Uyirodu Vilaiyadu – 5

(குற்ற கலாச்சாரத்தை மக்கள், சினிமா துறையினர், எழுத்தாளர்கள் வளர்கிறார்களா?…   

காவல்துறையின் ஒரு பெரிய மனக்குறை என்னவென்றால், திரைப்படங்கள், கதைகள்   ரவுடிகளை ஹீரோக்களாகச் சித்தரித்து, சாதாரண மக்கள் மத்தியில், அவர்களுக்கு ஒரு,  ‘soft corner’  உருவாக்குகின்றன என்பதே!… 

திரைப்பட தணிக்கை வாரியமும், இளைஞர்களுக்கு ஒரு மோசமான முன்மாதிரி வைப்பதால், இது போன்ற திரைப்படங்களை ஊக்குவிக்கக் கூடாது.

கதை எழுதுபவர்களும் தாங்கள் சொல்லும் கருத்துக்கள் மக்கள் மனதை தாக்கத்தை ஏற்படுத்துவதை மனதில் கொண்டு அதற்கேற்ப எழுத வேண்டும். 

கற்பழிப்பு, கொலைகள், கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் ஹீரோக்கள் என்றால் பகத்சிங், நேதாஜி மற்றும் அஷ்பாகுல்லா கான்    போன்றோர் யார்?… They are just  Villans not heros. Dont idolize them- Bihar DGP Gupteshwar Pandey இன்டெர்வியுவிலிருந்து. )

அத்தியாயம்- 5

இந்தியாவின் உள்ள அனைத்து மாபியா, டான்கள், கேங்ஸ்டர், தாதாக்கள் பற்றி மணி, கூகிள் உதவியோடு விளக்கிக் கொண்டு இருக்க, வியப்புடனும், சற்று பயத்துடனும் தான் சம்யுக்தாவும், ஹேமாவும், மணி  சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

அவர் சொன்னது கொஞ்சம் என்பதும், சொல்லாமல் விட்டது அதிகம் என்பதும் அவர்கள் இருவருக்கும் புரிந்தது.  அதில் தமிழகத்தை தற்பொழுது ஆண்டு கொண்டிருக்கும் பரணி, யார் என்றே தெரியாத அவனின் தலைவன் பற்றிய செய்திகள் கேட்டு மிடறு விழுங்கினார்கள் சம்யுவும், ஹேமாவும்.

தங்கள் அருகிலேயே இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அவர்களால் நம்ப தான் முடியவில்லை. 

இதில் சம்யுக்தா அறியாத ஒன்று, பரணி என்பவன் தன்னை கொல்ல தேடி கொண்டு இருக்கிறான் என்பதும், அவனின் தலைவனான விக்ரம்  தன்னை காக்க முயன்று கொண்டு இருக்கிறான் என்பதும்.

விக்ரம் சம்யுக்தவை காக்க முயல்வது பரணியிடமிருந்து மட்டுமா?… 

இல்லை வேறு எதுவும் காரணம் இருக்குமா? 

சம்யுக்தாவால், பரணியின் தம்பி, கைலாசத்தின் உயிர் போய் இருந்தது. கைலாசத்தின்  உயிர் பிரிய சம்யுக்தாவும் ஒரு காரணம் என்றாலும், சம்யு மட்டுமே காரணம் இல்லை.

ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில்  நடந்து இருந்தது அசுர வதம்.

‘அசுரர்கள் வதைக்கப்பட வேண்டியவர்களே!…’  என்ற தர்ம சாரத்தின் படி, ஆறு அரக்கர்களின் உயிர் பிரிந்து இருந்தது.  

உயிர் எடுக்கப்பட்டு இருந்தது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்குமோ!

பரணி தேடி கொண்டு இருப்பது ஒரு பெண் மருத்துவரை… அந்த அசுர வததிற்கு ஒரே சாட்சியாய் இருக்கும் பெண் மருத்துவரை. ஆனால், சம்யுக்தாவிற்கே தெரியாத ரகசியம் அது தனக்காகவும் செய்யப்பட்ட வதம் என்பதே. 

அந்த நொடிவரை தான் தேடி கொண்டிருக்கும் அந்தப் பெண் மருத்துவர், விக்ரம் பாதுக்காப்பு வளையத்திற்குள் இருக்கும் சம்யுக்தா தான் அது  என்பது  பரணிக்குமே  தெரியாது. விக்ரமிற்கும் பரணியின் எண்ணம் தெரியாது. 

‘தன் தம்பியின் மரணத்திற்கு இருக்கும் ஒரே விட்னஸ் ஒரு பெண் மருத்துவர்’ என்ற கோணத்தில் தான் பரணி, சம்யுக்தாவை தேடி கொண்டு இருக்கிறான்.

ஆனால்,  அந்த வதமே சம்யுக்தவிற்காகத் தான் அரங்கேறியது என்பது அதைச் செய்தவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

தெரியாமல் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படலாம். அதுவும் அது எந்த மாதிரியான தவறு, யாரிடம் இழைக்கப்பட்ட தவறு, பாதிக்கப்பட்டவரின் மனநிலை என்பதை பொறுத்ததே. 

ஆனால், கைலாசம், பரணி போன்றவர்கள் தெரிந்தே குற்றம் செய்பவர்கள். அதுவும் பெண்களைப் போகப் பொருளாய் மட்டுமே கருதி, குற்றம் என்று தெரிந்தே பெண்மையை, இழிவு படுத்தும் வேலைகளைச் செய்து கொண்டே இருப்பவர்கள்.

இவர்களைப் போன்றோர்களுக்குக் கண்ணீர், கதறல், வேதனை எல்லாம் காதில் ஒலிக்கும் சங்கீதமே!… மற்ற உயிர்களைத் துடிக்க வைத்து அதில் இன்பம் காணும் அரக்க  இனம்.    

இவர்களைப் போன்றோர் எல்லாம், ‘repeated offenders.’ 

இனி குற்றமே செய்ய முடியாத அளவுக்கு, உயிர் என்பதை இவர்களிடமிருந்து பறித்தாலொழிய, இவர்கள் செய்யும் குற்றங்கள் நிற்காது.

கைலாசத்தின் அரக்கத்தனத்தை தடுத்து நிறுத்த அவன் உயிர் பறிக்கப்பட்டு இருந்தது. 

பெண்ணைக் காக்க, பெண்மையை காக்க  நடந்த கொலை’ என்று அறியாமல், அது,  ‘கேங் வார்/gang war, தன்னை பழி வாங்க  நடத்திய வெறியாட்டம்/ revenge killing’ என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் பரணிக்கு உண்மை தெரிந்தால்?

