OVOV 23

OVOV 23

தன்வி நிலை தான் மிக பரிதாபமாய் இருந்தது.தான் தன் மகனுக்கு பார்த்த பெண் ‘அடிக்ட்’ என்ற செய்தி திகைப்பை கொடுத்து இருக்க, அதில் இருந்து அவர் மீள்வதற்குள் அமன்ஜீத் கை நீட்டி விடுவான் என்று எதிர் பார்த்து இருக்கவில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் ஜெஸ்ஸியின் ரியாக்ஷன் எல்லாவற்றையும் சொதப்பி இருந்தது.

டாம் அண்ட் ஜெர்ரியை விட மிக மோசமாய் அடித்து, அடித்து விளையாடும் பிள்ளைகளை என்ன செய்வது என்று விளங்கவில்லை அவருக்கு.

எதையும் தீர விசாரியாமல், ஒருத்தர் ஓவர் டோஸ் ஆவதற்கு பல காரணம் இருக்கலாம் என்று யோசியாமல்,கை நீட்டியது தன் குற்றம் என்பது அமன்ஜீத்துக்கு புரிந்தே இருந்தாலும், ஈகோ என்ற ஒன்று அவனை ஆட்டி படைக்க ஆரம்பித்தது.

‘இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை அறைந்து இருப்பாள்?’என்ற எண்ணம் மட்டுமே அவனில் இருக்க,எந்த உரிமையும் இல்லாமல் தான் முதலில் கை நீட்டியதை ஏனோ வசதியாய் மறந்து விட்டான்.

ஒன்றுமே இல்லாததை பெரும் பிரச்சனை ஆக்கி,அதன் ரியாக்ஷன் எதிர்பாராத விதமாய் திரும்பும் போது,மற்றவர்கள் மேல் பழி சொல்லும் சில சின்ன மனிதர்களை போல் அந்த நொடி இருந்தான் அமன்ஜீத்.

ஏற்பட்ட மன வருத்தத்தை போக்கும் கடமை தனக்கு உள்ளது என்பதை புரிந்து கொண்ட தன்வி,

“ஜெஸ்ஸி … தவறு நடந்து விட்டது மகளே …டாக்டர் எத்தனை நாளாய் ‘நீ ட்ரக் யூஸ் செய்யறே?’ என்று கேட்டதும் நாங்க கொஞ்சம் ஆடி போய்ட்டோம்…இங்கே போதை மருந்து என்பது பெண்களும் சர்வ சாதாரணமாய் பயன்படுத்தும் சாக்லேட் போல் ஆகி விட்டது. அதான் நீயும் அப்படி ….என்று நினைத்து அமன் கை நீட்டி விட்டான் …..சாரி மா.”என்றார் தன்வி, மகன் செய்த குழறுபடியை சரி செய்ய முயன்றவராய் .

“ஆண்ட்டி …வாட் வி சீ ஆர் ஹெர்ட்(பார்ப்பதும் ,கேட்பதும் ) எப்பொழுதும் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை…எல்லாத்துக்கும் அதர் சைடு என்ற ஒன்று இருக்கும்.” என்றாள் ஜெஸ்ஸி கோபத்துடன்

“புரியுது மகளே …ஆனால் எங்க பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசித்து பாரு.எங்களை நம்பி உன் பெற்றோர் இவ்வளவு தூரம் அனுப்பி வைக்கும் போது உன் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு ஆகிறது…உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்லி இருப்போம் ….எப்படி அவர்கள் முகத்தில் விழித்து இருப்போம் சொல்லு ….

எங்க வீட்டுக்கு வரும் பெண் என்னும் போது …..இவங்க அப்பா மத்திய மந்திரி தெரியும் தானே …நாளை மீடியா ‘மந்திரியின் வீட்டு பெண் போதை மருந்து ஓவர் டோஸ் ‘என்று தான் நியூஸ் போடுவாங்க …உண்மை பொய் என்று எதையும் விசாரியாமல் நியூஸ் வந்த பிறகு, உன்னை பற்றியும் A -Z அலசி ஆராய்ந்து ஒன்றை பத்தாய் போடுவாங்க …அதான் அந்த டென்ஷன் தான் அமன் கை நீட்டி விட்டான் ….”என்றார் தன்வி

“புரியுது ஆண்ட்டி…எலெக்ஷன் டைம் உங்க பேர் அடிபட கூடாது என்று தயங்குவது புரியுது …ஆனால் நீங்க சொன்ன இத்தனை சமாதானமும் நான் உண்மையான அடிக்ட்டா இருந்தால் மட்டுமே சரி வரும் …எவனோ பணத்துக்கு ஆசை பட்டு பிணங்களை உருவாக்கி கொண்டு இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

அப்படியே என் பெயர் அலசப்பட்டாலும் தவறே செய்யாத நான் ஏன் பயப்படணும் ….மத்தவங்களுக்கு பயந்து, பயந்து வாழ்ந்தால் நாம் வாழவே முடியாது .அப்படியே கேட்டாலும் .’ஆமா…ஓவர் டோஸ் ஆகி போச்சு’  என்று சொல்லும் துணிவு எனக்கு உண்டு  …

உங்க மகனுக்கு இன்னும் கை நீட்டி விட்டு பின் காரணம் கேட்கும் பழக்கம் போகவில்லை போல் இருக்கு ….சாப்பாட்டில் கொஞ்சம் காரத்தை குறையுங்க ஆண்ட்டி  …”என்றாள் ஜெஸ்ஸி கடுப்புடன் .

திகைத்து விழித்தனர் தாயும் மகனும் …தவறு செய்பவர்களே துணிவுடன் நாட்டில் நெஞ்சை நிமிர்த்தி உலவும் போது ,தவறே செய்யாத நான் பெயர் மீடியாவில் அடிபடும் என்பதற்காக எல்லாம் பயந்துசாக முடியாது என்ற அவளின் கம்பீரம் அவர்களை திக்குமுக்காட வைத்தது.

“அவனவன் முதுகுக்கு பின் ஆயிரம் சாக்கடை இருக்கும் ஆண்ட்டி  …ஒரு பெண்ணை காலி செய்யணும் என்றால் ஒரே வழி அவள் பெயரை கெடுப்பது என்பது ரொம்ப பேஷன் ஆகி போச்சு …நாம ஓடும் வரை குலைக்கும் நாய் நம்மை துரத்திட்டு தான் இருக்கும் …இதற்கு எல்லாம் பயந்தால் நாம் சுவாசிக்க கூட முடியாது…எனக்கு இது எல்லாம் பழகி போச்சு ஆண்ட்டி

போதை மருந்து என்னும் கொடிய அரக்கனை ,சமூகத்தில் பரவி இருக்கும் சில கொடூரங்களை எதிர்க்கும் போது இப்படி எல்லாம் நடக்கும் தான் .

அதிலும் இது போதை களஞ்சியம் ….இங்கே நான் வாய் மூடி சும்மா இருப்பேன் என்று எதிர் பார்க்க வேண்டாம் …அதுவும் அந்த கர்மத்தை எனக்கே கொடுத்து இருக்காங்க என்னும் போது…இப்போ வந்த ப்ரீத்தி பேசியதை கேட்டு இருக்கேன்…

‘பத்தோடு பதினொன்றாய் பிறந்தோம் ,வாழ்ந்தோம் செத்தோம் என்று இருப்பதில் என்ன இருந்து விட போகிறது?  …வீடு,குடும்பம் ,பிள்ளை,குட்டி ,கணவன் என்ற வாழ்க்கை மட்டும் ஒரு பெண்ணிற்கு போதாது….

