VTV 07

ei0EG0R30214-2be61d10

தேடல் 07

உந்தன் அன்பை
எதிர்பார்த்து
ஏமாந்து போனேன்….
மிச்சம் இருப்பது
எந்தன் உயிர் மட்டுமே….!!!!

வேகமாக வண்டியை எடுத்து கிளம்பிய உதய் நேராக பீச்சிற்கு சென்றான்.

அந்த வெயிலிலும் அவனது கால்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அவன் கோபம் அதை விட பெரிதாக இருந்தது.

அந்த கதிரவனையே சுட்டு விடும் போல் இருந்தது.அந்த அளவிற்கு அவனது கோபம் இருக்க அவனது கோபத்தை கண்ட கதிரவனோ பயந்து போய் மேகங்களின் நடுவில் சென்று ஒளிந்து கொண்டது.

நெடு நேரம் கோபம் தீரும் வரை அந்த கடற்கரையிலே உழன்றவன், பிறகு மொபைலை எடுத்து ஒருவருக்கு கால் செய்து பேசிவிட்டு கிளம்பினான்.

நேராக ஒரு காஃபி ஷாப்பிற்கு சென்றவன் ,,யாருக்காகவோ காத்திட்டு இருக்க…

” சாரி தம்பி ..!! வர கொஞ்சம் லேட் ஆய்டுச்சி ” என்று மன்னிப்பு கேட்டவாரே அமர்ந்தார் ஒரு ஐம்பது வயது மிக்க பெண்.

” நான் சொன்ன வேலைய நீங்க செஞ்சிங்களா இல்லையா.? ஒரு ஃபோன் கூட பண்ணி சொல்ல மாட்டிங்களா.? நானே ஃபோன் பண்ணி கேக்க வேண்டியதா இருக்கு ” கோபக் குரலில் கேட்க…

” தம்பி.!! வேல முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே ஃபோன் பண்ணி வர சொல்லீட்டிங்க ” என்றார் தன்மையாக..

” இப்போ வேல முடிஞ்சதா இல்லையா.??” என்று தன் கோபத்தை கட்டுப்படுத்திய படியே கேட்க

அவர் சிறிது தயங்கியபடியே ” இன்னும் ரெண்டு இல்லன்னா மூன்னு நாள்ள வேலை முடிஞ்சிடும் ” என்றார்.

” என்னது இன்னும் மூன்னு நாளா.?” என்று கோபமாக கேட்க…

” ஆமாம் தம்பி ” என்றார் தயங்கிய படியே….

” உங்கள நம்பி ஏன் தான் இந்த வேலைய கொடுத்தேன்னோ ” என அவன் அவரிடம் எகிற ..

அந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகி வெளியே வந்த நந்தினி ஜீவாவை நோக்கி..

” அப்பு ஒரு நல்ல காஃபி ஷாப்பா பாத்து நிப்பாட்டு டா ”

” சரி போற வழில ஒரு காஃபி ஷாப் இருக்கு அங்க போலாம் ” என்றான் அமைதியாக

அதன்பின் சுஜி ஜீவா நந்தினி என மூவருமாக காஃபி ஷாப்பிற்கு சென்றனர்…

” தம்பி என்ன மன்னிச்சிடுங்க ” என்று வெளியே அவனிடம் கூற மனதினுள் அவனை வசை பாடிக்கொண்டே இருந்தார்.

” சரி முதல அங்க என்ன நடந்துச்சின்னு சொல்லுங்க நந்தினிய எப்படி வீட்ட விட்டு அனுப்ப போறீங்க ” என்றான் நேற்று நடந்த நிகழ்வை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

கங்காவும் அங்கே நடந்த எல்லாவற்றையும் கூற அதன்பின் அவள் மயங்கி விழுந்தது ஜீவா மருத்துவமனையில் சேர்த்தது என்று அவள் காதிற்கு வந்த அனைத்து விவரங்களையும் உதயிடம் கூறினார்.

