UUU–EPI 7

103977454_653445081909496_2472649225753995686_n

அத்தியாயம் 7

முத்தமிடுவதை விட சாக்லேட் உண்பது நமது மூளையின் செயல்பாட்டை நல்லபடி தூண்டி எண்டோர்பின் எனும் ஹார்மேனை வெளியாக்கும். இந்த ஹார்மோன் தான் நமது மனநிலையை சந்தோஷமாக வைத்திருக்கும் வல்லமை படைத்தது.

 

“அங்கயும் உழைச்சிட்டு வந்து இங்கயும் வேலை செய்யலைனா என்ன சிம்ரன்? அப்படியே வச்சிடு! நாளைக்கு காலையில நான் கழுவி வச்சிடறேன்”

இன்று சாக்லேட் ஆர்டர் குறைவாக இருந்ததால் பார்ட் டைம் வேலை செய்பவளான சிம்ரனை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டான் ரிஷி. இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தவள், வாஷிங் மிசினில் எல்லோருடைய துணிகளையும் துவைக்கப் போட்டு, இரண்டு பாத்ரூமையும் கழுவி விட்டாள். நந்தனாவுடனும் சின்னக் குட்டியுடனும் சேர்ந்து இரவு உணவையும் முடித்தாள்.

“இல்ல பரவாயில்ல நந்து! மூனு ப்ளேட், மூனு மக். இத கழுவி வைக்க எவ்வளோ நேரம் ஆகிடப்போகுது! எனக்கும் சேர்த்து சமைச்சிருக்கீங்க! இது கூட நான் செய்யலைனா எப்படி!” என சொல்லியவாறே தொடர்ந்து பாத்திரம் தேய்க்கும் வேலையை செய்தாள் சிம்ரன்.

டைனிங் டேபிளில் அமர்ந்து அவள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டே சீனி பாப்பா ஹோம்வொர்க் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தனா.

“ம்மா! கை வலிக்கி! சோ மச் இருக்கு! கென் யூ ரைட் ஃபோர் சீனி பாப்பா?” என சிணுங்கியபடியே கஸ்டப்பட்டு ஏ ஃபோர் அஸ்ட்ரோநோவ்ட் என எழுதிப் பழகி கொண்டிருந்தாள் சின்னவள். அதோடு புத்தகத்தில் இருந்த விண்வெளி வீரரின் படத்துக்கும் வர்ணம் தீட்ட சொல்லி இருந்தார்கள் பள்ளியில்.

“இவ்ளோ நேரம் என் போனை அமுக்கி அமுக்கி கேம் வெளையாடனப்போ கை வலிக்கல! இப்போ எழுத சொன்னா கை வலிக்கி, காலி வலிக்கின்னு காரணம் சொல்லற! உன் மாமன் என்னான்னா உன்னை கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சிட்டு, என் கிட்ட மட்டும் வந்து பிள்ளைக்கு கைட் பண்ண மாட்டற, சீரியஸ் தெரியாம இருக்கன்னு காதை தீய வைக்கிறான். ஒழுங்கா எழுதி முடி ரோஷினி”

“அம்மா வெரி பேட்! மாமா வெரி பேட்! டீச்சர் வெரி பேட்! பேபி வெரி பேட்” என வயிற்றில் இருந்த பிள்ளையைக்கூட விட்டு வைக்காமல் கண்ணீர் வழிய திட்டியபடியே எழுத முயன்றாள் சின்னவள். கண்ணீர் பட்டு எழுத்து நனைய, அதை துடைக்கிறேன் என இவள் தேய்த்து வைக்க, அவ்விடம் ஓட்டை விழுந்துப் போனது. ஓட்டையைப் பார்த்ததும் சட்டென டென்ஷன் ஆகிப் போனது நந்தனாவுக்கு.

“என்னடி பண்ணி வச்சிருக்க! எனக்கு வர வெறிக்கு…” என கத்த ஆரம்பித்தவள் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டாள் சிம்ரன்.

