uyirodu vilaiyadu – 7

depositphotos_230785312-stock-video-couple-in-love-hugging-at-945f802f

uyirodu vilaiyadu – 7

(ரவுடி, தாதாக்களுக்கு  இரண்டு ஆண்டுகள் முதல் பத்து  ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை குற்றத்தின் அடிப்படை பொறுத்து, தண்டனை காலம் நீடிக்கப்படலாம்.

இவர்களுக்கு  எதிராகச் சாட்சிகளின் பாதுகாப்பிற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நீதிமன்றம் விரும்பினால், ஒரு சாட்சியின் பெயர், முகவரி  நீதிமன்ற  பதிவுகளில்  தவிர்க்கப்படலாம்.

அரசு  வக்கீலின்  வேண்டுகோளின்  பேரில், இந்த வழக்கு, கேமராவில் வைக்கப்படலாம். குற்றவாளியின்  சொத்து  குற்றவியல்  நடவடிக்கை மூலம் பெறப்பட்டதாக,  சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மாவட்ட  நீதிவான், சொத்தை முடக்க முடியும்.  

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தின்/organized crime கையாளும் பல மத்திய சட்டங்கள் உள்ளன. அவற்றில் சில:

a. சுங்க சட்டம்,

b.1962; போதை மருந்துகள் தடுப்பு சட்டம் 

c. சைக்கோட்ரோபிக்/psychotropic  பொருள் தடுப்பு  சட்டம், 1884; 

d. ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு)/anti smuggling  சட்டம், 1956; 

e. அந்நிய செலாவணி ஒழுங்குமுறை/foreign exchange regulation  சட்டம், 1973

f. பொது சூதாட்ட சட்டம்,/public gambling act  1867 

g. கலால் சட்டதிலும் மாநில அரசுச் சட்டம் இயற்றியுள்ளது.)

அத்தியாயம் -7

‘இனிய  உளவாக  இன்னாத  கூறல்

கனி இருப்பக்  காய் கவர்ந்தற்று.’

‘மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க, நச்சுக்காயை உண்பது போலாகும்.’ என்று அய்யன் வள்ளுவ பெருந்தகை சொல்லிய திருக்குறள், சிறு வயதில் பள்ளியிலே போதிக்கப்பட்டு இருந்தாலும், செல்வம், ரிஷி, எமி போன்றோர்கள் நாட்டில் பலர் உண்டு.

‘வார்த்தை என்னும் வாள்’  இவர்களைப் போன்றோர் சுழற்றும்போது, எதிரில் இருப்பவரின் உயிர் துடித்துத் தான் போகும்.

உலகில்  மிகக் கொடிய ஆயுதமாய் சொல்லப்படும், ‘மனிதனின் நாக்கு’ என்னும் விஷம் தோய்ந்த சாட்டையை சுழற்றி, இவர்கள் மூவரும் தாக்கி இருக்க, சம்யுக்தா ஏற்பட்ட காயத்தால் ஒரு நொடி திகைத்து, ஸ்தம்பித்து போனது என்னவோ உண்மை.        

ஹேமாவின் கைகள் ஆறுதலாய், சம்யுவின் கரங்களைப் பிடித்து, அழுத்திக் கொடுத்தது.

மொபைலை சம்யுவிடமிருந்து பிடுங்கி, அந்தச் செல்வத்தை, நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க முயன்ற ஹேமாவை தடுத்தாள் சம்யு.

ஈஸ்வர் போனில், ஈஸ்வர் தான் அழைப்பான் என்று, ‘முத்தம்…’  என்று  பெர்சனலாகச் சம்யுக்தா பேசி இருந்தாள். 

 யாருக்கு போன் சொந்தமோ, அவர் தான் பேசுவார் என்ற எண்ணம் எழுவது இயல்பு தான். அந்த நினைவோடு தான் சம்யு கொஞ்சியது.

தவிர  நேற்றிலிருந்து,  ஈஸ்வர் பிறந்த நாள் என்பதால், இரவு வெகுநேரம், மொபைலில் காதல் சுனாமியை  பொங்க  வைத்துத் தான் ஈஸ்வரும், சம்யுவும்  உறங்கச் சென்றதே!… என்றைக்கும் இல்லாமல் சில பல மாதமாகவே  ஈஸ்வர் சம்யுவிடம் நெருங்கி இருந்தான்.

காதல் சொன்ன போதும், காதலிக்க ஆரம்பித்தபிறகும் கூட, டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்து, அம்பியாக இருந்தவன், சில பல மாதங்களாய் எடுத்திருக்கும், ‘ரெமோ அவதாரம்’ சம்யுவை மூச்சடைக்க வைத்துக் கொண்டிருந்தது.

காலேஜ், செமினார், ப்ராஜெக்ட், ஸ்டுடென்ட்ஸ் என்று, ‘தர்மத்தின் தலைவன் ப்ரோபாஷர் பாலசுப்ரமணியம்  என்கிற பாலு சார்’ என்ற அந்தக் கேரக்டரின் ஜெராக்ஸ் காபி ஈஸ்வர் என்னும்போது,  ‘அந்நியன் ரெமோவாக’ மாறிச் சம்யுவிற்கு ஷாக் கொடுத்து, சம்யுவை சிவக்க வைப்பதையே வேலையாகக் கொண்டிருந்தான். 