கைலாசத்தை கொன்றது விக்ரமா?… 

இல்லை வேறு ஒருவனா?…’ என்பதும் கடந்த ஆறு மாதமாய் அவிழ்க்கப் படாத புதிரே!… 

விக்ரமின் பாதுக்காப்பு வளையத்தைவிட, ‘மிகப் பெரிய இரும்பு கோட்டை’ சம்யுவை சுற்றி இருப்பதும், அது உயிர் காக்கும் கோட்டையாகுமா, இல்லை சம்யுக்தாவின்  உயிரை எடுத்து விடுமா?   

கொல்ல துடிக்கும் ஒருவன்.

சுனாமியாய் பலர் வாழ்வை அழிக்க இனி வரப் போகும் ஒருவன்.

சம்யுக்தவையும், ஹேமாவையும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பின்னால் இருந்து காக்கும் இருவர்.  

யார் இவர்கள்?… 

எங்கு  இவர்களின் வாழ்க்கை பாதை  இணைவதால், எல்லோரின் வாழ்வும் மாறப் போகிறது?…

இவற்றுக்கெல்லாம் விடை காலத்தின் ஓட்டத்தில்… 

பரணி பற்றியும் அவன் குழுவைப் பற்றியும் சொல்லி முடித்த மணி,  “இதற்கு முன்னாடியும் இந்த மாபியா ஆப் இந்தியா குழுவை எதிர்த்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

 அவர்களை அந்தக் கூட்டத்தின் தலைவன்,  ‘ஜோக்ராஜ் /jograj bhansi’  இப்பொழுது அந்த ஆள் மகன், ‘பாய்’ என்று அழைக்கப்படும்,   ‘சத்ருஜித் பன்சி/satrujith bhansi’ ரெண்ட் பேரும் உயிரோடு விட்டதும் இல்லை.

jograj bhansi

satrujith bhansi

ரெண்டு பேரும் மிகப் பெரிய சைக்கோங்க, சாடிஸ்ட்ங்க… அதைத் தவிர வேறு எப்படி சொல்வது என்று கூடத் தெரியலை.   

தங்களை எதிர்த்தவர்களைச் சாம, தான, பேத, தண்டம் என்று எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்தி தங்களோடு இணைக்கவோ, இல்லை அழிக்காமலோ விடமாட்டாங்க.

இவர்களுக்கு வெளியில் பெயர், ‘வியாபார காந்தம், பிசினெஸ் மக்னெட்/business magnet’ என்பது. ஆனா, செய்யறது எல்லாம் இல்லீகல் வேலை மட்டுமே. குற்றம் என்ற லிஸ்ட் ஒன்று இருந்தால், அதில் எது எல்லாம் குற்றமோ அதில் எல்லாம் இவனுங்க ரெண்டு பேரோட பெயரும் இருக்குமாம்.

இன்டர்போல் இவர்களுக்கு, ‘ரெட் நோட்டீஸ்/red notice’ கொடுத்து இருக்கு. நம்ம நாட்டிலும் அர்ரெஸ்ட் வாரண்ட் பல வழக்குகளில் இருக்கு. துபாயோ, அபுதாபியோ எங்கேயோ இருக்காங்களாம்.       

பாதிக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள், தங்கள் துறையில் நம்பர் ஒண்ணாய் இருப்பவர்கள், அதி முக்கியமாய் சினிமா துறையில் இருப்பவர்கள் எல்லாம் இவனுங்க கையில்.  

ஒரு தெருவிளக்கு, ரோடு என்பது கூட இல்லாமல் நம்ம நாடு இன்னும் வளராமல் தான் இருக்கு. ஆனா, முன்னூறு, நானூறு கோடி கொடுத்துப் படம் எடுக்கறாங்க பாரு… அதன் பாதி சோர்ஸ் எங்கேயிருந்து வருதுன்னு கூட யாருக்கும் தெரியாது.

டப்பா படமாய் இருக்கும். அதுக்கு அத்தனை கோடி… ‘உலகத்தின் மிகப் பிரமாண்டமான படம்’ என்று விளம்பரம் வரும்.  நாமளும், ‘அடாடா உலகத்திற்கே இந்திய திரைப்பட துறை தான் மைல்கல்… வெளிநாட்டு சினிமா எல்லாம் பிச்சை வாங்கணும்.’ என்று லூசுத்தனமாய் சொல்லிட்டு இருப்போம்.” என்றார் மணி.

“இந்தச் சினிமா துறை கூட, வருமான வரி பகுப்பாய்வுத் தணிக்கை புத்தகங்கள் மற்றும் பிரிவு 14 ஏ இன் கீழ்  பல மதிப்பீட்டு உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது தானே அங்கிள்?” என்றாள் ஹேமா.  

“ஆமா ஹேமா… என் பிரெண்ட் ஒருத்தன் சொல்லி இருக்கான்.  பிரிவு 44 ஏஏ (கணக்குகளின் புத்தகங்களைக் கட்டாயமாகப் பராமரித்தல்), பிரிவு 44 ஏபி (புத்தகங்களின் கட்டாய தணிக்கை) மற்றும் பிரிவு 285-பி (தயாரிப்பாளர்களால் ரூ .50,000 க்கு மேல் செலுத்தப்பட்ட அறிக்கைகள்) மீறல் இவங்க புக் கட்டாயமாய் மைண்டைன் செய்யணும்.

ஆனால்,  2012 ஆம் ஆண்டில் செய்தி வலைத்தளமான, ‘கோப்ராபோஸ்டின்/ cobrapost ஒரு ஸ்டிங் ஆபரேஷன்/sting operation, முன்னணி தயாரிப்பாளர்களையும், இயக்குனர்கள், ‘கருப்பு பணத்தை, வெள்ளை’ ஆக மாற்றுவதற்கு சினிமா தொழில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கேமராவில் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொகைகள் ‘புத்தகங்களில் எவ்வாறு சரி செய்யப்படுகின்றன என்றும் சொன்னான்.  பியூன்கள், ஆடிட்டிங் துறை   தவறான டாக்ஸி பில்கள், அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்ட இளைய கலைஞர்களுக்கான கொடுப்பனவுகள், கோஸ்ட் ஒர்க்கேர்ஸ்/ghost workers  என்று  இல்லவே இல்லாத  ஊழியர்களுக்கான சம்பளம்,  மதிய உணவு பில்கள், இதர கணக்குகள், ஏராளமான கார்களுக்கான பெட்ரோல் கட்டணம், உற்பத்தியில் உயர்வு 100 பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், விளம்பர நபர்களிடமிருந்து தவறான பில்கள் வழங்கப்பட்டாலும் 1,000 பைகள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்றவை மதிப்பிடப்பட்டுள்ளன.

