UYIRODU VILAIYADU 21

133815_133051_efrin

UYIRODU VILAIYADU 21

  • anitha
  • September 15, 2020
  • 0 comments

(சென்னை  சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் கூற்றுப்படி சட்டத்துடன் முரண்பட்ட  சிறார்களில/conflict with the law,  40%  சிறார்கள், போதை மருந்துப் பழக்கம் உள்ளவர்கள். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் தங்கள் குழந்தை தனத்தை இழந்து குற்றவாளிகளாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.’ என்கிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ‘இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் போதை பொருளின் பயன்பாட்டின் அளவு’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், 16 பெண்களில் ஒருவர், ஏதாவது ஒரு வகையான போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக இருப்பதாகக் கூறுகிறது.

களங்கம், பயம், பாலின அடிப்படையிலான drug rehab மையங்கள் கிடைக்காதது, குடும்பத்தின் ஆதரவு இல்லாமை போன்ற காரணங்கள் பலரும் உதவி கோருவதைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நாட்டின் 398 புனர்வாழ்வு மையங்களில், மூன்று மட்டுமே பெண்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

சென்னையில் மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், சென்னையில் 25 சதவீதத்திற்கும் அதிகமான கிரிமினல் வழக்குகளில், விபச்சாரம் or solicitation charge வழக்குகளில் குற்றவாளி குற்றத்தின்போது அல்லது அதற்கு முன் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது” என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற, குற்றவியல் வழக்கறிஞர் வி கண்ணதாசன் கூறுகிறார்.)

அத்தியாயம் 21

Skyhomes Girls Hostel, Mumbai, India - Photos, Room Rates & Promotions

Hostel/ தங்கும் விடுதிகள்/Working women’s hostel

இது ஒரு தனி பிரபஞ்சம்.

“Home away from home” என்று சொல்லப்படும், ‘செயற்கை மாயம்’ என்று சொன்னால் மிகையல்ல.

பள்ளி, கல்லூரி, வேலைக்குச் சென்று இது போன்ற இல்லங்களில் தங்கியவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தையின் அர்த்தம் நன்கு விளங்கும்.

கனவுகள் உருவாக்கப்பட்ட இடம், உண்மையான உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான பிரதிபலிப்பு. தடைகள் உடைக்கப்பட்ட இடம், கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள், கைகோர்த்து உடன் வரும் வாழ்நாள் நண்பர்கள் என்று நம்மை அடியோடு மாற்றி விடக்கூடிய வாழ்க்கை.

எப்படி குழந்தை முதல் பெரிய பிள்ளைகள் வரை வாழ்க்கையின் முதல் பாதி, ரெண்டாவது இல்லமான பள்ளி, கல்லூரிகளில் கழிகிறதோ, மேற்படிப்புக்கு, வேலைக்கென்று செல்பவர்களுக்கு இன்னொரு வீடாய் இருப்பது இந்தத் தங்கும் விடுதிகள்.

வீட்டிலிருந்து விலகி வாழ்வது, நமக்கு நிறைய விஷயங்களைக் கற்பிக்கிறது. இது ஒரு பாழடைந்த தீவில் சிக்கித் தவிப்பது போன்றது. self reliance. குடும்பத்தைச் சார்ந்திராத நிலை. நாம் பிழைப்பதற்கான வழிகளைத் காட்டுகின்றன.

பிரபலமான மேற்கோள், ‘காலம் மாற மக்களும் மாறுகிறார்கள்’ என்பது இது விடுதியில் தங்குபவர்களுக்கு மிகவும் பொருந்தும். விடுதி வாழ்க்கை மக்களின் வாழ்வில் அவர்களே உணராத பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

விடுதிகள் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க உதவுகிறது. எது சரி, எது தவறு என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இங்கே, அவர்கள் பெற்றோரைச் சார்ந்து இல்லை. அவர்கள் தங்களை சார்ந்து இருக்கிறார்கள்.

ஹாஸ்டலில் சொந்தமாக வாழ்க்கையை எதிர்கொள்ளவும், நம்பிக்கையோடு செயல்படவும், தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளவும், மற்ற மதங்கள், கலாச்சாரத்தை மதிக்கவும் ஒருவருக்கொருவர் உதவவும் ஒத்துழைக்கவும் கற்று கொடுக்கிறது.

விடுதி வாழ்க்கை, இதனால் பல நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளவும், நல்ல குடிமக்களாக்கவும் உதவுகிறது.

தனியாக இருக்கும்போது சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது, மற்றவர்களுடன் ஒரு அறையைப் பகிரும்போது அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்வது, சுயநலம் இல்லாமல் இருப்பதோடு பகிர்வதைப் இங்கே புரிந்து கொள்ள முடியும்.

GIRLS HOSTEL IN RANCHI, CHANDRANI GIRL'S HOSTEL

வீட்டின் இளவரசனாக, இளவரசியாகச், சென்டர் ஆப் attractions என்று சிறு துரும்பை கூட அசைக்காதவர்கள், இங்கே ஆயிரத்தில் ஒருவராய் அடையாளம் இல்லாமல் போகும் இடம்.

