VVP-8A

அத்தியாயம்-8(1)

நம்பகமான நீலம்(1):

ஆதவனும் மங்கையும் கனமான மனநிலையோடு உண்டு முடித்தனர். கனத்த மௌனமே நிலவ

மேடம்… குட்டி பொண்ணுங்க பேரென்ன…?” ஆதவன் சகஜ நிலைக்கு மாற்ற முற்பட்டான். மிதுலாவின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.

“கிறிஸ்டிக்கா கிட்ட என் அப்பா அம்மா பத்தி நிறைய சொல்லிருக்கேன். அவங்கள அக்காக்கு ரொம்பப் பிடிக்கும். அதுனால அவங்க பேர் சாயலோட இருக்கட்டும்ன்னு தமிழ் செல்வி, ஜூலியானான்னு வெச்சாங்க” என்றாள் இன்முகத்துடன்.

இவர்கள் பேசுவது எதுவும் மங்கையின் காதில் விழவில்லை. “மேடம்… நீங்க அனுபவிச்ச கொடுமைனாலதான் உங்களுக்கு அந்த மாதிரி மன அழுத்தம் ஏற்பட்டுச்சா? நீங்க எப்படி அதிலிருந்து மீண்டு வந்தீங்க?” வருத்தத்துடன் கண்கள் கலங்கி கேட்டாள்.

அவளை ஆதரவாக தட்டிக்கொடுத்த மிதுலா “சொல்றேன். எனக்கு இந்த மாதிரி மன உளைச்சல்ன்னு தெருஞ்சப்ப, நான் சக்திகிட்ட கேட்டது நான் என்ன பைத்தியமான்னு தான்”

“இப்போ நினச்சாநான் ஏன் அப்படி பேசினேன்ன்னு தெரில. என்னோட மன அழுத்தத்தினாலயான்னும் தெரில” என்றவள் தன் வாழ்க்கையின் நம்பகமான, வாழ்வின் மேல் நம்பிக்கை ஏற்பட்ட நீல பக்கங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

———————

சக்தியிடம் தன் வாழ்வில் நடந்த கொடூரங்களை சொன்ன மிதுலா, அசதியில், மருந்தின் தாக்கத்தில் நன்றாகவே உறங்கினாள்.

காலையில் எப்பொழுதும் போல் சூரிய ஒளியின் தாக்கத்தில் கண்விழிக்க, வீட்டின் வாயில் கதவு பக்கத்தில் மொபைலை நோண்டிக்கொண்டு சக்தி உட்கார்ந்திருந்தான்.

இவள் எழுந்ததை பார்த்தவன், “குட் மோர்னிங் மிது” என புன்னகையுடன் சொன்னவன் கண்கள் சிவந்திருந்தது.

ஏனோ அந்த காலை உபசரிப்பு, அவளுக்கு இதமாக இருக்க, புன்னகை தானாக மலர்ந்தது. அதை அவனும் கண்டுகொண்டான்.

அவன் கண்களைப் பார்த்தவள், “ஏன் சக்தி நைட் தூங்கலையா? கண்ணு ரெட்டா இருக்கு” எழுந்துகொண்டே கேட்க, இல்லையே நல்லா தூங்கினேனே” என்றான் சாதாரணமாக.

ப்ச். என்ன பத்தி சொல்லி உன் தூக்கத்தை கெடுத்துட்டேன்” தெளிவாக இருந்த அவள் முகம் சற்று தொய்வதை பார்த்தவன் “அட, நீ வேற. நல்ல தூக்கம். ஒருவேளை அதுனால இருக்கும். சரி ஃபிரெஷ் ஆயிட்டு வா… காஃபி குடிக்கலாம்” என்றான் பக்கத்தில் இருந்த ஃபிளாஸ்க்கை காட்டி.

ஏனோ அனைத்தும் புதிதாக இருந்தது அவளுக்கு. புன்னகையுடன் அங்கிருந்து சென்றாள். ஒரு புறம் அதை முற்றிலும் ரசித்தாலும், ‘இது நிரந்தரமல்லஎன்ற எண்ணமும் வந்தவண்ணம் இருந்தது.

இந்த தற்காலிக உபசரிப்பு, உன்னை வெகுவாக பாதிக்கும். இது அனைத்தையும் தள்ளியே வைதனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

அவள் குளித்துமுடித்து வெளியே வர, அவளுக்கு காஃபியை ஊற்றி கொடுத்தான்.

