Uyirodu Vilaiyadu – 10

(NICS- National Instant Criminal Background Check System  கிளார்க்ஸ்பர்க்கில்/ Glassbrough, americaவில்  உள்ள எஃப்.பி.ஐயின்/F.B.I,  குற்றவியல் நீதி தகவல் சேவைகள் பிரிவில் அமைந்துள்ளது. 1993 ஆம் ஆண்டின், ‘பிராடி கைத்துப்பாக்கி வன்முறை தடுப்புச் சட்டம் (பிராடி சட்டம்/brady law),’ பொதுச் சட்டம் 103-159, என்ஐசிஎஸ்  துப்பாக்கி உரிமதாரர்களுக்காக நிறுவப்பட்டது.

ATS- பயங்கரவாத தடுப்புப் படை/ anti terrorism squad என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள, சிறப்பு காவல்துறையின் ஒரு படையாகும். 

நாட்டில் பல பயங்கரவாத தாக்குதல்களை இந்த ஸ்குவாட்/squad நிறுத்தியுள்ளது. 1990 களில் மகாராஷ்டிராவில், மும்பை காவல்துறை, ‘கூடுதல் ஆணையர், ‘அப்தாப் அகமது கான் பிரபலமாக ஏ.ஏ. கான்’  இந்தப் பிரிவைத் தோற்றுவித்தார். 

நவீனகால பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான, ‘லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையின் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாயங்கள்/SWAT- Los Angeles Police Department’s Special Weapons & Tactics (SWAT)’  குழு முறைகளால் அவர் ஈர்க்கப்பட்டார். 

 1990 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டதிலிருந்து, ATS அதிகாரிகள் 23 துணிச்சலான விருதுகளை வென்றுள்ளனர்.

மும்பை ATS, 26 நவம்பர் 2008 மும்பை, மகாராஷ்டிராவில் 5 நட்சத்திர ஹோட்டல்களான தாஜ் மற்றும் ஓபராய், ட்ரைடென்ட் உள்ளிட்ட பல இடங்களில் பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

தாக்குதல்களுக்குப் பிறகு, குழந்தைகளை (12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஏடிசியின் அதிகாரிகளாக நியமிக்கத் தொடங்கியது, குறிப்பாக மும்பையில், அவர்களுக்கு இரகசியமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.)

அத்தியாயம்  10

‘காசே தான் கடவுளப்பா!…

அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா… 

தாயை தவிர, தந்தையை தவிர,

காசால் எதையும் வாங்கிடலாம்

தலையா, பூவா போட்டுப் பார்த்துத் 

தலை வணங்காமல் வாழ்ந்திடலாம்

கல்லறை கூடச் சில்லறை இருந்தால் 

வாய் திறந்தே மொழி பேசுமடா!

கைக்குக் கைமாறும் பணமே!

உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே!

 நீ தேடும்போது வருவதுண்டோ!

விட்டுப் போகும்போது சொல்வதுண்டோ? – 

அளவுக்கு மேலே, பணம் வைத்திருந்தால்

அவனும் திருடனும் ஒன்றாகும்…

வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்,

அவனும் குருடனும் ஒன்றாகும்…

களவுக்குப் போகும் பொருளை எடுத்து

வறுமைக்குத்  தந்தால்  தருமமடா…

பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு

பூட்டி வைத்தால் அது கருமமடா…

கொடுத்தவன் விழிப்பான், எடுத்தவன் முடிப்பான்

அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே!

சிரித்தவன் அழுவதும், அழுதவன் சிரிபபதும்,

பணத்தால் வந்த நிலை தானே!

கையிலும், பையிலும் ஓட்டமிருந்தால்

கூட்டமிருக்கும்  பின்னோடு

தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்

தாளங்கள் போடும் பின்னோடு!…’  சக்கரம் என்ற படத்தில், கண்ணதாசன் வரிகளில் கோயில் அருகே இருந்த டீக்கடையிலிருந்து  அந்தப் பாடல் ஒலிக்க, சம்யுக்தா தன்னையும் அறியாமல் பெருமூச்சினை வெளியிட்டாள்.

https://www.youtube.com/watch?v=a5NN3DW5l0w

‘இந்தப் பணத்திற்காக உலகத்தில் போன உயிர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது என்னும்போது, இந்தப் பணம் தங்கள் காதலுக்கு எமனாய் வந்து நிற்கப் போகிறதோ!…’ என்ற எண்ணம் சம்யுக்தா மனதை அரித்து கொண்டிருந்தது என்னவோ உண்மை.

தன் தந்தை பல்தேவ், கோஸ்வரர் என்று எப்பொழுது, ஈஸ்வருக்கு தெரிய வந்ததோ, அன்றிலிருந்து ஈஸ்வர் புலம்பல் நிற்கவில்லை. பல்தேவும் ஈஸ்வர் பயப்படும் அளவிற்கு கோடீஸ்வரர் தான். 

‘அருணாச்சலம்’ படத்தில், ரஜினி பேப்பர் ஒன்றை எடுத்து, தனக்கு சொந்தமான கம்பெனிபற்றிய விவரங்களைப் படித்துச் சொல்வது போல், பல்தேவ் கீழ் உள்ள கம்பனிகளின் எண்ணிக்கை அதிகம்.   அந்த மூன்று குரங்குகள் செய்த போதனையின் விளைவு என்று சொன்னாலும், பல்தேவின் பண வெறி எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

‘சாதாரண மிடில்  கிளாஸ் குடும்பங்களே, அந்தஸ்து பார்க்கும்போது, மல்டி மில்லியனர் ஆன பல்தேவ் இந்தக் காதலை ஏற்பாரா?… 

தொழில் சக்ரவர்த்திகளும், ராஜ குடும்பங்களும்,  கோடீஸ்வர ஜாம்பவான்களும், உன் கரத்தைப் பிடிக்கக் காத்திருக்க, பின்புலம் எதுவும் இல்லாத ஈஸ்வர் என்ற அனாதையாய் ஏற்பாரா?…’ சம்யுவிடமே ஈஸ்வரை வைத்துக் கேட்டு இருக்கிறார்கள்.

பதில் தான் சம்யுவிடம் இல்லை. பதில் சொல்லும் நிலையிலும் சம்யு, பல்தேவ் உறவு இருக்கவில்லை.  

சாதாரண தந்தை மகள்போல் பழகி இருந்தாலாவது, தந்தை எப்படிபட்டவர் என்று தெரிந்து இருக்கும். தாய் என்ற உறவு இருந்திருந்தாலாவது அவரிடம் சொல்லி, மெல்ல விஷயத்தைத் தந்தையிடம் கொண்டு சென்று இருக்கலாம். அதற்கும் வழியில்லை.  

சம்யுக்தாவை பொறுத்த வரை தந்தையும் ஒரு அந்நியரே!… ‘

பணத்தின் மீது எல்லையற்ற வெறி’ என்பது கட்டிய மனைவியையும், ஒரே மகளையும் இத்தனை வருடம், ‘உழைப்பு என்ற பெயரில்’ பிரிந்து இருப்பதே சாட்சியாக இருக்க, காதலித்து மணம் புரிந்து இருந்தாலும், தன் தந்தை இந்தக் காதலை ஏற்பது சந்தேகமே என்ற எண்ணம் வலுவாகச் சம்யுக்தாவிற்கே இருந்தது. 

ஈஸ்வரிடம், ஹேமாவிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத ஒருவித பயம், தவிப்பு, உள்ளுணர்வு சம்யுக்தாவிடம் அலறிக் கொண்டிருந்தது.       

ஆனால், இவர்களைப் பிரிக்கப் போவது பல்தேவின் பணம் இல்லை. அதையும் தாண்டிய ஒன்று. இந்தியாவின் தலை எழுத்தை, அனைத்து குடும்பங்களின் தலைவிதியை மாற்றிக் கொண்டிருக்கும் ஒன்று. பொதுமக்கள் தங்கள் தினசரி வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் இந்த அரக்கனை பற்றித் தெரிந்து தான் இருப்பார்கள். இந்த அரக்கனால் பறிக்கப்பட்ட உயிர்கள் ஏராளம்.  

ஆயுத கடத்தல்/arms trafficking/ gun mafia என்ற அரக்கன் தான் அது.  

சொந்தமான துப்பாக்கிகள் வைத்திருப்பவர்  எண்ணிக்கை  என்ற கணக்கெடுப்பின் படி உலகநாடுகள்  178டில் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியா  இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறது எகனாமிக் டைம்ஸ் ஆய்வறிக்கை.

