NNVN _epilogue_2

NNVN _epilogue_2

மெல்லிதாய் சிரித்தால் ஆத்மி”யூ ஸ்டில் லவ் ஹிம் சாரதாம்மா”என்றாள் ஆத்மி.

 

“என்…ன”அதிர்ந்தார் சாரதா.

 

“உங்களுக்கு அவருக்கு நினைத்ததை நினைத்து வருத்தம் வந்திடுச்சு, இனி அவருக்கு எதுவும் பெருசா ஆகிட கூடாதுன்னு நினைக்குறீங்க அதான் அவரை உங்க கண்பார்வையிலே வெச்சிருகீங்க”என்றாள்.

 

மௌனமாய் இருந்தார் சாரதா, “உங்க காதல் அப்படியே தான் இருந்திருக்கு சாரதாம்மா, இது உங்க வாழ்க்கை நீங்க தான் வாழணும், உங்க வாழ்க்கையில நீங்க எதையுமே அனுபவிக்கல சாரதாம்மா, நீங்க நினைத்தால் திகட்ட திகட்ட இப்போ காதலிக்கலாம்”என்றாள்.

 

“அது எப்படி… இந்த வயசு…”என்றார் தயக்கத்தோடு.

 

“ஏன் சாரும்மா, காதலுக்கு வயசு தேவையேயில்லை சாரதாம்மா, தலைவரே சொல்லியிருக்காரு “ஹா… ஓ… ஹோ…

ஆசையா இளமை மயக்கத்தில்

முத்தத்த கொடுக்கையில் அன்ப கொடுக்கணும்

நாற்பது வருஷம் கடந்தாபோதும்

கைய பிடிப்பதில் காதல் இருக்கணும்

காதல் இருக்கணும்னு”

 

“உடல்கள் இணைவது மட்டுமா காதல், மனது இணைவதுதானே காதல், இந்த உலகத்தை ஏன் பாக்குறீங்க சாரதாம்மா, இந்த உலகத்தை நீங்க பயத்தோட பாக்குறீங்க நம்ம எப்படி பாக்குறோமா அப்படித்தான் நம்ம கண்ணுக்கு தெரியும், நீங்க அதை ரசணையா பாருங்க, உங்க காதலையும் இந்த உலகம் ரசணையா பார்க்கும், யோசிங்க”என்று முடித்துவிட்டு அவள் நகர பார்க்க.

 

“இரு டா, எனக்கு அட்வைஸ் போதும், நீ என்ன முடிவு பண்ணியிருக்க?”

 

“நானும் மன்னிக்கலை , மறந்து வாழ போகிறேன் சாரதாம்மா, அவனுடைய மொத்த காதலும் எனக்கு வேணும், இடையில் நடந்ததை என்னால மாற்ற முடியாது தான்,ஏன் யாரலையும் மாற்ற முடியாது, இன்னும் அடுத்து வர இருபது வருசத்துக்கு அவனை நான் இதை மட்டும் சொல்லி பழிவாங்கி, அதுக்கு அப்றம் அவனது காதல் எனக்கு தெரிய வரும்போது, அப்போ இத்தனை வருடம் இதை புரிஞ்சுக்காம போய்ட்டோம்னே வருத்துபடுறது வேஸ்ட் இல்லையா”என்றாள்.

 

“வாழ்க்கையில் எல்லாரும் ஒரு செகெண்ட் சான்ஸ் கொடுக்கணும் சாரதாம்மா, இன்னும் சொல்லணும்னா அதில தெரிஞ்சுக்கலாம் இது திருந்தும்மா இல்லை வாய்ப்பே இல்லையான்னு, ஒரே வாயிப்பில் யாரையும் விரட்டக்கூடாது சாரதாம்மா, உங்க பையன் முழுசா திருந்திட்டான், அவனை நான் நம்ப போகிறேன் இனிமேல்”என்றாள் திடமாக.

 

“அது இல்லை உன் காதல்”என்றார்.

 

“நான் காதலிக்க ஆசைப்படலை சாரதாம்மா, உங்க பையானால் காதலிக்கப்பட ஆசைப்படுகிறேன், அவன் ஒருவனின் காதலே ஏழேழு ஜன்மத்துக்கும் எங்கள் வாழ்க்கைக்கு போதும்”என்றாள் உளமார.