காஸ்டியூம், சினிமா படச் செட், மேக் அப் என்று ஒவ்வொன்றுக்கும் சில பல கோடிகளில் அதிகமாய் கணக்கு காட்டுவார்களாம்.  சினிமா நட்சத்திரங்களும் இப்பொது எல்லாம் ரொம்ப உஷார். வரும் பணத்தை வெளிநாடுகளில் எல்லாம் பதுக்கி வைப்பதில்லை. 

திடீரென்று ஒரு சினிமா ஸ்டார் கோழி பண்ணை உரிமையாளர் ஆவார். விவசாயி மாதிரி பார்ம் ஹவுஸ், விவசாய நிலம், வாங்கி போடுவார். ஹோட்டல், ரோஜா தோட்டம், ரிசார்ட், பள்ளி, கல்லூரி எல்லாம் ஆரம்பிப்பார். 

இல்லையென்றால் சமூக சேவை நிறுவனம் என்ற பெயரில், ஒரு கோடி முதலீடு செய்துட்டு, பொது மக்களிடமிருந்து மீதம் உள்ள பணத்தை வாங்கி,  ‘சேவை செய்யறேன்’ என்று ரீல் விட்டு, பணத்தை பதுக்குவாங்க, இல்லையென்றால் புக் குக் /book cook ஆகும். நம்ம மக்களும், ‘ஆஹா இவர் கடையெழு வள்ளல்களைவிட மிகச் சிறந்தவர்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள்.” என்றாள் சம்யுக்தா.

“உண்மை தான்… இவனுங்க, ‘கடை தேங்காய் எடுத்து, வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல்’, மக்களிடமிருந்து பணத்தை வாங்கி, அதை என்னவோ இவனுங்களே செய்வது போல், ஓவர் பில்ட் அப் எல்லாம் செய்வாங்க.

‘நாங்க சம்பாதித்த பணம் அத்தனையும்  இந்தத் தொண்டு நிறுவனத்தில் தான் போட்டு இருக்கோம். அடுத்த வேலை தண்ணீர் குடிக்க கூடக் காசு எங்கிட்டே இல்லை…’ என்று முதலை கண்ணீர் எல்லாம் வரும்.

சேவை செய்வது என்றால் அது நூறு ரூபாயாக இருந்தாலும் சொந்த பணத்தில் செய்யணும். மத்தவங்க கிட்டே இருந்து வாங்கி, நீ  செய்து, நீ பெயர் எடுத்துக் கொள்வதற்கு பெயர் சேவையே இல்லை.” என்றாள்  ஹேமா.      

“லட்சம் பேர் உழைக்கும் கனவுத் தொழிற்சாலை சினிமா   என்பது. அதில், இந்த ஹவாலா, பாதி கருப்பு,  பாதி  வெள்ளை பணத்தை சம்பளமாய் வாங்குவது, பினாமி சொத்து குவிப்பு, மிகவும் பிரபலமான வரி புகலிட நாடுகளின் பட்டியலில்  அன்டோரா, பஹாமாஸ், பெலிஸ், பெர்முடா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமன் தீவுகள், சேனல் தீவுகள், குக் தீவுகள், ஜெர்சி தீவு, ஹாங்காங், தீவு நாயகன், மொரீஷியஸ், லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, பனாமா, செயின்ட் கிட்ஸ் என்று பல   குப்பை   கூளங்களும்   இருக்குதே!…” என்றாள் சம்யுக்தா 

 “உண்மை தான் பொண்ணுகளா… சந்தேகத்திற்கு இடமின்றி, கறுப்புப் பணம் என்பது இந்தியத் திரையுலகின் இரத்தமாகும். கவர்ச்சி மற்றும் அதன் பளபளப்பு  ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டவர்களிடமிருந்து அடிக்கடி  இங்கே பணம் இன்வெஸ்ட் ஆகிறது.“என்றார் மணி 

அவர்கள் சம்பாதித்த பணத்தை  கருப்பு மற்றும்  வெள்ளை பணத்தை,  ‘பிலிமி’ வேர்ல்பூலில்/filmy whirpool’ முதலீடு செய்கிறார்கள். எல்லா துறைகளிலும் நிறைய பேர்  கறுப்புப் பணத்தைக் கையாள்வதால், ‘if you sctrach my back,I will sctrach yours என்ற கொள்கை படி, ‘honor among thieves.’ என்று ஒருவர் இன்னொருவரை காட்டி  கொடுப்பதில்லை.” என்றாள் சம்யுக்தா.

இவர்கள் பேச்சில் உலக அளவில் நடக்கும் ஹவாலா, கருப்பு பணம், பளபள சினிமா துரையின் பின் உள்ள குப்பை கூளங்கள் எல்லாம் அலசப் பட்டது.

“இந்த எல்லா வேலையும் இவர்களுக்குச் செய்து கொடுப்பது சத்ருஜித் குழு தான்.  நிறைய சினிமாக்களில் தயாரிப்பாளராய் இருக்கும், ‘ஹீரா புரொடக்சன்ஸ்/heera productions’ சத்ருஜித்துக்கு சொந்தமானது என்று கேள்வி.   

அவர்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில், புதிதாய் முளைத்து இருக்கும் எதிரி, தலைவலி தான் தேஜ்.   

 புதுசு தானே என்று நினைக்க முடியாத அளவுக்கு,   இவன்  ருத்ரதாண்டவம் தான் அதிகமாய் இருக்கு. போலீசுக்கும், உலகத்தில் பலரும்,  ‘பாய்’ என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள் அந்தப் பாய்க்குமே  தண்ணீ காட்டிட்டு இருக்கானாம்.”   என்றார் மணி.

“தண்ணீ காட்றது என்றால்,  ‘விஜய் ஒரு படத்தில்   போலீசுக்கு  பானையை  தூக்கி தண்ணீர்   காட்டுவாரே அப்படியா அங்கிள்?…” என்று   முகத்தை அப்பாவியாய்  வைத்துக் கொண்டு சம்யு கேட்க, ஹேமா வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, மணி, சம்யு காதை பிடித்துத் திருகினார்.

