UYIRODU VILAIYADU 15

images (8)

UYIRODU VILAIYADU 15

(2017-2019 தொடங்கப்பட்ட உலகளாவிய, ‘ஆபரேஷன் டிரான்ஸ் இன்’ ஒரு பகுதியாக இந்தியாவின்  என்.சி.பி/ போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கலந்து கொண்டது. 

இது சர்வதேச தபால், எக்ஸ்பிரஸ் மெயில் மற்றும் கூரியர் ஏற்றுமதிகளில்,  உளவியல் மருந்துகள், மயக்க மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள் விற்கப்படுகின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டது.

ஒரு மருத்துவரின் பரிந்துரையில் மட்டுமே வாங்க முடிய கூடிய மருந்துகள், இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் மலிவாகக் கிடைக்கின்றன.

சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியயுள்ள இந்தக் கடத்தல் முறை,  உலகளாவிய தபால் நிலையங்கள் மற்றும் சர்வதேச கூரியர்களின் சேவைகள் சட்டவிரோத வர்த்தகத்திற்கான தளவாடங்களாகப் பயன்படுத்தி கொண்டிருக்கின்றன. இதில்,  ‘பிட்காயின்கள்  மற்றும் லிட்காயின்’  போன்ற கிரிப்டோகரன்சியின் பங்களிப்பு மிக அதிகமாய் இருக்கிறது.” என்று இந்தியாவின்  என்.சி.பி/ போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரி,  ஸ்ரீவஸ்தவா கூறினார்.)  

அத்தியாயம் 15

‘கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட்

போது அவிழ் அலரின் நாறும்

ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே!…’

‘தலைவி தெரிந்தெடுத்த வளையல் அணிந்தவள். அரிவை பருவத்தவள்.  எப்போதும் விழாக்கோலமாக விளங்கும், உறையூருக்குக் கிழக்கில் உள்ள, உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும், காந்தள் பூவின் மணத்தை தன் மேனியில் கொண்டவள்’  போன்ற ஒப்புமைகள் கூறப்படும், சங்க கால தலைவிகளின் அழகிற்கெல்லாம் பிறப்பிடமாய் வந்து  நின்ற சம்யுக்தாவை கண்டதும், ஈஸ்வர் விழிகளில் மின்னல் வந்தது.

Unni Mukundan Age, Height, Weight, Girlfriend, Life And More.

‘Poetry is the beauty in the space between its words’  என்ற பொருள்படும் ஒரு கூற்று உண்டு. அதிலும் இல்லாத சொற்களில் உள்ள அழகு என்பது, அதைப் படிப்பவரின் தேர்ச்சியையும், பயிற்சியையும் பொருத்தது.

அதே போல் சொல்லப்படாத, சம்யுக்தாவின் அழகின் பரிமாணங்களை ஈஸ்வரின் மனம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

இறைவனுக்கு சமமான சிருஷ்டி வல்லமை, காதலில் விழுந்த காதலர்களின், ‘கண்கள் என்னும் எழுதுகோலுக்கு உண்டு’ என்பதை அங்கே நிரூபித்துக்கொண்டிருந்தான் அந்தக் காதலன்.

‘காதலனின் பார்வைக்கு’ என்றுமே காதலி பேரழகு சுரங்கமே அல்லவா!

ஈஸ்வரின் மனவோட்டத்திற்கு வலு சேர்ப்பது போல், ‘வாலிப கவிஞ்சர் வாலியின்’ வார்த்தைகள்,  ஈஸ்வர் கற்பனை உலகை பெரிதாக்கி கொண்டிருந்தது.

‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ

சிரிப்பு மல்லிகைப்பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ

மை விழி ஜாடைகள் முல்லைப்பூ

மணக்கும் சந்தனப்பூ

சித்திர மேனி தாழம்பூ

சேலை அணியும் ஜாதிப்பூ

சிற்றிடை மீது வாழைப்பூ

ஜொலிக்கும் செண்பகப்பூ

தென்றலைப் போல நடப்பவள்

என்னைத் தழுவக் காத்து கிடப்பவள்

செந்தமிழ் நாட்டு திருமகள்

எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி

அஞ்சுகம் போல இருப்பவள்

கொட்டும் அருவிபோலச் சிரிப்பவள்

சித்திரை மாத நிலவொளி…

அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி

கொஞ்சிடும் பாத கொலுசுகள்

அவை கொட்டிடும் காதல் முரசுகள்

பழத்தைப் போல இருப்பவள்

வெல்லப் பாகைப் போல இனிப்பவள்

சின்ன மை விழி மெல்ல திறப்பவள்

அதில் மன்மத ராகம் படிப்பவள்

உச்சியில் வாசனைப் பூமுடித்து

உலவும்  அழகு  பூந்தோட்டம்…’  என்ற பாடல் வெளியிலிருந்து  கேட்க,  அது சம்யுக்தாவிற்கு எந்த அளவிற்கு பொருந்தி போகிறது என்று நினைவு எழுவதை தடுக்க முடியாதவனாய், ‘வாவ்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே வெளிவர ஸ்தம்பித்து நின்றான் அந்தக் காதலன்.

Keerthi Suresh Facebook Stills 105994

சம்யுக்தாவின்  பெண்மையின் மென்மையில், நளினத்தில், சிகரங்கள் உயரத்தின், பள்ளத்தாக்குகளின் ஆழத்தின், தாக்குதலைச் சமாளிக்க முடியாதவனாய் திணறிக்கொண்டிருந்தான்.

கண்களால் தன் அழகை ரசித்துக் கொண்டு, வாய் வார்த்தைகள் தோற்றவனாய் நின்ற தன்னவனை  கண்ட, சம்யுக்தாவின் முகத்தில், பொய் கோபம் மெல்ல உதயமாக, செல்லச் சிணுங்கலுடன் முகம் திருப்பி நின்றாள்.

ஊடல்!…

காதலின் அதி உன்னத போதை.

உணர்ந்து பார்த்து மட்டுமே, சுவை அறிய கூடிய,  ‘தேனில் ஊற வைத்த முக்கனிகளின் இனிமையையும்’  மிஞ்சியது காதலர்களுக்கு நடுவே வரும் இந்த ஊடல்.

ஊடுவதும், ஊடல் கொள்வதும், ஊடலை நீக்கும் முயற்சிகளும், காதல் என்னும் சோலையின் மதி மயங்க வைக்கும், ‘மகரந்த தாள்கள். 

‘The Pleasures of Temporary Variance’ என்று சொல்லப்படும் இந்த ஊடல், கவிஞ்சர்களின் கற்பனை வளத்திற்கான அட்சய பாத்திரம். 

இன்பங்கள் அள்ள அள்ளக் குறையாத ஆனந்த சாகரம்.

நிலத்தோடு நீரானது எப்படி பொருந்தி, ஒன்றுடன் ஒன்று கலந்து போகிறதோ, அதே போல் காதலர்களின் அன்பின் வெளிப்பாடான இந்த ஊடல் தரும் இன்பத்தைவிடத் தேவருலகத்தில் கிடைக்கும் இன்பமானது பெரிதோ!…’  என்று எழுத்தாளர்களைப் பித்து பிடித்துத் திணற வைத்துக் கொண்டிருக்கும் இன்ப சமுத்திரம் காதலர்களின் இந்த ஊடல்.

காதலன்  மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவனாகவே நின்று, காதலியால்  ஊடப்பட்டு, அந்தப் பொய் கோபம், செல்லச் சிணுங்கல் போன்றவற்றால் தேன் உண்ட வண்டாய் மதி மயங்கி, தாம் விரும்பும் காதலியின்  மெல்லிய தோள்களைக் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.’ என்ற நிலையில் நின்றான் ஈஸ்வர்.

பொய்யான கோபம், அதனால் வரும்  காதலியின் சிணுங்கலின் ஒலியைவிட, இனிமையான சங்கீதம் வேறு இருக்க முடியுமா என்ன?’ என்ற கேள்வி தான் ஈஸ்வர் மனதில் எழுந்தது.

காதல் என்னும் கந்தக கிடங்கின், அதி முக்கிய மூல கூறு ஊடல்.

உலகத்தில் உள்ள போதை வஸ்துக்கள் அனைத்தையும் விட, மனம், உடல், எண்ணம் என்று எல்லாவற்றையும் மயங்கச் செய்யும்  உணர்ச்சி பிரவாகம்.