எங்கு டிமாண்ட் அதிகமாய் இருக்கிறதோ, அங்கே சப்ளை அதிகமாக இருக்கும்.   

இப்படி நாளுக்கு நாள் மரணங்கள் ஏற்படுத்தும் இந்த அரக்கனின் வலையில் தான், அவர்களே அறியாமல் சம்யுக்தாவும், சம்யுக்தாவால் அவளைச் சுற்றி இருப்பவர்களும் சிக்கி இருக்கிறார்கள்.  

தன்னையும், ஈஸ்வரையும், தங்கள் காதலையும் இந்த அரக்கன் தான் பலி கேட்கப் போகிறது என்ற உண்மை சம்யுக்தாவிற்கு தெரியவில்லை.

நிழலைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்தவளை சூழ,  அந்தகாரம், காரிருள்  வந்து கொண்டிருப்பது புரியவில்லை.

தினம் தினம் பில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இந்த ஆயுத தொழிலுக்குப் பக்க பலமாய் போதை மருந்து கடத்தல், ஹியூமன் ட்ராபிக்கிங், பாலியல் குற்றங்கள் ஹவாலா, TERROR FINANCING, சைபர் குற்றங்கள் என்று எண்ணில் அடங்காக் கரங்கள் நீண்டு கொண்டிருக்கும். 

அந்தக் கரங்கள் தான் சம்யுக்தாவை சுற்றி வளைக்க ஆரம்பித்திருந்தது. 

அன்று, அந்தக் கௌரவ சபை, திரௌபதி என்ற பெண்ணின் மானத்தோடு விளையாட முற்பட்டது. இன்று, இந்தச்  இந்த நெட்ஒர்க் வளையத்தில்  சிக்க போகும் சம்யுக்தாவின் பெண்மையோடு விளையாட, எத்தனை கரங்கள் நீளப் போகிறதோ!

Pin by My Info on Mahabharata and Ramayana | Ganesha art ...

ரட்சிக்க ஸ்ரீ கிருஷ்ணரை சரணடையும் திரௌபதியாக நிற்பாளா?…

இல்லை, ‘சும்ப, நிசும்பர்கள்’ எல்லை மீறியப் போது  பார்வதி தேவியானவள், தனக்குள் இருக்கும் சக்தியை எல்லாம் திரட்டி, ‘மஹாகாளியாக’ உருமாறி, பெண் இனத்தை இழிவு செய்யும் அரக்கர்களை வதம் செய்ததை போல், இன்னொரு அசுர வதம் இங்கே மீண்டும் நடக்க போகிறதா?

ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் இருக்கும் ஆத்ம சக்தி, மனபலம், சங்கல்பம், வைராக்கியம் பற்றித் தெரியாமல், எல்லா கால கட்டத்திலும் பெண்மையை போகப் பொருளாய் மட்டுமே  நினைத்து, விளையாடிப் பார்க்க அரக்க கூட்டம் தயங்குவதில்லை என்பதே நிதர்சனம். 

இன்றுள்ள நிலையில் திரௌபதிகள், தாமே  அர்ஜுனனாய், கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் காண்டீபமாய் ஏந்தியே ஆக வேண்டும்.

பீமனாய் மாறித் தொடையை பிளந்து உயிரைப் பறிக்க வேண்டும். 

மஹாகாளியாய் மாறி ரத்தத்தை குடிக்க வேண்டும்.

இன்னொருத்தர் வந்து காப்பாற்றுவார் என்று காத்து கொண்டிருந்தால், காத்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

இதைக் காலம் உணர்த்தும்போது சம்யுக்தாவின் நிலை?  

இங்கு விளையாடப்படப் போகும் ஆட்டம் உயிர்களோடா, இல்லை மானத்தோடா?  

இதைப் பற்றி அறியாத சம்யு, ஈஸ்வரை மீண்டும் தேற்றுவதில் தன் கவனத்தை செலுத்தினாள்.    

  “ஈஸ்வர்!… எத்தனையோ முறை சொல்லிட்டேன். நான் என் அப்பா இல்லை என்று… நான் மேஜர். என் அப்பா ஏற்று கொண்டாலும், ஏற்று கொள்ளாவிட்டாலும் இந்த ஜென்மத்தில் நீ தான், நீ மட்டும் தான் என் கணவன் ஈஸ்வர். இதை அந்தக் கடவுளே வந்தாலும் மாற்ற முடியாதுடா… உன் சம்யுவை நீ நம்பலையா?” என்றாள் சம்யு வேதனையுடன், ஈஸ்வரின் இந்தக் கலக்கம் கண்டு.        

“நம்பிக்கை, நம்பாமல் இருப்பதெல்லாம் அந்தந்த  சூழ்நிலை தீர்மானிப்பது சம்யு. இன்று, ‘என்னைக் காதலிக்கறேன்’ என்று சொல்லும் நீயே, நாளை உன் தந்தையின் முன் என்னை வேண்டாம் என்று சொல்லலாம். 

எப்பொழுது எது நடக்கும், யார் எப்பொழுது எப்படி மாறுவார்கள், என்னவெல்லாம் செய்ய வேண்டி வரும்  என்று தீர்மானிப்பது அவர்கள் இருக்கும் சூழ்நிலையைச் சம்யு.

இன்று காதலாகி, கசிந்துருகி கொண்டிருக்கும்  நீ,  நாளை உன் தந்தையின் முன், ‘என்னை வேண்டாம்’ என்று சொல்லும் சூழ்நிலை வந்தால்?… 

செல்வம் சொன்னது போல், இந்தக் காதல் நமக்குள் வந்திருக்க கூடாது சம்யு. எனக்குமே அது தான் சரியென்று பட்டது. அதனால் தானேடீ மனசுக்குள் உன்மேல் அவ்வளவு காதல் இருந்தும், உன்னை விட்டு விலகி விலகிப் போனேன். அப்படியே விட்டு இருக்க  வேண்டியது தானேடீ!…

என்னை எதுக்கு துரத்தித் துரத்திக் காதலிச்சே!…  இப்போ, உன்னை இழந்துடுவோமோ என்று நொடிக்கு நொடி என்னைத் துடிக்க வச்சிட்டு இருக்கேடி. இந்தக் காதல் திருமணத்தில் முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதற்குக் கதைகளில் சொல்லப்படுவது போன்ற, ‘happily ever after’ முடிவு இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.” என்றான் ஈஸ்வர் பெருமூச்சுடன்.

அவன் குரலில் அத்தனை தவிப்பு, வேதனை. சம்யுக்தா கரம் தன்னிடம் சேராதோ என்ற பரிதவிப்பு மிக நன்றாகத் தெரிந்தது.       

“இப்போ எங்கே இருக்கே?…” என்றாள் சம்யு.

“கோயிலுக்குக் கொஞ்சம் தூரத்தில் தான் சம்யு. இங்கே போலீசும் செக்கிங் அது இதுன்னு ரெண்டு மணி நேரமாய் வழி முழுக்க படுத்தி எடுத்துட்டு இருக்காங்க. … சம்யு மனசு சரியில்லை.  இந்தப் பிறந்த நாள் பூஜை எல்லாம் இந்தப் பிரச்சனையெல்லாம் ஓய்ந்த பிறகு வைத்துக்கலாம் சம்யு. சூழ்நிலை சரியில்லை. நான் அப்படியே கிளம்பறேன் சம்யு. மனசு என்னவோ பதறிட்டே இருக்குடா.” என்றான் ஈஸ்வர்.

“வேறு எதுவும் பேசாதே ஈஸ்வர்… எத்தனை மணி ஆனாலும், நீ இன்று கோயிலுக்கு வந்தே தான் ஆகணும். என்றைக்காவது இப்படி உன்னிடம் எதையவது கட்டாயப்படுத்தி கேட்டு இருக்கிறேனா?… இன்று கேட்கிறேன் ஈஸ்வர். கோயிலுக்கு வா… இன்று நீ என்ன ஆனாலும் இங்கு வந்தே ஆகணும். நீ வராமல் இந்த இடத்தை விட்டுக் கிளம்பவே மாட்டேன். 

வந்து சேரு… நீ நடந்து வருவியோ, பறந்து வருவியோ எனக்குத் தெரியாது. வந்துடு ஈஸ்வர். உன் சம்யு கிட்டே வந்துடு… உன் சம்யு உனக்காக இங்கே காத்திருப்பேன் ஈஸ்வர். நேரில் பார்க்கலாம்.” என்ற சம்யுக்தா அழைப்பைத் துண்டித்து விட்டு, பெருமூச்சுடன் திரும்ப, ஹேமா அவள் தோளை ஆறுதலாய் தட்டி கொடுத்தாள்.

