VVP-8B

அத்தியாயம்-8(2)

நம்பகமான நீலம்(2):

மங்கை கேட்டதற்கு புன்னகைத்த மிதுலா “அவங்க எங்க சொன்னாங்க. நானே தெருஞ்சுட்டேன்” என்றவள் தொடர்ந்தாள்

———————

கம்பெனியில் இருந்து கோவமாக வெளியே வந்த மிதுலா “ச்ச. நேரமே சரில்ல…” என்று பொரிந்து தள்ள “எதுக்கு இவளோ கோவம்?” பின்னே வந்துகொண்டே அவன் கேட்டான்.

அவனை திரும்பி முறைத்துப்பார்த்துவிட்டு நல்லா போயிட்டு இருந்துச்சு. உன்னால தான் எல்லாம். ஹாஸ்பிடல் அது இதுன்னு” என்று அவன்தான் காரணம் என்பது போல் கோபத்துடன் நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு ஈடுகொடுத்து நடந்தவன் “பசிக்குது. யாரோ சாப்பிட்டு போலாம்ன்னு சொன்னாங்க” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, தலையில் அடித்துக்கொண்டாள்.

போலாம். போய் நல்லா கொட்டிக்கோ” என்று கோபத்துடன் தான் சொன்னாள் ஆனால் அவள் சொல்லியவிதத்தில் அவனால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

அவன் புறம் திரும்பி இடுப்பில் கைவைத்துக்கொண்டு “நான் கோவமா இருக்கேன் சக்தி. எதுக்கு இப்படி சிரிக்கிற? கடுப்பேத்தறயா?” என்று விழிகளை உருட்டிக்கொண்டு கேட்க…

“ப்ளீஸ் மிது. முழிக்காத. பயமாஇருக்கு” என்று சிரிக்காமல் சொல்ல முற்பட்டான்.

பற்களை கடித்துக்கொண்டு இருகைகளாலும் அவனை அடிப்பதுபோல் சென்றவள், “ச்ச” என்றுவிட்டு விடுவிடுவென நடந்தாள்…

சரி சரி. எல்லாம் என்னால தான். என்னென்னல்லாம் திட்டணுமோ, மனசுல நோட் பண்ணி வெச்சுக்கோ. சாப்பிட்டதுக்கப்பறம், உட்காரவெச்சு திட்டு. இப்போ சாப்பிட போலாம்” என்றவன்… அவள் பேசும்முன், அங்கே வந்த ஹோட்டலுக்குள் அவளை இழுத்துச்சென்றான்.

அவள் எதுவும் பேசாமல் சாப்பிட, சக்தி “இன்னமும் கோவமா. நான் என்ன பண்ணுவேன் அவங்க சொன்னதுக்கு. என்கிட்டே எதுக்கு கோவம்?

ப்ச்… யார்கிட்ட கோவத்தை காட்டுவேன். நீ பக்கத்துல இருக்க… அதான். என்ன சக்தி பண்ணுவேன் நான் வேல இல்லாம… போர் அடிக்கும்” சலிப்புடன் சொன்னாள்.

ஹ்ம்ம். யோசிப்போம். ஏதாச்சும் வழி கிடைக்காமலா போய்டும்” என்று அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிச்சென்றான்.

இருவரும் அவள் வீட்டிற்குள் சென்றனர். “சரி என்னப்பத்தியே சொன்னேன். நீ எதுவுமே சொல்லல சக்தி. ஆண்ட்டி எப்படி இருக்காங்க... அங்கேயே தான் இருக்காங்களா?” மிதுலா பேச ஆரம்பித்தாள்.

அவன் முகம் வாட்டமானது. “அம்மா என்ன விட்டுட்டு போய் ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது மிது” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு. அதிர்ந்து அவனை பார்த்த மிதுலா “சாரி சக்தி. எப்படி... என்ன ஆச்சு?

தெரில. நான் வேலையா பெங்களூரு போயிருந்தேன். அம்மா திடீர்னு முடிலன்னு சொன்னாங்க. நான் கிளம்பி வரதுக்குள்ள…” என்று சொன்ன அவனுக்கு இப்போது தொண்டை அடைத்தது. ஆதரவாக அவனை தட்டிக்கொடுத்தாள்.

