தோழிமார் கதை

பகுதி – 7

 

குக்குக் குக்குக்” எனக் கிரீச்சிட்ட அலாரம் குருவியை சற்றே எரிச்சலுடன் ஏறிட்டாள் அர்ச்சனா. “அதுக்குள்ள விடிஞ்சிருச்சா? இல்ல இந்த டுபாக்கூர் குருவி தேவையில்லாம கத்துதா?”என சற்றே சந்தேகத்துடன் குருவியைப் பார்க்க, அது “மீ எஸ்கேப்” என்ற ரீதியில் அர்ச்சனாவின் அனல் பார்வையில் இருந்து தப்பித்து உள்ளே சென்றுவிட்டிருந்தது.

மாதா பிதா குரு தெய்வம்” மட்டுமே முக்கியம் என அர்ச்சனா, தன் பத்து நகங்களையும் இன்ச் விடாமல் மேய்ந்து முந்தைய இரவில் முடிவெடுத்திருந்தாள். நல்ல வேளை கால்விரல் நகங்களை கடித்து யோசிக்கலாமா என்ற அளவிற்குச் செல்லும் முன்னர், “மாதா பிதா” பழமொழி மனதில் பாடமாகியிருந்தது. உறக்கம் பிடிக்க சற்றே தாமதமும் ஆனது.

அடுத்த தினம் விழிக்கையில் மனம் தெளிவாகிப் போயிற்று. என்ன தான் காதல் வேண்டாம் என்று மறுக்கப்போகும் போதும், நன்றாக உடை உடுத்திக் கொண்டு போகக்கூடாதா என்ன? அதனால் இருப்பதிலேயே சற்றே புதிய சுடிதாரினை எடுத்து அணிந்து கொண்டாள். கல்லூரிப் பேருந்தில் வழக்கமான கூட்டம் இல்லை. பரிட்சை முடிவடைந்திருந்த படியால், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வெகு சிலரே இருந்தனர்.

அவளது நிறுத்ததில் தமையனுடன் நின்றிருந்த கெளசி, பேருந்து ஏறியதுமே, அர்ச்சனாவின் மனதை படித்தது போல் முதல் கேள்வியை அர்ச்சனாவின் உடையை நோக்கி எய்தாள்.

“என்னடீ அர்ச்சு, அரவிந்தை இம்பிரஸ் பண்ண, செம டிரஸ்ஸிங்கல வந்திருக்க….அவன் தான் ஏற்கனவே கவுந்துட்டானே”என சொல்லிக் கொண்டே அர்ச்சனாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்த கெளசியை, “நானு? கவுக்க போறேன்னு உங்கிட்ட சொன்னேன்?நீ பார்த்த” என பின்னாளின் (ஓரு கோடிப்பு…ஒரு கோடி..நீ பார்த்த!” என சிவகார்த்திகேயனால் பிரபலமாகப்போகும் படவசனம், அர்ச்சனாவின் வார்த்தைகளில் வெளிபட்டன.

“மொதல்ல மேடம் மரகதவள்ளி, உங்க மெகானிக்ஸை க்ளியர் பண்ணற வழிமுறையைப் பாருங்க” என கெளசிக்கு சொல்லடி கொடுத்தவள், ஜன்னல் வழியாக வெளி உலகின் அழகை ரசிக்கத் துவங்கினாள்.

“டிரஸ் நல்லா இருக்குன்னு தானேடீ சொன்னேன். அதுக்கும் ஏன் முறைக்கற…சொன்னாலும் தப்பு. சொல்லலை எதும் சொல்லைலைன்னு நாளைக்கு அழுது சொல்லி காமிப்ப…”என முனுமுனுத்த கெளசியை கோவத்துடன் முறைத்தாள் அர்ச்சனா.

“பேபி..ப்ளீச்….மீ பாவம்..முறைக்காத…பயத்தில வாய் கண்ட்ரோல் ரொம்ப கம்மியா இருக்கு…திட்டாம திரும்பிக்கோ…நான் புக்க மட்டும் தான் பார்ப்பேன், உன்னை பார்க்கவே மாட்டேன்…இது என் எங்கினியரிங் கிராஃபிக்ஸ் மேல சத்தியம்…”

“இன்னொரு வாட்டிசொல்லு….”