 

வியப்பாய் இருந்தது சாரதாவிற்கு அவர் வியந்த பார்வையை கண்டவள் “இன்னொன்னு சொல்லவா, உங்க பையனை பத்தி நான் நிறைய அவன் ஊரில் இல்லாதபோது தெரிஞ்சுகிட்டேன், என்கிட்ட தவிர அவன் எல்லாருக்கும் நல்லவனாய் தான் இருந்தான் தெரியுமா, ஆம் உங்க பையன் கடத்தல் காரன் தான் ஆனால் அதை அவன் நல்லதுக்குத்தான் செய்றான், ஆம் அவன் துஷ்டனை அழிக்கும் காரியத்தை தான் இத்தனை நாள் பார்த்திருக்கான், இனிமே அதையும் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டான், சோ, கவலையை விடுங்க, நீங்க உங்க லைப்பை பாருங்க”என்று அவரது கையை அழுத்திவிட்டு சென்றுவிட்டாள்.

 

*************

 

“அன்றிரவு அவனது அறைக்கு ஆத்மி சென்றால், கையில் டைரியுடன் அவன் யோசனையில் மூழ்கி இருப்பது தெரிய, அந்த டைரியை அவன் பக்கத்தில் வைத்தவள், “சொல்லு இதெல்லாம் என்ன?”என்றாள் அதிகாரமாக.

 

அவன் அமைதியாய் இருக்க,” இப்போ பேச போறியா இல்லை பனிஷ்மெண்ட் தரவா?”என்றாள் அவனை முறைத்து. அவன் இப்பொழுதும் அமைதியாய் இருக்க.

 

அவனருகே இவள் இயல்பாய் போய் அமர, எழுந்து சன்னல் பக்கம் சென்றான் அவன், ‘அடேங்கப்பா’என்று மனதோடு நினைத்தவள் அவனருகே சென்று அவனது கைகளை பிடித்தாள், அவன் மென்மையாய் அவளது கையை தட்டிவிட.

 

“ஓவரா சீன் போடாதே”என்று அவள் கூற, மெல்லிதாய் சிரித்தான்.

 

“ஓ, நீ தொட்ட பிடிக்கலன்னு சொன்னேனே, அதனாலயா?”என்றாள்.

 

அவன் அமைதியாகவே இருக்க அதிரடியாய் அவனை தன் புறம் திருப்பி அவனது இதழை சிறை செய்திருந்தாள், சில வினாடிகளில் அவள் அதை முடித்துக்கொள்ள “நீ தொட்டால் பிடிக்காது நான் தொடலாம்”என்றாள் குறும்பாக.

 

“டேய், பேசி தொலை இல்ல…”என்று அவள் முடிக்க.

 

“இல்ல…”என்று இவன் இப்போ குறும்பாக.

 

“கேடி…”அவள் அவனை செல்லமாய் அடிக்க.

 

“இங்க பாரு, நான் உன்னை மன்னிக்கலை,மறக்கபோகிறேன் நீயும் அதையே பண்ணு, புரியுது கொஞ்சம் டைம் எடுத்துக்கோ, உனக்கு குற்ற உணர்வா இருக்கு, அதில் இருந்து வெளியே வா, நான் காத்திருக்கிறேன்”என்றவள் “குட் நைட்”என்று கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள்.

 

***************

 

இரண்டு வருடங்களுக்கு பிறகு,

 

தேவ்வின் மார்பு சூட்டில் சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தவளின் தூக்கத்தை மொபல் போன் கலவாட, கண்களை திறக்காது போனை தேடி காதிற்கு கொடுத்தவள்.

 

“ஹலோ”என்றாள்.

 

“என்னடா இன்னும் தூக்கமா?”என்றார் அந்த பக்கம் சாரதா.

 

“ஆமாம் மா, செம்ம தூக்கம்”என்றாள்.

 

“சரி, சரி எழுந்து சாப்டுட்டு தூங்கு மா, நீ இப்போ ஒரு உயிர் இல்லையே”என்றார் அக்கறையாக.ஆம் ஆத்மியின் மணி வயிற்றில் ஐந்து மாதமாக வளர்ந்து வருகிறது அவர்களின் வாழ்வின் ஆதாரம்.

