UYIRODU VILAIYADU 19

untitled-1049x675

UYIRODU VILAIYADU 19

  • anitha
  • September 8, 2020
  • 0 comments

(மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட  நாடு இந்தியா.   முன்னாள் படைவீரர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில்  சேருகிறார்கள் என்றாலும், அவர்கள் சுயாதீன நலன்களுக்காகப் போராடும் உயரடுக்கு தனியார் ராணுவமாக, சட்டங்களுக்குப் புறம்பாகச் செயல்படுவது என்பது இந்தியாவிற்குள் நடக்க முடியாத ஒன்று.

தனிப்பட்ட மற்றும் உள்நாட்டு பயன்பாட்டிற்கான ஒரு உயர்நிலை பாதுகாப்பு ராணுவ சேவையை வைத்திருப்பதற்கான வாய்ப்பை, ஆயுத கட்டுப்பாடு சட்டங்கள் தடுக்கின்றன.

மிகப்பெரிய வரவு செலவுத் திட்டங்களில், ‘போராளிகளின் அவுட்சோர்சிங்கும்’ அடங்கும்.

மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது, தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் பாதுகாப்பு விஷயங்களில் அவ்வளவு வலுவான செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை.  அரசின் ஏகபோக உரிமையுடன், அவுட்சோர்சிங் போராளிகளுக்குத் தனியார் துறை எப்போதுமே வழங்கப்பட வாய்ப்பில்லை.

மேலும், இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கிளர்ச்சி, சர்ச்சைக்குரிய எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இத்தகைய மோதலின் தன்மை, அரசாங்க அமைப்புகள் அனைத்து வேலைகளையும் செய்யும் அரசியல் சூழல், பி.எம்.சி.களை உருவாக்குவதற்கு அங்கீகாரம் வழங்குவதில் சிரமத்தைக் கொடுக்கிறது. 

இந்தக் காரணங்களால் இந்தியாவில் வெளிப்படையான தனியார் ராணுவம் இருப்பதாகவோ, செயல்பட்டு வருதாகவோ தகவல் இல்லை.)

அத்தியாயம் 19

‘தேசத்தின் எல்லை ஓரமே
நீயில்லை எந்த நேரமே
எந்தக் கண்களும் உறங்க முடியுமா!
வான் முட்டும் நெருப்பு வேலியாய்
நீ மட்டும் காவல் இருப்பதால்
தாயின் மணி கொடி நிமிர்ந்து பறக்குதே!
இல்லம்…. இந்தியா!
தில்லும்… இந்தியா!
உன் தாயும் இந்தியா!
வா வரம் நீ தானே
புயலின் புதல்வா….’ என்ற பாடல் வரிகளில் உள்ள உண்மைக்குச் சான்றாக, அத்தியாவசிய சேவைகள் பிரிவில், தேசத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுக்காப்பு பணியில் உள்ள கோடான கோடி வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தின் தியாகங்கள், இன்றளவும் நாம் மூச்சு விடுவதை, உறுதி செய்து கொண்டு தான் இருக்கிறது.

https://www.youtube.com/watch?reload=9&v=8XfjFm67-Rc&t=112s

(A MUST WATCH AND DEDICATION TO REAL HERO’S OF OUR NATION)

இவை பணத்தால், பென்ஷனால் ஈடாகச் சொல்ல முடியாத, ஒவ்வொரு நொடியும் செய்யப்படும் தியாகம். 

A Salute To Real Heroes - Home | Facebook

நாட்டைத் துண்டாட நினைக்கும், பொது மக்களின் உயிருக்கு எமனாய், கேவலம் பணத்திற்காக மாறிக் கொண்டிருக்கும் தீய சக்திகளின் திட்டத்தை முறியடிக்கக், கடந்த நான்கு மாதமாய் அந்தக் கிராமத்தில் தங்கள் சுக, துக்கத்தை மறந்து, ‘அண்டர்கவர்’ பணியில் ஈடுபட்டு இருந்தார்கள் அந்த நால்வரும்.

ஒரு வேலை செய்கிறோம் என்றால், கொடுக்கப்படும் அந்த உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அது எந்தத் துறையாக இருந்தாலும் மனமானது துவண்டு விடும். துவண்ட மனம், மீண்டும் இன்னொரு வேலையைச் செய்ய முயலும்போது அதற்கான ஊக்கம் இல்லாமல் போய் விடும். Recognition is the ultimate reward.

ஆனால், இவர்கள் செய்யும் வேலைகள், செய்யப்பட்டதாக எந்தக் கோப்புகளிலும் காணப்படாது. குடும்பத்தாரிடம், தோழமைகளிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத தேச ரகசியங்கள்.

அங்கீகாரம், மரியாதை, கெளரவம் என்று எதுவுமே கிடைக்காத வேலை இது.

இவர்கள் தடுத்த தீவிரவாத தாக்குதல் அதிகம்.

Terror attacks drop, but Pakistan 'not out of the woods' - ABC News

கவசமாய் இருந்து, தங்கள் சக தோழமைகளை இழந்து, பொது மக்களின் உயிர் போகாமல் தடுத்த சம்பவங்கள் அதிகம். குண்டுகள் வெடித்து, குடும்பங்களைச் சிதைக்காமல் இவர்கள் கரங்கள் தடுக்கவில்லையென்றால், ‘enough is enough’ என்று தான் இன்று நாடும், நாட்டு மக்களும் கதறும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

அமைதி பூங்காக்கள் தீவிரவாதம், பேராசை என்ற புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும்.

Terrorist Attack on CRPF in Kashmir; 3 Troopers Killed | National | Deshabhimani | Monday Aug 17, 2020

இப்படியொரு குழு இல்லவே இல்லை. அவர்கள் எந்த ரகசிய ஆபரேஷன்னிலும் கலந்து கொள்ளவே இல்லை. எதைப் பொது மக்கள் அறிந்து கொள்ளவில்லையோ, அது அவர்களைப் பாதிக்காது. பல சமயங்களில் பொது மக்களை இருட்டில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

அங்கு நடந்து கொண்டிருக்கும் ரகசிய ஆபரேஷன் பெயர், ‘Operation zubeida’

‘zubeida’ என்றால் உயர்ந்த சிகரம் என்று அர்த்தம்.

அந்த நால்வருக்கு தலைவன் மாதிரி இருந்தவர், DIG- Deputy Inspector General/காவல்துறை துணை ஆய்வாளர் ஹர்ஷன் குப்தா, மற்றொவர் DSP/Deputy Superintendent of Police (DSP) சச்சின் பன்சால், மத்திய புலனாய்வுப் பிரிவு/CBI இன்ஸ்பெக்டர் முகுந்த், அடுத்து ATS ஸ்பெஷல் அதிகாரி ரஞ்சித் சாகர்.

ATS பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ஏடிஎஸ்) நடத்தி கொண்டிருக்கும், இந்த ரகசிய ஆபரேஷனுக்கு டெபுடேஷனில்/deputation வந்திருக்கும் அதிகாரிகள் மற்ற மூவர்.

வேலை முடிந்த உடன், இவர்கள் தங்கள் துறைகளுக்கே சென்று விடுவார்கள்.