“நந்து, ரிலேக்ஸ்! ஏற்கனவே பீபீ ரேய்ஸ் ஆகிருக்குன்னு டாக்டர் டேக் இட் ஈசின்னு சொல்லிருக்காங்க! இந்த மாதிரி டைம்ல டென்ஷன் ஆகறது பேபிக்கும் நல்லது இல்லைன்னு கேள்விப்பட்டிருக்கேன்! குட்டிய நான் பார்த்துக்கறேன்! நீங்க ப்ரீதீங் எக்ஸர்சைஸ் செய்யுங்க! கமான் சீனி பாப்பா! நீங்களும் செய்யுங்க! மூச்ச உள்ள இழுங்க! ஓன், டூ, த்ரீ, ஃபோர், பைவ்! இப்ப வெளிய விடுங்க! தட்ஸ் குட்! ஓகே பைவ் மோர் செட்ஸ்! கமான்” என தாயையும் மகளையும் மூச்சுப் பயிற்சி செய்ய வைத்தவள், இருவருக்கும் பால் சூடு செய்து கொடுத்தாள்.

பால் குடித்து முடித்த சின்னவளுக்கு கண்ணீர் நின்று போக, மீண்டும் தனது பாடத்தை எழுத முனைந்தாள் அவள். நந்தனா பால் குடித்து முடிக்கும் வரை பொறுத்தவள், அவள் பின்னால் வந்து நின்று தோள்களையும் முதுகையும் ஒரு ரிதமாக பிடித்து விட ஆரம்பித்தாள் சிம்ரன்.

“உனக்கு மசாஜ்லாம் தெரியுமா?” என ரிலேக்சாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டே கேட்டாள் நந்தனா.

“சும்மா டைம் பாசுக்கு கத்துக்கிட்டேன் நந்து! என்னோட வருங்காலம்(கணவன்) எப்படியும் என்னோட சேட்டையால டென்ஷனாவே சுத்திட்டு இருப்பான்! என் டார்ச்சர்ல அவன் சீக்கிரமா மண்டையப் போட்டுட்டா அந்தப் பாவம் என்னல்ல சுத்தும்! அதான் டென்ஷன குடுக்கற நாமளே அதை குறைக்கலாமேன்னு டீஸ்ட்ரெஸ் மசாஜ் கத்துக்கிட்டேன்! அந்த வீணாப்போன விக்கிக்கு குடுத்து வைக்கல! வேற யாருக்கு இதெல்லாம் குடுத்து வைச்சிருக்கோ” என சிரிப்புடன் இவள் சொல்ல, கரேக்டாக அந்த நேரம் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தான் ரிஷி.  

கேட்டின் முன்னே நின்றுக் கொண்டு நந்தனாவுக்கு போன் செய்ய, சைலண்டில் இருக்கவும் அவள் போனை எடுக்காததால் தன்னுடைய சாவி கொண்டு அவனே உள்ளே வந்திருந்தான். டைனிங் ஹாலில் நுழையும் முன்னே சீனி பாப்பாவின் அழுகையும் நந்தனாவின் கத்தலும், சிம்ரனின் சமாதானமும் காதில் விழ புன்னகையுடனே அவர்களை நெருங்கினான்.

ரிஷியைப் பார்த்ததும் காரம் தின்ன காட்டெருமை போல இளித்து வைத்த சிம்ரன், தனது மசாஜ் வேலையில் கவனமாய் இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

“வாங்க சார்! கபேயை மூடிட்டீங்களா? டீ எதாவது கலக்கவா?” என கேட்டாள் நந்தனா. எப்படியும் இரவு உணவு உண்டிருப்பான் என தெரியும். அதனால் தான் டீ வேண்டுமா என கேட்டாள் அவள்.

“நானே கலக்கிக்கிறேன்! நீ உட்காரு” என சொல்லியபடியே மருமகள் கன்னத்தில் சத்தமாக முத்தமிட்டவன் அவள் கிளுக்கி சிரிப்பதை அன்புடன் பார்த்திருந்தான். பின் கேட்டிலில் நீரை நிரப்பி கொதிக்க விட்டு, சீனி பாப்பாவின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டான்.

“மாமா, சீனீ பாப்பா கை வலிக்கி” என மீண்டும் ஆரம்பித்தாள் சின்னவள்.