அந்த அளவிற்கு ஈஸ்வரிடம், ‘காதல் மன்னனை’ எதிர்பார்த்து இராத சம்யுவிற்கே திகைப்பு தான்.

‘அட!… இது அம்பின்னு பார்த்தா…. இதுக்குள் பத்து ரெமோ, இருபது கமல்,  ஒளிஞ்சி இருப்பாங்க போலிருக்கே!…’  என்று சம்யுவே சிவந்து  போகும் அளவிற்கு இருந்தது ஈஸ்வரின் நெருக்கம்.

சம்யு கோயிலை அடையும் வரையும் கூட, வந்த அனைத்து அழைப்புகளும், அதில் ஈஸ்வர் பேசிய வார்த்தைகளும், சம்யுவை சிவக்க வைத்து, நெளிய வைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மை.

மீண்டும் அழைப்பு வர, ஈஸ்வர் தான் அழைக்கிறான் என்ற நினைப்பில், சம்யுவும் தனக்கு தெரிந்த, ‘ரெமி’ மாடுலேஷனுக்கு போக, இந்த முறை அங்கே பேசியது ஈஸ்வர் இல்லை. அவனின் நண்பன் செல்வம்.

ஆனால்,  ‘ஈஸ்வர் போன் என்றால் அதில் இந்த, ‘மூன்று பிசாசுகளின் தலையீடு’  இருக்கும் என்று பலமுறை பல்ப் வாங்கி கூட, தனக்கு புத்தியே வருதில்லை’ என்று அந்த நொடி தன்னை தானே நொந்து கொள்வதை தவிர, சம்யுக்தவிற்கு வேறு வழியில்லை.

அங்கங்கே காதலுக்கு நண்பர்கள் உதவுவார்கள் என்று தான் கேள்விபட்டு இருக்கிறாள். சம்யுக்தாவின் காதலை கூட, ஹேமா சொல்லித் தான் ஈஸ்வர் அறிந்தான். சம்யு, ஈஸ்வர்  காதலுக்கு அந்த நொடிவரை உறுதுணையாக நிற்பது ஹேமா தான். 

நட்புக்காக, நண்பனின் காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும் தோழமைகள் தான் இங்கே அதிகம்.

ஆனால், இந்த மூன்று நவகிரகம் மட்டும் விதிவிலக்காய், ஈஸ்வரையும், சம்யுவையும் பிரிப்பதையே முழு நேர வேலையாகச் செய்து கொண்டு இருப்பவர்கள்.

செல்வமும், ரிஷியும், ‘சம்யுக்தா ஈஸ்வருக்கு இணை இல்லை. சம்யுவின் பணமும், ஈஸ்வரின் குணமும் செட்  ஆகாது…’ என்ற நிலையில் நின்றார்கள் என்றால், எமி, ஈஸ்வரை, ‘அவனே அறியாமல் ஒருதலையாகக் காதலித்து கொண்டு இருக்கிறாளோ!…’  என்ற எண்ணம் சம்யுக்தாவிற்கு எழாமல் இல்லை.    

பெவிகுயிக்  இல்லாமலே,  ஈஸ்வருடன் ஒட்டி அலைந்து  கொண்டிருப்பவள் எமி.     

‘என் ஈஸ்வர்… என் ஈஸ்வர் …’ என்று மட்டுமே எமியின் வாயிலிருந்து வருவதில், உரிமை உணர்வு மிக அதிகமாகவே இருக்கும்.

இழுத்து வைத்து, நாலு அப்பு அப்ப வேண்டும் என்று தோன்றினாலும், ஈஸ்வர் கண்களுக்கு நட்பாகத் தெரியும் எமியின் பேச்சும், செய்கையும், தன் கண்களுக்கு மட்டும் காதலாகத் தெரிகிறதா என்ற குழப்பம் சம்யுக்தாவிற்கு உண்டு.  

ஆயிரம்  பேர்  ஈஸ்வரை  காதலிக்கலாம். சூர்ப்பனகை,  ஸ்ரீராமனை  காதலித்ததை  போல், எமி ஈஸ்வரின் மேல் காதல் கொண்டிருக்கலாம்.

ஆனால்,  ‘ஒரு வில்,  ஒரு சொல், ஒரு இல்’  என்று இருக்கும்  ஸ்ரீராமனின் சீதை, தான் மட்டுமே என்பதில், ஈஸ்வரின் காதலில் சம்யுக்தா மிகத் தெளிவாக இருந்தாள்.

ஈஸ்வர்  காதல் தனக்கென்று கிடைத்த பிறகு, அவனிடம் சென்று, ‘எமி உன்னைக் காதலிக்கிறாளா?’ என்று கேட்பது, அபத்தமாகத் தோன்றியது.

‘என்னை நீ நம்பவில்லையா சம்யு?…’ என்று ஈஸ்வர் கேட்டு விட்டால், முகத்தை எங்கே வைத்துக் கொள்வது?

நம்பிக்கை இல்லாமல், சந்தேகம் என்ற பேய் பிடித்ததால் முறிந்த காதல்கள் எத்தனையோ! 

அப்படியொரு நிலையில் ஈஸ்வரையோ, தன் காதலையோ நிறுத்தச் சம்யுக்தா தயாராய் இல்லை.

