Uyir Vangum Rojave–EPI 15

ROSE-4e0b8295

Uyir Vangum Rojave–EPI 15

அத்தியாயம் 15

“உலகத்துலயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா?

நமக்கு பிடிச்சவங்க நம்ப விட்டு போறதுதான்

அதுவும் லவ் பண்ணவ நீ வேணாம், என்னை மறந்துருன்னு சொல்றத பார்த்துக் கிட்டு நிக்கிறான் பாரு , அந்த நிமிஷம் மனசுல ஏற்படற வலி இருக்கே அது சாவை விட மோசம்.

(வினய் – உன்னாலே உன்னாலே)

 

 

அறைந்ததோடு மட்டுமில்லாது, சரமாரியாக வயிற்றிலும் குத்து விழுந்தது அவனுக்கு. அவள் கைப்பிடித்து தடுத்தவன்,

“ஏன்டி, பாத்திரம் எடுக்கனும்னு ரூமுக்குள்ள கூட்டி வந்து இப்படி கும்மாங்குத்து குத்துறே? வலிக்குது விடு லாவண்யா” என கத்தினான்.

“ஷ்ஷ்! சத்தம் போடாதே! நீ அடி வாங்குறது ஊருக்கே தெரியனுமா? “

“நீ அடிச்சா என் உடம்பு தாங்கும், உன் உடம்பு தாங்குமா? அபிராமீ!!!” வசனம் பேசி அதற்கும் மொத்து வாங்கினான்.

எதிர்பாராத வேளையில் அவள் இரு கைகளையும் மடக்கிப் பிடித்தவன்,

“சொல்லு லட்டு. மாமா மேல, அடிக்கற அளவுக்கு என்ன கோபம்?”

கைகளை விடுவித்துக் கொள்ள போராடினாள் லாவண்யா. சாதரணமாக பிடித்தது போல் இருந்தாலும் இரும்பு பிடியாக இருந்தது. அவனை முறைத்தவள்,

“ஏன்னு உனக்கு தெரியாது?”

தலையை இடம் வலமாக ஆட்டினான் அவன்.

“காரிலிருந்து இறங்கறப்ப என்ன செஞ்ச?”

“என்ன செஞ்சேன்? உனக்கு கதவை திறந்து விட்டேன்”

“அதுக்கு அப்புறம்?”

“நீ தடுமாறி விழப் பார்த்த, விழாம தாங்கிப் பிடிச்சேன். அது தப்பா? நான் பிடிக்காட்டி கீழ விழுந்து மூக்கை உடைச்சிட்டு இருப்ப. உதவி செஞ்சவனுக்கு ஒரு நன்றி சொல்லலைனாலும் பரவாயில்லை, இப்படி மொத்தி எடுக்காம இருக்கலாம்”

“நான் விழப் பார்த்தனா? இல்லை என் காலை நீ தட்டி விட்டியா?”

‘ஐய்யய்யோ! கண்டு பிடிச்சுட்டாளா? கையில தட்டெல்லாம் வச்சிருந்தாளே கவனிச்சிருக்க மாட்டான்னு தப்பு கணக்கு போட்டுட்டனே. சமாளிப்போம்’

“இல்லைடா செல்லக் குட்டி. நீயா தான் விழ பார்த்த. எங்கப்பத்தா மேல சத்தியம்”

“செத்து போன கிழவி மேல சத்தியம் பண்ணுறியா? இதுலயே தெரியலை உன் வண்டவாளம்? முதல்ல சந்தேகம் வரல. உன் கை ரெண்டு நிமிஷத்துக்கும் மேல என் இடுப்புல இருந்துச்சு பார்த்தியா? அப்பத்தான் கண்டுபிடிச்சேன். வேணும்னே தடுக்கி விட்டு என் இடுப்பை பிடிச்சு பார்த்திருக்க. உன் கிரிமினல் வேலைய என் கிட்ட காட்டாத கார்த்திக். பின்னிருவேன்”

“ஆமா, இது குஷி ஜோதிகா இடுப்பு! நாங்க கிரிமினலா பிளான் போட்டு பிடிச்சிட்டோம். போடி! இதெல்லாம் ஒரு இடுப்பா? எரிஞ்சு போன அடுப்பு” என வாயை விட்டான் கார்த்திக்.