“வாய் ப்ரேக் டான்ஸ் கொஞ்சம் அதிகமா ஆடுது…அதனால…”

“முழுசா வேண்டாம்…சத்தியம் பார்ட் மட்டும் சொல்லு மாமி…”

“ஓ அதுவா…யு வாண்ட் தட் பீஸ்…ஹேவ் இட்… என்னோட எஞ்சினியரிங் கிராஃபிக்ஸ் புக்மேல சத்தியம். ஒ.கேவா?”

“மெகானிக்ஸ்…மெகானிக்ஸ்….இன்னைக்கு அதுதான் உன் எக்ஸாம். எஞ்சினியரிங் கிராஃபிக்ஸ்ல நீ போன தடவையே கோலம் போட்டு பாஸ்பண்ணிட்ட…”

“ஓ…ஆமா ஆமா…மை பிட்டி..ப்ளீஸ் ப்ரிட்டி….என்னை டிஸ்டர்ப் பண்ணி குழப்பாத. ஆஸ்ரெடி பஸ் ஸ்டாண்ட் கொண்டு விடரேன் வான்னு என் ஆருயிர் அண்ணன் அரை மணி நேரம் பிரண்ட் வியூ’ டாப் வியூ’ என்னை கொன்னுட்டான். ரெண்டு நட்டு கழண்டு கீழ விழுந்துருச்சு…ஒரு நட்டுல கொஞ்சமா ஊசலாடிட்டு இருக்கேன்….அதை நான் எக்ஸாம் வரைக்கும் காப்பத்தனும். இப்போ நான் படிக்கட்டா?”என அப்பாவியாக வினவிய கெளசியைக் கண்டு மெல்ல புன்னகைத்தாள் அர்ச்சனா. அவ்வளவு நேரம் இருந்த இறுகிய சூழல் சற்றே மாறியிருந்தது.

ஜன்னல் வழியாக கண்களை செலுத்தியவள், மனதில் அரவிந்த் எந்த விதமாக பேசினால் எப்படி பதில் சொல்லலாம் என ஓட்டிப் பார்த்துக் கொண்டாள்.

“நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க. ஐ லவ் யூ அர்ச்சனா”

“நோ நோ..எனக்கு இந்த லவ்வெல்லாம் பிடிக்காது. எனக்கு என ஃபேமிலி தான் முக்கியம். குட்பை அரவிந்த்”என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல், வேகமாக நடந்து அவ்விடத்தை விட்டு சென்றுவிட வேண்டும். “ஒரு தென்றல் புயலாகி வருதே” என பின்புல இசை வாத்தியங்கள் முழங்க….”என அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்க, “இந்த இடத்துக்கு இந்த பிஜிம் போடக்கூடாது அர்ச்சு”என அசரீரி போல் கெளசியின் குரல் பாடலைப் பாதியில் நிறுத்தியது

“என்ன?”

“தென்றல் புயலாகி தானே யோசிச்ச…”

“ஆமா…உனக்கு எப்படி தெரியும்? சத்தமா பாடிட்டேனா?”

“இல்ல, காலையில என் பஸ்ஸ்டாப் ரேடியோல அந்த பாட்டு பாடிட்டு இருந்துச்சு…அதைக் கேட்டதில இருந்து அந்த ஒரே லைன் திரும்ப திரும்ப மண்டைக்குள்ள மணியடிக்குது. அதுலையும் அந்த “ஏஏஏஏஏஏ” நிக்காம போயிட்ட இருக்கு….உனக்கும் அதே இஃபெக்ட் இருக்குல…பட் இந்த சாங் என் சிட்யூவேஷன் சாங்… நீ வேற பிஜிம் தேடு.” என மொழிந்த கெளசி, அர்ச்சனாவின் முறைப்பைக் கண்டு கண்களை திரும்ப புத்தகத்தில் பதித்தாள்.

ஆனால் கெளசி சொன்னது போல், திரும்ப திரும்ப அதே ஏஏஏவே காதுகளில் ரீங்காரமிட, அர்ச்சனா தலையை உலுக்கிக் கொண்டு, வேடிக்கையில் மட்டும் கவனம் செலுத்தினாள்.

