UUU–EPI 12

UUU–EPI 12
அத்தியாயம் 12
பல பெண்கள் மாதவிடாயின் போது சாக்லேட் சாப்பிடுவதை வழக்கமாய் கொண்டிருக்கின்றனர். இந்த ஆவல் ஏன் ஏற்படுகிறது? மாதவிடாய் நேரத்து ஹார்மோன் மாற்றங்கள் பெண்களை ஸ்ட்ரெஸ் ஆகவும் களைப்பாகவும் வைத்திருக்கிறது. அதை எதிர் கொண்டு தங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவே, கம்ப்போர்ட் ஃபூட் எனப்படும் சாக்லேட்டை தேடுகிறார்கள்.
கேமரன் மலை ஸ்ட்ராபெரி விளைச்சலுக்கு பெயர் பெற்ற இடமாகும். அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை ஸ்ட்ராபெரி பயிரிட ஏதுவாக இருக்கும். அங்கே சுற்றிப் பார்க்க செல்பவர்கள், கண்டிப்பாக சின்ன பாக்கேட் ஸ்ட்ராபெரியாவது வாங்காமல் வரமாட்டார்கள்.
நாளை சீனி பாப்பாவின் கிண்டர்கார்டேனில் ராஜூஸ் ஹில் என அழைக்கப்படும் ஸ்ட்ராபெரி தோட்டத்துக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் நாள். இரண்டு நாட்களுக்கு முன் தான் நந்தனாவும் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்ச்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திருந்தாள். ஒரு மாதத்துக்கும் முன்னமே இந்த ட்ரீப் ப்ளான் செய்து பணமும் வாங்கி இருந்தது பள்ளி நிர்வாகம். அதோடு ஆசிரியரும் அங்கே என்ன செய்யலாம், என்ன பார்க்கலாம் என்ன சின்னப் பிள்ளைகளிடம் எடுத்து சொல்லி அவர்கள் மனதில் ஆசையை வளர்த்து விட்டிருந்தார். சின்னக்குழந்தை என்பதால் இஸ்டமிருந்தால் பெற்றவர்களில் யாராவது ஒருத்தர் கூட வரலாம் எனவும் அனுமதி அளித்திருந்தனர்.
நந்தனா வீட்டிற்கு வந்ததில் இருந்து, அவள் காது ஓட்டையாகி விடும் அளவுக்கு அந்த ட்ரிப்பைப் பற்றியே பேசினாள் குட்டி. நந்தானாவுக்கு அவளோடு செல்லவோ, அவளுக்கு ஈடு கொடுத்து அந்த தோட்டத்தில் ஸ்ட்ராபெரி பறித்து, அங்கே விற்கும் உணவு பண்டங்களை வாங்கி கொடுத்து இவளை கட்டி மேய்க்கவோ முடியும் என தோணவில்லை. உடம்பு ஓய்வுக்கு கெஞ்சியது.
வயிற்றை தடவிக் கொண்டே,
“செல்லம்மா! இந்த ட்ரீப்புக்கு போக வேண்டாம்டா குட்டி! பாப்பா வெளிய வந்ததும் நாம எல்லோரும் சேர்ந்து போகலாமாடா? இப்போ அம்மாவுக்கு ரொம்ப கஸ்டமா இருக்குடா! டாக்டர் ஊசி போட்டாங்க இல்ல, அந்த இடம் இன்னும் நல்லா போகலடா குட்டி” என மெல்ல ட்ரீப்பை கான்செல் பண்ணும் நோக்கத்துடன் பேசினாள் நந்தனா.
நம் கஸ்ட நஸ்டமெல்லாம் குழந்தைகளுக்கு எங்கே புரியும்! வளர்ந்த எருமை மாடு சைசில் உள்ள பிள்ளைகளுக்கே பெற்றவர்கள் கஸ்டம் புரியாத போது, ரோஷினி எனும் பிஞ்சு குழந்தையின் மனநிலையை நாம் என்ன சொல்ல முடியும்.