“கடவுள்மேல் பாரத்தை போடு சம்யு. நடப்பது எதுவுமே நமது கையில் இல்லை. நடப்பது நடந்தே தீரும். உள்ளே வா… முகம் வாடிப் போய் இருக்கு… ஈஸ்வர் வந்துடுவார்.” என்று உள்ளே அழைத்துச் சென்ற ஹேமா, சம்யுவுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, அரட்டை அடித்து, சம்யுவின் மனதை மாற்ற ஆவண செய்துகொண்டிருந்தாள்.      

மனதில் இனம் புரியாத பயம், கவலை, பாரம் சூழ்ந்திருந்தாலும், முயன்று ஹேமா பேச்சில் தன்னை தொலைத்து கொண்டாள் சம்யு. ஹேமாவின் பேச்சில் கிண்கிணியாய் தன் கவலை மறந்து சிரிக்கவும் ஆரம்பித்தாள்.

சம்யுக்தாவின்  அந்தச் சிரிப்பைக் மறைவிலிருந்து கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கு, ஏனோ அது தான் சம்யுக்தாவின் கடைசி சிரிப்பாகத் தோன்றியது.

அந்தச் சிரிப்பை அடியோடு அழிக்கும் வேலையில் தான் ஈடுபட போவதை நினைத்துக் கண்ணீருடன் நின்றிருந்தார் அவர்.

அவர் கேசவ மூர்த்தி.     

யாரை நம்பி சம்யுக்தா தன் திருமணத்தை நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தாளோ, எந்த மனிதர் இத்தனை வருடமாய் சம்யுவை தன் மகளாகப் பாவித்து வருகிறாரரோ, திருமண ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி கொண்டிருக்கிறாரே அதே கேசவன் தான்.  

‘curiosity killed the cat/அதிக ஆர்வம் ஆபத்தில் முடியும்’ என்று முன்னோர்கள், சம்பந்தமில்லாத விஷயத்தை அறிய முயலாதே, அதிக கேள்விகள் கேட்காதே’ என்று ஒருவரை எச்சரிக்கை செய்யப் பயன்படுத்தப் பட்ட பழமொழி.     

கேசவன் இன்று இருக்கும் இந்த நிலைக்கு, அவர் போகக் கூடாத இடத்திற்கு, போகக் கூடாத நேரத்தில் சென்று, பார்க்கக் கூடாத பலவற்றை பார்த்து, கேட்கக் கூடாத பலவற்றை கேட்டதால் வந்த வினை என்று சொல்ல வேண்டுமோ!.   

கடந்த ஆறு மாதமாய் கேசவன் சரியாக உண்டதோ, உறங்கியதோ இல்லை. ஏற்கனவே மெலிந்த தேகத்தை கொண்ட அவர், இப்பொழுது பார்க்க எலும்பும் தோலுமாய் தான் தோற்றம் அளித்துக் கொண்டிருக்கிறார். நடை பிணமாய் மாறி எப்பொழுது, எது நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

நடை பிணமாய் மாறி இருக்கிறார் என்பதை விட மாற்றப்பட்டு இருக்கிறார் என்று சொன்னால் சரியாக இருக்குமோ! 

உலகில் உள்ள பல பாதுகாப்பு நிறுவனங்கள் துப்பு கொடுப்பவருக்குக் கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்கக் காத்திருப்பது  இரு கேள்விகளுக்கான பதிலுக்கு.

அந்த இரு கேள்விகளுக்கான விடை, சென்னையில் உள்ள  கோயிலின் அர்ச்சகர் ஒருவரிடம் இருக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப கூட மாட்டார்கள்.

ஒன்று சர்வதேச ஆயுத கடத்தல் மாபியா குழுவின் தலைமை பொறுப்பில் இருக்கும் இருவர், ‘சத்ருஜித், ஜோக்ராஜ்,’ எங்கிருக்கிறார்கள் என்ற விவரம்.

தீவிரவாதிகளுக்கே ஆயுத சப்ளை  செய்து கொண்டிருக்கும் இந்தக் குழுவால், தமிழகத்தில் மாடலிங் கம்பெனி வைத்து நடத்தி கொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து, இருநூறு கிலோ போதை மருந்து பிடிபட்டதாகக் கைதான வழக்கில், பின் உள்ளவர்கள் ஜோக்ராஜ், சத்ருஜித் என்ற  உண்மை.

உண்மையில் அங்குப் பிடிபட்டது இருநூறு கிலோ கஞ்சா இல்லை. இருநூறு  AK-47 என்று அழைக்கப்படும், ‘Avtomat Kalashnikova’ 75-சுற்று குண்டுகளை, ஒரே நேரத்தில் முழங்கக்கூடிய ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள், முன்னூறு மகாசின் என்று துப்பாக்கி ரவைகள் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கைப்பற்றி இருந்தது, பயங்கரவாத தடுப்புப் படை.   (ஏடிஎஸ்)/ANTI TERRORISM SQUAD என்ற விவரம் பொது மக்களுக்குத் தெரியாது. தெரியப்படுத்தப்படவில்லை.

எந்த உண்மையைப் பொது மக்கள்  அறியவில்லையோ, அது அவர்களைப் பாதிக்காது. Ignorance is bliss. அறியாமையே பேரின்பம்.

இந்த ஆயுத வர்த்தகத்திற்கு பின்னால் இருப்பதும் சத்ருஜித், ஜோக்ராஜ்.   உலகமே அவர்கள் ஆப்கான், பாகிஸ்தானில்தான் ஒளிந்து இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவர்கள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிந்தவர்களில் கேசவனும் ஒருவர்.     

இந்தியாவின் எல்லை புறத்தில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினருடன் சென்ற வாகனங்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்குக் காரணமாய் இருந்த ஆயுதங்களைச் சப்ளை செய்து , 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்/CRPF) கொல்லப்பட்டதின் பின்புலமாக நின்ற ஜோக்ராஜ், சத்ருஜித் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள்.

இன்னொன்று அந்த மாபியா குழுவின் தமிழக பினாமியாக, லோக்கல் தாதா பரணியின் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் ஒருவன் யார் என்ற உண்மை அறிந்தவரும் கேசவனே!   

அந்தக் குழுவின் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் அவரும், சம்யுக்தாவும், ஹேமாவும் இருக்கும் உண்மை தெரிந்தவரும்  கேசவன் ஒருவரே.  

சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சார்ந்த கோயில் அர்ச்சகரும், மருத்துவர்களான சம்யுக்தவிற்கும், ஹேமாவிற்கும், சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் தேடும் மாபியா குழுவிற்குமான பாதை எங்கே, எப்படி இணைந்திருக்க முடியும்!     

எப்படி இணைந்தது என்ற உண்மை தெரிந்த கேசவனின் நிலையோ, வாய் இருந்தும் ஊமையாக இருக்க வேண்டிய நிலை.

தங்கள் வாழ்வையே அடியோடு தடம் புரளச் செய்யக்கூடிய உண்மை அறியாமல், திருமண கனவுகளுடன் நிற்கும் மணப்பெண்ணாய் ஒருத்தி, தோழியின் திருமணத்தைக் கண்டு சந்தோச வானில் சிறகடித்து கொண்டிருக்கும் ஒருத்தி.  

இவர்கள் சந்தோஷத்தை அழிக்க நினைப்பவனின் கைப்பாவையாக, சூழ்நிலை கைதியாகக் கேசவன்.                 

கேசவனின் முகம் நேரம் ஆக ஆக அவரின் பயத்தால் வெளிறிக் கொண்டிருந்தது.  

கடந்த ஆறு மாதமாய், அவர் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைச் சம்யுக்தாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று தவித்து, துடித்துக்கொண்டிருந்தார்.

உலகின் மிகப் பெரிய பாவங்களில் ஒன்று நம்பிக்கை துரோகம். தன்னை நம்பியவர்களை முதுகில் குத்துவது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தைச் சம்யுக்தாவிற்கு செய்யப் போவதை நினைத்து மனதிற்குள் கதறி துடிப்பதை  கேசவனுக்கு வேறு வழியே இல்லை.

மாலினி மட்டும் உயிரோடு இருந்திருந்தார் என்றால், தான் செய்யப் போகும் பாவத்திற்கு தன்னை மன்னிக்கவே மாட்டார் என்பது மட்டும் புரிந்தது.  

ஆனால், அவர் தெரிந்து கொண்ட விஷயங்களைச் சொல்ல முயலும் போதெல்லாம், தன் நெற்றியில் வைக்கப்பட்ட துப்பாக்கியும், துப்பாக்கி வைத்தவனின் குரலும் காதில் ஒலிக்க ஆரம்பிக்க, சொல்ல வருவதை தண்ணீருடன் உள்ளே முழுங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கேசவன்.