பேருந்து பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிவிட்டு, சரியாக 8.50ற்கு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றது.

பேருந்து நின்ற இடத்தின் அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் தயாராக இலக்கியாவும் திலீபாவும் அமர்ந்திருந்தனர். திலீபா தனது புதிய 1100 நோக்கியா கைப்பேசில் படுபயங்கரமாக தட்டிக் கொண்டிருந்தாள்.இலக்கியா, கெளசிக்கு பாடம் சொல்லித் தர ஏதுவாக, முந்தினம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்த முந்தைய வினாத்தாள்களில் கண்களை மேயவிட்டிருந்தாள்.

“ஹாய்..” என்று மொழிந்தபடிக்கு கெளசி, சிமெண்ட் பென்ச்சின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். மெதுவாக நடந்து இவர்களை அடைந்த அர்ச்சனாவின் முகத்தில் முந்தினத்தின் குழப்பங்கள் இன்னமும் மீதமிருந்தன. அதைவிடவும், “என்ன செம மினுக்கலா இருக்கு…. விட்டா இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்குவீங்க போலையே..”என கண்களை சிமிட்டிக் கேட்ட திலீபாவை முறைத்துக் கொண்டே நடந்து வந்தாள் அர்ச்சனா. அதே சமயம்,ன் காஜலிட்ட கண்களை உருட்டி, நாலாபுறமும் வீசவும், அரவிந்த் எங்கேனும் நிற்கிறானா என தேடுவதையும் மறக்கவில்லை.

“அர்ச்சு…அரவிந்த் சாப்பிடப் போயிருப்பான்னு நினைக்கறேன்….நாங்க மெஸ்ல இருந்து வந்தப்போ தான் கை கழுவிட்டு உள்ள போனான்” என்று இப்போதும் கைப்பேசியில் இருந்து கண்களை எடுக்காமலேயே பதிலுரைத்தாள் திலீபா.

“நான் அரவிந்தை தேடறேன்னு உங்கிட்ட சொன்னேனா?” என்று சம்மந்தமே இல்லாமல் அர்ச்சனா கோபப்பட, திலீபா ‘ அம்மாடி கொஞ்சம் அந்தப்பக்கம் போய் கோவப்பட்டுக்கோ. வந்தது அவனுக்காகவாம், பட் தேடறது அவனை இல்லையாம்..என்னா ஒரு பித்தலாட்டம்” என மனதில் நினைத்ததை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுதகுதிக் கொண்டு தோள்களை மட்டும் குலுக்கிக்கினாள். இதற்குக்குள் இலக்கியா, கெளசியை இழுத்துக் கொண்டு அருகில் நிழலாக இருந்த மரத்தின் அடியில் சென்று, புத்தகங்களை கடை பரப்பி உட்கார்ந்து, எஞ்சினியரிங் மெகானிக்ஸ் புத்தகத்தை பிரித்து சொல்லிக் கொடுக்கத் துவங்கினாள்.

“மொதல்ல மொமெண்ட் ஆஃப் இன்னர்ஷியா பார்கலாம்..இதுல இருந்து கண்டிப்பா ஒரு 16 மார்க் வரும்” என்று கெளசிக்கு விளக்கத் துவங்கியிருந்தாள் இலக்கியா. “ஒ, மொமெண்ட்…ஐ நோ…ஐ ரிம்மென்பர்… கிவ் மீ எ மெமெண்ட்” என படபடவென பக்கங்களை திருப்பிய கெளசி, “ஒரு தென்றல் புயலாகி வருதே ஏ ஏ ஏ”என பாடிக்கொன்டே பக்கங்களை வேகவேகமாக திருப்பி, ஏ ஏ ஏ போட, கெளசியின் மண்டையில் நங்கென கொட்டினாள் இலக்கியா.

