RR16

ரௌத்திரமாய் ரகசியமாய்-16

 

“ரிங் போயிட்டே இருக்கு ஆனா எடுக்க மாட்டேங்குறா டா” அலைபேசியை காதுக்கு கொடுத்தபடியே, ரகுவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் சிந்து.

 

“அவ இன்னும் என் மேல கோவமா தான் இருக்கா போல, அதான் வேணும்னு அவாயிட் பண்றா” அவன் முகத்தில் கவலை தெரிந்தது.

 

“ப்ச்… அதெல்லாம் ஒன்னுமில்லை. ஹாஸ்பிடலும் வரலைனு சொன்னாங்க. ஒருவேளை உடம்பு சரியில்லையோ? வா அவ வீட்டுக்கே போய் பார்த்துட்டு வருவோம்” என்று ரகுவை அழைத்துக் கொண்டு அந்த காஃபி ஷாப்பை விட்டு வெளியே வந்தாள்.

 

சிந்து அவளிடம் கூறிய செய்தியில் இரவு ஏர்போர்ட் வருவாள் என நம்பிக்கையோடு காத்திருக்க, அவள் வரவேயில்லை. 

 

சீரற்ற காலநிலை காரணமாக ரகுவின் அன்றைய விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணம் பிற்போடப்பட்டது. மறுநாளாகியும் தாமிராவிடமிருந்து எந்த அழைப்பும் வராமல் போகவே, சிந்துவை சந்திக்கச் சென்று விட்டான்.

 

முந்தைய நாள் தனக்கு வந்த வேலையை அவளிடம் ஒப்படைத்து விட்டு, அன்று நேரகாலத்துடன் வீடு போய் சேர்ந்தாள்.

 

எப்படியும் ரகுவை சந்திக்க ஏர்போர்ட் வந்து விடுவாள்‌ என்ற‌ நம்பிக்கையில் அதன் பிறகு அவளை அழைக்கவில்லை. இரவு தானும்‌ ஏர்போர்ட் சென்று தாமிராவின் வருகைக்கு காத்திருக்க, அவள் வந்தபாடில்லை.

 

சிந்துவினாலும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரகுவின் விமானமும் ரத்து செய்யப்பட, அவள் வீட்டுக்கு கிளம்பி விட்டாள். ஆனால் மறு நாளும் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை என ரகு நேரிலேயே வந்து விட்டான்.

 

காஃபி‌ ஷாப்பை விட்டு வெளியேறியவர்கள் காருக்குள் ஏற, தடுத்தது தாமிராவின் தந்தை விஸ்வநாத்தின் குரல்.

 

“என்னப்பா நீங்க ரெண்டு பேரும் வந்து இருக்கீங்க தாமிரா எங்க?” அவர் சாதரணமாக கேட்க, இவர்கள் இருவரும் நெற்றியை சுருக்கினார்கள்.

 

“நாங்க ரெண்டு பேரும் அவள பார்க்கலாம்னு தான் உங்க வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கோம் அங்கிள்”‌  – சிந்து.

 

இப்போது விஸ்வநாத் முகத்தில் அதிர்ச்சி எட்டிப் பார்த்தது.

 

“நேத்து நைட் உங்கூட தங்குறேன்னு தான் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தா…” என்று தாடையை தடவி விட்டு,

 

“நேத்து நைட் எனக்கு  கால் பண்ணியிருக்கா நான் மீட்டிங் ஒன்னுல இருந்தனால பேச முடியல. அப்புறம் பார்த்தேன் உங்க வீட்ல தங்கிக்குறதா மெசெஜ் தான் இருந்தது. கால் பண்ணேன் ஆனா அவ அட்டென்ட் பண்ணல. சரி தூங்கி இருப்பான்னு விட்டுட்டேன்.  நீ என்னடான்னா அவளை பார்க்க வீட்டுக்கு போறேன்னு சொல்றே…”  அவர் குரலில் பதட்டம் தெரிந்தது.

 

‘தாமிரா வீட்டுக்கு வரவே இல்லையா… !’

 

அவர்கள் இருவரது முகமும் உட்சபட்ச அதிர்ச்சியை காட்டியது. 

 

“இல்லை அங்கிள் அவ எங்க வீட்டுக்கு வரவே இல்ல. நேத்து ஈவ்னிங் அவ ஒரு பேஷன்ட்டை பார்க்க வெளியே போனா ஆனா போறப்போ கூட ரகுவை சென்ட் ஆஃப் பண்ண கண்டிப்பா வர்றேன்னு சொல்லிட்டு போனவ வரல. போன் பண்ணா கூட எடுக்கலை. அதான் வீட்டுக்கே வரலாம்னு முடிவு பண்ணோம்” தோழியை காணவில்லை என்ற‌ பதைபதைப்புடன் படபடத்தாள்.