காதலர்கள் மட்டுமே ஈடுபடும் மிக அழகான விளையாட்டு.

இந்த ஊடலை தீர்க்கச், செல்லத் தோழிகளையும்,  உயிருள்ள, உயிர் அற்ற   பொருட்களையும் தூதாக அனுப்பி, இந்த மெல்லிய சங்கீதத்தின் பக்க வாத்தியமாய் நெகிழ செய்யும் தருணங்கள் அதிகம்.

அதே போல் அந்த ‘மௌன காதல் நாடகத்தைப்’ தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டு புன்னகையுடன் நின்றாள் ஹேமா.   

Poorna kasim | Indian eyes, Indian actresses, South actress

பேசிக் கொண்டிருந்த சம்யுக்தா திடீர் என்று எழுந்து ஓட , என்னவோ ஏதோவென்று பின்னால் வந்த ஹேமா, ஈஸ்வரை பார்த்து விட்டுத் தான், சம்யு இப்படி ஓடி இருக்கிறாள் என்று தெரிந்து பின் தேங்கி நின்றாள்.

சம்யு திருமண அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருப்பதை பார்த்து, வாயடைத்து நின்ற ஈஸ்வரின் நிலை புரிந்தாலும், ஒற்றை வார்த்தைக்கு மேல் சொல்லாத அவனின் நிலையைக் கண்டு, பொய் கோபம் கொண்டு நிற்கிறாள் தன் தோழி என்று தெரிந்ததும், ஹேமாவின் புன்னகை விரிந்தது.

அதைக் கண்ட ஈஸ்வர், “என்னங்க ஒரு மாதிரி பார்க்கறீங்க?” என்றான்.

‘அடங்!… அங்கே கோவிச்சுட்டு, கண்களால் அம்புகளைத் தொடுத்து கொண்டிருப்பவளை சமாதானப்படுத்துறதை விட்டுட்டு, என் பார்வையை ஆராய்ச்சி செய்யுதே இந்தக்   கிறுக்கு….  விளங்கிடும்.’ என்று மனதிற்குள் புலம்பிய ஹேமா.   

“நீங்க வேற மாதிரி, சம்யுவை பார்க்காததால், உங்களை நான் இந்த மாதிரி பார்க்க வேண்டி இருக்கிறது ப்ரோ.” என்ற ஹேமா,

‘அட கேணை பயலே!…’ என்று பார்த்துட்டு இருக்கேன்.’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.  

“என்ன சொல்றீங்க ஹேமா?” என்றான் ஈஸ்வர்.

“ஈஸ்வர்!…. உங்க கிட்டே இருந்து நாங்க, ‘ரம்போக் மாடல் ரெமோவை’ எதிர்பார்க்கிறோம். நீங்க இப்படி ரூல்ஸ் அம்பியா  இருந்தா,  எங்க   சம்யு நிலைமை யோசிங்க!. 

சம்யுவை  கொஞ்சம் பாருங்க… உங்க  பிறந்த நாள் என்று அலங்காரத்தில் ஜொலிச்சுட்டு இருக்கா. இன்று ஸ்பெஷல் டே வேற.

எப்பவும் தான் வாய் திறந்து பேசினால், ‘வாய்க்குள் இருக்கும் முத்து உதிர்ந்திடும்’ என்று மௌன சாமியாராய் இருப்பீங்க… இன்றுமா ப்ரோ?

உங்களை என்ன போற்றி படவா சொல்றோம் ப்ரொபெஸர் சார்?… உங்களுக்காகப் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்து வந்து நிக்கிறவ கிட்டே, சொல்ல உங்களுக்கு அந்த ஒத்தை வார்த்தையைத் தாண்டி, வேறு எதுவுமே கிடைக்கலையா?…

பெண்ணாய் பிறந்த நானே சம்யுவை சைட் அடிச்சுட்டு இருக்கேன். இந்நேரம் நான் பையனா பிறந்து இருந்தேன், சம்யுவை அலேக்கா பேக் செய்துட்டு இருப்பேன். ஆனா, நீங்க லவ் டயலொக் விடறதுக்கெல்லாம், சப்ஸிடியூஸ்  கிளாஸ் போக வைக்காமல் எங்களைவிட மாட்டிங்க போலிருக்கே!…”  என்றாள் ஹேமா நொந்தவளாய்.

“கிளாஸ் அனுப்பினா கூடத் தேறுமான்னு தெரியலையே ஹேமா.” என்றாள் சம்யு, ஈஸ்வரின் மேல் கண்கள் என்னும் அம்புகளைச் செலுத்திய படி.

அந்த அம்புகள் நெஞ்சில் தைத்து இருப்பது மாதிரி தன் கையை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்துப் பாவனை செய்த ஈஸ்வர், முகம் வலிப்பது  போல் பாவத்தைக் காட்டியது.

‘சோ ஸ்வீட்!….’ என்று ஜொள்ளியது சம்யுவின் மனம். 

முகம் கோபத்தை காட்ட, மனமோ ஈஸ்வரை ரசித்துக் கொண்டிருந்தது.  அது தானே ஊடலின் ரகசிய விளையாட்டு.

ஒரு நொடி கோபத்தை காட்டுவது போல் கண்கள் பாவனை செய்தாலும், அடுத்த நொடி காதலை அருவியாய் பொழிந்து கொண்டிருக்கும். 

எழுந்த சிரிப்பைக் கை வைத்துச் சம்யு மறைக்க, அவள் கையைப் பிடித்துக் கொண்ட ஈஸ்வர் அவள் அருகே குனிந்து, 

“பட்டர் கப்!… மாமாவைப் பத்தி தெரியாம பேசாதே, ஸ்வீட் ஹார்ட்!…” என்றவனின் ஆழந்த குரலில், சம்யுக்தாவின் விழிகள் விரிந்தது.

அவன் அடுத்து  பேசப் பேச ஸ்தம்பித்து நிற்பது சம்யுக்தா, ஹேமாவின் முறையானது.

“மத்த சராசரி பொண்ணுகளுக்கு தான் வர்ணனை தேவை. ஆனால்,  நீ வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவள் சம்யு. உன்னை வர்ணிக்க உலகில் இருக்கும் மொழிகள் எல்லாவற்றையும் சேர்த்தாலும் போதாது என்பதால், இன்னும் லட்சக்கணக்கில்,  ‘உன்னை வர்ணிக்க என்றே எப்படி மொழியை உருவாக்கிறது’ என்ற தீவிர யோசனையில் தான் இருக்கேன்.

மொழிகளே தோற்கும் அளவிற்கு  இத்தனை, ‘அதிரூப சுந்தரியாய்’ உன்னை யார் பிறக்கச் சொன்னது?

வார்த்தைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள மொழிகளே உன்னை வர்ணிக்க முடியாமல் தோற்று போகும் நிலையில் இந்த அடியேன் என்ன செய்ய முடியும் தேவ தேவி!

இந்த, ‘யக்ஷினியின் யவனம்’ வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டது தானே!…

வர்ணிக்க வார்த்தைகளை, மொழிகளைத் தேடினால், ‘தேடுபவர்களே தொலைந்து போகக்கூடிய’  மோக வனம் நீ!..

மோக  தீயை நெஞ்சில் ஏற்றி, அடிமை சாசனம்  கொடுக்கக்கூடிய  மோகினி.   உன் மோஹனத்தால் தொலைந்து, பித்தாகி மீள முடியாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் திவ்யரூபிணி.

Enchantress, a raving beauty, bewitching, captivating, enthralling, enticing, excellent, exquisite… இது எல்லாவற்றின் கலவையாக, இந்த வார்த்தைகளின் பிறப்பிடமாய் நிற்கும் இந்த வடிவத்தை என்ன சொல்லி வர்ணிப்பது ?

Aap itni khoobsurat hain jaise gulab ki pankhuri par aos ki boond.

ரோஜா இதழில் ஒரு பனி துளிபோல நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன் அழகு என்னை, என் சுயத்தையே  மறக்கச் செய்து விட்டது.  சுயத்தையே இழந்து தவிப்பவனிடம் வார்த்தைகள் எங்கிருந்து வரும்?

lekin apko dekha to mujhse raha nahin gaya aur mera dil apne qaboo se bahar ho gaya hai.

 உன்மீது கண்களை வைத்தபோது, என்னை நானே எதிர்த்து நிற்க முடியாதவனாய் தோற்கிறேன்  என் இதயத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டேன்.

