un vizhigalil veezhntha nodi 2

மறுநாள் காலை அக்னிநேத்ராவை பற்றிய தகவலுடன் வந்த ஷீலா. சார் அவங்க பேர் அக்னி நேத்ரா, சில வருஷங்களுக்கு முன்பு கேரளாவில ஆர்கானிக்ஃபாம் வைச்சி பிஸ்னஸ் பண்ணி இருக்காங்க, அப்புறம் மும்பையில கன்ஸ்டெக்ஷன், சில கம்பெனிகூட பார்னர்ஷிப்ல இருந்திருக்காங்க ஆனா இது எல்லாமே அவங்க அப்பா பாத்திட்டு இருந்திருக்காரு.

ஒரு வருஷத்துக்கு முன்னதா பெங்களூர் வந்திருக்காங்க. பைக் ரேஸ்ல ரொம்ப பேமஸானவங்க அக்னிநேத்ரா. தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்காங்க. இப்ப அவங்க “அக்னிரேஸ் பைக்சுனு” பைக்ஸ் எல்லாம் பிரடியுஸ் பண்ணுறாங்க. பெங்ளுர், ஐதராபாத், ஆந்திரா இங்க எல்லாம் பைக் ஷோரும் வைத்து ரேசுக்காக பைக்ஸ் பிரடியுஸ் பண்ணுறாங்க. இப்ப சில ஹார்டுவேர்ஸ் கம்பெனி கூட டீலிங் பேசிட்டு இருக்காங்க. அக்னிநேத்ராவுடைய பிஏ, பிரண்ட் அண்டு எல்லாத்திலும் கூட இருக்கவங்க கரண். என அவள் மொத்த வரலாற்றையும் ஒரே இரவில் அலசி கூறிவிட்டாள்.

அவள் கூறியதை தன் சுழல் நாற்காலியில் சுற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தவனின் சிந்தையை கலைக்கும் வண்ணமாய் ஒலித்தது அவனது ஆப்பில் போன்.

சொல்லுங்க அம்மா என துருவ் கேட்க.

என்னடா மும்பை எப்ப வர ஐடியா, இன்னைக்கு அனிதா பெங்களூர் வந்திருக்கா அவங்க பெரியப்பா பைய கல்யாணத்துக்கு வந்திருக்கா நாளைக்கு கல்யாணம் முடிஞ்சிடும் நீ வரும் பொழுது அவள அழைச்சிட்டுவா என கூற.

அம்மா யாழினியும் வந்திருக்காளா

இல்லடா யாழி என் கூட இருக்கா நீ அவகிட்ட பேசிக்க அப்பா என்னை கூப்பிடுறார் என வைத்துவிட்டார்.

ஷீலா நீங்க அக்னி கிட்ட டேட் அரேஞ் பண்ணணுங்க என அவன் கூறியதை கேட்டவள் வியந்து சார் டேட்டா என கேட்க.

எஸ் ஷீலா இமிடியட்லி என எழுந்து சென்றவனை வியந்துதான் பார்த்தாள்.அவனின் டைம்கு பலர் வரிசையில் மாத கணக்காக காத்திருக்க இவன் மற்றொருவரின் டைமை  கேட்டதும் அவள் வியப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

ஷீலா வாங்க போகலாம் என கூற, அவன் பின்னே ஓடினாள்.

வண்டி நேராக அக்னி ஷோரூமின் முன் நிற்க அதில் இருந்து இறங்கியவன் ரிசப்ஷனில் சென்று நேத்ராவ பாக்கனும் என கூற.

சார் அபாய்மென்ட் இருக்கா,

இல்லை என்றவன் நேராக லிப்ட்டில் சென்றுவிட்டான்.

சார்… சார்.. என்றபடி அவள் பின்னே ஓட. ஷீலா, அவரு உன் கிட்ட பேசினதே அதிகம் இதல உன் கேள்விக்கு எல்லா நிதானமா இருப்பாரா என்ன. என்று

நினைத்து சிரித்தாள்.

மேலே சென்றவன் அக்னிநேத்ரா என்னும் பெயர் பொறிக்கப்பட்ட கதவை திறக்க உள்ளிருந்து வந்த கருந்துளசி வாசம் அவனை அப்படியே நிற்க வைத்தது. கண்களை மூடி சுவாசித்தவன் இன்னும் எதுவும் மறக்கல என கேட்டபடி உள்ளே நுழைந்தான்.