எமியிடம் கேட்டுத் தெளிவுப்படுத்தலாம் என்றாலும், அந்த நட் போல்ட் கழன்றவள், தன்னை வெறுப்பேற்ற என்றே, ‘யெஸ்  ஐ லவ் ஈஸ்வர்… ஹி இஸ் மைன்…” என்று சொல்லிவிட்டு, ‘ஈஸ்வர் செல்லம்…’ என்று அழைத்துக் தன் கண் முன்னாலேயே கட்டிப்பிடிப்பாள். 

‘ஈஸ்வருக்கும் தனக்கும் கிடைக்கும் தனிமை என்பதே சிறிது நேரம் மட்டுமே!… இதில் இந்தக் குப்பை கூளத்தின் மேல் எல்லாம், கவனம் செலுத்தினால், வாழ்க்கை நரகமாய் தான் கழியும்.’ என்பது தான் சம்யுக்தாவின் எண்ணமாய் இருந்தது.                 

ஈஸ்வர், சம்யு  வேலை பளுவில் சந்திப்பதே அரிது. 

தவிர சினிமா, ட்ராமா, பார்க், பீச் என்று வெளியே சுற்ற ஈஸ்வர், சம்யு இருவருக்கும் விருப்பமும் இல்லை. 

‘ஈஸ்வர் பேராசிரியன், சம்யு மருத்துவர் என்னும்போது, ரெண்டு பேரின் வேலையுமே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று. 

அதுவும்  ஈஸ்வர், ‘ஒரு ஆசிரியனாகப் பல எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் தான், எந்த விதத்திலும் தவறான முன்னுதாரணமாய் இருந்து விடக் கூடாது.’ என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். 

இதனால்  கூட, விக்ரமிற்கும், சம்யுவை தொடரும் ஜெவியருக்கும், இவர்களின் காதல் தெரியாமல் போனது என்று கூடச் சொல்லலாம்.

அப்படியே சந்திப்பதாய் இருந்தாலும், ஹேமா, செல்வம், ரிஷி, எமி  இல்லாமல் இவர்கள் சந்திப்பு நிகழாது என்னும்போது, பார்ப்பவர்களுக்கு அது காதலர்கள் சந்திப்பதாகத் தோன்றாது. நண்பர்களின், ‘கெட் டு கெதர்’ போல்  தான் தோன்றும்.

ஹேமா சம்யுக்தாவின் சிறு வயது முதல் தோழி என்பதை விக்ரம் அறிவான். இவர்கள் நான்கு பேரும் ஒரு வருடமாய் சம்யுக்தாவிற்கு பழக்கம் என்னும் வரை, இவர்கள் பின்புலத்தை செக் செய்தது வரை விக்ரம் எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்திருந்தான்.

ஆனால்,  ஈஸ்வர், சம்யு உறவு, நட்பு மட்டும் அல்ல, அது காதலாக மலர்ந்திருக்கிறது என்பது சம்யுவை பின் தொடரும் யாருக்கும் தெரியாமல் இருக்கும் அளவிற்கு இருந்தது இவர்கள் பழக்கம்.

‘நண்பன்’ என்ற முறையில் நால்வரும் சம்யு வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று அறிந்திருந்த விக்ரம், ஈஸ்வர், சம்யுவின் நெருக்கமே வீட்டிற்குள் தான் நடக்கிறது என்பதை அறியாமல் போனான்.

ஈஸ்வர், சம்யுவுக்கு தனிமை கொடுத்து மற்ற நால்வரும் விலகி இருந்து விடுவார்கள் என்பதோ, இந்தச் சந்திப்பும் அடிக்கடி நிகழாது என்பதால் யாருக்கும் இவர்கள் காதல் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒருவேளை வெளியே கண்காணிப்பு வைத்திருந்த விக்ரம், வீட்டிற்குள்ளும் சர்வேயிலன்ஸ் வைத்திருந்தால், சம்யுவின் போன் நம்பருக்கு வரும் அழைப்புகளை டாப்/tap செய்திருந்தால், மணிக்கணக்கில், அதுவும் இரவு வேளைகளில், 

‘சங்கீத  ஸ்வரங்கள்  ஏழே கணக்கா

இன்னும் இருக்கா!… என்னவோ மயக்கம்!

என் வீட்டில் இரவு… அங்கே இரவா!

இல்லே பகலா!… எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,

நானும்தான் நெனச்சேன்

ஞாபகம் வரல…

யோசிச்சா தெரியும்,

யோசன வரல…

தூங்கினா விளங்கும்,

தூக்கம் தான்  வரல…

பாடுறேன்  மெதுவா உறங்கு.

எந்தெந்த  இடங்கள், தொட்டால் ஸ்வரங்கள்?

துள்ளும் சுகங்கள்?… 

கொஞ்சம் நீ சொல்லித்தா…

சொர்க்கத்திலிருந்து  யாரோ  எழுதும்

காதல்  கடிதங்கள்  இன்று தான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க

நாயகன் ஒருவன்

நாயகி ஒருத்தி

தேன் மழை பொழிய,

பூவுடல் நனைய,

காமனின் சபையில்

காதலின் சுவையில்

பாடிடும்  கவிதை  சுகம் தான்…’  என்று  நெட்ஒர்க் கம்பெனியை, கோடீஸ்வரர்கள் ஆக்கிக் கொண்டிருக்கும் உண்மை விளங்கியிருக்கும்.

https://www.youtube.com/watch?v=bWihAJPAHg0

இது ஒருபுறம் என்றால், ஈஸ்வருக்கும், சம்யுவுக்கும் தனிமை கொடுத்து, பொது இடங்களில் ஹேமா விலகிச் சென்று விடுவாள். ஆனால், அந்த மூவரும் அசைய கூட மாட்டார்கள்.

