SeemaiSiyaan-6

SeemaiSiyaan-6

சீமை சீயான் -6

சீயான் போன் மூலம் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்துக் கொண்டு பிச்சியின் வீட்டுக்கு சென்றான் எசக்கி முத்து.வாசலில் மூச்சு வாங்க வந்து நின்ற மகனை கொலை வெறியில் முறைத்துக் கொண்டு நின்றார் வீராயி. “அம்மா எங்கம்மா அவ” அதற்கும் அவரிடம் முறைப்பே பதிலாகக் கிடைக்க.

 

முனியாண்டி தான் முன் வந்து, “நீ வா எசக்கி,புள்ளகிட்ட பேசு. அது ஏன் இப்புடி ஒரு முடிவெடுத்துச்சுனு எனக்குத் தெரியணும்,உள்ளர அவனுங்கெல்லாம் நாட்டாமை பண்ணிக்கிட்டு இருக்கானுக வா”.அவசரமாக அவனை இழுத்து சென்றார்.

 

அங்குப் பிச்சி தந்தையின் தூரத்து சொந்தமென்று ஒரு நான்கு பேர் இருந்தார்கள்.அதில் ஒருவன் காண்டாமிருகத்திற்குச் சட்டை பேண்ட் போட்டது போல் இருந்தான்.அவன் தான் பிச்சியைப் பெண் கேட்டு வந்துள்ளான்.வீட்டினில் நுழையும் அந்த ஐந்து நிமிடத்தில் தனது மருமகனுக்குத் தகவல் சொல்லி கொண்டே வந்தார் முனியாண்டி.

 

முனியாண்டியின் பதட்டத்தைப் பார்த்த முத்துவிற்குப் பிச்சியின் மேல் கோபமாக வந்தது,ஏற்கனவே வேம்புவை வெளியில் கொடுத்து அவள் வாழ்ந்த கதை தான் தெரியுமே.அது இவர்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.பிச்சியும் அதே போல் கொடுக்கப் பயம் கொண்டு தான் முத்துவிற்குப் பேசினார்.அதற்குள் பிச்சி இப்புடி ஒரு பஞ்சாயத்தை இழுத்து விட்டாள்.

 

“எப்புடி மாமா”. “எல்லாம் பிச்சி பண்ண வேலை.அவ தான் வந்து பொண்ணு கேளுங்கன்னு அந்தப் பையனுக்குப் போன் போட்டுருக்கு,என்ன கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குறா என்னனு பாரு, வெரசா முடி எசக்கி, அவனுகள பார்த்தா பத்திகிட்டு வருது”.

 

“சரி மாமா நான் முதல அவகிட்ட பேசிட்டு வரேன்”.தனது மாமனிடம் சொன்னவன் வேகமாகப் பின் கட்டுக்கு சென்றான்.அங்கே ஓங்கி உயர்ந்து நின்று இருக்கும் தென்னை மரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள் பிச்சி.

 

முத்துவின் பேச்சில் கோபம் கொண்டவள் நீண்ட நாளாக இரண்டாம் தரமாகத் தன்னைத் திருமணம் செய்யக் கேட்ட அந்த உறவை அழைத்து விட்டாள். அவர்களும் தட்டை தூக்கி கொண்டு வந்துவிட்டார்கள்.

 

கோபமாக அவளைத் திருப்பிய முத்து “ஏய் எம்புட்டு திமிரு இருந்தா இந்த வேலை பார்த்து இருப்ப”.

“என்னதான் வேணான்னு சொல்லிப்புட்டீங்கள, அப்புறம் என்ன நான் எங்க அப்பன் ஆத்தாளுக்காகக் கண்ணாலம் பண்ணித்தானே ஆகணும்,எங்க வசதிக்கு…….” மேற் கொண்டு பேச போனவளை இறுக்கமாகப் பற்றியவன்.