பட்டென அவன் கையை உதறியவள், அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்று கொண்டாள்.

‘என்னடா ஆச்சு? சண்டை போடாம திரும்பிகிட்டா’

“லட்டு! லட்டும்மா. என்னாச்சு?” அவள் முன்னே போய் நின்றான். கண்கள் கலங்க நின்றிருந்தாள் அவள். சர்வமும் பதறிவிட்டது கார்த்திக்குக்கு.

இரு கைகளாலும் அவள் கன்னங்களைப் பற்றி,

“என்னாச்சுடா? ஏன் கண்ணு கலங்குது? நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். இங்க பாரு அழாதே லட்டும்மா.”

அவளது கண்களை மென்மையாக துடைத்தவன், அவள் தடுக்க தடுக்க அவள் முகத்தை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்.

“நீ எப்பொழுதும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் லட்டு. இப்படி அழுதா என்னால தாங்க முடியாது. முதன் முதலா நான் பார்க்கும் போது, உங்கண்ணன் முன்னுக்கு அழுத பார்த்தியா? அப்பவே இப்படி கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லனும்னு துடிச்சேன் தெரியுமா. என் முன்னுக்கு இனிமே எப்பவும் அழக் கூடாது. சரியா?” இருக்கமாக அணைத்துக் கொண்டான். அவளும் பாந்தமாக அவனிடம் ஒட்டிக் கொண்டாள்.

“உன் முன்னால அழாம, பின்னால அழலாமா?” குழைந்து வந்தது குரல்.

அவனுக்கு கொண்டாட்டம் தாங்கவில்லை.

‘பட்சி சொக்கிருச்சே! இப்பவே ஏதாவதொரு பிட்ட போட்டு சீக்கிரமா நம்மள கட்டிக்கிற மாதிரி பண்ணனும். வந்துருச்சி ஐடியா! பாடுனா தானே இவ குடும்பத்துல உள்ளவங்களுக்கு பிடிக்கும். நாமளும் ஒன்னை எடுத்து விடுவோம்.  

‘அடியே அழகே… என் அழகே அடியே…
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே வலியே… என் ஒளியே ஒளியே…
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத”

“நீ ஜோரா பாடுற கார்த்திக். ஐ லைக் இட்” குரல் கொஞ்சியது.

“அப்படியே மாமாவ பார்த்து ஐ லவ் யூன்னும் சொல்லும்மா தங்கம்”

“ஐ “ மட்டும் தான் சொன்னாள் அதற்குள் இந்துவின் குரல் வெளியிலிருந்து கேட்டது.

“லட்டு! அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. எங்க இருக்க?”

அத்தை என்ற சொல்லில் அவள் உடல் விறைப்பதை கட்டிப் பிடித்திருந்த கார்த்திக்கினால் துல்லியமாக உணர முடிந்தது.

சட்டென விலகியவள், மீண்டும் பழைய லாவண்யாவாய் மாறி இருந்தாள்.

“ஏன்டா கட்டிப் பிடிச்ச? கொஞ்சம் ஏமாந்துற கூடாதே, உடனே உன் குரங்கு வித்தைய காட்டிருவியே” எரிந்து விழுந்தவள் விடு விடுவென வெளியே நடந்தாள். ரூமிலிருந்து வெளியாகும் முன் அவனைத் திரும்பி பார்த்தவள்,

“இந்த எரிஞ்சி போன அடுப்பு உனக்கு வேணாம். நீ வேற நல்ல அடுப்பா பார்த்து சோறு பொங்கிக்க” என முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டு சென்றாள்.

‘இவ்வளவு நேரம் சுகமா தானே என் அணைப்புல இருந்தா. திடீர்ன்னு என்ன ஆச்சு? நம்பளையும் சிச்சுவேஷன் சாங் பாட வைக்கிறாளே, ஊரு மக்கள் ஏத்துக்குவாங்களா? எதுக்கும் பாடி தான் பார்ப்போமே!

‘பெண் மனசு ஆழமென்று
ஆம்பளைக்கு தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்திலே என்ன உண்டு
யாருக்குத் தான் தெரியும்’

பாடியபடியே வெளியே வந்தான்.

“என்னப்பா கார்த்திக், வீட்டுல இம்புட்டு வேலை கிடக்குது. நீ ஹாயா பாடிக்கிட்டு திரியறே” என அவன் முன்னே நின்றார் இந்து.