“லூசுத்தாமா பேசி, டைமை வேஸ்ட் பண்ண, கொட்டியே மண்ணுக்குள்ள தள்ளிடுவேன். ஒழுங்கா கவனி” என உரைத்த இலக்கியாவிற்கு ஏதுவாக தலையை அசைத்தாள் கெளசி. “காலையில அந்த பாட்டுகேட்டேன். எனக்காகவே ஃப்.எம்ல போட்டமாதிரி இருந்துச்சு….அதான் ஒரு ஃப்லோல….”என முனுமுனுத்த கெளசி அதற்கு மேல் பேசவில்லை. அரைமணிக்கும் மேல் அந்த இடம் மெளனமாக இருந்தது. திலீபா கைப்பேசியில் மூழ்கியிருந்தாள். அர்ச்சனா குளுமையான சூழ் நிலையை உள்வாங்கியபடிக்கு அரவிந்த் வருகிறானா என பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.

மனதில் இப்போது பல்வேறு பதில்கள் ஓடிக் கொண்டிருந்தன.

“ஐய்யோ லவ்வா…அப்படியெல்லா எனக்கு உன்மேல எந்த எண்ணமும் இல்லை அரவிந்த….வி வில் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்…”

“உன்னைப் பத்தி எனக்கு எந்த எண்ணமுமே இல்லாதப்போ எப்படி லவ் வரும். சாரி, எனக்கு இஷ்டமில்லை.”

“இப்படியெல்லாம் நீ பேசினா கண்டிப்பா க்ளாஸ் டியூட்டர்கிட்ட சொல்லி குடுத்துருவேன்..ஜாக்கிரதை” என பல்வேறு பதில்கள் எழுந்தாலும் எல்லாவற்றிற்கும் “ஓரு தென்றல் புயலாகி வருதே”வே பிஜிஎம்யில்  மனதில் ஓடி உசிரை வாங்கியது.

சற்று நேரத்திற்கெல்லாம் கல்லூரி மெஸ்ஸின் பக்கம் இருந்து அரவிந்த் நடந்து வருவது தெரிந்தது. அரவிந்தைக் கண்ட அர்ச்சனாவிடம் சின்ன பரபரப்பு வந்து தொற்றிக் கொண்டது. தான் நினைத்தபடிக்கு காதல் சொல்ல வந்திருப்பானா அல்லது வெறுமனே வேறு ஏதேணும் பேசப் போகிறானா என்ற எதிர்பார்ப்பில் இதயம் பன்மடன்கு வேகத்துடன் அடித்துக் கொண்டது.

“ஹாய் அர்ச்சனா..” என்ற படிக்கு அருகில் வந்த அரவிந்த தோழிகள் நால்வருமே இருந்ததைக் கண்டு கொஞ்சம் கலக்கமுற்றான். அவனது கண்கள் இலக்கியாவையும் திலீபாவையும் சற்றே ஆராய்ச்சியுடன் நோக்க, அர்ச்சனா தனக்குத் துணையாக தன் தோழிகளையும் தருவித்திருக்கிறாளோ என்ற எண்ணம் கொண்டான்.

அரவிந்தின் முகபாவனையில் இருந்து, அவன் மற்ற மூவரையும் எதிர்பார்க்கவில்லை. அர்ச்சனாவிடம் தனியே பேசும் எண்ணம் கொண்டே வந்துள்ளான் என்பதை இலக்கியா நொடிப்பொழுதில் கணித்தாள்.

“ஹாய் அரவிந்த்….நாளைக்கு கெளசல்யாவுக்கு இ.எம் பேப்பர் அரியர் இருக்கு….அதனால தான் நாங்க வந்தோம்…. லைப்ரரி வரைக்கும் போகணும்…. நீங்க பேசிட்டு இருங்க…நாங்க வந்திடறோம்….” என்று கெளசியை இழுத்துக் கொண்டு நூலகம் நோக்கிச் செல்ல எத்தனித்தாள். திலீபா வருகிறாளா என இலக்கியா அழைக்கவில்லை. அவளாகவே ஏதேணும் காரம் சொல்லிக் கொண்டு வந்துவிடுவாள் எனத் தெரிந்து மெல்ல நடக்கத் துவங்க,

“இரு இலக்கியா…நானும் வர்றேன்…முகில் கேண்டீன்ல வெயிட் பண்ணறதா மெசேஜ் பண்ணியிருக்கான்” என்று கைப்பேசியை வேகமாக தட்டியபடிக்கே மெழிந்த திலீபா, அரவிந்தையும், அர்ச்சனாவையும் ஒரு தடவை ஆழமாக பார்த்து சிரித்து விட்டு சட்டென கிளம்பிவிட்டாள்.