 

அவர் இருந்த மனநிலையில் ரகுவின் பயணம் பற்றி எதுவும் கேட்கத் தோன்றவில்லை. தாமிராவின் செல்லை தொடர்பு கொள்ள பல முறை முயன்றார். முழுதாக ரிங் சென்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

முன்தினம் அவளுக்கு வந்த வேலையை தாமிராவின் தலையில் கட்டிவிட்டது அதன் பிறகு தான் அவள் வீடு திரும்பவில்லை என்ற செய்தி அவளுக்கு பேரதிர்ச்சி. அதிலும் அவளது தந்தைக்கு அவளது செல்லிலிருந்தே வந்த குறுந்தகவல்.

 

ஒருவேளை அவள்‌ ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டாளோ? மூவரின் உள்ளத்திலும் அச்சம் சூழ்ந்து கொண்டது.

 

போலீஸ் அதிகாரியாக இது மாதிரி  பல சந்தர்ப்பங்களை எதிர்கொண்டிருந்தாலும், அவரது மகளுக்கு ஏதேனும்‌ ஆபத்து நேர்ந்து விடுமோ? பதறிப் போனார். தன் மகள் என்ற பாசம் அவரை நிலைகுலையச் செய்தது.

 

“அங்கிள்… டோண்ட் வொர்ரி அவளுக்கு ஒன்னும் ஆகிருக்காது. நாம டாக்டர் பரந்தாமனை போய் பார்க்கலாம். தாமிரா எங்க போனான்னு தெரிஞ்சிடும். வாங்க ” அவரை தேற்றியவன், கார் கதவை திறந்து விட்டான். அவனுக்குமே உள்ளம் பதறத் தான் செய்தது. 

 

“எல்லாம் என்னால தான்… தாமிராவ அனுப்பியிருக்க கூடாது” வழி நெடுகிலும் அழுது புலம்பிய சிந்துவையும் தேற்றும் வேலை அவனுடையதானது.

 

பரந்தாமனிடம் சென்று தாமிராவை பற்றி விசாரிக்க, சாமார்த்தியமாக செயற்பட்டவரோ விஸ்வநாத்தை நாசூக்காக திசை திருப்பி விட்டார். இது ஏற்கனவே அவர்கள் போட்ட திட்டம்.

 

சொந்த பிரச்சினை என்பதால் அன்அஃபீசியலாகவே செயற்பட வேண்டியிருந்தது.  அது வரை அவரது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. அது மகளது எதிர்காலத்தை பாதிக்கும் என சாதாரண தந்தையாக பயந்தார்.

 

ரகுவும் அவருமாக தாமிராவை தேடி பல இடங்களுக்கு அலைந்து திரிந்தனர். என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. சோர்ந்து போயினர்.

 

இறுதியாக அவரது டிபார்ட்மெண்ட் உதவியையே நாடிட  முடிவு செய்தார். அந்நேரம், ராகவனிடமிருந்து வந்த அழைப்பில், மின்னாமல் முழங்காமல்  அவர் தலையில் வீழ்ந்தது இடி.

 

***

 

தும்பை பூவின் வண்ணத்துடன் மிக தூய்மையாகவே காட்சியளித்தது அந்த அறை. திரும்புகிற பக்கமெல்லாம் வெண்ணிறம் பொங்கி வழிந்தது அந்த அறையில். வெள்ளி நிலாவை வெட்டிக்கொணர்ந்து பதித்திட்ட மாதிரி தளத்தில் அணிவகுத்திருந்த டைல்ஸ்.

 

பிரம்மாண்டமான அறை அது. அதன் பெரும்பான்மையான பரப்பு வெண்ணிறமாகவே காட்சியளித்தது. அறையின் மத்தியில் கிடந்த படுக்கையும் வெண்ணிற விரிப்பையே போர்த்தியிருந்தன. அவளும் அந்த அழகிய வெண்ணிற ப்ரைடல் ஃப்ராக்கினுள் தன்னை புதைத்திருந்தாள்.

 

புயலடித்து ஓய்ந்து போன பூமியென ஆகிப் போயிருந்தது தாமிராவின் பூப்போன்ற நெஞ்சம். அவள் மனதில் சேதாரத்தின் சுவடுகள் ஏராளமாய் காணப்பட்டாலும் அதையும் தாண்டி ஒரு அமைதி. அது இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்பதால் ஏற்பட்ட அமைதி.

 

எத்தனை குரூரமான கோரிக்கை அது துப்பாக்கி முனையில் வைத்து ஒருவனிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? செத்துப் போகிறாயா? என்று‌ கேட்டால் ஒரு சாதாரண மனிதனால் என்ன செய்ய முடியும்?

 

ஆம்! அவளது பயந்த சுபாவம் அவளை அத்தகைய கட்டத்திற்கு தள்ளி விட்டது. வேறு வழியின்றி ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. தப்பிக்க பல வழிகளில் முயன்றும் முடியாமல் தோற்றுப் போய் விட்டாள். 