“அருந்த வாலு… பாவம் ஈஸ்வர் தம்பி… உன் கிட்டே  மாட்டிட்டு, என்ன பாடு படப் போறாரோ!… அந்த    வாயில்லா பூச்சிக்கு, இப்படியொரு சண்டி ராணி…  கடவுள் தான் அந்தப் பிள்ளையைக் காப்பாத்தணும்.  நான்  எவ்வளவு சீரியசான விஷயம் சொல்லிட்டு  இருக்கேன்… அதைக் காமெடி கதையாக்கிட்டு    இருக்கே!…”    என்றார்    மணி   பெருமூச்சுடன்.

“அங்கிள்… டான் எல்லாம்  நம்ம கிட்டே வந்தால், ‘டன்டண்டணக்கா டான்’ தான் ஆக முடியும்.” என்றாள் சம்யுக்தா புன்னகையுடன்.

அந்தப் புன்னகை கண்களில் பிரதிபலிக்கவில்லை என்பதையும், நேரம் ஆக, ஆக ஈஸ்வர் இன்னும் வந்து சேராமல் இருப்பதால், சம்யுக்தாவின் மனதில் உள்ள  பயத்தை  கண்டு  கொண்டே, இப்படி ஊர்கதை, உலக கதை எல்லாம் மணி பேசிக் கொண்டு  இருக்கிறார்  என்பது ஹேமாவிற்கு புரிந்தது.

சம்யுக்தாவும் பேச்சு சுவாரஸ்யத்தில் சற்று நேரம் அவர்களுக்கு முன் இருந்த பிரச்சனையை மறந்து இருந்தாள் என்றாலும், மணி பேச்சுவாக்கில் மீண்டும் ஈஸ்வரை  தன்னை  மறந்து  நியாபக படுத்திவிட்டதால் , சம்யுவின் முகம் கவலையைப் பிரதிபலிக்க ஆரம்பித்தததை ஹேமா கண்டு கொண்டாள்.

“ஹே நிறுத்துடீ!…அங்கிள் எவ்வளவு இன்டெரெஸ்ட்டா,  நிஜ டான்களை பத்தி சொல்லிட்டு இருக்கார். எனக்கு ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிடுச்சு…”  என்றவளை  பார்த்து, சம்யு கண்ணை  உருட்ட,

“நீ  சும்மா இரு  சம்யு… அங்கிள்!…  நீங்க  அந்தத் தேஜ்,  பத்தி  சொல்லிட்டு  இருந்தீங்க…சொல்லுங்க  அங்கிள்… ஆள் பார்க்க எப்படி இருப்பான்?…

‘பிசினெஸ்மென்   மகேஷ்    பாபு’   மாதிரியா?

இல்லை, ரெபெல் பிரபாஸ் மாதிரியா?…” என்றவள்  ஜொள்  பாக்டரி  ஓபன்  செய்து  இருக்க, அவள்    தலையில்  ஓங்கி கொட்டினாள்   சம்யு.

“ஏன்  ஊரில், உலகில் உள்ள எல்லா டான் சினிமாவையும்  சொல்ல வேண்டியது   தானே!…, பில்லா அஜித் மாதிரி, பாட்சா ரஜினி மாதிரி,   நாயகன் கமல் மாதிரின்னு சொல்லிட்டே  போக    வேண்டியது  தானே!.. திருந்த  மாட்டே!… அவனே ஒரு பொறுக்கி… கொலைகாரன். இன்னொருத்தன் வயத்தில் அடித்து, உயிரை எடுத்து,  அதில்  உடம்பு  வளர்ப்பவன்.அவன்மேல், எந்த  டாஷ்க்கு, உனக்கு  ஹீரோ ஒர்ஷிப் வேண்டிக்  கிடக்கு?…    

துப்பாக்கி  தூக்குறவன் எல்லாம்  ஹீரோ கிடையாது.  தன் குடும்பத்தை  மட்டும்    பார்த்துட்டு, ஒதுங்கிப் போறவன் எல்லாம் கோழையும் கிடையாது. அவனைப் பத்தி தெரிஞ்சுட்டு என்ன செய்யப் போறே  நீ?…” என்றாள்  சம்யு கடுப்புடன்.

“உனக்கு  என்னடி!…  பெயரே   எவ்வளவு   குயூட்டா இருக்கு   பாரு … தேஜ்!…  தேஜ்!… சொல்லும் போதே அப்படியே  தேன்  சாப்பிடுவது  மாதிரி இருக்கு.

ஆளு பார்க்க அப்படியே, சிக்ஸ் பேக்ல, சினிமா    ஹீரோ  மாதிரி இருந்தா, செட்டில் ஆகவேண்டியது   தான்…” என்றாள் ஹேமா,  கனவுலகில்  மிதந்து,  சம்யுவின் ரத்த கொதிப்பை,  ஏற்றியே  தீருவேன்  என்று கங்கணம் கட்டி கொண்டவள் போல்.

“செட்டில்   தானே!…. எங்கே சுடுகாட்டிலா இல்லை ஜெயிலிலா?” என்றாள் சம்யு  நக்கலாக.

“சம்யு!…” என்று ஹேமா சிணுங்க,

“ஹே!… சத்தியமாய் அது தான் நடக்கும்… டான்க்கு கேர்ள் பிரெண்ட், மனைவி என்றால் அது கத்திமேல் நடப்பது போன்ற வாழ்க்கை தான்… ஒன்று மரணம் இல்லையென்றால் அவனுங்க செய்த குற்றங்களில் உடல் வளர்க்கும் அந்தப் பெண்களுக்கும் சிறை வாழ்க்கை தான்.

‘ஹாப்பிலி எவர் ஆப்டர்/happily ever after’ என்பதெல்லாம் சினிமா, கதைகளில் வேண்டும் என்றால் நடக்கலாம். நிஜ வாழ்க்கையில் சமூகமே உன்னை விலக்கித் தான் வைக்கும்.  நம்ம சாதாரண சுதந்திர வாழ்க்கை கூடக் கிடைக்காது.

எப்போ, எவன், எந்தப் பக்கம் இருந்து தாக்குவான் என்று புரியாமல் நொடிதோறும் பயத்தில் இருக்க வேண்டிய வாழ்க்கை அது. எந்தப் பெண்ணிற்கும் நடக்க கூடாத, கிடைக்க கூடாத நரகம் என்று உனக்குப் புரியவில்லையா ஹேமா?     