‘உங்க மக என்னை பேயா, பாட உட்டுட்டா. நீங்க என்னன்னா ஹாயா பாடுறேன்ங்கிறிங்க. ஹ்ம்ம். எல்லாம் என் யோகம்’

“சொல்லுங்க மா. என்ன செய்யனும்?”

“இந்த கோமியத்தை வீடு முழுக்க தெளிச்சிட்டு வா” என சொம்பை அவனிடம் நீட்டினார்.

‘உங்க மருமகனா ஆக ட்ரை பண்ணதுக்கு இந்த கோமியம் தான் மிச்சம்’ மனதிலே முனகிக் கொண்டே வேலையை கவனிக்க சென்றான்.

ரூமெல்லாம் தெளித்து விட்டு ஹாலுக்கு வந்தவன் அப்பொழுதுதான் வேந்தனின் மாமா குடும்பத்தைக் கவனித்தான். அவர்களின் மகன் ‘மன்’மதனும் அங்கே தான் அமர்ந்திருந்தான். அவனின் உடம்பு மட்டும் தான் அங்கே இருந்தது. கண்கள் அனுவையும், லாவண்யாயையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

‘அடப்பாவி! அக்காவ தான் சைட் விடறான்னு கேள்விப்பட்டேன். இவன் என்னன்னா நம்ப ஆளையும் கண்ணால விழுங்கறானே.’

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த தேவியின் மேலும் அவன் கண்கள் இன்னும் சுவாரசியமாக மேய்ந்தது.

‘டேய்! மேடம் உனக்கு தங்கச்சி முறை வரும்டா. இப்படி மூனு பொண்ணுங்களையும், துச்சாதனன் கசின் பிரதர் மாதிரி பார்க்கிறானே. எலக்ட்ரிக் போஸ்ட்டுக்கு சேலை கட்டி விட்டா கூட, அரை மணி நேரம் அசால்ட்டா பார்ப்பான் போல. இருடா மாப்பிள்ளை உன்னை இப்பவே கவனிக்கறேன்.’

அவன் அருகே சென்றவன் கால் தடுக்கி விழுவதை போல் முழு சொம்பையும் மதன் மேல் கவிழ்த்தான். கோமிய அபிஷேகம் நடத்தப்பட்ட மதனோ வெகுண்டெழுந்தான்.

“யூ!யூ! ஃபூல் அப் த இடியட் அப் த ஃபூல் அப் அ ஏஸ்”

‘அடப்பாவி! இவன் பாரின் ரிட்டர்னா இல்ல பாண்டிச்சேரி ரிட்டர்னா? நம்ப வடிவேலு கணக்கா திட்டுறான்’

“மன்னிச்சிருங்க சார். கால் தடுக்கிருச்சு” வேகவேகமாய் மன்னிப்பைக் கேட்டான் கார்த்திக்.

“வேலைகார பரதேசிங்கள வீட்டுல சுத்த விட்டா இப்படிதான் நடக்கும்” அவன் சொன்னது தான் தாமதம் நான்கு புறமும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

“மதன்!” என வேந்தனும், இந்துவும் கோபப்பட,

“மாமா!” என லட்டு கொதிக்க,

“டேய்!” என தேவி குரலை உயர்த்தி இருந்தாள்.

“அவன் எனக்கு மட்டும் தான் வேலைக்காரன். அவன பேச எனக்கு மட்டும் தான் ரைட்ஸ் இருக்கு. வேற யாராவது அவன இன்சல்ட் பண்ணீங்க அப்புறம் பேசறதுக்கு நாக்கு இருக்காது. மைண்ட் இட்” தேவியின் குரல் கடுமையாக ஒலித்தது.

வேந்தனின் மாமாதான் மகனை சமாதானப் படுத்தினார். வேந்தனின் பழைய சட்டை, வேட்டியை கொடுத்த இந்து,

“போப்பா! போய் குளிச்சிட்டு மாத்திக்க” என அனுப்பி வைத்தார்.