‘operation zubeida’ என்ற ரகசிய திட்டத்தின் படி, சர்வதேச இந்திய எல்லைகளைக் கொண்ட பஞ்சாப், குஜராத், காஷ்மீர் போன்ற எல்லை புற கிராமங்களின் வழியாக, இந்தியாவிற்குள் நுழையும் போதை மருந்துகள், ஆயுத சப்லை, இந்திய மாநிலங்களுக்குள் நுழைவதற்குள் தடுக்கும் ரகசிய இன்டெலிஜென்ஸ் குழு.

The Chitta economy: How the business of drugs works in Punjab - The Economic Times

சட்ட, ஒழுங்கு அமலாக்க பிரிவு, ஸ்பெஷல் கமாண்டோ, இன்டெலிஜென்ஸ் என்று பல்வேறு தேசிய பாதுக்காப்பு துறையில் இருப்பவர்கள், இது போன்ற மிஷன்களுக்கு ஒரு குழுவாய் உருவாக்கப்பட்டுச் செயல்படுவது அதிக அளவில் நடக்கும் ஒன்று தான் என்றாலும், இவர்கள் பங்கேற்று இருப்பது, இவர்கள் டீம் உருவாக்கிய, டீம் லீடர் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

இந்தக் குழு, காவல்துறை துணை ஆய்வாளர் ஹர்ஷன் குப்தா தலைமையில், கடந்த நான்கு மாதமாய் அந்தக் கிராமத்தில் தான், குல்ஷன் உதவியோடு, அவனின் உறவு என்ற போர்வையில் தங்கி, இந்திய எல்லை பகுதிகளுக்குள் நுழையும் போதை மருந்து, ஆயுதங்களை, அதில் ஈடுபட்டு இருக்கும் மாபியா குழுக்களைக் கண்காணித்து வருகிறார்கள்.

இதுவரை இந்தப் பகுதியிலிருந்து இவர்கள் பிடிபட்ட போதை மருந்துகளின் விலை சர்வதேச சந்தை மதிப்பில் பல பில்லியன் டாலர் ஆகும்.

இந்தப் போதை மருந்துகள் இந்தியாவிற்குள் டிஸ்ட்ரிபியூட் ஆகி இருந்தால், எத்தனை பேர் அடிமையாகி, தங்கள் வாழ்க்கையையே பல்வேறு வகையில் இழந்து இருப்பார்களோ!…

எத்தனை குடும்பங்கள் சிதைந்து போயிருக்குமோ!…

Punjab drugs racket has Chinese connection too – Hill Post

எல்லை தாண்டி இந்தியாவிற்குள் ஆயுதங்கள் இவ்வாறு நுழைந்திருந்தால், ஏதாவது ஒரு லூசுத்தனமான காரணத்திற்காக வன்முறை, கலவரம், அரசியல் கொலைகள் நடந்து, நூற்றுக்கணக்கில் அப்பாவி பொது மக்களும், குடும்பங்களும் அழிந்து இருக்கும்.

பணத்திற்காக விலை போன, பதவி ஆசை என்பதை விடப், பதவி வெறி பிடித்து, பின்னால் இருந்து இயக்கும் விஷ கிருமிகளால், எங்காவது நடக்கும் இது போன்ற செய்திகள் நம் கவனத்தை கவர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத விஷயம்.

இந்த ஆயுதங்களால், பேடித்தனமான மறைமுக தாக்குதலான கன்னி வெடிகளிலும், தற்கொலை படை தாக்குதலுக்கும் உயிர் இழக்கும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகம் தான்.

Page 437: Latest Politics News – Short Politics News in English – Shortpedia

பொது மக்களுக்கு இது செய்தி அவ்வளவு தான். ஆனால் இது நடக்காமல் தடுக்க போராடி கொண்டிருக்கும் ரஞ்சித் போன்ற ஆட்களுக்கு இது ஜனன, மரண போராட்டம்.

இந்திய அரசாணை கோப்புகளின் படி இந்த அதிகாரிகள் தற்பொழுது இந்தியாவில் பல்வேறு பாகங்களில் நடந்து கொண்டிருக்கும் மீட்டிங், கான்பிரென்சில் இருக்கிறார்கள். இவர்கள் யாருமே இப்போதைக்கு அந்தக் கிராமத்தில் இல்லவே இல்லை.

Off the book opertions and surgical strike team அது.

இந்திய உளவுத்துறை கோப்புகளில் இப்படியொரு ஆபரேஷன் நடந்து கொண்டிருப்பது எங்குமே பதியப்பட்டு இருக்காது. plausible deniability.

இவர்கள் இங்கே இருப்பது வெளியே தெரிய கூடாது என்பதால் தான் வெளியிலிருந்து வந்த போது குல்ஷன், அப்படி பதுங்கிப் பதுங்கி வந்தான்.

குல்ஷன் சிக்கி இருந்தால், அவன்மூலம் ரஞ்சித் டீம் சிக்கி இருக்கும். ஒரே தேசத்திற்காகவும், மக்களைக் காப்பாற்றவும் தான் இவர்கள் உழைக்கிறார்கள் என்றாலும், சில சர்ஜிக்கல் வேலைகள், உளவு துறை செயல்பாடுகள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் காக்க நிர்பந்தம் இருக்கும்.

தலைமைக்குத் தகவல் தந்து இவர்கள் விசாரணை முடித்து அனுப்பபடுவதற்குள், எல்லை தாண்டி இந்தியாவிற்குள் வந்திருந்த அந்தப் போதை மருந்து, ஆயுதங்கள் காணாமல் போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

இப்படிப்பட்ட ஷிப்மென்ட் இந்திய மக்களைப் பொறுத்தவரை உள்ளே வரவே இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக டிவி ஷோகளில், சமூக வலைத்தளங்களில் இருக்கட்டும். தெரியாத உண்மை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

“பாய்!… இங்கேயிருந்து மூணு லாரி கிளம்புது… எல்லாம் NH 48 வழியாகத் தான் சென்னை போகிறது. ஒரு லாரியில் போதை மருந்து. மற்ற ரெண்டு லாரியில் ஆயுதங்கள்.

ஒரு லாரி டிரைவர் உடன் சேர்த்து, மூன்று பேர் விதம், மூன்று லாரிகளில் ஒன்பது பேர். எல்லாம் பழைய கைத்துப்பாக்கிகள் தான்.” என்றான் குல்ஷன்.

Transport strike: Trucks, buses stay off the road across India

தன் கையில் இருந்த, palm டாப் எடுத்த ரஞ்சித், “NH 341o, NH 48 வழியாக என்றால், நம் இருக்கும் இடத்திலிருந்து சென்னை கிட்டத்தட்ட 2,335 கிலோமீட்டர். குறைந்தது இரவு பகல் பாராமல் இந்த லாரிகளை ஓட்டினால் தான் மூன்றாவது நாளாவது தமிழகத்தில் இருப்பார்கள். ஏறக்குறைய நாற்பது மணி நேர பயணம்.” என்றான் ரஞ்சித்.

on the outline map of India mark 1 East West corridor from silchar to porbander 2 - Social Science - Life Lines of National Economy - 14203977 | Meritnation.com

“எங்கே வைத்து மடக்குவது?” ஹர்ஷன் குப்தா.

