anjali’s Endrum Enthunai Neeyaethan 16

       என்றும் என்துணை நீயேதான் 16

 

திருமணம் முடிந்து மூன்று நாள் ஆகிவிட்டது வெளியில் ஓரளவு கர்ணனும், விருஷாலியும் பேசிகொள்கிறார்கள். அதுவும் அவர்கள் பேசும் வார்த்தை, “ஆமா.. ம்ம்.. சரி.” இவ்வளவே. ஆனால் அவர்களின் அறையில் வெளியில் பேசுவதை விட சுத்தமாக பேசுவது கிடையாது. அறையில் அவன் சோபாவில் இருந்தால், இவள் கணிணியை எடுத்துகொண்டு அறையை ஒட்டி உள்ள சிறிய பால்கனியில் அமர்ந்திருப்பாள். அவன் மெத்தையில் படுத்திருந்தால், இவள் சோபாவில் படுத்துகொள்வாள். இல்லையா அவனுக்கு முன்னே மெத்தையில் படுத்துகொண்டு அவனை சோபாவில் படுக்க வைப்பாள். காலையில்  அவளுக்கு முன் எழுந்து தோட்டத்து சென்றிடுவான், இல்லை வயலில் இருப்பான் கர்ணன். விருஷாலியோ, எட்டு மணிக்கு எழுந்து குளித்து முடித்து சுடிதார் அணிந்துகொண்டு கீழே வரும் நேரம் ஒன்பது ஆகிவிடும்.  புதிதாக திருமணம் ஆனவர்கள் என நினைத்து லட்சுமியும், கோடியம்மாளும் விட்டுவிட்டனர். அவனிடத்தில் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பவள். அவன் வீட்டு ஆட்களிடம் கொஞ்சம் சிரித்து பேசுவாள். அதுவும் அவர்களிடம் சிரிப்பது கூட கோடியம்மாள் சொல்லும் பழமொழிக்கு தான்.

 

லட்சுமியுடனும், கோடியம்மாளுடன் தெரிந்த சமையலை அவள் ஓரளவுக்கு சுவையாக சமைத்ததை முகம் சுளிக்காமல் சாப்பிட்டார்கள். அதிலும், திருமணம் ஆனா இரண்டாவது நாள் அவள் கண்டிப்பாக இனிப்பு வகை செய்ய வேண்டும் என கோடியம்மாள் சொல்லிவிட அது தெரியாமல் முழித்தவளை லட்சுமி தான் சொல்லிகொடுத்தார். அவளையே அனைவருக்கும் பரிமாறவும் வைத்தார். குறிப்பாக கர்ணனுக்கு ”அந்த கூட்டு வை, இந்த பொரியல் அவனுக்கு ரொம்ப பிடித்தது”. அவளிடம் சொன்னார் கோடியம்மாள்.

 

கர்ணனுக்கு முன்னே எழுந்து குளித்துவிட்டு, சேலையை அணிந்துவிட்டு, அவளின் பொருளான ஹேண்ட் பேக், மற்றும், பாட புத்தகம், மற்றும் இன்னும் சில இதர பொருளையும் அவள் எடுத்து வைத்துகொண்டிருந்தாள். அவள் உருட்டும் சத்ததில் விழித்தவன் நேரத்தை பார்க்க ஏழாகி கொண்டிருந்தது. எழுந்தவன் அவளை தாண்டி குளியல் அறைக்கு சென்றான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் அறையில் இருந்து வெளியேறினாள்.

 

“என்னம்மா… இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட”. லட்சுமி எங்கு புறப்படுகிறாய் என கேட்க்காமல், கேட்டார்.

 

“அத்தை இன்னைக்கு காலேஜ்ல முக்கியமான எக்‌ஷாம். நான் கண்டிப்பா போகனும். நான் தான் அதுக்கு இன்ஜார்ஜ். நேற்றே எனக்கு போன் பண்ணி என்கிட்ட சொல்லிட்டாங்க. அதான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன் அத்தை.” விருஷாலி சொல்லிகொண்டிருக்கும் போது கர்ணன் கீழே வந்தான்.