என்ன சிரிப்பு..நக்கலாஎன அர்ச்சனாவும், ‘ இந்த பொண்ணு ஏன் சிரிக்கறாஎன அரவிந்தும் நினைத்தனர்.

அரவிந்த சிமெண்ட் பென்ச்சில் அர்ச்சனாவிடம் இருந்து ஒரு அடி இடைவெளிவிட்டு அமர்ந்தான். அர்ச்சனாவின் தோழிகளைப் பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு எழுந்தது. “இலக்கியா ரொம்ப ஸ்மார்ட் இல்ல…. ஃபேஸ் ரியாக்ஷன் வச்சே, அடுத்தவங்க என்ன நினைக்கறாங்கன்னு ஓரளவு கெஸ் பண்ணிடறா” என்று பொதுப்படையாக அர்ச்சனாவிடம் மொழிந்தான்.

அரவிந்துடன் சட்டென்று தனித்து விடப்பட்ட அர்ச்சனாவிற்கு பேச்சு எழவில்லை. “ஐய்யோ படபடப்பா வருதே…மயக்கம் கீது போட்டு தொப்புனு விழுந்துட்டேன்னா..”என எண்ணமும், அதனுடன் “வருதே ஏஏஏஏ”வும் சேர்ந்து உடன் ஒலித்தது.

சே, இந்த பாட்டு வேற நேரங்கெட்ட நேரத்தில…”என எண்ணியவள், அரவிந்த் என்ன சொன்னான் என்பதை கவனிக்கவே இல்லை. “ஏதோ இலக்கியா என்றான். அந்த மட்டிலும் புரிந்தது. சரி, அதுக்கு தலையை ஆட்டி வைப்போம் என மையமாக தலையசைத்தாள்.

“நிஜம்மாவே.இலக்கியா இஸ் குட்”என மொழிந்தவனை கண்டு லேசாக எட்டிப் பார்த்தது. “எங்கிட்ட தான் பேச வந்த..அப்பறம் என்ன இலக்கியான்னு இலக்கியான்னு பொங்கிட்டு…விஷயத்துக்கு வா…எவ்வளோ சிட்யுவேஷன் ப்ரிபேர் பண்ணி வச்சுரிக்கேன்….” என மனதிற்குள் நினைத்தவள், தவறாது, “இலக்கியா போல் ஸ்மார்ட்டாக பேசினால் அரவிந்திற்குப் பிடிக்கும் போலும்” என ஒரு ஓரமாக குறித்துக் கொண்டாள்.இருவருமே சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

“அர்ச்சனா…உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…உனக்கும் ஓரளவுக்கு என்ன விஷயம்னு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்..” என்று தரையில் விழுந்திருந்த குல்மொஷர் மலர் கொத்து ஒன்றை எடுத்து விரல்களில் சுற்றியபடிக்குப் பேசினான்.

பூ லாம் சுத்தறானே…ரொம்ப லெந்தியா போகுமோ…சரி, அவனும் நைட்லாம் கண்முளிச்சு ப்ரிபேர் பண்ணியிருப்பான் தானே…பாவம் சொல்லட்டும்…சொல்லட்டும்” – மைண்ட் வாய்ஸ் தான். வெளியே சொல்லவில்லை.

அர்ச்சனா பதிலேதும் சொல்லாமல், கால்களுக்குக் கீழிருந்த புற்களில் கண்களைப் புதைத்து அமர்ந்திருந்தாள்.

அதுவந்து…என்ன விஷயம்னா..”

“சொல்லித் தொலையேண்டா…” என அவன்  காதுகளில் கேட்கா வண்ணம் முனுமுனுத்தாள்.

“எனக்கு எங்க இருந்து ஆரம்பிக்க, நீ எப்படி எடுத்துக்கவன்னு ஒரு ஐடியாவும் இல்ல. “என்றவன் சற்றே நிறுத்தி, “நீ உங்க வீட்டில என்ன சொல்லிட்டு வந்த காலேஜ்க்கு”என சற்று சம்பந்தமில்லாத கேள்வியை வினவினான்.