கோடிக்கணக்கில் பணம் புரளலாம்… ஆனால்,  நிம்மதி என்பது கொஞ்சம் கூடக் கிடைக்காது. காலில் பாறாங்கல்லை கட்டிட்டு, சமுத்திரத்தின் நடுவே நீச்சல் அடிப்பது போன்றது தான் அந்த வாழ்க்கை.  தண்ணீருக்கு மேல் உயிரோடு இருக்க பிரம்மபிராயத்தனம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்.” என்றாள் சம்யுக்தா எரிச்சலுடன்.

இவள் சொல்லிய இந்த நரகம் தான்  இவர்களின் எதிர்காலமா?

தங்கள் வாழ்வில், எதிர்காலத்தில்  நடக்க  போவதை தான், சொல்லிட்டு  இருக்கிறோம் என்பது  மட்டும் சம்யுக்தாவிற்கு  அந்த  நொடி தெரிந்திருந்தால், ஏழு கடல்,  ஏழு  மலை  தாண்டி  ஓடி, ஹேமாவுடன்  ஒளிந்து  இருப்பாளோ?

“ச்சே  போடி…  உனக்கு ரொமான்டிக் சென்ஸே சுத்தமாய்  இல்லை… நானும்  தேஜ்,  ஒரு  தனி தீவு,  ஒரு  பங்களா, ஒரு  ஹெலிகாப்டர், ஒரு கப்பல்…”  என்று  ஹேமா அடுக்க,சம்யு  தன்உள்ளங்கையால், தன் நெற்றியில் தானே அடித்துக் கொண்ட சம்யுக்தா, 

“அப்படியே ஒரு செருப்பு, துடைப்ப கட்டை அதையும் சேர்த்துக்கோ செல்லம்… உனக்குப் பிடித்து இருக்கும் இந்தப் பேய்க்கு வேப்பிலை மரத்தையே பிடுங்கி தான் அடிக்கணும்.” என்றாள்  ஹேமாவை  முறைத்தவாறே.

‘உன் கோபம் என்னை என்ன செய்யும்?…’ என்று பதிலுக்கு, நக்கலாக ஒரு பார்வை பார்த்தாள் ஹேமா.           

ஹேமா அது  மாதிரி  தான். சினிமாவில் எல்லோரும்  ஹீரோவைச்  சைட் அடித்தால், இவள்   வில்லன்களைச் சைட்  அடிக்கும் ரகம். வில்லன்  இறந்தால், பிழியப் பிழிய அழ வேறு செய்வாள். எல்லோரும்  ஹீரோ,  ஹீரோயின் கதைகளிலோ, சினிமாவிலோ இறக்கும் படி காட்டினால் தான் பொங்கல் வைப்பார்கள்.

‘அது  எப்படி  எங்க செல்லத்தை நீங்கக் கொல்லலாம்?…. செல்லாது…. செல்லாது….’ என்று சண்டை  எல்லாம்  நடக்கும்.

ஆனால்,  ஹேமா, வில்லனைக்  கொன்றால் அதற்குக்  கத்தும்  ரகம். 

ஈஸ்வர்  வந்து  சேர  நேரம்  ஆவதை  கண்டு  சம்யு பதட்டப்பட  கூடாதே என்று  தான்,   அவளைச்  சீண்டும் விதமாய்  இப்படி  வம்பிழுத்து கொண்டு  இருக்கிறாள் ஹேமா, என்பதை புரிந்து    கொண்ட  மணிக்கு, அவர்களின் அந்த    உரையாடல்    சிரிப்பைத்   தான் வரவழைத்தது.  

சம்யுக்தா  வெளியே ஈஸ்வர் வந்து சேராத பதட்டத்தை, பயம், தவிப்பை காட்டி கொள்ளவில்லை   என்றாலும், நகரும்  ஒவ்வொரு நொடியும்  சம்யுவிற்கு  நரகம் தான்  என்பதையும், ஈஸ்வரை கண்ணால் காணும்  வரை, சம்யுவின் அந்தத்  தவிப்பு  அடங்காது என்பதை புரிந்து கொண்டே, ஹேமா  அந்தப்  பேச்சினை வளர்த்துக் கொண்டு    இருக்கிறாள் என்பதை அவர் புரிந்து கொண்டார்.     

“நீங்கச் சொல்லுங்க அங்கிள்… அவ  கிடக்கறா ஊசி  போன  உளுந்தம் வடை… ரொமான்ஸ் சென்ஸே இல்லாதவ… இவ லவ்ஸ்  விட்டு  இருக்கா  என்பதையே,  இன்னும் நம்ப முடியாமல் ஷாக்கில் தான்  இருக்கேன்… இது வந்து,  என்  ரொமான்ஸ்  நாவலைக் கலைச்சிட்டு இருக்கு… ஷூ… ஷூ… தூரம் போ…    

நீங்க என் செல்லக் குட்டி, மை டியர்  டான் பத்தி வர்ணித்துச் சொல்லுங்க….  என் தாதா  எப்படி இருப்பார்?… சீக்கிரம் சொல்லுங்க  அங்கிள்… நான் தீம் ம்யூசிக் எல்லாம்  வேற  கலெக்ட் செய்யணும்…  பன்ச்சு டைலாக் எல்லாம் வேற ரெடி செய்யணும். ” என்றாள்  ஹேமா, ட்ரீம் மோடிற்குள் சென்றபடி.

சம்யுவும், ஹேமாவும் ஜாலி ரகம். வாலில்லா குரங்குகள். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் லூட்டிக்கு, இவர்கள் மருத்துவர்கள் என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

சம்யுவை வெறுப்பேற்ற என்றே ஹேமா ஆரம்பித்தது தான் இந்த வில்லன் ஒர்ஷிப் எல்லாம். இதற்காக என்றே அடிதடி படமாய் சம்யுவை அழைத்துச் சென்று, ஹேமா வில்லன்களைப் பார்த்து விடும் ஜொள் என்னும் சுனாமியில் நீச்சலடிக்க முடியாமல் சம்யு தான் திணறிப் போவாள். சம்யு முகம் போகும் போக்கைப் பார்க்க என்றே ஹேமா இப்படி படுத்தி எடுத்துக்கொண்டிருப்பாள்.

கற்பனையான சினிமா டான்களுக்கே கொடி பிடித்து, சம்யு பிபி எகிற வைக்கும் ஹேமா கையில், நிஜ டான்களான தேஜ், பரணி, சத்ரு கிடைத்தால் சும்மா இருப்பாளா?… அதுவும் சம்யுவை டைவர்ட் வேறு செய்ய வேண்டி இருக்கும் போது புகுந்து விளையாடினாள் ஹேமா.