அக்னியும் கரணும் அருகருகே அமர்ந்து புதிய பைக் மாடலை உருவாக்க. துருவ் கூறியதை கேட்டு நிமிர்தவள் அவன் எப்படி இங்கே என புரியாமல் விழிக்க.

ஓடி வந்த பணிபெண். சாரி மேம் கூப்பிட கூப்பிட சொல்லாம வந்திட்டாரு மேம் என பாவமாக சொல்ல. அவள் நிலையை பார்த்தவள் சரி நீ போ நான் பாத்துக்கிறேன் என்றவளின் முன்பிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

ஹலோ மேன் உங்களுக்கு….. என கரண் பேசும் முன் அக்னி தன் கையால் அவன் கையை பிடித்து கண்களால் அமைதியாகும்

படி சொல்ல. கரண் அமைதியாக  துருவை முரைத்தபடி இருந்தான்.

சொல்லுங்க சார் யார் நீங்க, என்ன வேண்டும் என அவள் கேட்க.

அவள் கூறிய யார் நீங்க என்ற வார்த்தை மனதில் ஓட, நான் யாருனு தெரியலனா  என்ன இங்க விட்டு இருக்க மாட்டிங்க அண்ட் அவனை அமைதியா இருனும் சொல்லி இருக்க மாட்டிங்க மிஸ்ஸஸ் என அவன் கூறும் முன்.

சாரி மிஸ் அக்னி, அக்னிநேத்ரா என உரக்க கூறினாள்.

அவள் கூறியதில் சிரித்தபடி  தலையை ஆட்டியவன். ஓகே மிஸ் நேத்ரா, நா இங்க உங்ககிட்ட பிஸ்னஸ் டீலிங் பேச தா வந்தேன் என புருவம் உயர்த்தி கூற.

சாரி சார் நாங்க யார் கூடவும் டீலிங் வைக்க விரும்பவில்லை. நீங்க போகலாம் என வாசலை நோக்கி கை நீட்ட.

நீங்க சில ஹார்டுவேர்ஸ் கிட்ட டீலிங் பேச இருக்கிங்கனு எனக்கு தெரியும். உங்க பைக்குக்கு தேவையான பார்ட்ஸ் நா மேனிஃபாக்சர் செய்து தரேன் நீங்க என்ன சொல்லுறிங்க என மீண்டும்  அவன் கேட்க.

சாரி சார் நீங்க வரும் பொழுது சொன்னதுதான். அடிபட்ட பாம்பு பழைச இன்னும் மறக்கல, நாங்க இப்ப கொஞ்சம் நல்லா வாழுறோம் நீங்க போகலாம் என அவள் அழுத்தமான குரலில் சிரித்தபடி கூற.

துருவிற்கு கரண் முன் அவளிடம் கெஞ்சவும் மனம் வராது, டேமில் மேல் உள்ள பிளவர்வாஷில் இருந்த கருந்துளசியை எடுத்து சாப்பிட்டபடி சென்றுவிட்டான்.

அவன் வெளியே சென்றதும் கண்களை மூடி அமர்ந்தவளுக்கு வேலையில் நாட்டம் செல்லாமல் இருக்க, கரண் நீ பாத்துக்க நா கிளம்புறேன் என வெளியே சென்றுவிட்டாள்.

தன் பெரியப்பா வீட்டிலிருந்து கோவிலுக்கு சென்ற அனிதா. தரிசனம் செய்துவிட்டு வெளியே வர, வானம் எங்கும் கருமேகம் சூழ்ந்து இடி இடிக்க, யாரும் அற்ற வீதியே அவளுக்கு காட்சியளித்தது.

டேக்சிக்காக நடந்து வந்தவளுக்கு முதுகு தண்டில் சுல் என்று வலி ஏற்பட முகத்தில் வியர்வை வழிய கையால் வயிற்றை பிடித்தபடி டாக்சிக்காக நடந்தவள் அதற்கு மேல் முடியாமல் தரையில் விழுந்துவிட்டாள்.

அவள் விழுந்ததில் பனிகுடம் உடைந்து வெளியேற வலி தாங்காமல் கத்தினாள்.

அவ்வழியே சென்ற கார் அவள் குரலை கேட்டு நின்று கண்ணாடி வழியே அவளை பார்க்க. அக்கா என்றபடி ஓடி வந்தாள் அக்னிநேத்ரா.