ஆனால், எல்லா தங்கும் விடுதிகளும் இப்படி தான் இருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

எப்படி நன்மை என்ற ஒன்று உலகில் இருந்தால், தீமை ஒன்று இருக்குமோ, அதே போல் தாயின் மடி போல் பாதுகாப்பாய் இருக்க வேண்டிய இந்த விடுதிகள், பலருக்கு புதை குழியாய் மாறி விடுகிறது.

பள்ளி பருவம் ஒன்றும் அறியா பருவம்.

கல்லுரி பருவம் இளமை உணர்ச்சிகள் குவியலான நேரம்.

வேலை என்று தங்கும் இடங்கள், தனிமை அதிகமாய் தாக்கும் இடங்கள்.

இந்த மூன்றுமே சத்ருஜித், சுமன் போன்ற ஆட்களின் வேட்டை தளம்.

மிக அழகாய் திட்டம் போட்டுப் போதை மருந்து, குடி, மாது, நீல படம் என்று சமுதாயத்தைச் சீர் அழிக்கும் எல்லாமே தடை இல்லாமல் புழங்கும் இடமாய் மாறுவதும் உண்டு.

நிறைய தங்கும் விடுதிகள், ஹை எண்டு ப்ரொதெல்/ விபச்சாரம் நடக்கும் இடங்களாக, திரைக்குப் பின் நடக்கும் கூத்துகளும் இங்கே அதிகம்.

அப்படியொரு புதை குழி போன்ற தங்கும் விடுதியில் சிக்கி இருந்த அந்தப் பெண், அதிலிருந்து மீள, உதவி கேட்டுக் கரத்தினை நீட்டி, ஒரு நம்பருக்கு அழைத்தாள். உதவி கேட்டு நீண்ட அவள் கரத்தை மட்டுமல்ல, அதுபோல் சென்னையில் பல புதை குழிகளில் சிக்கியுள்ள பெண்களை, சிறார்களை மீட்க நீண்டது ஒரு கரம்.

Anonymous man talking on phone in a dark room ~ Hi Res #70224426

“ஹலோ தேஜ் ஹியர்!…” என்றது கம்பீரமான குரல் எதிர் முனையிலிருந்து.

“அண்ணா!… நான் வைஷ்னவி பேசுறேன் அண்ணா… இங்கே ஹாஸ்டெலில் சந்தேகத்திற்கு இடமாய் ஏதாவது நடந்தால், சொல்லச் சொன்னீங்க. கடந்த பத்து நாளாய் இங்கே ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஆயிரம் பெண்களில் பதினைந்து பேருக்கு மட்டும் ஸ்பெஷல் உணவு, ஸ்னாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் வந்திறங்குதுன்னு சொன்னேன் இல்லையா அண்ணா… அது எல்லாமே அந்த எம்.எல்.ஏ xxxx பையனுக்குச் சொந்தமான கடை பொருட்கள் அண்ணா.

அவனும் அவன் நண்பனுமான XXX அந்தச் சினிமா நட்சத்திரம், XXX அதிகாரியின் மகன் மூவரையும் நான் பார்த்தேன் அண்ணா.

ஹ்ம்ம்… இல்லை அண்ணா… அது எதையும் நான் தொடலை. ஆனா அதைச் சாப்பிடும் பெண்கள் நடவடிக்கை எல்லாம், என் தங்கை இறப்பதற்கு முன்பு எப்படி மாறிப் போய் இருந்ததோ, அப்படியே மாறிப் போய் இருக்கு அண்ணா.

நைட் ஹாஸ்டெலில் தங்கறது இல்லை. புது ப்புது ஆண் கள் காரில் வந்து பிக் அப் செய்யறாங்க. வார்டன் இதை எல்லாம் கவனித்தாலும் எதுவும் சொல்றது இல்லை. புது ஊருன்னு பயந்துட்டு இருந்த பொண்ணுங்க எல்லாம், இப்போ அரை குறை ஆடையுடன் வெளியே போவதும், நைட் எல்லாம் வெளியே தங்குவதும் என்று இருக்காங்க.” என்றவள் பேச்சைக் கேட்ட தேஜ்ஜிடமிருந்து பெருமூச்சு ஒன்று எழுந்தது.

“உலகத்தின் மிகப் பழமையான தொழில் இது. கல்வி, வேலை என்ற போலி முகமூடியின் பின், பணத்திற்காக எல்லை மீறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பற்றித் தனி ஆராய்ச்சி அறிக்கையே இருக்கு வைஷ்ணவி. பெரும்பாலோர் 18-25 வயதிற்குட்பட்டவர்கள்.

பிரபலமான கட்டுக்கதைக்கு மாறாக, அவர்கள் அனைவரும் அப்பட்டமான ஏழை வீடுகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. நிச்சயமாக, வறுமை காரணமாக இந்தச் சேற்று நிலப்பரப்பில் மூழ்கியிருக்கும் சிலர் உள்ளனர். ஆனால் ஒழுக்கமான நடுத்தர வர்க்க வீடுகளைச் சேர்ந்தவர்கள், இல்லத்தரசிகள், இளம் பெண்கள் கூடுதல் பணத்தை, பகட்டு வாழ்க்கை வாழ இதில் ஈடுபடுகிறார்கள்.