அதையும் தாண்டி “தனக்கு என்ற முத்திரை” ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த பூமியில் இருந்தே ஆக வேண்டும் …தேங்கும் தண்ணீர் நாளடைவில் சாக்கடை ஆகி துர்நாற்றம் வீசி விடும் …ஓடும் காற்றாடு வெள்ளம் தனக்கென தனி பாதையையே உருவாக்கி விடும் …

இன்னாரின் மகள்,மனைவி,மருமகள் ,அம்மா ,சகோதரி என்பதையும் தாண்டி “இந்த பெண்” என்ற தனி முத்திரை பதிக்காமல் போனால் சாகும் அந்த கடைசி நொடிக்கு அர்த்தம் என்பதே இல்லாமல்  போய் விடும் …நெருப்பும் ,புழுக்களும் உண்ண போகும் உடல் ….யாரின் வாழ்க்கைக்காவது ஒரு துரும்பாய் உதவினோம் என்று இருக்கட்டுமே …நமக்கும் மத்த விலங்குகளுக்கும் வித்தியாசம் வேண்டாமா ?…”

ப்ரீத்தியின் இந்த கருத்தில் எனக்கு ஆழந்த ஈடுபாடு உண்டு ஆண்ட்டி….சோ என்னையும் என் செயல்களையும் அப்படியே ஏற்பதாய் இருந்தால் உங்க கூட உங்க வீட்டுக்கு வரேன் …இல்லைன்னா டாக்டர் டிஸ்சார்ஜ் செய்த உடன் அப்படியே எஸ்ஸாகி கொள்கிறேன்.”என்றவளின் பேச்சை கேட்டு தாயும் மகனும் திகைத்து அமர்ந்து இருந்தனர்.

‘நான் இது தான் …முழு பேக்கஜ் ….என்னோடு என் செயல்களையும் அப்படியே ஏற்று கொள்ளுங்கள் …முடியாது என்றால் நான் விலகி கொள்கிறேன் …’என்ற அவளின் நிமிர்வு அவர்களை புரட்டி போட்டது.

சற்று நேரம் எதையும் பேசாமல் இருந்தார் தன்வி.அவருக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை என்று சொல்வது தான் சரியாய் இருக்கும். அவரும் கணவனை நம்பி இராமல் தனக்கென முத்திரை பதித்து வருபவர் தான் .

அது தெரு விளக்கு போடுவது,தண்ணீர் குழாய் அமைப்பது, பென்சில்,நோட் புத்தகம் வாங்கி கொடுப்பது ,ஸ்கூல்,காலேஜ் பீஸ் கட்டுவது,டொனேஷன் கொடுப்பது என்பதோடு முடிந்து விடும்.அதாவது பட்டும் படாமல் செய்யும் உதவி.

ஆனால் ஜெஸ்ஸி,ப்ரீத்தி போன்ற பெண்கள் கள பணியாளர்கள். சமூகத்தில் புரையோடி போய் இருக்கும் சில வக்கிரங்களை, தீயவற்றை களை பறிக்கவில்லை என்றால் எவ்வளவு நல்லது செய்தாலும் ஓட்டை உள்ள குடத்தில் நீர் நிறைப்பதை போல் வீணாகி விடும் என்று தங்கள் உயிரை பற்றியும் கவலை படாமல் மற்றவர்களுக்காக  வாழும் போராளிகள்.

மிக சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கொண்டே தங்களால் முடிந்ததை செய்யும் லட்சக்கணக்கான  மக்களின் பிரதிநிதிகள். தினம் தினம் வயிற்றுக்கு பாட்டுக்காக ஓடி கொண்டு இருந்தாலும், எதையாவது நல்லது செய்து விடும் முகம் தெரியா அந்த லட்சக்கணக்கான நல்ல மனிதர்களின் நகல்கள்.

என்றைக்காவது நிச்சயம் போக போகும் உயிர் .’expiry’ தேதியுடன் தான் படைத்தவன் அனுப்பி இருக்கிறான் என்னும் போது, போகும் உயிர் யாருக்காவது உதவிய பின் போகட்டுமே என்று கர்ஜிக்கும் இவளின் துணிவை ஏற்க முடியுமா என்ற தயக்கம் அவரிடம்.

ஒரு தாயாய் அவர் எதிர்பார்ப்பது ஒரு தன் மகனுக்கான மனைவியை.தன் வம்சத்தை விருத்தி செய்ய ஒரு அமிர்த கலசத்தை.ஆனால் இதற்கும் மேல் ஒரு எரிமலையாய் பொங்கும் ஒரு பெண்ணை தன் குடும்பம் தாங்குமா?

சட்டென்று ஏதோ நினைவு வர,”உனக்கு என் மகனை தெரியுமா ஜெஸ்ஸி ….அவன் கோபத்தை என்னவோ நேரில் பார்த்தது போல் சொன்னே.”என்றார் தன்வி .

அதுவரை தன்வி எப்படி சிந்தித்து கொண்டு இருந்தாரோ அப்படியே ,’இந்த பெண்ணை வேலைக்கு எடுத்தால் சரி வருமா’என்று யோசித்து கொண்டு இருந்தவன் தன் அன்னையின் கேள்வியை கேட்ட பிறகு தான் ஜெஸ்ஸி தன்னை பற்றி சொல்லியது மீண்டும் நினைவில் வர குழப்பத்துடன் பார்த்தான்.

“ஏன் தெரியாம ஆறு மாதம் ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங் என்று சிம்லா வந்துட்டு,ஒரு ஸ்கூல்,காலேஜ்ஜை ரெண்டாய் பிரித்த பெருமை உங்க மகனையும்,அச்சுவையும் தானே சேரும்.என்ன ஹாஸ்பிடல்,போலீஸ் ஸ்டேஷன் என்று சிம்லா அதிர்ந்தது.

இவங்க ரெண்டு பேருக்கும் ‘போஸ்ட் கேர்ள்’ வேலை பார்த்தே எனக்கு கையும்,காலும் உடைந்தது தான் மிச்சம். கொஞ்ச நஞ்சமாய் ஜொள்ளு ஆறு ஓடியது .’அவசரம்’ அமன்ஜீத் உடன் பிறந்தது என்று ரொம்ப நல்லாவே தெரியுமே.சார் கையால் தானே முதலில் பேசுவார் “என்றாள் ஜெஸ்ஸி புன்னகையுடன் .

“பாரு எப்படி விழிக்கிறான் பாரு …டேய் உன் அமுல் பேபி முகத்தை எல்லாம் ஏற்கனவே கிட்டே இருந்து பார்த்தாச்சு டா….ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாதுடா நல்லவனே ….”என்றாள் ஜெஸ்ஸி தமிழில் .