 

“அப்படியா ம்மா.. சரி தம்பியே விட சொல்லுறேன் காலேசுல.” அவளின் மறுப்பை பார்க்காமல்,

 

“ஏய்யா கர்ணா மருமகளை காலேசுல விட்டு வா பத்திரமா.” தாயை தாண்டி செல்ல இருந்தவனை, அழைத்து பேசினார்.

 

“சரிங்க ம்மா.. வா போகலாம்.” அன்னையிடம் சம்மதித்துவிட்டு, விருஷாலியை பார்த்து அழைத்தான்.

 

“அத்தை என் கார் இருக்கு நான் அதுல போய்கிறேன். அவங்களுக்கு எதுக்கு சிரமம்.” அவள் மறுக்க

 

“என்ன ம்மா நீ.. கல்யாணம் இப்போ தான் ஆகிருக்கு ஊருக்குள்ள திருடன்ங்களும் அதிகம் ஒத்தையா கார்ல யாராவது போன ஏமாத்திடுவாங்க. நீ தம்பியோட போம்மா, காலேசுல இருந்து கிளம்பும் போது தம்பிக்கு போன் பண்ணு வந்து அழைச்சிட்டு வரும் வீட்டுக்கு. தம்பி கூப்பிட்டு போப்பா மருமகளை.” அவர் கட்டாயப்படுத்தி கர்ணனுடன் அனுப்பி வைத்தார் லட்சுமி.

 

வாசலில் அவனின் பைக்கை எடுத்து வந்து அவள் முன் நின்றான். சேலையின் முந்தியை அவள் சொருகிகொண்டு, ஏறி அமர்ந்து கம்பியை பிடித்துகொண்டாள். இருவருக்குமே முதல் பயணம் ஆனால் இருவருக்குமே அது பிடித்து நடக்கவில்லையே. அதனால் அவர்களின் அமைதி அவளின் காலேஜ் வரை தொடர்ந்தது. காலேஜில் இரக்கிவிட்டவனை பார்த்து, “தாங்க்ஸ்.. ஈவ்வினிங் நானே வந்துகிறேன்.” விருஷாலி அவனின் கண்களை பார்த்து சொல்லிவ்விட்டு சென்றாள். அவனோ, அவள் கல்லூரியின் வாசலிலே காத்திருந்த அவளின் தோழிகளை பார்த்து உற்சாகமாக கையசைத்துகொண்டும், தோளில் கை போட்ட படியும் சிரித்து பேசிகொண்டே சென்றவளை பார்த்தான்.

 

”லட்சுமி மருமகளை எங்க.” கோடியம்மாள் விருஷாலியை பற்றி கேட்க.

 

“காலேசுல வேலை பார்க்குதுல அங்க இருந்து போன் பண்ணி இன்னைக்கு ஏதோ எக்‌ஷாமு இருக்காம் அது நம்ம மருமகள் தான் நடத்து தான் அதான் காலையில புறப்பட்டுருச்சு.” கோடியம்மாளுக்கு பதில் சொல்லிகொண்டே வேலையை பார்த்தார்.

 

“தனியாவ போச்சு மருமக.”

 

“இல்லை அத்தை.. நம்ம தம்பிய தான் கூட அனுப்பிருக்கேன் துணைக்கு.”

 

“அப்போ சரி.. வந்த உடனே மருமககிட்ட அது வேலைய பத்தி கேக்கனும் லட்சுமி. இப்படியே வேலைனு இருந்த கர்ணன எப்படி கவனிக்கும்.”

 

“கோடியம்மா.. மருமக வேலை பார்க்குறது சாதாரண வேலை இல்லை. டாக்டருக்கு படிச்சு, காலேசுல வேலை பார்த்துகிட்டே, வேற மருத்துவமனைக்கு இலவசமா போய் சிகிச்சை கொடுத்துட்டு வருது. செய்யுற தொழில் புனிதம் அதைவிட புனிதம் இலவசமா சேவை செய்யுறது கோடியம்மா. இனிமே மருமககிட்ட வேலை பார்க்குறதை பத்தி நீ எதுவும் கேக்ககூடாது.” சோனை முத்து பேசிய பின் தான் புரிந்துகொண்டார் கோடியம்மாள்.

