SST — EPI 12

அத்தியாயம் 12

ஆகஸ்ட் மாதத்தில் இங்குள்ள சீனர்கள் ஹங்கரி கோஸ்ட் மந்த் என சொல்லி பல கட்டுத்திட்டங்களை அனுசரிப்பார்கள். இந்த மாதத்தில் தான் நரகத்தின் வாசல் திறந்துக் கிடப்பதாகவும், பேய்கள் உலா வருவதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்த மாதத்தில் எச்சில் துப்பக்கூடாது, புது வீட்டுக்குக் குடி புக கூடாது, ராத்திரியில் அதிகம் வெளியே தங்கக் கூடாது, துணிகளை ராத்திரியில் வெளியே காய வைக்கக்கூடாது என பல விஷயங்களை இவர்கள் கடைப்பிடிப்பார்கள்.

 

ஒரு வாரமாக எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தது குருவுக்கு. வேலைக்குப் போனான், வந்தான், ஜிம்முக்கும் போனான், வந்தான். ஆனால் ஒரு வித சலிப்புடன் தான் இதையெல்லாம் செய்தான். இன்றோ வேலை முடிந்து வந்தவன், சோபாவில் அப்படியே சாய்ந்துக் கொண்டான். வீட்டை விட்டு வெளியேறவேப் பிடிக்கவில்லை.

பேரமைதியாக இருந்தது அவன் வீடு. அவன் விரும்பி அனுபவிக்கும் தனிமை ஏனோ இப்போதெல்லாம் கழுத்தை நெறிப்பது போல இருந்தது. ‘ஐ எஞ்சாய் மை ஓவ்ன் கம்பேனி’ என மார் தட்டிக் கொள்பவன், பேச்சுத்துணைக்குத் தவியாய் தவித்தான்.

‘அம்மா சொல்லுற மாதிரி எனக்கு வயசாயிருச்சுப் போல!’

வீட்டுக்குள் நுழையும் போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ள மனைவியும், அப்பாவென பாய்ந்துக் கட்டிக் கொள்ள பிள்ளையும் வேண்டும் போல இருந்தது அவனுக்கு. மனைவி என நினைக்கும் போதே கண் முன்னால் வந்த அந்தப் பிம்பத்தை ஒதுக்கித் தள்ள முடியாமல் அதிலேயே ஆழ்ந்து விட்டான். அது கூட சொர்க்க சுகமாக இருந்தது குருவுக்கு.

அன்று மூவீ முடிந்ததும், விளக்குகள் பளீரென ஒளிர்ந்து அவனின் மோன நிலையைக் களைத்தன. அப்பொழுதும் அவனால் தன் கண் போகும் திசையைத் தடுக்க முடியவில்லை. தூக்க கலக்கத்தில் இருந்த தன் அக்காவைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் கணே. கண்ணைக் கசக்கிக் கொண்டே விழித்தவள், முறைக்கும் தன் தம்பியைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள். அவனோ தலையில் அடித்துக் கொண்டான்.

தூக்கக் கலக்கத்தில் அவ்வளவு அழகாக இருந்தாள் மிரு. பின் குத்தி அவள் அடக்கி வைத்திருக்கும் சுருள் முடி கலைந்து போய் முன் நெற்றியில் வந்து புரண்டது. எல்லோரும் எழுந்து நகர தொடங்கவும் இவன் அவளை ஊன்றிக் கவனிப்பது யாருக்கும் தெரியவில்லை. எழுந்து நின்றவள், மெல்லத் தடுமாறினாள். இவனுக்குக் கை பரபரத்தது அவளை விழுந்து விடாமல் பிடித்துத் தன் கைவளைவுக்குள் வைத்து அழைத்து செல்ல. அவள் தம்பியே அவளின் கையைப் பற்றிக் கொண்டான். அவன் கடிந்துக் கொண்டது கூட இவனுக்குக் கேட்டது.

“தூங்குமூஞ்சி! உனக்கு டிக்கேட் போட்டு பாப்கார்ன் குடுத்தாரு பாரு உன் பாஸ், அவரை வெளுக்கனும். சுத்த வேஸ்டுக்கா நீ”

“போடா கணே! தூக்கம் வந்தா நான் என்னடா பண்ணட்டும்? ஒரு பாட்டு இல்ல, ஒரு குத்து டான்ஸ் இல்ல, ஃபைட் இல்ல! எனக்குத் தூக்கம் வராம என்ன செய்யும்? நெக்ஸ்ட் டைம் பாஸ் கிட்ட சொல்லி நல்ல தமிழ் படத்துக்கு டிக்கேட் போட சொல்லனும்” என சிரித்தவாறே அவன் பின்னாள் நடந்தாள் மிரு.