“வாட் ..”என்றான் அமன்ஜீத் அவள் தமிழில் பேச புரியாதவனாய்

“ஹ்ம்ம்…வாத்து …கொக்குன்னு …சும்மா கிளம்புடா …. …..கருவாடு மூளை ….உனக்கு ஒண்ணுமே தெரியாது …இன்னேரம் நான் பத்து நண்டு சிண்டு பெத்துட்டு அதுங்க கூட மல்லு கட்டிட்டு இருந்து இருப்பேன்…

உள்ளே புகுந்து எல்லாத்தையும் குழப்பி தள்ளிட்டு  …நீ எவ்வளவு நல்லவன் என்றால் ரொம்பவே நல்லவன் .அதான் எனக்கு தெரியுமே …உனக்கு எல்லாம் கோவில் தான் கட்டணும் .”என்றாள் ஜெஸ்ஸி தமிழில் .

“ஹேய் இவ்வளவூ நேரம் ஹிந்தியில் தானே பேசிட்டு இருந்தே …இப்போ தமிழில் எதுக்கு பேசிட்டு இருக்கே லூசு மாதிரி …”என்றான் அமன்ஜீத் கோபத்துடன் .

“ஆமாடா உன் கூட எல்லாம் இருந்தா லூசு ஆகாம அமெரிக்கா ப்ரெசிடெண்ட் டா ஆக முடியும்? ஆமாடா வெள்ளை எருமை …நீயும் அந்த அச்சுவும் இருந்தால் கூட இருப்பவங்க லூசா தான் போவாங்க …பாரு  விழிக்குது பாரு …சிக்ஸ் பேக் உரங்கொட்டான் …”என்றாள் ஜெஸ்ஸி மீண்டும்.

“வெயிட் …வெயிட் …நீ அர்ஜுனை என்னன்னு சொன்னே …          அச்சுன்னா? அவனை அப்படி கூப்பிட்டு வெறுப்பேத்தியது ஒரே ஒரு பெண் ….அது …”என்று தலை கோதி அமன்ஜீத் யோசிக்க

“சுத்தம் …. அடப்பாவிங்களா என்னை யாருன்னே தெரியலையா உங்க ரெண்டு பேருக்கும்? இப்போ தான் யோசிக்கவே செய்யறியா ….ரொம்ப சந்தோசம் …

அதான் அவனும் எதுவும் பேசாமல் ப்ரீத்தி மேலே கண்ணாய் இருந்தானா …விளங்கிடும் ….ஹ்ம்ம்  எப்போ தான் நான் பத்து குழந்தைகளுக்கு மம்மி அகறது …ஜெஸ்ஸி டியர் உன் நிலைமை இப்படியா கண்ணா ஆகணும் …”என்று தமிழில் வாய் விட்டு புலம்பிய jessi, தன் தலையில் கை வைத்து கொண்டாள்.

‘அர்ஜுனை அச்சுன்னு கூப்பிடுறது,என் கிட்டே தமிழில் பேசியே என்னை கலாய்க்கிறது எல்லாம் ….’என்று யோசித்த அமன் ,அடுத்த நொடி கண்டு கொண்டதன் அடையாளமாய் கண்கள் விரிய ,

“நீ …நீ ….ஹேய் கோல்டன் பிஷ் ….எப்படிடீ இருக்கே ….”என்றவன் அடுத்த நொடி அவளை பாய்ந்து அணைத்து இருந்தான் .

தன்விக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை.ஜெஸ்ஸி மூச்சு முடி மயக்கத்திற்கு போகாதது ஒன்று தான் குறை.அந்தளவிற்கு இறுக்கமான அணைப்பில் இருந்தாள் ஜெஸ்ஸி.

“ஹேய் கோல்டன் பிஷ் …எப்படி இருக்கே …ஆளே அடையலாம் தெரியலை …யாப்பா என்னமா வளர்ந்து இருக்கே …ஆள் அட்ரஸ் இல்லாமல் எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லாமல் கூட இப்படியா காணாமல் போவே? …”என்றான் அமன்ஜீத்

அவனால் தன் கண்களை நம்பவே முடியவில்லை.ஸ்கூல் யூனிபார்மில்,ரெட்டை ஜடை போட்டு, தங்கள் பின்னால் சுற்றி கொண்டு இருந்த பள்ளி சிறுமி இப்பொழுது ஆளை அசரஅடிக்கும் தேவதை போல் இருந்தால் மூச்சு விட கூட மறந்தவனாய் அவளையே வெறித்து கொண்டு இருந்தான்.

  “பார்த்தா தெரியலை …குருவின் அருளால் ரொம்பவே நல்லா இருக்கேன் …”என்றாள் அவர்களின் தோழி ஜெஸ்ஸி.

“நீ நிச்சயம்  ஸ்விம்மிங்கில் ‘ஏசியன் கேம்சில்’ தங்கம் வெல்வாய் என்று நினைத்தோம் ஜெஸ்ஸி …ஆனால் ட்ரைனிங் நடுவிலே உன் டாடி ஏதோ பேமிலி எமெர்ஜெண்சி என்று கூட்டிட்டு போய்ட்டார் என்று கேள்வி பட்டோம்.உன் காண்டாக்ட் நம்பர் வேற ஒர்க் செய்யலை ….ஏன் அப்படி எங்க கிட்டே கூட சொல்லாமல் போனே?…ஸ்போர்ட்ஸில் நல்ல எதிர்காலம் இருந்துச்சு உனக்கு ….”என்றான் அமன்ஜீத் அவள் அருகே அமர்ந்து அவள் கையை பிடித்தவாறு .

“அண்ணாவும் அவன் தோழர்களும் ட்ரக் ஓவர் டோசீல் இறந்துட்டாங்க…அம்மாவிற்க்கு அண்ணா தான் ரொம்ப ஸ்பெஷல் …அவன் இறப்பை தாங்க  முடியமால்,எங்கே தன் வளர்ப்பு தவறி போச்சுன்னு அந்த வேதனையில்  ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு …

அப்போ தான் அக்காவுக்கு மேரேஜ் ஏற்பாடு செய்து இருந்தாங்க. இப்படி என்றதும் பையன் வீட்டு ஆட்களும் எங்க  பேமிலிய தப்பா பேசி,அப்பா அவங்களை அடிச்சி என்று குடும்பமே சிதைந்துடுச்சு  ..எல்லோரையும் திரும்பவும் மீட்பதற்குள் இத்தனை வருஷம் ஓடி போச்சு.

யார் கிட்டே போய் இதை எல்லாம் சொல்ல முடியும் சொல்லு … குடும்பமே அழிஞ்சி சிதைந்து இருக்கும் போது ஸ்போர்ட்ஸ் எல்லாம் நினைச்சி பார்க்க கூட முடியலை”என்றாள் ஜெஸ்ஸி கண்கள் கலங்க எங்கோ வெறித்தவளாய்.

“எங்க நினைப்பு வரலியா உனக்கு …உனக்கு ஏதாவது ஒன்று என்றால் நானும் அர்ஜுனும் முன்னால் வந்து நின்று இருப்போம் தானே…அப்போ எங்க ரெண்டு பேரையும் நீ தோழனாய் நினைக்கவேயில்லை அப்படி தானே…”என்றான் அமன்ஜீத் கோபத்துடன்.