இதனை கேட்ட உதய்க்கு மனது பதறினாலும் இப்போது எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதை உணர்ந்து தன்னை ஒருநிலை படுத்திக்கொண்டு ” அவள் ஹாஸ்பிடல் போனா என்ன இல்ல எங்கே போனா எனக்கென்ன அவள இன்னும் மூன்னு நாள்ள வீட்ட விட்டு அனுப்பனும் ” என்றான் அழுத்தமாக…

” சரிங்க தம்பி  கண்டிப்பா அவள நான் அந்த வீட்ட விட்டு அனுப்புறேன்.  அப்பறம் அந்த பணம் விஷயம் மட்டும் பார்த்து பண்ணுங்க தம்பி ” என்றார் தயக்கத்துடனே

” கண்டிப்பா நீங்க வேலைய முடிச்சிட்டு வாங்க நான் சொன்னது போலையே ஒரு லட்சம் தரேன் ” என்றான்..

அவனது கூற்றில் சந்தோஷம் அடைந்த கங்கா ” சரிங்க தம்பி நான் கிளம்புறேன் . என்னோட பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவான் ” என்றார்.

” சரி சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு சொல்லுங்க ” என்று அனுப்பி வைத்தான்..

இதையெல்லாத்தையும் எதர்ச்சியாக அங்கே வந்த நந்தினி கேட்டும் படி நேர்ந்தது….

அதை கேட்ட நந்தினி உடைந்தே போனாள். தன்னை ஏன் இவர்கள் இவ்வளவு வெறுக்கிறார்கள் என்று நினைத்து மனதிலே விம்மி அழுதாள்.

பின்னே அவர்களும் மூவரும் காஃபி குடித்துவிட்டு சென்றனர்.

வீட்டிற்கு வந்த ஜீவா தன் தந்தையிடம் சென்று ” அப்பா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் பா.

அத்துடன் நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்துருக்கேன். அதுக்கும் நீங்க சம்மதிக்கனும் ” என்று பொடி வைத்து பேச ஆரம்பித்தான்.

” சொல்லு ஜீவா ” என்றார் நந்தினியை மடியில் படுக்க வைத்து தட்டி கொடுத்த படியே…

” அப்பா எனக்கு காலேஜ் சேற சொல்லி மெயில் வந்துருக்கு . சோ நான் சீக்கிரமே அங்க போகனும் ” என்றான்.

” ரொம்ப சந்தோஷம் டா ஜீவா” என்று கூறிவிட்டு ” எப்போ வர சொல்லிருக்காங்க.?” என்று கேள்வியை கேட்க…

” இன்னும் மூணு நாள்ல கிளம்பனும் பா என்கூடவே நந்தினியையும் கூட்டிட்டு போக போறேன் பா ” என்றான் திட்டவட்டமாக.

அவன் கூறியதை கேட்டு அனைவரும் திகைத்து நிற்க….

” அவளுக்கு இங்க பாதுகாப்பு இல்ல. கோவைலயே நானும் அம்முவும் ஒரு வீடு எடுத்து இருந்துக்குறோம் .அது தான் இப்போதைக்கு அவளுக்கு நல்லது. அவள இங்க தனியா விட்டுட்டு அங்க என்னால  இருக்க முடியாது பா. எப்போ இவளுக்கு என்ன பிரச்சினை எந்த நேரத்துல வரும்னே தெரியல பா. என்னால அங்க பயந்துட்டே இருக்க முடியாது . இதுக்கு நீங்க சம்மதம் சொல்லி ஆகனும் ” என்றான் தன் கருத்தை முன்வைத்து .

” இது எப்படி சாத்தியம் ஆகும் ” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே நந்தினியின் குரல் அவரை தடுத்தது…

அதை கேட்டு ஜீவா மற்றும் அல்ல சிவசங்கரனுமே அதிர்ச்சியுற்றார்.

