VVO10

VVO10

வெல்லும் வரை ஓயாதே!

 

வெல்! ஓயாதே – 10

 

“ராஜேசும் இனி இங்கயே இருந்து காலேசுக்குப் போகட்டும்”, என காமாட்சி கூற

 

தாயின் புதுக் கோணத்தில் உதித்த யோசனையை கேட்ட  நந்தாவிற்கு பகீரென்றிருந்தது. 

 

கூட்டுக் குடும்பமாக வசிக்கும் நிலையில் தாய் கூறியதொன்றும் தப்பில்லை.

 

ஆனால், புதிதாய் திருமணமான தங்கள் இருவருக்குமிடையே பருவ வயதில் இருக்கும் தம்பியை வைத்துப் பராமரிப்பது நூலில் கயிறு கட்டி, அதில் நீரில் நனைத்த சணல் சாக்கை காயப்போடுவது போன்றது என எண்ணினான் நந்தா.

 

“ம்மா.. புரிஞ்சுதான் பேசுறியா?”, என்றவன், “பெரிய வீடா இருந்தா பரவாயில்லை.  இந்த வீட்டுக்குள்ள, எங்ககூட அவனை எப்டிம்மா?”, எனக் கேட்க

 

“இந்த வீட்டுக்கென்ன! ரூமிருக்கு.  ஹாலுருக்கு”, என்றவர், “திங்கக்கிழமை அங்க இருந்து வரட்டும்.  அப்டியே இங்ஙனயே தங்கியிருந்து காலேசுக்கு போகட்டும்! அலைச்சலும் மிச்சம், பஸ்ஸூக்கு காசும் மிச்சம்!  வாரக் கடைசியிலனா அங்க வீட்டுக்கு வந்துக்கரட்டும்!”, என முடிவாகக் கூற

 

நந்தாவிற்கு கோபம் வந்துவிட்டது.  இந்த அம்மாவிற்கு புரிந்துதான் பேசுகிறாரா? இல்லை புரியாமல் பேசுகிறாரா? என்கிற எண்ணம் ஒருபுறம் எழ, அதிதீ தாயின் முடிவிற்கு ஒன்றும் சொல்ல மாட்டாள் என்றபோதும், ஏனோ தாயின் யோசனை ஒத்து வருமா என்கிற தயக்கம்.

 

தங்கை கீதா திருமணம் முடிந்து, தம்பதி சகிதமாக வீட்டிற்கு வந்தபோது, கல்லூரிக்குச் செல்லும் வயதில் இருந்த நாத்தனார் முறைமைக்காக உடன் வந்ததற்கே அந்தக் குதி குதித்திருந்தவர்.  இப்போது தங்களின் விசயத்தில் இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்.?

 

காமாட்சிக்கு, மகளின் வாழ்வு என வரும்போது ஒரு நியாயத்தையும், மகனின் வாழ்வு என வரும்போது வேறொன்றையும் கடைபிடிக்க எண்ணுவதையும் அறிந்தே மறுத்திருந்தான் நந்தா.

 

“ஏம்மா நீ வேற… நேரங்காலம் புரியாம எதையாது வந்து சொல்லிட்டுருக்க!”, என்று கத்தியிருந்தான்.

 

நந்தாவின் கத்தலில், பதறி அருகே வந்த அதிதீ என்னவென்று கேட்க, நந்தா பெண்ணிடம் எதையும் கூறாமல், தாயிடம் புரிய வைக்கும் முயற்சியில் இறங்கியதை அமைதியாகவே உள்வாங்கியவாறு அருகே நின்றிருந்தாள் அதிதீ.

 

அதிதீக்கு தன்னால் நந்தாவின் குடும்பத்தில் எந்த இயல்பும் கெட்டதாகவோ, தொலைந்ததாகவோ ஒரு பேச்சு வரவேண்டாம் என எண்ணினாள்.

 

நந்தாவின் பேச்சில் காமாட்சியின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டவள்,  நந்தாவிடம் மெதுவாக, “சரினு சொல்லு, பாத்துக்கலாம்!”, என முனுமுனுத்திருந்தாள்.

 

அதிதீயைக் கொண்டே ஆரம்பத்தில் தயங்கினான் நந்தா. தம்பியும் தங்களோடு வந்திருந்தால் தர்மசங்கடமாக பெண் நினைத்தால்… என்றே மறுத்தான்.