ஆறு மாதத்திற்க்கு முன் தனக்கு நடந்தது மீண்டும் நினைவிற்கு வர, தள்ளாட்டத்துடன் கோயில் தூணில் அப்படியே சரிந்து அமர்ந்தார்.   

அதை நினைக்கும் போதெல்லாம் கேசவனின் கை, கால் அவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதற ஆரம்பித்தது .

ஆறு மாதத்திற்க்கு முன் கேசவன் கடத்தப்பட்டு இருந்தார். அவர் கடத்தப்பட்டது அவர் குடும்பத்திற்கே இன்றுவரை தெரியாது. அத்தனை அழகாய் பிளான் போட்டுக் கடத்தி இருந்தார்கள் கேசவனை, ‘ஹோமம் செய்ய வாருங்கள்’ என்ற நாடகத்தை நடத்தி.

‘ஹோமம் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி வீட்டை விட்டு வந்தவரையே, ஹோமாக்னி குண்டத்தில் தூக்கி போடாதது ஒன்று தான் குறை.

 கடத்தப்பட்ட அந்த நாளும், கடத்தி கொண்டு சென்று தன்னை வைத்திருந்த அந்த ஹோட்டலின்  உள் நடந்த குற்றங்களும், கேசவனை நடுங்க வைக்கப் போதுமாய் இருக்க, அன்று நடந்தது மீண்டும் மனக்கண்ணில் திரும்ப ஓட, கேசவன் தன் இதயத்தைப் பிடித்துக் கொண்டார்.

வெளியே பார்ப்பதற்கு மிக அழகான, மிகப் ப்ரம்மாண்டமான, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அது.   ஆனால், அந்த அழகின் பின் உள்ள ஆபத்து வெளியே யாருக்கும் தெரியாமல் போனது. அந்த ஹோட்டலின்  அடித்தளத்தில் அமைத்திருந்தது நிழல் உலகத்தின் இன்னொரு முகம். கோரமான முகம். 

பயமானது நாடி, நரம்பு, ஒவ்வொரு அணுவிலும் மெல்ல பரவ, மூச்சு விடுவதே சிரமமாய் மாற, இதயம் வெளியே தெறிந்து வந்து விழுந்து விடுமோ என்று எண்ணும் அளவிற்கு, இதய துடிப்பினை அதிகரிக்க செய்து, கண்ணால் பார்ப்பதை தாங்க இயலாமல்  பயத்திலேயே உயிரானது போகச் செய்யும் அளவுக்கு,   பல குற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் இடம்.    

வெளியே இருந்த அழகிற்கும், ஆட்டம், கொண்டாட்டத்திற்கும்,  ஹோட்டலின்  அடித்தளத்தில் இருந்த அந்த அறைகளின் கோரத்திற்கும்  எத்தனை வித்தியாசம்!

இரு முகம் கொண்ட மனிதர்களைப் போலவே, அந்த ஹோட்டலும், ‘பூவிற்குள் மறைந்திருக்கும் நாகமாய்’ தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் விஷத்தை மட்டும் கக்கி கொண்டிருந்தது.

கீழ் தளத்தில் இருந்த பல அறைகளில் ஒன்றில்  நாற்காலியில் தான் அமர வைக்கப்பட்டு இருந்ததும், சுற்றிலும் எந்தப் பஞ்சமஹா பாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் என்று முகத்தில் முத்திரை குத்தியது போல்  இருந்த சிலர் அங்கெங்கெ நின்றுக்க, அவர்கள் முகத்தைப் பார்த்தே  பாதி உயிர் விட்டது கேசவனுக்கு. 

அந்த அறைக்கு வெளியே இருவரை கட்டி வைத்துத் தோலை சாட்டை அடியால் உரித்துக் கொண்டிருப்பது தெரிய, அடி வாங்கி கொண்டிருந்தவர்களின் அலறல் கேசவனின் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.

கேசவன் அன்று அந்த ஹோட்டலின் கீழ் தளத்தில்  கண்டது எல்லாம், வாழ்வில் எந்த மனிதனும் பார்க்கக் கூடாத பல வக்கிரங்களின், குற்றங்களின், நிழல் உலகத்தின் மறுபக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு மனிதனை எந்த அளவுக்குக் கொடுமை படுத்த முடியும், எப்படியெல்லாம் கொடுமைபடுத்தலாம், எப்படியெல்லாம் சிறுக சிறுக சாகடிக்கலாம்  என்று பல பாகம் கொண்ட, ‘encyclopedia’ அங்கே வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை தான்.

கேசவன் வயதான  மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்.  தட்டில் விழும் காசில், அரசாங்கம் கொடுக்கும் மாத வருமானத்தில் நிறைவாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானகோடி பொதுமக்களில் ஒருவர்.

இதைப் பற்றி எல்லாம் வரும் சினிமாவை கூடப் பார்த்திராத, அப்பாவியான கேசவன் பயத்தில் வெளிப்படையாகவே நடுங்கி, ஒடுங்கி அமர்ந்திருந்தார்.

அவர் பயத்தை அதிகரிப்பது போன்று, எதிரே ராட்சசனின் மறு உருவம்போல், தனக்கு எதிரே இருந்த மிகப் பெரிய டேபிளின் பின் வாயில் புகைந்து கொண்டிருக்கும், ‘ஹவானா சுருட்டை’ ஆழ்ந்து இழுத்தவாறு மானை அடித்துக் கொள்ளும் புலியின் கண்களில் இருக்கும் பளபளப்புடன் அமர்ந்திருந்தவனை கண்டு மிடறு விழுங்கினார் கேசவன்.

“என்ன கேசவன்!… உங்க வேலை கோயில், பூஜை தானே!… இந்த வயதில்  ராமா, கிருஷ்ணா, நாராயணா என்று இருப்பதை விட்டுட்டு, எதுக்கு உங்களுக்கு இந்த வேலை?… இப்போ பாருங்க உங்களை உயிரோடு விடுவதா இல்லை கொல்வதா!….  

அப்படியே கொல்வது என்றாலும் சித்திரவதை செய்து கொல்வதா  இல்லை  அணு அணுவாய் துடிக்க வைத்து , அதை ரசித்துக் கொல்வதா  என்று என்னை யோசிக்க வச்சிடீங்க!… சொல்லுங்க கேசவன் ரொம்ப வருஷமாய்  எனக்குத் தெரிந்தவர் வேற நீங்க… சோ, எப்படி சாக விருப்பம் என்று நீங்களே முடிவு செய்யுங்க. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றான் அந்த அரக்கன். 

எப்படி சாகடிக்க வேண்டும் என்று சாகடிக்கப்பட போகிறவரிடமே சாய்ஸ் கொடுத்து, அவர்கள் முகத்தில் வரும் மரண பயத்தை ரசிக்கும் ஒரே ஆள் அவனாகத் தான் இருப்பான்.  

பரணி, விக்ரமின் பாஸ் அவன் . சத்ருஜித், ஜோக்கராஜின் மாபியா குழுவின் சவுத் இந்தியா தலைவன்.        

“சார்!… சார்!…” என்று அவர் பதற, அதை எவ்வித ரியாக்ஷன் காட்டாமல் பார்வை பார்த்த அந்த மனிதன் இல்லை மிருகம்,

“உங்க உயிர் மட்டுமில்லை, உங்க குடும்பத்தில் உள்ள  சின்ன, சின்னக்  குழந்தைகளின் உயிரும் நல்லா  இருக்கனும்  என்று  நான்  நினைக்கிறன் கேசவன். நீங்க என்ன நினைக்கறீங்க?…

 உங்க மகளுக்கும், மருமகளுக்கும் இப்போ தான் குழந்தைங்க பொறந்துச்சாமே!… உங்க குடும்பத்தில் பொண்ணுங்க எல்லாம் தேவதைங்க மாதிரி இருக்குமாமே!…” என்று  கண்ணில் வேட்டை நாயின் வெறித்தனம் மின்ன,  பேசிய பேச்சு, இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும், கேசவனின்  கை, காலை நடுங்க செய்து கொண்டிருந்தது என்னவோ உண்மை.

கேசவனை மேலும் துடிக்க வைப்பது போல், அந்த வீட்டின் ஒரு அறையிலிருந்து அலறிக் கொண்டே, அரை குறை ஆடையுடன் ஓடி வந்த பெண்ணொருத்தியின் கதறல், கண்டு திகைத்து விழித்தார் கேசவன்.