“ஏன்னு தெரியலை அமன்…மைண்ட் அப்போ ரொம்ப அப்செட்டில் இருந்தது …நீங்களும் எங்கே என்னை தப்பா நினைச்சுடுவீங்களோ என்று ….தவிர ஜூடோ, கராத்தே,ஹாக்கின்னு நீங்க ரெண்டு பேரும் ட்ரைனிங்கில் ரொம்ப பிசி… எனக்கு தான் சான்ஸ் போச்சு …நீங்க ரெண்டு பேரும் அதில் வின் செய்வீங்க என்று தான் .”என்றாள் ஜெஸ்ஸி .

“அப்படியே ஒன்று விட்டேன் …பல்லு மொத்தம் கொட்டிடும் …உன்னை விடவா எங்களுக்கு அந்த ஸ்போர்ட்ஸ் முக்கியம் …ஆமா ரெண்டு பேரும் அப்படியே தங்கம் தங்கமாய் வாங்கிட்டோம் பாரு …

ஜஸ்ட் அந்த நேரத்திற்கு ஸ்போர்ட்ஸ் மேல் ஒரு வெறி …ப்ரெண்ட்ஸ் கிட்டே பணம் இருந்துச்சு ..இன்டர்நேஷனல் ட்ரைனிங் அகாடெமியில் சேர்த்து விட்டாங்க ….ட்ரைனிங் எடுத்தோம் …

போட்டியில் எல்லாம் பார்ட்டிசிபேட் செய்தோம் …ஜெயிக்க முடியலை …அது எங்களுக்கான பீல்ட் இல்லன்னு புரிஞ்சு போச்சு …இப்போ பாரு நான் பிசினெஸ் ..அவன் விவசாயம் என்று இதில் செட்டில் ஆகிட்டோம் …”என்றான் அமன்ஜீத் .

“ஒகே பாபா சாரி ….போதுமா ….என்னவோ அப்போதைக்கு அப்படி தோணுச்சு …மைண்ட் எல்லாம் அப்செட் ஆகி இருந்த நேரம் …எதையும் நேரா யோசிக்கவே முடியாத நிலை ….ஒகே முகத்தை இப்படி வச்சுக்காதே …பார்க்கவே சகிக்கலை …சாரி ..சாரி …”என்றாள் ஜெஸ்ஸி

“இப்போ கூட இங்கே வரலை எங்களை பார்க்கலை என்றால் கடைசி வரை காண்டாக்ட்டில் வந்து இருக்க மாட்டே அப்படி தானே …பேசாதே போ …கெட் லாஸ்ட் …”என்றான் அமன்ஜீத் கோபம் அடங்காதவனாய் .

தங்கள் தோழி வாழ்க்கையின் அதி முக்கியமான நேரத்தில் தங்களை ஒதுக்கி வைத்ததை அவனால் ஏற்கவே முடியவில்லை.

“அமன் …அவ தான் சாரி சொல்றா இல்லை …நடந்தது நடந்து போச்சு …லீவ் இட் …”என்றார் தன்வி .

“போங்க மா ….இவளுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு எப்படி பயந்தோம் தெரியுமா…ஒரு சிலர் கிட்டே தான் நட்பு என்பது கேட்காமல் அமையும்…இவ எனக்கும் அர்ஜூனுக்கும் எவ்வளவு ஸ்பெஷல் தெரியுமா…லூசு….”என்றவன் ஜெஸ்ஸி தலையில் நொங்கு நொங்கு என்று நான்கு குட்டு கொட்டினான்.

“அய்யோ ஆண்ட்டி …இந்த தீவிரவாதி கிட்டே இருந்து என்னை காப்பாத்துங்க ஆண்ட்டி …”என்று தன்வி பக்கம் சாய அவளை முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டான் அமன்ஜீத்.

தன்விக்கு ஜெஸ்ஸி யார் என்று நினைவுக்கு வந்தது.அமன்னும் அர்ஜுனும் காலேஜ் ரெண்டாம் வருட லீவில்,ஸ்போர்ட்ஸ் மேல் வெறி கொண்டு சுற்றி கொண்டு இருந்த தருணம்.

ஷிம்லாவில் NRI பத்து பேர் சேர்ந்து “இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங் அகாடமி”ஆரம்பித்து இருந்தார்கள். உலக தரம் வாய்ந்த ட்ரைனிங் சென்டர்அங்கு தான் பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருந்த ஜெஸ்ஸி இவர்களின் தோழியாய் அறிமுகம் ஆனது.

இவளை பற்றி அடிக்கடி தன்வியுடன் பேசி கொண்டே இருப்பான் அமன்ஜீத்.இவள் செய்யும் குறும்பு.அர்ஜுனையும் இவனையும் கலாய்ப்பது என்று இவர்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் நஞ்சம் இல்லை.

எதற்கு எடுத்தாலும் முட்டி மோதி கொண்டு இருந்த அர்ஜுன் அமன் இருவருக்கும் இடையில் இன்னொரு பாலமாய் இருந்தது ஜெஸ்ஸி.எப்படி யோஜித் என்ற நண்பன் இருவருக்கும் பொதுவோ அதே போல் ஜெஸ்ஸியும் இருவரின் செல்லம்.

‘இந்த கேம்ப் முடிந்ததும் ஜெஸ் டாட் கிட்ட சொல்லி அவளை பஞ்சாபிற்கே அழைத்து வந்து எங்க காலேஜில் சேர்க்க போறேன் …பார்ம் எல்லாம் வாங்கியாச்சு’ என்றளவிற்கு பேசிய மகனை பற்றி அறிந்தவர் என்பதால் அவனின் கோபம் அவருக்கு புரிந்தது.

எது ஜெஸ்ஸியை இப்படி மாற்றி இருக்கிறது என்பதும்.

“ஆமா எங்கே அந்த ரீனா,கரீனா ,கத்ரீனா ,பிங்கி ,பேபி ,புவா எல்லாம் ….சுத்தி சுத்தி வந்தாங்க…பார்ட்டி ,பப் எல்லாம் நீயும் அர்ஜுனும் என்னை கழட்டி விட்டு அவள்கள் உடன் மட்டும் தானே போவீங்க …பெவிகால் போடாத குறையாய் கோபியர் புடை சுழுந்த கண்ணனாய் தானே நீங்க ரெண்டு பேரும் சுத்திட்டு இருப்பீங்க.

அந்த கேம்ப்பிற்கு வந்த பொண்ணுகளை அர்ஜுன் டீம் ,அமன் டீம் என்று பிரித்து வைத்த புண்ணியவான்கள் தானே நீங்க ரெண்டு பேரும்?…இன்னேரம் அதில் யாராவது ஒருத்தி “மிஸஸ் அமன்,மிஸ்ஸஸ் அச்சு ஆகி இருப்பாங்க என்று நினைத்தேன் …ஒன்றுமேவா தேறலை…இல்லையே ரீனா உன்னையும் ,அந்த கரீனா உன்னையும் மேரேஜ் செய்தே தீருவது என்று சபதமே போட்டார்களே…”என்றாள் ஜெஸ்ஸி.

(அடப்பாவிங்களா லிஸ்ட் ரொம்ப சின்னதாய் இருக்கு )

அவர்கள் கோபியர் கொஞ்சும் கண்ணன்கள் தான்.ஆனால் அது வெளியே யாருக்கும் தெரியாது.தெரியவும் விட்டது இல்லை.