கண்களில் கண்ணீர் நிறைந்து போக,
“ஸ்டீபன் போறான், நிக்கி போறா, ஹேலென் போறா!!!சீனீ பாப்பா மட்டும் ஏன் வேணா? பாப்பா மேல உங்களுக்கு சாயாங்(அன்பு) இல்லையா? அங்க ஸ்டாபேரி ஸ்வீட்டா இருக்கும். ஐ மைசெல்ப் செடில இருந்து பிச்சுக்கலாம்னு டீச்சர் சொன்னாங்க. பாப்பா போனும்” என கை காலை உதறி தரையில் விழுந்து அழ ஆரம்பித்தாள் குட்டி.
“சொன்னா கேளுடாம்மா! நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா அம்மா கூட்டிப் போறேன்! காட் ப்ராமிஸ்”
“பொய்யீ சொல்லாதீங்க! பாப்பாவ பட்டர்பிளை பார்ம் கூட்டி போறேன் ப்ராமிஸ் பண்ணீங்க. கூட்டியே போல! நீங்க சீட்டிங்! நான் நம்ப மாட்டேன்” என இன்னும் கதறினாள் சின்னவள்.
குழந்தைகளிடம் ப்ராமிஸ் என ஒரு விஷயத்தை சொல்லி செய்யாமல் விட்டால், அவர்கள் மனதில் நாம் எதையும் நிறைவேற்றிக் கொடுக்க மாட்டோம் எனும் ஆழமான கருத்து விழுந்து விடும். அதை மறைய வைப்பது மிகவும் கடினம்.
சிம்ரன் கிரேப் காரில் இருந்து வீட்டின் உள் நுழையும் போதே சின்னவளின் அழுகுரல் வெளியே வரை கேட்டது. உள்ளே வந்தவளை பார்த்ததும், ஓடி வந்து காலை கட்டிக் கொண்டாள் ரோஷினி.
“சிம்மு ஆண்ட்டி! அம்மா பேட், குட்டி பாப்பா பேட்!” என தேம்பியபடி சொன்னவளை தூக்கிக் கொண்டாள் சிம்ரன்.
“என்னாச்சு! என் அழகு குட்டி ஏன் அழுது?” என கன்னத்தில் முத்தமிட்டாள் மங்கை.
“ஐயோ! அழுது அழுது என் ஸ்வீட் பாப்பா, சால்ட் பாப்பாவா மாறிடுச்சே! இனிமே எப்படி சீனீ பாப்பான்னு கூப்புடறது? பேர மாத்தி உப்பு பாப்பான்னு கூப்புடலாமா?” என கேட்டாள்.
“இல்ல, இல்ல! நான் சீனி பாப்பாத்தான். மாமா சொன்னாங்க!” என கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள்,
“இப்போ கிஸ் பண்ணுங்க சிம்மு ஆண்ட்டி! பாப்பா ஸ்வீட்டா இருப்பேன்” என சொன்னாள்.
சத்தமாய் சின்னவளின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள் சிம்ரன். அழுகை மறந்து போய் சிரிப்பு வந்தது சீனீ பாப்பாவுக்கு. பிறகே என்ன விஷயம் என நந்தனாவிடம் கேட்டாள் சிம்ரன். விஷயம் அறிந்ததும்,
“காலையில் மூனு ஹவர்தானே நந்து, நான் வேணா போய்ட்டு வரவா? ரொம்ப ஆசையா இருக்காளே இவ!” என மலாயில் பேசினாள் சிம்ரன்.
“ஆக்சுவலி, அவங்களே கூட பார்த்துப்பாங்க சிம்மு! ஆனா எனக்குத்தான் என் துணை இல்லாம அனுப்ப பயமா இருக்கு. அங்கயும் இங்கயும் நிக்காம ஓடுவா! மத்தப் பிள்ளைங்கள பார்த்துக்கற நேரத்துல இவள விட்டுட்டாங்கனா! அதான் எனக்கு பயம். இரு டீச்சர் கிட்ட கேட்டுப் பார்க்கறேன், உன்ன அலவ் பண்ணுவாங்களான்னு” என மலாயில் சொன்னவள், ரோஷினியின் டீச்சருக்கு மேசேஜ் செய்தாள்.