 

“ஏற்கனவே புத்தி கெட்ட சிறுக்கி ஒருத்தி  பண்ண காரியத்துல அவ வாழ்க்கையைத் தொலைச்சுப்புட்டு நிக்கிறா, இப்போ நீயுமா.மரியாதையா நீயே போய் அவனுங்கள பத்திவிற்று இல்ல,அம்புட்டுதான்”.முடியாது என்பது போல் அழுத்தமாக இருந்தாள்.

 

பொறுத்து பொறுத்து பார்த்தவன் அவள் அசைவது போல் தெரியவில்லை என்றதும். ‘திமிரு திமிரு உடம்பு முழுக்கத் திமிரு ஒரு பொம்பள புள்ளயாவது சொன்னதைக் கேட்குதானு பாரு.அம்புட்டும் விஷம் ச்சை….’

 

முற்றத்தில் போட பட்ட நாற்காலியில் கொஞ்சம் அமத்தலாக அமர்ந்து கொண்ட முத்து, “அப்புறம் பெரியவங்க எதுக்கு வந்து இருக்கீங்க.நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு”.

 

“தம்பி பிச்சி தான் கண்ணாலம் பேச வர சொல்லுச்சு”.

 

“ஒரு சின்னப் பொண்ணு வார்த்தைய நம்பி வந்து இருக்கீங்க.எங்க மாமனோ இல்ல ஐத்தையோ கூப்புட்டதேன் மறுவாதை”.அந்த கண்டா மிருகத்திற்குக் கோபம் வந்து விட்டது.

 

“என்ன விளையாட்டு இது,பிச்சி ஏ புள்ள பிச்சி”. கோபமாகப் பின்கட்டை நோக்கி குரல் கொடுக்க.

 

என்ன மாப்புள்ள சவுண்ட் ஓவரால இருக்கு.அவ வரமாட்டா வர வைகாசி மாசம் எனக்கும் பிச்சிக்கும் கண்ணாலம்,முடிவு பண்ணியாச்சு பூ வும் வச்சாச்சு.

 

“அப்புறம் என்ன தேவைக்கு எங்களுக்குப் போனை போட்டுச்சு உங்க பொண்ணு” என்று காரா சாரமாகக் கோப வார்த்தைகள் உச்சத்தைத் தொட.முனியாண்டி கோபமாகக் கத்தினார்.

 

“என்ன முனிசாமி என்கிட்ட எதிர்த்து பேசுற அளவுக்குப் பயம் விட்டு போச்சா”.

 

ஐயா! பிச்சி புள்ள மேல தானுங்க தப்பு நாங்க என்ன பண்ணுனோம், அதான் பையன் கோப படுறான். “சரிதான் தப்பு எங்க மேல தான் புள்ள தெரியாம பண்ணிடுச்சு கிளம்புங்க”.சிறு முணு முணுப்புடன் சென்றனர்.அந்த கண்டாமிருகம் கொஞ்சம் உறுமிவிட்டு தான் சென்றது.

 

அங்கு ஓர் அசாத்திய மௌனம் பின் கட்டில் சீயான் பிச்சியின் கை பற்றி அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.

 

அண்ணே நீ தேதியை குறி,என்ன அஞ்சு புள்ள (பிச்சியின் தாயை அப்புடித்தான் கூப்பிடுவார் வீராயி).சொல்லுங்க மதனி. “உன் பொண்ண குடுப்பியா மாட்டியா”.

 

ஐயோ! என்ன மதனி நீங்க முத்து தான் எங்க மாப்பிள்ள,ஏங்க சொல்லுங்க. கணவனையும் துணைக்கு அழைத்தார். அவரும்,

 

“உனக்கு இல்லாததா வீராயி.மச்சான் தேதியை குறீங்க,கண்ணாலம் வேலைய பார்க்கலாம்”.அவசரமாகத் தனது வீட்டுக்கு சென்ற முனியாண்டி அங்காயி  அழைத்துக் கொண்டு வந்தார்.முகம் முழுக்கப் புன்னகையுடன் அனைவரும் சேர்ந்து முத்து ,பிச்சி மற்றும் சீயான், வேம்பு திருமணத்தை உறுதி செய்தனர்.