அதற்காக எல்லை எல்லாம் தாண்டியதும் இல்லை.பார்ட்டி,பப்,டான்சிங்,அப்போ அப்போ ஸ்டார்டர்,சூப் அதோடு சரி.இதை எல்லாம் சிதறு தேங்காய் போல் ஜெஸ்ஸி தன்வி முன் போட்டு உடைக்க அவர் அதிர்ச்சியாக,அமன் ஆடு திருடிய கள்ளன் பிடிப்பட்டதை போல் திருதிருவென விழித்தான்.

“அம்மா தாயே ..என் இமேஜை கொஞ்சம் டேமேஜ் செய்யாம இரு …அவங்க எல்லாம் தோழிகள்…தட்ஸ் சால் ..”என்றான் அமன் முகத்தில் அசடு வழிய.

“ஒஹ்ஹ உங்க ஊரில் தோழிகளை தான் கண்ணே ,மணியே என்று மடியில் வைத்து கொஞ்சுவீங்களா அமன் சார்?…உன்னை தவிர இந்த இதயத்தில் யாருக்குமே இடம் இல்லை…நீ லைலா நான் மஜ்னு …நான் ரோமியோ…நீ என் ஜூலியட்…நீ என் உயிர் …நான் உன் உடல்… என்று எல்லாம் டயலாக் விடுவீர்களா என்ன …இது வரை எனக்கு தெரியாமல் போச்சே…”என்றாள் ஜெஸ்ஸி மௌன சிரிப்பில் உடல் குலுங்க.

“ஜெஸ் …”என்று அமன் முறைக்க ,தன்வி வெளியே தனக்கு எத்தனை பெண்கள் பிள்ளைகளுடன் வந்து நிற்பார்களோ என்று யோசிக்கவே ஆரம்பித்து விட்டார்.

“என் கதையை விடு…உன் மேட்டருக்கு வா…உன் லவ்வை அர்ஜுன் கிட்டே சொல்லிட்டியா இல்லையா…அவன் தான் உயிர்,உலகம் அவன் தான் உலகம் என்று சுத்தி சுத்தி வந்தே ….இன்னுமா அவன் கிட்டே சொல்லலை?…”என்றான் அமன்

அப்படி அவன் கேட்டதும் அது வரை புன்னைகையுடன் இருந்த ஜெஸ்ஸி முகம் வேதனையில் சுருங்கியது. கண்கள் கலங்க முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள் ஜெஸ்ஸி. இதயத்தில் இருந்து எழுந்த ஒரு வலி உடல் முழுவதும் பரவ நெஞ்சில் கை வைத்து அதை சமாளிக்க முயன்றாள் காதல் கொண்டு விட்ட கண்ணனின் ராதையான அவள்.

இது என்ன புது ட்விஸ்ட் என்று தன்வி அதிர்ந்து விழித்தார்.

‘தங்கள் மகனுக்கு பார்த்து இருக்கும் பெண்,அர்ஜுனை விரும்புகிறாளா…ஹே குரு இது என்ன குழப்பம்.’என்று வெளிப்படையாகவே தலையில் கை வைத்து கொண்டார்.

அதே சமயம் அர்ஜுனின் ஒற்றுமொத்த குடும்பமும் ஐந்து ஆறு கார்களில் வந்து இறங்கினார்கள் அந்த ஹாஸ்பிடல் வாயிலில். தேர் திருவிழாவுக்கு வந்து இறங்கியது போல் ஒரு கூட்டம் என்று சொன்னால் மிகையல்ல தான்.

ஆனால் இந்த  அன்பிற்கு ஈடாய் எதை சொல்ல முடியும்?. இத்தனை சொந்தம், உறவு நமக்காக துடித்தால் அதை விட வேறு பெரிய செல்வம் எது இருந்து விட போகிறது?

சுவரில் சாய்ந்து கண் மூடி அமர்ந்து இருந்த அர்ஜுன் தலையில் கை வைத்து கோதிய அவன் அன்னை,”அர்ஜுன் “என்று மென்மையாக அழைக்க,கண் திறந்து பார்த்தவன் அவர் இடையை கட்டி கொண்டு உடல் குலுங்கி அழ ஆரம்பித்தான்.

“கண்ணா …அது தான் நூக்கு/மருகளுக்கு ஒன்றும் இல்லை என்று யோஜித் சொல்லி விட்டான் தானே….பிறகு என்ன கண்ணா?”என்றார் ராஷ்மி.

“அவன் ஒன்றும் இல்லை என்று சொல்லும் வரை என் உயிர் என் கிட்டே இல்லைமா ….செத்துட்டேன் ….அவளை அந்த நிலைமையில் பார்க்க முடியவில்லை …..”என்று அவன்.

“குருதேவ் கருணையால் அவளுக்கு ஒன்றும் ஆகாது கண்ணா…டிபன் எடுத்து வந்து இருக்கேன்.ஹ்ம்ம் நோ எஸ்க்கியுஸ் ….உடம்புக்கு தெம்பு வேண்டும் …மதியம் சாப்பிட்டு இருப்பே ….வந்து சாப்பிடு….தூங்கிட்டு தானே இருக்கா ….அதற்குள் ஒன்றும் ஆகிடாது.”என்றார் ராஷ்மி.

ராஷ்மிக்கு தன் மகனின் துடிப்பு புரிந்து தான் இருந்தது.அது வரை என்ன ஆகி விடுமோ என்று தனக்குளேயே அவன் பயந்து கொண்டு இருந்ததன் வெளிப்பாடே இந்த அழுகை என்பது புரிய, அவனை அதில் இருந்து வெளியே கொண்டு வர,நடந்த விஷயத்தை அர்ஜுனை சொல்ல சொன்னார்.

அவன் சொல்லி முடிக்க ஒட்டுமொத்த குடும்பமும் இப்பொழுது திகைப்பில் இருந்தது ப்ரீத்தி செய்த செயல்களை கேட்ட உடன்.

தங்கள் மகனுக்கு ஏற்ற பெண் ப்ரீத்தி மட்டும் தான் என்று ராஷ்மியின் உள் மனம் அடித்து கூற ஆரம்பித்தது. ஒரே மாதிரி விதமான சிந்தனை,எண்ணம்,செயல்,மற்றவர்களுக்காக பார்ப்பது என்று அர்ஜுனின் பெண்பால் ப்ரீத்தியா, இல்லை ப்ரீத்தியின் ஆண்பால் அர்ஜுனா என்று நினைக்க தான் தோன்றியது.

அடுத்த ரெண்டு மணி நேரத்தில் நன்றாக உறங்கி எழுந்தாள் ப்ரீத்தி.தலை பாரம்,வாய் கசப்பு குறையாமல் இருக்க,ஏதோ ஒரு வாரம் ‘சிக்கன்குனியா’ வந்தது போல் உடல் முழுவதும் வலி உணர்ந்தாள்.

‘என்னடா எனக்கு வந்த சோதனை ….ஒரு வேளை டிக்கெட் வாங்கிட்டோமோ …மேலே எண்ணெய் கொப்பரையில் போட்டு வறுத்து எடுத்துட்டாங்களா….அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது …’என்று தனக்குள் பேசி கொண்டு இருந்தவள் சட்டென்று கேட்ட கூச்சல் கேட்டு அதிர்ந்து விழி விழித்து பார்த்தாள்.