ஹாஸ்பிடல் போனப்பறம் தான் தெரிஞ்சது. கார்டியாக் அர்ரெஸ்ட்ன்னு. அப்புறம் ஊர் ஊரா சுத்திட்டு இருக்கேன். இங்க ப்ராஜெக்ட் விஷயமா வந்தேன். முன்னாடியே என்கிட்டே வேல பாத்ததுனால, கவுதம் என்னோட ப்ராஜெக்ட்ல அசைன் ஆனான்….”

ரெண்டு பேரும் பிரேக் வந்தப்ப தான் உன்ன பாத்தேன்” சுருக்கமாக சொல்லிமுடித்தான்.

அவன் முகவாட்டத்தை கவனித்தவள், அதை மாற்ற “சரி… கல்யாணம் கில்யாணம்லாம் எப்போ. யாரையாச்சும் லவ்?” ஒற்றை புருவத்தை ஏற்றி புன்னகையுடன் கேட்க

“ஹாஹாஹா எனக்கு அதுலலாம் நம்பிக்கையே இல்ல. பெரிய இன்டெரெஸ்ட்டும் வரல. இப்படியே இருந்துடலாம்ன்னு இருக்கேன்” அதில் நாட்டமில்லை என்பது போல் சொன்னான்.

முகத்தை சுளித்துக்கொண்டு “என்ன வயசாச்சு சாமியார் மாதிரி பேசற” திடீரென விட்டத்தை பார்த்து ஏதோ கணக்கு போட்டு “எனக்கு இருபத்திரெண்டுன்னா உனக்கு இருபத்தி ஆறு இல்லனா இருபத்தியேழுஅதுக்குள்ளேயேவா” என்றவள் சற்று நிறுத்தி,

அவனையே பார்த்து “ஒரு வேல…..” என்று விழிகள் விரித்து சிரித்து கிண்டல் செய்ய, அவள் சொல்லும் பொருள் புரிந்து அவனும் நன்றாக சிரித்தான்.

இருவர் மனதும் லேசானது. “எவளோ நாள் சக்தி தனியாவே இருப்ப? ஹ்ம்ம்…” அவனின் எண்ணத்தை மாற்ற நினைக்க, அவனோ “அதுவே தான் உனக்கும் மிதுஎவளோ நாள் தனியா இருப்ப?” பதில் கேள்வி கேட்டான்.

அவனை கேட்டதற்கு தன்னையே திட்டிக்கொண்டாள். அவள் பதில் சொல்லாமல் இருக்க “உனக்கும் என்ன வயசாயிடுச்சு?” விடாமல் கேட்டான்.

உன்கிட்ட தெரியாம கேட்டுட்டேன். நீ கல்யாணம் பண்ணிக்கோ இல்ல சாமியாரா போ. எனக்கென்ன… என்ன கேள்வி கேக்காத” வெடுக்கென பதிலளித்தாள்.

அப்படி எப்படி நீ சொல்லமுடியும்? உன்ன நான் தான் கேட்கணும். என்ன நீ தான் கேட்க முடியும். எனக்கும் வேறயாரு இருக்கா?” என்றான் அவள் கோவத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாக.

நான் வேணும்னா உன்ன கேட்கறேன்ஆனா நீ என்ன கேட்கக்கூடாது” குழந்தைபோல் பிடிவாதம் பிடித்தாள்.

சரி கேட்கல... ஆனா கேட்பேன்” என்றான் முகத்தை தீவிராக வைத்துக்கொண்டு ஆனால் இதழோரம் புன்னகையுடன்.

அவள் பார்த்து முறைக்க, “இங்க பாரு மிது… தனியா” என்று அவன் ஏதோ சொல்ல வர, அவனை கைக்காட்டி தடுத்தவள்

உன்னால எப்படி சக்தி இப்படி பேசமுடிது? என்ன பத்தி தெரிஞ்சாயாராச்சும் என்ன கல்யாணம்லாம் பண்ணிப்பாங்களா? அந்த கிழவன் மாதிரி ஒரு நைட் ஸ்டாண்ட் வேணா கேட்ப்பாங்க” என்றாள் விரக்தியான புன்னகையுடன்.