 

தாயின் பாரபட்ச நிலை நிச்சயம் அதிதீக்கு தெரியாது என்பதால் அவ்வாறு சொல்கிறாள்.  தெரிந்தால் என்ன சொல்வாளோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை நந்தாவிற்கு.

 

ஆனாலும் அதிதீயே சரியென்றபின் தனக்கொன்றும் பிரச்சனையில்லை என நினைத்தவன், “சரினு சொல்லிட்டா மகாராணி!”, என மனைவியைக் காட்டி சிரித்தவாறே தாயிடம் கூறியவன், “நீ இனி உன்னோட விரும்பம்போல பண்ணு!”, என்றபடியே இனி காமாட்சியின் முடிவில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை தெரிவித்திருந்தான் நந்தா.

 

கூறியபடியே நகர எத்தனிக்க, “செலவுக்கு காசு வேணும்”, என தனது அடுத்த எதிர்பார்ப்பைக் கூறி மகனை நிறுத்தியிருந்தார் காமாட்சி.

 

சிரித்தபடியே செல்ல எத்தனித்தவனின் முகம் சட்டென்று இறுகியிருந்தது.

 

இதுபோன்ற பிரச்சனைகள் முன்பும் வந்திருந்தாலும், காமாட்சியும் அதை நினைவடுக்கில் இருந்து அழித்திருந்தார்.

 

நந்தா வழமைபோலவே தாயிடம் பேசினான்.

 

ஆனால் அதிதீக்கோ, தன்னால் அவர்களுக்கிடையே பிரச்சனையோ என்று பதறினாள்.

 

அனைத்தையும் அறிந்திருந்தும் தனது நிலையைப் பற்றி கவலை கொள்ளாமல், தனக்கு வேண்டிய எந்த உதவியும் செய்ய முன்வராமல் பணம் பணம் என்று கேட்கும் தாயைக் கண்டு வருத்தம் தோன்றினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க எண்ணினான் நந்தா.

 

“ஊருக்கு வரும்போது தரேம்மா!”, பொறுமையை இழுத்துப் பிடித்தபடியே கூறினான்.

 

“இல்லை!  இப்பவே குடுத்தா வாங்கிட்டுப் போயிருவேன்!”, என இழுத்தார் காமாட்சி.

 

“இப்ப ஏதும் எங்கைல இல்லம்மா!”, இதமாகவே எடுத்துக் கூறினான்.

 

ஆனால் காமாட்சிக்கு, நந்தா பார்த்திருந்த வீடும், அதில் இருந்த புதிய பொருள்களுமே கண்ணை உறுத்திட, பணத்தை வைத்துக்கொண்டே மகன் தன்னிடம் இல்லை என்கிறான் என மீண்டும் விடாப்பிடியாகக் கேட்டிருந்தார்.

 

“இந்த சாமான்சட்டுல்லாம் வாங்கற!  பெத்தவ கேட்டா காசில்லைங்கற!”, என மனதில் இருந்தது வார்த்தையாக வெளிவந்திருந்தது.

 

“ம்மா.. நானெங்க அதல்லாம் வாங்கினேன். அது என் ஃபிரண்ட்ஸ் வாங்கித் தந்தது.  புரிஞ்சிக்கோ!”, என

 

“ஆயிர ரூவாவுக்குகூட வழியில்லாமயா இருக்க!”, என்றதும் எங்கிருந்து நந்தாவிற்கு கோபம் வந்ததோ,

 

“உசிரு மட்டுந்தான் இப்ப இருக்கு!  வேணுனா அதை எடுத்துட்டுப் போம்மா!”, என்று கத்தியிருந்தான்.

 

நந்தாவின் சத்தம் வீட்டில் உதவிக்கு வந்திருந்த நண்பர்களையும் பதறச் செய்திட, “என்னடா…”, என அருகே ஓடிவர

 

அருகே நின்றபடியே காமாட்சியைக் கவனித்திருந்த அதிதீ, நந்தாவிடம் காமாட்சிக்காக பேசினாள்.

 

“வச்சிருக்கிறத குடுத்து விடு நந்தா”, அதிதீயும் கூற

 

“நீயும் ஏண்டி”, என்றதிலேயே ‘இருந்தா தர மாட்டேனா. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றேன்’ என்பது போலிருந்தது. 

 

நந்தாவை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்கிற வருத்தம் அந்தக் குரலில் தெரிந்தது.