“மக்கள் நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதி தான் சரி. NH 48 முழுக்க, இரவில், லாரி வந்து நிற்கும் தபாக்கள் அதிகம். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத தபாக்கள் தான் இவர்களுக்கும் பாதுக்காப்பு. மக்களின் கவனத்தை கவராமல் செயல்பட முடியும்.

அப்படி மக்கள்நடமாட்டம் அதிகம் உள்ள இடமாய் இவர்கள் தேர்ந்து எடுத்தால் நமக்குத் தான் பிரச்சனை ஆகி விடும். தப்பிக்க என்று மக்களைப் பணய கைதிகளாகப் பிடித்தார்கள் என்றால், உயிர் சேதம் இல்லாமல் இவர்களை அழிப்பது என்பது மிகுந்த சிரமம்.

பொது மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, இரவு நேரத்தில் பயணம் செய்யும் கன ரக லாரிகள் மட்டுமே தங்கி செல்லும் தாபாவில் தான் நிறுத்துவார்கள். இப்படியொரு இடம் தான் அவர்களுக்கும் வசதி.” என்றான் ரஞ்சித் யோசனையுடன்.

Charpoy. – Ramana's Musings

“இப்படி ரோடு ஓரம் இருக்கும் தாபா, உணவகம், டீக்கடைகளில் நிறுத்துவாங்க என்று எதை வைத்துச் சொல்றீங்க?… நீங்கச் சொல்வது போல் நிறுத்தவில்லை என்றால் ….?” என்றான் குல்ஷன்.

“விவசாயத்தை அடுத்து நமது நாட்டில் அதிக வேலை கொடுப்பது டிரான்ஸ்போர்ட் துறை தான். எந்தப் பொருள் நாட்டின் ஒரு மூலையிலிருந்து நம்மை அடைய வேண்டும் என்றாலும் அதில் போக்குவரத்து சம்பந்தப்படாத எதுவும் இல்லை.

உணவுப் பொருட்கள், உடைகள், Finished கூட்ஸ் என்று பொதுப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டிரக்கிங் துறை இந்திய பொருளாதாரத்தில் முதுகெலும்பாகச் செயல்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது. நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 90% சரக்குகளில் 65% ஆகும் சாலை போக்குவரத்து, உற்பத்தித்திறனையும் போட்டித் திறனையும் மேம்படுத்தும் முக்கிய இணைப்புகளில் ஒன்றாகும்.

Truck Drivers in India | TruckSuvidha

லாரி, ட்ரக் டிரைவர் தானே என்று சாலைகளில் இவர்களைக் கடக்கும்போது வெகுசுளுவாக நினைத்து விடுகிறோம். ஆனால், இந்த ஓட்டுநர்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் உணவு, தூக்கம் மற்றும் ஓய்வெடுப்பதற்கான நிலையான நேரம் இல்லை. லாரி அவர்களின் வீடு என்று சொல்வது அவர்கள் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்து பார்த்தால் தான் புரியும். 

Eicher

லாரி தான் அவர்கள் சாலையில் இருக்கும்போது அவர்களுக்குத் தங்குமிடமாகிறது. அவர்கள் அதில், அதன் கீழ், அதன் மேல் கூடத் தூங்குகிறார்கள்.

ஓட்டுனர்கள் நேர இலக்குடன் பிணைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இடைவிடாமல் நீண்ட தூரம் ஓட்டுகிறார்கள். அவர்கள் இலக்கை அடைவதை உறுதிசெய்ய, அவர்களுக்குச் சரியான தூக்கம் மற்றும் இடைவெளி இல்லாமல் வாகனம் ஓட்ட முடியாது. நேர வரம்புகள் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றன.

பதினைந்து மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் ரெஸ்ட், உணவு, ரிலாக்ஸ் இல்லாமல் ஒரு கன ரக வாகனத்தை, அதுவும் நான்கு மூன்று பக்க இரும்பும், ஒரு பக்கம் கண்ணாடியும் கொண்ட சிறையிலிருந்து ஓட்டுவதை கற்பனை செய்து பார் குல்ஷன். 

Highway In My Veins: 18 Images That Capture Indian Truck Art Straight Out Of Alice In Wonderland

சத்தியமாய் ஓய்வு, உணவு இல்லாமல் முடியாத காரியம். உடல் வலி உயிர் போகும். எத்தனையோ ரோடு ஓரங்களில் லாரி நிறுத்தி, அங்கேயே குளித்து, உணவு சமைத்து, உறங்கி இந்த ட்ரைவர்கள் இருப்பதை பார்த்துக் கடந்திருப்போம்.

What is it like to be a truck driver in India? - Quora

இந்த வசதி, அவகாசம் இந்தக் குழுவிற்கு கிடையாது.ரோட்டில் அமர்ந்து உணவு தயாரித்து கொண்டு எல்லாம் இருக்க முடியாது. பசி, தூக்கம் என்பது எல்லோருக்கும் பொது தானே!… அதுவும் இப்படி காலை முதல் மாலை வரை காலைத் தொங்க போட்டு கொண்டு செய்யும் பணியில் கை, காலில் ரத்த ஓட்டம் தடைபடும். 

அவங்களுக்கு உள்ள ஒரே வழி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இது போன்ற தபாக்கள் தான். சோ இந்தத் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஏதாவது ஒரு தாபாவில் இன்றிரவு நிச்சயம் நிறுத்துவார்கள். நிறுத்தித் தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை. அவர்களும் மனிதர்கள் தான் குல்ஷன்.” என்றான் ரஞ்சித். 

“எப்படி அவ்வளவு உறுதியாய் சொல்றீங்க பாய்?” என்றான் குல்ஷன்.

“ஒரு மாதம் முழுக்க இப்படி ட்ரக் டிரைவராகவே வாழ்ந்து இருக்கிறேன். கார், ஆட்டோ, ட்ரக், லாரி, கன ரக வாகனம் ஓட்டும் பணி என்பது அத்தனை நரகம் குல்ஷன். ஒவ்வொரு அணுவிலும், உடம்பில் ஆயிரம் ஊசிகள் குத்துவது போல் ஏற்படும் உடல் வலி, கொஞ்ச நேரம் உறக்கம் கேட்கும் கண்கள் என்று தினம் தினம் குடும்பத்திற்காக இந்த வாகன ஓட்டுனர்கள் அனுபவிக்கும் உடல் உபாதை, நோய்கள் அதிகம்.

அதிகமாய் நீர் அருந்த முடியாது. நீர் அருந்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நிறுத்த வேண்டி வரும். நேரம் விரயம் ஆகும் என்று நீர் பருகுவதே கம்மி என்பதால், உடலில் பல தோற்று நோய்க்கு, நேரத்திற்கு சாப்பிடாததால், கண்ட இடத்தில் உணவு வாங்கி சாப்பிடுவதால் அல்சர் போன்றவைக்கு ஆளாக நேரிடும்.” என்றான் ரஞ்சித். 

“ஒன்பது பேர் என்று குல்ஷன் சொல்றானே!… எதுக்கும் அந்தப் பகுதி காவல் துறைக்குத் தகவல் கொடுத்துடுலாமா?… BACK UP?” என்றார் சிபிஐ அதிகாரி முகுந்த் சக்சேனா.