புன்னகையுடன் அவள் கைப்பற்றி முத்தமிட்டு,

“வலி போச்சா என் பாப்பாவுக்கு?” என கேட்டான்.

“முத்தா குத்தா போகாது! கலர் செய்யனும்” என புத்தகத்தை அவன் புறம் நகர்த்தினாள் அந்தக் காரியக்காரி.

நகைப்புடன் அதில் உள்ள விண்வெளி வீரருக்கு வர்ணம் தீட்ட ஆரம்பித்தவன்,

“அப்புறம் சிம்ரன்! வீடு புடிச்சிருக்கா? இனிமே திருட்டு வேலை எதுவும் பண்ணமாட்டல்ல!” என கேட்டான்.

முகம் குப்பென சிவக்க,

“அதான் சாரி சொல்லிட்டேன்ல நந்தா சார்! என் நெலமை அப்படியாகிப் போச்சு! அதை ஏன் திருட்டுத்தனம்னு சொல்றீங்க! ஃப்ரீ செக்குரிட்டி சர்விஸ்னு சொல்லலாம்ல!” என நியாயம் பேசினாள் சிம்ரன்.

இடம் வலமாக தலையை ஆட்டியவன்,

“உன்னைக் கட்டிக்கறவனுக்கு டீஸ்ட்ரேஸ் மசாஜ் மட்டும் பத்தாது! தஞ்சோங் ரம்புத்தான்ல(மெண்டல் ஹாஸ்பிட்டல்) லைப் லாங் அட்மிஷனும் தேவைப்படும்” என சொல்லி உச்சுக் கொட்டினான்.

நந்தனாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“தொடு கட்ட! தொடு கட்ட!” என சொல்லி மரத்தினாலான டைனிங் மேசையைத் இரண்டு முறை தட்டினாள் நந்தனா.

“என்ன தொடு கட்ட(கட்டை)?” என கேட்டாள் சிம்ரன்.

“தமிழ் புலவி, டச்வூட்ட(touch wood) தமிழ்ல மொழி பெயர்க்கறாங்களாம்!” என சிரித்தான் ரிஷி.  

“அம்மா, டச்வூட் ஏன் சொல்றாங்க?” என கேட்டாள் சீனி பாப்பா.

தெரியாதது போல தங்களது வேலையில் மூழ்கியிருந்தாலும் பெரியவர்கள் பேசுவதை மிக உண்ணிப்பாக கவனிக்கிறார்கள் இந்த குழந்தைகள்.

“மரத்துல தேவதைங்க இருப்பாங்களாம் ரோஷி பாப்பா! நாம சொல்லறத அப்படியே நடத்தி வச்சிடுவாங்களாம் அவங்க. நம்ம கெட்டது எதாவது சொல்லிட்டா, அதுவும் அவங்க காதுக்கு போயிடுமாம்! அதையும் அவங்க நடத்தி வச்சிடக் கூடாதுன்னு டச்வூட்னு சொல்லி மரத்துல செஞ்சிருக்கற டேபிள், ச்சேர் இப்படி எதுலயாச்சும் தட்டுனா, தேவதை டிஸ்ட்ரேக்ட் ஆகி வேற வேலை பார்க்க போயிடுமாம்! சோ நாம சொன்ன கெட்டது நடக்காம போயிடுமாம்” என மகளுக்குக் கதையாக சொன்னாள் நந்தனா.

அதற்குள் தண்ணீர் கொதித்திருக்க, தனது தமக்கைக்கும் மருமகளுக்கும் பால் சூடு செய்து கொடுத்தவளுக்கு தனது கையால் டீ போட்டுக் கொடுத்தான் ரிஷி. அவள் முன்னே ஒரு மக்கை அவன் நகர்த்தி வைக்க, ஆச்சரியமாய் பார்த்தவள், நந்தனாவின் அருகில் அமர்ந்து மெல்ல டீயை பருக ஆரம்பித்தாள்.