இனியும் காலம் கடந்தால் ஒன்று மாற்றி ஒன்று பிரச்சனைகள் அணி வகுத்து தாக்கு கின்றது.இனி ஒரு இழப்பை அவர்களால் தாங்க முடியாது.ஒருவாராக அனைவரும் திருமண நாள் முடிவு செய்து,பொன்னுரங்கத்திடமும் சொல்லி, எத்தனை விரைவாக முடியுமோ இத்திருமணத்தை நடத்திட வேண்டும் என்று செயல் பட்டனர்.சூடு கண்ட பூனையின் நிலையில் அவர்கள்.

———————————————————————————————–

இரவில் தோட்டத்து வீட்டில் முத்து சீயானிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான்.

 

எம்புட்டுத் தைரியம் பார்த்தியாடா,எல்லாம் நீ குடுக்குற இடம் அதான் இரண்டு பேரும் இந்த ஆட்டம் போடறாளுக. “டேய் முத்து விடுடா பாவம் பாப்பா பயந்து போய்டுச்சு”.

 

பாப்பாவாம் பாப்பா.

 

திட்டதடா பாப்பாவா,உன் மேல உசுரையே வச்சு இருக்காடா,உன்ன ரொம்பப் புடிக்கும் மச்சான்.

 

என்ன மாப்ஸ் சொல்லுற நெஞ்சை பிடித்துக் கொண்டான் முத்து.உண்மையில் அவனுக்கு அதிர்ச்சி தான்.நினைவு தெரிந்த நாளில் இருந்து இருவருக்கும் சண்டை தான்.ஒரு நாள் கூடப் பாசமான பார்வையோ,மென்மையான நடத்தையோ  எதுவுமில்லை,பார்க்கும் போதெல்லாம் அடிதடி தான்.

 

இரு ஆண்களும் உல்லாசமாக “என்னடா சொல்லுற”. “ஆமாடா டீச்சர் உங்கிட்ட வந்து லவ் சொன்னுச்சமே அன்னைக்கே பாப்பா வந்து என்கிட்ட சொல்லிடுச்சு ,எனக்கே அதிர்ச்சி தான்”.

 

“டேய் நீயாவது சொல்லி இருக்கலாமே, பாவம்டா அந்த டீச்சர் ரவுடி மிரட்டி ஓட விட்டுட்டா”.

 

முத்துவை முறைத்தவன் “ நான் பாப்பாவை பத்தி பேசிகிட்டு இருக்கேன்”.

 

சரி சரி கோவப்படாத மாப்ஸ்.அந்த சண்டி ரணிக்கிட்ட பேசுறேன்.சீயானின் பதிலை எதிர் பார்க்காமல் போனை எடுத்து ஒதுங்கி கொண்டான் முத்து.சீயானும் வேம்புவுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து விட்டான்.

 

அங்கு முத்துவின் அழைப்பை ஏற்ற பிச்சி பேசாமல் அமைதியாக இருந்தாள்.ஹலோ..

 

ஹ்ம்ம்…

 

ஹலோ,ஹலோ

 

ஹ்ம்ம்… ஹ்ம்ம்……..

 

“ஏய் என்னடி லந்தா போனை எடுத்துப்புட்டு ஹ்ம்ம் சொல்லுற,ஊமச்சிய நீ.என்ன கோபப்படுத்தாத பிச்சி பேசு புள்ள”.

 

அழுது கொண்டே சொல்லுங்க.எதுக்குடி அழுது சவுர எனக்கு எப்புடி தெரியும் உனக்கு என்ன புடிக்குமுன்னு,எப்பப்பாரு வறுஞ்சு கட்டிக்கிட்டுச் சண்டைக்கு  வரது.அதான் கண்ணாலம் வேணான்னு சொன்னேன்”.

 

“இப்பமட்டும் என்ன பாசம் பொத்துக்கிட்டு வருது”.

 

ஹாஹா…. முத்துவின் சிரிப்பிற்கு.

 

“சிரிச்சு மழுப்பாதீங்க மாமா”.