உடல், பொருள், ஆவி எண்ணம், சொல், செயல் எல்லாம் உன் முன் தோற்று நிற்கும்போது, வாய் எதைத் திறந்து பேசும்?      

Kash main apko apni poori zindagi sa jo kar rakh sakta agar ap mujhko ijazat de sakti.

ஒருவேளை நீ என்னை அனுமதித்தால் மட்டுமே, உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடிதோறும் வர்ணிக்க ஆரம்பித்தாலும்,  இந்த ஒரு வாழ் நாள் மட்டும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கூடப் போதாது தான் உன் அழகை வர்ணிக்க.

mashallah!… உன் அழகை போற்றி புகழ்ந்தால், ‘அது உன்மேல் கண் பட வைத்து விடுமோ!…’ என்று கூட பயமாய் இருக்கிறது. அதனால் உலகில் உள்ள ஒட்டுமொத்த அழகின் பிம்பமாய், தன் திறமை எல்லாம் சேர்த்து  உன்னைப் படைத்த  அந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.   mashallah!….

Subhanallah!….  பிழைகள் இல்லாதது, சரியானது, முழுமையானது, நிறைவை தருவது உன் அழகு. உன்னை படைத்து என் கைகளில் சேர்த்த அந்தக் கடவுளுக்கு நன்றி  Subhanallah!…

இந்த நாளில்  என்னை நொடிதோறும் மீண்டும் மீண்டும் பிறக்க வைத்துக் கொண்டிருக்கிறது உன் அழகு என்பதை எப்படி உன்னிடம் சொல்வேன்?

உன் அழகை வர்ணிக்க  வார்த்தைகள் கிடைக்காமல் நான் தவிப்பது, உன்  புற அழகை வர்ணிக்க  மட்டுமல்ல. உன்னில் ஒளிரும் இந்த அழகு, உன் அன்பில், உன் கனிவில், உன் இரக்கத்தில், உன் நிமிர்வில், உன் தன்னம்பிக்கையில், உன் எண்ணம், சொல், செயல்கள் அனைத்திலும் இருக்கும் அழகு. அழகு என்ற வார்த்தைக்கே அர்த்தம் கொடுப்பது உன் அக அழகு.

அதை எப்படி வர்ணிக்க முடியும்?… எதனோடு ஒப்புமை கூற முடியும்?…

மானுட பெண்களை வர்ணிக்கலாம். தேவதைகளை, யக்ஷினிகளை, மோகினிகளை எங்கிருந்து வர்ணிப்பது?. 

வரத்தைக் கொடுக்கவே பூமி இறங்கி வந்த என்  தேவதையே!… எங்கே என்  பிறந்த நாள் பரிசு?” என்றான் ஈஸ்வர் மெல்லிய புன்னகையுடன் கன்னத்தில் விழுந்த குழியுடன்.   

ஈஸ்வர் பேசப் பேச அவன்  வார்த்தைகளைக் கேட்டு விழி விரித்து, உறைந்து நிற்பது இப்பொழுது சம்யுக்தவின் முறையானது.

ஊடலின் பொய்யான கோபத்தை தணித்து இருந்தான் ஈஸ்வர், தன் வார்த்தை என்னும் மந்திர கோலினை சுழற்றி.

ஊடல் கொண்டு, பிணக்கத்தில் இருந்த காதலியின் மனதை, காதலன் வென்று விட்டான்.

“ஒரே பாலில் சிக்ஸர் தான் அடிப்பாங்க என்று கேள்விப்பட்டு இருக்கேன்!… அடி ஆத்தி!… ப்ரோ செஞ்சுரியே அடிச்சுட்டார்… ஒரு வார்த்தை அதிகமாய் புகழச் சொன்னா,  காதல் காவியமே படைச்சுட்டார்… இந்த அம்பிக்குள் இப்படியொரு ரெமோ கூட்டமே இருக்கும் என்று யார் நினைச்சா? ” என்று ஹேமா, சம்யுக்தாவின் காதைக் கடிக்க, சம்யு மேலும் சிவந்தாள்.

“பேபி!…” என்ற ஈஸ்வரின் குரல் சம்யுக்தவை மீட்க,

“எங்கே என் பிறந்த நாள் பரிசு?” என்றான் ஈஸ்வர் மீண்டும்.

‘பேசிப் பேசியே ஆளைக் கவிழ்ப்பதில் இவனை மிஞ்ச யார் இருக்கிறார்கள்.? அந்த மாய கண்ணன் போல் மனதை திருடிக் கொள்பவன். விரும்பியே தொலையும் மனது இவன் வசம்.

முகத்தை அமுல் பேபி மாதிரி வச்சிட்டு,  ‘எங்கே என் பிறந்த நாள் பரிசு’ என்று கேட்க வேண்டியது?… ஆனால், குரலே காட்டி கொடுத்து விடும், இவன் டபிள், ட்ரிபிள் மீனிங் எல்லாம். ஹஸ்கி வாய்ஸில் பேசியே கொல்றானே!….’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சம்யுக்தாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

சாதாரணமாய் அந்த உரையாடலைக் கேட்பவர்களுக்கு ஈஸ்வர், ‘தன் பிறந்த நாள் பரிசு எங்கே?…’ என்று கேட்பது போல் தான் இருக்கும்.

ஆனால், அந்தக் குரல் ஒலித்த விதம், அதில் இருந்த குழைவு, அந்தக் கண்களில் வந்த மின்னல், அவன் முகத்தில் ஒளிரும் குறும்பைக் கண்டு கொண்ட சம்யுக்தாவின் முகம் அந்திவானமாய் சிவந்து விட, வெட்க புன்னகை முகத்தை மிளிரச் செய்ய, ஈஸ்வர் முகத்தைக் காண முடியாதவளாய் தலை குனிந்தாள்.

காதலியின் வெட்கமானது, காதலனின் வெற்றி மாலை அல்லவா!… கோபத்தில் சிணுங்கிய காதலியை இப்பொழுது நாணத்தில் சிணுங்க  வைத்திருந்தான் ஈஸ்வர்.

“பேபி!… எங்கே என் பிறந்த நாள் பரிசு?…” என்றான் ஈஸ்வர் மீண்டும் புன்னகையுடன்.

இதற்கு மேலும் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் எதையாவது,  நூறு மீனிங் வருவது போல் சொல்லித் தன்னை அங்கிருந்தே ஓட வைப்பான் என்பதால்,

“ஹ்ம்ம்  இருக்கே!… மூணு பரிசு…” என்றாள் சம்யுக்தா புன்னகையுடன்.

“வாவ்!… மூணு பரிசா?… சரி சரி வா அப்போ கிளம்பலாம்…” என்றான் ஈஸ்வர் சம்யு கையைப் பிடித்து இழுத்தவனாய், கோயில் வாசலை நோக்கி நகர்ந்து.

“இரு ஈஸ்வர்… இப்போ எதுக்கு வெளியே கூட்டிட்டு போறே?” என்றாள் சம்யு அவன் கையைப் பிடித்து நிறுத்தி.

“நீ தானே டாலி சொன்னே… என் பிறந்த நாளுக்கு மூணு பரிசு இருக்குன்னு…” என்றான் ஈஸ்வர்.

“ஆமா சொன்னேன்… அதுக்கு எதுக்கு வெளியே போகணும்?”  என்றாள் சம்யுக்தா குழப்பத்துடன்.

“என்ன பேபி!…. உன்னைப் பேபின்னு நான் கூப்பிடறேன் என்பதற்காக இப்படி பச்சை மண்ணாக இருந்தால், மீப்பாவம் இல்லையா?…

என்னை ஒண்ணும் தெரியாதுன்னு கிண்டல் செய்துட்டு, நீ இப்படி அமுல் குட்டியா இருந்தா என் நிலைமை என்னவாகிறது?…” என்றவன் பேச்சில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தவாறு நின்றாள் சம்யு.

“சம்யு டியர்!… நீ மூணு பரிசு தரேன்னு சொல்றே!… அதை நீ என் வீட்டிலோ, உன் வீட்டிலோ கொடுத்தால் தானே டியர்… இன்னும் பப்ளிக்கா இதையெல்லாம் செய்ய நாம என்ன வெளிநாட்டிலா இருக்கோம்?…

அதான் ஒரு சேஃப்டிக்கு வீட்டுக்குப் போய்டலாம் என்று சொன்னேன்…” என்றான் ஈஸ்வர் பாலை கண்ட பூனைபோல் முகத்தை வைத்துக் கொண்டு.

