத்துச் சென்றாள் உதயா. அந்த அறையோ பிங்க் ஃபர்னிச்சர்கள், சுவரில் உதயாவின் அபிமான கதாநாயகனின் சுவரொட்டிகள் என்று ஒரு டீன் வயது பெண்ணின் அரை என்பது பார்த்தவுடன் புரியும் வண்ணம் இருந்தது.

” குழந்தையுடைய ரூம் மாதிரி தாண்டா அழகா கியூட்டா இருக்கு !” என்றாள் காயத்ரி சிரிப்பை அடக்கிக் கொண்டு

“வாடி நாம சிவா அண்ணா ரூம் பார்க்கலாம் “என்று அவளை வெளியே அழைத்து வந்த உதயா.லிஃப்டின் நேரே இருந்த இடப்பக்க அறையைக் காட்டி “அது சிவா அண்ணா ரூம்…காட்டறேன் வா !” என்று அவளை அழைக்க

” ஹே வேண்டாம் கதவு மூடி இருக்கு, அப்புறம் பார்க்கலாம் டா ” என்று அவள் சொல்லச் சொல்ல கேட்காமல், சிவாவின் அறைக் கதவைத் தட்டினாள் உதயா

அப்போது ஷார்ட்ஸும், ஸ்லீவ்லஸ் ட்ஷிர்ட்டுமாய் வந்த சிவாவை பார்த்த காயத்ரி திகைத்து நிற்க.

” என்ன? “ என்று அவன் கேட்க.

“இல்லை இப்படி நீங்க கியூட்டா வந்து நின்னா. நான் எப்படி இன்னிக்கி தூங்குவேன்னு யோசிச்சேன் ! ” என்று உளறி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

உதயாவால் சிரிப்பை அடக்க முடியாமல் “என்னடி சொல்றே? அண்ணாவைப் பார்த்தால் தூக்கம் தொலைஞ்சு போச்சுன்னு சொல்றியா? ஆஹா என்னை வச்சுக்கிட்டே என் அண்ணனைச் சைட் அடிக்கிறியா ? ” என்று கிண்டல் செய்ய.

அவளோ “அது இல்ல… இது வந்து. நான் “என்று எதோ உளற.

சிவாவின் முகம் இறுகியது . எதுவும் காதில் விழாதது போல் “எதுக்குமா கதவைத் தட்டினே? “ என்று கேட்டான்.

“இல்லை அண்ணா காயுக்கு உங்க ரூம் காட்டலாம்னு தான்! ” என்று முகத்தில் சிரிப்பு மாறாமல் சொன்னாள்.

சிறிது தயந்துகியவன் “சரி வாங்க ! “ என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

உதயாவின் அறையைவிடச் சிவாவின் ரூம் பெரியதாக இருந்தது.கதவைத் திறந்தவுடனே நேர் எதிரே வெள்ளை திரைச் சீலை கொண்ட பிரெஞ்சு விண்டோ, அதன் வழியே பால்கனிக்கு செல்ல கதவு. வலது புறம் மியூசிக் சிஸ்டமும் பெரிய தொலைக்காட்சியும் இருந்தது. இடப்புறம் வாக்-இன் கப்போர்டு,அதன் அருகில் குளியல் அறையும் இருந்தது, அறையின் நடுவே ஒரு பெரிய பீன் பேக்.சுவரில் கிட்டார் (இசைக் கருவி) , பிரெஞ்சு விண்டோவை பார்த்த படி பெரிய கட்டில் எனப் பிரமாண்டமாய் இருக்க. அவளின் கவனத்தை ஈர்த்தது என்னமோ கட்டிலில் அவள் உயரத்திற்கு இருந்த டெட்டி பொம்மை தான்.

அதையே பார்த்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்துப் புன்னகைத்த சிவா.” இது என் டெட்டி ! கொஞ்ச வருஷமா இதுதான் எனக்குத் துணை. எனக்கு எந்த விஷயம் ரொம்ப பர்சனலா ஷேர் பண்ணணும்னாலும் டெட்டி கிட்டதான். திஸ் ஈஸ் மைப்பெட் அண்ட் பிரென்ட் ” என்று சொல்லி அதை எடுத்து அணைத்துக் கொண்டான்.