ஓடி வந்த பெண் கேசவன் கையைப் பிடித்துக் கொண்டு, அவருக்குப் புரியாத பாஷையில் கண்ணீர் விட்டு, கதறி கையெடுத்து கும்பிட்டு கொண்டிருந்தாள். 

ஒரு சக மனுஷியின் வேதனை புரிய பாஷை தேவையா என்ன!… .அந்தப் பெண் இருந்த நிலையும், அவள் கதறலும் சொல்லாமல் சொன்னது அங்கே மனித மிருங்கங்கள்  வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன என்பதை.

கேசவன் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவரால் முடிந்தது அது ஒன்று மட்டும் தான். அவருக்கே கண் முன் மரணம் நின்றிருக்க, அவரால் என்ன செய்ய முடியும் என்ற நிலை.

அவரும் பெண்ணால் பிறந்து, பெண்ணுடன் வாழ்ந்து, பெண் பிள்ளைகளைப் பெற்று, தினம் தினம் இறைவனை வழிபட வரும் பெண்களைத் தெய்வமாய் பார்ப்பவர் ஆயிற்றே.   அன்று தன் கையைப் பிடித்துக் கதறி கொண்டிருந்த பெண்ணைக் கண்டு உறைந்து போய் நிற்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை அவருக்கு.    

அந்தப் பெண்ணின் கதறல் அவரை அசைத்துப் பார்க்க, சற்றும் யோசியாமல், தனக்கு எதிரே இருந்த டேபிள் மேல் அந்த அரக்கன் வைத்திருந்த  துப்பாக்கியைப் பாய்ந்து எடுத்து அந்தக் கூட்டத்தின் தலைவனுக்கே குறி வைத்து விட்டார்.

“அந்தப் பெண்ணை விட்டுடுங்கோ… பெண் பாவம் பொல்லாதது… நீங்கோ  தவறான வழியில் போறேள்… பகவான் உங்களை எல்லாம் சும்மா விடமாட்டார்…” என்று கை நடுங்க துப்பாக்கியைக் குறி வைத்து, அந்தப் பெண்ணைத் தன் பின்னால் மறைத்துக் கொண்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார் கேசவன். கேசவன் துப்பாக்கியோடு வெளியேற முயல,  கொஞ்சம் கூட அதைப் பற்றிக் கவலை படாமல், தன் காதிற்குள் கை வைத்துக் குடைந்து கொண்டிருந்தார் அந்த ஆள்.

“ரொம்ப சினிமா பார்ப்பீங்களோ!… புல்லட் போட்ட துப்பாக்கி டேபிள் மேல் வைக்க, நான் என்ன லூசா?… குண்டு இல்லா துப்பாக்கி பொம்மைக்குச் சமம். வச்சி விளையாடுங்க…” என்றவர் பேச்சைக் கேட்டு விழித்து நிற்க, அடுத்த நொடி பின்னால் இருந்து பலமாய் யாரோ தாக்க, மயக்கத்தில் ஆழ்ந்தார்.

மயக்கம் சூழும் முன் அந்தப் பெண் கதற, நால்வர் அவளைத் தூக்கி செல்வதை கண்டு, தடுக்க முடியாதவராய் மயங்கி விழுந்தார்.

மீண்டும் நினைவு வந்தபோது, முன் அமர்ந்திருந்த அதே நாற்காலியில் அமர்ந்து இருப்பதையும், அந்தக் கூட்ட  தலைவன் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருப்பதையும் கண்டார்.

“என்ன கேசவன் சும்மா ஒரு பொய் சொன்னேன்… துப்பாக்கியில் புல்லட் இல்லையென்று அதை அப்படியே நம்பிடுவீங்களா என்ன!… சின்னப் பிள்ளை மாதிரி இருக்கீங்க. எதுக்கு உங்களுக்கு இந்த வேலையெல்லாம் சொல்லுங்க?. 

ஒரு துப்பாக்கியில் அதிக பட்சமாய் ஆறு புல்லெட் இருக்கும். இங்கே ஐம்பதிற்கும் மேற்பட்ட என் ஆட்கள் இருக்கிறார்கள். எப்படி தப்பி போவீங்க?…குறி பார்த்து முதலில் உங்களுக்குச் சுட தெரியுமா?” என்றவனின் குரலில் அத்தனை நக்கல். 

“பாவி!… படு பாவி… நாசமாய் தான்டா போவீங்க… பெண் வயத்துல பொறந்துட்டு, பகவானே ஏன் இப்படி பெண்ணைச் சிதைப்பதையே தொழிலாய் செஞ்சுட்டு இருக்கீங்க… அந்தப் பிள்ளையை விட்டுடுங்கடா….” என்று கேசவன் கதறினார்.

“சரி விட்டுடறேன்… அந்தப் பெண்ணுக்குப் பதில் உங்க வீட்டு பெண்களை இங்கே தொழிலுக்கு அனுப்பி வைக்கறீங்களா கேசவன்… இந்தப் பெண்ணை விட்டுடறேன் ?…” என்று அந்த மனிதமிருகம் வெகுநக்கலாகக் கேட்க, கேசவன் ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தார்.

‘அந்தப் பெண்ணின் நிலையில் தன் வீட்டு பெண்களா?…’எந்தப் பெண்ணையும் அந்த நிலையில்  நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

“இங்கே பாருங்க கேசவன்… உங்க தட்டில் ஐந்தும் பத்தும் விழறது மாதிரித் தொழில் இல்லை ஹியூமன் ட்ராபிக்கிங், விபச்சாரம், நீல படத் தொழில் எல்லாம். 4.5 மில்லியன் பேர் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்காங்க. நான் சொல்வது தோராயமான எண்ணிக்கை தான். 

கணக்கில் அடங்காப் பணம் இதில் புழங்குது. டிமாண்ட் இருக்குது. அதனால் சப்ளை செய்யறோம்.

சினிமாவில், விளம்பரங்களில், ரோட்டில் என்று பெண்ணின் தேகத்தை போகப் பொருளாய் பார்ப்பவர்கள், நான்கு சுவற்றுக்குள் இருந்து, நீல படம் பார்க்கிறேன் என்று இருப்பவர்கள், காமத்திபுரா, சோனா கஜி போன்ற கோடிக்கணக்கான இடங்களில் காலம் காலமாய் தங்கள் இச்சைகளை தீர்க்க வருபவர்களும் பொது மக்கள் தான் கேசவன்…. இல்லையென்று சொல்ல உங்களால் முடியுமா?

நாங்க பாவம் செய்கிறோம் என்றால், இதையெல்லாம் செய்பவர்கள் என்ன புண்ணியம் செய்கிறார்களா என்ன?…

 ஹோட்டலில் சாப்பாடு ஆர்டர் செய்வது போல் இங்கே catalogue பார்த்து ரெக்வஸ்ட் கொடுப்பவர்கள், லட்சக்கணக்கில் இதற்காகப் பணம் செலவழிக்க தயாராய் இருப்பவர்கள்  இங்கே இல்லையென்று சொல்லிடுங்க பார்க்கலாம்.    

அரைகுறை உடையோடு ஒரு பெண் நடிக்கிறாள் என்றால் அது வயித்துக்கு பிழைப்புகா இருக்கலாம் இல்லையென்றால் இன்னும் ஒரு கோடி சேர்த்து கொடுத்தால் எப்படி வேண்டும் என்றாலும் நடிக்கத் தயாராய் இருக்கலாம் இல்லையென்றால் இதோ அந்தப் பெண்ணைப் போல்  எங்களால் பாடம் புகட்டப்பட்டு, அந்தப் பெண்ணின் சுயம், தன்மானம், வைராக்கியம் எல்லாம் உடைக்கப்பட்டு    இதிலிருந்து மீளவே முடியாது என்ற உண்மை புரிந்து, இந்த வாழ்க்கையை ஏற்று கொண்டவர்களாய் இருக்கலாம். இதைப் பற்றி எல்லாம் பொது மக்கள் கவலை படுவார்கள் என்றா நினைக்கறீங்க?” என்றான் அவன்.

“நீ பணம் சம்பாதிக்க பொண்ணுகளை கஷ்டப்படுத்திட்டு, மத்தவங்க மேல் பழி போடாதேள்…” என்றார் கேசவன்.

“பழி போடறேனா?… தன் வீட்டு பெண்களைப் பத்திரப்படுத்திட்டு, தன் வீட்டு பெண்ணை மட்டும் எவனும் பார்க்கக் கூடாதுன்னு மைண்ட் செட் இருக்கிறவங்க, வெளியே கண்களால் துச்சாதனன் வேலை செய்வதில்லை என்று சொல்லிடுங்க பார்க்கலாம். 