 

நிலைகுத்திப் போன பார்வையுடன் உயிரும் உணர்வுமற்ற ஜடம் போல படுக்கையில் அப்படியே உறைந்து போய்  அமர்ந்திருந்தாள்.  வேறேதும் வழியிருப்பதாக தோன்றவில்லை நெஞ்சம் முழுக்க வேதனையில் ஊறிப் போயிருந்தது.

 

“நீ என்னை‌ கல்யாணம் பண்ணிக்கனும்”

 

கல்யாணமா… !  அதிர்ந்து விழித்தாள்.

 

“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை மீறி உனக்கு எதுவும் ஆகாது” அவள் கண்களையே இமைக்காமல் பார்த்திருந்தான் ருத்ரன்.

 

இட்ஸ் ஆல் டிப்பென்ட்ஸ் ஆன் யூ. டிசிசன் இஸ் யுவர்ஸ்‌” அவனது பேச்சில் இருந்தது கட்டளையா? கோபமா? எதுவென்று பிரித்தறிய முடியாத குரல்.

 

‘என்னை மீறி உனக்கு எதுவும் ஆகாது’ அன்று அவன் சொல்லில் அவனிடம் பாதுகாப்பை உணர்ந்தவள், இன்று அவனை கண்டு அஞ்சி நடுங்கினாள்.

 

அவளது இதயம் உயர் அழுத்தத்தில் ரத்தத்தை பம்ப் செய்து, அவளுடைய அத்தனை நரம்புகளிலும் சிதறியடித்து, ‘படக் படக்’ அதி வேகமாக கிடந்து துடித்தது.

 

“ஐ டோண்ட் அன்டர்ஸ்டேன்ட்” நிஜமாகவே அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை. மிரட்சியாகவே அவனை பார்த்தாள்.

 

திருமணம் செய்து கொள் என்றால் என்ன அர்த்தம்…?

 

“யூ வில் நாட் ஹேவ் அ செக்கன்ட் சான்ஸ். கல்யாணமா? சாவா?” உணர்ச்சியற்ற அவன் கண்களில், எதை புரிந்து கொள்வது?

 

இடியாக இப்படி ஒரு கேள்வி இரக்கமே இல்லாமல் அவளது இதயத்தை தாக்கினால்? 

 

“ஏன்? ஏன்? மிருகத்தனமா நடந்துக்குறீங்க? எதுக்கு இப்படி ஒரு கல்யாணம்? நான் ஒத்துக்கலைனா உங்களால என்ன பண்ண முடியும்?” கேட்டுவிட, அவள் புஜத்தை அழுத்திப் பிடித்திருந்தான்.

 

“சிம்பிள்… கொன்னுடுவேன்” அவனது சீற்றம் நிறைந்த பார்வையில் தெரிந்த குரூரம் அவளை அடியோடு கலங்கிடச் செய்தது.

 

சிம்பிள்!  உயிரை பறிப்பது இவனுக்கு சிம்பிளா?

 

அரை உயிருடன் உயிருக்காக போராடிய நிலையில் மருத்துவமனை வரும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறாள்.  மருத்துவர்கள் அந்த ஊசலாடும் உயிரை  காப்பாற்றிட போராடும் போராட்டம். சில நேரம் அத்தனை வலிய போராட்டத்தின் பின்னும் அந்த உயிர் பிரிந்து விடும். அந்த நொடி அவர்கள் படும் வேதனை இருக்கிறதே. வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

 

அப்படியிருக்க, ஈவிரக்கமின்றி ஓர் உயிரை எப்படி இவனால் கொல்ல முடிகிறது?

 

விடாமல் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவள், நிமிர்ந்தாள். வேறு வழியின்றி‌ சம்மதமாய் தலையாட்ட, அவன் இதழ்கள் புன்னகை தோன்றி மறைந்ததோ?

 

“ரத்தத்தால எழுதப்பட்ட ஒப்பந்தம் இது. தேர் இஸ் டெத் அட் த என்ட். ஏமாத்த ட்ரை பண்ணினா மன்னிப்பே கிடையாது”  அவள் மீது அழுத்தமாய் பதிந்திருந்த அவனது பார்வை அவளை எச்சரித்தது.

 

அவளது அடி வயிற்றில் புளியை கரைத்தது. உள்ளே பதைபதைப்புடன் தலையை ஆட்டி வைத்தாள்.

 

அவனது முகத்தில் திருப்தி தெரிந்தது. அவளோ கலங்கித் தவித்தாள்.

 

“மூவ்” அவளை முன்னே நடக்க விட்டு, அவன் பின்னால் நடந்தான்.

 

***

 

பிரம்மாண்டமான வீட்டின் முன்னே கார் நிறுத்தப்பட, டிரைவர் இருக்கையை விட்டும் இறங்கியவன் மறு புறத்தில் தாமிரா அமர்ந்த கதவை திறந்தான். அவள்‌ இறங்கியதும் அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றான்.

 

அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரும், ருத்ரன் ஒரு பெண்ணின் கைபிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றதை விசித்திரமாக பார்த்தார்கள்.