“ரொம்ப முக்கியம்”என மனம் நினைத்தாலும், சரி கேட்கிறானே என்ற எண்ணத்தில், “கெளசி எக்ஸாமுக்கு சொல்லித் தரணும்னு சொல்லியிருக்கேன்” என மொழிந்தாள். அர்ச்சனாவின் சிறிய பொறுமை, “இதோ இப்போதே எல்லை மீறிவிடுவேன்..வார்த்தைகள் தடித்துவிடும்”என எச்சரிக்கை செய்தது.

அரவிந்தோ விடுவதாக இல்லை. “சரி..சரி..குட்”என மொழிந்தவன், அடுத்து சொன்ன செய்தி கேட்டு அர்ச்சனாவிற்கு கண்கள் வேர்க்கவே துவங்கிவிட்டிருந்தன.

“அர்ச்சனா எனக்கு க்ளாஸ்ல அவ்வளவா எந்த பொண்ணும் ஃப்ரெண்ட் கிடையாது.” என சொல்லி அர்ச்சனாவின் முகம் பார்த்தான்.

“அதான் தெரியுமே…இப்படி மொக்க மொக்கையா பேசினா…யார் தான் பேசுவா…லவ் சொல்லறதை கூட எவ்வளோ நேரம் சுத்தி சுத்தி சொல்லிட்டு இருக்க பக்கி…பக்கி”

“எனக்கு கர்ல்ஸ் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. கர்ல்ஸ் பிடிக்கும்…ஐமீன். கர்ல்ஸ்ட பேச பிடிக்கும்….அதாவது, பிடிக்கும்னா, வழியவெல்லாம் மாட்டேன். சாரி ரொம்ப உளர்ரேன்…யோசிச்சு வச்சதெல்லாம் மறந்தே போச்சு….” என கையில் பிடித்திருந்த பூவை சட்டென தரையில் விட்டெரிந்தான்.

“பரவாயில்ல அரவிந்த். பதட்டப்படாம சொல்லு…ஐ வில் வெயிட்” என சமாதானமாக மொழிந்த அர்ச்சனாவை சற்றே நன்றியுடன் பார்த்தவன்,

“ஸரி, அர்ச்ச்னா…நான் யோசிச்சு வச்ச டயலாக்ஸ் ஒண்ணு கூட நியாபகம் இல்லை. பட் நோ ப்ராப்ளம்…நான் என்ன சொல்ல வந்த விஷயத்தை, சொல்லறதுக்கு முன்னாடி, உங்கிட்ட என் பேமிலி பத்தி கொஞ்சம் சொல்லணும்னு நினைக்கறேன்…வித் யுவர் பர்மிஷன்…”

அதுவேறயா!…அவங்களைப் பத்தி என்ன விஷயம்….எந்த விஷயத்தை எந்த ஆடர்ல சொல்லணும்னு ஒரு பேசிக்கே இல்லையே….நீ எல்லாம் எப்படி எஞ்சினியரிங்க….சரி, சரி..நீ மேனேஜ்மெண்ட் கோட்டா தான..அப்படித்தான் இருப்ப… என நினைத்தவற்றை விடுத்து வெறும் “ம்ம்ம்” மட்டும் மொழிந்தாள்.

“நீ என்னைப் பத்தி ஒரு முடிவெடுக்கறதுக்கு முன்னாடி, நான் என்னைப் பத்தி முடிஞ்சவரைக்கும் சொல்லறேன்….. இது அவசியமான்னு யோசிக்காத….அதுவுமில்லாம என்னைப் பத்தி முடிவெடுக்க உனக்கு ஈசியா இருக்கும்” என்றான்.

அர்ச்சனாவிற்கும் அரவிந்தைப் பற்றி எந்த வெளி விபரங்களும் தெரியாது. திருச்சி பக்கம் ஊர் என்பது வரை மட்டுமே அறிவாள். அதனால் அர்ச்சனா உண்மையிலேயே ஆர்வத்துடன் அரவிந்தின் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

அரவிந்த் தன்னைப் பற்றி சொல்லத் துவங்கினான். “எனக்கு சொந்த ஊர் எது தெரியுமா?” என்று எடுத்ததுமே அர்ச்சனாவிடம் கேள்விக்கனை விடுத்தான்.

“திருச்சி” என்றாள் அர்ச்சனா.