“இல்லை வேலைக்கு ஆகாது.” என்றார் டிஐஜி ஹர்ஷன் குப்தா.

“ஏன் சார்?… அவங்க நம்மைவிட எண்ணிக்கை அதிகம். வி ஆர் அவுட் நம்பேரேட்/ we are outnumbered.” என்றார் முகுந்த்.

“இல்லை… இந்த மாபியா ஆப் இந்தியா குழுக்கு எல்லா இடத்திலும் ஆள் உண்டு. போன தடவை இப்படி தான் விஷயம் கசிந்து, நாலு குடும்பத்தைப் பணய கைதிகளாகப் பிடிச்சுட்டாங்க. ஐந்து பேர் பொது மக்கள் இறந்துட்டாங்க. நம்ம பக்கம் ரெண்டு பேர் என்று பயங்கர இழப்புக்குப் பின் தான் அவனுங்களை சுட்டு கொன்றோம்.” என்ற ரஞ்சித் குரலில், அன்று நடந்தது மீண்டும் கண் முன்னே ஓட, அவன் கை முஷ்டி இறுகியது.

What should you do if you find yourself in a hostage situation?

“கேஸ் சிலிண்டர் வெடித்து குடும்பம் பலி, சாலை விபத்தில் குடும்பம் பலின்னு’ கிளீன் அப்செய்வதற்குள் எங்க தலை உருளாத குறை. இந்தத் தடவை அப்படி ஆகக் கூடாதுன்னு தான் சார் யோசிக்கிறார்.” என்ற ரஞ்சித் பதிலைத் தலை அசைத்து ஆமோதித்தார் ஹர்ஷன்.

அந்த ஆபரேஷனில் ரஞ்சித் உடன் இருந்தவர்.

“அவங்க ஒன்பது பேர். இங்கே நாம நாலு. போகும் வழியில் இன்னும் மூணு பேர் என்று நம்ம டீம் ஏழு பேர். பார்த்துக்கலாம் சார்… சர்ப்ரைஸ் தாக்குதல் என்பதால் சுலபம்.” என்றார் சச்சின் பன்சால்.

ரஞ்சித் எதையும் சொல்லாமல் தன் தாடையை தேய்த்தவாறு, கையில் இருந்த மேப்பை பார்த்துக் கொண்டிருக்க, காவல்துறை துணை ஆய்வாளர், ஹர்ஷன் குப்தாவின் கவனம் ரஞ்சித் மேல் பதிந்தது.

சென்ற ஆபரேஷன் நடக்கும்போது, ரஞ்சித்தின் துரிதமான செயல்பாடு இல்லையென்றால் உயிரிழப்பு இன்னும் அதிகமாகி இருக்கும் என்பதாலும், இன்று அவர் உயிரோடு இருக்கவும் காரணம் ரஞ்சித்தின் கூர்மையான அறிவு என்பதாலும் அந்தத் துடிப்பான இளம் அதிகாரியை அவருக்குப் பிடித்து இருந்தது.

தவிர எல்லோரும் ஆட்டு மந்தை மென்டாலிட்டியுடன் யோசித்தால் ரஞ்சித், ‘அவுட் ஆப் தி பாக்ஸ் யோசனைகள்/ out of the box thinking’ எத்தனையோ முறை ஆபத்திலிருந்து குழுக்களைக் காப்பாற்றி இருப்பதை கண் கூடாகக் கண்டு இருந்தார்.

கொடுக்கும் உத்தரவை அப்படியே செயல்படுத்துபவன் இல்லை ரஞ்சித். அதில் உள்ள சாதகம், பாதகம் யோசித்து, தன் குழுவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல், சமுதாயத்தின் விஷ கிருமிகளை அழிப்பதில் முனைப்பானவன்.

“என்ன ரஞ்சித் யோசனையில் இருக்கீங்க?” என்றார் ஹர்ஷன்.

Allu Arjun, Sukumar's new film is titled 'Pushpa', Rashmika Mandanna plays the female lead - The Hindu

“சார்!… பர்மிசன் டு ஸ்பீக் பிரீலி/ permission to speak freely சார்?” என்றான் ரஞ்சித் அனுமதி கேட்டு.

“ஓஹ்!… கமான் யங் மேன்… பெர்மிஷன், உயர் அதிகாரி எல்லாம் என்று உன்னைத் தடுத்து இருக்கு?… இன்னும் அந்தக் குருவில்லா கிரிக்கெட் ஆடிப் பந்து பட்டுத் தான் மூக்கு உடைந்தது என்று கதை விட்டுட்டு சுத்திட்டு இருக்கான். ஐ நோ மேன்… அந்த ஆள் மூக்கு மட்டும் இல்லை முகத்தையே பேர்த்து தான் இருக்கணும். தப்பு என்றால் முகத்துக்கு நேரா, வாயால பேசாமல் கையில் நீ பேசிய தருணம் அநேக என்று ஐ நோ பாய்.

ஏதோ அன்னைக்கு நீ நல்ல மூடில் இருந்ததால் அவன் முகம் மட்டும் பங்க்சர் ஆச்சு.”என்றார் ஹர்ஷன் புன்னகையுடன்.

Where is Murali Sharma?

“அப்போ கிரிக்கெட் ஆடிக் குருவில்லா மூக்கு, வாய் உடையலையா?” என்றார் முகுந்த் திகைப்புடன்.

“ரஞ்சித் அந்தாளுடன் விளையாடியதால் தான் அவன் மூக்கு, வாய் உடைந்தது.” என்றார் ஹர்ஷன்.

“குருவில்லா கொஞ்சம் மறை கழன்ற கேஸ் தான். எங்கேயுமே சென்டர் ஆப் அட்ராக்ஷன் தான் மட்டுமே இருக்கணும் என்று ரொம்ப எஸ்பெக்ட் செய்வாரே!… மிஷன் ஜெயித்தால், அது அவரின் வெற்றி. அவரால் தான் அது முடிந்தது என்று பில்ட் அப் கொடுப்பார். அதுவே தோற்றால், அதில் கலந்து கொண்ட வீரர்கள் திறமை இல்லாதவர்கள், அவர்கள் தவறு என்று சொல்வாரே. ரஞ்சித் சார் மூக்கை உடைக்கும் அளவுக்கு அந்த ஆள் என்ன செய்தான்?” என்றான் சச்சின்.

“போன தடவை நானும் ரஞ்சித் சென்ற மிஷன் தகவல் அந்த ஆள் தான் கொடுத்தான். இதுபோல் எல்லைப்புற கிராமத்தில் குல்ஷன் மாதிரி யாரோ ஒரு ஆள் கொடுத்த தகவலைச் சரி கூடப் பார்க்காமல், பாக் அப் இல்லாமல் அனுப்பி வைத்தது தான் பொது மக்களும், நம் ஆட்களும் இறக்க காரணம்.

கிளம்பும் முன் கூடக் கேட்டோம். இந்தத் தகவவலின் அடிப்படை செக் செய்தாகி விட்டதா என்று… தகவல் சொல்பவன் பணத்திற்காகச் சொல்பவன் என்பதால், அவன் நிமிடம் பணத்தை வாங்கி கொண்டு, அந்தப் பக்கம் காட்டி கொடுத்திருக்க மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்? பதில் சரியாய் வரவேயில்லை.