அக்கா அக்கா என அவள் கையை பிடிக்க. அனிதா வலி தாங்காமல் அவள் கையை அழுத்தி பிடித்தார். உடனே அனிதாவை தூக்கி பின் இருக்கையில் கிடத்தியவள் வேகமாக வண்டியை செலுத்தினாள்.

மருத்துவமனையில் அவளை உள்ளே அனுப்பிவிட்டு ரிசப்ஷனில் முகவரிகளை கொடுத்து பண கட்டிவிட்டு வந்தவள் யாருக்கு சொல்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் நடக்க. ஓடி வந்த நர்ஸ் அனிதா உடைய கேட்டேக்கர் நீங்களா என கேட்க,

ஆமா சொல்லங்க.

இந்த ஃபாம்ல அவங்க ஹஸ்பென்ட் சைன் பண்ணணும் கொஞ்சம் காம்லிகேட்டடா இருக்காங்க சீக்கிரம் வந்து சைன் பண்ண சொல்லுங்க என சொல்லி சென்றுவிட்டனர்.

அக்னி ஒன்றும் புரியாமல் பேப்பருடன் நிற்க, சட்டென நினைவுவந்தவளாய் வண்டிக்கு ஓடி அனிதாவின் பேக்கில் இருந்த போனில் துருவிற்கு அழைத்தாள்.

வண்டியில் சென்றுக்கொண்டிருந்தவன் சொல்லு அனி என கேட்க.

அக்காவுக்கு வலி வந்திடுச்சி நாங்க G.M ஹாஸ்பெட்டல்ல இருக்கோம் சீக்கிரம் வாங்க என அழைப்பை துன்டித்துவிட.

பதட்டமாக, ஹாஸ்பெட்டலை நோக்கி சென்றவன் அக்கா என்ற அழைப்பை கவனித்திருந்தால் யார் என்று அறிந்திருப்பான் .

பேப்பரை தலையில் வைத்தபடி அக்னி அமர்ந்திருக்க, ரிஷப்ஷனில் விசாரித்துவிட்டு மேலே ஓடி வந்தான்.

அங்கு  அக்னி அமர்ந்திருக்கவும் அவளை வியர்ந்து  பார்த்தபடி நடந்து அவள் முன்பு நின்றான்.

அவனை கண்டதும் கையில் இருந்த பேப்பரை நீட்ட, படித்தும் பாராமல் சூர்யவர்மா என கையொப்பம் இட்டு நர்சிடம் கொடுக்க அவர்கள் அனிதாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து சென்றனர்.

சிறிது நேரத்தில் அவன் அனைவருக்கும் விஷயத்தை சொல்லியவன், அனிதாவின் கத்தலில் ஏதும் புரியாமல் அமர்ந்துவிட்டான்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு அழுகுரலோடு குழந்தையை தூக்கிவந்த நர்ஸ் ஆண் குழந்தை என துருவனின் முன் நீட்ட குழந்தையை பார்த்தவனின் கண்களில் முதன்முதலில் அச்சத்தை பார்த்தாள் அக்னி.

உடனே குழந்தையை வாங்க அது

அவள்  முகத்தில் தன் பஞ்சு கைகள் கொண்டு உரசியது. அவள்  சிரித்தபடி நெற்றியில் முத்தமிட, துருவ்  சிவந்த பாதத்தில் முத்தமிட்டான். உடனே நர்ஸ் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்றுவிட.

துருவ் அக்னியை பார்த்து எப்படி அனிதா இங்க என கேட்க.

நா வரும் பொழுது ரோட்ல வலியில இருந்தாங்க, அதா பக்கத்தில இருக்க ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு வந்துட்டேன். சரி நா கிளம்புறேன் பாத்துக்கோங்க என அவள் நகர.

அவள் இடக்கரத்தை பிடித்தவன். ஸாரி டி பிளிஸ் எனக்கும் இதே மாதிரி குழந்தை வேணும் என அவள் கண்களை பார்த்து கேட்க. அதிர்ந்த அக்னி வலக்கரத்தால் அவன் கன்னத்தில்  பலார் என  அரைந்தவள். மற்றொருகையை அவன் பிடியில் இருந்து  உதரியவள் கோபத்துடன் வேகமாக  சென்றுவிட்டாள்.

துருவ் கேட்டதையும் அக்னி அரைந்ததையும் பார்த்து அப்படியே நின்றுவிட்டார் ஒருவர்.