 

“அது சரி, என்ன விட்டுட்டு உங்க காதலனோடு டூயட் பாட போயாச்சு, இதுல அக்கறை”என்றாள் குறைப்பட்டுக்கொண்டாள்.

 

“அது சரி, உன் புருஷனோட சேர்ந்து என்னை பார்சல் பண்ணி டெல்லி அனுப்பிட்டு, இப்போ வாய் பேசற”என்றார்.

 

“நாங்க சொன்னா நீங்க கிளம்பிடுவீங்களா” என்றாள் குறும்பாக.

 

“அடி கழுதை,இரு வந்து உன்னை பாத்துக்கிறேன்”என்றவர்.இருவரும் ஒரே நேரத்தில் சிரித்துவிட்டனர்.

 

“சரி மா, நீங்க போய் டூயட்டை கண்டினியூ பண்ணுங்க”என்றாள்.

 

“ம்க்கும், உன் மாமா கலையிலே என்னை விட்டுட்டு எங்கையோ போய்டாரு”என்றார் குறையாக.

 

“அதானே பார்த்தேன், அதான் கால் லா? அதானே எங்க நம்ம மேல அக்கறைன்னு”என்றாள் குறையோடு.

 

“அஹான், நான் ஏன் அக்கறைபட அதுக்கு தான் தேவையே இல்லையே என் பையன் உன்னை கண்ணுக்குள்ள வெச்சில்ல பாத்துகிறான்”என்றார்.

 

“ம்க்கும்”என்று நொடிந்துக்கொண்டவள், போனை வைத்துவிட்டாள்.

 

தன்னவனின் முகத்தை பார்க்க, அவனது நிர்மலமான முகத்தில் ஈர்க்கப்பட்டவள் அவனது மூக்கை கடித்தாள். அதில் முகத்தை சுருக்கியவன் திரும்பிக்கொண்டான். அவனின் மேல் காதல் பெருகியது.

 

அவளின் தந்தையிடம் அவன் மன்னிப்பு கேட்க செல்கையில் அதை தடுத்துவிட்டாள் ஆத்மி ஏன் என்றவனின் கேள்விக்கு, “அவர் தவறாய் பேசியது தப்பு. உன்னை பத்தி நான் எல்லாம் சொல்லிட்டேன் அவரும் உன்கிட்டே மன்னிப்பு கேட்க வேண்டாம் நீயும் கேட்கவேண்டாம், இன்னொன்னு எங்கப்பா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ நீதானே பில் கட்டின அத்தோட அவருக்கு இரத்தமும் கொடுக்க ஏற்பாடு பண்ணின” என்றாள் அவள்.

 

“உனக்கு எப்படி தெரியும்?” என்றான் அவன்.

 

“எல்லாம் தெரியும், அவரு என் அப்பான்னு தெரிஞ்சதும் பீல் ஆகியிருப்ப அதானே”என்றாள் அவன் தோள் சாய்ந்து.

 

அதே மாறி தியாவை ஹாஸ்பிட்டல்ல “என் பொண்ணுன்னு சொல்லியிருக்க”என்றாள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு.

 

“உனக்கு பொண்ணு முறைன்னா, எனக்கும் பொண்ணுதானே”என்றான் காதலோடு.

 

“ஆமாம் “என்றாள் அவள்.அது சரி கார்த்திக்க ஏன் அப்படி பண்ணின?”என்றாள் கேள்வியாக.

 

“அவன் நல்லவன் இல்ல டா “என்றான் தேவ்.

 

“என்ன?”

 

“ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்ணி கழட்டிவிட்டிருக்கான்?”

 

“அதில் என்ன தப்பு? பிடிக்காம இருந்திருக்கலாம்?”என்றாள்.

 

“எது அவ வயத்துல பிள்ளையை கொடுத்திட்டா?”என்றான்.

 

“வாட்”என்றாள் அவள்.

 

“உன்னை பார்த்து உன்னை பிடித்ததும் அவளை கழட்டி விட்டிருக்கான் ராஸ்கல்”என்றான் கோபமாக.

 

“அதான் அவனுக்கு பாடம் கற்பித்தேன்”என்றான்.

 

“அது மட்டுமே காரணமா?”என்றாள் ஆத்மி.

 

“ம்… எவ்ளோ தைரியம் இருந்தால் என் ஆத்மி மேல் கண்ணு வைப்பான்”என்றான் கோபமாக.