இவர்களை வைத்துக் கொண்டு என்ன பர்சனலாகப் பேச முடியும்!. உரிமையான பார்வை கூடப் பார்க்க முடியாது.       

‘நந்தி மாதிரி, பூஜை வேலை கரடி மாதிரி’ கூடவே இருந்து, ஈஸ்வரின் கவனத்தை பேசித் தங்கள் பக்கமே வைத்துக் கொள்வதில் இந்த மூன்றும் எமகாதகர்கள்.

சம்யுவிற்கும், ஹேமாவிற்கும் தான் தலை சுற்றி போகும். கொஞ்சம் கூட ‘இங்கிதம், பிரைவசி’ என்பதை பற்றி எல்லாம் தெரிந்தும், அதைக் காதலர்களுக்குக் கொடுக்காத, இந்த மூவரையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே தெரியாத நிலை சம்யுவிற்கும், ஹேமாவிற்கும்.     

 சரி, நேரில் தான் இப்படி என்றால், போன் செய்து அழைத்தால், இந்த மூன்று வானர கூட்டத்தைத் தாண்டி, அழைப்பு ஈஸ்வரை சேராது .

ஈஸ்வர் அருகில் இருந்தால் மட்டுமே, நல்ல தோழர்கள் மாதிரி அழைப்பை அவனிடம் சேர்ப்பார்கள்.

 ஈஸ்வர் சற்று தொலைவில் இருந்தால் கூட, ‘ஈஸ்வர் இங்கில்லை… வேலையா இருக்கான்… பிறகு கால் செய்.’ என்று வைத்து விடுவார்கள்.

அவர்கள் சொல்லும் இந்த விவரம், தொண்ணூற்றி ஐந்து சதவீதம் முழு பொய்யாகத் தான் இருக்கும்.

‘உன் அழைப்பிற்காகக் காத்து இருந்தேன் சம்யு… ‘வேலையில் பிஸியா இருப்பே!…’ என்று எமி தான் சொன்னா. எனக்கும் புரியுதுடா உன் வேலை பளு. என்ன வேலையிருந்தாலும் கொஞ்சம் என் கூடப் பேசிடு சம்யு. உன் குரல் கேட்காமல் ஒரு மாதிரி இருக்குடா… 

வேலைக்குக் கொடுக்கும் அந்த முக்கியத்துவத்தை எனக்கும்,  கொஞ்சம் கொடுடா செல்லம். உன் செல்ல ஈஸ்வர் பாவம் இல்லையா?… குட்டி பாப்பா கிட்டே, சாக்லேட் கொடுத்துட்டு, பிடுங்கி கொள்வது மாதிரி இருக்கு, நீ இப்படி செய்யும் டீஸ்… 

என்னால முடியலைடா…  நீ கூடவே இருக்கணும் என்று மனசு ஏங்குது… அதுக்கு தான் இப்போ வழியில்லை என்றாலும், பேசவாது செய் பேபி கேர்ள்… ஐ மிஸ் யு சோ மச்…”  என்று குரலில் ஏக்கம், தவிப்பு, கலக்கம், தாபம் வழிய, ஹஸ்கி வாய்ஸில் ஈஸ்வர் சொல்லும்போது தான், அங்கே கதை மாறி இருப்பதே சம்யுவுக்கு தெரியும்.

‘எனப் ஐஸ் எனப்/enough is enough’ என்று சம்யு ஈஸ்வரிடம், இவர்கள் அழைப்பை ஏற்பது பிடிக்கவில்லை, கூட வருவது பிடிக்கவில்லை என்று அதை மட்டும் சொன்னாள்.

சம்யு கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, “வேணாம் சம்யுமா… நீயா, அவங்களா என்று அல்டிமேட்டம் கொடுக்காதேடா… நீ உயிர் என்றால், அவங்க என் உடல். ரெண்டும் இல்லையென்றால் இந்த ஈஸ்வர் இல்லை கண்ணம்மா… 

உனக்கே தெரியும்… நான் அனாதை என்று. தூரத்து மாமா, ஒருத்தர் காசி ராமேஸ்வரம் என்று அலைந்து கொண்டிருக்கிறார். அவரையும் இவங்க மூவரையும், இப்போ உன்னையும் தவிர வேறு யாரும் உறவென்று எனக்கில்லை” என்றான் ஈஸ்வர் குரலில் அத்தனை வேதனையுடன்.

“உங்க அம்மா, அப்பா?…” என்றாள் சம்யு.

சற்று நேரம் எதையும் பேசாமல் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான் ஈஸ்வர். வானத்தில் இல்லாமல் போன பெற்றோரைத் தேடி கொண்டு இருக்கிறானோ என்னவோ!..

அவனிடமிருந்து அலை அலையாய் துயரம் வெளிப்பட, சம்யு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“எனக்கும் அம்மா இல்லை ஈஸ்வர். என் பதினைந்தாவது வயதில் கார் விபத்தில், இறந்துட்டாங்க.

நம்மை விட்டு அவங்க போனாலும் இங்கே நம்ம இதயத்தில் இன்னும் வாழ்ந்து தான் இருக்காங்க. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நாம் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பிலும் அவர்கள் வாழ்ந்துட்டு தான் இருக்காங்க.