“யாருக்கு தெரியும்?…” என்றார் அவர் விட்டேத்தியாக.

சம்யுவும், ஹேமாவும்  ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன அங்கிள்!… இப்படி சொல்றீங்க?” என்றாள்   ஹேமா வியப்புடன்.

“தேஜ் யார் என்று யாருக்குமே தெரியாது. எங்கே  இருக்கான், எப்படி இருப்பான், கறுப்பா, வெள்ளையா, உயரமா, குட்டையா  என்று  எந்த    டீடைல் போலீசுக்கே தெரியலை. ஆனா,  பயங்கரமான நிழல் உலகத்தைச் சேர்ந்தவன்.

எஸ். ஜே  அதாவது சத்ருஜித், ஜோக்ராஜ்  குழுமத்திற்கும், இவனுக்கும்   பயங்கர பகையாம். அது, ‘மாபியா ஆப்  இந்தியா’ குழுவின் தலைமை.  பெரிய தாதா, டான் அப்படின்னு சொல்ராங்க…    தங்க கடத்தல்,  போதை  மருந்து,   ஆயுதம்,     settlement  என்று இருபதுக்கும்  மேல், அவன்  செய்யும் இல்லீகல்  லிஸ்ட் நீளுது.

உலகில் பல இடங்களில் இந்த ரெண்டு பேரோட மோதல்,  ஐந்து வருடமாய் நடந்துட்டு தான் இருக்கு. தேஜை  சமாளிக்க முடியாமல், சத்ருபாய் மிகவும் திணறிட்டு தான் இருக்கான். இதுவரை வெளிநாட்டில் இவர்கள் ஒருவரை ஒருவர் அழிக்க நடத்தி  கொண்டிருந்த  சண்டை களம்,  தீடீர் என்று தமிழகத்திற்கு  ஒரு  வருடமாய்  இடம் பெயர்ந்திருக்கு.

இந்த ரெண்டு குழுவின் சண்டை, தமிழ்நாட்டில் ஆரம்பித்தபிறகு தான், சத்ருபாய் மாபியா கும்பலின் வேர், தமிழகம் வரை பரந்து பரவி இருக்கு. இங்குள்ள துறைமுகம், தொழில்கள் எல்லாம் பாய் கண்ட்ரோலில் இருப்பதும், பரணியும் அவன் தலைவனும் அந்தப் பாயின் பினாமி என்ற தகவலே போலீசுக்கு தெரிய வந்து இருக்கு.   

சென்னையில் சில, பல மாதமாய், இந்த ரெண்டு குழுவிற்கும் நடக்கும், ‘gang war’ ரில் ரெண்டு பக்கமும் இறந்தவங்க எண்ணிக்கை மட்டும்  ஐம்பதிற்கும் மேல் இருக்கு… ‘பிணங்களை  அள்ளிட்டு இருக்கோம்’ என்று மச்சான் அலுத்துட்டு  இருக்கான்.” 

நேத்து ராத்திரி  சென்னையில் எட்டு இடங்கள்  தொழிற்சாலை, கோடௌன், நைட் கிளப், ரிசார்ட், பங்களான்னு எல்லாமே, எஸ்.ஜேக்குழுமத்திற்கு சொந்தமானது தீப்பிடிச்சிக்கிச்சாம்… அதாவது, ‘பரணி’ என்ற பினாமியுடைய இடங்கள்.

‘சர்கியூட்  பெயிலியர்,  ஓல்ட்டேஜ்  ப்ரோப்லம்’ என்று   வழக்கு  பதிவாகி  இருக்கு… ஆனா, அதுக்கு   பின்னால்  இருந்தது  தேஜ் தானாம்.  அவன்  வளர்த்த  ஹோமம்  தானாம். ஹோமம் என்றால்  புரியுது  இல்லை… அக்னிக்கு அந்த இடங்களை இரையாக்குவது. “

என்றார் மணி.

“அப்படி கொளுத்தும் அளவிற்கு அங்கே என்ன அங்கிள் இருந்திருக்கும்?” என்றாள் சம்யுக்தா யோசனையுடன்.

“கோடௌன் என்றால் அங்கே எதைப் பதுக்கி வைப்பார்கள். யாரை அடைத்து வைப்பார்கள் என்று யாருக்கு தெரியும்?. அங்கே இருக்கும் பொருள் போதை மருந்து, துப்பாக்கிகள், வெடி குண்டுகள், ஏன் மனிதர்களாய் கூட இருக்கலாம். ” என்றாள் ஹேமா டான்களை பற்றிக் கரைத்து குடித்தவள் மாதிரி.

“சொல்லவே இல்லை ஹேம் ஸ் டார்லிங். டான், காங்ஸ்டர் பற்றி எப்போ ph.d பட்டம் வாங்கினே…எப்படி புட்டு புட்டு வைக்கிறே…”என்று சம்யுக்தா கலாய்க்க, வேடிக்கையாகச் சொன்ன ஹேமா, அவளைக் கிண்டல் செய்த சம்யு இருவரும் அறியாத ஒன்று, தேஜ் கொளுத்திய சத்ருஜித் இடங்களில் எல்லாம் ஹேமா சொன்னவை தான் பதுக்கி வைக்கப்படுகின்ற என்பது.   

“எஸ்.ஜே ஆளுங்க, தேஜிற்கும்  நடக்கும் இந்தச்  சண்டையில், பொது மக்கள் பாதிக்கப்பட கூடாதே  என்று தான், போலீஸ் இப்படி டென்ஷனாய் வேலை  செய்துட்டு இருக்காங்க. ஒருத்தன் குழுவை  ஒருத்தன் அழிக்க, நடுவே யார்  சிக்குகிறார்கள் என்றெல்லாம் பார்க்கவே மாட்டானுங்க…” என்றார் மணி வேதனையுடன்.