தாய் மகளிடம் பேசிக் கொண்டே, டீ அருந்திக் கொண்டிருந்தவனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள் சிம்ரன். டீ மக்கை இரு கரங்களாலும் அழுந்தப் பற்றி இருந்தது போலத்தான் அன்று அவளது இடுப்பையும் அழுந்தப் பற்றி அணைத்திருந்தான் ரிஷி. முகம் குப்பென சிவக்க, டீயை ஆராய்ச்சி செய்வது போல முகத்தை நன்றாக குனிந்துக் கொண்டாள் சிம்ரன்.

இவனும் இவர்கள் இருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், ஓர விழியை சிம்ரன் மேல் தான் பதித்திருந்தான். தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவளின் முகம் திடுமென சிவக்கவும் என்ன நினைத்திருப்பாள் என சட்டென யூகித்துக் கொண்டான். இவனுக்குள்ளும் மெல்லிய புன்னகை கீற்றாக தோன்ற முயல, கஸ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

அன்று எப்பொழுதும் போல கபேயை செக்குரிட்டி அலார்ம் கோட் போட்டு மூடி விட்டு களைப்புடன் மேல் மாடிக்கு போனான் ரிஷி. தன்னைக் கண்டதும் தாவி ஓடி வந்த டீவாவைத் தூக்கி கொஞ்சியவன்,

“இன்னிக்கு எப்படி பொழுது போச்சு? டாய்ஸ் வெளையாடனீங்களா? கரேக்டா சாப்டீங்களா?” என கேட்டவாறே அதன் பாத்திரத்தில் உணவிட்டான்.

“சாப்டு டீவாம்மா! நான் நந்துக்கும் பாப்பாக்கும் வீடியோ கால் செஞ்சிட்டு வரேன்! செம்ம டயர்ட் இன்னிக்கு! குளிச்சிட்டு ஸ்ட்ரேய்ட் தூக்கம் தான்! நோ ப்ளேடைம் இன்னிக்கு!” என சொல்லியபடியே நந்தனாவுக்கு வீடியோ கால் செய்து பேசி, மருமகளை கொஞ்சி முடித்து போனை வைத்தான். பின் களைப்புத் தீர சுடுதண்ணீரில் குளித்து வந்தவன், ஷார்ட்ஸ் அண்ட் கையில்லா டீ சர்ட் அணிந்து தொபுக்கடீர் என கட்டிலில் சாய்ந்தான். டீவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை வைத்தவன், படுத்தவாறே அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த டீவா, கட்டிலின் மேல் தாவி ஏறி அவன் கை அருகே அமர்ந்துக் கொண்டு அதுவும் டீவீ பார்க்க ஆரம்பித்தது.

“பந்த அடிக்கறான் பாரேன் செத்த கோழி மாதிரி! இவன்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு! இவ்ளோ காசு கொட்டி இவன போய் டீம்ல வாங்கிப் போட்டு வச்சிருக்கானுங்க! ச்சை” என இவன் வாய் விட்டுப் புலம்ப, டீவாவும் வாவ்வாவ் என ஆமோதித்தது.

தூக்கம் கண்களை சுழட்ட, படுக்கும் முன் எப்பொழுதும் செய்வது போல கடையின் சீசீடீவி ஆப்ளிகெஷனைத் திறந்து ஆராய்ந்தான் ரிஷி. எப்பொழுதும் போல ஒவ்வொரு கிவ்வன், கபே, என ஒவ்வொரு ஏரியாவையும் செக் செய்தவனுக்கு ஆபிஸ் ஏரியாவைப் பார்த்த நிமிடம் இருதயம் தொண்டைக் குழிக்குள் வந்து துடித்தது.

“வாட் தெ ஹேக்!!!”

ஆபிஸ் அறையில் நடமாட்டம் தெரியவும், இந்த மாதிரி தேவைக்கு இல்லீகலாய் வாங்கி வைத்த தேசர் துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு மடமடவெனெ கீழே இறங்கினான் ரிஷி. தேசர் தற்காப்புக்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை எலெக்ட்ரிக் ஷாக் துப்பாக்கி வகையாகும். அதை ஒருவர் மேல் பயன்படுத்தும் போது அவர் ஷாக் அடித்து கொஞ்ச நேரத்துக்கு செயலிழந்து நிற்பார்.