மறைவு என்பது உடலுக்கு மட்டும் தான் ஈஸ்வர். அவங்க நம் மேல் வைத்த பாசத்திற்கு, அன்பிற்கு இல்லை. இப்படி தவிக்காதேடா… பார்க்க மனசை என்னவோ செய்யுது. 

உன்னை விட்டு அவங்க எங்கேயும் போகலை. கண்ணை அழுந்த மூடு…. கண்ணை மூடுன்னு சொல்றேன் இல்லை… இப்போ ஆழமாய் மூச்சை எடுத்து விடு… இப்போ உங்க அம்மா அப்பா பற்றிய நினைவை நியாபகத்திற்கு கொண்டு வா… அவங்க கூட நீ சந்தோசமாய் இருந்த தருணங்கள், அவர்களுடன் கைக்கோர்த்து நீ சுற்றிய நாட்கள். அவர்கள்மேல் சாய்ந்து நீ உறங்கிய பொழுதுகள். உனக்கு உணவு ஊட்டி, தாலாட்டு பாடி, உன்னுடன் விளையாடி என்று எல்லாத்தையும் நினைத்துப் பாரு.

இந்தப் பொக்கிஷ தருணங்கள் இருக்கு ஈஸ்வர். எல்லோர் வீட்டிலும் மரணம் என்ற ஒன்று, வாசல் கதவைத் தட்டி தான் இருக்கும். நமக்கு ரொம்ப பிடித்தவரை நாம் இழந்து தான் இருப்போம். 

உடலை மட்டுமே மரணத்தால் நம்மிடம் பிரிக்க முடியும். அவர்களுடன் வாழ்ந்த அந்தப் பொன்னான நிமிடங்களை அல்ல. அவர்களின் அன்பை அல்ல.

கண்ணை மூடி நினைத்துப் பாரு. அவர்களுடன் இருந்த காலத்திற்கே போ. நினைவுகளில் இருப்பவருடன் வாழ்ந்து பாரு. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள் என்று தோன்றாது.” என்ற சம்யுவின் பேச்சைக் கேட்ட ஈஸ்வர் கண்ணை மூடி ஆழ்ந்து சுவாசித்து, தன் எண்ணங்களில் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோர்களை நினைத்துப் பார்த்தான்.

Family Happy Together Digital Art by Psycho Shadow

ஈஸ்வர் நினைவைக் கலைக்காமல் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, அமைதியாய் அவனுக்குத் துணையாய் அமர்ந்திருந்தாள் சம்யு.

வெகுவிரைவில், அவன் முகத்தில் புன்னகை பூவாய் மலர ஆரம்பித்தது. வாய் விட்டுச் சில சமயம் சிரித்தான். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிவது நிற்கவில்லை என்றாலும் இந்த முறை அதில் இருந்தது ஆனந்த கண்ணீர் மட்டுமே.

ஆம், இறந்து போன பெற்றோர்களுடன் நினைவில் வாழ்ந்துகொண்டிருந்தான் ஈஸ்வர்.

ஈஸ்வரை வாழ வைத்தாள் சம்யுக்தா.

அவன் உணரும் இனிமையை கலைக்காமல், ஈஸ்வர் முகத்தில் வந்து போகும் மாற்றங்களையே கவனித்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.

வெகுநேரம் கழித்து புன்னகையுடன், கண்களில் கண்ணீருடன் கண்களைத் திறந்தவன் ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டான். 

சம்யுவின் கையைத் தன் கையால் அழுத்திக் கொடுத்தவன், அடுத்த நொடி சம்யுவின் இதழில் சரண் அடைந்திருந்தான்.

ஈஸ்வர் உணர்ச்சி வசப்பட்டுத் தன் நிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்ட சம்யு, அவன் அணைப்பில் அடங்கினாள்.

பெற்றோரை, நமக்குரியவர்களை இழப்பது என்பது கொடுமையான விஷயம்.அதைவிட நரகம் வேறு எதுவும் இருக்காது தான்.இன்னும் ஒருமுறை நம்மை விட்டுச் சென்றவர்களுடன் இன்னும் சிறிது நேரம் இருக்க , எதை வேண்டும் என்றாலும் கொடுக்கத் தயாராய் இருப்பவர் பலர்.

‘அப்படி என்றோ மறைந்த பெற்றோர்கள் எங்கும் சென்று விட விடவில்லை.உன் எண்ணத்தில், உன் நினைவுகளில், உன் ஒவ்வொரு அணுவிலும் கலந்து தான் இருக்கிறார்கள்.’ என்று மீண்டும் வாழ வைத்த சம்யுவால் நெகிழ்ந்து இருந்தான் ஈஸ்வர்.    

அந்த நெகிழிச்சியை தன் இதழாலும், அணைப்பாலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். 

முகம் முழுக்க அவனின் அச்சாரத்தை பெற்று கொண்ட பெண்ணவள் மேனி சிவக்க, சம்யுவின் வெட்கம், அவனை மீண்டும், மீண்டும் என்று அவள் இதழை நாட சொன்னது.

Free picture: couple, silhouette, hugging, shadow, smiling, woman, love, people, profile, backlight

சம்யு என்னும் தேவதை பெண்ணவளின்  பொக்கிஷ பேழையில் உள்ள  பொக்கிஷத்தை எவ்வளவு தேடினாலும் ஈஸ்வருக்கு தேட தேட புது புது புதையலாய் கிடைத்து கொண்டே இருக்க, உன்மத்தம் பிடித்தவன் போலானான். 