 

ஹாலில் இருந்த, ஷோபாவும் ரோஷினியும் திகைப்புடன், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர, யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. 

 

மாடியறை ஒன்றுக்கு அழைத்து வந்தான். உள்ளே இழுத்து வந்து வேகத்தில் அவன் பிடியை தளர்த்த, நிலைதடுமாறி விழப் போனவள்,  பின் சமாளித்து நின்றாள்.

 

அவள்‌ மனமோ எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பி விட துடியாய் துடித்தது. நில்லாமல் அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

 

அவள் முகத்தையே பார்த்திருந்த அவனுக்கு அவளது எண்ணவோட்டம் புரிந்ததுவோ?

 

“தப்பிக்கலாம் ட்ரை பண்ணி உன்னை நீயே வருத்திக்காத” என்றான்.

 

“மொத்த போலீஸ் ஸ்டேஷனும் இப்போ என்னை தேடிட்டு இருப்பாங்க. என் அப்பா எப்படியும் கண்டு பிடிச்சிடுவாரு” மூக்கை உறிஞ்சியபடி கூறினாலும், அவள்‌ கண்களில் தெரிந்த உறுதியில் அவளை பார்த்து போலியாய் வியந்தான்.

 

“நீ ராஜா மகளாவே இருந்தாலும்… 

நோபடி வில் ஃபைன்ட் யூ வித் மீ. அன்லெஸ் ஐ வான்ட்.”

 

என்ன ஒரு எகத்தாளமான பேச்சு?

 

“ஐ ஆம் நாட் யுவர் டொய்” வெடித்தாள் அவள்.

 

“கரெக்ட் யூ ஆர் நாட் அ டொய். யூ வில் பீ மை வைஃப் சூன்”  அறையை லாக் செய்து விட்டு வெளியேறினான்.

 

அந்த அறையை விட்டு வெளியேறும் முன், அங்கிருந்த தொலைபேசி இணைப்பையும் கட் செய்து விட்டுச் செல்ல மறக்கவில்லை.

 

***

 

மாடியை விட்டும் கீழிறங்கியவன் முன் வந்து நின்றார் ஷோபா. அவன் கால்கள் தடை பட்டு நின்றாலும், அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை.

 

“ருத்ரா வாட்ஸ் ஹேப்பனிங் ஹீர்‌? யார் அந்த பொண்ணு?” 

 

“கல்யாணம் பண்ணிக்க போறேன்” 

 

அவ்வளவுதான். அதற்கு மேல் அவன் அங்கு இருந்தால் தானே? குழம்பிப் போனது என்னவோ அவர் தான்.

 

“கல்யாணம் பண்ணிக்க போறானாம் ஆனா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை ரூம்ல அடச்சி வச்சிருக்கானாம்” பின்னாலிருந்து கேட்ட ரோஷினியின் நக்கல் குரலில், திரும்பி அவளை முறைத்தார்.

 

“வாட் எவர். அவன் என்ன முடிவெடுத்தாலும் கரெக்ட்டா தான் இருக்கும். கல்யாணம் பண்ணிக்கிறான்னு சொல்றதே சந்தோஷம்” என்றவர் அதற்கு மேலும் அங்கு நில்லாமல் தாமிரா இருந்த அறையை நோக்கி விரைந்தார்.

 

***

 

அழுது கரைந்து கொண்டிருந்தவள், அறைக்கதவு தட்டப்பட, கண்களை துடைத்துக் கொண்டாள்.

 

சிரிப்போடு உள்ளே நுழைந்த பெண்மணியை யாரென்று அவளுக்கு தெரியவில்லை. பார்வைக்கு கம்பீரமாக தெரிந்தார்.

 

அவருக்கு பின்னால் ஒரு பணிப்பெண் உணவுத் தட்டுடன் வந்து மேசையின் மேல் வைத்து விட்டு வெளியேறினாள்.

 

“நான் ருத்ரனோட அம்மா. வெல்கம் டூ அவர் ஃபேமிலி” என அவளை அணைத்துக்கொள்ள முனைய, சட்டென பின்னால் நகர்ந்து கொண்டவளை கேள்வியாக பார்த்தார்.

 

“நாகரீகம் தெரியாம நடந்துக்கறீயே? நான் உன்னோட மாமியார்” குரலில் ஏளனம்.

 

அவரது பேச்சு அவளுக்கு ஒருவித எரிச்சலையும் கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தியது.

 

“நான் நாகரீகம் தெரியாம நடந்துக்கறேனா? அப்படி நடந்துக்குறது நீங்களும் உங்க மகனும் தான்.

 

என்ன அம்மா நீங்க? உங்க மகன் வீட்டுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து, திடீர் கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு சொல்றான். ஒரு அம்மாவா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா?” சுருக்கென முளைத்த கோபத்தில் பொறிந்தாள் அவள்.