இன்னும் சிலர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி, அடிமை ஆக்கப்பட்டு, இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.” என்றான் தேஜ்.

“அண்ணா!… என்ன அண்ணா சொல்றீங்க?… இது நகரத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஹாஸ்டல் அண்ணா. இங்கே அது மாதிரி எல்லாம்…” என்று வைஷ்னவி திகைப்புடன் வினவ,

“ஓஹ்!… ஒரு இடம், ஒரு மனிதர் பிரபலமானவர்களாய் இருந்தார்கள் என்றால், அங்கே தவறே நடக்காது என்கிறாயா?… அப்போ ஏன் அந்த ஹாஸ்டெலிலிருந்து காணாமல் போன பெண்களின் எண்ணிக்கையும், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும், ஏன் அதிகமாய் இருக்கிறது வைஷ்ணவி ?” என்ற தேஜ் கேள்விக்குப் பதில் இல்லை வைஷ்ணவியிடம்.

தேஜ் கேள்வியில் ஆயிரம் உண்மைகள் இருந்தது என்னவோ உண்மை.

தவறுகள் எங்கும் நடக்கலாம்.

மனிதர்கள் தவறி போகலாம்.

பேராசை, ஈகோ, தான் என்ற அகம்பாவம், பணம் என்ற மாயை, அதிகாரம் என்னும் போதை, பிரபலம் என்ற பின்புலம் பல குற்றங்கள் நடக்க காரணம் ஆகிறது.

“நீங்கச் சொல்றதும் சரி தான் அண்ணா… இந்த மாதத்தில் மட்டும் ரெண்டு பொண்ணுங்க தற்கொலை செய்துட்டாங்க… அதான் உங்களுக்கே தெரியுமே அண்ணா… போலீஸ் எல்லாம் வந்து விசாரித்தாங்க. கடைசியில் அந்தப் பெண்களுக்கு, ‘காதல் தோல்வி’ அப்படின்னு கேஸ் க்ளோஸ் செய்துட்டாங்க.

இன்னைக்கு நைட் , அந்த எம்.எல்.ஏ பையனுக்குப் பிறந்த நாள் பார்ட்டி என்று எங்க பதினைந்து பேரை மட்டும் கூட்டி போக வண்டி வரும் என்று சொல்லி இருக்காங்க அண்ணா. இ.சி.ஆர் பக்கத்தில் உள்ள,  xxx  அந்த ரிசார்ட்டில் பார்ட்டியாம்.” என்றாள் வைஷ்ணவி.

Poll Clubs 2020: Mad Club | DJMag.com

சொல்லி முடிப்பதற்குள், ஏகத்திற்கும் அவள் பயந்து போய் இருக்கிறாள் என்பது குரலில் இருந்தே தெரிந்தது. சுவரில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தவளின் கால்கள் வெளிப்படையாகவே நடுங்கி கொண்டிருந்தது.

முன் பின் தெரியாத ஒருவன், அந்த ஹாஸ்டல் சொந்தக்காரன், சென்னையின் பிரபல அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவன் அனுப்பும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும், என்பதில் ஆரம்பித்து, உடை எப்படி உடுத்த வேண்டும், எங்கே போக வேண்டும் என்று எல்லாமுமே அவன் கட்டுப்பாட்டில் அந்த ஹாஸ்டலில் நடந்து கொண்டிருந்தது.

ஒன்றுமே இல்லாமல் பூஜ்ஜியத்திலிருந்து, வாழ்க்கை ஆரம்பிக்கும் சிலர், சம்யுக்தா தந்தை போன்றவர்கள் மட்டும் வெகு குறுகிய காலத்திற்குள் சக்தியின் மய்ய புள்ளியாக, எல்லோரையும் ஆட்டி வைக்கும் இடத்திற்கு எப்படி வர முடிகிறது?.

“பசுத்தோல் போர்த்திய புலி/ wolf in sheep’s skin என்ற மனித வடிவில் மிருகமாய் இருப்பவர்கள் இங்கே அநேகம்.  இவர்களை அடையாளம் காண வேண்டிய சமயோஜித புத்தி இல்லாமல் மாட்டிக் கொண்டு மானத்தை, உயிரை இழப்பவர்கள் அதிகம்.

எப்படி பார்த்தாலும் பாதிப்பு பெண்களுக்கே மிக அதிகம். ஆண்கள் இழக்க ஒன்றும் இல்லை. ஆனால் பெண்கள் இழக்க இங்கே பலதும் இருக்கிறது. குடும்ப கெளரவம், மானம், சமூகத்தில் பெயர் என்று இந்த பட்டியல் நீளம்.

ஆசை வார்த்தைகளுக்கும், புகழ்ச்சிக்கும், முகஸ்துதிக்கும், பகட்டான வெளித்தோற்றத்திற்கும் மயங்குவது மிகவும் ஆபத்தானது.

The Wolf in Sheep's Clothing

அனைவரையும் கண்மூடி தனமாய் நம்புவதும் தவறு. நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் தவறு.