முன்னால் வழியாக போனால் ச்சைம்ஸ் சத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்து விடும் என பின்னால் கதவைத் திறந்து அடி மேல் அடி எடுத்து வைத்தான் ரிஷி. ஆப்ளிகேஷன் வழி பார்க்கும் போது ஒரு ஆள் இருப்பது போலத்தான் காட்டியது. காதை கூர்மையாக்கி வேறு ஏதும் சத்தம் வருகிறதா என கூர்ந்துக் கேட்டான் ரிஷி.

மெல்லிய குரலில் பாடும் சத்தம் கேட்டது.

“வாலோட வெட்டி குருமா வைக்கிது வாழ்க்கை

நாங்க குருமா குருவிங்க!!!

ஷூட் தெ குருவி!!!!!”

இருட்டாய் இருந்த ஆபிஸ் அறை சோபாவில் குனிந்து எதையோ உருட்டியபடி முனகலாய் பாடிக் கொண்டிருந்த உருவத்தை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துப் பிடித்தான் ரிஷி.

“அசையாதடா திருட்டு ராஸ்கல்! அசைஞ்சா குருவி சுடற மாதிரி சுட்டுருவேன்!”

“டா இல்ல, டீ நந்தா சார்!”

“கடவுளே முருகா!!!! சிம்ரன் நீயா?”

“நா…நாந்தான்! து..துப்பாக்கி எதுனாச்சும் இருந்தா, தயவு செஞ்சு தூரமா எடுத்துப் போட்டுடுங்க நந்தா சார்! நான் இன்னும் லிப் கிஸ் கூட அடிக்காத சிங்கிள் பீஸூ! செத்துக் கித்துப் போயிட்டா ஆத்மா சாந்தியடையாம மோகினிப் பிசாசா சுத்தப் போறேன்! ப்ளீஸ்” என நடுக்கத்துடன் சொன்னாள் சிம்ரன்.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்ணற நீ?” என கோபமாக கேட்டான் ரிஷி.

“என் இடுப்பத் தடவிக்கிட்டு இருக்கற உங்க கையை எடுத்துட்டு அத கேக்கலாம்ல நந்தா சார்!” என அவள் சொல்லவும் தான் அவளை இறுக்கி பின்னால் இருந்து அணைத்திருப்பதும், தன் விரல்கள் அவள் குட்டை டீஷர்ட் காட்டிய வளவள வயிற்றில் கோலம் போட்டுக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான் ரிஷி. சட்டென கையை அகற்றிக் கொண்டவன், நகர்ந்துப் போய் விளக்கைப் போட்டான்.

அங்கே குட்டியாய் ஒரு டவுசரும், ஹக் மீ டைட் என எழுதி இருந்த டைட் டீ சர்டும், மேக்கப் இல்லாத முகமும், கலைந்த முடியுமாக நின்றிருந்தாள் சிம்ரன்.

‘மேக்கப் இல்லாம பார்த்தா வாந்தி வரும்னு பஞ்ச் டயலோக் சொன்ன என்னையே சாந்தி முகூர்த்தம் வைக்க நாள் பார்க்க வச்சிடுவா போலிருக்கே! கண்ட்ரோல்டா ரிஷி, கண்ட்ரோல்! நீ எல்லாம் காவி கட்டி சாமியாரா போக வேண்டிய ஆளுடா! இவ அம்மாவ உனக்கு மாமியாரா ஆக்க வேண்டிய ஆளு இல்லை! கண்ட்ரோல்!’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் முறைப்புடன் அவளை பார்த்தான். அதாவது முறைப்பு எனும் போர்வையில் அந்த குருமா குருவியை சைட்டடித்தான்.

“கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல சிம்ரன்!”