அதற்குள் தன் பேக்கில் இருந்து தெர்மல் கேரி பேக்கை(சூடு அல்லது ஜில்லென இருக்கும் உணவை இதில் பேக் செய்தால், உணவு சற்று நேரத்துக்கு அதே நிலையிலேயே இருக்கும்) வெளியே எடுத்தாள் சிம்ரன். அதைப் பிரித்து உள்ளிருந்த பாக்சை திறந்துப் பார்த்தவளின் முகம் சட்டென சிவந்தது. என்ன இருக்கிறது அதனுள்ளே என சீனீ பாப்பாவும் எட்டிப் பார்த்தாள்.
“ஐ!!!!! ஹார்ட் சாக்லேட்! எனக்கு, எனக்கு?” என கையை நீட்டிக் கேட்டாள் சின்னவள்.
புன்னகையுடன் சில சாக்லேட் துண்டுகளை ப்ளேட்டில் வைத்து குட்டியிடம் கொடுத்தாள் சிம்ரன். அந்த சாக்லேட் தான் ரிஷி தயாரித்திருந்த சாக்லேட் ஆப் தே வீக். டிஸ்ப்ளேவில் விற்பதற்கு வைத்திருக்கும் சாக்லேட்கள் குட்டி குட்டி சதுரமாக இருக்க, அவளுக்கு அவன் கொடுத்திருந்த சாக்லேட்கள் மட்டும் குட்டி இதய வடிவில் இருந்தது.
இந்த சாக்லேட்டின் ஸ்பெஷல் என்னவென்றால், அதன் உள்ளே ப்ரெஸ்ஸான சின்ன பழத்துண்டுகள் இருப்பதுதான். ஸ்ட்ராபெரி, ப்ளம், லைச்சி என விலை உயர்ந்த பழத்துண்டுகளையே பயன்படுத்தி இருந்தான் ரிஷி. சட்டென மெல்ட் ஆகிவிடும் இவ்வகையான சாக்லேட்டின் விலையும் மிக மிக அதிகம்தான். அதை வாங்குபவர்களுக்கு தெர்மல் கேரி பேக் ஒன்று இலவசம் என அறிவித்திருந்தான். விற்பனை எதிர்ப்பார்த்ததை விட பிய்த்துக் கொண்டு போனது.
ஒரு சாக்லேட்டை வாயில் போட்டவளுக்கு கடையில் நடந்த சம்பவம் மனக்கண் முன் வந்தது நின்றது. இன்றும் கிச்சனில் வேலையை முடித்து, டாய்லட்டையும் கழுவி விட்டு கவுண்ட்டர் வேலைக்கு வந்தாள் சிம்ரன். வருபவர்கள் எல்லாம் புதிய சாக்லேட்டையே வாங்கி செல்ல, இவளுக்கும் இன்னும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனும் ஆசை தொண்டை வரை வந்து நின்றது. ஏற்கனவே ரிஷி இவர்களுக்கு சாம்பிள் கொடுத்திருந்தான் சாப்பிட்டுப் பார்க்க. அந்த ருசியில் மயங்கிப் போயிருந்தாள் சிம்ரன்.
கஸ்டமர் யாரும் இல்லாத நேரம் வரை பொறுத்திருந்தாள் சிம்ரன். பின் சுற்றும் முற்றும் பார்த்தவள், அந்த ஸ்பெஷல் சாக்லேட் அடுக்கி வைத்திருக்கும் டிஸ்ப்லே ப்ரிட்ஜூக்கு சென்றாள். மெல்ல அதன் கதவைத் திறந்தவள், கையுறை அணிந்து சாக்லேட் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். அது வாயில் அப்படியே கரைய, அதன் உள்ளே இருந்த ஜில் ஜில் லைச்சியை மென்றவளுக்கு சொர்க்கத்துக்கே சென்று வந்த உணர்வு. யார் சொன்னது திருட்டு மாங்காய் தான் ருசி என்று!!! சிம்ரனை கேட்டாள் திருட்டு சாக்லேட்டும் ருசியென்பாள்.(யப்பா ராசாத்திகளா, வநிஷா சொன்னாங்க, இனிமே நாங்க திருடி தான் சாப்டுவோம்னு கொடிப் புடிச்சிராதீங்கப்பா! ரொம்ப தப்பு!!!!!!!!!இதுவும் டிஸ்க்ளைமர்தான்). ரசித்து ருசித்து உண்டவள், அடுத்த சாக்லேட்டை எடுத்து வாயில் போட, அவள் பின்னால் கணைக்கும் சத்தம் கேட்டது.
