NNVN _epilogue_1

டிவோர்ஸ் பேப்பர்ஸில் கையெழுத்திட்டவள், அதை தூக்கி விசிறியடித்தாள், தேவ் அவளை அதிர்ந்து நோக்க.

 

அவனது கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்தவள், அவனது சட்டையை பற்றி “என்ன தப்பிச்சிடலாம்னு நினைக்குறியா? என்னை விட்டு ஓடிடலாம்னு ப்ளானா? அவ்ளோ சீக்கிரம் உன்னை விடுற ஐடியா எனக்கில்லை, நீ பண்ணின தப்புக்கு காலம் பூரா உன்னை நான் இம்சிப்பேன், கடைசி மூச்சிருக்கும் வரை இம்சிப்பேன்”என்றாள் ஆக்ரோஷமாக.

 

அவளது கைகளை தன் சட்டையிலிருந்து மென்மையாய் பிரித்தெடுத்தவன், “உன்னை பிரிய நானுமே நினைக்கலை மில்… ஆத்மி, நான் உனக்கு கஷ்டத்தை கொடுத்தப்போ அது எனக்கு ரசனையா இருந்தது, என்னால எனக்காக நீ கஷ்டப்படும்போது அது உயிரையே வதைக்குது ஆத்மி”என்றான் மென்மையாக.

 

“என்னோட நீ இருந்தால் உன்னை நீயே இழந்திடுவியோன்னு பயமா இருக்கு, என்னோட ஆத்மி மென்மையானவள், பாசமானவள், அன்பானவள், அந்த ஆத்மி என்னால காணாம போய்டாளேன்னு கஷ்டம்மா இருக்கு, நான் செய்தது எதுவும் இந்த உலகத்தின் பார்வையில் தெரியாது, நீ பண்றதை பார்த்து அவங்க உன்னை தவறாக நினைத்துவிட்டால் அதை என்னால தாங்கிக்க முடியாது, நீ நல்லவள் என்னால இந்த உலகம் உன்னை கெட்டவள்னு சொன்னா என்னால ஏதுக்க முடியாது…”என்றான்.

 

ஸ்தம்பித்தாள் ஆத்மி ‘எனக்காக வா, என்னை யாரும் தூற்றக்கூடாது என்பதற்காகவா? என்ன மாதிரி மனிதன் இவன், கோபத்தையும் வன்மத்தையும் எந்த அளவு காமித்தானோ, அதை விட மேலாக காதலை காட்டுகிறானே’என்று ஆத்மியின் மனம் அவனின்பால் சரிய.அதற்கு அவசரமாய் கடிவாளம் இட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

மேலும் தொடர்ந்தான் தேவ் “எனக்கு முன்ன உன் கணவனாகும் வாய்ப்பிருந்தது, அது இப்போ இல்லைன்னு புரிஞ்சிடுச்சு,ஒரு கணவன் ஒரு மனைவியிடத்தில் எப்படியெல்லாம் நடந்துக்கொள்ள கூடாதோ, அதையெல்லாம் நான் செய்து விட்டேன், நீ பூ போன்ற மெல்லியாள், பரிசுத்தமானவள், உனக்கு கணவனாய் இருக்கும் தகுதியை நான் இழந்துவிட்டேன்”என்றான் வேதனையுடன்.

 

“போதும் நிறுத்து, சும்மா உளறாத, உன்கிட்ட இப்போ நான் கேட்கிறது ஒரே கேள்வி, அதுக்கு மட்டும் எனக்கு பதில் வேணும்?”என்றாள் பீடிகையுடன்.

 

அவன் அவளை நிமிர்ந்து பார்க்க “என் கண்ண பார்த்து, நீ இங்கிருந்து, என் வாழ்க்கையில் இருந்தும் போய்டுனு சொல்லு கிளம்பிடுறேன்”என்றாள் தீர்க்கமாக.

 

“முடியாது… என்னால அது முடியாது…”என்றான் ஆத்மியின் தேவன்.

 

“ஏன் முடியாது சொல்லு?”என்று அவள் அவனை உலுக்க.

 

“ஏன்னா, ஐ லவ் யூ, ட்ருலி, பேட்லி, மேட்லி, ஐ எம் இன் லவ் வித் யூ, ஐ நீடு யூ, ஐ வான்ட் யூ பார் மை எவிர்திங்க் மை லவ்”என்று கத்தியிருந்தான்.

 

அவனை விழி சிமிட்டாது நோக்கியவள்,”இவ்ளோ லவ்வை வச்சிக்கிட்டு எதுக்கு டா என்னை போக சொல்ற?”என்று அவளும் கத்த.

 

“ஏன்னா, உன் லவ்விற்கு நான் தகுதியில்லாதவன்”என்றான் முகத்தை அந்த பக்கம் திருப்பியபடி.

 

“பட் உன். லவ்விற்கு நான் தகுதியான ஆள் தானே?”என்றாள் ஆத்மி கேள்வியாக.தேவ் திருதிருவென முழிக்க அதை பயன்ப்படுத்திக்கொண்டவள்.