அந்த ஆளை நம்பி போனோம். உயிர் இழப்பு அதிகம். நானும் ரஞ்சித்தும் தான் பொறுப்பு என்னும்போது, அந்த உயிர்கள் போனதற்கு நாங்களும் ஒரு காரணம். ஸிரோ casuality மிஷன் அது. ஆனால் மூன்று நாள் தொடர்ந்து பணயக்கைதி பிடிச்சி வச்சிட்டு ரொம்ப பிரச்சனை ஆகி போச்சு . அந்த ஆளை நேரில் சந்தித்து நானும், ரஞ்சித்தும் கேள்வி கேட்டோம். பொது மக்கள் அங்கே வந்தது அவர்கள் தப்பாம்.” என்றார் ஹர்ஷன் வெறுப்புடன்.

“அப்போ நம் வீரர்கள் இறந்தார்களே அது…”என்றார் முகுந்த் கோபத்துடன் .

India Might Have Its Own 'Remembrance Day' For Martyrs

“அதுக்கு தான் சம்பளம் தருகிறார்களாம். செத்தால் குடும்பத்திற்கு மாதமாதம் பென்ஷன் வருகிறதாம். அதுவும் லட்சக்கணக்கில். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தானே வேலைக்கு வரீங்க… அப்புறம் என்ன?…’ அப்படி அந்த ஆள் சொல்லி முடித்தானோ இல்லையோ, ரஞ்சித் அந்த ஆள் மூக்கோடு, பேசிய வாயோடு ஒரு நாள் கிரிக்கெட் மேட்ச் ஆடிட்டான்.

“ஒரு லட்சம் நான் கொடுக்கிறேன்…. இந்த ஆள் வீட்டில் இருக்கும் அவன் மகனையோ, மகளையோ இது போல் ட்ரைனிங் அனுப்பி, இதுபோல் ஆபத்தான வேலைகளுக்குக் காரணமே இல்லாமல் சாக விடுவானா? இது மாதிரி நாய்களுக்கு  என்ன தெரியும் பாதுக்காப்பு பணியில் இருக்கும் ஒவ்வொருவனின் கஷ்டம், வலி, வேதனை. அவன் குடும்பம் செய்யும் தியாகம் எல்லாம். bloody ப்ளாக்கர்ட்.

நாங்க எதிர்பார்த்து சென்றது, ‘இதுபோல் இனி இன்னொரு டீம் உயிர் போகாது’ என்ற உத்திரவாதத்தை கேட்டுத் தான். ‘இனி இந்தத் தவறு நடக்காது’ என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்திருக்கும். சாரி கூட நாங்க எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த ஆள் பேசிய பேச்சுக்கு…” என்ற ரஞ்சித் கை முஷ்டி மீண்டும் இறுகியது.

“ராணுவ துறையிலிருந்து கொண்டு எப்படி இப்படி…”என்றார் முகுந்த்.

“அந்த ஆள் பாதுக்காப்பு துறையில் இருந்தவனோ, சர்விஸ் செய்தவனோ, ட்ரைனிங் எடுத்தவனோ, யுத்த களத்தைக் கண்டவனோ இல்லை. அப்படி ட்ரைனிங் எடுத்து வந்திருந்தாலோ, இப்படி அதிகாரிகளைக் களத்திற்கு அனுப்பியவனாக இருந்தாலோ, இப்படியொரு பேச்சு வாயில் இருந்து வந்திருக்காது. கைகளில் அழுக்கு படாமல், ac அறையில் அமர்ந்து பேப்பர் வேலை செய்து, உயர் அதிகாரிகளுக்குச் சோப்பு போடும் வேலை செய்பவன். எப்படியோ உள்ளே வந்துட்டு, நம்ம உயிரை வாங்கிட்டு இருக்கான்.” என்ற ஹர்ஷன்,

“தமிழ்நாட்டு ராணுவ பசங்களுக்கே உண்டான திமிர், கர்வம், துணிச்சல் இல்லையா!… துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளை போன்ற வீரம், புலியை முறத்தால் அடித்துத் துரத்திய வீர தமிழச்சிகள் நிறைந்த மண்ணிலிருந்து வந்தவன் இல்லையா அதான் ரஞ்சித்  வாயால்  பேசாமல் கையால் பேசிட்டான். உயர் அதிகாரி என்று கூடப் பாராமல் முகத்தை உடைத்தவன் தான், இப்போ பேசப் பெர்மிஷன் கேக்கிறான்… டோன்ட் பி சோ பார்மல்… ஸ்பீக் அவுட் மேன்.” என்றார் ரஞ்சித் முதுகில் ஒன்றுவைத்து.

‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்’ என்று நடக்கும் தலைமைக்குக் கீழ் பணி புரிவதை விட, ‘உங்களுக்கு என்ன தெரியும் ஷேர் செய்யுங்க.’ என்று தட்டி கொடுத்து வேலை வாங்கும் அதிகாரிகள் எந்தத் துறையிலும் கிடைப்பது வரம்.

இதற்கும் ஹர்ஷன் வயதிலும், பதவியிலும், அனுபவத்திலும் உயர் அதிகாரி. ரஞ்சித் வயது அவர் சென்ற மிஷன் கணக்கு.

‘ நான் சொல்வதை நீங்கச் செய்துட்டு போங்க.’ என்று குருவில்லா போன்ற பதவி வெறி பிடித்து, எது சரி வரும், எது சரி வராது என்று கூடத் தெரியாமல், சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத திட்டம் எல்லாம் போட்டு நச்சரிக்கும் ஜந்துக்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

ஆர்டர் கொடுத்தால், மற்றவர்கள் மதிக்க வேண்டியது அவசியம். மீறினால் insuborndination, அடி பணிய மறுத்தல் என்று கோர்ட் மார்ஷல் செய்யக் கூட முடியும்.

குருவில்லா போன்ற அதிகாரிகள் தேசத்திற்கு பிடித்த தோற்று நோய்.

ஆனால், இங்கே இவர்கள் பணயம் வைப்பது உயிர் என்னும்போது, இவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள். நம்மை நாம் எந்த அளவிற்கு நம்புகிறமோ அதே அளவிற்கு இது போன்ற மிஷன் வரும் துணை அதிகாரிகளை நம்ப வேண்டியது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்பத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம்.

ரஞ்சித் அறிவு, துணிச்சல், ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் மேல் ஹர்ஷனுக்கு அவ்வளவு நம்பிக்கை.

“குல்ஷன் கொண்டு வந்த தகவல்மேல் எனக்கு நம்பிக்கை இல்லை சார்.” என்றான் ரஞ்சித்.

ஹர்ஷன் மட்டும் அல்ல அங்கிருந்த மற்ற அதிகாரிகளும், குல்ஷன் கூடத் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“பாய்!… என்னைச் சந்தேக படறீங்களா பாய்?… சத்தியமா நான் துரோகம் செய்யலை பாய்…” என்றான் குல்ஷன் திகைத்தவனாய்.

“ச்சே!… ச்சே!… உன்னைச் சந்தேக படவில்லை குல்ஷன். உனக்குக் கிடைத்த தகவலை, தகவல் சொன்னவனை, அதை அவனுக்குச் சொன்னவனை என்னால் நம்ப முடியவில்லை.” என்றான் ரஞ்சித்.