 

ஆனாலும், அதிதீயை முறைத்தபடியே காமாட்சி மகனைப் பார்க்க, பெண்ணை விட்டு விலகி வந்தவன், ‘இந்தம்மாவுக்கு காசைத் தவிர வேறெதுவும் தெரியாதா?  இல்லை தெரியாத மாதிரி நடிக்குதா?’, என எண்ணியவாறு, தன்னிடம் இருந்த சில்லரையைக்கூட விடாமல் அனைத்தையும் எடுத்து, கையில் வந்த தொகையை தாயிடம் நீட்டி, “இவ்ளோதான் இருக்கு.  டென்சன் பண்ணாம முதல்ல கிளம்பும்மா!”, என்று செல்லும் வழியைக் காண்பித்திருந்தான் நந்தா.

 

“ரொம்ப மாறிட்டான்.  பய முன்ன மாதிரியில்ல!  நம்ம முன்ன நல்லவ வேசம்போட்டா…! நம்ம புள்ளையப் பத்தி தெரியாதுன்னு நெனைச்சிட்டாபோல!”, அதிதீயின் பேச்சைக் கேட்டு, ‘நீ எனக்காகப் பரிந்துபோய் என் மகனிடம் எதுவும் கேட்க வேண்டாம், என் மகன் வள்ளல் என்பதை அறிவேன்’ என்பதுபோல, மகன் அவ்வப்போது நாய்போல வள்ளென விழுவதை மறைத்து, மறந்துபோய் முனுமுனுத்தவாறே காமாட்சி கிளம்பியிருந்தார்.

 

அண்ணன் மகளைவிட, வந்த மருமகள் முகலட்சணத்திலும், அழகிலும் குறைந்தவளில்லை என்பது புரிந்தாலும், அதை ஒத்துக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் மனம் வராமல் இருந்தார் காமாட்சி.

 

காமாட்சியின் வார்த்தையைக் கேட்ட அதிதீ பெரியதாக முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது இயல்பாகவே இருந்தாள்.

 

நந்தாவிற்கும் தாயின் முனுமுனுப்பு கேட்டிருந்தது. தாயிக்காக வக்காலத்து வாங்கியவளை நோக்கி, ‘இப்ப தெரியுதா எங்கம்மா எப்டீனு?’ என்பதுபோல மனைவியைப் பார்த்தபடியே அங்கிருந்து நகன்றான்.

 

பெண் நந்தா கேட்டதையும் சட்டை செய்யவில்லை.

///////////

 

கடந்துபோன நாள்கள் பயங்கர கனவுபோலிருக்க, தாயின் பணம் சார்ந்த பேச்சு மேலும் நந்தாவை தளரச் செய்திருந்தது.

 

எத்தனை பணம் தந்தாலும், இன்னும் வேண்டும் எனக் கேட்கும் தனது தாயிக்கு, அப்படி என்னென்ன செலவுகள் இருக்கக்கூடும் என அறிந்துகொள்ளும் வேட்கை தோன்றியது.

 

நேரங்கிடைக்கும்போது ஊருக்குச் சென்று இதைப்பற்றி விலாவாரியாகத் தாயிடம் கேட்டே ஆகவேண்டும் என தீர்மானம் செய்து கொண்டான் நந்தா.

 

தாய் கிளம்பிச் சென்றும் ஓய்ந்திருந்த நந்தாவின் தோற்றத்தைக் கண்டு நண்பர்கள் தேற்ற, ஒருவாறு நடப்பிற்கு வந்தவன், வீட்டில் வேண்டிய அவசிய பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடித்தான்.

 

புதுக்கோட்டையில் நண்பனின் வீட்டருகே வீடு பார்த்திருந்தான்.

 

முன்பைவிட சற்று பெரிய வீடாகவே பார்த்திருந்தான். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு.  ஆனாலும் சமாளிப்போம் என துணிந்து முடிவெடுத்திருந்தான்.

 

அதுதான் காமாட்சியை யோசிக்கச் செய்ததோடு, மனதில் தோன்றியதை செயல்படுத்தவும் தூண்டியிருந்தது.

 

எதுவானாலும் சமாளிக்கலாம் என்கிற நிலையை, கடந்துபோன தினங்கள் நந்தாவிற்கு உண்டாக்கியிருந்தது.

 

தனது அடுத்த கட்ட நகர்விற்கு அதிதீ உடன் இருந்தால் மட்டுமே தன்னால் சிறப்பாக இயங்க, செயல்பட இயலும் என்பதை உணர்ந்திருந்தாலும், அவளில்லையெனில் தனக்கு இனி எதுவும் இல்லை என்பதை கடந்திருந்த நாட்கள் தெள்ளத் தெளிவாகப் பறைசாற்றியிருந்தது.