“உன் மண்டையில வேணும்னா ரெண்டு போடுவாரு.” என பேசியபடியே போகும் இருவரையும் புன்னகையுடன் பார்த்திருந்தவன், லிடியாவின் குரலில் தன் நிலைப் பெற்றான்.

அதன் பிறகு லிடியாவை டின்னருக்கு அழைத்துப் போனவன், கன்னத்தில் முத்தமிட்டு அவளின் கார் பார்க்கிங் வரை வந்து வழி அனுப்பி வைத்தான். அவனுக்கு பெண் சிநேகிதிகள் அதிகம். இருந்தாலும் எல்லோரிடமும் அவன் நெருங்கிப் பழகி விடுவதில்லை. லிடியாவைப் போல வெகு சிலரை மட்டும் ப்ரேன்ட்ஸ் வித் பெனெபிட்ஸ் என்ற வட்டத்தில் வைத்திருந்தான். அவர்கள் யாருமே சாதாரண பெண்கள் இல்லை. பெரும்பான்மையானவர்கள் அவனை போல பிஸ்னஸ் நடத்துபவர்கள், இன்னும் சிலர் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். அவர்களின் அழகு மட்டும் இல்லை, புத்திசாலித்தனமும் குருவுக்குப் பிடிக்கும். அவனுக்கு ஈடாக எல்லா விஷயத்தையும் பேசக் கூடியவர்கள் அவர்கள். நாகரிகம் நாசுக்கு இதையெல்லாம் குத்தகைக்கு எடுத்தப் பெண்கள். (நிற்க: அட உட்கார்ந்து கூட நான் சொல்லறத கேட்கலாம்ங்க! குரு அல்ப்பா மேல் கேட்டகரியில வரவன். அவன் செயல்களை எந்த விதத்துலயும் நான் நியாயப் படுத்தப் போறது இல்ல. இது அவனோட லைப் ஸ்டைல். அவன் எந்த அளவுக்கு அவன் கேர்ள்ப்ரேண்ட்ஸ் கூட பழகனான், பழகல இதையெல்லாம் உங்க கற்பனைக்கே விடறேன். அவனப் பிடிச்சவங்க கிஸ் மட்டும் அடிச்சிருப்பான்னு நினைச்சிக்குங்க. பிடிக்காதவங்க மேட்டர் வரைக்கும் போயிருப்பான்னு நினைச்சுக்குங்க. அம்புட்டுத்தான்! கற்பு கட்டி பத்தியெல்லாம் இந்த கதைல பேச போறது இல்ல. அதனால யாரும் என்னைக் கோச்சிக்கக் கூடாது. மீ பாவம்!!!)

அல்ப்பா மேல் என அழைக்கப்படும் நாகரிகத்துக்கு ஏற்றப்படி குரு தன்னம்பிக்கையும், சோசியல் வட்டாரங்களில் சுலபமாக மிங்கிள் ஆகும் திறமையும் வாய்த்தவன். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாவது முடிப்பது, பயம் என்றால் என்ன எனக் கேட்பது, கொஞ்சம் கூட தயங்காமல் முன்னே இருந்து லீட் செய்வது போன்ற குணங்களாலே அப்பா இறந்தும் குடும்பத்தை தூக்கி நிறுத்த முடிந்தது அவனால். அதுவே இப்பொழுது தொழிலில் அவன் குவிக்கும் வெற்றியின் ரகசியமும் கூட.

கனவில் மிதந்து கொண்டிருந்தவனை போன் சத்தம் பூவுலகுக்கு இழுத்து வந்தது. அம்ஸ் 1 என ஒளிர்ந்தது போன் திரையில். அழைப்பை ஏற்றுக் கொண்டவன்,

“ஹெப்பி பேபி! எப்படி இருக்கீங்க?” என கேட்டான்.

“குரு! வீடீயோ கால் போடுடா! பார்க்கனும் உன்ன”

“சரி, அஞ்சு நிமிஷம் குடுங்க” என போனை கட் செய்தவன் பாத்ரூம் போய் முகத்தைக் கழுவி ப்ரெஷ்சாக வந்தான். களைப்பாக இருப்பதைப் பார்த்தால் அதற்கு ஒரு மூச்சு பாட்டு பாடுவார் ஆனந்தி.

“இதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சிக்குறேன் கல்யாணம் பண்ணுன்னு. களைச்சுப் போய் வந்து, நீயே சமைச்சு நீயே சாப்படனும்னு என்னடா தலை எழுத்து? இதுக்கா உன்னை ஆசை ஆசையா வளர்த்தேன்” என பாடித் தீர்ப்பார்.

இத்தனைக்கும் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஹரியை அனுப்பி வைப்பார் கோலாலம்பூருக்கு. அவனோடு ப்ரோஷன் செய்யப்பட்ட உணவு வகைகளும் வரும். குருவுக்குப் பிடித்த கிரீன் கறி, இன்னும் பல வகையான குழம்பு வகைகளை சமைத்து ப்ரோஷன் செய்து அனுப்பி வைப்பார். அம்மாவின் கை மணம் வேண்டும் என நாக்கு ஏங்கும் போது, அதை எடுத்து ஓவனில் சூடு காட்டி சொந்தமாக சப்பாத்தி செய்து சாப்பிட்டுக் கொள்வான் குரு. இரவில் சாதம் என்றாலே ஆகாது அவனுக்கு. ராத்திரியில் சாதம் சாப்பிட்டால் செறிக்காமல் தொப்பை வைக்கும் என்ற பயம் அவனுக்கு.

இவன் அழைப்பதற்காகவே காத்திருந்ததுப் போல முதல் ரிங்கிலேயே எடுத்தார் ஆனந்தி. திரையில் தெரிந்த மகன் முகத்தை வருடியது அவரின் பாசப் பார்வை.

“சாப்பிட்டியாடா குரு?”

“இன்னும் இல்லம்மா!”

“மணி ஆகுதுடா, அதெல்லாம் காலா காலத்துல சாப்பிட மாட்டியா? அதான் நான் சொல்லுறது உனக்குன்னு ஒருத்தி” என அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே,

“அதான் சரி சொல்லிட்டேனேம்மா! இன்னும் நீங்க வேலைல இறங்காம புலம்பிக்கிட்டு மட்டும் இருந்தா எப்படி?” என அவருக்கே ப்ளேட்டைத் திருப்பி விட்டான்.

அவரோ நான் உனக்கே அம்மாடா என நிரூபித்தார்.

“நீ சொல்லி நான் ஸ்டேப் எடுக்காம இருப்பேனா கண்ணா? பொண்ணு பார்த்தாச்சு! அதை சொல்லத்தான் போன் போட்டேன்” என ஆனந்தமாக சொன்னார்.

இங்கே இவனுக்குத்தான் ஆனந்தம் ஓடி போன மாதிரி பீல் ஆனது.

“அதுக்குள்ளயா?”

“யெஸ் மை டியர் சன்! உனக்குலாம் டைம் குடுத்தா நீ இழுத்தடிச்சுட்டேப் போவன்னு எனக்குத் தெரியாதா! அதான் சட்டுபுட்டுன்னு காரியத்துல இறங்கிட்டேன்” புன்னகைத்தார்.

“ஓ!”

“என்னடா ரியாக்‌ஷன் இது? வெறும் ஓ மட்டும் வருது? ஹரிக்கு பொண்ணு பார்த்து பிக்ஸ் பண்ணதும் அவன் என்னமா சந்தோஷப்பட்டான் தெரியுமா? என்னைத் தூக்கி ஒரு சுத்து சுத்திட்டான்”

‘ரொம்ப ஏங்கிப் போய் காஞ்சி கிடந்துருப்பான்! அதான் அத்தனை சந்தோஷம்!’ என தம்பிக்கு மனதிலே அர்ச்சனை நடத்தினான் குரு.

“போன்ல எப்படிமா தூக்கி சுத்தறது? அவன் ஒரு சுத்து தானே சுத்தினான், நான் வீட்டுக்கு வரப்போ உங்கள தூக்கி நாலு சுத்து சுத்தறேன்.”

“அத விடு! பொண்ணு பத்தி கேளுடா”

“கேட்கலைனா சொல்லாமலா இருக்கப் போறீங்க ஹேப்பி பேபி?”

“அதெப்படி சொல்லாம இருப்பேன்! கண்டிப்பா சொல்லுவேன்!” என்றவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.

“என்னம்மா?”

“மேனகா இருக்காளான்னு பார்த்தேன். அவ முன்னுக்கு பெரிய மருமக அருமை பெருமைலாம் சொன்னா அவளுக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கும்ல, அதான்”

“பில்ட் அப்லாம் பெருசா இருக்கு மை டியர் மம்மி!”