” என்னால அப்பு கூட போய் இருக்க முடியாது.” என்று சத்தமாக கூறியவள் ,அத்துடன் ” நான் ஊட்டிக்கு போக போறேன் .எங்க ஹாஸ்பிடல் சேர்மேனோட ரிலேட்டிவ்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதுனால அவுங்கள பாத்துக்க நான் போக போறேன் ” என்றாள் போக போறேன் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து….

இதனை கேட்ட சிவசங்கரனிற்கு ஒரு நொடி பயம் வந்து தொற்றிக் கொண்டது.

ஆனால் ஜீவாவின் மனதில் ‘ இப்ப தான் அம்மு நீ நான் எடுத்த முடிவுக்கு வந்துருக்க. உன்னோட பாதுக்காப்புக்காக தான் இதை நான் செய்றேன் ‘ என்று மனதில் நினைத்துக்கொண்டு வெளியில் அதிர்ச்சி அடைந்தது போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

” ஏன் அம்மு என்கூட தான இருக்க மாட்டியா..???” என்று தவிப்புடன் கேட்க

” என்னால உன்கூட இருக்க முடியாது அப்பு. நாம இப்போ அங்க போய் ஒன்னா இருந்தா அப்பறம் அத்தை சொல்றது தான் உண்மை என்கிற மாதிரி ஆயிடும். அதுக்கு நான் வழி கொடுக்க விரும்பலை ” என்றாள் மனதில் காஃபி ஷாப்பில் அவர்கள் பேசியது நினைவு வந்தது…

” வேண்டாம் நீ அங்க போக கூடாது நந்தினி ” என்றார் சிவசங்கரன்‌ அழுத்தமான குரலில்.

” ஆமா அக்கா நீ எங்கள விட்டு எங்கேயும் போக கூடாது ” என்று கூறினாள் சுஜி…

” இல்ல மாமா!! நான் போய் தான் ஆகனும் .அது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது. அப்போ தான் அத்த இந்த வீட்டுக்கு வர முடியும் ” என்றாள் கனிவுடன்.

” அத்த இங்க வரதுக்கும் நீ போறதுக்கும் என்ன சம்பந்தம்.?” என்று புரியாமல் கவி கேட்க

” நீ சின்ன பொண்ணு கவி. இது பெரியவுங்க பேசிட்டு இருக்கிறப்ப நீ பேசாத ” என்று அவளை அதட்டினாள்.

” நீ எங்கேயும் போக கூடாது நந்தினி ” என்று அழுத்தம் திருத்தமாக கூற

” நான் போய் தான் தீருவேன் மாமா. இத யாராலும் மாத்த முடியாது. என்னோட முடிவுல எந்த ஒரு மாற்றமும் இல்லை ” என்று கராராக கூற

இதை கேட்ட அனைவரும் நந்தினியா இது என்று ஆச்சரியமாக நின்றிருந்தனர்..

மாமாவின் பக்கத்தில் சென்ற நந்தினி எப்படியோ கடினப்பட்டு அவரை சமாதானம் செய்து சம்மத்தை பெற்றாள்…

ஆனால் சிவசங்கரனின் மனதிலோ ” எப்படியாவது நீ தான் அவளை காப்பாத்த வேண்டும் சாமி. அவளோட உயிருக்கு ஆபத்து இருக்கு. நீங்க தான் இனி அவளுக்கு துணையா இருக்கனும் சாமி ” என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.

அந்த வீடே அமைதியாக இருந்தது யாரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை….

இரவு உணவை சமைத்து வைத்து விட்டு ..,, அனைவரையும் சாப்பிட அழைத்து வந்தாள் நந்தினி…

பின்பு அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு படுக்க சென்றனர்…

நந்தினி உறங்கிக் கொண்டு இருந்த நேரம்.,அவளை காண்பதற்காக ஒரு கருப்பு உருவம் அவளது அறையினுள் நுழைந்தது…

அந்த இருட்டிலும் அந்த உருவத்திற்கு நந்தினி பேர் அழகியாய் தெரிந்தாள்….