 

ஒருவாரம் ஒழுங்கான சாப்பாடோ, நிம்மதியான உறக்கமோ இன்றி அலைந்தவர்கள், வாரயிறுதி நாளில் வீட்டை ஒழுங்குபடுத்துவதிலும், மின்விசிறி மற்றும் இதர மின் இணைப்பை சரிசெய்வது போன்ற பணிகளையும் முடிக்கவே அன்றைய தினம் முழுமையும் சென்றிருந்தது.

 

அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்து, நண்பர்கள் சென்றதும் ஓய்வுக்காக ஒதுங்கியிருந்தனர்.

………..

 

பெண் அவளது தேர்விற்கான புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாலும், அவ்வப்போது நந்தாவையே பார்வை தழுவிச் சென்றது.

 

புதுவீட்டிற்கு வந்தது முதலே, முன்பைக் காட்டிலும் நந்தாவை ஒட்டிக் கொண்டே திரிந்தாள் அதிதீ.

 

முன்பானால், ஏதோ யோசனையோடு நந்தாவிடமிருந்து ஒதுங்கியே இருப்பவள், நாகேந்திரன் வீட்டிலிருந்து அழைத்து வந்தது முதல் நந்தாவை விட்டுப் பிரியாமல் தன்னோடு ஒட்டிக்கொண்டே தெரிந்ததையும் கவனித்தே இருந்தான் நந்தா.

 

அதிதீக்கு ஆரம்பத்தில் தந்தையின் பேச்சினைக் கேட்டு மனம் நந்தாவைத் தேடியிருந்தபோதும், ஒட்டுதல், காதல் என்கிற உணர்வு பெரியளவில் நந்தாமீது இல்லை.

 

தந்தை வேறொரு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்தவளுக்கு, நந்தாவை கணவனாக வரித்திருந்த மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.  அதனால் வீட்டை விட்டு வெளியே வந்திருந்தாள்.

 

ஆனாலும், படிப்பு, தேர்வு, அரசுப்பணி மட்டுமே பிரதானமாக இருந்தது அதிதீக்கு.

 

தற்போதைய நிகழ்வுக்குப்பின், பெண் மனதளவில் மிகவும் மாறியிருந்தாள்.

 

வீட்டிற்குள் அடைந்திருந்தபோது நந்தாவை பாதுகாப்பிற்காகத் தேடியவள், அவள் அறிந்திராத ஏதோ ஒரு உணர்வின் பிடியில் சிக்கி முதன் முதலாக தன் உள்ளுணர்வின் தேடலால் நந்தாவை நாடத் துவங்கியிருந்தாள் அதிதீ.

 

அது என்ன?  எதனால் என்பதே அதிதீக்குப் புரியவில்லை.

 

தனக்குத் தெரியாத நாகேந்திரனின் வீட்டில் தனிமையில் இருப்பதால் அவ்வாறு தோன்றுவதாகவே அப்போது எண்ணியிருந்தாள்.

 

நந்தாவைக் காணும்வரை, உணவோ, உறக்கமோ அணுக அனுமதிக்கவில்லை பெண்,

 

முழுநேரமும் நந்தா ஜபம் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

நந்தாவைக் கண்டபிறகே நிம்மதியாக உணர்ந்தாள்.

 

அதன்பின்னும், வேறு சிந்தனை இல்லை.

 

நந்தா என்ன செய்கிறான்.  எங்கு போகிறான்.  எப்படிச் செய்கிறான் என்பது மட்டுமே கருத்தில் நின்றது.

 

இதுவரை அந்தளவிற்கு நந்தாவைக் கவனித்ததில்லை.  போகிற போக்கில் நந்தாவைக் கவனித்திருந்தவளின் ஒவ்வொரு அணுவும் நந்தா நந்தா என முழங்கத் துவங்கி, அவனது ஒவ்வொரு அசைவையும் ஊனுடம்பின் ஒவ்வொரு செல்லிலும் பதியச் செய்தது.

 

தனக்காக அவன் எடுத்திருந்த முயற்சிகள் அனைத்தும் பெண்ணை அவன்பால் இன்னும் இழுத்திருந்தது.