நாவால் தன் இதழை ஈரப்படுத்தியவனின் கண்கள், சம்யுவின் இதழை ஒரு முறை கண்டு, மேல் இருந்து கீழாக ஒரு முறை செல்ல, அவன் சொல்ல வருவது என்னவென்று புரிந்து கொண்ட சம்யு முகம் தீபாவளி நேர வானமாய், பல வர்ணத்தில் ஒளிர்ந்தது.

“இதுக்கு தான் சொல்றேன்… நாம வீட்டுக்குப் போகலாம் என்று… பார்  நீ அங்கே நிக்கிறே!… நான் இங்கே. இதுவே நாம் வீடாய் இருந்தால்!…” என்று நிறுத்தியவனை முறைக்க முயன்று தோற்றாள் சம்யுக்தா.

“நான் ஒண்ணும் அது தான் பரிசு என்று சொல்லலை…” என்றாள் சம்யு உள்ளே போன குரலில்.

“எது தான் பரிசு என்று நீ சொல்லலை டியர்?”  என்றான் ஈஸ்வர், சம்யுவின் சிணுங்கலை அணுஅணுவாய் ரசித்தவனாய்.

“நீங்க நினைத்தது தான்…” என்றாள் சம்யு வெகுகவனமாய் ஈஸ்வர், பார்வையை தவிர்த்து, எங்கெங்கோ பார்த்துக் கொண்டு.

“நான் என்ன நினைத்தேன்?…” என்றான் ஈஸ்வர்.

“அது… அது தான்…” என்றாள் சம்யு.

“எது எது தான் டியர்… பாரு செல்லம்… நீ அடிக்கடி என்னை அம்பின்னு சொல்வே தானே!… பாரேன் நீ எதைச் சொல்றேனே இந்த அம்பிக்கு புரியலை… சோ, என்ன செய்யலாம்…

காரில் ஏறி, நீயும், நானும் மட்டும் வீட்டுக்குப் போகலாம் பட்டர் கப்… அங்கே, நீ மூன்று பிறந்த நாள் பரிசுடன்… இந்த அந்த, அந்த இந்தப் பற்றியும் பிரைவேட் கிளாஸ் எடுத்தாய் என்றால், இந்த அம்பிக்கு புரியும் தானே!… அதுக்கு தான் கூப்பிடறேன்…மேடம் கருணை பார்வை தான் இந்தப் பக்தன் மேல் படவே மாட்டேங்குது…” என்றான் ஈஸ்வர்  கண்கள் மின்ன.

“அய்யோ!…   நான் அது தான் பரிசு என்று சொல்லலை…” என்றாள் சம்யு.

“அதையே தான் நானும் கேக்கிறேன் டார்லிங்… உன் பரிசு எது தான் என்று தெரிய மாட்டேங்குது… தெரிந்து கொள்ள தான் தனியா போகலாம் என்று… நீ தான் இங்கே நின்னுட்டு நேரம் ஆக்கிக் கொண்டு இருக்கிறாய்…” என்று தன் கண்களைச் சிமிட்ட, எங்கே போனாலும் திரும்பவும் அங்கேயே வந்து நிற்பவனை, என்ன செய்வது என்று புரியாமல் இதழ் கடித்து நின்றாள் சம்யு.

“இங்கே பார் பேபி… அதெல்லாம் என் வேலை …. சோ டோன்ட்…” என்றான் ஈஸ்வர் கண்களின் பளபளப்புடன் சம்யுக்தாவின் இதழின் மீதே கண்களை பதித்த படி.

“ஈஸ்வர்!… நீ நினைக்கிறது பரிசு இல்லை… அதுக்கு எங்கேயும் நாம போக வேண்டாம்…” என்றவன் மீண்டும் விவகாரமாய் ஆரம்பிக்கப் போவதற்குள்,

“அந்தப் பரிசை இங்கேயே நீங்க வாங்கி கொள்ளலாம்… எல்லோரும் அறிய, ஊர் உலகம் அறிய அந்த மூன்று பரிசு உங்கள் கைகளில் சேரும்… ஓகேவா?” என்றாள் சம்யு.

“அப்படி என்ன பரிசு செல்லம்?… ஊர் உலகம் அறிய என் கையில் சேரும் பரிசு?… அதுவும் மூன்று?” என்றான் ஈஸ்வர்.

“ஹ்ம்ம்!… உலகத்தில் விலைமதிப்பில்லாத பரிசு அது ஈஸ்வர்…” என்றாள் சம்யு.

“வைரம், வைடூரியம், எமரால்டு, ரூபியா?” என்றான் ஈஸ்வர். 

“புத்து!… அதுக்கெல்லாம் விலை வைக்க முடியும். நான் விலை மதிப்பில்லாதது என்று சொன்னேன்.” என்றாள் சம்யு.

“உலகத்தில் எல்லாத்துக்கும் விலை இருக்கு சம்யு…” என்றான் ஈஸ்வர் குழப்பத்துடன்.

“சில பொருளை யாராலும் விலை முடியாது ஈஸ்வர்… உதாரணம் சொல்லவா அம்மா, அப்பா… இவங்களுக்கு, இவர்களின் பாசத்திற்கு எந்த அளவுக் கோல் வைத்து மதிப்பிட முடியும் சொல்லு!… மீதிப்பீடுகளும், விலைகளும் தோற்கும் இடம் என்று சில உண்டு ஈஸ்வர்.” என்றாள் சம்யு புன்னகையுடன்.

சிறிது நேரம் குழப்பத்துடன் யோசித்த ஈஸ்வர், “பேபி!…. உன்னைப் பேச்சில் ஜெயிக்க முடியாதுடா… இந்த ஈஸ்வர் மூளை அந்த அளவிற்கு எல்லாம் வேளை செய்யாது… நீயே சொல்லிடு… அப்படி விலை மதிப்பில்லாத எந்தப் பரிசு என் பிறந்த நாளுக்கு நீ எனக்காக வாங்கி வைத்திருக்கிறாய்?” என்றான் இரு கைகளையும் தோற்றேன் என்பது போல் உயர்த்தி.     

“மூன்றாவது பரிசு… ரெண்டு பரிசுக்கும் காம்ப்ளிமென்டரி… நீ முதல் பரிசை வாங்கி கொண்டு, அதை எனக்கு திருப்பிக் கொடுத்தால், ரெண்டாம் பரிசு உனக்குக் கிடைக்கும்.” என்றாள் சம்யு புன்னகையுடன்.

“உலகத்தில் இப்படி கூடப் பரிசு இருக்கா என்ன!… புதுசாய் இல்லே இருக்கு!… அது எப்படி நீ எனக்குக் கொடுக்கும் முதல் பரிசை நான் வாங்கி, அதை உனக்குத் திருப்பிக் கொடுத்தால், அதன் மூலம் ரெண்டாம் பரிசு எனக்கு வந்து சேரும்? முதல் பரிசை நானே வச்சிட்டா ரெண்டாம் பரிசு கொடுக்கமாட்டாயா என்ன?…

ஒருவேளை நீ கொடுக்கும் உம்மாவை நான் வாங்கி கொண்டு உனக்குத் திருப்பிக் கொடுத்தால்,  கிடைக்குமா என்ன?… நீ கொடுக்கும் உம்மா என்றால் அதுக்கு விலைமதிப்பு இல்லை தான் செல்லம்…” என்றான் ஈஸ்வர்.

“உனக்குப் புத்தி அதைத் தாண்டி வேறு எங்கேயுமே போகாதா ஈஸ்வர்?” என்றாள் சம்யு வெட்கத்துடன்.

“உலகத்தில் எல்லா காதலனும் , காதலி கிட்டே இப்படி  தான் என்பது, உனக்குத் தெரியாத மாதிரி நீ எதுக்கு சம்யு பேபி இப்படி கேட்கிறே!…

காதலியின் தூய்மையான எயிற்றில் ஊறிய நீர், பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது.

எயிற்று நீர் இயல்பாக வெறுக்கப்படுவது. எச்சில்  பண்டத்தை எவரும் விரும்பமாட்டார்கள். ஆனால் காதலர்களுக்கு அந்த எச்சிலே சுவைமிகு நீர் ஆகிவிடுகிறது. உண்டா இல்லையா நீயே சொல்லு.