பதறிப் போய் திரும்பிப் பார்க்க, அங்க கையைக் கட்டிக் கொண்டு ரிஷி நின்றிருந்தான்.
“என்ன செய்யறீங்க சிம்ரன் மேடம்?”
முதலில் அவனைப் பார்த்து அதிர்ந்தாலும் சட்டென சமாளித்துக் கொண்டவள், நகசுத்தி வந்த நரியைப் போல இளித்து வைத்தாள். அவசரமாக வாயில் இருந்ததை விழுங்கியவள்,
“எல்லாம் அதது இடத்துல கரேக்டா இருக்கான்னு செக் பண்ணிட்டு இருக்கேன் நந்தா சார்!” என்றாள்.
“ஓஹோ! அப்போ நீங்க சாக்லேட்ட வாயில போடல?”
“சீச்சீ! இதெல்லாம் ஒரு சாக்லேட்டா சேகர்! இதப் போய் வாயில வேற போடுவாங்களா! என்னை பெல்ஜியன் சாக்லேட் சாப்ட கூப்டாங்க, இத்தாலி சாக்லேட் சாப்ட கூப்டாங்க, ஏன் ஸ்வீட்சர்லண்ட் சாக்லேட் சாப்ட கூடத்தான் கூப்டாங்க. அதெல்லாம் விட்டுட்டு என் கெரகம், இந்த ‘பைட் மீ’ சாக்லேட்ட சாப்பிடுவேனா?” என அளந்து விட்டாள் அவள்.
புன்னகையுடன் கை நீட்டி அவள் உதட்டைத் தொட்டுத் தடவியவன், தன் விரலை அவளிடம் காட்டினான்.
“வாட் இஸ் திஸ் சிம்ரன்? இந்த ஆட்டக்காரி, வெளியூர் சாக்லேட் மட்டும்தான் சாப்டுவீங்களோ?” என கேட்டவன் அவள் உதட்டில் படிந்திருந்த சாக்லேட்டை துடைத்த விரலை தன் வாயில் வைத்து சுவைத்தான்.
இவள் முகமெல்லாம் சிவந்துப் போய் ஆவென பார்க்க,
“இப்பத்தான் இந்த சாக்லேட்டுக்கே தனி ருசி வந்திருக்கு. வீட்டுக்குப் போகும் போது ஆபிஸ் ரூமுக்கு வந்துட்டு போ சிம்ரன்” என சொல்லி விட்டு அவசரமாக நடந்து விட்டான்.
“ச்சை! இப்படி கையும் களவுமா பிடிச்சுட்டானே! அது சரி, முன்ன பின்ன திருடி இருந்தா நேக்குப் போக்குத் தெரியும்!” என புலம்பியபடியே வேலையைப் பார்க்கப் போனாள் சிம்ரன்.
வீட்டுக்குக் கிளம்பும் முன், அவனைப் பார்க்க போனவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை ரிஷி. டேபிளில் இருந்த கேரி பேக்கை காட்டியவன்,
“எடுத்துக்கோ” என மட்டும் தான் சொன்னான்.
இவளும் அதை என்னவென்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு வெளியேற,
“கிரேப் கார் புக் பண்ணி இருக்கேன்! அஞ்சு நிமிஷத்துல வந்துடும்.” என தகவலாய் சொன்னான்.