 

தனிமையில் சிக்கியவனிடம் சிரித்தபடியே, “படத்துல வர ஹீரோ மாதிரி வந்து என்னைக் காப்பாத்துவனு பாத்தா, வேறமாதிரி வந்து காப்பாத்துற!”, என கிண்டல் செய்தவளிடம்

 

“நாகேந்திரன் வீட்டுக்கு போனப்ப அவன் பேசினதைக் கேட்டு அப்டியொரு கொலைவெறி.  கோபத்துல வாய விட்டேன். ஆனா என்கூட வந்திருந்த ஃபிரண்ட்ஸ் தனியாவே என்னை விடல! 

 

‘அந்தப் பொண்ணு இப்பத்தான் உன்னை நம்பி வீட்டை விட்டு வந்திருக்கு.  இந்நேரத்தில யோசிக்காம எதாவது செய்து வம்புல மாட்டிட்டா… அந்தப் பொண்ணோட நிலைமைய யோசிச்சுப்பாரு…’, அப்டிஇப்டினு கூட்டிட்டுப்போயி ரொம்ப பேசினாங்க.

 

பொலிட்டீசியன்ஸ், போலீஸ் இவங்கட்ட தேவையில்லாம போயி மாட்டினா நம்ம உண்டு இல்லைனு பண்ணிட்டுத்தான் விடுவாங்கனு சொல்லி, வேற யாராவது பெரிய ஆளுங்களை வச்சி உன்னை சேஃபா வெளிய கொண்டு வர யோசிப்போம்னு எடுத்துச் சொன்னாங்க.

 

அப்ப நிதானமா யோசிச்சப்பதான் ஏசிப்பி செந்தில்நாதன் சார் நினைவு வந்தது.

 

அவருகிட்ட போயி நின்னதும், ஒவ்வொன்னையும் யோசிச்சு, எப்பவும் எந்த சூழல்லயும் நமக்கு கஷ்டம் வராத அளவுக்கு ஸ்கெட்ச் போட்டு செஞ்சு கொடுத்தாரு.

 

நமக்கு நல்லது பண்ணணும்னு எங்க எக்ஸ் முதலாளிகிட்டல்லாம் எடுத்துச் சொல்லி கம்ப்ளைண்ட் கொடுக்க வச்சாரு.

 

அவசரத்துலயும், கோபத்துலயும் வார்த்தைய விட்டாலும் பிரச்சனை, வாழ்க்கைய தொலைச்சிட்டாலும் பிரச்சனை.

 

நல்ல மனுசங்களோட தயவால் இந்தளவுக்கு உன்னை மீட்க முடிஞ்சதே பெரிய விசயம்!”, என்றவன்

 

“நந்தா படத்தில நடிச்ச சூர்யா இல்லைடீ நானு!  நான் சாதாரண நந்தா!” என்ற நந்தாவின் பதிலில்

 

“சும்மாதான் கிண்டல் பண்ணேன்.  இந்தளவு நல்லது நடந்ததே பெருசுன்னு அப்பத்திக்கு எனக்குத் தோணுச்சு!”, என்று உணர்ந்து சொன்னவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

இதுவரை அதிதீயின் மீது பித்தாக இருந்தவன், பணியினூடே இருக்க, பெண் அவன் மீது பித்தான நிகழ்வு கடந்திருந்த வாரத்தில் அதிதீக்கும் நடந்திருந்தது.

 

நந்தாவின் சாதாரண பார்வையிலேயே மனமும், உள்ளமும் நிறைந்ததை உணர்ந்தாள்.

 

ஏதோ தேடுதல் அவனிடம் ஈர்ப்பாக மாறி, அவனையே அனுதினமும் தேடியது மனம்.

 

பார்க்காத நொடிகள், பைத்தியம்போல மனம் பிதற்ற நிதானத்தை தொலைக்கும் நொடிகளாகிப் போனது.

 

எதனால் தான் இப்படி மாறிப்போனேன் என்பதையே உணர முடியாதவளாக, நந்தா உடன் இல்லாதபோதும், அவனை நினைத்தே நேரத்தைக் கழித்தாள்.

 

கடந்துபோன நாள்களில் எதையும் நுணுகி கவனித்திராதவன் அன்று முழுமையும் அதிதீயையே கவனித்திருந்தான்.

 

பெண்ணது மாற்றங்கள் பளிச்செனத் தெரிந்திட, ‘இவ என்னோட அதிதீயா இல்லை ஆளு மாறிருச்சா’, என்றே தோன்றியது நந்தாவிற்கு.