வளர்ந்து மீசை வைத்த ஆறடி குழந்தைபோல் அழகாய் இருந்தான் சிவா. அவனையே கண் இமைக்காது காயத்ரி பார்த்துக் கொண்டு இருக்க.

” சிவா அண்ணா ! காயு ஏன் உங்களை அப்படி பாக்குறா தெரியுமா ? அவளும் இதே போல் ஒரு டெட்டி வச்சுருக்கா ! என் பேபிக்கு அது தான் பிரென்ட் ! சின்ன வயசுலிருந்து ! காலை எழுந்தது முதல், படிக்கறது . விளையாடுறதுன்னு, தூங்கறவரை அது கூடத்தான் ! உங்கள போலவே அவ அதுகூட பேசிகிட்டு அதுக்கு பதில் சொல்லிக்கிட்டு.அப்பா சாமி முடியலை ! அதான் நீங்க எப்படி அவளோட ஆண் ஜெராக்ஸ் மாதிரி இருக்கீங்கன்னு பாக்குறா” …”அதானே காயு “என்றபடி என்று அவள் தோளைத் தன் தோளால் இடித்தாள்.

அவளைப் பார்த்துக் கொண்டு இருந்த அவன் கண்ணில் முதல் முறையாய் ஒரு மின்னல் ! அதைக் கவனித்தவள் அவனைப் பார்க்க முடியாமல் பார்வையைத் தாழ்த்தி கீழே தரையையே கூர்ந்து பார்த்தபடி நின்றிருக்க.

“டைல்ஸ் நல்ல இருக்கா ? “ என்று சிவா கிண்டலாய் கேட்க

காயத்ரியோ கண்களை இருக்க மூடியபடி மௌனமாய் நின்றிருக்க. உதயாவிற்கோ ஒன்றும் புரியவில்லை.

எனோ முகம் இறுகச் சிவா “உதயாம்மா  காலைக் காலேஜ் போகணும்ல ! போங்க போய் தூங்குங்க ரெண்டுபேரும்” என்றான் கடுமையாய்.

“ ஐயோ ! புக்ஸ், பேக் எதுமே இல்லையே எப்படி காலேஜ் போறது ? ” என்று காயத்ரி உதயாவை பார்த்து விழிக்க.

“நாளைக் காலை, நானோ கௌதமோ உன்னை உன் வீட்டுக்குக் கூட்டிண்டு போறோம். நீ காலேஜ்க்கு வேண்டியதை முதல்ல எடுத்துக்கோ ! அப்புறம் காலேஜ் போங்க ! உன்னுடைய மீதி பொருள்களை எல்லாம் நாங்க இங்க ஷிபிட் பண்ணிடுவோம் சரிதானே? ” என்றான் சிவா.

உதயா உடனே காயத்ரியை பார்த்து உற்சாகமாய் “நல்ல ஐடியா டீ, உன் வீட்டு கீ என்கிட்டத்தானே இருக்கு! அது இருந்ததால் தானே அங்க ஹாலிடே ஹவுஸ்க்கு உன் துணி பேக் அனுப்பினேன் ! ‘ என்று உளற. தான் சொன்னதைச் சிவாவும் காயத்ரியும் உணர்ந்து அவளை ஏதும் கேட்கும் முன்பே “சரி ! குட் நைட் அண்ணா ! வாடி போகலாம்” என்று அவளை இழுத்து ஒரே ஓட்டமாய் வெளியே வந்தாள்.

காயத்ரிக்காகச் சிவா சொன்ன அந்த ரூமை திறந்து காட்டினாள். அந்த அரைக்கும் சிவாவின் அரைக்கும் நடுவே ஒரே ஒரு சுவர் மட்டுமே ! இரண்டின் கதவுகளும் மிக நெருக்கமாய்!.