 

“உன் பேரு தாமிரா. நீ ஒரு டாக்டர்னு தெரியும். இதுக்கு மேல நான் வேற என்ன தெரிஞ்சுக்கனும்?

 

உன்ன பத்தி மத்த டீடெயில்ஸ்லாம் என் மகனுக்கு தெரிஞ்சிருக்கும். ஐ ஹேவ் ஆல்வேயிஸ் ரெஸ்பெக்டட் ருத்ரன்ஸ் டிசிசன்ஸ். இதுவரை அவனோட டிசிசன் எதுவும் தப்பா போனதில்லை” தன் மகனை பற்றி பெருமை பொங்க கூறிக் கொண்டிருந்தவரை இடைமறித்து,

 

“ஆர் யூ அவுட் ஆஃப் யுவர் மைன்ட்?

ஒரு பொண்ணை ஃபோர்ஸ் பண்ணி இந்த ரூம்ல அடச்சி வச்சிருக்கான். கல்யாணமும்‌ பண்ணிக்க போறான். என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது. ஒரு அம்மாவா உங்க ரியாக்ஷன் இப்படியா இருக்கனும்? இஸ் இட்‌ நார்மல்?” கத்தினாள்.

 

“இங்க பாரு. ருத்ரன் கல்யாணம் பண்ணாம இப்படியே இருந்துடுவானோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றான்னா ஏதோ ஒரு விதத்துல அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு.

 

என்‌ மகனோட விருப்பத்துக்கு மாறா நடந்துக்க மாட்டேன். அவன் கோவத்தை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவன் கோவத்தோட உச்சகட்டம் ரொம்ப கொடூரமா இருக்கும். அவனை கோவப்படுத்தாம நடந்துக்க ட்ரை பண்ணு. இல்லைனா அதோட விளைவுகள் ரொம்ப பயங்கராமா இருக்கும்.”

 

“என்ன மிரட்டுறீங்களா?”

 

“ஐம் வார்ணிங் யூ” அவரது குரல் அவளை எச்சரித்தது.

 

இப்போது அவரது உதடுகளில் புன்னகை பூத்தது.தொடர்ந்து, “சாப்பிட்டு இந்த டிரஸ்ஸை சேஞ்ச் பண்ணிட்டு ரெடியா இரு. ஷாப்பிங் போகனும்” கதவை மூடி விட்டு வெளியேற,

 

“குடும்பமே சைக்கோ: பைத்தியம் : மெண்டல்” அறையே அதிர கத்தியவள், கதவை உதைந்தாள்: சாப்பாட்டை தட்டி விட்டாள்: அழுதாள்.

 

***

 

அந்த ‘ப்ரைடல் டிரஸ்’ ஆடையகத்திலிருந்த ஒவ்வொரு ஆடையாக, தாமிராவின் மீது வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஷோபா. அங்கேயே சிறிது தள்ளி செல்லில் உரையாடிக் கொண்டிருந்தான் ருத்ரன்.

 

ருத்ரன் ஒரு கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதே அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது. அதனால் தான் இந்த ப்ரைடல் ஃப்ராக் தெரிவு நடந்து கொண்டிருந்தது.

 

தாமிராவின் கண்கள் அந்த ஆடையகத்தையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. அவளுக்கு எப்படியாவது தப்பி விட வேண்டும். 

 

மனதில் இருந்த பதட்டத்தையும் பயத்தையும் வெளியில் காட்டாமல் சாதாரணமாக இருந்தவள், கையில் அகப்பட்ட ஓர் உடையை எடுத்துக் கொண்டு ட்ரையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

சிறிது நேரத்தின் பின் கதவை திறந்து, மெல்ல எட்டிப் பார்த்தாள். தூரத்தில் ருத்ரனின் தாய் மாத்திரம் ஆடைகளை பார்வையிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

ருத்ரனை தேடினாள். அவனை காணவில்லை.‌ அந்த இடம் முழுவதும் பார்வையால் அலசினாள். அவன் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவள், அந்த இடத்தை விட்டு நைசாக நழுவி வெளியேறி விட்டாள்.

 

***

 

“எங்க‌ அவ?” ருத்ரனது கணீர்குரல், தாமிரா அங்கிருந்து நழுவிச்சென்றது கூட தெரியாமல் ஆடை தெரிவில் மூழ்கியிருந்த ஷோபாவின்‌ செவிகளில் விழுந்தது.

 

“அவ இன்னும் சேஞ்ச் பண்ணிட்டு இருக்கானு நெனக்கிறேன்” என்றவர் அந்த ட்ரையல் அறை முன்பாக நின்று தாமிராவை மெல்ல அழைத்தார் வரவில்லை.

 

ருத்ரனது பார்வை அவரை துளைத்தெடுக்க, கதவை தட்டிப் பார்த்தும் பதில் வராமல் போகவே கதவை திறந்து பார்த்தார். அங்கு அவள் இருக்கவில்லை. 

 

“ருத்ரன் அவ இல்லை” என்றார் அதிர்வுடன்.