அது தீராத தேடல்… 

தேட தேட இன்னும் இன்னும் என்று தலைக்கேறும் போதை.

‘உலக இன்பத்தை எல்லாம் பெண்ணில் வைத்து விட்டானோ அந்த இறைவன்!…’ என்று அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்கி இருக்க, கைகளும், உதடுகளும் அதற்கு வலு சேர்ப்பது போல் துணை புரிந்து கொண்டிருந்தது.

ஈஸ்வருக்கு மீள முடியாத போதையாய் மாறி, அவனை மயங்க வைத்து, அவன் மயக்கத்தில் தானும் மயங்கிக்கொண்டிருந்தாள் பெண்பாவை.

நீண்ட நேரம் தொடர்ந்த அந்த இதழ் ஆராய்ச்சி முடிந்து விலகியபோது, இருவருமே அந்த உலகத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“என்ன இது?..” என்றாள் சம்யு சிவந்த முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு.

ஒற்றை விரலால் அவள் முகத்தைத் தன் புறமாய் திருப்பிய ஈஸ்வர், அவளைத் தன் மார்பில் சாய்த்து கொண்டு, “யாராவது உதவி செய்தாங்கனா, அதுக்கு நன்றி சொல்றது தான் பேசிக் மனேர்ஸ் என்று சொல்லியிருக்காங்க ஸ்வீட்டி… அதான் தேங்க்ஸ் சொன்னேன். அது உனக்குத் தெரியாதா?…” என்று நன்றி சொல்வதில், ‘புது மாதிரி ட்ரெண்ட்’ உருவாக்கியவனின் குரலில் இருந்த ஆழம், அதில் இருந்த தாபம், அது தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாதவளாய், கீழ் உதட்டைத் தன் பற்களால் கடித்தவாறு தலை குனிய, 

“சரியா தேங்க்ஸ் சொல்லலை என்று இப்படியெல்லாம் வருத்தப்பட கூடாது மை டியர் கேக்… திரும்பவும் நன்றி கேட்டால் கொடுக்காமலா  போகப் போறேன்?… அதுக்குன்னு இப்படியெல்லாம் தலை குனிஞ்சு பீல் செய்யக் கூடாது…” என்றவனின் பேச்சில் திகைத்து நிமிர்ந்த சம்யுவின் உதடுகளில், மீண்டும் தொலைந்து போனான் ஈஸ்வர்.

10 Hours of Relaxing Sleep Music - Stress Relief, Sleeping Music, Relaxing Music , Meditation Music - YouTube

தானும் தொலைந்து, அவளையும் தொலைய வைத்து, இருவரும் ஒருவரை ஒருவர் தேடி கண்டுப்பிடிக்கும் காதல் கண்ணாமூச்சி.

நாடி நரம்புகள் ஒவ்வொன்றையும் வீணையின் சுவரங்களாய் மீட்டும் மோகனம்.

உச்சி முதல் பாதம்வரை லட்சம் கோடி மின்னல்களை பயணிக்க வைக்கும் மாயாஜாலம்.

பால்வெளிகளையும் இருந்த இடத்தில் இருந்தே கடந்து போக வைக்கும் காதலின் சக்தி.

இருவரும் மீண்டும் விலகியபோது, இந்த முறை இருவருக்குமே ஒரு நிறைவு.

ஈஸ்வரின் மார்பில் சம்யு தலை சாய்த்து, அவன் இதய துடிப்பை கேட்டவாறு புன்னகையுடன் அமர்ந்திருந்தவளின் உச்சியில் தன் கன்னத்தை வைத்து, இரு கைககளால் சம்யுவை அணைத்தவாறு அமர்ந்திருந்தான் ஈஸ்வர்.

வானத்திலிருந்து தன் பெற்றோர் இருவரும் புன்னகையுடன் தங்கள் இருவரை பார்த்து மனநிறைவோடு இருப்பது போன்று தோன்ற, ஈஸ்வரின் முகம் நிம்மதியை பிரதிபலித்தது.

A Real Relationship | Lonely Blue Boy

‘தாங்கள் உடன் இருக்க முடியாது என்பதால் தான் இப்படியொரு துணையை கொடுத்து இருக்கிறார்கள் போலிருக்கு தங்கள் பெற்றோர்…’ என்ற எண்ணம் எழ, இருவரிடம் இருந்தும் நிம்மதி பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிவந்தது.

சம்யுவை தன் அணைப்பில் வைத்துக் கொண்டு, தன் பெற்றோரைப் பற்றிப் பேச ஆரம்பித்தான் ஈஸ்வர்.இந்த முறை அந்த அளவிற்கு உயிர் போகும் வலியைக் கொடுக்கவில்லை அவர்களின் இழப்பு.

 “என் பத்து வயசு வரை கூடவே இருந்தாங்க. நான் அம்மா கோண்டு. எங்க அம்மா அப்படியே பார்க்கத் தேவதை மாதிரி அழகிலும், குணத்திலும் இருப்பாங்க. அதிர்ந்து கூடப் பேசமாட்டாங்க. உன்னை மாதிரியே தான்.  

என் அம்மா, அப்பா லவ் மேரேஜ். அவங்களை மாதிரி ஒரு காதல் ஜோடியை எங்குமே பார்க்க முடியாது. made for each other and they are mad for each other. ஜோடி பொருத்தம், மன பொருத்தம் எல்லாம் அமைத்தவர்கள். உயிரோடு இருந்திருந்தார்கள் என்றால் உலகிற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்து இருப்பார்கள்.     