“ஏன் ரஞ்சித்… என்ன காரணம்?” என்றார் ஹர்ஷன் யோசனையுடன்.

“சார் இந்தியாவிற்குள் போதை மருந்துகள், ஆயுதங்கள் உள்ளே வருவதும், வெளியே போவதும் ரெண்டு வழியாகத் தான் நடக்கிறது.

ஒன்று இந்திய எல்லை புற கிராமங்கள் எண்ணிக்கை தோராயமாக எழுநூறிலிருந்து எட்டுநூறு வரை இருக்கும். இந்த எல்லை புற கிராமங்களில் உள்ள பாதுகாப்பில் உள்ள சின்ன ஓட்டையைக் கூட விடாமல் பயன்படுத்தி தான் போதை மருந்துகளும், ஆயுதங்களும் இந்தியாவிற்குள் வருகிறது. இது நிலம் வழியாக உள்ளே வரும் narcotics terrorism அண்ட் weapons terrorism and arms smuggling.

இன்னொரு வழி கடல் மார்க்கம். இந்தியா 7516.6 கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு கடற்கரையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய தீபகற்பங்களில் ஒன்றாகும்.

கப்பல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் வர்த்தகத்தில் சுமார் 95 சதவீதமும், 70 சதவீத மதிப்பும் கடல் போக்குவரத்து மூலம் செய்யப்படுகிறது.

இது 13 பெரிய துறைமுகங்கள் (12 அரசுக்குச் சொந்தமான மற்றும் ஒரு தனியார்) மற்றும் 187 அறிவிக்கப்பட்ட சிறு மற்றும் இடைநிலை துறைமுகங்களால் சேவை செய்யப்படுகிறது.

KRISHNAPATNAM PORT - Legacy IAS Academy

இப்படி நிலம், சமுத்திரம் என்று ரெண்டு பக்கமும் நடக்கும் இந்தப் பரிவர்த்தனையைத் தடுக்க நம்மிடம் ஆள் பலம், தொழில் நுட்பம் அதிகமாய் கிடையாது. தெர்மல் ஸ்கேனர் என்பதே பல துறைமுகங்களில் கிடையாது. இங்கே அதிகாரிகள் தான் செக்கிங் எல்லாமுமே.

தவிர லேசர், cctv surveillance, drone எல்லாம் சில நில எல்லைகளில் தான் பயன்படுத்திட்டு இருக்கோம்.” என்றான் ரஞ்சித்.

Because Pakistan Will Never Stop Intruding," India Draws Virtual Walls To Seal The Border

“ஒரு சில கண்டெய்னர் மட்டுமே செக் செய்து விட்டு ஒட்டுமொத்தமாய் இருநூறு, முன்னூறு கண்டெய்னர் ஒரு கப்பல் மூலமாக இந்தியாவிற்குள் வரவும், போகவும் அனுமதித்து கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கில் கப்பல்கள், லட்சக்கணக்கில் கண்டைனர் தினமும் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது சகஜம் தானே!….”என்றார் ஹர்ஷன் மன வலியுடன்.

“ஆமாம் சார் இத்தனை கண்டெய்னர் ஒவ்வொன்றாய் சோதனை செய்வது என்றால், எந்த ஏற்றுமதி, இறக்குமதி கப்பலும் இந்திய துறைமுகத்தை விட்டு நகரவே நகராது தானே!… ஒட்டுமொத்த வர்த்தகமும் ஸ்தம்பித்து விடும். இந்த ஓட்டை வைத்துத் தான் இந்திய நட்சத்திரம் என்று மக்கள் கொண்டாடிய ஒருவன் கையில் அத்தனை ஆட்டோமேட்டிக் AK 47 வகை துப்பாக்கி, மாடல் ஏஜென்சியில் துப்பாக்கியுடன், போதை மருந்து எல்லாம் புழங்கியது.” என்றார் முகுந்த்.

“இந்தியாவிற்குள் கலவரம் நடக்க இருந்ததாகவும், அதிலிருந்து தன் குடும்பத்தை காக்க மட்டுமே துப்பாக்கி வைத்திருந்ததாக இவர்கள் வாக்குமூலம். சோ, அப்போ இன்னொரு விஷ கிருமி இந்தியாவிற்குள் கலவரத்தை ஏற்படுத்த முனைப்பாக இருந்திருக்கிறது அந்தத் தகவல் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம் ஆகிறது?” என்றார் சச்சின்.

“இப்படி இந்திய எல்லை புற கிராமங்களிலும், துறைமுகங்களிலும் இந்த ரெண்டு வருடத்தில் உங்கள் தலைமையில் நாம் செய்த ஆபரேஷன் எண்ணிக்கை ஏழு. நம் கவனத்திற்கு வராமல் போனவை எத்தனையோ!… அப்படி தவறான தகவல்கள், இல்லை தகவலே வராத காரணத்தால் தான், ‘Uri, புல்வாமா’ எல்லாம் நடந்திருக்கிறது என்பதை மறுக்கவும்முடியாது.

ஆனால்,  நாம் இறங்கிய எல்லா மிஷனுமே உயிர் இழப்புகள் இருந்தாலும் வெற்றி நம் பக்கம் தான். பில்லியன் கணக்கில் இந்தப் பொருளுக்கு எல்லாம் வெளிநாட்டு சந்தை மதிப்பு இருக்கிறது. இந்த ஏழில், ‘மாபியா ஆப் இந்தியா’ குழுவை நாம் தடுத்தது மட்டும் ஐந்து.

நாம் கொடுத்த பயங்கர அடிக்குப் பிறகும், சரியான காவலோ, ஆயுத பாதுகாப்போ இல்லாமல் இப்படி அனுப்புவார்கள் என்பது ஏனோ சரியாகப் படவில்லை. அந்தக் குழுவின் தலைவனாக நான் இருந்தால், என்னை எதிர்த்தவர்களை அவமான படுத்துவது போல், தலைகுனிய வைப்பது போல், அடி மிகப் பலமாகக் கொடுப்பேன். போன முறை பொதுமக்களைப் பணய கைதிகளாகப் பிடித்தார்களே அதே மாதிரி.

இந்தத் தடவை இன்னும் அதிகமாய் தான் எதையாவது செய்வேன். இப்படி, ‘skeleton செக்யூரிட்டி’ எல்லாம் அனுப்பவே மாட்டேன். இது என் திங்கிங் மட்டும் தான். சோ, குல்ஷன் கொண்டு வந்த இந்தத் தகவல் தரம் எனக்குச் சந்தேகத்தைத் தான் ஏற்படுத்துகிறது.” என்றான் ரஞ்சித்.

சர்வதேச அளவில் ஒரு மாபியா குழுவின் தலைவனாய் இருப்பவனுக்கு அவன் பொருள்கள் எல்லாம் பிடிபடுவது என்பது அவன் திறமைக்கு விடப் படும் சவால்.