Delhi riots death toll likely to climb close to 50

Active Shooter Preparedness

“இது என்ன அங்கிள் கொடுமையா இருக்கு?… இவனுங்களுக்குள்ள பகை என்றால், ‘சாமி படத்தில் விக்ரம்  சொல்வது போல், ஏதாவது காட்டுக்குள்  போய்,  இல்லைன்னா யாரும் இல்லாத  இடத்தில் போய்,  வெட்டிடோ, சுட்டுட்டோ சாக வேண்டியது தானே!… அதை   விட்டுட்டு, ஊருக்குள், பொது மக்கள் இருக்கும் பகுதியில் இப்படி செய்யறது எல்லாம்   நியாயமே  இல்லை…

தலைவனுங்களுக்கு, இன்னைக்கு  ஒரு  கொள்கை,  நாளைக்கு  ஒரு கொள்கை இருக்கும். இன்னைக்கு அடிச்சிக்கிறவனுங்க,  நாளைக்கே  எவனாவது மீடியேட்  செய்தால், ‘எங்க நண்பன்போல யாரு மச்சான்?…’ என்று பாடிட்டு இருப்பானுங்க…

ஆனா,  இவன்க  சொன்னானுங்க  என்று  அடிச்சுட்டு, சுட்டுட்டு, சுடப்பட்டு  செத்த இவனுங்க ஆட்களின் குடும்பம், இதில்  பொது  மக்களின் குடும்பம் எல்லாம் என்ன ஆகும்?… இவனுங்களை எல்லாம் கையில் கிடைத்தால் சுட்டுட்டு போயிட்டே  இருக்கணும்.” என்றாள் சம்யு கடுப்புடன்.  

“உண்மை தான் சம்யு… என்கவுண்டரில் போட்டுத் தள்ளப் பட  வேண்டிய ஆட்கள் தான் இருவரும். ஆனால்,  அதைச்  செய்வதற்கு  முன், இவனுங்களுக்கு  இடையே, நடக்கும் சண்டையில்  அப்படி  எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று   தான்  இப்படி சோதனை செய்துட்டு இருக்காங்க.

பயங்கர ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்டால்,    இதுவரை அமைதி பூங்காவாய் இருக்கும்    தமிழகத்திற்கு அது   தலைகுனிவு மா… யாராவது  பொது  மக்கள் இறந்தால், அதை வைத்துப், ‘பிண அரசியல்’  நடத்தி, ‘அரசு சரியில்லை, ஆட்சி சரியில்லை, நாங்க பதவிக்கு வந்தால் அதைக் கழற்றுவோம், இதைப் புடுங்குவோம்  என்று நீலி  கண்ணீர் வடிச்சிட்டு நடிக்க, இந்தக் கால அரசியல்வாதிகளுக்குச் சொல்லியா தரணும்?   

அரசியல்வாதிகள் தேர்ந்த நடிகர்கள்ஆகிறார்கள் என்றால், நடிகர்கள் அரசியல்வாதிகளாகி  கொண்டு   இருக்கிறார்கள்.  அவனுங்க  செய்யும் அலம்பலுக்கு, தீனி போடுவது   போல்,  இன்னும் எவ்ளோ  ரத்த  ஆறு  ஓட வைக்கப் போறானுகளோ!…” என்றார் அவர் கடுப்புடன்.

“ஆமா, ஒருத்தர் கூடவா அந்த ஆளைப் பார்த்ததில்லை?…. அது  எப்படி முடியும்?…  இப்படி தலைமறைவாகி, இல்லிகல் வேலை செய்யக் கூடாது,   பொய் எண்  கொடுத்து, வேற்று    நாட்டுக்காரன் உள்ளே வந்து,  நம் பாதுகாப்பிற்கு   பங்கம்  விளைவிக்க கூடாது என்று   தானே,    வெளிநாட்டில் இருப்பது  போல், இங்கேயும்  ஆதார்   எல்லாம்  கொண்டு  வந்திருக்காங்க.”என்றாள்  சம்யு.

“அதானே!… இப்படியொரு  ஐடி  இல்லாமல் தானே,   பத்து  பினாமி, அவனவன்  வச்சிட்டு ஆறு, குளம்  எல்லாம் பட்டா போட்டு வித்துட்டு இருந்தானுங்க.  வருமானத்திற்கான சௌர்ஸ்/source   காட்டாமல், வரி   ஏய்ப்பு   செய்துட்டு  இருந்தானுங்க. போலி சேவை  அமைப்பு  என்று   பெயர் வச்சிட்டு, கருப்பு  பணத்தை,  வெள்ளை  ஆக்குறது, மத பிளவை  உண்டாக்கறது, இந்தியாவை  பற்றி உலகளவில்  போலி பிம்பத்தை  உருவாக்கத்  தனியே சைபர்  செல்எல்லாம் வைத்து விளையாடிட்டு  இருந்தானுங்க.” என்றாள் ஹேமா யோசனையுடன் .

“அதானே!…. உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் இது இன்னும் பெரியதாக  300 லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூட நியூஸ் வந்தது.  பிப்ரவரி 2012 இல், இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணிப்பாளர்/director of CBI  இந்தியர்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சட்டவிரோத நிதியை வெளிநாட்டு வரி புகலிடங்களில் வைத்திருக்கிறார்கள், இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம் என்று கூறி இருக்கிறாரே.

மார்ச் 2018 இல், சுவிஸ் மற்றும் பிற வங்கிகளில் தற்போது இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தின் அளவு lakh 300 லட்சம் கோடி அல்லது 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” என்ற சம்யுக்தாவின் புள்ளி  அறிக்கை கேட்டு மணி வாய் பிளந்து நின்றார்.

“அங்கிள்!…  எங்களுக்குச் சமையல் அறையும் தெரியும்… உலக  நிலவரமும் தெரியும். கதை  புத்தகங்களை மட்டும்  இல்லை, எகனாமிக் டைம்ஸ் முதல் ரிசர்ச் ஜௌர்னல் வரை படிப்போம் அங்கிள். பத்து பேர் சரி என்று சொல்லிவிட்டால் அது என்றுமே சரி ஆகிடாது… பதினோராவது சோர்ஸ் தேடணும் அங்கிள். எங்க அறிவு தேடல் கடலைவிட ஆழமானது.” என்றாள்  ஹேமா.

மணி  முகத்தில்  தன்  முன்னே  நின்ற பெண்களின் அறிவை கண்ட பெருமிதம்  முகத்தில்  மிளிர்ந்தது.

 “அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பிற்காக  எல்லாம்  நேஷனல் பெர்மிட், ஸ்டேட் பெர்மிட்  என்று  ஐடி  கார்டு  ரெண்டு வச்சிட்டு  தான் வெளியே  போவாங்க. செக்கிங் கேக்கும் போதெல்லாம்,  காட்டியே ஆகணும். ‘ஏன்  கேக்கறீங்க, என் உரிமை பாதிக்குதுன்னு…’  எல்லாம்   குரல்   எழுப்ப  முடியவே முடியாது. ‘Nation   first   no    compromise’  அந்த அளவுக்கு எல்லாம்   இன்னும்   இங்கே   ஸ்ட்ரிக்ட் செயல் படுத்தலை.”  என்றாள்    சம்யு.