உள்ளே சென்று பார்த்தபொழுது அந்த அறை அப்படியே சிவா ரூமின் ப்ரதி. ஆனால் இந்த அறை அலங்கரிக்கப் பட்ட விதம் ஓர் இளவரசியின் அறைபோல் ! எல்லாம் பிங்க் நிறத்தில், சின்ன சின்ன வெள்ளை வண்ண வேலைப்பாட்டுடன் இருந்தது.கட்டிலைச் சுற்றி அழகான நெட் வலை மேலிருந்து கீழே தொங்கியபடி கட்டிலை மெலிதாக மூடி இருந்தது.

“இது யாருக்காக ரெடி பண்ணின ரூம் உதயா ?” என்று வியந்து கேட்டாள்.

“இது ஒரு மிஸ்டரி ரூம் டீ. நானே ஒரு முறைதான் பார்த்திருக்கேன் அதுவும் சிவா அண்ணாவே காட்டின்னப்போ. அதுக்கப்புறம் இது பூட்டியே இருக்கும். இந்த ரூம்குள்ளே யாருக்கும் அனுமதியே இல்லை. வேலைபண்ற அம்மா சுத்தம் செய்ய மட்டும் சிவா அண்ணா திறப்பாங்க. மற்றபடி சிவா அண்ணா மட்டும் அப்போ அப்போ டெட்டி பொம்மை கூட உள்ளே போவார் வருவார்.சில நாள் இந்த ரூம்லயே தூங்கிடுவார். இது யாருக்கான ரூம் என்று கெளதம் கிட்டக் கேட்டேன் ஆனா கெளதம் “சொல்லமாட்டேன்! நீயும் சிவாவை கேக்க கூடாதுனு “சொல்லிட்டான் ! ஸோ! இது யாருக்கான ரூம்னு எனக்குத் தெரியாது .ஆனா இப்போ இது உனக்கு அவ்ளோதான் ! ” என்று முடித்தாள்.

” ரெண்டுபேருக்கும் இன்னும் தூங்கற பிளான் இல்லையா? ” என்று சற்று அதட்டலாய் குரல் வர. அங்கே சிவா கையைக் கட்டிக்கொண்டு அந்த அறையின் வாசலில் கதவில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்!

“இதோ ! இதோ தூங்கிட்டேன் ! ” என்று உதயா அவள் அறைக்கு ஓடிவிட்டாள்.

அங்கே தனியே கட்டிலருகே நின்றிருந்த காயத்ரியை பார்த்து “காயு ! சீக்கிரமா தூங்கு. நாளைக் காலேஜ் இருக்கு …வேண்டாத விஷயத்தில் கவனம் போகாம படிப்பில் மட்டும் இருக்கணும் ! என்ன சரியா? “ என்று அதட்டிக் கொண்டே அவளை நெருங்கித் தான் அணிந்திருந்த பெர்முடாஸின் பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து அவளிடம் கொடுத்தவன்.

“ உன் செல்போன் ! கெளதம் கொடுத்தான். உள்ள என் நம்பரும் கெளதம் நம்பரும் சேவ் பண்ணிருக்கேன் ! என்ன தேவைனாலும் கூப்பிடு ! இது இனிமே உன் வீடுன்னு மனசுல வச்சுக்கோ ! ஸ்லீப் சூன்! குட் நைட் ! ” என்று அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் அறைக்கு விறுவிறு எனச் சென்றுவிட்டான்.

காயத்ரி இரவு உடைக்கு மாறி, கட்டிலில் அமர்ந்து கொண்டு, அந்த அறையைச் சுற்றிக் கவனித்தாள். சிவா அறையிலிருந்தார் போல் அங்கேயும் பெரிய பிரெஞ்சு விண்டோ இருக்க. இரவு நேரம் அதைத் திறந்து பார்க்க எதோ பயமாய் இருந்தததால் அதை நெருங்காமல். தலையணையைக் கட்டிக்கொண்டு படுத்தவள். புது இடம் என்பதால் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் வெகுநேரம் கழித்தே உறங்கினாள்.

error: Content is protected !!