இவர்கள் ஆடும் கேடு கெட்ட ஆட்டம், அப்பாவி பொது மக்களுடன். இப்படித் இந்த அரக்கர்களின் கரம், ஒவ்வொரு ஆட்டு குட்டியாய் அடித்துச் சாப்பிடும் தந்திரக்கார ஓநாய்போல் செயல்பட்டால் எந்தக் குடும்பம் தான் மிஞ்சும்?

உன் குடும்பம்போல் வெளியே தெரியாமல் சிதைந்து போன குடும்பங்கள் எத்தனை?…. பல மரணங்கள் மேம்போக்காய் விபத்து, காதல் தோல்வி, ஒரு தலை காதல் என்று முத்திரை குத்தப்பட்டு அதோடு இழுத்து மூடப் படுகிறது.

ஆனால்,  இந்த உயிர் இழப்புகளுக்குப் பின் கோர முகம் இருக்கலாம்.” என்ற தேஜ் வார்த்தையைக் கேட்ட வைஷ்ணவி, தன்னையும் அறியாமல் பெருமூச்சினை வெளியேற்றினாள்.

‘இந்தத் தெளிவு தன் தங்கைக்கு ஏன் இல்லாமல் போனது?… நம்ப கூடாதவர்களை நம்பி, அவர்கள் பழக்கப்படுத்திய போதைக்கு அடிமையாகி, அந்தப் போதை மருந்து வாங்க தன்னையே பலருக்கு விற்று, அது விடியோவாக எடுக்கப்பட்டு, பிளாக்மெயிலுக்கு ஆளாகி, அதற்கு மேல் அந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் வாழ்வை முடித்துக் கொண்டு… கடவுளே!…

‘உன் நண்பனைப் பற்றிச் சொல். உன்னைப் பற்றிச் சொல்கிறேன்…. ‘என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள்?… ‘நட்பு என்பது ஒரே மனம் ரெண்டு உடலில் இருப்பது. இது போன்ற தன்னலமற்ற ஒற்றை அன்பு, சிறந்த வழிகாட்டித் தன் தங்கைக்கேன் கிடைக்காமல் போனது?’ என்று எண்ணி துடித்த வைஷ்ணவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

இறப்பவர் ஒரு முறை மரணத்தைத் தழுவி விடுகிறார். ஆனால் இறந்தவரின் குடும்பம் அல்லவா, வாழ்நாள் முழுவதும் அதற்கான சிலுவையை சுமப்பது!… எந்தக் குற்றத்திற்காகக் குடும்பத்தாருக்கு இந்த ஆயுள் தண்டனை?

ஆறு மாதத்திற்கு ஒருமுறை இப்படி பதினைந்து, இருபது பெண்கள் சார்ட் அவுட் செய்வது, அங்கே மிகச் சகஜமாய் நடந்து கொண்டிருக்கும் ஒன்று.  இப்படி அடிக்கடி பார்ட்டி நடக்கும். அங்குச் செல்லும் சில பெண்கள் அதன் பின் ஹாஸ்டளுக்கு திரும்பியதே இல்லை.

அவர்கள் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாது. பெற்றோர்கள் வந்து போலீசுடன் விசாரிக்கும்போது, ‘காதலனுடன் ஓடி விட்டாள்…’ என்ற கதை சொல்லப்படும்.  சில பெண்கள் தற்கொலை செய்வதும் அங்கே நடந்தது உண்டு. அதற்கும் காதல் தோல்வி என்ற பதில்.

ஹாஸ்டல், தங்கும் விடுதி என்ற பெயரில், போதை மருந்து கூடமாகவும், ப்ரொதல் நடக்கும் இடமாகவும் உள்ள அது போன்ற ஹாஸ்டலின் கருப்பு பக்கம் தெரியாமல், சிக்கி இறந்திருந்தாள் வைஷ்ணவியின்  தங்கை.

“இங்கே பாருமா வைஷ்ணவி…. நீ, ‘உன் தங்கை இப்படி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவளுக்குக் காதலனே கிடையாது. அவள் மரணத்தில் சந்தேகம். அதைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும்’ என்று சொல்லும் போதே, என்ன சொன்னோம்?… இதில் பல ஆபத்து இருக்கிறது. எதற்கும் பயப்பட கூடாது என்று சொன்னோம் இல்லையா?…” என்றான் தேஜ்.

Silhouette Woman Talking On The Phone. Stock Illustration - Illustration of glasses, drives: 137755295

“அது இல்லை அண்ணா… அவங்க எல்லாம் பெரிய இடத்து பசங்க… சமூகத்தில் அந்த நடிகர் நல்ல பெயருடன் இருப்பவர். அந்த ஆள் மோசமானவன் என்று நான் ஒருத்தி சொல்வதை யார் நம்புவாங்க?… அந்தாளுக்கு விசிறிங்க அதிகம்.

அவர்களை ஒரு வார்த்தை நான் தவறாகச் சொல்கிறேன் என்று தெரிந்தால் கூட, என்னைப் பற்றி வெகுகேவலமாய் பேச நூறு பேர் திரண்டு வந்திருவாங்க. உண்மை எது, பொய் எதுன்னு கூடா தீர விசாரியாமல், எனக்கே இந்தப் பெயரைக் கொடுக்கக் கூடச் சமூகத்தில் தயங்க மாட்டாங்க அண்ணா.