வேந்தனின் கோப முகத்தைப் பார்த்து பம்மியவாறே குளிக்க சென்றான் அவன். ஏற்கனவே அனு விஷயத்தில் அவனிடம் உதை வாங்கி ஒரு வாரம் பெட் ரெஸ்டில் இருந்தவன் தானே. முதலில் இங்கே வரவே தயங்கினான். அவன் அம்மாதான் பெரிய பணக்கார வீட்டில் வேந்தன் திருமணம் செய்திருக்கிறான். அப்படியே மீண்டும் பேசி பழகி அனுவை திருமணம் செய்து கொண்டால் வரதட்சணை சுளையாக வாங்கலாம் என ஆசைக் காட்டி கூட்டி வந்திருந்தார்.

அனுவைக் கட்டிக் கொண்டு லட்டுவையும் சைட் அடிக்கலாம் என்பது தான் ஐயாவின் ஜொளான்(ஜொள்ளு+பிளான்). மருமகனாயிட்டா யாராலயும் ஒன்னும் கிழிக்க முடியாதே. இங்கே வரும்போது குஷியில் பாடிக் கொண்டே தான் வந்தான்.அவனுக்கு தெரியவில்லை, அவர்கள் யார் மேல் கையை வைத்தாலும் தேவி சீவி விடுவாள் என்று.

வந்தவர்களை சிதம்பரத்தின் முகத்திற்காக உள்ளே அனுமதித்திருந்தார் இந்து. வீட்டிற்கு வந்தவர்களை இன்முகமாக உபசரிப்பது தமிழர் பண்பாடு அல்லவா. அதை தான் இந்துவும் செய்தார். தாமரையோ இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடிக்கும் ரகம். இந்துவின் உபசரிப்பில் பல கோட்டைகளை மனதில் கட்டிவிட்டார்.

‘என் மகன் அழகுராஜா. இவ பொண்ணுக்கு கட்டிக்க கசக்குமா என்ன? கல்யாணம் முடியறவரைக்கும் அடக்கி வாசிப்போம். அப்புறம் ஆத்தா, மக சிண்ட புடிச்சு ஆட்டிறமாட்டேன்’ என உள்ளுக்குள்ளேயே திட்டம் திட்டி, வெளியில் புன்னகை முகமாகவே திரிந்தார். தேவி மகனை எடுத்தெரிந்து பேசிய போது கூட இளித்தபடியே அமைதி காத்தார்.

வேந்தன் தாமரையைக் கண்டுக் கொள்ளவே இல்லை. மாமாவை மட்டும் பார்த்து தலை அசைத்தவன், பிறகு இவர்கள் பக்கமே திரும்பவில்லை. தேவிக்கு இவர்களை முதல் பார்வையிலே பிடிக்கவில்லை. வேந்தன் அமைதியாக இருக்கவும் அவளும் அமைதி காத்தாள்.

ஐயரை வைத்து ஹோமம் வளர்த்து பூசை செய்தனர். பின் பாலை காய்ச்சி அனைவருக்கும் கொடுத்தார் இந்து. ஐயர் கிளம்பியவுடன் பேச்சை ஆரம்பித்தார் தாமரை.

“அண்ணி, வந்து இப்படி உக்காருங்க. நல்ல விஷயம் பேசலாம்”

இந்துவிற்கு மண்டையில் மணி அடித்தது. மருமகளை ஓரக்கண்ணால் பார்த்தார். அவளும் அவர் பக்கத்தில் வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.

“சொல்லுங்க தாமரை. என்ன பேசனும்? இனிமே இவங்க குடும்ப விஷயத்துல எல்லாம் நான் தான் முடிவு எடுப்பேன். அதனால என் கிட்டயே பேசுங்க” என்றாள் தேவி.

“அம்மாடி! நான் உனக்கு அம்மா முறை. வாய் நிறைய அம்மான்னு கூப்பிடும்மா”

“யாரை எப்படி கூப்பிடறதுன்னு எனக்கு தெரியும். நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க”

‘எப்படி பிட்ட போட்டாலும் மசிய மாட்டிக்கிறாளே. எல்லாம் பண திமிரு. கால் மேல கால் போட்டு ஆட்டிகிட்டு உட்கார்ந்துருக்கா. பெரிய ராக்காச்சியா இருப்பா போல இருக்கே.  அடி ஆத்தி! இந்த வேந்தன் பையன் கெட்டக் கேட்டுக்கு என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறானே. இதைத்தான் கோவணத்தில ஒரு காசு இருந்தா கோழி கூப்பிட பாட்டு வரும்முன்னு சொல்லுவாங்க. எல்லாம் என் நேரம்.  என்ன பண்ணுறது? காரியம் ஆகனும்னா காக்கா கால கூட பிடிக்கலாம். தப்பில்ல’