மிகப் பெரிய ஈகோ, தான் மட்டும் தான் அனைத்தும் என்ற அதிகார போதை, பண பலம், ஆள் பலம் எல்லாம் கொண்டவனுக்கு தனக்கு நேரும் அவமானத்திற்கு பதில் அடி கொடுக்கவில்லை என்றால், இது மாதிரிக் குழுக்களுக்கு எல்லாம் தலை இரக்கம் ஆகி விடும். தாங்கள் தான் பலசாலி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை, ரஞ்சித் குழு தொடர்ந்து ஐந்து முறை தோற்கடித்து இருக்கும்போது, ஆறாவது முறையும் தோற்க சத்ருஜித் என்ன லூசா ?

தவிர கோடிக்கணக்கில் பணம், பொருள் வேறு நஷ்டம்.

இதைத் தான் ரஞ்சித் சுட்டி காட்டி கொண்டிருந்தான்.

“எனக்கு முகுந்த் சார் சொன்னது தான் சரியாகப் படுகிறது. பாக் அப் இல்லாமல் இறங்குவது சரியாகப் படவில்லை.” என்றான் ரஞ்சித்.

“நீங்கச் சொல்வதும் சரியாகத் தான் படுகிறது. ஆனால் அந்தக் குழுவின் ஆட்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள், காவல் துறையிலும் இருக்க சான்ஸ் உண்டு என்று நீங்களே தானே சொன்னீங்க… கடைசி நொடியில் என்ன செய்வது?…” என்றார் முகுந்த்.

“எந்தத் தாபாவில் அவங்க நிறுத்துவாங்க, எப்போ நிறுத்துவாங்க என்று தெரியாது. அதன் லே அவுட் தெரியாது. இந்தக் குழுவில் எத்தனை பேர் இருப்பாங்க என்பதும் தெரியாது. முன் ஏற்பாடுகள் என்று எதுவும் கிடையாது. முன்னாடி ஆட்களை அனுப்பி கண்காணிக்கவும் வழியில்லை. பிளான் கிடையாது என்று இத்தனை பாதகமான அம்சம் நம் பக்கம் இருக்கிறதே சார்.” என்றான் ரஞ்சித்.

ரஞ்சித் சொன்னது முற்றிலும் உண்மை. இப்படி சரியான தகவல் இல்லாமல் சென்று இறந்து போன வீரர்கள், காவல் துறை அதிகாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம். குல்ஷன் மாதிரி நாட்டுக்காகத் தகவல் சொல்பவர்கள் சிலர் இருந்தாலும், பணத்திற்காக உளவு சொல்பவர்கள் தான் அதிகம். இவர்கள் சொல்லும் தகவல்கள் உண்மை என்று நம்பி செல்லும் எல்லா வீரர்களும் திரும்புவதில்லை.

சற்று நேரம் யோசனையில் இருந்த ஹர்ஷன் குப்தா, “நான் மேடம் கிட்டே பேசிப் பார்க்கிறேன்… அவங்க ஏதாவது செய்வாங்க.” என்றார்.

ஹர்ஷன் தன் சாட்டிலைட் போன் எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க, டெல்லியில் இருந்த ஒரு அலுவலகத்தில் இருந்த பெண்ணின் சாட்டிலைட் மொபைல் ஒலியெழுப்பியது.

அழைப்பு சென்று சேர்ந்த இடம் ஒரு அரசாங்க கட்டிடம்.

ISRO ties up with university for space research activities - Education Today News

டெல்லியின் பரபரப்புக்கு வெகுதொலைவில், மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்தது அந்தக் கட்டிடம்.

அந்தக் கட்டிடத்தின் வெளியே பெயர் பலகை statistics analysis/ புள்ளிவிவர பகுப்பாய்வுத் துறை என்று இருந்தது. அப்படியென்றால் என்ன நின்று யோசிக்க கூட யாருக்கும் நேரம் கிடையாது. அங்கு எந்தப் புள்ளி விவரத்தை அப்படி ஆராய்ச்சி செய்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

தினம் தினம் நாம் நிறைய அரசாங்க கட்டிடங்களைக் கடந்து தான் சென்றிருப்போம். நீளமாய் பெயர் தாங்கி நிற்கும் அலுவலங்களில் அப்படி என்ன வேலை தான் செய்கிறார்கள். சொல்லும் வேலை தான் உள்ளே நடக்கிறதா என்பதை எல்லாம் யாரும் யோசிப்பதில்லை.

எந்தப் பளபளா வெளிப்பூச்சுகளும் இல்லாமல், காலத்தின் எச்சம்போல் நின்றது அந்த நான்கு அடுக்குக் கட்டிடம்.

பெரிய இரும்பு கதவின் அருகே இருக்கும் காவலாளிகளை ID கார்டு காட்டி கடந்து சென்றால், கீழ் தலத்தில் ரிசெப்சன். பொது மக்களுக்கு இங்கே வர அனுமதி இல்லை.

உள்ளே வருபவர்களின் உதவிக்கென்று மூன்று அழகான பார்பி பொம்மைகள் நின்றிருக்க, அந்த வரவேற்ப்பில் போடப்பட்டு இருக்கும் சோபாவில் மூவர் வெகுதீவிரமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருக்க, இருவர் லிப்ட் அருகே நின்றிருக்க, இன்னும் இருவர் படிகளின் அருகே நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

3d isometric illustration interior of reception. the interior of the lobby with secretary desk, armchairs, a coffee table and

சமயம் வரும்போது இந்தப் பத்து பேரின் கையிலும் ஆட்டோமேட்டிக் ஆயுதங்கள் தோன்றவும் தயங்காது. உள்ளே வருபவர்களைக் கண்காணிக்க என்று இருக்கும் அதிகாரிகள் இவர்கள் .

இவர்களைக் கடந்து முதல் ரெண்டு தலத்தில் நுழைந்தால், உள்ளே நுழையும் போதே, நம் மூக்கினை தீண்டிச் செல்லும் பூஞ்சை வாசம். பல வருட கோப்புகள் மலைபோல் குவிந்து கிடக்க, அதில் பதிந்து இருந்த தூசு, சில கோப்புகள் செல்லரித்து, சில கோப்புகள் மக்கும் வாசம் என்று உள்ளே நுழைபவரின் நாசியுடன் ஒரு போரே நடக்கும்.

எதற்கு இத்தனை கோப்புகள் அங்கே இருக்கிறது என்று அந்த அலுவகத்தில் பணி புரிபவர்களுக்கும் தெரியாது. உள்ளே யாராவது வந்தால் அவர்களுக்கும் புரியாது.

ரயில்வே பிளாட்பாரம் மாதிரி நீண்ட நெடிய ஹால். அதில் ஒன்றுக்கு நூறாக ஆளே இல்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் டியூப் லைட்கள், ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறிகள், கதவை விரிய திறந்து வைத்து ஓடவிடப்படும் centralised AC, கல்லூரிகளை நினைவு படுத்தும் வரிசையான நாற்காலி, மேஜை, அதன் மேல் இன்னும் கோப்புகள் என்று ஒரு அரசாங்க அலுவலகம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது முதல் ரெண்டு தளம்.

Government denies reports to change working hours for employees - News Nation English

மூன்றாம் தளத்தை நோக்கிச் சென்றால் மிகப் பெரிய பூட்டு தொங்கி கொண்டிருந்தது சாத்தப்பட்டிருந்த வாயிற் கதவின் மீது. ‘UNDER MAINTENANCE’ என்ற வாசகம் வேறு.