இது அநியாயம் என்று நியாயமாய் ஆதாரத்துடன் விளக்கிச் சொன்னால் கூடப் பெண் என்றால் முதலில் அங்கே கேள்விக்குறி ஆக்கப்படுவது அவளின் மானம் தான் அண்ணா. ஒரு பெண்ணின் மானம், ஒழுக்கம் என்பதெல்லாம் கேலி பொருள் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியொரு தார்மீக,  நெறிமுறைகள்,  moral அண்ட் எதிக்ஸ் இல்லாத சமூகத்தில், அநீதீயை தட்டி கேட்க வரும் சில பெண்கள் கூட வர யோசிப்பார்கள் தான் அண்ணா.

என் தங்கை மானத்தையும் வாங்காமல் விடமாட்டார்கள். என் குடும்பம் என் தங்கை விஷயத்தால் ஏற்கனவே நொந்து போய் இருக்கு. இதில் நானும் …என் பெயரும் அடிபட்டால்… பயமாய் இருக்கு அண்ணா…” என்றாள் வைஷ்ணவி.

கண் முன்னே நடக்கும் தீமையை எதிர்க்கக் கூட முடியாமல், தங்களால் எதையுமே செய்ய முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமுறி கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்களின் பிரதிநிதியாக, நிழலாக தான் வைஷ்ணவி அப்பொழுது இருந்தாள்.

“உன்னை ஜாக்கி சான் மாதிரி, பாய்ந்து பாய்ந்து சண்டை போடச் சொல்லலைமா…  நீ, உன் தங்கை விஷயமாய் எங்களை அணுகுவதற்கு முன்பே, அந்த ஹாஸ்டல் போல் பல இடம் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது. நீ அங்கே என்ன நடக்கிறது என்று தகவல் மட்டுமே சொல்லப் போகிறாய். நீ தான் எங்களுக்கு அந்த ஹாஸ்டல் உள் இருந்து தகவல் கொடுக்கிறாய் என்பது, என்னைத் தாண்டி வேறு யாருக்குமே தெரியாது.

சில சமயம் பல உயிரைக் காக்க, பெண்கள், குழந்தைகளின் மானத்தை காக்க தேவைப்படுவது சின்னத் தகவல் மட்டும் தான். அந்தத் தகவல் கொடுக்கச் சூப்பர் ஹீரோவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே தவறு நடக்கிறது என்று புரிந்து கொண்டு, அதைத் தடுக்க முதல் அடி எடுத்து வைத்தபோது இருந்த துணிவு இப்போ எங்கே வைஷ்ணவி?… உன்னைப் பயமுறுத்தும், உன்னைப் பின் இழுக்கும் அந்த அச்சத்தை உதறி விட்டுத் துணிந்து வா வைஷ்ணவி.

பெண் கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு, பெண்ணாய் பிறந்து விட்டு, உன்னைச் சுற்றி நடக்கும் அநீதியைக் கண்டு பயந்து நடுங்கி கொண்டு இருப்பாயா?… வைஷ்ணவி தேவி அவள் லட்சுமியின் மூர்க்கமான வடிவம் விஷ்ணுவின் சக்தியாகக் கருதப்படுகிறாள்.

உலகத்தில் எது நல்லது நடந்தாலும், மாற்றம் கொண்டு வருவதாய் இருந்தாலும், தீமையை எதிர்ப்பது என்றாலும், அதில் அதிகம் முன் நிற்பது ஒரு பெண்ணாய் தான் இருக்கும்.

ஒவ்வொரு பெண்ணும் ஆக்கச் சக்தியும் அவள் தான்… நேரம் வரும்போது அழிக்கும் சக்தியும் அவள் தான்.

இன்றோடு பெண்கள் அந்த ஹாஸ்டெலில், ‘காதல் தோல்வி’ என்று தற்கொலை செய்து கொள்வதெல்லாம் நடக்காது. அதுக்கு முற்றுப்புள்ளி வைத்திடலாம்.

அவங்க கொடுக்கும் எதையும் சாப்பிட வேண்டாம் வைஷ்ணவி. அது பெண்களை அவங்களே அறியாமல் போதை மருந்துக்கு அடிக்ட் ஆக்கி, தாங்கள் சொல்வது போல் செய்ய வைப்பதற்கு. போதை மருந்துப் பழக்கம் வந்து விட்டால், அது மாதிரி தான் தடைகள் எல்லாம் தளர்ந்து, போதை மருந்து கிடைக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயக்கம் இல்லாமல் போய் விடும்.

Punjab: Girl drugged, abducted and gangraped repeatedly for several days - india news - Hindustan Times

மயங்கிய நிலையில் உள்ள பெண்களை …. உனக்கே நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறது தானே! அதை வீடியோ என்று … சோ இதைத் தடுக்கணும் வைஷ்ணவி. இது உன் கையில் தான் இருக்கிறது. இதற்கு மேல் புதிதாய் வேறு எந்தப் பெண்ணையும் எங்களால் உள்ளே கொண்டு வர முடியாது. நீ தான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி. உன் பெயருக்கு ஏற்றார் போல் வைஷ்ணவி தேவியாக எங்களுக்கு உதவ வா. எங்களுக்கு உன் உதவி தேவை படுகிறது.” என்றான் தேஜ்.