 

சிரித்துவிட்டாள் ஆத்மி…இப்படியாக அவன் மேல் நாளாக நாளாக காதல் ஊற்றாய் பெருகியது.

 

நினைவுகளில் இருந்து வெளியே வந்தவளாக, அவள் எழுந்துக்கொள்ள நினைக்க தன்னோடு இழுத்தணைத்து கொண்டான் தேவ், “டேய், நான் போய் சமைக்கணும், விடு என்ன”என்றாள்.

 

“மாட்டேன்…”என்றான் தேவ்.

 

“உன் பாப்பா பட்டினியா இருக்கா”என்றாள் ஆத்மி ஆயுதத்தை கையில் எடுத்து.

 

“அச்சசோ, எந்திரி எந்திரி போய் சாப்டுவோம்”, என்று அவளை விரட்டி காலை வேலைகளை முடிக்கவைத்தான்.

 

“அடப்பாவி”என்று அவனை செல்லமாய் திட்டினால் ஆத்மி.

 

அவள் குளித்துவர காலை உணவு தயாராய் இருக்க, “எப்போ பண்ணின?”என்றாள்.

 

“எட்டு மணிக்கே”என்றான்.

 

சாப்பிட்டு முடித்தவள், “இன்னைக்கு அதை சொல்றேன் சொல்லியிருக்க,” என்றாள்.

 

“எதை…?” என்றான் தெரியாதது போல்.

 

அவள் முறைக்க, “நியாபகம் இருக்கு, கிளம்பு”என்றான்.

 

அவளை உயர்தர ஹோட்டலுக்கு அழைத்து சென்றவன் அவளை காக்க வைக்க, “ஹேய் எவ்ளோ நேரம்”என்றாள் பொறுமை இழந்து.

 

“இரு டா, 7 மணிக்கு”என்றான்.

 

“போ, நீ பிராடு”என்று அவள் முகத்தை தூக்கிக்கொண்டாள்.

 

ஆறு மணிக்கு அவளிடம் ஒரு கவுனை கொடுத்தவன் இதை போட்டுக்கோ என்றான், மறுக்காமல் வாங்கிக்கொண்டாள், ரெட் கலரில் பிரின்ஸஸ் ட்ரஸ் கண்களை கவர்ந்தது.

 

சரியாக ஏழு மணிக்கு “ஸ்வீட் ஹார்ட், வெளியே வாங்க “என்றான்.

 

அழகிய கவுனில் கழுத்தில் மெல்லிய சங்கிலி, காதில் டைமண்ட் தோடோடு,ரியல் பிரின்ஸஸாக மாறி வந்தவளின் அழகில் தேன் உண்ட வண்டாய் அவன் மயங்கி அவளிடம் நெருங்க.

 

“தள்ளி போ மேன், ப்ரோபோஷல் பர்ஸ்ட்”என்றாள்.

 

ஆம், எத்தனை கெஞ்சி அந்த கிப்ட் பாக்சின் சாவியை தரமறுத்துவிட்டான்.வெகு நாட்களாக கெஞ்சி “நீ சொல்லலன்னா எங்க அம்மா வீட்டுக்கு போய்விடுவேன்னு மிரட்ட”

 

அதில் பயந்தவன் இன்று காட்டுவதாக சொல்லியிருந்தான், அதற்கு தான் இங்கு வந்திருக்கிறான்.

 

அவளை இருபது ப்ளோர் கொண்ட மாடிக்கு அழைத்து சென்றவன், அங்கு கேன்டில் நைட் டின்னர், டேபிளில் அவளை உட்கார வைத்தவன்,சற்று தள்ளி போய் விசிலடிக்க ஹீலியம் பளூன்கள் அதில் மார்டன் கேண்டில் லைட்டோட, வர அதில் மெர்சலானவள்.

 

“வாவ்”என்றாள்.ஒரு ஹீலியம் பலூன் அவளிடம் வந்தது, அதில் ஒரு பெட்டியிருக்க அதை திறந்தவள், அதிலிருந்த ஹார்ட்டின் சாவியை கையிலெடுத்தவள்.”அடுத்து”என்றாள்.

 

யோசித்தவன், “கைத்தட்டு”என்றான்.