அவளது கண்ணீர் தடங்களை அந்த கருப்பு உருவத்திற்கு கோபமாக வந்து தன்னையே நொந்து கொண்டது…

” உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் நிதி மா. இதுவே நீ கடைசியா அழுகிறாத இருக்கட்டும்… உன் வாழ்வில் இனி சந்தோஷம் மட்டுமே நிரம்பி இருக்கும் ” என்று கூற அவளுக்கு அந்த உறக்கத்தில் என்ன புரிந்தததோ தெரியவில்லை ,, ஆனால் நந்தினி உறக்கத்திலும் சரி என்றாள்.

இதை கண்ட அந்த உருவத்தின் இதழில் சிரிப்பு வர அவளும் சிரித்தாள்….

அந்த உருவத்தின் கண்களுக்கு அவளை காண குழந்தை போலவே இருந்தது…

அதன்பின் அவளது நெற்றியில்  முதல் இதழ் முத்தத்தை பதித்து விட்டு சென்றது வந்த சுவடே தெரியாமல்…

அதன் பின்பு வந்த நாட்களில் அதிகமாக யாரும் அந்த வீட்டில் பேசிக்கொள்ள வில்லை.

சுஜியும் கவியும் தன் அக்காவை பிரிய போகும் துக்கத்தில் இருந்தனர்..

“அப்பு கொஞ்சம் என்கூட ஹாஸ்பிடல் வரைக்கும் வரியா.? “என்க…

“என்ன அம்மு நீ வான்னு சொன்னா நான் வர போறேன்.அதுக்கு எதுக்கு இப்படி கேக்குற..???” என்று கோபித்துக் கொள்ள…

“மனிச்சு அப்பு ! வா ஹாஸ்பிடல் போகலாம் ” என்று அவனை அழைத்துச் சென்றாள் .

பின்பு இருவரும் சேர்ந்து ஹாஸ்பிடல் சென்றனர்…

ஜீவா ஹாஸ்பிடல் ரிசப்ஷன்னிலே அமர்ந்து கொண்டு அவளை மட்டும் அனுப்பி வைத்து விட்டு…,, ஒருவருக்கு அழைப்பு ” தான் வந்துவிட்டதாக ” கூறிய பிறகு எதிர் முனையில் என்ன கூறினாங்களோ உடனே ஜீவா ” நான் வரேன் ” என்று கூறி அழைப்பை துண்டித்து  அந்த இடத்தை விட்டு சென்றான்…

வெங்கட் எவ்வளவு முயன்றும் கார்த்திக்கிடம் நந்தினிக்கு எதிரா என்ன ஆதாரம் இருக்கு என்று தெரிந்து கொள்ள இயல வில்லை.

வெங்கட்க்கு  ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்தது ..,, காரித்திக் யாருக்கும் தெரியாமல் யாரிடமுமோ அதிக நேரம் பேசுவதை கண்டு ,, வெங்கட் அவனிடம் சென்று கேட்டால்..,, ஏதேதோ கூறி மழுப்பி விட்டு சென்று விடுவான்….

நந்தினி நேராக சென்றது டீனின் அறைக்கு தான் …

அவரிடம் சென்று ” ஹலோ சார்..!!! நான் நீங்க சொன்ன ஆஃபரை அக்சப்ட் பண்ணிக்கிறேன் சார் ” என்க

” குட் டிஷிஷன் மிஸ் நந்தினி ” என்று கை குலுக்க அவளும் ” தேங்க் யூ சார்” என்று கூறி கை குலுக்கி விடை பெற்றாள்.

அதன் பின் அவள் நேரே சென்றது கீர்த்தியை காணவே….

அங்கே சென்று பார்த்தால்…..

 
  1.