 

“நீங்க டிரஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போங்க”

 

“பொண்ணையே காணல இதுல யாருக்கு டிரஸ்ஸை வாங்குறது” என்றார் கடுப்புடன்.

 

“அவ வருவா” அவனிடமிருந்து அலட்டலில்லாத பதில் வந்தது.

 

***

 

வெளியே வந்ததும், மீண்டும் ஒரு முறை பார்வையை சுழல விட்டாள். அவனிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என நெஞ்சம் நிறைந்த பதைபதைப்புடன் சுற்றும் பார்த்து விட்டு, வேகமாக ஓடியவள் ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக் கொண்டாள். 

 

‘படக் படக்’ என்று‌ அடித்துக் கொண்ட இதயத்தை கை வைத்து தடவிக் கொண்டாள். அந்த ஆட்டோ அந்த தெருவை விட்டு நீண்ட தூரம் சென்றதும் ‘தஸ் புஸ்’ என்று மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்.

 

அவள் வீடு இருந்த தெருவினுள் அந்த ஆட்டோவும் நுழைந்தது. அவளது பதட்டம், பயம் விலகி நிம்மதியாக உணர்ந்தாள். ஆனாலும் அவளுக்கு அழுகை‌ வந்தது. இந்த இரண்டு நாட்களில் எத்தனை வலி! எத்தனை போராட்டம்.

 

அந்த ஆட்டோவும் அவர்களது வீட்டு வாயில் முன் வந்து நின்றதும், உள்ளுக்குள் சந்தோஷப் பிரவாகம் ஊற்றெடுக்க, ஆட்டோகாரரிடம்,

 

“இங்கேயே வெயிட் பண்ணுங்க, உங்களுக்கு பணம் எடுத்துட்டு வர்றேன்” என‌ இறங்க எத்தனிக்க,

 

“மேடம், அதுக்கு முன்னாடி இந்த போனை பேசுங்க” என அவர் கைப்பேசியை நீட்ட, குழப்பமாக அவரை ஏறிட்டவள், அதை வாங்கி காதுக்கு கொடுத்தாள். ஏனோ அவள் உள்ளம் படபடத்தது. 

 

“வெல்டன்… எப்படியோ தப்பிச்சிட்ட” அந்தக் குரலை கேட்டதும், உடலுக்கும் ஒரு வித பய உணர்வு ஜிவ்வென்று பரவத் துவங்கியது.

 

“எ… எப்படி?”  ஆட்டோவில் இருந்தபடியே தலையை அங்குமிங்கும் திருப்பித் திருப்பி பார்த்தாள்.

 

“உன்னை தப்பிக்க விட்டதே நான் தான். ரொம்ப நல்ல எஃபோர்ட். உன்னோட முயற்சிய பாராட்டியே ஆகனும்” அவன் குரலில் எள்ளல் தெறித்தது.

 

“அப்பா வீட்ல இருக்காரு. உங்களால என்ன முடிஞ்சதை பண்ணிக்கோங்க‌” வீட்டுக்கு முன் நிற்கும் தைரியத்தில் அலட்சியமான பதிலை உதிர்த்து விட்டு, இறங்க, 

 

“டோண்ட் ஈவன் டேக் அ ஸ்டெப்” கட்டளை தொணியில், அவளது கால்கள் தடைபட்டு நின்றது.

 

“என் ஆளோட கன் உன் அப்பாவை குறிபார்த்து இருக்கு”

 

“என்ன‌ சொல்றீங்க?” பதறினாள்.

 

“உன் வீட்டுக்கு முன்னாடி இருக்குற பில்டிங் மேல பாரு” உடனடியாக அவளது பார்வை அந்த கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்தது.

 

உண்மையாகவே அங்கே ஒருவன் துப்பாக்கியோடு நின்றிருந்தான். பால்கனியில் நின்று செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த அவளது தந்தையை குறி வைத்திருந்தான் அவன்.

 

அந்த நேரத்தில் தன் தந்தையை கண்ட, அவளது இதயம் வெடித்து சின்னாபின்னமாய் சிதறுவது போல தோன்றியது. அவளது சிந்தனையோட்டம் வெகுவாக சிதைந்து, அவளது முகம் வெளிரிப்போனது.

 

“நீ ஒரு அடி எடுத்து வச்சாலும், அந்த புல்லட் உன் அப்பாவோட உயிரை வாங்கிடும்.”

 

“நோ… அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க” கதறி விட்டாள்.

 

“ஆல்ரைட்…  அப்போ அதே ஆட்டோல ஏறி வா” ஆணை பிறப்பித்தவன், பட்டென அழைப்பை துண்டித்து விட்டான்.

 

தந்தையின் உருவத்தையே கண்களில் நிரப்பிக்கொண்டு, இருதயத்தில் வேதனையுடனும், இயலாமை உணர்வுடனும் மீண்டும் அவனை நோக்கிய அவளது பயணம் ஆரம்பமானது.