“அது வந்தும்மா, என் மகன் மதனுக்கு அனுக்குட்டிய பொண்ணு கேக்கறோம். அவ மாதிரி ஒரு மகாலெட்சுமி எங்க வீட்டுக்கு விளக்கேத்த வந்தா, குடும்பமே சுபிட்சமா இருக்கும். அதோட சொந்தம் விட்டுப் போயிடக் கூடாது இல்லயா” குரலில் தேன் வழிந்தது.

‘எங்க அனுவை, அன்னைக்கு மூதேவின்னு திட்டி முடியைப் பிடிச்சு அடிச்சதென்ன., இன்னிக்கு மகாலெட்சுமின்னு புகழுறுதென்ன? இந்த பிச்சைக்கார குடும்பம் சொந்தமுன்னு சொல்லவே கேவலமா இருக்குன்னு வெளிய துரத்திட்டு இன்னிக்கு உறவு விட்டுப் போயிட கூடாதாம்! என்னமா நடிக்கிது எங்கண்ணி. இந்த வருஷம் ஆஸ்கார் அவார்ட இவங்களுக்கு தான் குடுத்து

‘உலகம் எங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு

உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு

உலக நாயகியே உலக நாயகியே’ பாட்டுப் பாடனும்’ மனதிலேயே வருத்தெடுத்தார் இந்து. அண்ணனுக்காக வாயைத் திறக்கவில்லை.

தேவி அனுவை ஏறிட்டுப் பார்த்தாள். முகம் வெளுக்க பயத்தில் நின்றிருந்தாள் அவள். வேந்தனையும் கவனித்தாள், முகம் முழுக்க கோபம் இருந்தாலும் கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக இருந்தான்.   அவன் பார்வை அவன் மாமாவின் மேல் மட்டும் தான் இருந்தது. அவரோ தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தார். இவர்களின் தயக்கத்தைப் புரிந்துக் கொண்டவள்,

“அனுக்கு இப்ப கல்யாணம் பண்ண ஐடியா இல்ல. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். இப்பவே இவ கல்யாணம் பண்ணி போயிட்டா, எங்க புள்ளை குட்டிங்களை யாரு வளர்த்துவிடறது?” என தாமரையின் கண்ணை நேராக நோக்கி கேட்டாள்.

‘என்ன இந்த புள்ள இப்படி பேசுது?’ தாமரையே ஒரு நிமிடம் அசந்து விட்டார்.

“இல்லம்மா, நான் என்ன சொல்ல வரேன்னா”

“ஒன்னும் சொல்ல வேணாம். இன்னும் ஒரு பத்து வருஷம் போகட்டும். அப்புறம் பாக்கலாம். காலையிலே எழுந்தது ரொம்ப களைப்பா இருக்கு. நான் படுக்கனும். அதனால இப்ப நீங்க கிளம்பலாம். மலர், சீக்கிரமா என் வீட்டுல இருந்து தேவை இல்லாதவங்களை எல்லாம் அனுப்பி வச்சிட்டு ரூமுக்கு வா. எனக்கு தலை வலிக்குது” என எழுந்து சென்று விட்டாள்.

தாமரைக்கு மிகுந்த அவமானமாக போய் விட்டது. இந்துவுக்கோ உள்ளுக்குள் ஒரே சந்தோஷம்.

“என்னை மன்னிச்சிருங்க அண்ணி. மருமகள மீறி என்னால ஒன்னும் செய்ய முடியாது” என கைகளை விரித்து விட்டார்.

‘புது பணக்காரங்க ஆகிட்டீங்க இல்ல. அதான் என் கிட்டயே ஆடிப் பார்க்கறீங்க. நீ பெத்த மக கல்யாணம் என்னை மீறி எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்’ மனதில் சூளுரைத்தவர் சிரித்த முகமாகவே வெளியேறினார்.

“இவங்கள ஏன்மா கூப்பிட்டீங்க?” அவர்கள் போனவுடன் எகிறினான் வேந்தன்.