“அது வந்து நந்தா சார்…என்னால இதுக்கும் மேல ஹோட்டலுக்கு காசு குடுக்க முடியல! ரொம்ப சைட்டா அகிடுச்சு என்னோட பட்ஜேட். அதான் யாருக்கும் தெரியாம ஒரு ஓரமா இங்கயே தங்கிகிட்டு சோபாவுல படுத்துக்கலாம்னு நெனைச்சேன். அதுவும் நீங்க முதல் மாசம் சம்பளம் குடுக்கற வரைக்கும் தான்! அதுக்கு அப்புறம் ரெண்ட்டுக்கு ரூம் எங்கயாச்சும் பார்த்துக்குவேன்.” என படபடவென சொன்னாள் சிம்ரன்.

“எப்படி உள்ளுக்கு வந்த?”

“அது வந்து..”

“சொல்லு!!!” குரல் கோபமாக வந்தது.

“நான் வெளியவே போகல! ஸ்டோர் ரூம்ல ஒளிஞ்சிருந்தேன்”

“ஸ்டோர் ரூம்லயும் செக் பண்ணிட்டுத்தானே மேய்ன் கதவ அடைச்சேன்”

“ஹிஹி! பெரிய கோதுமாவு மூட்டை இருக்குல்ல, அது பின்னால பதுங்கி இருந்தேன் நந்தா சார்! உங்களால கண்டுப் புடிக்கவே முடியல”

“எல்லாம் என் நேரம்!”

“நீங்க பூட்டிட்டுப் போனதும் நம்ம டாய்லட்லயே குளிச்சிட்டு, இங்க வந்து படுத்துக்கலாம்னு வந்தேன்! நீங்க கண்டுப்புடிச்சிட்டீங்க! ப்ளிஸ் நந்தா சார், கொஞ்ச நாளைக்கு இங்க தங்கிக்கறேன்! உங்க கடையை நைட்டு முழுக்க பத்திரமா காசு வாங்காம ப்ரீயா பார்த்துக்கறேன்! முடியாதுன்னு சொல்லாதீங்க! ப்ளீஸ்” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள் சிம்ரன்.

“போ, போய் முதல்ல டீசண்டா எதாச்சும் உடுத்திட்டு வா! அது சரி, துணி மணிலாம் எப்படி எடுத்துட்டு வந்த?”

“தினம் பேக்ல கொஞ்சம் கொஞ்சமா எடுத்துட்டு வந்தேன்! லக்கேஜ் பேக்க தூக்கிட்டு வந்தா சந்தேகம் வந்துடுமே! சோ எடுத்துட்டு வந்த எல்லா பொருளையும் ப்ளாஸ்டிக் பைல நல்லா கட்டி தீர்ந்து போன மாவு சாக்குல போட்டு ஸ்டோர் ரூம் ஆக பின்னாடி வச்சிருக்கேன் நந்தா சார். உத்துப் பார்த்தா தவிர யாருமே கண்டுப்புடிக்க முடியாது! செம்ம ஜீனியஸ்ல நானு!” என அவனிடமே பெருமை அடித்துக் கொண்டவளை என்ன செய்வது என தெரியாது முழித்தான் ரிஷி.

என்னவோ அவளைத் திரும்பவும் ஹோட்டலுக்கு அனுப்பவோ, ஆபீஸ் அறையின் குட்டி சோபாவில் படுக்க வைக்கவோ மனம் வரவில்லை அவனுக்கு. பெண் என்றால் பேயும் இறங்குமே! நம் சிங்கிள் சிங்கம் இறங்க மாட்டானா!

சிம்ரனைப் போய் அவளது உடமைகளை எடுத்து வர அனுப்பியவன், நந்தனாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூற, அவளோ தன் வீட்டில் இருக்கட்டும் என சொல்லி விட்டாள்.

“என்னதான் நம்ம கிட்ட வேலைப் பார்த்தாலும் அவள நமக்கு அவ்வளவா தெரியாது நந்து! எப்படி நம்பி வீட்டுக்குள்ள விடறது?”

“நம்பிக்கைத்தான்டா வாழ்க்கை! இங்க நான் என்ன பட்டும் பவுனுமா கொட்டி வச்சிருக்கேன் அவ வந்து அள்ளிட்டுப் போறதுக்கு! உன் கிட்ட சொன்ன மாதிரி அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா! எனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் இருந்த மாதிரி இருக்கும்! கொண்டு வந்து விடு!”