அந்த அறையில் திருவிழா கூட்டம் மாதிரி கூடி இருந்த கூட்டத்தை கண்டு ஒரு கணம் மிரண்டு தான் போனாள்.

அவள் கண் திறந்ததும் வானை முட்டியது அங்கு இருந்தவர்களின் ‘கடவுளுக்கான நன்றி’ உரைத்தல்.

பெண்கள் கூட்டம் முன்னே வந்து   அவள் கன்னத்தை இப்படியும்,அப்படியும் பிடித்து இழுத்து முத்தம் வைத்து எதையோ சொல்ல, அவர்கள் பேசிய பஞ்சாபி ‘காலகேய மொழியை விட’மோசமாய் அவளை மிரட்ட, திரு திருவென முழிக்க மட்டுமே அவளால் முடிந்தது.

“Tusīṁ ṭhīka hō/உனக்கு ஒன்றும் இல்லை”

“Ḍara nā/பயப்படாதே”

“Sāḍī dhī nū bacā’uṇa la’ī raba dā dhanavāda/கடவுளே நன்றி எங்க மகளை காப்பாற்றி கொடுத்ததற்கு”

“Tusīṁ sāḍē arajuna nū isa tar’hāṁ kivēṁ ḍarā sakadē hō/எங்க அர்ஜுனை இப்படியா பயமுறுத்துவே”

“Jada taka tusīṁ āpaṇī’āṁ akhāṁ nahīṁ khōl’hadē arajuna khuda nahīṁ hudā/நீ கண்ணை திறக்கும் வரை எங்க அர்ஜுன் அவனாவே இல்லை.”

“Tusīṁ atē arajuna ika dūjē la’ī baṇē hō’ē hō/நீயும் அர்ஜுனும் ஒருவருக்கு ஒருவர் என்று படைக்கப்பட்டவர்கள்.”

அவர்கள் பேசியதில் அவளுக்கு புரிந்தது ஒன்றே ஒன்று தான் –‘அர்ஜுன்’ என்ற பெயர் மட்டும் தான்.

‘யோவ் அர்ஜுன மகாராஜா ….யாருய்யா நீ ….நீ கண் முன்னே வருவதற்குள் உன் கொள்கை பரப்பு செயல் கூட்டம் மிக தீவிரமாய் செயல் படுது…’ என்று தனக்குள் பெருமூச்சு விட்டவள்,”அர்ஜுன் ?”என்றாள் கேள்வியாக.

அடுத்த நொடி அந்த சமுத்திரம் ரெண்டாய் பிளந்து வழி விட ,முன்னே வந்து நின்ற அர்ஜுனை கண்டு விழித்தாள் ப்ரீத்தி.

முழு விழிப்பில் இரு கண்கள் போர்க்களத்தின் வாட்களாய் உரசி கொள்ள,அவன் பார்வைக்கு,முக பாவனைக்கு அர்த்தம் புரியாதவளாய் அவனை நோக்கி ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே கொடுக்க, அர்ஜுனோ அதற்கு முழு வெண்ணை உண்ட மயக்கண்ணனின் மோஹன புன்முறுவலை சிந்த  ப்ரீத்தியின் இதயம் ஒரு முறை நின்று அதன் பின் துடிக்க ஆரம்பித்தது.

போதை மருந்தின் மயக்கத்தில் ஏற்பட்ட அவர்களின் நெருக்கமோ,அவனை கண்டு அவள் செய்து இருந்த அலப்பறைகளோ அவளுக்கு நினைவில் இல்லை.பார்த்து பழகிய முகம் போல் தெரிந்தாலும் தெரியாத ஒரு நிலையே ப்ரீத்திக்கு.

‘இவன் ஏன் முழு பாலை குடித்த பூனை போல் இப்படி ஒரு லுக் விடறான் …ஜொள்ளு பார்ட்டி போல் இருக்கே …’என்று எண்ணியவள்  அவனை உற்று பார்த்து வைக்க,

‘இவனை எங்கேயோ பார்த்து இருக்கோமே …..எங்கே ….எங்கே ….’என்று யோசித்தவளின் மனக்கண் முன் ,”ப்ரீத்தி”என்ற அலறலுடன் தன்னை நோக்கி இவன் பாய்ந்தது நினைவுக்கு வர,’

‘ஓஹ் இவன் தான் சொர்ணாக்கா புல்லட்டில் இருந்து நம்மை காப்பாற்றியவன் போல் இருக்கு…அதான் பயபுள்ள ஓவர்ரா லுக் விடுது …’என்று எண்ணி கொண்டாள் ப்ரீத்தி.

“அந்த பொண்ணுங்க …”என்றாள் ப்ரீத்தி ஆங்கிலத்தில்.

“பர்ஜாயீ/அண்ணி ….”என்று அழைத்த தீப், அதுவரை நடந்த அனைத்தையும் ஆங்கிலத்தில் சொல்லி முடித்தான்.

அர்ஜுன் ‘தன் உயிரை காப்பாற்றியவன்’ என்ற நிலையில் மட்டுமே ப்ரீத்திக்கு  அந்த நொடி அறிமுகமும் ஆகி இருந்தான்.

அவன் மேல் எழுந்த மரியாதையுடன் அவனை பார்க்க,அந்த அந்நிய பார்வையை கண்டு அர்ஜுன் ஒரு கணம் குழம்பி போனான்.மயக்க நிலையில் நடந்தது அவளுக்கு மறந்து போய் இருக்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு எழாததால் இந்த விலகல் அவனை வெகுவாய் பாதித்தது.

அதற்குள் யோஜித் வந்து அவளை மீண்டும் பரிசோதித்து விட்டு ப்ரீத்தியை வீட்டிற்கு அழைத்து போகலாம் என்று கூறி விட ஒரு சந்தோச கூச்சல் அந்த மருத்துவமனையை கிடுகிடுக்க வைத்தது.

எடுத்த வந்த இடியாப்பம்,தேங்காய் பாலினை ராஷ்மி கொடுக்க,’யப்பா சாமி இப்பொழுதாவது சோத்தை கண்ணில்  காட்டினீங்களே’என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள் வெகு வேகமாய் உண்டு முடித்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில்  ஏதோ ப்ரைம் மினிஸ்டர் பவனி மாதிரி முன்னே ரெண்டு கார்,பின்னே ரெண்டு கார் என்று ப்ரீத்தியை சுமந்து கிளம்பிய அந்த parade வந்து நின்றது அர்ஜுன் வீட்டு வாயிலின் முன்.

ப்ரீத்தி முன் பிரம்மாண்டமாய் எழுந்தது வயல் வெளிகளுக்கு நடுவே இருட்டில் ஜொலித்த அந்த மாளிகை .விளக்குகளின் ஒளியில் தேவலோகத்திற்கே வந்து விட்டோமோ என்று தான் ப்ரீத்திக்கு தோன்றியது.

வண்ண விளக்குகளாலும்,தீப அலங்காரங்களாலும் ,மலர் அலங்காரங்களாலும் அந்த மாளிகை சொர்க்கத்திற்கே சவால் விட்டு கொண்டு இருந்தது.

‘ஏதோ பார்ட்டி போல் இருக்கு ….எதற்கு எடுத்தாலும் பஞ்சாபிகளுக்கு கொண்டாட்டம் தானே.’என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் அறியவில்லை அது அவளை வரவேற்க செய்யபட்டு இருக்கும் ஏற்பாடு என்று.