“சொல்லுங்க அண்ணா… என்ன செய்யணும்…” என்றாள் வைஷ்ணவி தன் பயத்தை, தயக்கத்தை கடந்தவளாய்.

“இவங்களை எங்களால் அடக்க முடியும். அந்த ரிசார்ட் இவர்களின் போதை மருந்து பதுக்கி வைக்கும் இடம். தமிழகத்தில் போதை மருந்து டிஸ்ட்ரிபியூட் ஆகும் இடங்களில் இதுவும் ஒன்று.

சோ, நாங்க உள்ளே வர நீ தான் உதவ வேண்டும். எங்களால் அந்த ரிசார்ட் கேமரா ஹாக் செய்ய முடியல. எங்கே எத்தனை பேர் காவலுக்கு இருக்காங்க என்பதை தெரிந்து கொள்ள எங்களுக்கு அந்த ரிசார்ட் உள்ளே கண்கள் வேண்டும்.

அந்த ரிசார்ட் ஏற்கனவே எங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்தது தான். இப்போ அது தான் என்று நீ உறுதி செய்துட்டே… அதிரடியாய் உள்ளே நுழைய எங்களுக்கு உள்ளே கண்கள் இருக்க வேண்டும்…” என்றது எதிர் முனை.

“என்ன செய்யணும் என்று மட்டும் சொல்லுங்க தேஜ் அண்ணா…” என்றாள் வைஷ்ணவி.

“ஒரு மணி நேரம் கழித்து, நீ ஹாஸ்டல் அருகே இருக்கும் பார்க் போவே இல்லை… அங்கே போ. பத்து நிமிடம் உட்கார். அதன் பிறகு உன் பையைக் கீழே விழும் படி செய். எல்லாத்தையும் கலெக்ட் செய்துட்டு மீண்டும் ஹாஸ்டெலுக்கே வந்துடு. அதன் பிறகு எனக்கு மீண்டும் கால் செய். என்ன செய்யணும் என்று சொல்றேன்.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

Top 15 Most Popular Urban Parks in India

தங்கைக்குக் காதல் தோல்வி, அதனால் தற்கொலை என்பதை வைஷ்ணவி நம்பவில்லை. அங்கே நடப்பது என்ன என்பதை கண்டுபிடிக்க, தேஜ் அனுப்பி உள்ளே நுழைந்திருந்த வைஷ்ணவி, இப்பொழுது இன்னொரு டார்கெட்.

இத்தனை பெண்களின் மானம், உயிர் உடன் விளையாடும் அந்த அரக்க ஜென்மங்கள் அழிக்கப்படுமா?

‘தன் தங்கைபோல் இன்னொரு பெண் இறக்க கூடாதே!…’ என்று, ஆபத்து என்று தெரிந்து உள்ளே வந்திருக்கும் வைஷ்ணவி, எதுவும் நடப்பதற்கு அவளைத் தேஜ் கரம் காப்பாற்றுமா?

அதே சமயம் இந்தியாவின் எல்லை பகுதியில் இருந்த அந்தக் கிராமத்தில், நிஷாவின் சேனல் வேன், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அந்தக் கிராம தெருக்கள் வெறிச்சோடி இருக்க, அந்தக் கிராமத்தின் ஒரு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் இருவர்.

சட்டென்று பார்க்கவே ஆஜானுபாகுவாய் அச்சத்தை ஏற்படுத்தும் அரக்கர்கள் போன்ற தோற்றம். அந்தக் கிராமத்தின் தலைவனும், அவன் மனைவியின் தம்பி தான் அவர்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு போதை மருந்தையும், ஆயுதங்களையும் இந்தியாவிற்குள் கொண்டு வரும் தேச துரோகிகள் அந்த இருவரும்.

கை நிறைய பணம், பதவி என்றதும் தங்களை வெல்ல ஆள் இல்லை என்று ஆடிக்கொண்டு இருப்பவர்கள். நிஷாவின் வேன் அவர்களைக் கடந்த பிறகு, அந்த இருவரும் அந்த இடத்தில் இல்லை.

அத்துடன் நிஷா வேன் அந்த மாநிலத்தை விட்டுக் கிளம்பியது.

வேன் கடந்த பிறகு, அந்த இருவர் இருந்த இடத்தை விட்டுச் சற்று தூரம் இருந்த குப்பை மேட்டில் சென்று பார்த்தால், அங்கே நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அந்த இருவர் இறந்து கிடந்தார்கள். சைலென்ஸர் பொருத்தப்பட்ட துப்பாக்கி, சத்தம் இல்லாமல் அவர்கள் கதையை முடித்து விட்டது.

Kin throw woman's dead body as villagers in Jharkhand oppose burial amid COVID-19 fear- The New Indian Express

சரியாக அந்தக் குப்பைகள் எங்கே இருக்க வேண்டுமோ அந்த இடத்தில், குப்பை மேட்டில் தான் உயிரற்ற உடலாய் கிடந்தார்கள்.

இந்திய நாட்டைத் துண்டாட நினைக்கும் ஒவ்வொருத்தனுக்கும் கிடைக்க வேண்டிய சரியான தண்டனை அது.