காதலர்களையும், கணவன் மனைவியையும் கேட்டுப் பாரு… எத்தனை முறை கொடுத்தாலும், எத்தனை வயதான பின்னரும், பகிரப்படும் இந்த முத்தமானது விலை மதிப்பில்லாதது என்று தான் சொல்வார்கள்.     

இன்பத் தூண்டுதலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது வாய்ப்பகுதி. இங்குச் சொல்லப்பட்ட முத்தம் இதழோடு இதழ் பொருத்தும், உதடுகளின் உரசல் மட்டும் அல்ல.

மேற்குநாட்டவர்களால், ‘ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss)’ என்று அழைக்கப்படுகிறதே  அந்த வகையைச் சார்ந்தது. இந்த முத்தம் உதடு, நாக்கு, பற்கள், எயிறு என்ற வாயின் உறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்கி இன்பம் அளிப்பது. உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களையும் எயிற்றையும் நாக்கால் துழாவி, நீர் சுரக்க வைக்கும் நீண்ட ஆழமான முத்தம்.

அதன்வழி ஊறி வந்ததே, ‘வால் எயிறு ஊறிய நீர்’  என்று சொல்லிவிட்டார் வள்ளுவ பெருந்தகை. அதை மாற்றிப் பேச நான் யார் ?” என்றவனின் பேச்சில் மீண்டும் முகம் சிவந்தாள் சம்யுக்தா.

‘இன்னைக்கு முழு பார்மில் தான் இருக்கான்…’ என்று மனதிற்குள் எண்ணி கொண்ட சம்யுக்தா, “நான் அதைப் பற்றியும் சொல்லவில்லை.” என்றாள் முணுமுணுப்பாக.

“ஒகே டியர்… நான் வேறு எதையாவது ஏடாகூடமாய் யோசித்து சொல்வேன். நீ உன் கண்கள் என்னும் அணு ஆயுதத்தை என்மேல் பிரயோகிப்பாய்!… அதையெல்லாம் இந்த இளம் மனம் தாங்காது என்பதால், அது என்ன பரிசு என்று நீயே சொல்லிடுமா.” என்றான் ஈஸ்வர்.

“ரெண்டு கண்களையும் மூடு ஈஸ்வர்… ஏமாற்ற கூடாது…” என்றாள் சம்யு.

“ஸ்கவுட்ஸ் ஹானர்…” என்ற ஈஸ்வர் தன் கண்களை மூடி, இரு கையை மார்பின் குறுக்கே கட்டி, கால்களை அகல விரித்து முகத்தில் எதிர்ப்பார்ப்புடன் நின்றான்.

“இப்போ கண்களைத் திற ஈஸ்வர்…” என்ற சம்யுவின் உள்ளங்கை மூடி இருக்க,

“இது தான் நான் சொன்ன அந்த விலைமதிப்பில்லாத பரிசு… இதை நீ வாங்கி, எனக்குக் கொடுத்தால், ரெண்டாம் பரிசு உனக்குச் சொந்தமாகும்… இதற்கு உலகத்தில் விலையே இல்லை ஈஸ்வர்…” என்ற சம்யுக்தா கையை நீட்ட, ஆர்வத்துடன் சம்யுக்தா உள்ளங்ககையை திறந்த ஈஸ்வரின் கண்களால் அகல விரிந்தது.

கண்கள் காண்பதை நம்ப முடியாமல் திகைப்பில் விரிய, மனதில் எழுந்த கேள்விக்கு பதிலைச் சம்யுக்தாவின் முகத்தில் அவன் தேட,

“இப்போ சொல்லு ஈஸ்வர்….  இந்தப் பரிசுக்கு உலகத்தில் யாராவது விலை நிர்ணயிக்க முடியுமா சொல்லு!…” என்றாள் கண்கள் ஆனந்த கண்ணீரில் மிதிக்க.

சம்யுக்தாவின் கண்களில் இருந்த கண்ணீருக்கு இணையான கண்ணீர் ஈஸ்வரின் கண்களில் தெரிய ஆரம்பித்தது.

சம்யுக்தாவின் உள்ளங்கையில் சிவமும், சக்தியும் சேர்ந்து இணை பிரியாது இருப்பது போல் இருக்கும் திருமாங்கல்யமும், குங்குமமும் இருந்தது.

76 Best Thirumangalyam images | Mangalsutra, Mangalsutra designs ...

உலகத்தில் ஒரு பெண்ணின் பொன் கழுத்தை கடைசி மூச்சு வரை அலங்கரிக்கும் திருமாங்கல்யத்தையும், நெற்றி வகிட்டில் மங்கலமாய் திகழும் குங்குமத்திற்கும் விலையை யார் தான் நிர்ணயிக்க முடியும்?

இந்தத் தாலி கயிற்றுக்கு முன், எமனின் பாச கயிறே தோற்று போன கதைகள் இங்கு உண்டு.

இரு உயிரை ஒன்றாய் இணைத்து, இரு குடும்பத்தை, உறவுகளைப் பாலமாய்  இணைக்கும் பந்தம் ஆரம்பிக்கும் இடம் இந்தத் திருமாங்கல்யம்.

யார் வேண்டும் என்றாலும் யாரை வேண்டும் என்றாலும் காதலித்து இருக்கலாம்.  அந்தக் காதலுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொடுப்பதும் இந்தத் திருமாங்கல்யமே!…

காதல் முழுமை பெறுவதும், காலம்காலமாய் தொடரும் உன்னத பந்தம் நம் காதல் என்று உலகத்திற்கு காதலர்கள் உணர்த்துவதும், இந்தப் பந்தம் கிடைக்கும்போது தான்.

உலகத்தில் மிகச் சிறந்தது, எதனோடும் ஒப்புமை கூற முடியாதது  என்பதாலோ என்னவோ,  அதன் முன்,  ‘திரு’  என்ற வார்த்தை இருக்கிறதோ!…

எல்லா காதலர்களின் கைகளுக்கும் இது சேராது. எல்லா காதலிகளின் கழுத்தில், தான் விரும்பியவர்களால் வாங்கி கொள்ளவும் முடியாத வரம் இது தான்.

யார் யாருக்கு எது வென்று விதி

போடும் முடிச்சு

போனாலும் வந்தாலும் அது தான்.’

வாங்கிய வரத்தைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்ளாத  இதயங்களுக்கு இதன் விலைமதிப்பு புரியாத ஒன்று தான்.

இந்த வரம் கையில் சேராமல் கானல் வரி கவிதைகளாய் சிதைந்து போகும் வாழ்க்கையும் இங்கு அதிகம்.

காதல் என்ற தவத்தில் வரமாய் கிடைக்கும் இந்தப் பாக்கியம், இல்லறம் என்னும் பரீட்ச்சையை தினம் தினம் எதிர்கொள்ள வைக்கும் ஆதி ஸ்தானம். 

‘சொல்லு ஈஸ்வர்… இந்த பரிசுக்கு உலகத்தில் யாராவது விலை வைக்க முடியுமா?… காலம் காலமாய் நம் அன்னையரின் கழுத்தில் பெருமிதமாய், கர்வத்தோடு ஜொலித்து கொண்டிருக்கும் ஈடு இணை இல்லாத ஒன்று இந்த திருமாங்கல்யம்.

இது தான் நான் உனக்கு தரும் முதல் பரிசு. இதை நீ எடுத்து, எனக்கு உன் கைகளால் திருப்பி கொடுத்தால், இந்த சம்யுக்தா என்ற பெண்ணே உனக்கான பரிசாய், என் உடம்பில் கடைசி மூச்சு உள்ளவரை உனக்காக என்று எந்த தடைகளும் இல்லாமல் உடன் இருப்பேன். இது தான் ரெண்டாவது பரிசு.

மூன்றாவது பரிசு இந்த ரெண்டு பரிசும் உன் கை சேர, எல்லாத்துக்கும் சாட்சியாய் இருக்கும் நம் மனசாட்சி, தெய்வ சாட்சி, அக்னி சாட்சி, உலகத்தில் உள்ள பஞ்ச பூதங்கள், இயற்கையை சாட்சியாய் வைத்து நமக்கு நடக்க இருக்கும் திருமணத்திற்கான ஏற்பாட்டினை இந்த கோயிலில் செய்து இருக்கேன்…” என்று ஈஸ்வர் கை பிடித்து, திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள் சம்யுக்தா.