 

புத்தகத்தோடு அமர்ந்திருந்தவள், “என்னடா” என நந்தாவின் பார்வையைக் கண்டு அதிதீ கேட்க

 

“ஏன் பாக்கக் கூடாதா?”

 

“நல்லாப் பாரு!  யாரு வேணான்னா!”, இப்படியெல்லாம் அதிதீ தன்னிடம் பேச ஆசைப்படுவான்.  ஆனால் இன்றுதான் அவ்வாறு பேசிக் கேட்கிறான்.

 

“அதான் பாத்திட்டே இருக்கேன்!”, என்றவன் பெண்ணது கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து, “நாளைக்கு எக்ஸாம் இருக்குல்ல!  நீ படி!”, என்றவாறே நகர எத்தனித்திட, வம்பாக வார்த்தை வளர்த்தாள் அதிதீ.

 

அதிதீயின் மாற்றங்கள் புரிந்தாலும், அவளது குறிக்கோள் கருதி, தொந்திரவு செய்ய வேண்டாம் என நினைத்து, அகன்றிருந்தான் நந்தா.

 

பெண்ணுக்குத்தான் வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்ததுபோல உணர்ந்தாள்.

 

ஆனாலும், தனக்காகப் பார்க்கிறான் நந்தா என்பதும் நினைவில் வர, புத்தகத்தில் கவனத்தை செலுத்த நினைத்து, தோற்றாள்.

//////////////

 

மறுநாள் பெண் தேர்வினை முடித்து வெளியே வந்ததும் அழைத்து வந்தான் வீட்டிற்கு.

 

“எப்டி எழுதியிருக்க?”

 

“லாஸ்ட் வீக் ஃபுல்லா புக்கையே தொடலை!  முன்ன படிச்சதை வச்சி எழுதிருக்கேன். பாப்போம்”, என்றிருந்தாள் அதிதீ

 

வீட்டிற்கு வந்தவன், இரவு முழுவதும் தேர்விற்காக உறங்காமல் படித்தவாறு இருந்தவளை, “சாப்பிட்டு ரெஸ்ட் எடு அதீ!”, என்க

 

உணவை உண்டு முடித்து வந்தவள், ஏஃபோர் பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டிருந்தவனை உரசிக் கொண்டு அமர்ந்தாள்.

 

பெண்ணது செயலில், “என்னடீ என்னைக்கும் இல்லாம வேற மார்க்கமா இருக்க!”. கண்ணடித்து கேட்க

 

“எனக்கொன்னும் தெரியலையே!”, எனும்போது பெண் முகம் முழுக்க வெட்கப் புன்னகை.

 

“ஏன்னு தெரிய வைக்கவா!”

 

“ஒன்னும் வேணாம் போடா!”, என்றபடியே வெட்கத்தால் சிவந்த முகத்தை நந்தா காணாமல் மறைத்துக் கொண்டவளைக் கண்டவனுக்கு, பெண்ணது செயலில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்திருந்தது.

 

கையில் இருந்தவற்றை அப்படியே வைத்துவிட்டு பெண்ணைத் தன்மீது இழுத்துப் போட்டுக் கொண்டு தரையில் சாய்ந்திட, பெண் மறுப்பேதும் இன்றி, அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

 

“என்னாச்சிடீ அதீ”

 

“…”

 

“இப்டி இறுகக் கண்ணை மூடிட்டா நான் என்னானு எடுத்துக்க!”

 

“…”

 

“ஏய்… உன்னைத்தாண்டீ!”

 

“…”

 

பேச்சில்லை. 

 

“தூங்கச் சொன்னதால தூங்கிட்டேன்!”, என்றவளை முந்திய நாளின் இரவில் விழித்திருந்ததை எண்ணி விடுவித்தவன், “சரி போயி ரெஸ்ட் எடு”, என அகல நினைக்க, நந்தாவை அணைத்துக் கொண்டிருந்த பெண்ணது கரங்கள் வேறு சேதி சொன்னது.

 

விடுவிக்க நினைத்தவன் பெண்ணது செயலில் தன்னோடு பெண்ணை இறுக அணைத்திட, “நீ உங்கம்மா மாதிரியில்லைடா”, என்றவளிடம்

 

“ஆமா இல்லை”, என்றவன், “எங்கப்பா மாதிரி நானு!”, என்றான்.

 

“ஹ்ம்”, என கதை கேட்பதுபோல கண்களை மூடி நந்தாவின் நெஞ்சோடு ஒன்றிக் கொண்டிருந்தவள், வீட்டில் இருந்தவர்களைப் பற்றிக் கேட்டாள்.