அவள் அதை வாங்கிக்கொள்ள, “மிது. காலைல மைதிலி மேம் கூப்பிட்டிருந்தாங்க. நீ தைச்சதெல்லாம் கொண்டு வர சொன்னாங்க. நம்ம போய் குடுத்துட்டு, அப்படியே வெளிய சாப்பிடலாம்” அவளின் விருப்பத்தை கேட்காமல் அவன் சொல்லிக்கொண்டே போக,

பாதி காஃபியில் நிறுத்தியவள், “இது என் வேல. நான் பாத்துக்கறேன். நான் போயிட்டு வந்து சமைச்சு சாப்பிட்டுக்கறேன். உன்கூட நான் ஏன் வரணும்? அப்பறம்இந்த காஃபி இதெல்லாம் இனி எனக்கு வேணாம்” வெடுக்கென சொன்னவள், மீதியை குடிக்காமல் எழுந்தாள்.

‘நன்றாகத்தானே இருந்தாள், இப்போது என்ன?’ அவன் யோசிக்கும்போது, அந்த தைத்த துணிகள் இருந்த பையை எடுத்துக்கொண்டு “நான் கிளம்பனும்” என அவன் முன்னே வந்து நின்றாள்.

அவளைப் பார்த்துக்கொண்டே எழுந்தவன் வெளியே செல்ல, அவள் பூட்டிவிட்டு கீழே இறங்கும்முன் அவன் இறங்கியிருந்தான்.

அவளை நிறுத்தியவன் “உனக்கு உடம்பு சரியில்ல. வண்டில ஏறு. நான் கூட்டிட்டு போறேன்” என்றான் அவளின் பையை பற்றிக்கொண்டு.

சுற்றியும் பார்வையை சுழலவிட்டு, “எல்லார் முன்னாடியும் இந்த சீன் தேவயா? நான் நடந்து போறேன்... பைக்லலாம் வர முடியாது” என்றாள் பையை அவன் கையில் இருந்து இழுத்தவாறே.

ஆனால் ஒன்று அந்த பைக்கு மட்டும் பேசமுடித்தால், கேவலமாக திட்டியிருக்கும். இரண்டு நாட்களாக அதை பந்தாடுகின்றனர்.

உனக்கு ரெண்டு ஆப்ஷன்... ஒன்னு பைக்ல நீயே பேக் வெச்சுட்டு உட்கார்ந்துக்கோ. இல்ல நானும் உன்கூட நடந்துவரேன். பேக் என்கிட்டே குடுத்துறணும்” எப்படி உத்தேசம்என்பது போன்ற தோரணையில் கேட்டான்.

பற்களை கடித்தவள், முணுமுணுத்துக்கொண்டே பையிலிருந்து அவள் கையை எடுத்துவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். அவளை பார்க்க பார்க்க சிரிப்பு வந்தது சக்திக்கு.

அவளுடன் நடையில் சேர்ந்துகொண்டவன், “ஹோட்டல் போனா நல்லா சாப்பிடலாம். இல்லாட்டி நான் சமைக்கிறத தான் சாப்பிடணும். அப்பறம் உன் இஷ்டம்” தோள்களைக் குலுக்கி அவன் சொல்ல, அவனைப் பார்த்து முறைத்தாள்.

சும்மா சும்மா முறைக்காத. ஆண்ட்டிக்கு இந்த கண்ணு அவளோ அழகா செட் ஆகியிருக்கும். உன்ன பாத்தா ஒரு பேய் எஃபெக்ட் (effect) தான் வருது” பய பாவனை காட்டி சொன்னவனை, முறைத்துக்கொண்டே சிரித்தாள்.

இன்னமும் இதெல்லாம் நீ மறக்கவே இல்லயா?” சகஜ மனநிலைக்கு அவள் மாறி இருக்க “உன் கண்ணு சின்ன வயசுல பார்த்தமாதிரியே தான் இருக்கு…” சற்று நிறுத்தி குனிந்து அவளைப் பார்த்து “பயம்மா…” என சொல்லி சிரித்தான்.

மறுபடியும் போலியான கோபத்துடன் முறைத்தாள். ஆமா நீ நல்லா சமைப்பயா சக்தி?”

அவனோ பெருமையாக சூப்பரா செய்வேன். நீ சாப்பிட ரெடியா?” என கேட்க…

என்ன பாத்தா பலியாடு மாதிரி தெரியுதா உனக்கு? நான் ரிஸ்க் எடுக்கலப்பா. நம்ம ஹோட்டல்லயே சாப்பிடுவோம்” என்றாள் அழகுகாட்டிக்கொண்டு.