நந்து ஹாஸ்பிட்டலில் இருந்து வந்ததில் இருந்து, வேலை முடித்து இவனே தான் சிம்ரனை அழைத்துப் போவான். அப்படியே தமக்கையையும் பார்த்து வருவான். கட்டிப்பிடி சம்பவம் நடந்ததில் இருந்து இன்றுதான் அவனாக வந்து பேசியிருக்கிறான். காரில் அழைத்து செல்லும் போது கூட மௌனம்தான். ஆனாலும் புன்னகை இருக்கும் உதட்டில். பகலில் நடந்த உதட்டு தடவலுக்குப் பிறகு அதுவும் மிஸ்ஸிங்.
அவனின் இறுக்கமான உடல் மொழியும், ஒட்டாத குரலும் ஏதோ செய்ய,
“என்ன பிரச்சனை நந்தா சார்?” என கேட்டாள் சிம்ரன்.
“நத்திங்”
“நெஜமா நத்திங்கா? இல்ல என் உதட்ட தொட்டதுல ஷாக் கீக் எதாச்சும் அடிச்சிருச்சா?”
நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் கண்களில் ஏக்கம் அப்பட்டமாய் வழிந்தது. சட்டென தன்னை நிலைப்படுத்தியவன் குறும்புடன்,
“ஷாக் அடிக்க நீ என்ன சோனாவா? உனக்கு இவ்ளோ சீன் வேணா!” என புன்னகைத்தான்.
“யாரப் பார்த்து சீன போடறேன்னு சொன்னீங்க? இந்த சிம்ரனையா? சிம்ரன தொட்டா ஷாக் மட்டும் அடிக்காது, புயல், மழைன்னு அண்ட சராசரமே ஸ்தம்பிச்சுப் போயிடும்! என்னைத் தொட்டும் உங்களுக்கு ஷாக் அடிக்கலனா, எனக்கான ஆளு நீங்க இல்ல நந்தா சார்! அவன் வருவான், எனக்கானவன் வருவான்! தகதகதகன்னு சத்தம் போட்டுக்கிட்டே அலைகளும் ஆர்ப்பரிக்க பூமியில் பூகம்பமாய் வருவான்!
வருவான்!!!!
தருவான்!!!!
உறைவான்!!!
வில்லன்!!!!
என் வில்லாதி வில்லன்!!!” என அனுபவித்து சொன்னாள் சிம்ரன்.
“அடச்சீ! கேஜீஎப் படம் பார்த்துட்டு வந்து வசனமா ஓட்டற! ஓடிப்போ, கார் வந்துடுச்சு” என சிரிப்புடன் சொன்னான் ரிஷி. அவள் அட்டகாசத்தில் இறுக்கம் தளர்ந்து உடம்பு ரிலேக்சாகி இருந்தது அவனுக்கு.
“கண்டுப்புடிச்சிட்டீங்களா? சரி கெளம்பறேன்!” என புன்னகையுடன் சொன்னவள், ‘தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா’ என பாடியபடியே போனாள்.
“உன்னைத் தொட்டதும் ஷாக் மட்டும் அடிக்கலடி! உள்ளுயிரே அப்படியே உருகி கரைஞ்சு போகுதடி என் சிம்ரன்” என முனகிக் கொண்டான்.
நந்தனாவுக்கு பதிலாக சிம்ரன் வருவதற்கு ஓகே என டீச்சர் சொல்லி விட, குட்டிக்கு ஒரே மகிழ்ச்சி! சிம்ரனை கட்டிக் கொண்டு எச்சில் முத்தமிட்டு கொண்டாடி விட்டாள். அந்நேரம் ரிஷி நந்தனாவின் நலம் அறிய போன் செய்தான். அவனிடம் விவரத்தை சொல்லி, நாளை சிம்ரன் லேட்டாக வேலைக்கு வருவாள் என அறிவித்தாள் தமக்கை. அதோடு அவன் விதவிதமான மாடுலேஷனில் கேட்ட உடம்பு எப்படி இருக்கு எனும் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தாள். குட்டியிடமும் பேசி விட்டு போனை வைத்தான் ரிஷி.