 

நந்தாவும் பெண்ணது கேள்விக்குப் பதில் கூறியபடியே, இதழால் சேவகம் செய்தபடி இருக்க, மறுக்காது ஏற்றுக்கொண்டே வெட்கத்திலும், அசதியிலும், கண்ணைத் திறவாமல் கேட்டபடியே இருந்தவள், நந்தாவின் அருகாமையில் உறங்கியிருந்தாள்.

 

மாலையில் எழுந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை இருவரும் வெளியே சென்று வாங்கி வந்தனர்.

 

பொழுதுபோக்கிற்கு எதுவுமில்லாமல், ஒருவரின் அணைப்பில் மற்றொருவர் அமர்ந்தபடியே, விட்டகதையைப் பேசினார்கள்.

 

இருவருடைய பூர்வீகம், சொந்தங்கள், குடும்பம் பற்றி முதன்முதலாக பரிமாறிக் கொண்டனர்.

 

அதிதீயைப் பற்றி நந்தா தெரிந்து கொண்டிருந்ததைவிட, நந்தாவைப் பற்றி பெண்ணுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

 

பேருக்கு இரவு உணவை முடித்துவிட்டு, பழையபடி கதை துவங்கியது.

 

மதியம் உறங்கியதால் இருவருக்குமே உறக்கம் வராமல் முரண்டு செய்தது.

 

பெண்ணது அருகாமை நந்தாவின் உணர்வுகளை தூண்டியது.

 

பெண்ணது திருமண அஜண்டாவை எண்ணி, விலக்க எண்ணினான் நந்தா.

 

ஆனாலும் பெண் முற்றிலும் நந்தாவிடம் சரணடைந்திருந்தாள்.

 

பெண்ணது அமைதி, இளக்கம், ஒத்துழைப்பு, உடல்மொழி அனைத்தும் அவனை அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தூண்டியது.

 

பெண் மறுப்பாளோ என்கிற தயக்கம் இருக்க, “அதீ… ரொம்ப கெட்ட பையன்டீ நான்.  இப்டிக் க்ளோசா இருந்தா என்னால சும்மா இருக்க முடியாது”, என்பதை மெல்லவே கூறினான்.

 

“எவ்வளவு கெட்டவன்”, எனக்கேட்டு அலும்பு செய்தவளின் எலும்பு நோகும் வண்ணம் அணைத்து அவனது ஏக்கத்தைக் காட்டினான்.

 

“முரட்டுப் பயலா இருக்க!”, என உணர்ச்சியின் பிடியில் முனகியவளின் இதழில் துவங்கியவன், முத்தத்தால் குளிக்கச் செய்தான்.

 

மறுக்காமல் இசைந்தவளைத் தன்னோடு கலக்கச் செய்திடும் ஆசை பிறந்தது.

 

பெண்ணது உடலெங்கும் வெட்கத்தால் சிவப்பேறி, கள்வெறி கொண்டதைப்போல மயக்கியது நந்தாவை.

 

“அதீஈஇ..”, என்றபடியே தனக்குள் பெண்ணைக் கொண்டு வந்திருந்தான்.

 

நெகிழ்ந்திருந்த பெண்ணது உடலின்மொழி அவளது இசைவைச் சொல்லி இசைந்திட, இதயத்தின் ஓசை ரிதமாக இருவருக்கும் இசைத்திட, புதிய உலகைக் காணும் ஆவலில் பயணத்தைத் துவங்கியிருந்தனர்.

 

ஆடை தளர்த்தும் வேளையில், கூச்சத்தால் மெய்சிலிர்க்க, உணர்ந்தவன் பெண்ணது உடலோடு இழைந்தான்.

 

பிறந்த தேகம், தீயாய்த் தகித்திட… உணர்வுகளின் போராட்டம் உள்ளங்களில் பொங்கி வழிந்தது.

 

தனது நிலையை உணர்ந்தவள் நாணத்தால், தன்னையே குறுக்கினாள்.

 

குறுக்கிக் கொண்டவளின் நாணம் போகும் வழியை குதூகலத்தோடு கடைபிடித்தான்.

 

உயிர்த்தீண்டலில் சிலிர்த்து விலகியவளை, இதமாக தன்னோடு அணைத்துக் கொண்டவன், தடுமாற்றத்தோடு பயணத்தைத் துவங்கினான்.