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்  என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். அந்த இணைவிற்கு முதல் அடியாய் அங்கே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.     

South indian wedding mandap designs | Wedding mandap, Indian ...

அது வரை கண்களில் மட்டும் திரண்டு இருந்த கண்ணீர் ஈஸ்வரின் கன்னத்தை தாண்டி வழிய ஆரம்பித்தது.

ஒரு பெண் காதலிக்கிறாள் என்பது ஒரு ஆண்மகனுக்கு கிடைக்கும் மிக பெரிய அங்கீகாரம். அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு, குடும்பம், வளர்ப்பு முறை என்று அனைத்தையும் தாண்டி, உயிருக்கு மேலாக ஒருவனின் மேல் வைக்கும் நம்பிக்கை இந்த காதல்.

அந்த காதலின் முழுமையாக இன்று திருமண ஏற்பாட்டை செய்து, திருமாங்கல்யத்தை கையில் ஏந்தி நிற்கும் சம்யுக்தாவை கண்ட ஈஸ்வர், அடுத்த நொடி சம்யுக்தாவை இழுத்து தன் நெஞ்சில் அணைத்து கொண்டான்.

அந்த அணைப்பில் காதல் இல்லை, காமம் இல்லை… ‘உன்னில் முற்றிலும் நான் சரண்’ என்ற சரணாகதி தத்துவமே இருந்தது.

ஒரு தாயிடம் அணைப்பை வேண்டி செல்லும் ஒரு குழந்தையின் தவிப்பு ஈஸ்வரின் அணைப்பில் தென்பட்டது.

காதலன் அங்கு குழந்தையாகி இருக்க, காதலி அங்கு அன்னையாய் மாறி அவனை தன் நெஞ்சில் ஏந்தி கொண்டாள்.

மௌன கண்ணீரில் ஈஸ்வர் உடல் குலுங்க ஆரம்பித்து இருந்தது.

“ஈஸ்வர்!… பிறந்த நாள் அதுவுமாய் என்னடா…. கண்ணை துடை.” என்றாள் சம்யுக்தா அவனை சற்று நேரம் அழ விட்டு.

ஈஸ்வர் அழுகைக்கு இடையே பேச, சம்யுக்தாவிற்கு செல்வம், எமி, ரிஷியை இழுத்து வைத்து ஒரு நாள் முழுக்க தலையில் நங்கு நங்கென்று குட்ட வேண்டும் போல் தோன்ற ஆரம்பித்தது.   

“உன்னை காதலிக்க கூடாது என்று நினைத்தேன்… என்னையே கொல்வதற்கு  சமமாய் தான் இருந்தது உன் காதலை நிராகரித்த பொழுதுகள் எல்லாம். காதலித்து கொண்டே உன் மேல் காதல் இல்லையென்று சொல்லி உன்னை விலக்கி வைக்க எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா?

உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் பொருந்தாது தான் சம்யு. ஆனால்,  உன் காதலை எனக்கு கொடுத்து என்னை பெருமை படுத்தினாய். உன்னை போன்ற பெண்ணின் காதல் வரம்.

ஆனாலும் உன் மேல் காதலில் விழுவதை, உன்னை காதலிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. இன்று இந்த திருமாங்கல்யத்தை  உன் கழுத்தில் கட்டுவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று கூட தெரியாது சம்யு. ஆனால் என் காதலை முழுமை செய்திருக்கிறாய். இதற்கு என்றுமே நான் உண்மையானவனாக  இருப்பேன்.” என்ற ஈஸ்வரை என்ன சொல்லி தேற்றுவது என்று கூட சம்யுக்தாவிற்கு புரியவில்லை.

சம்யுக்தாவின் கண்கள், ஹேமாவை உதவிக்கு அழைக்க, அதுவரை இதையெல்லாம் இதழில் புன்னகையுடன், கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த ஹேமா, ஈஸ்வரிடம்,

“ப்ரோ!… போதும் நல்ல நாள் அதுவுமாய் அழுதுட்டு இருக்காதீங்க. நாங்க எல்லோரும் ரொம்ப நேரமாய் திருமண விருந்திற்காக காத்திருக்கிறோம். இதோ பிடிங்க… பட்டு வேட்டி சட்டை இதில் இருக்கு. அந்த ரூமில் போய் மாத்திட்டு வந்தீங்கனா, திருமணத்தை முடிச்சுட்டு, அப்படியே ஹோட்டலில் ஒரு விருந்தை வெட்டு வெட்டிடலாம் … ரொம்ப அழுகாச்சி சீனா இருக்கு… கிளம்புங்க…” என்றாள் ஹேமா ஈஸ்வர் கையில் புது துணியை கொடுத்து, அவனை உடை மாற்ற,  ஓர் அறையின் முன் அனுப்பி.

தட்டை வாங்கி கொண்டு நடந்தவன் திரும்பி, “சம்யு!… உங்க அப்பா…” என்றான் ஈஸ்வர் திடீரென்று

‘ஹ்ம்ம்!… கிழிஞ்சது கிருஷ்ணகிரி. இவளே மறந்தாலும், கரெக்ட்டா இந்தாளு நியாபகம் வச்சிட்டு கேக்கிறானே!… யோவ்!… அந்த ஆள் இதுக்கெல்லாம் ஒத்து வருவாரா என்று தெரியமா தானே, சொல்லாம ஏற்பாடு செய்துட்டு இருக்கோம்…’ என்று மனதிற்குள் ஈஸ்வரை வறுத்து எடுத்த, ஹேமா,

“ப்ரோ!… திருமணம் முடிந்து தம்பதி சமேதராய் போய் காலில் சரண்டர் ஆகிடுங்க… முகூர்த்த நேரம் ஆகுது பாருங்க…இன்னும் எவ்வளவோ சடங்கு எல்லாம் இருக்கு….போங்க போங்க… ரெடி ஆகிட்டு வாங்க போங்க ப்ரோ….”    என்றாள்.

“அப்போ இந்த ஏற்பாடு சம்யு அப்பாவுக்கு தெரியாதா?” என்றான் ஈஸ்வர் திகைப்புடன்.

‘அட எவன்டா இவன்… ரூல்ஸ் பரந்தாமன்…’ என்று நொந்து கொண்ட ஹேமா, “நாங்க சொல்லவும் இல்லை… அவருக்கு தெரியவும் தெரியாது… இப்போ அதுக்கு ஒரு பஞ்சாயத்தை கூட்டிட்டு இருக்காதீங்க ஈஸ்வர்… போய் ரெடி ஆகிட்டு வாங்க… அவர் கிட்டே நேர போய் பேசிக்கலாம்…” என்றாள் ஹேமா.

“செல்வம், எமி, ரிஷி… எல்லோரும்…. வெளியே…” என்று ஆரம்பித்தவனின் கையை பிடித்து தர தரவென்று இழுத்து கொண்டு போய் உடை மாற்ற அறையில் விட்டு வந்த ஹேமா, கதவை மூடி விட்டு,

“உங்க நண்பர்களை வர வேண்டிய நேரத்திற்கு உள்ளே வருவாங்க… கூட்டி வர எங்களுக்கு தெரியும் ஈஸ்வர்… தயவு செய்து படுத்தாம ரெடி ஆகி வாங்க…” என்ற ஹேமா தலையை குலுக்கி கொண்டு, சம்யுவிடம் வந்தாள்.

“ஆயிரம் கல்யாணம் அவனவன் அசால்ட்டாய் செய்துட்டு இருக்கான்… இந்த லூசை ஒரு திருமணம் செய்ய வைப்பதற்குள் கடவுளே!… முடியலை சம்யு…” என்றாள் ஹேமா.   

ஹேமாவின் நிலையை கண்ட சம்யு சிரிப்பை வாய் மூடி அடக்கி கொண்டிருக்க, “வேணாம்… அழுதுடுவேன்… வலிக்குது… மிடிலை…” என்று வடிவேல் மாடுலேஷனில் சொல்ல, சம்யுக்தாவின் புன்னகை அதிகமானது.

சம்யுக்தாவின் தோளை அணைத்து கொண்ட ஹேமா, “சியர் அப் கேர்ள்… அங்கிள் பத்தி இப்போதைக்கு நினைக்காதே!… உங்க அம்மா கடவுளாய் நின்று உன்னை ஆசீர்வதித்துக் கொண்டு தான் இருப்பாங்க. சிரிடா. இப்போ முகத்தைத் தொங்க போட்டுக் கொள்ளாதே!… நடப்பது எல்லாம் நல்லதுக்கே!… ஈஸ்வர் உன்னை மனமார காதலிக்கிறார். அதை மட்டும் மனதில் வை.   அங்கே பார் போட்டோக்ராபர் டென்ஷன் ஆகிட்டு இருக்கார்…” என்றாள்.