தன் இடத்தில், டீவாவிடம் சற்று நேரம் விளையாடி விட்டு குளிக்கப் போனான் ரிஷி. பால் மட்டும் அருந்தியவன் படுக்கையில் வந்து விழுந்தான். நாய்களுக்கு தனது எஜமானர்களின் மனநிலையை அறிந்துக் கொள்ள முடியுமாமே!! கவலையாக இருந்த ரிஷியின் அருகே வந்து படுத்துக் கொண்டது டீவா. அதை தடவிக் கொடுத்தவன்,
“எனக்கு சிம்ரன ரொம்பப் பிடிக்குது டீவா! இத்தனை நாள் அவ இல்லாம எப்படி வாழ்ந்தோம்னு தோணுது! பக்கத்துலயே அவள வச்சிக்கிட்டு என் ஆசையை, பாசத்த, காதல அடக்கிக்கிட்டு இருக்க முடியல டீவாம்மா! வாய் மட்டும் தான் போய்டுன்னு சொல்லுது, மனசு முழுக்க அவள விட்டுட்டு இருக்க முடியாதுன்னு அடம் பண்ணுது! நான் என்ன செய்ய!! நந்து பேபி பொறக்க வைக்கற வரை இருந்திட்டுப் போயிடறேன்னு சொல்லிட்டா அவளும்! ஹ்ம்ம்” பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான் அவன்.
“நெஜமா போய்டுவாளா? அவ முகத்தப் பார்க்காம, அவ ஓட்டுற ரீல கேட்காக, சிரிக்கற அழக பருகாம நான் எப்படி வாழப் போறேன்? நெனைக்கறப்பவே நெஞ்சை அடைக்கற மாதிரி இருக்கு டீவா” என சொன்னவனைப் பார்த்து சமாதானப் படுத்துவது போல மெல்ல குரைத்தது டீவா.
மெல்ல கட்டிலில் இருந்து எழுந்து நின்றவன், சுவற்றில் மாட்டி வைத்திருந்த படத்தின் அருகே போனான். அங்கே சிரிப்புடன் நின்றிருந்தனர் இரட்டையர்களும், ரவிபாரதியும்.
“என் கிட்ட இவ்ளோ பெரிய பொறுப்ப கொடுத்துட்டு போயிட்டீங்களே சீனியர்! காலமெல்லாம் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு நந்துவ தவிக்க விட்டுட்டுப் போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது! லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியேன்னு பாடி பாடி அவ மனச கரைச்சீங்களே! இப்போ துக்கத்துலேயே கரைஞ்சிட்டு இருக்காளே சீனியர்! எனக்கு அவளப் பார்க்கும் போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்குது சீனியர். அவ இப்படி இருக்கறப்போ என் சுகம்னு என்னால நினைக்க முடியலையே! என்னமோ தப்பு பண்ணற மாதிரி கில்ட்டியா ஃபீல் ஆகுதே சீனியர்! நான் என்ன செய்ய? சொல்லுங்க சீனியர்! நான் என்ன செய்ய?”
சற்று நேரம் ரவிபாரதியின் சிரித்த முகத்தையே விழி எடுக்காமல் பார்த்திருந்தான் ரிஷி.
“நான் பார்த்துப்பேன் சீனியர்! என் ஆயுசு இருக்கற வரைக்கும் என் நந்துவையும் அவ பெத்தப் புள்ளைங்களையும் என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன். நீங்க கவலைப்படாதீங்க சீனியர். உங்க ஆத்மா நாங்க கலங்கறத பாத்தா தவிச்சு துடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்! அதனால நான் கலங்க மாட்டேன்! என் மனசுல எந்த சலனத்தையும் புகுத்த மாட்டேன். மாட்டவே மாட்டேன் சீனியர்!!!!” என்றவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவன் கொடுத்த வாக்கு எல்லாம் மறுநாள் சிம்ரன் ஸ்ட்ராபெரி பார்மில் விழுந்து வாரி வரும் வரை தான் நிலைத்தது.
‘கீழே விழுந்து வாரினாள் கன்னி
கலங்கிப் போய் திட்டியவனை பார்த்து சொன்னாள்
போடா பன்னி!!!!!
(உருகுவான்…)