 

மாமா வா! அடேய்! மாப்ஸ் சீக்கரம் வாடா நெஞ்சு வலிக்குது, சொல்லி கொண்டே திரும்பிய முத்துக் கண்டது. ஒரு வித போதையில் போனை பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்த சீயானைதான்.

 

“ஏன் மாமா கத்துறிங்க,சீயான் மாமா தூங்கிடுச்சா”.

 

“நல்ல தூங்குவனே உன் மாமே,பைத்தியம் முத்தி போய். போனை பார்த்து பல்ல காட்டிக்கிட்டு இருக்கான்.வேம்பு புள்ள பேசிகிட்டு இருக்கும் போல.அதுங்கள விடுடி நீ சொல்லு மாமாவை எம்புட்டு புடிக்கும்,என்னால இன்னும் நம்ப முடியல புள்ள”.

 

“நேருல வாங்க மாமா நம்ப வைக்குறேன் இறுக்கக் கட்டிக்கிட்டு”.

 

ஆ… என்று வாய் பிளந்தவன்.அடியேய்! கண்ணாலத்துக்கு முன்னாடி என்ன புள்ள பேச்சு.அந்த புறம் உதட்டை சுளித்தவள்.நீங்க என்ன எங்க அப்புச்சி காலத்துல இருக்குற மாதிரி பேசுறீங்க,காதல் பண்ணும் மாமா எத்தனை சினிமா பாக்குற.

 

“அடி கழுதை தோள உரிச்சிபுடுவேன் உரிச்சு,அடக்கமா இருடி”.

 

“அவனா நீ”.

 

அடிங்க ….. அவன் சீற போனை அணைத்துவிட்டு சிரித்தாள்,பல நாள் கனவு இன்று பளித்த சந்தோசம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவன் முகத்திலும் வெட்க சிரிப்புதான் ராங்கி ரொம்ப ராங்களா பேசுறா,கண்ணாலம் முடியட்டும் அப்புறம் இருக்கு.

 

———————————————————————————————-

வேம்பு கோபமாகச் சீயானை திட்டி மெசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தாள்.

 

‘என்னடி என்ன ஆச்சு’ ஆரம்பமே இப்புடி தான் அனுப்பிவைத்தான் மொட்டையாக  மெசேஜ்.குழம்பி போன வேம்பு ‘என்ன மாமா என்ன ஆச்சு, ஒன்னுமில்லையே’.

 

‘நான் பார்த்தேனே’.

 

‘என்ன பார்த்தீங்க எப்போ பார்த்தீங்க’.

 

‘எப்புடிடி நடந்துச்சு பொண்டாட்டி’.

 

‘எரிச்சலின் உச்சத்துக்குச் சென்றவள் நல்லாத்தானே இருக்கீங்க இல்ல சரக்கு எதுவும் போட்டுருக்கீங்களா,என்னனு புரியுறமாதிரி பேசமாட்டீங்களா’.

 

‘அப்போ தெளிவா பேச சொல்லுற’.

 

‘தயவு செஞ்சு தூங்குங்க காலைல பேசிக்கலாம்,எனக்கு தலை வலி வந்துரும் போல’.

 

‘சரி சரி தெளிவா பேசுறேன்’ அந்தத் தெளிவில் அழுத்தம் கொடுத்தவன் உனக்கு எப்புடி அங்கன தழும்பு என்று குறிப்பிட்டு கேட்க.

 

டேய் பாண்டி உன்ன கொன்னுடுவேன் இனி மெசேஜ் போட்ட மவனே சங்கு தான்.

 

ஹாஹா …..என்று சிரிக்கும் பொம்மையைப் பார்சல் பண்ணியவன்.பின்பு ,அந்தரங்கமான கேள்வி கேட்டு அதற்குப் பதிலும் அவனே அனுப்பினான்.உறைந்து நின்றாள் வேம்பு கண்ணில் இருந்து குருதி தான் வடிந்தது.கடந்த காலத்தை மறக்க முடியாமல் அல்லாடினாள்.

இவருக்கு எப்புடி தெரியும்………..

error: Content is protected !!