 

“ஆத்தே அவ்வளவு பெரிய படிப்பு படிச்சிருக்கு நம்ம வீட்டு மருமக இது தெரியாம நான் பேசிட்டேனே. சரிங்க இனி மருமககிட்ட வேலையை பத்தி பேசமாட்டேன்.” அவரும் கணவனின் பேச்சுக்கு மரியாதை கொடுத்தார்.

 

”டைம் இஸ் லெவன்.. ஸ்டூடென்ஸ், எக்‌ஷாம் ஃபினிஸ் டைம் இன் ஒன் ஹவெர்.” மாணவர்களுக்கு நேரம் ஆனதையும், இன்னும் ஒரு மணி நேரத்திற்க்குள் தேர்வை முடிக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தாள்.

 

தேர்வெழுதும் மாணவர்களை கவனித்துகொண்டும், அவர்களுக்கு தேவையான சீல் பேப்பர்களையும் வழங்கி கொண்டிர்ந்தாள். மாணவர்களுக்கு என்ன தேவையோ அதை அவள் சலிக்காமல் செய்தாள். தேர்வு முடியும் நேரத்தை சொல்லிவிட்டு, அதற்க்கு முன் எழுதி முடித்த மாணவர்கள் அவளின் கையில் தேர்வு தாளை கொடுத்துவிட்டு சென்றனர்.

 

வரிசை எண் படி அடுக்கி கொண்டிருந்தவளிடம் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வு தாளை கொடுத்துவிட்டு சென்றனர். அனைத்து மாணவர்களின் தாள்களை வாங்கி அதை ஒழுங்காக அடுக்கியவள் முன் அவளது தோழி மோனிஷா வந்து நின்றாள்.

 

மோனிஷாவுக்கும், விருஷாலியின் திருமணம் ஆனா நாளில் தான் திருமணம் நடந்தது. அதனால் தோழிகள் விருஷாலியின் திருமணத்துக்கு சென்றுவிட்டு, உடனே மோனிஷாவின் திருமணத்துக்கு சென்றனர்.

 

”ஹே மோனி.. எப்படி இருக்கு மேரேஜ் லைப்.”

 

“நானும் உன்கிட்ட கேட்க்கனும் உனக்கு எப்படி இருக்கு மேரெஜ் லைப்.”

 

“நல்லா போகுது..”

 

“எனக்கும் சூப்பாரா போகுது.. இந்த எக்‌ஷாம் மட்டும் இல்லனா நானும் அவரும் ஹனிமூன் போயிருப்போம்.” சலித்தபடி சொன்னாள் மோனிஷா.

 

விருஷாலி சிரித்துகொண்டே, “அப்போ சார் நல்லா கவனிச்சிருக்காருனு அர்த்தம்.” மோனிஷாவை பார்த்து கண்ணடித்தபடி கேட்க.

 

”ச்சீ போடி..” வெட்க்கம் கொண்டாள்.

 

“சரி எக்‌ஷாம் முடிந்ததும் ஹனிமூன் புக் பண்ணுங்க.”

 

“இல்லை டி அவர்க்கு ஹாஸ்பிட்டல் வேலை அதிகமா இருக்குமா அடுத்த வீக்ல இருந்து சோ நகரகூட முடியாதுனு சொல்லிட்டாரு. இன்னைக்கு காலையில் கூட அவர் தான் என்னை ட்ராப் பண்ணிட்டு போனார். வீட்டுல போர் அடிக்குதுனு சொல்லி நிமிஷத்துக்கு ஒரு போன் கால்.” மோனிஷா கொஞ்சம் வெட்க்கமாக சொல்ல, விருஷாலிக்கு மனதில் வெறுமையான உணர்வு தோன்றியது.

 

“உன்கிட்ட சொல்ல வந்ததை மறந்துட்டேன் ஷாலு. நாளைக்கு ஈவினிங் ஹேட்டல் க்ரீன் பார்க்ல நைட் டின்னர் கொடுக்குறோம் நானும், என் வீட்டுகாரும். நம்ம ஃப்ர்ண்ட்ஸ் எல்லாரையும் நான் இப்போ தான் நேர்ல பார்த்து சொல்லிட்டு வந்தேன். நீயும் உன் ஹஸ்பெண்ட் கண்டிப்பா டின்னருக்கு வரனும்.” மோனிஷா அழைப்பு விடுக்க.