அந்தக் குப்பை மேடு, மணல் புதைகுழியாக இருக்க, அந்தக் குப்பைகளை, இந்திய தாய் ,தனக்குள் மெல்ல புதைத்துக் கொண்டாள்.

புதைமணலில், பொதுவாக மணல் அல்லது களிமண் மற்றும் உப்பு ஆகியவை நீரில் மூழ்கி, பெரும்பாலும் நதி டெல்டாக்களில் இருக்கும். தரை திடமாகத் இருப்பது போல் தெரியும். ஆனால், அதன் மீது அடியெடுத்து வைக்கும்போது, மணல் திரவமாக்கத் தொடங்குகிறது. ஆனால், பின்னர் தண்ணீரும் மணலும் பிரிந்து, அடர்த்தியாக நிரம்பிய ஈரமான மணலின் ஒரு அடுக்கை விட்டுவிட்டு, அதைப் பிடிக்க முடியும். மணல் துகள்களுக்கு இடையிலான உராய்வு மிகவும் குறைந்துள்ளது. அதாவது ஒரு பொருளின் எடையை இனி அந்த மணலால் ஆதரிக்க முடியாது. மூழ்குவது தவிர்க்க முடியாதது ஆகி விடும்.

The Quicksand of Creativity – The Paw Print

சற்று நேரத்தில் அந்தத் தேச துரோகிகள் இருந்ததற்கான தடயமே இல்லாமல், மண்ணிற்குள் அவர்கள் மறைந்து போனார்கள்.

எந்தத் தாய் திரு நாட்டிற்க்கு எதிராகப், பணத்திற்கு ஆசைப்பட்டு நாட்டை விற்றார்களோ, எத்தனை ஓடி ஓடிச் சம்பாதித்தாலும் அதே நாட்டில் ஆறடி நிலம் தான், என்பதை சொல்லாமல் சொன்னது அந்தத் துரோகிகளின் மறைவு.

தன் கையில் புகைந்து கொண்டிருந்த பிஸ்டலை, துடைத்து, தன் சட்டைக்குள் சொருகிய நிஷா தல்வார், “சந்தோசமா ரக்ஷித்?… உன் புலம்பலுக்கு விடை கிடைச்சுடுச்சா?… அந்தக் கிராமத்தை விட்டுக் கிளம்பியாச்சு…” என்று புன்னகை புரிந்தாள்.

Sajid won't narrate us 'Kick 2' unless he has blockbuster script: Jacqueline

ரெண்டு உயிர்களை எடுத்த பயம், சலனம் நிஷாவிடம் சுத்தமாய் இல்லை. அவர்கள் மனிதர்களாக இருந்தால் தானே, கொன்றதற்கு கலங்க வேண்டும்.

கொடிய விலங்குகளை அழிப்பது வேட்டை.

அரக்கர்களைக் கொல்வது வதம்.

நாட்டிற்காக எடுக்கப்படும் எந்த உயிரும் கொலை இல்லை.

அதே நாட்டிற்காகக் கொடுக்கப்படும் எந்த உயிரும் வீணாவதில்லை.

நிஷாவின் வேன் அந்தக் கிராமத்தை விட்டு விலக ஆரம்பித்திருக்க, அதே சமயம் ரஞ்சித் குழுவில் மீதம் இருந்த மூன்று பேர் அவர்களுடன் இணைந்தார்கள்.

இவர்களுக்கென்று தனி பொலிரோ வாகனத்தில் வந்திருக்க, ரோடு ஓரத்தில் நின்று தங்கள் உடைகளை மாற்றிக், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூப் வெஸ்ட் /tactical vest அணிந்தார்கள்.

Woodland camouflage tactical vest, Soldier Plate Carrier System Body armor Plate armour Bulletproof vest, Camouflage backpack, backpack, backpacker, army png | PNGWing

ஒரு தந்திரோபாய உடுப்பு/tactical vest என்பது ஒரு கனரக உடுப்பு. இது வழக்கமான ஆடைகளுக்கு மேல் அணியக்கூடியது. அனைத்து அத்தியாவசிய உபகரணங்களையும், கூடுதல் துப்பாக்கி ரவை, ராணுவ கத்தி போன்ற பல அத்தியாவசிய பொருட்கள் வைத்திருக்கப் பல்வேறு அளவுகளில் பல பைகளில் கொண்டுள்ளது.

அதன் மேல் சட்டையும், வெளியே தெரியாத வண்ணம், மேல் கோட் அணிந்தார்கள்.

குண்டு துளைக்காத உள்ளாடைகளைப் பற்றிய உண்மை என்னவென்றால்,  அவை உண்மையில் புல்லட் எதிர்ப்பு உடைகள் ஆகும். எதுவும் குண்டு துளைக்காதது என்பதே இல்லை. ஒரு மேன்ஹோல்/ manhole கவர் கூட இல்லை புல்லட் ப்ரூப் உடையது அல்ல.