இதை பற்றி இனி பேசுவது சரியில்லை. தேவையில்லாமல் அவளின் மனநிலையை பாரமாக்க வேண்டாம் என்றெண்ணியவன், மௌனம் காத்தான்.

இருவரிடம் மௌனமே நிறைந்திருக்க, அவன் மனதில் இன்னும் மூணு வாரம் தான் இருக்கு. இவளை மாற்றுவதற்கு. அதற்குள் எப்படியாவது இவள் மனநிலையை மாற்றவேண்டும்என்றெண்ணியவன், அவளிடம் பேசவேண்டும் என்று யோசித்த விஷயத்தை ஆரம்பித்தான்.

நான், நீ நேத்து ஹாஸ்பிடல்ல இருந்தப்ப, இங்க வந்து ஹவுஸ் ஓனர்’ட்ட பேசினேன்… எனக்கு எதிர் வீடு வேணும்ன்னு கேட்க… அப்போ அவர்கிட்ட உன்னைப்பத்தி கேட்டேன்” என அவன் முடிக்கவில்லை. சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்.

“இரு இரு நான் சொல்லிடறேன். மொத்தமா திட்டலாம்… அப்போ அவர்அவரோட அப்பா தான் தனியா எதிர் வீட்ல இருக்காரு. அதுனால பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டு…” சற்று நிறுத்தியவன், தொடர்ந்து

“நீ இங்க வந்ததுல இருந்து, நிறையா நாள் நைட்’லாம் பயந்து சத்தம் போட்டுருக்க… ஆனா அடுத்த நாள் ஒன்னுமே நடக்காத மாதிரி இருந்துப்பன்னு சொன்னாரு. எங்க உன்கிட்ட கேட்டாவீட்டைக்காலி பண்ணிடுவயோன்னு கேட்கலைன்னு சொன்னாரு

நேத்து நைட் நீ பயந்தப்பதான் தெரிஞ்சது அதுக்கான ரீசன். அப்போவே யோசிச்சேன் இன்னிக்கி டாக்டர்ட்ட போணும்ன்னு”

அவனைக் கூர்மையாக பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.

உனக்கு ஸ்ட்ரெஸ் ரொம்ப அதிகமானதால தான் அந்த மாதிரி தாட்ஸ் வருதுன்னு நினைக்கறேன். டாக்டர்’ட்ட போன ஒரு சொல்யூஷன் கிடைக்கும்” என்றான் அவள் முகம் மாறுவதை கவனிக்காமல்.

ஓ… ” என்று ஏதோ புரிந்ததுபோல் அவள் யூகிக்க, அவன் என்னஎன்பது போல் புரியாமல் பார்த்தான்.

எல்லா ஆம்பளைங்களும் இப்படிதானா?” அவள் ஆரம்பிக்க, அவனுக்கு புரியவில்லை.

அவளே தொடர்ந்தாள். “ஒருத்தன் என்னோட கதைய கேட்டுட்டு, இவ கூப்புட்டா வந்துடுவான்னு நினைச்சான். நீ, என் கதைய கேட்டுட்டு, என்ன பைத்தியம்ன்னு சொல்ற. அதுக்காக டாக்டர்ட்ட போலாம்ன்னுவேற சொல்ற… இல்ல…” வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டி போல் குத்தியது அவனுக்கு.

அதுவும் அந்த கிழவனுடன், அவனின் செய்கையுடன்தன்னை ஒப்பிட்டது, அவனை பலமாக தாக்கியது. இதுவரை அவளிடம் கோவத்தை காட்டாதவன் முகத்தில் அவ்வளவு கோவம். அவளும் பார்த்தாள் அதை.

எதுவும் பேசாமல், எழுந்து சென்றான் அவன் வீட்டிற்கு. சென்றவன் கதவை அறைந்து மூடிவிட்டான்!!!

———————

மேடம் என்ன தான் இருந்தாலும் நீங்க சக்தி ஸார்’ர அப்படி சொல்லிருக்கக்கூடாது” மங்கை வருத்தத்துடன் சொல்ல, மிதுலாவிற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. சத்தமாக சிரித்தாள்.