 

***

 

தற்போது, அந்த வெண்ணிற அறையில், அந்த வெண்ணிற மணமகள் ஆடையை போர்த்தியிருந்தாள் அழகிய தாமிரா. 

 

இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு திருமணம் நடக்கப் போகிறது. அவளது தந்தை இன்றி, தாயின்றி, அவளது அன்பு சகோதரர்கள் இன்றி, ஓர் அநாதை போல, திருமணம் செய்து கொள்ளப் போகிறாள்.

 

அவளது விருப்பமின்றி, திருமணத்துக்கு அடிப்படையான காதல் சிறிதுமின்றி, அவளது கல்யாணக் கனவுகள் சிதைந்து போனது.

 

‘தட் தட் தட்’ அறையினுள் நுழைந்தான் அவன். அவள் உள்ளே வந்ததை உணர்ந்திருந்தாலும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

“ஆர் யூ ரெடி?” அமைதியான அந்த அறையை அவனது குரல் எதிரொலிக்க, அவளோ பதில் அளிக்கத் தோன்றாதவளாய் அமைதியாக இருந்தாள்.

 

“கேள்வி கேட்டேன்” அழுத்தமாக. அப்போதும் அவள் பதில் பேசவில்லை.

 

கட்டிலுக்கு பக்கத்தில் கிடந்த டீப்பாயை உதைந்து‌ தள்ள அந்த சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.

 

அவனது முகம் பயங்கரமாக மாறியிருந்தது. அவனது வெப்பம் அந்த இடத்தையே சூழ்ந்து கொண்டது போல ஓர் இறுக்கம்.

 

அவளை நெருங்கி வந்தவன் அவளது தாடையை மென்மையாக பற்றி, பின்பு அழுத்தத்தை அதிகரித்தான். அவளுக்கு வலித்தது.

 

காலையில் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு அவளை விட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையில் அவனது இந்த அவதாரம் அவளை கிலிகொள்ளச் செய்தது.

 

“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லனும் அன்ட் மறுபடியும் என்னை ஏமாத்திட்டு போகனும்குற எண்ணம்லாம்  இந்த மூளைக்குள்ள வரக் கூடாது” அவன் அழுத்தத்தை அதிகரிக்க, முனுக்கென கண்ணீர் எட்டிப்பார்த்து.

 

அவளது தாடை எலும்புகள் எல்லாம் உடைந்து விடும் போல வலித்தது. 

 

“ப்.. ப்ளீஸ்… லீவ் மீ.‌ எ.. எனக்கு வ..வலிக்குது…” அவளது வார்த்தைகள் தந்தியடிக்க,

 

“பெயின் இஸ் குட். அந்த வலி கத்துக்கொடுக்குற பாடம் எப்பவும் மறக்காது. அதை நீ சீக்கிரம் புரிஞ்சுக்குவ” நிதானமாகக் கூறினான்.

 

அவளது தாடையை அழுத்தியிருந்த கைகளை மெல்ல தளர்த்தியவன், அவளது கன்னத்தை லேசாக தடவினான்.

 

“யூ ஆர் லுக்கிங் கோர்ஜியஸ்.  நீ இந்த ருத்ரனோட காதல் மனைவி.” 

 

காதல் மனைவியா? என்ன உளறல் இது? என்பது போல விழிகள் விரிய அவனை பார்த்தான்.

 

“வெளியில இருந்து‌ பார்க்குறவங்களுக்கு அப்படி தான் தெரியனும். இது காதல் திருமணம் புரிஞ்சதா?” மெல்லக் கேட்டான்.

 

அவளது தலையும் ஆடியது. வியர்வை முத்துக்கள் அரும்பின. பயம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

 

“ஹேய் ரிலாக்ஸ். ஒன்னுமில்லை ஓகே. கம்” அவள் கரத்தினை ஆதரவாய் பற்றிக் கொள்ள, அந்த சிறு அக்கறை கூட அவளது இதயத்தில் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.

 

அதே நேரம் கட்டிலருகே  குட்டி மேசையின் மீது கிடந்த ஃபோட்டோ அவள் கண்ணில் பட்டது. ருத்ரனும் அனன்யாவும் இருந்த புகைப்படம் அது.

 

அப்போது தான் அவள்‌ நடு மண்டையில் யாரோ ஓங்கியடித்தது போல் வலிக்க, அந்த விடயம் உரைத்தது. பட்டென அவன் கையை உதறித் தள்ளினாள்.

 

இதை எப்படி மறந்தாள்? இத்தனை நேரம் அனுபவித்த வலியை விட இது கொடிய வலி.

 

“உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தையும் இருக்கு.”

 

“நோ ப்ராப்ளம். கல்யாணம் பண்ணி இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்” என்று கூலாக சொன்னவன், அவள் அதிர்ந்து விழித்த நேரத்தில் அவள் இடையை பற்றி அழைத்துச் சென்றான்.