“இல்லை…புதுக்கோட்டை.கேள்விப்பட்டிருக்கியா?”

ஆமாம் என்று தலையசைத்தாள் அர்ச்சனா.

“என் அப்பாவும், அப்பாவோட அண்ணாவும் சேர்ந்து ஹார்ட்வேர் பிசினஸ் பண்ணறாங்க…. பெரியப்பாவுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. என் அப்பாவுக்கு, ஃப்ர்ஸ்ட் நான், அப்பறம் ஒரு தம்பி இருக்கான். அம்மா ஹவுஸ் வைஃப்.”

(பேசாம உன் வீட்டு ரேஷன் கார்ட் ஒரு காப்பி எடுத்து எனக்கு குடுத்திருக்கலாம். டிடெயில்ஸ் ஓ.கே…இது ரொம்ப டீட்டெயில்லாஆஆஆவால இருக்கு)

ஓ.” என்றாள் அர்ச்சனா.

இதுல என்ன ப்யூட்டின்னா, நாங்க எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்கோம். ஆனா தனித்தனி சமையல். (ஆமா தனித்தனி பாத்ரூம், தனித்தனி டவல்..தனித்தனி சோப்னு எல்லாம் சொல்லு….ரொம்ப முக்கியம்…) உங்க வீட்டில யாரெல்லாம் இருக்கா?” அரவிந்த்  வினவும் வரை அவன் பேசும் பேச்சுகள் அர்ச்சனாவினுள் சற்றே சிறுபிள்ளைத்தனமானவே தோன்றிக் கொண்டிருந்தன.

“நான், அம்மா, அப்பா அவ்ளோ தான்…”என்றாள் கருத்தாக.

“ஒரே பொண்ணா…. அண்ணா, தம்பி, தங்கச்சின்னு யாரும் இல்லையா?”

இல்லை என்று தலையசைத்தாள் அர்ச்சனா.

“ஓ.அப்போ பயங்கர செல்லம்னு சொல்லு…. அப்பா என்ன செய்யறார்”(இப்போ எங்க வீட்டு ரேஷன் கார்ட் ஒப்பிக்க சொல்லறான்…சரி…சொல்லுவோம்…)

“அப்பா ஒரு பிரைவேட் கம்பெனியில மேனேஜர். அம்மாவும் கோஆப்டெக்ஸ்ல சேல்ஸ் மேனேஜரா இருக்காங்க…”

“ஓ. பேரண்ட்ஸ் ரெண்டு பேருமே வர்க்கிங்கா…. நைஸ்..” என்றான்.

“உங்க வீட்டில லவ் மேரேஜ்லாம் ஒத்துக்குவாங்களா?” என்றாள் அர்ச்சனா ஆழம்பார்க்கும் பொருட்டு. (“ல”வார்த்தையை நானாச்சும் சொல்லறேன்…அதைக் கேட்டாச்சும் அதைப்பத்தி தான் பேச வந்திருக்கோம்னு நியாபகம் வரட்டும்) என வேண்டுமென்றே கேள்விகேட்டாள்.

“ம்ம்ம்… தெரியலை…. பெரியப்பா சொன்னா அப்பா கண்டிப்பா கேட்பாரு. பெரியப்பா கொஞ்சம் ஜாலி டைப் தான். அவ்வளவா எதிர்ப்பு எதுவும் வராதுன்னு நினைக்கறேன். உங்க வீட்டில எப்படி?” என்றான் அரவிந்த். (அப்பாடா, ஒருவழியா ரூட்டை பிடிச்சுட்டான்)

“தெரியலை….” என்று உண்மையாகக் கூறினாள் அர்ச்சனா. வேறு ஏதேணும் கேட்க வேண்டுமா என இருவருக்குமே தெரியவில்லை. அவனும் சொல்ல வந்த விஷயம் அவ்வளவு தான் என்னும் ரீதியில், அடுத்து என்ன பேச என அர்ச்சனாவின் வாயைப் பார்க்க, “சரி, நாமதான் எடுத்துக் குடுக்கணும் போல. செய்வோம்..அப்போ தான் நம்ம டயலாக்கை சீக்கரம் சொல்ல சான்ஸ் கிடைக்கும்) என மனதிற்குள் ஒத்திகை பார்த்தவள், “ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்ன அரவிந்த். அதைப் பத்தி பேச தான் வரச் சொன்ன, இப்போ ஏதேதோ பேசற…” என மெல்லமாக மொழிந்தாள் அர்ச்சனா.