“தேங்க்ஸ்டீ…” என்ற சம்யுக்தாவின் தலையில் நோகாமல் கொட்டிய ஹேமா,

“லூசி…போடீ…போய் அந்த ஈஸ்வர் லாங் ஜம்ப் செய்து எஸ்கேப் ஆகிறதுக்கு முன்னாடி திருமதி ஈஸ்வர் ஆகி, புவாவை கண்ணில் காட்டு…சிறு குடலை, பெருங்குடல் சாப்பிட்டு இருக்கு…வயற்றில் dts சவுண்ட் எல்லாம் கேக்குது…போ செல்லம்…” என்றாள் ஹேமா, சம்யுக்தாவை மணமேடை ஏற்றி.

ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க, உடை மாற்றி ஈஸ்வர் வந்ததும் அவன் கையிலும், சம்யுக்தா கையிலும் மாலையை கொடுத்த கேசவன் மாற்றி கொள்ள சொல்ல, மாற்றி கொண்டு அங்கிருந்த மண பலகையில் அமர்ந்தார்கள்.

வேத மந்திரங்கள் முழங்க, அக்னி வளர்க்கப்பட்டு, திருமண சடங்குகள் ஒவ்வொன்றாய் நடக்க, அதில் மனப்பூர்வமாக கலந்து கொண்டார்கள் சம்யுக்தாவும், ஈஸ்வரும்.

அருகில் நின்று புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாள் ஹேமா.

திருமண சடங்கில் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை. குடும்பம், உறவு, உற்றம், சுற்றம் சூழ இருக்கும்போது தான் சில சடங்குகள் செய்ய முடியும். காலம் காலமாய் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தச் சடங்குகள்,  இதுபோல் வீட்டின் மூத்த தலைமுறை இல்லாமல் நடக்கும்போது செய்ய இயலாமல் தான் போகிறது.

காசி யாத்திரை -மணமகன் பொய்யாய் கோவித்து கொண்டு, காசிக்கு துறவறம் வாங்க செல்கிறேன் என்று போகும்போது, மணமகளின் சக-உதரன், சகோதரன், “மாப்பிள்ளை!… மாப்பிள்ளை!… காசிக்கு போகாதே!…உனக்கு என் சகோதிரியை கொடுக்கிறேன்… துறவறத்தை துறந்து, இல்லற தர்மத்தை மேற்கோள்…” என்று சொல்லி அழைத்து வந்து பாத பூஜை செய்து,

Simple yet Beautiful Tamil Wedding Rituals and Traditions | Tamil ...

“இது நாள்வரை இந்தக் குடும்பத்தில் மகனாய் நான் இருந்தேன்…   இனி நீயும்   இந்தக் குடும்பத்திற்கு இன்னொரு மகனாய் ஆகிறாய்.” என்று கொண்டாடும் அந்த மகிழ்ச்சி இங்கே இல்லை.

பாத பூஜை -மணமகன், மணமகள் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்யும் உயர்ந்த மரியாதை. ‘இத்தனை காலம் என்னை வளர்த்த அந்த அன்பிற்கு, தியாகத்திற்கு எதையும் ஈடாகச் சொல்ல முடியாது தான் என்றாலும், சகல குண நலன்களும் கொண்டவராக என்னை வளர்த்து, அதே குணநலனோடு இருப்பவரை என் வாழ்க்கை துணையாகத் தேர்ந்து எடுத்தமைக்கு நன்றி…’  என்று பாதம் பணிதல் இங்கே நடக்கவில்லை.    

All the Love from a Tamil Mudaliar Wedding...!

‘கன்னிகாதானம்’ என்பது பெண்ணைப் பெற்றோர் மணமகனுக்கு கொடுப்பது. ‘பாணிக்ரஹணம்’ என்பது மணமகன் வீட்டார், மணப்பெண்ணை தங்கள் குலம் தழைக்க வந்த தேவதையாகப் பெற்று கொள்வது. விவாகம் எல்லாவற்றுக்கும் ஒரே பொருள் தான்.

கன்னிகாதானம் என்றால் என்ன ...

‘எனக்கு முந்திய பத்து தலைமுறை, எனக்குப் பிந்தைய பத்து தலைமுறை கடைந்தேற, கன்னிகாதானம் என்னும் பெரும் தானத்தைச், விஷ்ணுவான உனக்குச் செய்கிறேன்’  என்று பெண்ணைப் பெற்றோர் தங்கள் மகளின் கையைப் பிடித்து மணமகன், அவன் பெற்றோர் கையில் தாரை வார்த்து கொடுக்கும் அந்தத் தானமும் இங்கே நடக்கவில்லை.

சாதாரணமான மனிதனை இங்கே கடவுளாய் உயர்த்தி பார்த்து, ‘உனக்குச் சரிசமமான, உன்னில் சரி பதியான லக்ஷ்மியின் மறு வடிவமாய் உன் வாழ்நாள் முழுக்க துணை இருக்க, என் மகளைத் தனமாய் கொடுக்கிறேன்’ என்ற ஆழ்ந்த அர்த்தத்தோடு கொடுக்கப்படும் தானம் கன்னிகாதானம்.  

இருபத்தியொரு தலைமுறை பெண்ணைப் பெற்றோர் செய்யும் இந்தத் தானத்தால் மேன்மை அடைய செய்யும் யாகம் ஒரு பெண்ணின் திருமணம் என்று  சொல்லலாம்.       

இதனால் தான் வேதங்கள் ஆண் சந்ததியைவிட பெண் பிறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

‘புத்ராத் சத்குணம் புத்ரி யதி பாத்ரே ப்ரதியதே’ என்பதும் இதைத் தான்.

அந்தக் கொடுப்பினை மாலினி குடும்பத்திற்கும் கிடைக்கவில்லை. பல்தேவிற்கும் கிடைக்கவில்லை தான்.  

சம்யுக்தா தன் கையில் இருந்த திருமாங்கல்யத்தை ஈஸ்வரிடம் கொடுக்க, அதை கையில் வாங்கியவன், “நன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறாயா சம்யுக்தா?… இது ஒரு வழி பயணம். ஜென்மம் தோறும் தொடரும் பவித்திர பந்தம். யார் தடையாய் வந்தாலும் இந்த பந்தம் பிரிக்க முடியாத ஒன்று. நன்றாய் யோசித்து கொள் சம்யு.” என்ற ஈஸ்வர் கையின் மேல் தன் கையை வைத்த சம்யுக்தா புன்னகையுடன் அவன் கண் பார்க்க, பெருமூச்சு ஒன்று ஈஸ்வரிடம் இருந்து எழுந்தது.

ஒரு முறை தான் ஒரு முறை தான் 
மனிதனின் வாழ்கை ஒரு முறை தான் 
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
வாழ்கையில் திருமணம் ஒரு முறைதான் 
ஊரை வந்து பூ தூவ 
ஊர்வலம் போகும் கல்யாணம் 
அம்மா அப்பா கை சேர்த்து 
அட்சதை போடும் சந்தோசம் 
ஒரு முறை தான் ஒரு முறை தான் 
ஒரு சில மகிழ்ச்சிகள் ஒரு முறைதான் 
பெற்றவர்க்கு பிள்ளைகளால் 
சந்தோசம் சில முறைதான்…”  என்ற பாடல் எங்கிருந்தோ கேட்க, வாடிய சம்யுக்தாவின் முகத்தைக் காண சகியாதவனாய், அவள் கையை அழுத்திக் கொடுத்தான் ஈஸ்வர்.

ஈஸ்வரின் கை அழுத்தத்தில் தன்னை சமாளித்து கொண்ட சம்யுக்தா முயன்று புன்னகைத்தாள். 

சம்யுக்தா கொடுத்த திருமங்கலயத்தை ஈஸ்வர் கேசவனிடம் கொடுக்க அதை வாங்கிய அவர் கையில் ஏகத்திற்கும் நடுக்கம். வேர்த்து ஊற்றி கொண்டிருந்தது கேசவனுக்கு.