 

கரடுமுரடான கைகளில், மென்மையைத் தத்தெடுத்திருந்த தேகம் குழைந்திருந்தது.

 

முரட்டுத்தனம் இனிமையான இம்சையானது!

 

தடுமாற்றங்கள் தந்த மாற்றங்களில் பெண்ணும் ஒத்துழைத்தாள்.

 

புத்தகப்புழுவாக இருந்தவள், நந்தாவின் கைப்பாவையாக மாறியிருந்த தருணம்.

 

மார்போடு ஒட்டிக் கொண்டவளை, மாரனின் துணையோடு கலவிப் பாடம் கற்றுத் தந்தான்.

 

கல்வியைக் கற்ற ஆர்வத்தில் சற்றும் குறையாமல் கலவியில் ஆர்வத்தைக் காட்டியவளோடு கலந்து, களைத்தான்.

 

பூரண நிறைவோடு, காமனை வென்றிட்ட இருவரும், களைப்பால் ஒருவரையொருவர் போர்த்திக் கொண்டிருந்தனர்.

///////

 

ராஜேஷ் மாலையில்தான் நந்தாவின் வீட்டிற்கு வர இருப்பதாகத் தமையனுக்கு அழைத்துத் தெரிவித்திருந்தான்.

 

நந்தாவின் பணி இரவு எட்டு மணி வரை இருக்கும் என்பதால், வீட்டு முகவரியை தெரிவித்ததோடு, பணியில் மூழ்கிவிட்டான்.

 

இரவில் வீடு திரும்பியபோது, ஆளுக்கொரு திசையில் இருந்த இருவரையும் பார்த்ததும் நிலைமை புரிந்தது.

 

இருவருடனும் பேசியவாறு இரவு உணவை உண்டான். ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டிருந்தாலும், அவசியப் பேச்சுகள் மட்டுமே.

 

மூவரும் உண்டபின், ஹாலில் தம்பியுடன் படுத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு, பெண்ணை ஒற்றை அறையில் படுக்குமாறு கூறியிருந்தான் நந்தா.

 

ராஜேஷ் புது இடமானாலும் படுத்தவுடன் உறங்கியிருந்தான்.

 

நந்தாவிற்கும், அதிதீக்கும் முந்தைய நாளின் நினைவுகளின் ஏக்கத்தில் உறக்கம் வராமல் தவித்தனர்.

 

புரண்டு, புரண்டு படுத்து இருவரின் தவிப்பு நீள, இரவு சுருங்கத் துவங்கியிருந்தது.

 

உறங்காமல் நெடுநேரம் விழித்திருந்த இருவரும் விடியலில் கண்ணயர்ந்திருந்தனர்.

 

ராஜேஸ் எழுந்து, குளித்து கிளம்பிய அரவத்தில் எழுந்த நந்தா, அதிதீயை எழுப்ப, தாமதமாக எழுந்தவளுக்கு அவசரத்தில் என்ன செய்ய என்பது புரியாமல் விழிக்க,

 

“அண்ணே நேரமாச்சு.  கிளம்பறேன்”, என்று கிளம்பிய ராஜேஷிற்கு, காலை, மதிய உணவு எதையும் தராமல் அனுப்புவதை எண்ணி, “நந்தா, கையில பணம் இருந்தா வெளிய வாங்கிச் சாப்பிடச் சொல்லிக் குடுத்து விடுடா”, என்றாள் அதிதீ.

 

கையில் இருந்த நூறு ரூபாயை தம்பியிடம் கொடுத்து விட்டான்.

 

சரியாக ராஜேஷ் கல்லூரிக்கு வரவும், வாயிலில் காத்திருந்த தாயார் காமாட்சியைக் கண்டு, “இங்க எங்கம்மா வந்த?”, என

 

“இன்னிக்கு வாரச்சந்தைல… அப்டியே இங்கிட்டு உன்னையும் பாத்திட்டுப் போவோம்னு வந்தேன்”, என்றவர், “என்னடா சாப்பிட்ட”, என விசயத்தைக் கூறிவிட்டான்.

 

வாயில் கையை வைத்தபடியே மகன் சொன்னதைக் கேட்டவர், அதிதீயை நேரில் சந்திக்க கிளம்பியிருந்தார்.

 

காமாட்சி, அதிதீயின் சந்திப்பு எவ்வாறு அமைந்தது?

 

அடுத்த அத்தியாயத்தில்…

Leave a Reply

error: Content is protected !!