தன் வீட்டு பெண்களையே அடுப்படி, படுக்கை அறை தாண்டிச் சுயமாய் யோசிக்க, செயல்பட வைப்பவங்க எத்தனை பேர் சொல்லுங்க.

படுக்கை அறையில், ஒரு பெண் ‘நோ என்று சொன்னால் நோ’ தான். அதைச் சொல்லக் கூட இங்கே இந்திய குடும்பங்களில் எத்தனை பெண்களுக்கு உரிமை உண்டு சொல்லுங்க.

‘marital rape’ பற்றிக் கேள்விப்பட்டு இருக்கீங்களா?  அதையே தன் குடும்ப பெண்களுக்குச் செய்யத் துணியும் இவனுங்களை யார் கேள்வி கேட்பது?   

தன் வீட்டு பெண் பத்தினியாய் இருக்கணும். மத்தவன் வீட்டு பெண்கள் என்றால் போகப் பொருளாய் பார்ப்பவகளிடம் உள்ள சபலம், வீக்நெஸ் நாங்க பயன்படுத்தி கொள்கிறோம் கேசவன்.  

பெண்கள்மேல் வரும் போதை அத்தனை சுலபமாய் அடங்காது. எப்படி போதை மருந்தை, மதுவை  பழகி விட்டால்  அதிலிருந்து மீள முடியாமல் அடிக்ட் ஆகி விடுவார்களோ, அதைப் போன்றது தான் இதுவும்.

சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் இருக்கும் வரை, எங்களை மாதிரி அதைப் பணத்திற்காக, ‘exploit’ செய்து கொள்பவர்களும் இருக்க தான் செய்வார்கள்.

இவர்களைத் திருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இதுபோல் பெண்கள் கடத்தப்படுவதும் நடக்க தான் செய்யும். தொடைகளுக்கு நடுவே மட்டும் யோசிப்பவர்களே பாவம், புண்ணியம் பார்க்கலை கேசவன். நான் பார்த்து என்ன ஆகப் போகுது சொல்லுங்க. நெடுநாளைய நண்பர் வேற நீங்க …. சோ உங்களுக்கு வேண்டும் என்றால் முதல் முறை என்பதால் ஸ்பெஷல் ஆபெர் கொடுக்கிறேன்…” என்றவர் கண் ஜாடை காட்ட , இன்னொரு பெண் வந்து நின்றாள் அரைகுறை ஆடையுடன்.

“ஷி இஸ் ஆல் யுவர்ஸ்… என்ஜாய்…” என்றவனின் பேச்சைக் கேட்டுக் கேசவனின் இதயம் நிற்காதது ஒன்று தான் குறை.

“படுபாவி!… சண்டாளா!… நான் உன்னையே பாவம் செய்யாதே என்று சொல்லிட்டு இருக்கேன்… நீ என்னையும் சேர்த்து பாவம் செய்யச் சொல்றே!… பகவானே!…” என்று அவர் புலம்ப, அந்தப் பெண் அவர் நாற்காலியில் வந்து அவர் மேலேயே அமர்ந்து கொண்டு சிரிக்க, கேசவனின் சர்வ நாடியும் ஒடுங்கி போனது.

எந்தப் பெண்ணின் வயற்றில் பிறந்த குழந்தையோ அவள்…இன்று போகப் பொருளாய், சதை பிண்டமாய் தன் மேல் சாய்ந்து அமர்ந்திருக்க, கை எடுத்துக் கும்பிட்ட கேசவன்,

“தாயே…வேணாம்….நீயும் எனக்கு மகள் மாதிரி தான்… நகர்ந்து போ…”என்றார் கதறலாக.

ஒரு கணம் வலியைக் காட்டிய அந்தப் பெண்ணின் கண்கள் மீண்டும் அலட்சிய போக்கினை எடுத்துக் கொண்டு, “என்னை இந்தத் தொழிலுக்கு விற்றவனே என்னைப் பெத்தவன் தான்.என்னைப் பெத்தவனுக்கே நான் பெண்ணாய் தெரியலை.நீ யாருய்யா எனக்கு அப்பனாய் வருவதற்கு… காசைக் கொடுத்தோமா, இருந்தோமா, போனோமா என்று இருப்பதை விட்டுட்டு தத்துவத்தைப் பேசிட்டு இருக்கே!… என்னை மாதிரி இப்படி ஒவ்வொரு இருட்டு அறைக்குள்ளும் இருப்பது, யாரோ ஒரு தாய் பெற்ற மகள் தானேயா!…” என்றவள் அவர் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள கேசவனுக்கு குமட்டி கொண்டு வந்தது.   

திடீர் என்று மின்னல் ஒளி போல் தன் மேல் பட, திகைத்து விழித்த கேசவனை கண்டு அந்த மனிதன் வாய் விட்டு நகைத்தான்.

“அது ஒன்றும் இல்லை கேசவன் வெளியே போய் நீங்க வாய் திறக்கக் கூடாது இல்லை… அதான் ஒரு இன்சூரன்ஸ்காக உங்களை அந்தப் பெண்ணுடன் நெருக்கமாய் இருப்பது போல் புகைப்படம் எடுத்தேன்.

எங்களின் இன்னொரு தொழிலும் இது தான். பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பது. நீங்க வாய் திறந்தீங்க என்றால் இந்தப் படம் hd குவாலிட்டியோட எல்லா மீடியாவிலும் வெளியாகும்.

இந்தத் தொழில் எப்படி செய்யறோம் என்று கேக்கறீங்களா?… ரொம்ப சிம்பிள் ஆண்கள் என்றால் இதுபோல் பெண்களுடன் நெருக்கமாய் இருக்கும்போது அந்த அறையில், அவர்களே அறியாமல் வீடியோ எடுப்போம்.

பெண்கள் என்றால் வேலை இன்னும் சுலபம். படுக்கை அறை, சமையல்  அறை, என்று கூடப் பாராமல் விதவிதமாய் செல்பி, பிறந்த நாள், திருமண நாள், நண்பர்கள் உடன்  எடுக்கும் புகைப்படம் எடுப்பது   டிக் டாக், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என்று போட்டோ, வீடியோ அப்லோட் செய்வது, என்று எங்கள் வேலை வெகுசுலபமாக்கி விடுவார்கள்.

ஆடை பொது இடங்களில் மாற்றுவது, துணி கடைகளில் ட்ரையல் பார்த்து வாங்குவது, உடை மாற்றும்போது  பயன்படுத்தினாலும், பயன் படுத்தாவிட்டாலும் கேமரா மூடாமல் இருக்கும் மொபைல், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு வசதி.

அதுவும் சமூக வலைத்தளத்தில் பெற்றோர்களே பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்கள் என்று வித விதமாய் ரக ரகமாய் தங்கள் குழந்தைகள் படத்தை அப்லோட் செய்வாங்க பாருங்க…ரொம்ப ஈஸி.   

வைரஸ் மூலமாய் நாங்களே காமெராவை இயக்கி, பல சமயங்களில் அந்தரங்கத்தை எடுப்போம்.

Hackers can access your mobile and laptop cameras and record you ...

சில சமயம் லூசு மாதிரி இப்படி அப்லோட் செய்துட்டே இருக்கும் புகைப்படங்களை மார்பிங்கை செய்வோம்.ஒன்று மிரட்டிப் பணம் பறிக்கலாம். இல்லையென்றால் இது மாதிரி வீடியோ, போட்டோ வாங்க என்றே சிலர் இருப்பாங்க. அவர்களுக்கு விற்றாலும் எங்களுக்கு வருமானம் தான்.”என்றவனின் பேய் சிரிப்பு கேசவனுக்கு கண்ணை இருட்டி கொண்டு வர வைத்தது.

“உங்களுக்குத் தெரிந்த  இந்த  உண்மை, நாங்க யார், எங்க தொழில் என்ன என்ற ரகசியம் ரகசியமாய் இருக்கும் வரை,  இந்தப் போட்டோ வெளியே வராது.

அதையும் மீறிப் போட்டோ வெளிவருவதை பற்றி நீங்கக் கவலைப்படவில்லை, வெளியே போய் இதையெல்லாம் சொல்வீர்கள் என்றால்  உங்கள் உயிர் போவதற்கு முன், உங்க வீட்டு பொண்ணுங்க அப்படியே, தேவதைகளா இருக்க மாட்டார்கள் கேசவன்.