Mangalyam | Ceremony | Wedding | Pixoto

“கேசவன் அங்கிள்… ஆர் யு ஒகே?…” என்றான் ஈஸ்வர் அவர் முகத்தை பார்த்து விட்டு.

“ஹ்ம்ம்!…. நன்னா இருக்கேன்…”என்றவர் கை தன் வேலையில் ஈடுபட அவர் கண்களோ அடிக்கடி வாயில் புறத்தை பார்த்து கொண்டிருந்தது.

“அங்கிள்!… டைம் ஆகுது பாருங்க… நல்ல நேரம் முடிய போகுது…. சீக்கிரம் அங்கிள்…” என்று ஹேமா துரிதப்படுத்தவும் , செல்வம் எமிரிஷி கோயில் வாசற்படியில் கால்  வைக்கவும், பின்னாலேயே மூன்று கார்கள் சரசரவென்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

முன்னால் பூக்கார அக்கா, மணி, கவிதா வர, அவர்களுக்கு பின்னால் செல்வம், எமி, ரிஷி வர, அவர்களுக்கும் பின்னால் விக்ரம் அனுப்பி வைத்து சம்யுக்தாவின் பாதுகாப்பிற்காக வந்த ஜெவியரும் அவன் ஆட்களும் ஒன்றாய் உள்ளே நுழைந்தார்கள்.

ஜேவியர் கையில் மொபைல் இருக்க, அதில் வீடியோ அழைப்பு கனெக்ட் ஆகியிருந்தது.

உள்ளே நடப்பதை கண்டு ஜெவியரும் அவன் ஆட்களும் உறைந்து நின்று விட்டார்கள்.

இதை எப்படி பல்தேவிடமும், விக்ரமிடமும் அவர்களால் சொல்ல முடியும்?

இவர்கள் பாதுகாப்பு ஒழுங்காய் இருந்திருந்தால், இதை பற்றி முன்னரே தகவல் தெரிந்து இதை நிறுத்தியிருக்க முடியும்.

இந்த திருமணம் எத்தனை குடும்பத்தில் மரணத்திற்கு காரணமாய் இருக்க போகிறதோ என்று உறைந்து நிற்க, அவர்களின் முகத்தில் தென்பட்ட பயம், பதட்டமே ஏதோ சரியில்லை என்பதை விக்ரமிற்கு உணர்த்தி விட்டது.   

“ஜெவியர்!… என்ன ஆச்சு… என்னடா?…” என்ற விக்ரமின் பதட்டமான குரல் கேட்டு கொண்டே இருந்தது.

கண் முன் நடப்பதை நம்ப முடியாதவர்களாய் செல்வம், ரிஷி,எமியும் உறைந்து போய் நின்றார்கள்

‘ மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்’

மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் ஆரம்பிக்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்தத் திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத் துணைவியாக என் சுகதுக்கங்களில் பங்கேற்று நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக’ என்ற மந்திரத்தை கேசவன் சொல்லி, எல்லா தெய்வங்களின் சாட்சியாய் வைத்து, அக்னியையும் சாட்சியாய் வைத்து திருமாங்கல்யத்தை ஈஸ்வர் கையில் கொடுக்க, அதை சம்யுக்தாவின் கழுத்தருகே கட்ட ஈஸ்வர் கைகள் சென்றன.

“நோ!…” என்று உட்சபட்சமாய்  அலறல் அந்த கோயில் பிரகாரத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

ஒரு குரல் செல்வத்தினுடையது.

Vijay Antony Top Best Pictures And Wallpapers Collection ...

இன்னொன்று வீடியோ அழைப்பில் இருந்த விக்ரமுடையது.

Plain Memes Of Jayasurya In Punyalan Agarbattis

“நோ…” என்று கத்தி கொண்டே கையை  ஓடி வந்த செல்வத்தின் கை அந்தரத்தில் அப்படியே நிற்க, வேண்டாம் என்ற கையானது அப்படியே நிற்க அது,  ‘ஆசீர்வாதம்’ போல் அப்படியே நின்றது.

விமானத்தில் அதன் மேல் தாங்க முடியாதவனாய் கால் மடங்கி கீழே அமர்ந்தான் விக்ரம்.

செல்வம், விக்ரம் இருவரின் கண்களிலிருந்தும் வழிய ஆரம்பித்தது கண்ணீர். இதயத்தின் பாரம்,மரண வலி கண்ணீராய் வழிய கண்களை மூடி நின்றார்கள் இருவரும்.

“சம்யுக்தா!…” என்ற பல்தேவின் கர்ஜனையை தொடர்ந்து, பல துப்பாக்கிகள் தங்கள் உறையில் இருந்து வெளி வந்தது   உயிர் பசியோடு.

மூன்று நாட்கள் கழித்து…

கோவா!

Sun Rocks Hotel Santorini | 2018 World's Best Hotels

மலைமேல் இருந்த மாளிகையின் பால்கனியிலிருந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.கீழே குனிந்து பார்த்தால், தலை சுற்ற வைக்கும் சமுத்திரம். 

அந்த கடலைப் போலவே சம்யுக்தாவின் மனமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

லட்சம் எரிமலைகளின் சீற்றம் சம்யுக்தாவின் கண்களில்.

முகம் வீங்கி கன்றி சிவந்து இருக்க, உதடு கிழிந்திருக்க, தலையில், கையில் மிக பெரிய கட்டு போடப்பட்டு இருக்க, பார்ப்பவர் மனதை கசக்கி பிழியும் வண்ணம் இருந்தது அவளின் நலுங்கிய தோற்றம்.

Karthik Subbaraj and Keerthy Suresh on Penguin, its digital ...

உடல் முழுவதும் ரத்தம் அங்கங்கே உறைந்து, காய்ந்து, கன்னி போயிருந்தது. பால் ரோஜா நிற கன்னத்தில் ஐந்து விரல்களின் தடம் அப்படியே இருந்தது.       

வெளியே தெரிந்த காயங்கள் இவை மட்டும் தான். வெளியே தெரியாத காயங்கள் இன்னும் எத்தனையோ!

சுடிதாரில் இருந்தவளின் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது திருமாங்கல்யம். அதை அவளின் ஒரு கரம் அழுந்த பிடித்து கொண்டிருக்க, கண்கள் கடலில் அஸ்தமித்து  சூரியனையே பார்த்து கொண்டிருந்தது.

பின்னால்   நடந்து வரும் சப்தம் கேட்டும் சம்யுக்தா திரும்பவில்லை.

வந்தவனோ பால்கனி கதவின் மீது சாய்ந்து நின்று,  ரசித்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ பொண்டாட்டி!…”  என்ற சத்ருஜித்தின் குரல் நாராசமாய் காதில் ஒலிக்க, சம்யுக்தாவின் தீ விழிகள் அவனை நோக்கித் திரும்பியது.

Viral: Rahul Bose was charged Rs 442 for 2 bananas and Twitter ...

அதே சமயம் நகரின் வேறொரு மூலையில் கூண்டில் அடைபட்ட சிங்கமென உலவி கொண்டிருந்தான் தேஜ்.

“தேஜ்!…  ப்ளீஸ் ரிலாக்ஸ் டா…” என்றான் அவன் இருந்தவன்.

“எப்படிடா ரிலாக்ஸ்சா இருக்க முடியும்!… என் சம்யுக்தாவை, என் மனைவியை  அவன் தூக்கி போய் ஒன்றை நாள் ஆகுது. அந்தப் பல்தேவும், விக்ரமும் சம்யுக்தாவை அந்த தெரு நாய் கிட்டே தாரை வார்த்துட்டு நிக்கிறாங்க.

 சம்யுக்தா என் மனைவி… என் மனைவியை காப்பாற்ற முடியாத நானெல்லாம் ஒரு ஆண்மகனா?…”  என்று கர்ஜித்தவனின் கை பட்டு அந்த அறையில் இருந்த பொருளெல்லாம் உடைய ஆரம்பித்தது.                              

சுவரில் மாட்டப்பட்டிருந்த சம்யுக்தாவின் ஆளுயர ப்ளோ அப் படத்தின் மீது தன் தலை சாய்த்து நின்றவன் உதடுகள் முணுமுணுத்து கொண்டிருந்தது

“சம்யுக்தா…. உன்னை தேடி வருவேன் கண்மணி ” என்று.   

Silhouette of man standing at handrail over cloudy cityscape ...                 

ஆட்டம் தொடரும்.       

Leave a Reply

error: Content is protected !!