“ஆமாடா குரு! பொண்ணு ப்ரைவேட் ஹாஸ்பிட்டல்ல கைனியா இருக்கா. ரஷியால போய் படிச்சுட்டு வந்துருக்கா! தியாஸ் தெரியுமாடா குரு?”

“மிளகாய் தூளா?”

“ஆமா, ஆமா! தியாஸ் மசாலா கம்பேனி அவங்களதுதான். ரொம்ப பாரம்பரியமான குடும்பம். ஒத்தைப் பொண்ணு. அவ்ளோ அழகா இருக்காடா குரு”

“கிட்டப் போனா எனக்குத் தும்மல் வருமாம்மா?”

“ஒதைப்பேண்டா படவா! அவங்க அப்பா மசாலா கம்பேனி வச்சிருந்தா நீ பொண்ண கிண்டலடிப்பியா? என் மருமகடா அவ”

“அம்மா, நான் இன்னும் அவங்கள பார்க்கல, பேசல, பிடிச்சிருக்கான்னு சொல்லல! அதுக்குள்ள மருமகன்னு கொஞ்சறது எல்லாம் சரியில்ல!” கடுப்பாய் சொன்னான் குரு.

“அதெல்லாம் பிடிக்கும்! நீ கூட்டிட்டு சுத்தறவளுங்க மாதிரி அவளும் அழகா, மாடர்னா, அது என்ன வோர்ட் ஹாம்ம்ம்ம் இண்டிபெண்டெண்ட்டா தான் இருக்கா. பிடிக்காம எப்படி போகும்?”

அமைதியாக தன் தாயை முறைத்தான் குரு. உணவு கொடுத்து அனுப்புவது போல ஹரியை அனுப்பி இவனைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்துக் கொள்வார் ஆனந்தி. என்ன விஷயம் கேள்விப்பட்டாலும் கடிந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார். ஆனால் கரெக்டான சமயங்களில் அழகாய் வார்த்தைகளை சொருகி மகனை திக்குமுக்காட வைத்து விடுவார்.

“குரு கண்ணு!” மகன் கோபம் தெரிந்து தணிந்துப் போனார். அவன் பதில் பேசாமல் தனது கோபத்தைக் காட்டினான். மகன் முகம் சுணங்கினால் தாங்குவாறா ஆனந்தி!

“குருப்பா!” அந்த ஒரு வார்த்தை அவனின் வீக் பொய்ண்ட். அடிக்கடி யூஸ் செய்ய மாட்டார் ஆனந்தி. ஆனால் அப்படி கூப்பிடும் போது குரு அப்படியே இளகி கரைந்து விடுவான்.

“என்னம்மா!” மென்மையாக ஒலித்தது அவன் குரல்.

“போப்போ! நீ போய் சாப்பிட்டு படு! களைச்சு வந்திருக்கற புள்ளை கிட்ட நான் வேற கண்டதையும் பேசிக்கிட்டு இருக்கேன். மருமக மெடிக்கல் கான்பரேண்ஸ் போயிருக்கா! இன்னும் ஒரு மாசம் கழிச்சுத்தான் வருவாளாம். அப்போ நீங்க சந்திக்க நான் ஏற்பாடு செய்யறேன்”

சரி என்பதைப் போல தலையாட்டினான் குரு.

“பாய்மா”

“பாய்டா குரு”

அவன் காலை கட் செய்யும் முன்னே,

“குரு!” என அழைத்தார் ஆனந்தி.

“ஹ்ம்ம் சொல்லுங்க!”

“நீ பொண்ணு பேரையே கேக்கலியேப்பா” என கேட்டவரின் கண்கள் தன் மகனை ஊடுருவி உயிர் வரைப் பார்த்தது.

“ஓ! சொல்லுங்கம்மா பேர் என்ன?”

“சிந்தியா. அவங்க வீட்டுல தியான்னு செல்லமா கூப்புடுவாங்களாம். நீ சிந்தின்னு கூட செல்லமா கூப்படலாம்”

“பசிக்குதுமா!”

“சரி சரி போ. போய் சாப்பிடு!” என போனை வைத்தார் ஆனந்தி.

“சிந்தின்னு மட்டும் கூப்டா போதுமா இல்ல மூக்கையும் சிந்தி விடனுமா?” என சத்தமாகக் கத்தினான் குரு. அமைதியான வீட்டில் அவன் குரலே அவனுக்கு திரும்ப எதிரொலித்தது. தலையைப் பிடித்துக் கொண்டான் அவன்.