எவ்வளாவு நேரம் தான், சாதுப்பெண் போலவே அமைதியாக, முக்கியமாக, “அடக்கமாக” சிரித்துக் கொண்டே அமர்ந்திருப்பது. வாய்வேறு, துருதுரு என துடித்துக் கொண்டிருந்தது.

இவன் சொல்லவந்ததை சொல்லித் தொலைத்தால் தேவலாம். என எண்ணியவள், அவன் முகம் பார்க்க,

“வந்து…நியாபகமெல்லாம் இருக்கு…தைரியம் தான் இல்ல… நீ என்ன நினைப்பியோன்னு….வந்து..”

“அதான் வந்து ஒரு மணி நேரமாச்சே… என்ன விஷயம்?” (சொல்லித் தொலையேண்டா மைதாமாவு…)

“அய்யோ ஒருமணி நேரமா ஆச்சு…அவ்வளோ நேரமாவா பேசிட்டு இருக்கேன்…”என்றான். (டேய் திரும்ப டிராக் மாறிப்போகாத….கம் டி த ரூட்…கம் டு த ரூட்….டயலாக்கை மறக்காத…”)

“சொல்லு அரவிந்த். என் ஃப்ரெண்ட்ஸ் வர டைம் ஆச்சு…”என எடுத்துக் கொடுத்தாள்.

“இதைப் பத்தி நீ உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட டிஸ்கஸ் பண்ணமாட்டியே?” (டேய் விட்டா கையில அடிச்சு சத்தியம் கேட்ப போல..ஏண்டா படுத்தற..மைதா)

“இல்ல அரவிந்த….”

“இவ்வளோ நேரம் என்ன பேசினீங்கன்னு கேட்கமாட்டாங்களா?”

“கேட்பாங்க…பட் நான் சமாளிச்சுக்குவேன்..” (நீ மொதல்ல ஐ லவ் யூ சொல்லுடா…நன என் பிஜிம்மோட “மாதா பிதா குரு டலாக் சொல்லணும்…உனக்கு வேணா படிச்சுட்டு வந்த ஸ்கிரிப்ட் மறந்து போலாம். ஆனா எனக்கு மறக்கலை…)

“இல்லை…அப்படியே கேட்டாலும்…வேற ஏதாவது சொல்லி சமாளிச்சிரு..”

“கண்டிப்பா கண்டிப்பாஆஆஆ….அவங்க அதைப்பத்தியெல்லாம் ரொம்ப கேட்கமாட்டாங்க…வெரி டீசண்ட்..நானா சொன்னா கேட்டுப்பாங்க….பட் துருவ மாட்டாங்க..”என அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என தெரிந்திருந்த போதும் கூசாமல் மொழிந்தாள். அதிலும் “டீசண்ட்” என்ற வார்த்தையை சொல்லும் போது அர்ச்சனாவிற்கு லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது. இலக்கியாவை வேண்டுமானால் ஏதோ ஒருவகையில் “டீசண்ட்”எனக்கொள்ளலாம். அதுவும் சமயங்களில் தான். மற்ற இரண்டும் கேட்கவே வேண்டாம். திலீபா குத்திக் காட்டியே கொண்டு விடுவாள். மற்றது, “என்ன? புரியலையே”என சொல்லிச் சொல்லியே விளக்காமாக பேச வைச்சுரும்” என அர்ச்சனாவின் எண்ணவோட்டம் அரவிந்திற்கு கேட்கவில்லை. அரவிந்த் அர்ச்சனாவின் பேச்கை நம்பியது போலத்தான் தெரிந்தது.

பற்றாகுறைக்கு தூரத்தில் தோழிகள் நூலகத்தில் இருந்து வெளிவருவது தெரிந்தது. “என்னை….என்னை….ஐ மீன்…எனக்கு” என சற்றே உதறலுடன் அவன் பேச, அடுத்து அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு அர்ச்சனாவின் முகம் சொல்லமுடியா வகையில் காட்சியளித்தது.

 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!