 

“இல்லை மோனி..” ஷாலுவின் வாயில் விரல் வைத்து.

 

“இந்த கதையெல்லாம் என்கிட்ட சொல்லாதா.. ஒழுங்கா வர்ர அவ்வளாவு தான். நம்ம கேங்க்ல நம்ம இரண்டு பேருக்கு தான் முதல்  கல்யாணம் நடந்திருக்கு அதுவும் உன் கல்யாணமும், என் கல்யாணமும் ஒரே நாள்ல நடந்திருக்கு அதான் டின்னர் ப்ளான் பண்ணாரு என் வீட்டுகாரு. முக்கியமா நம்ம ஃப்ரண்ட்ஸூக்காக தான் இந்த டின்னர்.” மோனிஷா விளக்கி சொல்ல

 

“சரி டி வரேன்.. நாளைக்கு ஈவினிங் தானே அவங்களோட நான் வரேன் போதுமா.” தோழியை சமாதானம் செய்துவிட்டு அவளை அழைத்துகொண்டே மற்றா தோழிகளை பார்க்க சென்றனர்.

 

மாலையில் கல்லூரி முடிந்து தோழிகளுடன் பேசிகொண்டே வந்தவளை வந்தனா நிறுத்தினாள். விருஷாலி என்ன என்பது போல் வந்தனாவை பார்க்க, அவளோ கண் காட்டிய திசையில் பார்த்தாள் விருஷாலி. கல்லூரியின் வாசலில் பைக்குடன் நின்றிருந்தான் கர்ணன்.

 

“ஷாலு உன் வீட்டுகாரு செம ஷார்ப் தான் கரெக்ட்டா காலேஜ் முடியுற நேரத்துல வந்து நிக்குறாரு.” வந்தனா கேலி செய்ய.

 

“என் வீட்டுகாரு இப்போ தான் வீட்டுல இருந்து கிளம்ப போறேனு மெசேஜ் பண்ணிருக்காரு. ஆனா உன் வீட்டுகாரு நீ சொன்ன மாதிரியே கரெக்ட் டைம்ல வந்திட்டாரு.” மோனொஷாவும் சேர்ந்து சொல்ல

 

விருஷாலிக்கு என்ன சொல்வது என தெரியாமல் தோழிகள் முன் சிரித்து வைத்தாள். “வரவேண்டாம் சொன்னேன் பின் எதற்க்கு வந்தான்”. என்பது போல பார்த்தாள்.

 

“ஓகே ஃப்ர்ண்ட்ஸ் நாம போகலாம் ஷாலு உன் வீட்டுகார் வெயிட் பண்ணுறாரு போ.” வந்தனா, விருஷாலியை போக சொன்னாள்.

 

“நான் வந்திருவேனு சொன்னேல அப்புறம் எதுக்கு வந்தீங்க.” அவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

 

ஏறி அமர்ந்தவள் அவன் ஒரு பதிலும் சொல்லாமல் இருப்பதை நினைத்து, ஒரு வேளை அத்தை சொல்லிப்பார்கள் நியாபகம் வைத்து. என காலையில் லட்சுமி காலேஜ் முடிந்ததும் தம்பியே அழைத்து வரட்டும். என்றதை நினைத்துகொண்டு இருந்தவள் மனம் மோனிஷா சொன்னது நியாபகம் வந்தது.

 

“பைக்ல என்ன ட்ராப் பண்ணுங்கனு சொன்னேன். ஆனா அவரு, பைக்ல உனக்கு சேஃப் இல்லை ம்மா சொல்லிட்டு கார்ல கூப்பிட்டு வந்தார். பைக்னா அவர் இடுப்பை கட்டிபிச்சிட்டு வரலாம்னு கனவு கண்டேன் ஷாலு.” தேர்வு தாளை தேர்வு மையத்தில் ஒப்படைக்க செல்லும் போது மோனிஷா பேசிகொண்டே வந்தாள். அப்போது தான் கர்ணனுடன் பைக்கில் வந்தது நினைவுக்கு வந்து சென்றது.