அன்றிலிருந்து நந்தனாவின் இல்லத்தில் பேயிங் கெஸ்ட்டாக இருக்க ஆரம்பித்தாள் சிம்ரன்.

குட்டி தூங்கி வழிய ஆரம்பிக்கவும், எழுந்துக் கொண்டாள் நந்தனா.

“நந்தா, பாப்புவ நான் தூங்க வைக்கப் போறேன்! யூ லெட் யுவர் செல்ப் அவுட். குட் நைட் டா! குட் நைட் சிம்ஸ்! நீ பண்ண மசாஜ்ல ஐ ஃபீல் சோ கால்ம்! தேக்ஸ்டா” என சிரித்த முகமாக இருவரிடமும் சொல்லி சென்றாள் அவள்.

கிளம்ப ஆயத்தமானவன்,

“தேங்க்ஸ் சிம்ரன்” என சொன்னான்.

“எதுக்கு சேகர்?”

அவன் முறைக்கவும்,

“சாரி! எதுக்கு நந்தா சார்?” என கேட்டாள்.

“நந்து நீ வந்ததுல இருந்து ஹேப்பியா இருக்கா! அவளுக்கு நான், குட்டிம்மா எல்லாம் இருந்தாலும் ஷீ ஃபீல் லோன்லி! சுத்தி யார் இருந்தாலும் சம்டைம்ஸ் நம்ம பீலிங்க ஷேர் பண்ணிக்க ஒரு பெஸ்ட் ப்ரண்ட் இல்லைனா லைப்பே எம்ப்டியா இருக்கற மாதிரி தோணும். உன் கிட்ட பேசி சிரிக்க ஆரம்பிச்சதுல இருந்து, அவ முகத்துல வெளிச்சம் தெரியுது! தேங்க் யூ சோ மச்”

“நோ வோரிஸ் நந்தா சார்! சிம்ல வச்ச கஞ்சியும் சிம்ரன நம்பன வஞ்சியும்(நந்தனா) வீணாப்போனதா சரித்திரமே இல்ல! நந்தனாவை நான் ரொம்ப நல்லாப் பார்த்துப்பேன்! எனக்கு வேலை குடுத்த தெய்வம் அவங்க” என புன்னகையுடன் சொன்னாள் சிம்ரன்.

இன்றும் துளி மேக்கப் இல்லாமல் வீட்டு லுக்கில் அழகாய் இருந்தவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து நோக்கியவன்,

“நான் பல ஆங்கிள்ல யோசிச்சிட்டேன் சிம்ரன்! அன்னைக்கு நீ ரொம்ப வாசமா இருந்தியா, இன்னும் கொஞ்சம் வாசம் புடிக்கலாம்னு நெருங்கனப்போ தெரியாம என் உதடு உன் கன்னத்துல பட்டுருக்கும். சாரி” என மெல்லிய குரலில் சொன்னான்.

“நானும் உருண்டு பொரண்டு யோசிச்சு பார்த்தேன் நந்தா சார்! அன்னைக்கு முட்டி வலியில இருந்தேன்ல, குட்டிய கிஸ் பண்ண போற அவசரத்துல லேசா தடுமாறி உங்க உதட்ட உரசிருப்பேன்! நானும் சாரி” என இவளும் மெல்லிய குரலில் மன்னிப்பு கேட்டாள்.

பின் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. கண் முகமெல்லாம் மலர்ந்து சிரித்த சிம்ரனை ஆசையாகப் பார்த்திருந்தான் ரிஷி.

சிரித்து சமாதானமான இருவரும் இரண்டு நாளில் மீண்டும் முட்டிக் கொண்டனர்.

“அறிவில்ல உனக்கு?” என இவன் கடுப்பாய் கத்த,

“ஏன் பிஞ்ஜாம்(கடனா) வேணுமா?” என இவள் எடுப்பாய் கத்த ஒரே ரணகளமானது ‘பைட் மீ’.

மோதல், மோதல், மோதல்!!

எப்பொழுது வரும்

காதல், காதல், காதல்!!!!

 

(உருகுவான்….)