***

 

“தாமிரா…!” அவனது வீடே அதிர கத்தியபடி உள்ளே நுழைந்தார் விஸ்வநாத். கூடவே ராகவனும் வந்திருந்தார்.

 

மணமகனாக ருத்ரனும் மணமகளென தாமிராவும் இருந்ததை கண்டு விஸ்வநாத் அதிர்ந்தார்.

 

“அப்பா…!”

 

அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த தாமிரா தந்தையை கண்டதும் எழ முயற்சிக்க, யாரும் அறியா வண்ணம் கையை பிடித்து அழுத்தினான் ருத்ரன்.

 

ருத்ரனை கண்டதும் விஸ்வநாத்தின் நரம்புகள் புடைத்து கை முஷ்டி இறுக, அவனை முறைத்தான். 

 

“இவன் தான்‌ உன்னை கடத்திட்டு வந்தானா? இவன்‌ தானா அது? அப்பா வந்துட்டேன் மா.‌‌ அவனால உன்னை எதுவும் பண்ண முடியாது. நாம இங்கிருந்து போயிடலாம்” என் அவளை அழைக்க,

 

“அவ எங்கேயும் வர மாட்டா மாமனாரே. ஷீ இஸ் மை வைஃப் நவ்” என்றவன் அவளை தோளோடு அணைத்தான்.

 

மாமனார்! மனைவி!

 

விஸ்வநாத் அதிர்ந்து கேள்வியாய் தாமிராவை நோக்க, அவளால் அவளது தந்தையின் கலங்கிய பார்வை சந்திக்க முடியவில்லை. மனம் வலிக்க, தலை கவிழ்ந்து நின்றாள்.

 

“நோ… இவன் உன்னை கட்டாயப்படுத்தினானா? பயமுறுத்தினானா? என்னம்மா நடந்துச்சு? நீ சொல்லுமா… இவன் உன்னை என்ன செஞ்சான்?” அப்போதும் அவன் ருத்ரனின் பேச்சை நம்பாதவராக, தாமிராவிடமே கேட்டார்.

 

அவருக்கு தெரியும் அவன் நிச்சயம் தாமிராவை கட்டாயப்படுத்தியிருக்கக் கூடும். அதனால் தான் இப்படியொரு திடீர் திருமணம் நடந்திருக்கிறது. 

 

“இ… இல்லைபா என் விருப்பத்தோடு தான் இந்த கல்யாணம் நடந்தது” தொண்டைக்குழிக்குள் இருந்து சிக்கி சிதறி வெளிவந்த வார்த்தைகள், அவளையே காயப்படுத்தியது. அவருடன் ஓடிடத் துடித்த அவளது மனதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

 

“நீ பொய் சொல்ற தாமிரா. உன்னால இவனை மாதிரி ஒருத்தனை காதலிக்கவும் முடியாது கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. பயப்படாதமா அப்பா இருக்கேன். இவனும் வேணாம் இவன் உறவும் வேணாம் தூக்கிப் போட்டுட்டு வாம்மா.” 

 

இதுவரை அவளது தந்தை கலங்கி நின்று  பார்த்திராதவள், இன்று அவளுக்காக கலங்கித் துடிக்கும் அவளது தந்தையை கண்டு, அவள் இதயம் துகள்களாய் சிதறும் வலியை உணர்ந்தாள்.

 

ருத்ரன் அங்கு நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்திருந்தான். அவரை இங்கு வரவழைத்ததே அவன் தானே. அவனது வீட்டினரோ அமைதியாக நின்றிருந்தனர்.

 

சூல்நிலை கைதியாய் அவனிடம் சிக்கிக் கொண்டிருக்கும் அவளுக்கு, அவளது தந்தையின் உயிரே பிரதானமாகப் பட்டது. ருத்னது எச்சரிக்கை அவளது மண்டையை விடாமல் குடைந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லை.

 

அவர் தன்னை அடியோடு வெறுத்தாலும் பரவாயில்லை என கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். பொங்குகிற உணர்வை முயற்சி செய்து கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

“நான் இவரை காதலிக்கிறேன்பா. நீங்க ஒத்துக்க மாட்டீங்கனு தெரிஞ்சுதான் இப்படி ஒரு முடிவெடுத்தேன். கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது என் லைஃப். எது நல்லதுன்னு எனக்கு தெரியும்பா” உறுதியாக சொன்னாள். 

 

தாமிராவிடம் தெரிந்த உறுதியை கண்டு அவருக்கு இதயமே வெடித்து விடுவது போல இருக்க, நெஞ்சை பிடித்துக் கொண்டார்.

 

“அப்பா…!” அவள் உள்ளம் பதறியது.

 

“ம்ம்… இனி உன் லைஃப்ல உனக்கு ஒரு அப்பா இருந்ததையே மறந்துடு” அமர்த்தலான குரலில் சொன்னார். நொந்து போனவராய், தளர்ந்த நடையுடன் அங்கிருந்து வெளியேறி விட்டார்.

 

*****