 

“இங்க பாரு, எனக்கு நீ வேணும், உன் காதல் வேணும்,எனக்கு மட்டுமே வேணும்”என்று அவள் கூற ஏதோ கூற வந்தவனை தடுத்தவள், “இரு முடிச்சிறேன்,அதுக்காக நீ பண்ணினதை நான் மறக்கலை மன்னிக்கவுமில்லை”

 

“எனக்கு புரிந்தவரை அந்த தேவ் போலி, என் முன் இப்போ நிக்கிறவன் தான் உண்மையான தேவ், அந்த தேவ் இடையில் வந்தான் அவனாகவே போய்ட்டான், அவனை பற்றி இப்போ என்ன பேச்சு, எனக்கு அந்த தேவ் வேண்டவே வேண்டாம், அவனை நான் இனிமே பார்க்கவே நினைக்கலை, அவனை மன்னிக்கவும் மாட்டேன்”

 

“ஆனால், நீ உன் காதலை நான் மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன், இது முழுக்க முழுக்க எனது சுயநலமே, உன்னோடான என் வாழ்வு எப்படி இருக்கும்ணு எனக்கு வாழ்ந்து பார்க்க ஆசை வந்திடுச்சு, சோ…”என்று அவள் நிறுத்த.

 

“இந்த காதல் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது, யார் சொன்னா?”என்றான்.

 

“இப்போ ஆச்சும் கேக்கணும் தோணுச்சே,அந்த அரை லூசு ஆத்விகா வந்தா அவளை மிரட்டி வாங்கினேன், அப்றம் உன் பிரண்ட் கொஞ்சம் சொன்னால் அப்றம் இந்த டைரி நிறைய சொல்லுச்சு “என்றாள்.

 

“ஓ “என்று அவன் முடிக்க.

 

“என்ன ஓ, நான் உன்னை காதலிக்கமாட்டேன், நீ காதலி , தினம் தினம் என்னை காதலி எனக்காக நீ எந்த அளவு செய்வன்னு இந்த ரெண்டு மாசத்துல நான் தெரிஞ்சுக்கிட்டேன், அப்போ காலம் முழுக்க எவ்ளோ செய்வ?” எனறு நிறுத்தியவள்.

 

“ஐ வான்ட் தட் லவ், அன்கண்டிஷனல் லவ் டில் மை லாஸ்ட் ப்ரீத்”என்றாள் உளமாற.

 

தேவ் குழப்பமாக இருக்க, “ரொம்ப குழம்பாத, யோசி எல்லாம் புரியும்”என்றவள் “போ” என்று அவனை அனுப்பிவைத்தாள்.

 

மிகுந்த குழப்பத்தில் இருந்தான் தேவ், தான் ஆசைப்பட்ட கனவு வாழ்வு இப்போது கிடைக்கப்போகிறது, அதை ஏற்றுக்கொள்ள முடியலையே, ஏன் இந்த தண்டனை? எதற்காக இந்த தண்டனை? ஊமையாய் அவன் பிதற்றினான்.

 

இரண்டு நாட்கள் அதன் போக்கில் நகர, ஆத்மியும் அமைதியாகவே இருந்தால், அவளது அமைதி சாரதாவை கேள்வி எழுப்ப.

 

“ஆத்மி மா”என்றழைத்திருந்தார் சாரதா.

 

“சொல்லுங்க சாரும்மா”என்றாள் ஆத்மி.

 

“ஏன் ஒரு மாறி இருக்க, எதாவது பிரச்சனையா?”என்றார்.

 

“ம்க்கும், இல்லை, ஒரு டவுட் , உங்க கிட்ட கேக்கணும், கேட்கட்டுமா?”என்றாள்.

 

“கேளேன் டா, இதுக்கு எதுக்கு பர்மிஷன்”என்றார்.

 

“நீங்க ஏன் அறிவ அங்கிளை, ஏத்துக்க கூடாது”என்றாள்.

 

அதிர்ந்தார் சாரதா, “அது எப்படி முடியும் ஆத்மி”என்றார் கலக்கத்துடன்.

 

“ஏன் முடியாது, சாரும்மா, எனக்கு உங்க வாழ்க்கையில நடந்தது தெரியும், எப்படின்னுலாம் கேக்காதீங்க, நீங்க அவரை மன்னிச்சுடீங்களா?”என்றாள்.

 

“இல்ல… இல்ல… ஆத்மி அவரை நான் மன்னிக்கல, மறக்க நினைத்தேன், அவர் எனக்கு பண்ணியதற்கு நிறைய அனுபவித்துவிட்டார், இனியும் அவர் தனியா இருந்து எதாவது ஆனா அவருக்கு இன்னும் நம்ம பண்ணின பாவம் நம்மல துரத்துதேன்னு மனசு கஷ்டப்படும், என் கூட இருக்கும்போது எதாவது நடந்த அது பெருசா தெரியாது, அதுனால அவருக்கு சின்ன மனதிருப்தி கிடைக்குமேன்னு தான் என் கூட இருக்க வச்சேன்”என்றார்.