உடல் கவச உடைகள் மிகவும் வலுவான நெய்த மற்றும் / அல்லது நெய்த பாலிஸ்டிக் இழைகளைக் கொண்டது. ஒரு வலையானது எப்படியொரு டென்னிஸ் பந்து அல்லது கைப்பந்தினை தடுத்து நிறுத்துகிறதோ அதே போல், புல்லட்டை இந்த உடைகள் டைவர்ட் செய்யும். இது புல்லட் திரும்பவும், மெதுவாகவும், அதன் ஆற்றலை முழு பேனல் வழியாக அனுப்பவும் காரணமாகிறது.

ரஞ்சித் வந்த ஜீப்பில் இருந்த இருக்கைக்கு ஜிப் இருக்க, அதைத் திறந்தவுடன், கம்பார்ட்மெண்ட் மாதிரியான இடம் தெரிய, பொலிரோவிலே வந்தவர்கள் எடுத்துக் கொடுத்த ஆட்டோமேட்டிக் ஆயுதங்கள், துப்பாக்கி ரவை உள்ள சம்பேர்கள் உள்ளே மறைத்து வைக்கப் பட்டன.

Pin on Under seat gun storage!

ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் கவர் நீக்கியவர்கள் அங்கு இருந்த பைப்போன்ற அமைப்புகளில் துப்பாக்கிகளை எடுத்து அடுக்கி வைத்தார்கள்.

Hoplite Tactical - Grey Man rigid MOLLE panels - discreet organization panel.

“போதுமான அளவுக்குத் துப்பாக்கி, கண்ணீர் புகை கேனிஸ்டர், முதல் உதவி பெட்டி இருக்கிறதா?” என்றார் ஹர்ஷன்.

“இருக்கு சார்…’ புதிதாய் வந்தவர்களில் ஒருவன், “இதே போல் அந்த ரெண்டு வண்டிகள் கால் வைக்கும் இடத்தை மாற்றி அமைத்திருக்கிறோம். அங்கேயும் ஆயுதம் போதுமான அளவுக்கு இருக்கு.” என்றான்.
ஒன்றுக்கு ரெண்டு முறை ஹர்ஷன், ரஞ்சித் இருவரும் கொண்டு வரப்பட்டு இருந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் சோதித்து திருப்தி அடைந்தனர்.

“சரி கிளம்பலாம். ரஞ்சித், சச்சின் நீங்க என் கூட வாங்க. முகுந்த் நீங்க இன்னொரு வண்டியில் வாங்க. உங்க கூட ஒருத்தரை அழைச்சுக்கோங்கோ. இன்னொரு வண்டியில் மீதம் உள்ளவர்கள் வாங்க.

உங்க கூடப் பணி புரிவதில் எனக்கு மிகப் பெரிய கெளரவம். தேசத்தைக் காக்க நாம் உயிர் துறக்க வேண்டி இருக்கலாம். நம் உயிர் போவதற்கு கடைசி நொடிக்கு முன், அட்லீஸ்ட் இந்த நாட்டை அழிக்க நினைக்கும் விஷ ஜந்துக்களின் உயிர் மூன்றையாவது எடுத்துட்டு நம் உயிர் போகட்டும். ஜெய் ஹிந்த்…” என்றவருக்கு பதிலாக, ஆறு குரல்,

“ஜெய் ஹிந்த் சார்…” என்று ஒலிக்க, இது எல்லாம் பத்தே நிமிடத்தில் நடந்து முடிய, அவர்களின் பயணம் அந்த லாரிகளைப் பின் தொடர்ந்து ஆரம்பமானது.

அதே சமயம் தன் அறையில் பெருமூச்சு எடுத்துத் தன் கோபத்தை கட்டு படுத்த வெகுவாக முயன்றுகொண்டிருந்தார் சரோஜினி ஹரிச்சந்திரன்.

‘உடன் பணி புரிகிறேன் என்ற பெயரில் கடும் கோபத்தை கிளப்பும், எதற்கும் உபயோகம் அற்ற, மாதம் ஆனால் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு, சீட்டைத் தேய்க்கும் சக ஊழியர்களைக் கொல்லலாம் அதற்குத் தண்டனை இல்லை…’ என்ற சட்டம் வந்தால், முதலில் சரோஜினி கொல்வது குருவில்லாவை தான்.

உதவி செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரம் செய்பவர்கள் அதிகம். இவர்கள், ஆணியே பிடுங்காம இருந்தாலே அனைத்தும் ஒழுங்காய் நடக்கும். ஆனால் உதவுகிறேன் என்று தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்கி கொண்டிருந்தார் குருவில்லா.

சரோஜினி உடன் மேலும் இரு அதிகாரிகள் அமர்ந்திருக்க, அவர்கள் இருவரும் கூடச் சரோஜினி மாதிரி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

ரஞ்சித் குழுவின் உயிர், இவர்கள் கையில்.

இவர்கள் உதவி தகுந்த சமயத்தில் கிடைக்கவில்லை என்றால் ஏழு பேர் முப்பத்திற்கும் மேற்பட்ட இந்த ஆயுத மாபியா ஆட்களை எதிர்த்து உயிருடன் திரும்ப முடியாது.

An unequal fight.

படுகொலை… A bloody massacre….

அங்கே வைஷ்ணவி என்ற பெண், இங்கே ரஞ்சித் குழு.

யார் பிழைப்பார்கள்?

யார் இவர்களைக் காப்பாற்றுவார்கள்?

ஆட்டம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!