“அட போ சம்யு.   இங்கே  ஆஆ  வூன்னு  சத்தம்   போடுறவங்க,  வெளிநாட்டுக்கு  போனா, கப்    சிப்புன்னு, அங்கே  உள்ள சட்டத்தை எதிர்த்துக்  கேள்வி   கூடக்  கேக்காமல் மதிப்பாங்க. இங்கே சொல்லு…  ஹ்ம்ம்!… வேலைக்கே   ஆகாது.    உன்  நாட்டில்  எந்த  அளவுக்கு நீ உரிமையை  எதிர்பார்கிறாயோ, அதே அளவிற்கு உனக்கான    பத்து  கடமைகளையும்  தான், இந்திய  அரசாணை சட்டம்    சொல்லுது. உரிமை  என்று  குரல்  கொடுக்கும்  யாரும், கடமை  என்று வரும்போது  மட்டும்  எப்படி தான்    காணாமல்  போவார்களோ!…  

நாடு  என்ற  ஒன்று  வீழும்போது, அதை உள்ளிருந்தே  கரையான்கள் வீழ்த்தும்போது,  அங்கே   குடும்பங்களும்  பாதிக்கப்படும் என்று அறியாத  மூடர்  கூடம்  இது.” என்றாள்   ஹேமா.   

“ஆதார் கார்டு வைத்து, பாஸ்போர்ட், மொபைல்   நம்பருக்கு கொடுத்த அட்ரஸ்  ப்ரூப் வைத்துக் கண்டுபிடிக்கலாமே?…”   என்றாள் சம்யு.

“அட  சம்யு… அந்த ஆதார் கார்டில்  என் முகத்தைப் பார்த்தா, எனக்கே  அடையாளம் தெரியலை…  இதுல  எவனைத் தெரிய  போகுது?…” என்றாள்  ஹேமா.

“அது ஏன் கண்டுபிடிக்க  முடியலைன்னு தெரிலமா… ஆனா, அந்த ஆளுக்கு நிச்சயம் வயசு    அறுபத்திற்கும்  மேல்  இருக்குமாம். முகம் ஏதோ நெருப்பில் மாட்டிச் சிதைந்து இருக்குமாம்…  நடக்க  முடியாமல், வீல் சேரில் தான்    இருப்பானாம்… குளிக்க, துடைக்க என்று நர்ஸ்    கூடவே  இருபங்களாம்… வீல் சேரில் இருந்துட்டே கிழம் என்னை அடிச்சுட்டு இருக்கானா…’ என்று சத்ரு பாய், கத்தியதாகக் கேள்வி.”  என்று சொல்லிக்    கொண்டே போனார் மணி, ஹேமாவின்   திகைத்த   தோற்றத்தைக் கவனிக்கத்தவராய். 

“ஹே  ஹேமா!….கடைசியில் உன் தாதா, நிஜ    தாத்தாடீ!… அறுபது  வயசு கிழவனுக்கு,தேஜ் என்ற பெயர் ஒப்பனை வைத்து, மனதில் இம்புட்டு  காதலை வளத்துட்டியே செல்லம்!… போலீஸ் கூடப் பிடிக்க வேணாம்… அப்படியே விட்டால், அந்த கிழமே இன்னும் கொஞ்ச நாளில்,    டிக்கெட் வாங்கிடும் போல் இருக்கே!…  

இதுல  தனி  தீவு,  கப்பல், ரொமான்ஸ்ன்னு காதல் கோட்டை தரையில் கூடயில்லை, வானத்தில் நீ  எழுப்பிய கோட்டை இப்படி தரை மட்டம் ஆகிவிட்டதே!.. சந்திரமுகி படத்தில் ரஜினி, வடிவேலு கிட்டே  ஒரு  டயலாக் சொல்வாரே!… ‘ஒருத்தனுக்கு …’   என்று    ஆரம்பித்த சம்யு வாயை, கைக்கொண்டு மூடினாள் ஹேமா.

“வேணாம் போதும்… பழைய ஊறுகாய்க்கு மேக் அப்போட்டு  இருப்பாங்க என்று  நான் என்ன    கனவா கண்டேன்!… அது  டிங்கேரின்/tinkering வேலை செய்த  பழைய  மாடல்,  அம்பாசடோர்ன்னு/ambassador தெரியாம, அதை ஆடிக் கார்/audi car ரேஞ்சுக்கு,  எதிர்பார்த்தது  என் தப்பு  தான்.”    என்றாள்  ஹேமா கடுப்புடன்.

“ஹேய்!…  எவ்வளவு வருஷம் ஆனாலும்,    எத்தனை ஆடி, ஆவணின்னு கார் வந்தாலும் அம்பாசிடர்   அம்பாசிடர் தான்டீ. கன்  பாடியா… எதையும் தாங்கும் இதயம்… ஓல்ட்   ஐஸ்  கோல்ட்…. கேள்விப்பட்டதில்லை?…”  என்றாள்    சம்யு.      

“போதும்… வேணாம். ஏற்கனவே என் மானம், உசைன் போல்ட்  ரேஞ்சுக்கு,ஏழு கடல்,  ஏழு மலை    தாண்டி ஓடிட்டு இருக்கு… இதுல உன்னைக்  கும்மி  அடிக்கலைன்னு  யாரும்,  இப்போ  அழலை. போதும்..  வேணாம்..  ஐ   யம்  யுவர் பெஸ்ட் பிரெண்டுயா….” என்று வடிவேலு    பாணியில், சொன்னவளை கண்டு  சிரித்தாள்  சம்யு.

ஹேமா முறைக்க, “அங்கிள்!… அந்தத் தாத்தாவிற்கு…  சாரி, தாதாவிற்கு எப்படி,  இப்படி ஆச்சாம்  அங்கிள்?” என்றாள் சம்யு  ஹேமாவை கடுப்படிக்கவே.   

“எஸ்ஜே.  குழுவால்  தான், இப்படி ஆகி போச்சுன்னு  பேச்சு  இருக்கு …” என்று பேசிட்டே வந்தவர்,  சட்டென்று  அமைதியாக  விட, திரும்பிப் பார்த்த   பெண்கள்  இருவரும்,  பக்கென்று சிரித்து  விட்டார்கள்.

இடுப்பில் கை வைத்து, அங்கு எரிமலையாய் நின்றிருந்தார் கவிதா.

ஆட்டம் தொடரும்….