அவங்களை பார்க்க அவ்வளவு பாந்தமாய் இருக்கும் சம்யு. காதல் என்பதையே அவங்க ரெண்டு பேரின் வாழ்வை பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன். நிச்சயம் உன்னைப் பிடித்து இருக்கும். உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கி இருப்பார்கள்.  

உண்மையான காதலில், அது கொடுக்கும் நிறைவில் அப்படியே   பூரித்து ஜொலிப்பதை பார்த்து இருக்கீயா சம்யு?… நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். என் அப்பா, அம்மா காதலில் ஒரு தெய்விகத்தை பார்த்து இருக்கிறேன். 

‘இது மாதிரி காதல், ஒரு இணை கிடைக்காதா என்று மற்றவர் பொறாமை படும் வண்ணம் இருந்தது அவர்களின் வாழ்வு.

யார் கண் பட்டதோ, ஒரு விபத்தில் என் அம்மா, தம்பி இறந்து விட, என் அப்பாவும் ரெண்டே நாளில் அவங்க கூடவே போய்ட்டார். மனைவியைப் பிரிய முடியாதவருக்கு, நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதே மறந்து தான் போனது. ஆனால், அந்த இதயம், தன் இணையை பிரிந்த வேதனை தாங்க முடியாமல், தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது சம்யு.

மரணமே ஒரு விதத்தில் அவருக்கு விடுதலை தான் என்று சொல்வேன். உயிரோடு இருந்திருந்தார் என்றால் நடை பிணமாய் தான் இருந்திருப்பார். அதற்கு இதுவே மேல் என்று தான் சொல்வேன்.   

ரெண்டு பக்கமும் சொந்தம் என்று ஒட்டி உறவாட யாரும் முன்வரவில்லை. வந்தவர்கள் எல்லாம் உண்மையான அன்புடனும் இல்லை.  இவங்க துக்கத்திற்கு வந்திருந்த மாமா ஒருவர் தான் என்னை ஹாஸ்டெலில் சேர்த்தது. அப்போதிலிருந்து ஹாஸ்டல் தான் எனக்கு.” என்ற ஈஸ்வர், தன் எண்ணத்தில் மூழ்கி விட, அவன் மீண்டும் தன் பெற்றோரை நினைத்து வருந்துவது பிடிக்காமல், அவன் மீட்கும் விதமாய்,

“அப்போ செல்வம், ரிஷி, எமியை எப்படி, எங்கே மீட் செய்தீங்க… எப்படி நட்பு வளர்ந்தது?” என்றாள் சம்யு.

அவள் முயற்சி பலன் கொடுக்க, பெருமூச்சுடன் தன்னை மீட்டு கொண்ட ஈஸ்வர்,     

“அப்போ நான் படிச்ச ஸ்கூல் அருகே குப்பை பொறுக்கிட்டு இருந்தவர் தான் செல்வம். அப்போ அவருக்குப் பதிமூன்று வயசு. எனக்கு  எட்டோ, பத்தோ.

ரோட்டில் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தும் எத்தனை பேரிடம் நாம் நின்று பேசி இருக்கிறோம் சொல்லு. அதுவும் சின்னப் பையனான எனக்குப் பசி, வறுமை என்பதெல்லாம் தெரியாது. அம்மா, அப்பா இல்லை என்றாலும், வசதிகளுக்குக் குறைவில்லை.

எத்தனையோ நாள் அவரைப் பார்க்காமல் கூடக் கடந்து இருக்கேன். ஆனால், தெரு நாய்கள் என்னைத் துரத்தியபோது, தன் உயிரைக் கூடப் பொருட்படுத்த்தாமல் என்னைக் காப்பாற்றியவர் அவர். 

நான்கு வாரம் என் உயிரைக் காப்பாற்றிட்டு ஹாஸ்பிடலில் இருந்தவர். அவர் குணம் அடைந்த பிறகு, அன்றிலிருந்து என்னுடன் தான் இருக்கிறார்.”  என்றான் ஈஸ்வர் அவன் குரலில், ‘உயிரைக் காப்பாற்றிய கடவுள் செல்வம், அவரைப் பழிக்காதே’ என்ற நன்றியுணர்ச்சி வெளிப்பட்டது.

“அவருக்கு யாரும் இல்லையா?…” என்றாள் சம்யுக்தா யோசனையுடன்.

‘பெற்றோர் இருந்தால், ரோட்டில் ஏன் குப்பை சேகரித்து கொண்டு இருக்க போகிறார்?… தனக்கு ஒரு வாய் சோறு கிடைக்கவில்லையென்றால் கூட,  தன் குழந்தைக்கு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் தானே அதிகம்.

ஒன்றிரெண்டு பெற்றோர் தப்பி இருக்கலாம். அப்படியொரு குடும்பமா செல்வத்தினுடையது ?… குழந்தையை ரோட்டில் குப்பை சேகரிக்க வைத்து அந்தக் காசில் வாழ்பவர்களா?…’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை சம்யுக்தாவால்.