‘கல்யாணத்துக்கு நான் தான் சரின்னு சொன்னேன்! மிருது எனக்கு வேணாம்னு தான் சரின்னு சொன்னேன்! ஆனா இப்போ கல்யாணம், பொண்ணு, மொளகாப் பொடின்னா எரிச்சலா வருதே! வொய்? ஆல் பிகாஸ் ஆப் யூ மிருது’ மனதில் புலம்பினான்.

“என்னோட சிஸ்டம்ல இருந்து அவள வெளியாக்கனும்!” கம்ப்யூட்டர் கம்பேனி பாஸ் என்ன சொல்கிறார் என்றால் அவர் மனதில் நுழைந்திருக்கும் மிருவின் எண்ணங்களை வெளியேற்ற வேண்டும் என்றுதான்.

‘நான் பழகற ஹை சொசைட்டி பொண்ணுங்க மாதிரி அவ இல்ல. ஷீ இஸ் டிப்ரேண்ட். அதனால தான் என் மனசு அவ பின்னால போகுது. அவ கூட க்ளோசா பழகி பாத்தா எனக்கு அவள பிடிக்காம போக நிறைய சான்ஸ்சஸ் இருக்கு. கண்டிப்பா எனக்கும் அவளுக்கும் ஒத்து வராது. பழக பழக சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு தோண ஆரம்பிச்சிரும். சோ அவளோட பிடியில இருந்து வெளி வந்துருவேன். அப்புறம் தான் அம்மா, அவங்க பாத்த பொண்ணு, கல்யாணம் இது பத்தி எல்லாம் யோசிக்க முடியும்’ முடிவெடுத்தவன் மிருவை நோக்கி தன் அடுத்த அடியை எடுத்து வைக்க முடிவெடுத்தான்.

தனக்கு எதிராய் பின்னப்படும் வலையைப் பற்றி அறியாத மிரு, எப்பொழுதும் போல காலையில் அம்மா கலக்கிக் கொடுத்த டீயில் பிஸ்கட்டை முழுகடித்துக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு சிங்கில் பாத்திரங்களைக் கழுவிப் போட்டவள், அவசரமாக பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ரதி! போய்ட்டு வரேன். கேட்டைப் பூட்டிக்குங்க!”

“நைட் என்னடி சமைக்கட்டும் உனக்கு?”

“பகல்ல சமைக்கற சோறே போதும்மா! வேற ஒன்னும் செய்ய வேணாம். முடிஞ்சா ஒரு ரசம், ஒரு நெத்திலி சம்பால் போதும்மா! மிரு அப்படியே சப்புக் கொட்டி ரெண்டு ப்ளேட் சாப்புடுவா” நாக்கில் எச்சில் ஊற கிளம்புவதை மறந்துப் பேசிக் கொண்டிருந்தாள் மிரு.

“சரி, செஞ்சி வைக்கறேன். இப்போ கிளம்பு, மணியாச்சு!”

“பாய்மா”

எப்பொழுதும் போல வேலை ஆரம்பிக்கும் ஒன்பது மணிக்கு, ஐந்து நிமிடம் இருக்கும் போது அடித்துப் பிடித்து ஆபிசின் உள்ளே நுழைந்தாள் மிரு. லப்டாப்பை எடுத்து ஆன் செய்தவள், நெற்றியில் பூத்திருந்த வியர்வையை புறங்கையால் துடைத்தாள். சில்லென அடித்த ஏசி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது அவளை.

சிஸ்டம் ஆன் ஆனதும், ஈமேயிலையும் ஆபிஸ் மெசெஞ்சரையும் திறந்தாள் மிரு. அவள் திறக்கவே காத்திருந்தது போல மேசேஜ் வந்தது குருவிடம் இருந்து.

“மிரு, மை கேபின்!”

“குட் மார்னிங் பாஸ்”

“நவ்!!!”

‘அஞ்சு நிமிஷம் இப்போத்தான் காத்தாட உட்கார்ந்தேன்! அது பொறுக்கல!’ திட்டியப்படியே எழுந்துப் போனாள் மிரு.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவள்,

“மார்னிங் பாஸ்” என்றாள் அவளது அக்மார்க் அசட்டு சிரிப்புடன்.

“மார்னிங் மிரு”

“சொல்லுங்க பாஸ், எதுக்கு கூப்டீங்க?”

“ஐ நீட் யூ டெஸ்பெரெட்லி மிரு!”

“என்னாது!!!!!”

 

(தவிப்பான்)

error: Content is protected !!