sippayinmanaivi3

sabari-3d1a6ee7

சிப்பாயின் மனைவி

அத்தியாயம் 3 : போலேரம்மா

வகன பேரரசு கரும்நள்ளி ஆண்ட நகருடன் போரிட்டு பின்வாங்கியது. வகன நாட்டு பேரரசன் உக்ரகாரி , பெயருக்கு ஏற்றார் போல் உக்ர குணம். உக்ரகாரியின் பெரும் பாட்டன் கண்டாதோல், குடப்பா என்னும் சௌவலய பேரரசனை அவன் தம்பி கங்கப்பாயுடன் சேர்ந்து சௌவலய பேரரசை கைக்குள் கொண்டு வந்தான் கண்டாதோல். நாகர் நாட்டின் வட எல்லைகளான மங்கூர் மலை தொடர் மேற்கிலிருந்து நடுவிலும் , நடுவில் இருந்து கிழக்கு நோக்கி ஓடும் வடவூற்று ஆறு ஆகும். நாகர் நாட்டின் வட எல்லையை தென் எல்லையாக கொண்டு வடக்கே சோனா மலை தொடர் வரை விரிந்திருந்த சௌவலய பேரரசை குடப்பாவின் வீழ்ச்சிக்கு பிறகு கிழக்கு மேற்கு என்று நடுவிலொடும் தேவ நதியின் மூலம் இரண்டாக பிரித்து கிழக்கை கண்டாதோலும் மேற்க்கை கங்கப்பாவும் ஆண்டனர். கண்டாதோல் ஆட்சிக்கு பிறகு கிழக்கு சௌவலய பேரரசு வகன பேரரசாக மாறியது. சில ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஏற்பட்ட திரை வசூலிப்பு பிரச்சனையால் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருப்பதை நிறுத்திக்கொண்டனர். சமரசம் பேசி தேவ நதியின் மீதுள்ள பெரிய பாலம் ஆன ஐநுறுவர் பாலத்தின் இரு பக்கமும் சுங்கச்சாவடிகள் அமைத்து ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல ‘சுங்க இறை’ வசூலிக்க படும்.

மேற்கு பெருங்கடலை தாண்டியிருக்கும் யுவனர்களும், ரோமர்ககளும் மேற்கில் இருக்கும் தென்பகுதி நாகருடனும் வடபகுதி சௌவலையருடனும் வணிக தொடர்பில் இருந்தனர். நறுமண பொருட்களும், பருப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றை வாங்கியும். தங்கம், தந்தம், ரத்தினங்கள், பன்றி, ஒட்டகம், குதிரை, அரியவகை மிருகங்கள், பேரிட்சை மற்றும் வாசனை பொருட்கள் விற்றும் வந்தனர்.

கிழக்கு பெருங்கடலை தாண்டியிருக்கும் தருமர்களும் சின்னர்களும் கிழக்கில் நாகருடன் மட்டும் வணிகம் செய்தனர். சிறு தானியங்கள், அரிசி, நெல் மற்றும் தந்தங்களை வாங்கினார்கள். பட்டு, நெல், தங்கம் மற்றும் அடிமைகள் விற்றார்கள். கிழக்கு பொறுத்தவரை வணிகம் தவிர போர் செய்து ஆளுமை செலுத்துவதில் தான் கவனம் அதிகம்.

தெற்கில் பெருங்கடல். கடல் வழி என்பதால் நாகர்களை தாண்டிச் செல்ல முடியாது அதனால் கடல் வழி வரி வசூலிக்க படும். திசைகளற்ற ஒரு வணிகம் தான் பெண்கள். குறிப்பாக சௌவலய நாட்டு பெண்களுக்கும், தரும நாட்டு பெண்களுக்கும் அதிக விலை. சித்திரையை கடந்து சந்திர மாதங்களில் ஐந்தாவது மாதத்தில் வரும் அமாவாசையில் வகனர்களின் கடவுள்களில் ஒன்றான போலேரம்மா திருவிழா நடைபெறும். வீட்டில் இறை வழிபாட்டுக்கான இடத்தில் செம்மண்ணை குழைத்து செவ்வகமாக வரைந்து அதனுள் சிவப்பு நிறத்தில் நிரப்பிவிடவேண்டும், அதன் பின்னர் மஞ்சளையும் பச்சரிசியையும் இணைத்து குழைத்து அச்செவ்வகத்திற்குள் கோவில் வரைய வேண்டும் – ஒரு சதுரம் அதன் நான்கு முலையில் சிறு வட்டங்கள். அந்த கோவிலினுள் இரு கோடுகள் – அக்கோடுகள் வீட்டிலுள்ள பெண்களை குறிக்கும். அந்த கோவிலின் வெளியே இரு கோடுகள் , அக்கோடுகளுக்கு கை மற்றும் கால்கள் வரைய வேண்டும். அதன் பிறகு நூலினை சிறு துண்டுகளாக பிரித்து அந்த நான்கு கோடுகளின் மேல் பகுதியில் மஞ்சளை வைத்து ஒட்டிவிட வேண்டும். அதன் பிறகு இஷ்டப்பட்ட காய்கறிகளும், மாமிசத்தையும் வைத்து வழிபட வேண்டும்.