அவளையும் அர்ஜுனையும் ஒன்றாய் நிற்க வைத்த ராஷ்மி மற்ற பெண்களுடன் சேர்ந்து தண்ணீர் கலந்த கலச கும்பத்தை வைத்து ஏழு முறை ஆரத்தி மாதிரி எடுத்தார்.

‘இது எதுக்கு?ஒருவேளை ஹாஸ்பிடல் போய் வந்ததற்காக இருக்குமோ….பின்னே நீ என்ன பெரிய vipயாக்கும் உனக்கு மாலை எல்லாம் போட்டு வர வேற்க….’என்று நினைத்தவள் அடுத்து அவர்கள் செய்த சடங்கு எல்லாம் என்ன என்று புரியாமலே ஒரு பார்வையாளராய் மாறி போனாள் .

ஒரு தாம்பாளத்தில் சுண்ணாம்புடன்,மஞ்சள் கரைக்க பட்டு இருக்க, அதை காட்டி அவர்கள் அவளிடம் ஏதோ சொல்ல ஒன்றும் புரியாமல் விழி விரித்து பார்த்தவாறு நின்றாள் ப்ரீத்தி.

தாங்கள் சொல்வது ப்ரீத்திக்கு புரியவில்லை என்பதை கண்டவர்கள்,தீப்பை அழைத்து விவரம் சொல்ல,ப்ரீத்தி அருகில் வந்தவன்,

“பர்ஜாயீ….இது எல்லாம் பட்டு இருக்கும் கண் போக செய்யும் சடங்கு …ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து இருக்கீங்க இல்லையா அதான்….தவிர இப்படி செய்தால் வீட்டிற்குள் லக்ஷ்மி தேவியே உள்ளே வரும் பெண்ணுடன் வீட்டில் தங்க வருவதாய் ஐதீகம் …சோ உங்க ரெண்டு காலையும் இதில் வைத்தவாறே,இந்த  ஆலம் தட்டில் கை வைத்து அதை கொண்டு ஸ்வஸ்திகா வரையுங்கள் .ஸ்வஸ்திகா வரைந்த உடன், காலால் கும்பத்தை உதைத்து உள் பக்கம் கீழே தள்ளி ,பாதத்தை எடுத்து உள்ளே வைத்து போங்க.”என்றான் ஆங்கிலத்தில்.

ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவன் ஒன்றை மட்டும் விட்டு விட்டான்.வீட்டிற்குள் வரும் எல்லா பெண்களுக்கும் இதை செய்வது இல்லை என்றும்,முதல் முறை மருமகள் புகுந்த வீட்டிற்குள் நுழையும் போது அவளை வரவேற்கும் விதமாய் மட்டுமே இந்த, “பாணி பார்னா /phani barnaa “என்ற சடங்கு நடத்த படும் என்பதை.

திருமணம் முடிந்து மணமக்கள் உள்ளே வரும் போது மட்டுமே இந்த சடங்கு செய்ய படும் என்றாலும்,துப்பாக்கி,தோட்டா எல்லாம் கடந்து உயிரை கிட்ட தட்ட விடும் நிலைக்கு சென்று திரும்பும் இரு பிள்ளைகளுக்கு இதை செய்தே ஆக வேண்டும் என்று ஏனோ அங்கு இருந்த பெண்களுக்கு தோன்றி விட்டது.

மனதிற்குள் ஒருவேளை அர்ஜுன் மாதிரியே அவன் ஒட்டுமொத்த குடும்பமும் ப்ரீத்தியை அவன் மனைவியாக பார்க்க தொடங்கிவிட்டதாலோ என்னவோ.

அர்ஜுன் சகோதரிகளில் ஒருத்தி ஆலம் தாங்கி நிற்க  அதில் தீப் சொன்னது போல் கை வைத்த ப்ரீத்தி அதை கொண்டு தலை வாசல் சுவற்றில் ஸ்வஸ்திகா ஒன்றை வரைந்தாள் .ஏற்கனவே அங்கு பல ஸ்வஸ்திகா இருக்க,இது அவர்களின் பழக்கம் போல் நினைத்து கொண்டாள்.

ஆனால் அவள் அறியாத ஒன்று சுவற்றில் வரையப்பட்டு இருந்த சுவஸ்திகா எல்லாம் அந்த வீட்டின் மருமகளாக காலடி எடுத்து வைத்த பெண்களின் கைத்தடம் என்பதை .இந்த  குடும்பத்தின் சுகம் துக்கம் கெளரவம் காப்பது இனி என் கடன்,என் இறுதி மூச்சு வரை இந்த குடும்பத்தை காப்பேன் ,இந்த வீட்டினை விட்டு செல்வதாய் இருந்தால் அது என் உயிர் பிரிந்த பின்னே நடக்கும்  என்று உறுதி மொழி எடுப்பதற்கு ஈடு என்பதை

தலை வாசல் படியில் பூக்கள் நிறைந்து இருக்க,ஒரு பித்தளை சொம்பில் அரிசி நிரப்பி வைக்க பட்டு இருந்தது.

எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு ,அதை எட்டி உதைத்தவள்,ஆலத்தினால் சிவந்து இருந்த தன் பாதத்தை உள்ளே வைக்க,தூரத்தில் இருந்த குருதுவராவில் இருந்து ஆராதிக்கான பூஜை மணி ஒலிக்க, அங்கு இருந்த பெண்கள் இவளை பரவசத்துடன் பார்க்க ப்ரீத்திக்கு ஒன்றும் விளங்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

அவள் அவர்கள் வீட்டினுள் உள்ளே நுழைந்த வேலை பூஜை மணி கேட்க அதை அவர்கள் மிக நல்ல சகுனமாய் கருதியதை ப்ரீத்தி ஏனோ உணரவில்லை.

பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் மிக பெரிய செல்வம்.அந்த செல்வம் இன்னொரு வீட்டில் இருந்து தன் வம்சத்தை தழைக்க வைக்க வரும் போது மணியோசை கேட்பது என்பது,’அவள் இந்த வீட்டின் தெய்வம்’என்று சொல்வதற்கு ஈடு என்பது அந்த கிராமத்தின் நம்பிக்கை.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அங்கு நடந்த விருந்தில்,உணவு சாப்பிட்டே   மயங்கி விடுவோமோ என்ற நிலையில் இருந்தாள் ப்ரீத்தி.

‘இப்படி சாப்பிட்டும் இந்த பனை மரம் எப்படி இவ்வளவோ பிட்டா இருக்கு….நிச்சயம் சிக்ஸ் பாக் இருக்கும் போல் இருக்கே ….அடேய் சிரித்து தொலைக்காதடா….மனசை என்னவோ செய்யுது.’என்று மனதிற்குள் புலம்பினாள்.

உணவு மேஜையில் அவள் எதிரே அமர்ந்து உணவினை உண்ணாமல் கண்களால் அவளை விழுங்கி கொண்டு இருந்தான் அர்ஜுன்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு 

என்ற திருக்குறளின் படி அவனின் இன்பம் முழுவதும் பெண்ணாய் அவன் முன் அமர்ந்து இருக்க உணவு எல்லாம் அவனுக்கு எதற்கு?