மூன்றாம் தளம் சீரமைப்பிற்காக முழுவதும் மூடப்பட்டு உள்ளது. மூடி எத்தனை வருடம் ஆகிறது என்று யாருக்குமே தெரியாது. அப்படி தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த மூன்றாம் தளம் முழுவதும் பல்வேறு வலைதள தொடர்பான குற்றங்களை, சமூக வலைதள கண்காணிப்பு நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது.

Design matters: How to design the perfect surveillance control room - The How To Do Stuff Blog

ECHELON, சீனாவின் Golden Shield Project:, Monitoring Bureau, Public Information Network Security, Social Credit System, ரஷியாவின் SORM, அமெரிக்காவின்Boundless Informant, PRISM: Stellar Wind, இந்தியாவின் Central Monitoring System (CM S ) DRDO NETRA, NATGRID: என்று ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களே அறியாமல் அவர்கள் சமூக வலைத்தளங்களை, மொபைல் கண்காணிப்பு என்று தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருப்பார்கள்.

வெளியே சொல்லப்படும் இத்தகைய கண்காணிப்பு திட்டங்கள் சில நூறே. வெளியே தெரியாமல் இன்னும் எத்தனையோ.

வலைத்தளத்தில் நம்மால் கண்காணிக்க யாரும் இல்லை என்று தான் நாம் பதிவுகளைப் போடுகிறோம். ஆனால், நாம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறோம் என்பது தான் உண்மை.

நான்காவது தளம் முழுவதும் மற்ற மூன்று தளங்களைவிட வித்தியாசமாய், அதிக பாதுக்காப்பு அம்சங்கள் கொண்ட தளமாய் இருந்தது. ஆட்டோமேட்டிக் துப்பாக்கி ஏந்திய காவலர்கள், கை ரேகை, கண் ஐரிஸ் ஸ்கேன், முக ஸ்கேன், மெட்டல் டிடெக்டர், ID ஸ்கேன் என்று ஆயிரம் கடந்து உள்ளே சென்றால், அங்கிருந்த நான்கு அறைகள் புல்லட் ப்ரூப் கண்ணாடி அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த நான்கு அறையில் ஒன்றில் தான் இருந்த பெண்மணியைத் தான் ஹர்ஷன் அழைப்பு வந்தடைந்தது.

“சொல்லுங்க சார்.” என்றார் அந்தப் பெண்.

குரலில் அத்தனை பணிவு இருந்தாலும் அதே சமயம் கம்பீரம், ஆளுமை இருந்தது.

பெண் என்பதை விடப், ‘பெண் புலி’ என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவின் உளவு துறையின் ஒரு பிரிவின் உயர்ந்த பதவியில் இருக்கும் மிஸ். சரோஜினி ஹரிச்சந்திரன் தான் அவர்.

Five Strong Motherly Roles In Indian Movies

ரஞ்சித் குழுவைப் போல் பல குழுக்களை, ஆப் தி புக் ஆபரேஷனுக்கு/ off the book operations’ இந்தியா முழுவதும் அனுப்பி கொண்டு இருப்பவர்.

இவர் பதவிக்குப் பெயர் கிடையாது. இவர் பதவியும் எங்கேயும் இருக்காது. இவர் செயல்படும் துறைக்கென்று designation, கோப்புகளில் இப்படியொரு துறை இருப்பதாகக் கூட எந்த அறிக்கையும் இருக்காது.

‘ghost department /கண்ணுக்குத் தெரியாத துறை/ invisible intelligence wing’. இந்தியாவின் ரா தலைவர் யாரோ அவருக்கு மட்டுமே need to know basis தகவல் சொல்லப்படும்.

ஹர்ஷன் ரஞ்சித் சந்தேகத்தைச் சொல்ல, அதைக் கவனத்துடன் கேட்டவர், “உங்களுக்குத் தேவையான சப்போர்ட் கிடைக்கும். ஆனால் உடனே ஏற்பாடு செய்ய முடியுமா என்பது தெரியாது. நீங்க எந்த இடத்தில் அவங்களை லாக் செய்ய நினைக்கறீங்களோ அந்த இடத்திற்கு முடிந்த அளவு பாக் அப் விரைவில் அனுப்ப பார்க்கிறேன். அருகே வந்தவுடன் உங்களைத் தொடர்பு கொள்வார்கள். ஜெய் ஹிந்த்.” என்றார் அவர்.

“ஜெய் ஹிந்த் மேடம்.” என்ற ஹர்ஷன்,

“வி ஆர் குட் டு கோ. பாக் அப் ஆன் தி வே. கிளம்பலாம்.” என்றார் ஹர்ஷன்.

அதே சமயம் சரோஜினி ஹரிச்சந்திரன் தன் அறையில் தன் செயலாளர் குருவில்லாவுடன், ரஞ்சித் டார்கெட்டாகக் குறித்த பத்து தபாக்களை கண்காணிக்கவும், எங்கிருந்து ரஞ்சித் குழுவிற்கு துணை அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என்று கட்டளை இட்டுக்கொண்டிருந்தார்.

சரோஜினி ஹரிச்சந்திரன்

The most powerful women of indian defence and intelligence department.

ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியாது.

சுமன் நடத்தி வந்த human trafficking ring, பஞ்சாபில் காபோஸ் நடத்தி வந்த போதை சாம்ராஜ்யத்தை அழிக்க, ரஞ்சித் டீம்மை அனுப்பி வைத்த பெண் புலி. இன்று இவர்கள் டார்கெட் சென்னையை மைய்யாக வைத்திருக்கும் சத்ருஜித்தின் ஆயுத மாபியா.

சரோஜினி ஹரிச்சந்திரன் சட்டென்று பார்க்க, நடிகை ஆஷா சரத் போன்ற உருவ அமைப்பு. தெருக்களில் நாம் கடந்து போகும் கோடிக்கணக்கான பெண்களைப் போன்ற ஒருவர். இந்திய வல்லரசின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லாதவர்.

சாதாரண காட்டன் சுடிதார். கழுத்தில் ஒரு செயின். கையில் ஒரு வாட்ச் என்றது மிக எளிமையான பெண்மணி. வயது நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்திற்குள் இருக்கும்.

கரண்டி பிடித்து, அன்பால் ஒரு குடும்பத்தையே கட்டி காக்கும் பெண்களுக்கா சொல்லித் தர வேண்டும் நாட்டை எப்படி காக்க வேண்டும் என்று? ஒவ்வொரு வீட்டின் முதுகெலும்பாய் இருந்து கொண்டே நாட்டைக் காக்கவும் வெளிவரும் சரோஜினி மாதிரிப் பெண்மணிகள் ஏராளம்.

நாட்டினை காக்க ஆபத்தான பல வேலைகளுக்கு வீரர்களை அனுப்பி, நாட்டைக் காக்கும் சரோஜினி ஹரிச்சந்திரனின் கரம், ரஞ்சித் குழுவைக் காக்குமா?

குல்ஷன் சொன்ன தகவல் சரியா?

சத்ருஜித் பிளான் என்ன?

ரஞ்சித் குழு பிழைக்குமா?

இவர்களை மீறி இந்த ஷிப்மென்ட் தமிழகத்தை அடையுமா?

ஆட்டம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!