 

இதோ இப்போதும் பைக்கில் தான் செல்கிறேன் எனக்கொன்றும் இவன் மீது ஈர்ப்பு வரவில்லையே. ஏன் மோனிஷாவுக்கு மட்டும் அந்த ஈர்ப்பு வருகிறது என விருஷாலி யோசித்தாள். விருஷாலி ஒன்றை மறந்துவிட்டாள் தங்கையின் காதலுக்காக மட்டுமே தான் இந்த திருமணத்திற்க்கு சம்மதித்தாள். விருஷாலியின் தோழிகள் சொல்வது போல இருமனமும் இணைந்தால் தான் அந்த திருமண வாழ்க்கை நீரோடை போல் தெளிவாக செல்லும். ஆனால் இங்கு தாமரை இலை மேல் நீர் ஒட்டியும் ஒட்டாமலும் அல்லவா வாழ்க்கை செல்கிறது இவர்களுக்கு.

 

”எப்படி ய்யா கர்ணா நான் சொல்லனும் இருந்தே மருமகளை காலேசுல இருந்து அழைச்சிட்டு வர. சரியா நீயும் மருமகளை அழைச்சிட்டு வந்துட்ட, வாங்க ரெண்டு பேரும் சுத்தம் பண்ணிட்டு வாங்க கை, கால  டீ எடுத்து வைக்குறேன்.” மருமகளின் களைப்பு தெரிந்து சொன்னார் லட்சுமி.

 

உணவு மேஜையில் இருவருக்கு டீயையும், பஜ்ஜியையும் வைத்துவிட்டு, மருமகளின் அருகே அமர்ந்து, “ஏம்மா மருமகளே உன்கிட்ட ஒன்னு கேட்க்கனும் த்தா.”

 

“சொல்லுங்க அத்தை..”

 

“காலேசுல லீவ் விட்டா நம்ம குலசாமிக்கு பூஜையும் பொங்கலும் வைக்கனும்.”

 

“எப்போ வைக்கனும் அத்தை.”

 

”சனி இல்லைனா ஞாயிறு ம்மா..”

 

“அப்போ எனக்கு லீவ் தான் அத்தை”.

 

“சரி ம்மா..”

 

”என்ன ம்மா மருமகளே காலேசு போயிட்டு வந்திட்டியாம்மா.” வீரபத்திரன் கேட்க

 

“போயிட்டு வந்துட்டேன் மாமா..” எழுந்து நின்று பதில் சொல்ல, அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்த கர்ணனுக்கு தான் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியகவும் இருந்தது.

 

எப்போவும் போல் அறையில் அவன் வேலையை அவன் பார்க்க, அவள் வேலையை அவள் பார்த்தாள். அப்போது தான், “ஏன் வந்தீங்க காலேஜ்க்கு.”

 

“என் மனைவிய அழைக்க நான் தானே வரனும்.”

 

“ஆனா, இந்த திருமணம் நம்ம விருப்பத்துக்கு மாறா நடந்தது. இதுல எங்க நான் உங்க மனைவியானேன்.”

 

“இப்போ உனக்கு என்ன வேணும், என்ன பதில் எதிர் பார்க்குற.”

 

அவளோ, என்ன சொல்லுவது  என தெரியாமல் விழித்தாள்.

 

“பிடிச்சு கல்யாணம் நடந்தாலும், பிடிக்காம நடந்தாலும் இப்போ நீ என் மனைவி, நான் உன் புருஷன் அவ்வளவு தான்.” அவன் சாதாரணமாக சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான். ஆனால் விருஷாலிக்கு தான் கோவமாக போகிறான் என நினைத்துகொண்டாள்.

 

இதுவே முதல் முறை இருவரும் சாதாரணமாக பேசிகொண்டது. ஆனால் இப்படியே இருந்தா வாழ்க்கை நகரவே நகராது (இந்த கதையும் நகராது).  அதனால் மோனிஷா கொடுக்கும் டின்னர் ப்ளானில் விருஷாலியின் மனம் அவனுக்கு தெளிவாக புரிய போவது அறியாமல் நாளைய தேர்வு வேலையை பார்த்துகொண்டிருந்தாள்.

 

                                                                              தொடரும்……………….