 

அவள் அழகாய் முறுவலித்து கைதட்ட, சிறு பெண் குழந்தைகள் வெள்ளை பிராக் போட்டு  கையில் ரோஜாவோடு, மில்கி பாரோடு வந்தனர். அதை அழகாய் பெற்றுக்கொண்டவள்.”அடுத்து”என்றாள்

 

1,2,3 என்று அவன் கூற, கீழ் இருந்து “தேவ் லவ்ஸ் மில்கி”என்ற கத்தல்.

 

அவள் அதிரந்து கீழே பார்க்க கைகளில் “தேவ் லவ்ஸ் மில்கி”என்ற போர்டை ஏந்திக்கொண்டு சுமார் ஐநூறு பேர் நிற்க.கண்களை விரித்தாள் ஆத்மி.

 

“ஹேய், என்ன இது”என்றாள்.

 

“மை ட்ரீம் போர்போசல்”என்றான்.

 

அவனை செல்லமாய் அடித்தவள், “அடுத்து..”என்றாள்.

 

“பேரர்”என்று அவன் அழைக்க, கைகளில் அந்த கிப்ட் பாக்சோடு அவன் வர அதை பெற்றுக்கொண்டவன் டேபிளில் வைத்தான்.

 

அதை அவள் திறக்கப்போக, தடுத்தவன்,”அவள் இப்போ என்ன?”என்று சீற.

 

“இரு இரு”என்றவன், மேலே பார்த்து விசிலடிக்க. ஹெலிகாப்டரிலிருந்து  அவளின் மேல் ரோஜா பூக்களின் இதழ்கள் தீண்ட.அதை ரசித்தவள்.

 

“இது கொஞ்சம் பழசு தான்”என்றாள் அவனை வெறுப்பேத்த.அவன் அவளை முறைக்க.

 

“இப்போ போய் ஓபன் பண்ணு”என்றான்.

 

மிகுந்த எதிர்ப்பார்போடு அவள் அதை திறக்க, “உள்ளே ஒரு ஹார்ட் இருந்தது”.அவள் அவனை கேள்வியாக பார்க்க.

 

“அதை திற”என்றான்.

 

அதை அவள் திறக்க உள்ளிருந்து ஒரு கண்ணாடி இருக்க, “என்ன இது?”என்றாள் கடுப்போடு.

 

“உனக்கு என்ன பரிசு கொடுக்கணும்னு யோசிச்சு எதுவுமே தோணலை, நானே உனக்கு கிப்ட் அதான்”என்றானே பார்க்கணும் அடிவெளுத்துவிட்டாள் ஆத்மி.

 

“கொறங்கே, பிசாசே, பக்கி இதை பார்க்க எத்தனை வருசம் வெய்ட் பண்ணேன் இப்படி ஏமாத்திட்டியே, இதை வாங்க டெல்லி வேற போயிருக்க”என்று அவன் வெளுத்தாள்

 

“ஹே, டெல்லி போய் காதல் மன்னனோட தாஜ் மஹால்ல உக்காந்தா எதாச்சும் ஐடியா வரும்னு போன்னேடி”என்றான்

 

“கிழிச்ச”என்றாள்.

 

“உனக்காக இன்ஸ்டென்டா யோசிச்சு, ஒன்னு ப்ளான் பண்ணேன்”என்றான்.

 

“அது என்ன?”என்றாள் கோபமாக.

 

“கீழே எட்டி பாரு?”என்றான்.

 

அவள் எட்டி பார்க்க “வில் யூ அக்செப்ட் தேவ் லவ்”என்று பலகைகளை தாங்கி நிற்க அதை கண்டு சிரித்தவள்.

 

“சான்சே இல்லை”என்றாள்.

 

அவன் போலியாக கண்களை துடைக்க, சிரித்துவிட்டவள் “யெஸ் டா பொறுக்கி”என்று கத்தியவள் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

 

தன் கைகளை சக்ஸஸ் என்று அவன் காட்ட அங்கிருந்தவர்களும் “சக்சஸ் ” என்று கத்தினர். நான்கு திசைகளிலும் வானவேடிக்கை வெடிக்க அதை அவளுக்கு காட்டியவன்.

 

“ஐ லவ் யூ”என்று மென்மையாக அவளது நெற்றியில் தன் உதட்டை ஒற்றியெடுத்தான்.

 

******முற்றும்*****

Leave a Reply

error: Content is protected !!