மீறி உங்கள்மூலம் விஷயம் தெரிய வந்தால், கோழிகளைப் பொறிக்க வேண்டியது வரும். அப்புறம் அய்யோ, அம்மான்னு கதறி பிரயோஜனம் இல்லை. அதுவும் இங்கே இருக்கிறவனுங்க எல்லாம் வெட கோழி கிடைத்தால் அப்படியே…” என்று சொல்லாமல்  நிறுத்தக்  கேசவனுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

“நாளைக்கு உங்க வீட்டில் உள்ள பெண்களின் நிலையும் இதுவாக இருக்க கூடாது என்றால், நீங்கள் வாய் இருந்தும் ஊமையாகச் வெளி உலகத்தில், முக்கியமாய்  சம்யுக்தாவிடம் இருக்க வேண்டியது அவசியம் கேசவன். 

சம்யுக்தாவிடம் உங்கள் வாய் திறந்தால், உங்கள் வீட்டு பெண்களின் ஆடைகள் இங்கே திறக்கப்படும். நீங்க எந்த ஊருக்கும் ஓடவோ ஒளியவோ முடியாது கேசவன். சம்யுக்தாவை சுற்றி என் கவனிப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவள் எத்தனை முறை தண்ணீர் குடித்தாள் என்பது கூட எனக்குத் தெரிய வந்து விடும்.

நீங்க ஹீரோவாக முயன்றால், ஏற்கனவே வில்லனாக இருக்கும் நான் ராட்சசனாய் மாற வேண்டி வரும். நான் அப்படி மாறினால் அது உங்கள் வீட்டு பெண்களின் மேல் விடியும். ball is in your court கேசவன்.” என்று அந்த அரக்கன் பேசியதை இன்று கோயிலுக்குள் அமர்ந்து நினைத்துப் பார்க்கும்போது கேசவனின் இதயம் பலமுறை துடிப்பை நிறுத்தியது.     

ஒருபுறம் மாலினி என்ற மனதால் வந்த சகோதரியின் மகளின் வாழ்வு ஒரு புறம். இன்னொரு பக்கம் தன் ஒட்டுமொத்த குடும்பத்தின் உயிரும், மானமும் என்ற கத்தி தொங்க, கேசவன் ஊமையாகி போனார்.

தன் நிழலைப் பார்த்தே மிரள ஆரம்பித்து இருந்தார். யாரை பார்த்தாலும் பயம். எதைப் பார்த்தாலும் பயம், கோயிலுக்குள் வருவோர் போவோரை எல்லாம் சந்தேக கண்ணுடன் பார்த்தே,  மனநோயாளி ஆகி கொண்டிருந்தார்.   

இதில் யார் தங்களை வேவு பார்க்கிறார்கள், யார் அவன் ஆட்கள் என்று தெரியாமல் அவரால் சம்யுக்தாவிற்கு தேவையான எதையும் சொல்ல முடியவில்லை.  

கோயிலுக்குள் இருந்து கொண்டு மனசாட்சிக்கும், தெய்வ சாட்சிக்கும் எதிராகத் தான் செயல்படுவதை கண்டு கூனி, குறுகி நின்றார். தன் ஒரு உயிர் போகும் என்றால் கூடத் துணிந்து சம்யுக்தாவிடம் பேசி விடுவாரே!…

ஆனால், ‘இதில் தன் வீட்டு பெண்களின் மானம், பெண்மை அல்லவா  பணயமாய் இருக்கிறது’ என்ற உண்மை அவர் வாயைக் கட்டி போட்டு இருந்தது.        

தவிர அந்தத் திருமணம் நடந்தால், அதைத் தான் நடத்தி வைத்தால் தன் குடும்பம் பலியாகும் என்பதால், மனதை கல்லாகி கொண்டு, சம்யுக்தா, ஈஸ்வர், அவர்களின் காதல், இந்தத் திருமணத்தைப் பலி கொடுக்க முடிவு செய்து விட்டார் கேசவன்.

எதிரே அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கோபால கிருஷ்ணர் விக்ரகரத்தை பார்க்க இயலாதவராய், நடுங்கும் கரங்களால் தன் மொபைல் எடுத்த கேசவன், ஒரு நம்பருக்கு அழைப்பை விடுத்தார்.

செய்வது எவ்வளவு பெரிய பாவம், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மன்னிப்பே கிடையாத குற்றம் என்பது தெரிந்தாலும், அவருக்கு வேறு வழி இல்லை.

ஆனால் விதியின் விளையாட்டோ என்னவோ, அவர் அடுத்து அடுத்து டயல் செய்த எந்த நம்பரும் அப்பொழுது அவர் அழைப்பை ஏற்கவேயில்லை.

தன் மொபைலை தரையில் விட்டெறிந்தவர் ,சாஷ்டாங்கமாய் கிருஷ்ணர் பாதத்தில் சென்று விழுந்தார். கிருஷ்ணரின் காலை அவரின் கண்ணீர் துளிகள் கழுவ ஆரம்பித்தது.

“கிருஷ்ணா!… நான் பாவி… மகா பாவி… தவறு செய்பவனை விட, அதற்குத் துணை போவது போல் வாய் மூடி இருக்கும் நேக்கும் தான் அந்த ராட்சசன் செய்யும் பாவத்தில் பங்கிருக்கு. என்னால் எதுவுமே செய்யமுடியலையே கிருஷ்ணா!… 

தினம் தினம் எத்தனை குழந்தைங்க அந்த அரக்க கூட்டத்திடம் சிக்கி துடிச்சுட்டு இருக்காளோ!… பணத்திற்காக ஆயுதங்களை விற்று, உயிரோடு விளையாடி, இவா செய்யும் பாவத்திற்கு எல்லாம் தண்டனையே இல்லையா?

நீ தானே அன்று அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் கீதை போதித்தாய்…

‘யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத 

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்றுஜாம்யஹம் 

‘எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.’

பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய சத்துஷ்க்றுதாம் |

தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே 

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும், யுகந்தோறும் பிறக்கிறேன்.’ என்று சொன்னாயே கிருஷ்ணா!… அந்த வாக்கு என்ன ஆனது? 

தினம் தினம் அந்த வெறி பிடித்த சத்ருஜித் மாதிரி ஆட்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு தானே இருக்கே!..  இதற்கு முடிவு தான் என்ன?… உன்னையே நம்பிட்டு இருக்கும் எனக்கு ஏன் இந்தச் சோதனை?…” என்று கிருஷ்ணர் பாதத்தைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார் கேசவன்.

நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, தன் மாய சிரிப்புடன் நின்றிருந்தான்  அந்தக் கிருஷ்ணன்.

அன்று ஒரு திரௌபதிக்கு ஏற்பட்ட கொடுமைக்காகப் பதினெட்டு நாள் மஹாபாரத போர் நடந்தது. இன்று உலகில் தினம் தினம் கோடிக்கணக்கான திரௌபதியை துகில்  உரிந்து கொண்டிருக்கும் இந்த அரக்க கூட்டத்துடன் போரிட யார் இருக்கிறார்கள்?  

‘திக்கற்றவனுக்கு தெய்வமே துணை’ என்ற நிலையில் அவர்.

தன்னை மீண்டும் தேற்றி கொண்டு மீண்டும் அந்த நம்பர்களுக்கு அழைக்க ஆரம்பித்தார். 

அவர் அழைத்த மூன்று நம்பர்களில் ஒன்று ஈஸ்வருடையது.

அவனை, ‘இங்கே வர வேண்டாம்’ என்று சொல்லவே அவர் அழைத்தது. அவன் விதியோ, சம்யுதாவின் விதியோ அந்த அழைப்பு ஈஸ்வரை சென்று சேரவில்லை.

இன்னொரு நம்பர் அந்த அரக்கனுடையது. சம்யுக்தாவிற்கும் ஈஸ்வருக்கும் இடையே நடக்க போகும் திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் எடுக்கப்படவில்லை.

அந்த அழைப்பை எடுக்க வேண்டியவனோ ஒரு மீட்டிங்கில் இருந்தான். தேஜ் ஏற்படுத்திய நாசத்தை பற்றி, சத்ருஜித் உடன் பேசிக்கொண்டிருந்தான்.

அவர்கள் விதி மாறப் போகும் சமயம் என்பதாலோ அந்த அழைப்பு அவர்களைச் சென்றடையவில்லை.

அடுத்த நம்பர் சம்யுக்தவினுடையது.

கோயிலுக்குள்ளேயே கண் எதிரிலே சம்யுக்தா இருந்தாலும், அவளிடம் எதையும் பேச முடியாத கேசவன், கோயில் கருவறைக்குள் ஒளிந்து கொண்டு, மணியின் மொபைல் மூலமாக, அழைப்பை விடுத்து கொண்டிருந்தார். அந்த அழைப்பும் சம்யுக்தாவை அடையவில்லை.