Children of the Lesser God – Double Helical

“செல்வம் அவங்க அம்மாவுக்கு ரொம்ப சின்ன வயதில் பிறந்துட்டார் சம்யு. சரியான மருத்துவம் பார்க்காமல் உடல் நலம் கெட்டு போச்சு. பார்ப்பதற்கே சோமாலியா அகதி மாதிரி, எலும்பும் தோலுமாய் தான் இருப்பாங்க.

ஒரு பாட்டி இருந்தாங்களாம். அவங்களுக்கும் இறந்து விட, செல்வம் தான் நோயாளியான அம்மாவைப் பார்த்துக்க, வேலை செய்ய வந்திருக்கார். அவரை நான் சந்தித்த மூன்று வருடம் பிறகு, அவர் அம்மாவும் இறந்துட்டாங்க. 

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!

கொடிது கொடிது 

வறுமை கொடிது

அதனினும் கொடிது

 இளமையில் வறுமை….’ என்று அன்றே ஒவ்வை சொல்லிவிட்டார். நாமும் ஒரு வறுமையா என்று கேட்டுவிட்டு, ‘அய்யோ பாவம்’ என்று சென்று விடுவோம்.

மக்கள் நினைத்தால், செல்வம் போன்ற குழந்தைகள் தெருவில், செங்கல் சூளைகளில், பட்டாசு கம்பெனிகளில், கிளாஸ் கம்பெனிகளில், நிலக்கரி சுரங்கம், கட்டிட வேலை என்று அவதிபட வேண்டி இருக்காது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை அருகில் உள்ள குடிசை, அனாதை இல்லங்கள் சென்றால் கூட ஓரளவிற்கு இதைத் தவிர்த்து விடலாம் தான். 

இந்த ஒரு வாய் சோறுக்காகத் தான் குற்றவாளிகளும் உருவாகிறார்கள். வறுமையால் குற்றவாளிகள் உருவாக ஒரு விதத்தில், நம் மெத்தனமே தான் காரணம் சம்யு. 

இன்று நாம், ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று கடந்து போகும் இந்த வறுமையானது நாளை நம்ம கழுத்துக்கே சுருக்காகவும் மாறும் தான்.

தேவை திறந்த மனங்கள் தான். மனங்கள் திறக்காதவரை வறுமையால் குற்றவாளியாகும் சிறார்களைத் தடுக்க முடியாது தான். இந்தச் செல்வத்திற்கு நான் இருந்தேன். அவரைத் தீய வழியில் செல்லாமல் திசை திருப்பி விட்டேன் தான். 

ஆனால், ஒவ்வொரு தெருவிலும் இதுபோல் எத்தனை செல்வங்கள் இருக்கிறார்களோ!… எத்தனை நிராகரிப்பு, எத்தனை பசி, வறுமை இவர்களைக் குற்றவாளிகளாக மாற்றிக் கொண்டு இருக்கிறதோ யாருக்கு தெரியும்!.” என்றான் ஈஸ்வர் பெருமூச்சுடன்.

“உண்மை தான் ஈஸ்வர். நம் கருணை, அன்பு ஒரு ஜீவனுக்கு வேண்டிய நேரத்தில் கிடைக்காதபோது, அந்த மனம் உடைந்து இறுகி தான் விடுகிறது. இறுகிய மனதில், நமக்கென்று வரும்போது கருணையை எதிர்பார்க்க முடியாது தான்.

சில குற்றவாளிகள் உருவாவதை ஒவ்வொரு குடும்பமும், சமுதாயமும் நினைத்தால் தடுக்க முடியும் தான். இன்று தடுக்காமல் விட்டு விட்டு நாளைக் குத்துதே, குடையுதே என்று புலம்பி என்ன பயன்?… இப்போ அவர் என்ன செஞ்சிட்டு இருக்கார்?…”என்றாள் சம்யு.

செல்வம் தன் கடந்த காலத்திலிருந்து மீண்டு விட்டாரா என்று தெரிய வேண்டி இருந்தது.

ஆனால் அந்தக் கடந்த காலம் மீள முடியாத ஒன்று என்று சம்யுவிற்கு தெரிய வாய்ப்பில்லை.    

““செல்வம் அண்ணாவை எங்க மாமா கிட்டே சொல்லி எங்க ஸ்கூலில் தான் சேர்த்தேன். என்னை விட்டு என்றுமே அவர் பிரிந்தது இல்லை. 

இப்போ, ‘கவசம்’ என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனம் கேள்விபட்டு இருக்கியா?…

இந்தியா முழுவதும் இதன் கிளை இருக்கு. பிரபலங்களுக்கு, அபார்ட்மெண்ட்களுக்கு, வி.ஐ.பி களுக்கு செக்யூரிட்டி அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்திட்டு இருக்கார். 

சம்யு அந்தச் செக்கியூரிட்டி நிறுவனம்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறாள். ஒரு விதத்தில் சம்யு ஈஸ்வரை சந்திக்க காரணமே அந்த நிறுவனம் உருவாக்கிய செயலி ஒன்றினால் தான்.

ஆட்களின் நிலைமைக்கு ஏற்ப இவர்களின் பாதுக்காப்பு அம்சம் இருக்கும்.

பெரிய நடிகர்கள், தொழிலதிபர்கள் பின் காவலாய் நிற்பவர்கள் அந்த நிறுவன பாதுகாவலர்கள்.   

Bollywood bodyguards reveal life beside the stars | The Express ...

“அப்போ எமி ?…” என்றாள் சம்யு.

ஆட்டம் தொடரும் …

Leave a Reply

error: Content is protected !!