“நான் எங்கடா கூப்பிட்டேன். எப்படியோ விஷயம் தெரிஞ்சு வந்துட்டாங்க. அவங்கள விடு. மருமக தலை வலிக்குதுன்னு சொன்னாப்பாரு. இந்தா காபி. கொண்டு போய் குடுத்துட்டு, தலை அமுக்கி விட்டுட்டு வா”

“அம்மா!” முறைத்தான் வேந்தன்.

“ஏன்டா முறைக்கிற? உன் தங்கச்சிக்கோ எனக்கோ தலை வலின்னா செய்ய மாட்டியா? பொண்டாட்டிய மட்டும் ஏன் வேறா நினைக்கிற? போ, போய் பாரு. புள்ளை முகமே வாடி போய் இருந்துச்சு” விரட்டினார் வேந்தனை. பணக்கார மருமகள் என்பதால் இந்த உபசரிப்பு இல்லை, மகனின் மனைவி என்பதால் தான் இந்தப் பாசம்.

அவன் அகன்றவுடன், கையில் பெட்டியுடன் வந்தான் சிகப்பு சட்டை.

“வாப்பா சிகப்பு சொக்கா. என்னப்பா இந்த பக்கம்?”

“இவரை தான் உங்க பாதுகாப்புக்காகவும், நீங்க வெளிய தெருவ போனா ட்ரைவராகவும் மேடம் அரெஞ் பண்ணியிருக்காங்க. அவுட் ஹவுசுல இருந்துக்குவாரு. அதோட சமையலுக்கு ஒரு ஆளும், வீட்டு வேலை, தோட்ட வேலைக்கு ஒரு ஆளும் அப்பயிண்ட் செஞ்சிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” விளக்கினான் கார்த்திக்.

வாயைப் பிளந்து விட்டார் இந்து.

“ஏன்? எங்களுக்கு எதுக்கு இத்தனை வேலைக்காரங்களும் செக்குரிட்டியும்? நாங்க எப்பொழுதும் போல இருந்துக்குவோம். அவங்ககிட்ட பணம் இருந்தா அதை அவங்க புருஷனுக்கு செலவு பண்ணட்டும். எங்களுக்கு ஒன்னும் பிச்சைப் போட வேணாம்” கார்த்திக்கிடம் எகிறினாள் லாவண்யா.

“லட்டு! அதென்ன மரியாதை இல்லாம அண்ணிய இப்படி பேசறது? புடிக்கிதோ இல்லையோ, அவங்க உன் அண்ணி. அதுக்குண்டான மரியாதைய நீ தந்து தான் ஆகனும்” கண்டிப்பு இருந்தது இந்துவின் குரலில்.

“அண்ணியாம் அண்ணி! திமிர் பிடிச்ச பன்னி!” முனகிக் கொண்டே சமயலறைக்குள் புகுந்து கொண்டாள் அவள்.

தண்ணி வேண்டும் என அவளைப் பின் தொடர்ந்தவன்,

“எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருது லட்டு? மேடம் உங்க நல்லதுக்கு தானே இதெல்லாம் செய்றாங்க. கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கிறியா?”

“யாரையும் நான் புரிஞ்சுக்க தேவையில்ல. அவங்க வேலைக்காரனான நீ, அவங்கள புரிஞ்சு கிட்டா போதும்”

‘ஓ! அவங்க என்னை வேலைக்காரன்னு சொன்னது தான் பட்டுக்குட்டிக்கு கோபமா?’

“அவங்க கிட்ட வேலை செய்யறேன், அப்புறம் அப்படி தானே கூப்புடுவாங்க. இதுக்கெல்லாம் ஏன் கோபப் படுறே செல்லம்”

“யாரு கோபப்பட்டா? நானா? நேவர்” என்றவள் கழுவிய காப்பி டபராவை அவன் மீது தூக்கி அடித்தாள். அலேக்காக கேட்ச் பிடித்தவன்,

“இப்படியே அடிக்கறேன் , உதைக்கறேன்னு சுத்திகிட்டு இரு, கடைசியில நான் அமைதியின் சிகரம் அனுவை தான் கட்டிக்க போறேன்” அந்நேரம் மிஸ்டர் சட்டர்டே அவன் நாக்கில் அமர்ந்திருந்தாறோ?

 

உயிரை வாங்குவாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!