போலேரம்மா ஊர் தாய்மார்களையும் , குழந்தைகளையும் மற்றும் ஆண்களையும் எந்த பருவகால நோய் வராமல் காக்க வழிபடுவது. இத்திருவிழாவின் பொழுது ஊர் கோவில்களில் தேரோட்டம் , சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இறுதியாக முச்சந்தி கூத்து நடைபெறும் அக்கூத்தில் போலேரம்மா கதை தான் மூலம். ஐநுறுவர் பாலத்தின் கிழக்கு பக்கம் உக்ரகாரி முன்னிலையில் கூத்து நடைபெற்று கொண்டிருந்தது. உக்ரகாரியுடன் படைத்தளபதி குமாருடு மற்றும் சௌவலய நாட்டு வணிகர்களில் இரு பெரும் தலைவர்கள் அங்கிருந்தனர்.

‘அரசே, உங்கள் நாட்டில் வணிகம் நடத்த யாரும் முன்வரவில்லை, ஏன் ஐநுறுவர் இனத்தில் கூட தயாராக இல்லை’ என ஒரு தலைவர் சொன்னார். வணிகத்தில் பெரிதும் கோலோச்சிவந்தனர் ஐநுறுவர், இப்படி வணிகம் ஒரு சாராரிடம் இருப்பதில் சில வணிகர்கள் விரும்பவில்லை. அவர்களின் பொருட்டு இருக்கும் ஒரே வழி வகன நாட்டில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வது மட்டுமே.

‘உங்கள் நிமித்தமே பூம்புகாரில் போர் நடத்தினோம், நினைவில்லையோ?’ உக்ரகாரி யானை தந்தத்தால் ஆன குவலையில் தேறல் அருந்தி கொண்டே சொன்னான்.

‘அரசே, என் தாழ்மையான கருத்து ஒன்று ‘ மற்றோரு வணிகன் சொன்னான். கூத்தில் ஒரு கதை முடிந்து மற்றோரு கதை ஆரம்பமானது. யுவனர்களுக்கு ஒப்பாக நாடகங்களில் சிறந்தவர்கள் வகனர்கள்.

‘வணிகர்களின் கையில் நாடு, வேறு என்ன செய்ய முடியும். கூறுங்கள்’

‘இதற்க்கு முன் நாகரோடு இருந்த பல சிற்றரசர்கள் பிரிந்து வந்துவிட்டனர். இனி அவர்களுக்கு வரி பிரச்சனை இல்லை ஆனால் அதே சமயம் அவர்களுக்கு வரி வரப்போவதும் இல்லை. கடலோர நகரங்களும் , துறைகளுக்கு மட்டுமே பெரிய பொருள் கிடைக்கும் ஆனால் நடுவில் இருக்கும் நாடுகளின் கதி?’ வணிகர் சொல்லிவிட்டு பேரரசை உற்றுப்பார்த்தார்.

உக்ரகாரி புன்னகைத்தான், பனி ஆட்களை அழைத்தான். தரும நாட்டு பெண்ணொருத்தியை பரிசாக கொடுத்தான். சௌவலய பெண்ணொருத்தியுடன் உக்ரகாரி பல்லக்கில் ஏறினான். பல்லக்கு மதனபள்ளி கோட்டை நோக்கி சென்றது. சௌவலய நாட்டு பெண்ணை கோட்டை சேவகர்கள் அலங்கரித்தனர். உடலில் உடை இன்றி தங்க நகைகளில் நிரப்பப் பட்டாள். சின்னர்கள் நாட்டு வண்ண பறவைகளின் இறகுகளால் ஆன மகுடம், மணிக்கட்டு கவசம் மற்றும் இடையுடைகளில் அப்பெண் வேறொரு ஆளாய் இருந்தாள். தீ பந்தங்களின் ஒளியில் தங்கத்துடன் அவளும் ஒளிர்ந்தாள். கட்டிலின் மேல் சின்னர்களின் நேர்த்தியான பட்டு மெத்தையில் உடையின்று தன் பெருமுடலை கிடத்தினான். அந்த சௌவலய பெண்ணை மேலே அமரவைத்து, அவளின் இடையை அசைத்தான். சிறிது நேரம் கழித்து வேகம் கூடியது. வேகம் கூட கூட தங்கம் உரசி உரசி கீறல்கள் வியர்வையில் எறிந்தன. அணிகலன்கள் இடையில் அங்கங்கள் வேகமாக அசைவதை ரசித்து ரசித்து காதல் புரிந்தான். அப்பெண் இறுதிக்கட்டத்தில் எழுந்திரித்தாள், உக்ரகாரி கோவமாக அவளைப் பார்த்தான்.