மனம் முழுவதும் நிறைந்து இருக்க அவன் முகம் 1000 வாட்ஸ் பல்பு போட்டது போல் அவ்வளவு பிரகாசமாய் தான் இருந்தது.அவன் புன்னகை அவன் முகத்தை விட்டு அகலவே இல்லை என்பதையும், அவனை ஆணழகனாய் காட்டுகிறது என்று விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

அவன் பார்வை உரிமையாய் அவளை மேல் இருந்து கீழ் வருட,அவனே கைகளால் தொடுவது போல் ஒரு இம்சையான உணர்வு எழ,ப்ரீத்தி இருந்த இடத்தில் இருந்து நெளிந்து கொண்டு இருந்தாள்.

‘அவன் கண்களில் காமம் தெரிந்து இருந்தால் கூட முறைத்து இருக்கலாம்…ஆதில் தெரிவது உரிமை….ரசனை…மட்டுமே ….ஒருவேளை அவன் உரிமையாய் பார்ப்பது போல் நமக்கு தான் தோன்றுகிறதா….இங்கு எல்லா பெண்களும்,ஆண்களும் கொஞ்சம் ஜோவியல் தானே …’என்று தனக்குள் சொல்லி கொண்டவள் தன் இதழை பற்களால் கடித்து யோசிக்க அர்ஜுன் உடலில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தான்.

அவன் கைகள் நடுங்க ,அவன் பிடித்து இருந்த கண்ணாடி கிளாஸ் ஆட ஆரம்பிக்க, அதில் இருந்து தண்ணீர் சிந்த ஆரம்பித்தது.அவள் சாதாரணமாய் தன் ப்ரக்ஜெய் இல்லாமல் செய்த சிறு செயல் அவனுள் பூகம்பத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது.அங்கு இருக்கும் அத்தனை இனிப்பைகளிலும் தெவிட்டாத ஒரே இனிப்பாய் தோன்றியது அவளது இதழ்கள் தான்

‘அவனை பார்க்காதே …’லட்சம் முறை ப்ரீத்தி தனக்கு தானே சொல்லி கொண்டாலும் அவள் சொன்னது அவள் கண்களுக்கு கேட்கவில்லையோ என்னவோ ,அவனையே அடி கண்ணில் பார்த்து கொண்டு இருந்தது சொல் பேச்சு கேட்காத அவள் கண்கள்.

இந்த முறை ஒரு தீவிரத்துடன் அவன் கண்கள் தன் இதழை பார்த்து கொண்டு இருப்பதை கண்டு கொண்டவள்,’இவன் எதுக்கு சிம்பு,கமல் ரேஞ்சுக்கு நம்ம லிப்சை டார்கெட் செய்யறான்.’என்று  தனக்கு தானே பேசி கொண்டவள் அறியவில்லை அவன் “முத்த ஆராய்ச்சி” செய்து “லிப் ஷேக்” என்ற புது ட்ரெண்ட் உருவாக்கிய ‘காதல் சித்தன்’,கண்ணியர் மனதை கொள்ளை கொள்ளும் காதல் சாம்ராஜ்ய கொள்ளைக்காரன்  என்ற உண்மை- அதிலும் அதிலும் அந்த நேரம் அவன் கொள்ளை அடிக்க நினைப்பது அவனுக்கு மட்டுமே அமிர்தத்தை சுரக்கும் தன் இதழ்களை என்று புரியாமல் போனது.

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
என்னுயிரே காதலில் இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிக்கின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வலி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்து விட்டேன்
என் நருமலரே உன்னை தொழுது விட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்து விட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்து விட்டேன்

என் உடல் பொருள் தந்தேன் சரன் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீ திவலை

ஆம் அந்த கள்வன் அவள் கைகளில் நீர் திவலையாக மாறி இருக்கிறான் என்ற உண்மை, கள்வனையே கொள்ளை கொண்டு விட்டோம் என்ற உண்மை விளங்காமல் விழித்து கொண்டு இருந்தாள் அந்த கள்ளி.

அவன் பார்வை வீச்சு வேறு உதட்டின் மேல் குறுகுறுப்பை உண்டாக்க,இதயம் கரணம் இன்றி வெகு வேகமாய் துடிக்க,

‘இதற்கு மேல் இங்கு இருப்பது நலத்துக்கு இல்லை ப்ரீஸ் …கவுந்து படுத்து ஹிருத்திக் ரோஷன் கூட டூயட் பாடினால் தான் எல்லாம் சரியாகும் ..’என்று மனதிற்குள் நினைத்து கொண்டவள் அவள் அருகே அமர்ந்து அவர்கள் பேச்சினை அதுவரை மொழி பெயர்த்து கொண்டு இருந்த தீப்பினை அழைத்தாள்.

(அடிப்பாவி இங்கே ஒருத்தன் உன் மேல் பைத்தியமாய் இருக்கான் …உனக்கு ஹிருத்திக் ரோஷன் கூட தான் டூயட் வேண்டுமா …)

“ப்ரோ எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு ….எந்த ஹாஸ்டல்டலில் ரூம் போட்டு இருக்கீங்க …இல்லை வேலையாள் குவாட்டர்ஸ் எதுன்னு சொன்ன போய் தூங்கிடுவேன்.”என்றவள் பேச்சை கேட்டு தீப் பேய் விழி விழித்தான்.

அவன் திகைப்பை கண்ட அர்ஜுன்,”என்ன தீப்?என்னவாம் உன் பர்ஜாயிக்கு/அண்ணிக்கு?”என்றான் அவர்கள் பேசுவதையே பார்த்து கொண்டு இருந்தவன்.

அதுவரை அங்கு உரத்து ஒலித்து கொண்டு இருந்த குரல்கள் எல்லாம் நின்று விட, அனைவரின் பார்வை தீப், ப்ரீத்தி பக்கம் திரும்பியது.

“சொல்லுடா வீர்ஜி கேட்கிறான் …பதில் சொல்லு ..”என்றார் ராஷ்மி.

“அது ….அண்ணி ….ஹாஸ்டல் எங்கே இருக்கு …வேலைகாரங்க தங்கும் அறை எதுன்னு கேட்கிறாங்க …”என்று திக்கி திணறி சொல்லி முடிக்க, முகத்தில் அடி வாங்கியவன் போல் துடித்து எழுந்தான் அர்ஜுன்.

“naukara/வேலைக்காரியா?….

naukara…..Kī uha mērī naukara hai/இவ எனக்கு வேலைக்காரியா? ….சொல்லு அவ கிட்டே இந்த வீட்டின் மருமக அவ ….இன்னொரு மக …

Uha mērē dila dī rāṇī ha/என் இதயத்தின் ராணி அவ …

Mērā pi’āra, mērī jidagī, mērī ātamā—என்னுடைய காதல் ,என் வாழ்க்கை ,என் ஆத்மா அவ தான் …

Uha mērī bihatara adhī hai–என்னில் அவ சரி பாதி.”என்று அந்த மாளிகையை கிடுகிடுக்கும் அளவிற்கு சத்தம் போட்டு கர்ஜித்தவன்,ப்ரீத்தியை ஒரு ஊடுருவும் பார்வை பார்த்து விட்டு அடுத்த நொடி விடுவிடுவென்று மாடிபடியில் ஏறி தன் அறைக்கு  சென்று விட்டான்.

பயணம் தொடரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!