வேட்டையாடுபவர்களுக்கும், வேட்டையாடபட போகிறவர்களுக்கும் இடையேயான தர்ம யுத்தம் தொடங்க இருப்பதற்கான அச்சாரம் அங்கே இடப்பட்டு கொண்டிருந்தது.

யார் வேட்டை ஆடப் போகிறார்கள்!…

யார் பலியாகப் போகிறார்கள்!…

ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் வேட்டையின் நடுவே, ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்ற அந்த அழைப்புகள் சேர வேண்டியவர்களைச் சேரவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அந்தக் கோயிலில் கேசவனை போல் இன்னொருத்தரும் மறைந்திருந்து சம்யுக்தாவை பார்த்து வருந்திக்கொண்டிருந்தார். அவரின் கண்களில் கேசவனின் நிலை தெரிய அவரின் கண்கள் சிந்தனையுடன் சுருங்க ஆரம்பித்தது.

கேசவன் அறியாமல் அவரைப் பின் தொடர்ந்த அந்த உருவம், கர்ப்பகிரகத்தில் கேசவனின் கதறலை கேட்டு ஸ்தம்பித்து நின்றது.

வேக வேகமாய் அங்கிருந்து வெளியேறி, ஒரு நம்பருக்கு அழைக்க, எந்த நம்பருக்கு அழைக்கபட்டதோ அதற்குச் சொந்தக்காரர் அழைப்பைத் தடுத்து கொண்டே இருந்தார்.

“அட ச்சே!… அவனவன் இருக்கும் நிலை தெரியாம, இவனுங்க வேற…”என்று எரிந்து விழுந்தாள் சம்யுக்தா .

சம்யுக்தாவிற்கு தான் அந்த அழைப்பினை தூணின் மறைவில் இருந்த வயதான பெரியவர் கொடுத்துக்கொண்டிருந்தார் .

“என்னடீ!…. “என்றாள் ஹேமா, சம்யுவின் கோபத்தை பார்த்து.    

“வழக்கம்போல் பிராங்க் கால்டீ… எல்லாம் அந்தச் செல்வம் கூட்டத்தின் வேலையாக இருக்கும்.இப்படி தான் அன்நோன் நம்பரிலிருந்து அடிக்கடி அழைப்பு வருது.எடுத்துப் பேசினால் எதிர் பக்கத்திலிருந்து எதையும் பேச மாட்டேங்கறாங்க. இதே பிழைப்பா போச்சு…”என்று எரிந்து விழுந்தாள் சம்யுக்தா.

“பிளாக் பண்ணிட்டு போ…இதுக்கு ஏன் டென்ஷன் ஆகிட்டு இருக்கே…”என்றாள் ஹேமா.

“எத்தனை தடவை பிளாக் செய்தாலும் புது புது நம்பரிலிருந்து அழைப்பு வந்துட்டே இருக்கு… எங்கேயிருந்தாவது பெண்ணின் நம்பரை எடுக்க வேண்டியது. இப்படி டார்ச்சர் செய்தே கொல்வது என்று சுத்தறது…இடியட்ஸ்.”என்று பொரிந்தாள் சம்யுக்தா.

மீண்டும் அழைப்பு வர, அதை அட்டென்ட் செய்த சம்யு பேசுவதற்குள்,

“சம்யு!..  இந்தக் கோயிலை விட்டு முதலில் கிளம்பு. ஈஸ்வரை இங்கே வர வேண்டாம் என்று சொல்லு… உங்க உயிருக்கு ஆபத்து…”என்று எதிர்முனை படபடப்புடன் பேசியது.

அதை மியூட் போட்ட சம்யு, “நான் தான் சொன்னேன் இல்லை… இந்தத் திருமண விவரம் தெரிய வந்தால், அந்த லூசுங்க கிரிமினலா யோசிப்பாங்க என்று… பாரு இப்போ நான் கோயில் விட்டுப் போகணுமாம். ஈஸ்வரை இங்கே வர விடக் கூடாதாம். எங்க உயிருக்கு ஆபத்தாம்… குரலை மாற்றிப் பேசினால் தெரியாதுன்னு நினைப்பு…” என்று ஹேமாவிடம் பொரிந்து தள்ளிய சம்யு, மீண்டும் அழைப்பை எடுத்து ,

“இங்கே பாரு செல்வம்… நீ என்ன ட்ராமா செய்தாலும் இன்றைக்கு எனக்கும், ஈஸ்வருக்கும் இந்தத் திருமணம் நடந்தே தீரும்…உன்னால் முடிந்ததை நீ செய்துக்கோ…  இன்னொரு முறை போன் செய்து இது மாதிரி டார்ச்சர் செய்தேன்னு வச்சுக்கோ, ‘ஒத்…. ன்னு’  பச்சை பச்சையாய் பேச ஆரம்பித்துடுவேன்… எதுக்குமே ஒரு எல்லை இருக்கு…” என்றவள் அந்த நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டு விட்டுக் கண்ணை மூடி அமர்ந்தாள்.

“ஏன் சம்யு… அந்தச் செல்வம் உன்னை லவ் செய்யறானா என்ன?”என்றாள் ஹேமா தீடீர் என்று.

திகைத்து விழித்த சம்யு, “ஏன்டீ இந்தக் கொலவெறி உனக்கு?”என்றாள் அதிர்ந்தவளாய்.

“நீயே யோசிச்சி பாரு சம்யு… எப்படி எமி ஈஸ்வர் மேல் ஒரு பொசசிவ் காட்டுவாளோ, அதே மாதிரி இன்னும் சொல்லப் போனால் அதைவிட பல மடங்குச் செல்வம் உன்மேல் பொஸசிவ் என்று எனக்குத் தோன்றியது உண்டு… நீ பார்க்காத போதெல்லாம் செல்வம் உன்னை ஒரு மாதிரி வெறிச்சி பார்த்துட்டு இருப்பதை நானே பலமுறை பார்த்து இருக்கேன்.

உன்னை முறைப்பது போல் தோன்றினாலும், நீ பேசுவதை எல்லாம் ஒரு காதலன் உரிமையோடு ரசிப்பது மாதிரி அவன் ரசிப்பதை பார்த்திருக்கிறேன். உன்னை டீப்பா லவ் செய்யறானோ என்னவோ!… அதான் ஈஸ்வரோடு உனக்குத் திருமணம் ஆவது அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ!.. எனக்கு என்னவோ சரியா படலை சம்யு. பார்த்துடா…” என்றாள் ஹேமா தவிப்புடன்.

ஹேமா சந்தேக தீயை ஏற்றி வைக்க, அந்தத் தீக்கு நெய்யை வார்ப்பது போல், செல்வத்தின் நடவடிக்கை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்க, சம்யுக்தாவிற்கு உள்ளேயும் இருந்த அந்தச் சந்தேகம் வலுப்பெற்றது.

“அப்படியும் இருக்குமோ?… இந்தச் செல்வம் என்னை லவ்ஸ் செய்யறானா என்ன?”என்றாள் சம்யு குழப்பத்துடன்.

குழம்பி இருந்த இருவரும் யோசிக்க மறந்தது , இவர்களுக்குச் செல்வம் பழக்கம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது என்பதையும், இப்படி பிராங்க் அழைப்பு பல வருடங்களாய் வந்து கொண்டிருப்பதையும்.

இந்தத் திருமண ஏற்பாடு தெரிந்தவர்கள் தன்னோடு இன்னும் ஐந்து பேருக்கு மட்டுமே தெரியும் என்பதும், காரில் வந்து கொண்டு இருந்தவர்களும் பிறந்த நாள் பூஜை என்று தான் வருகிறார்கள் என்பதும்,  அந்த ஐந்து பேரில் ஈஸ்வர், செல்வம், ரிஷி, எமி இல்லையென்பதையும்  ஏனோ மறந்து தான் போனாள்.

அழைத்த நம்பரை பிளாக் செய்திருக்க கூடாதோ!.

அட்லீஸ்ட் கேசவனின் அழைப்பவது ஈஸ்வரையோ, சம்யுவையோ அடைந்திருக்க வேண்டுமோ!.

‘யாருக்கோ   கெடுதல்    நடக்க   போகிறது’    என்று கேசவன்  மனம்    கட்டியம்    ஆரம்பித்தது. 

அது    ஈஸ்வருக்கா?…  

இல்லை    சம்யுக்தவிற்கா?…. 

இல்லை   சம்யுக்தாவால்   ஈஸ்வருக்கா?…

இல்லை இருவருக்கும் வேறு ஒருவனாலா என்ற  விடை காலத்திடம். 

ஆட்டம் தொடரும்…