இப்போ வெளிய சாப்பிட்டுக்கலாம். ஆனா உனக்கு இனி நான் தான் சமைக்கப்போறேன். நீ சாப்பிட்டு தான் ஆகணும்” அம்பை எய்தான் ‘அவளுடன்தான் இனி இருக்கப்போகிறேன்’ என்பதை சொல்லும்விதமாக.

அவனை ஏற இறங்க பார்த்தவள், கிளுக்கென சிரித்தாள். அவன் என்னஎன்பது போல் பார்க்க

அந்த கவுதம் என்னமோ, நீ பெரிய ஆளுஅமெரிக்கா அப்படி இப்படின்னு சொன்னான். நீ என்னனா கரண்டி தான் பிடிப்பேன்னு சொல்ற”

அவளையே பார்த்தான். அவள் என்ன நினைத்து இதை சொன்னாள் என்று தெரிந்துகொள்ள. ஆனால் ஒன்றும் தெரியவில்லை அவள் முகத்தில்.

பின் அவனும் புன்னகைத்துக்கொண்டே “அவன் ப்ரோமோஷன் என் கைல. அதுனால சும்மா ரெண்டு மூணு பிட் சேர்த்து போட்டுருப்பான்” இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டு வர…

அதற்குள் அந்த எஸ்ப்போர்ட்ஸ் கம்பெனி வந்தது.

அவனிடம் இருந்து அவள் பையை வாங்கிக்கொள்ள முற்பட “மைதிலி மேம் எனக்கும் தெரியும். வா சேர்ந்தே போகலாம்” என்று ஏதோ அவன் தான் தினமும் வருவதுபோல முன்னே சென்றான்.

வேற என்ன செய்வாள் மிதுலா. முறைத்துக்கொண்டே பின்னே சென்றாள்.

அவனும் அவளும் உள்ளே நுழைய “வா மிதுலா. உடம்பு எப்படி இருக்கு இப்போ?” கேட்டார் மைதிலி.

பரவால்ல மேடம். பெருசா ஒன்னும் இல்ல. கொஞ்சம் ஸ்ட்ரெஸ்…ஆனதால மயங்கிட்டேன். அவளோ தான். நவ் பெட்டெர்” சாதாரணமாகத்தான் புன்னகையுடன் சொன்னாள். ஆனால் அவரோ கண்கள் விரிந்து ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

மனதிலோ இதுவரை சேர்ந்தாற்போல் மூன்று நான்கு வார்த்தைகள் வந்ததில்லை அவளிடமிருந்து. முதல்முறை பேசியதை தவிர்த்து. ஆனால் இப்போது… அதுவும் அந்தப் புன்னகை. எங்கிருந்தது இத்தனை நாள்?’ என்பது போல் அவர் பார்க்க, நொடியில் அவர் பார்வை சக்தியின் பக்கம் திரும்பியது.

புரிந்துகொண்டார்அவளின் இந்த மாற்றத்திற்கான காரணத்தை. சக்தியை பார்த்து புன்னகைத்துவிட்டு, மிதுலாவிடம் “உடம்பப் பாத்துக்கோம்மா. அப்பறம் ஒரு மூணு வாரம் இங்க இன்ஸ்பெக்க்ஷன் நடக்குது. அதுனால துணிய வெளிய எடுத்துட்டு போக முடியாது”

அதுக்குள்ள உனக்கும் உடம்பு சரியாகிடும். அப்பறம் ஒர்க் தரேன்” நீளமாக பேசி முடித்தார்.

அவளின் பூரித்த முகம் சற்று கலங்கியது. அதைப் பார்த்தவர் “மூணு வாரம் தான். அப்பறம் கண்டிப்பா தரேன். இப்போக்கூட இன்ஸ்பெக்க்ஷனுக்காக தான் உடனே உன்ன துணி கொண்டு வரச்சொன்னேன்” என்றார் அவளைத் தேறும் விதமாக.

சரி என்று சொல்லிவிட்டு அவள் வெளியேற, ‘நன்றிஎன்ற தலையசைப்புடன் புன்னகைத்துவிட்டு சக்தி அவள் பின்னே வெளியேறினான்.

அந்த நன்றி தான் சொன்னது போல் மிதுலாவிடம் சொன்னதற்குஎன்பது மிதுலாவுக்கு மட்டும் தெரியாது!!!

———————

மேடம் எப்போ உங்களுக்கு சொன்னாங்க? இவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் இதெல்லாம் பண்ணாங்கன்னு” கனமான மனநிலையில் இருந்து வெளியே வந்திருந்த மங்கை புத்துணர்ச்சியுடன் கேட்டாள்!