YALOVIYAM 7.1


யாழோவியம்


அத்தியாயம் -7

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்

மதிய நேரம் என்பதால், மாறன் சாப்பிட்டு முடித்து அமர்ந்திருந்தான். அலுவலக அறையின் டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.

‘செங்கல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர், ஆய்வாளராக பணிஉயர்வு பெற்று, திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்’ என்ற செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பார்த்து கோபமூட்டிய செய்திதான். இருந்தாலும் திரும்பப் பார்க்கும் பொழுது மாறனின் கோபம் அதிகரித்தது.

இரு கைகளாலும் நெற்றியைத் தாங்கிக் கொண்டு, ‘விசாரிக்கணும்னு நினைச்ச சப்-இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்பர் பண்ணியாச்சு. இனி யாரை விசாரிக்க?’ என்று முணுமுணுத்தான்.

அக்கணம் அறைக் கதவைத் திறந்த சசி, “பிஸியா?” என்று கேட்டுக் கொண்டு நின்றான்.

‘இல்லை’ என்பது போல் தலையசைத்து, “வந்து உட்காரு” என்று சொன்னான்.

சசி வந்து அமர்ந்தபின், இருவருக்குள்ளும் ஒரு அமைதி நிலவியது. இருவரது முகமுமே சரியில்லாமல் இருந்தது.

“தப்ப மறைக்கிறதுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்றாங்க. விசாரிக்க நினைச்ச எஸ்ஐ-க்கு டிரான்ஸ்பர் வித் ப்ரோமோஷன். இனி, அந்தப் பையன் என்ன சொன்னான்னு அவர் வெளியில சொல்வாரா?

அந்த இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் மேல என்கொய்ரி நடந்தாலும், உண்மை வெளிவருமான்னு தெரியலை. அவங்ககிட்ட அதிகாரம் இருக்கு மாறன். நாம ஒன்னுமே செய்ய முடியாது” என்று சசி புலம்பினான்.

“இந்த எஸ்ஐ ட்ரான்ஸ்பெர் பத்தி உனக்குத் தெரியாதா?”

“இது இன்டெர் டிஸ்ட்ரிக்ட் (மாவட்டங்களுக்குள்) ட்ரான்ஸ்பெர் இல்லை. இன்ட்ரா டிஸ்ட்ரிக்ட் ட்ரான்ஸ்பெர். டிஐஜி முடிவெடுத்திருப்பாரு” என்றவன், “அதெல்லாம் விட, இது பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க” என்று கோபப்பட்டான்.

“விடு சசி! இதுக்கு முன்னாடி அந்தப் பையன் சப்-இன்ஸ்பெக்டர்-கிட்ட ஏதாவது சொல்லயிருப்பானா-ன்னு சந்தேகப்பட்டோம். ஆனா இப்ப இந்த டிரான்ஸ்பர் தெளிவா சொல்லிடுச்சி. அந்த பையன் ஏதோ உண்மையை உளறிருக்கான். அது வெளிய வரக்கூடாதுன்னுதான் அவனைக் கொலை பண்ணியிருக்காங்க”

“அதெல்லாம் ஓகே! ஆனா என்ன சொன்னான்? அதுதான முக்கியம். அது தெரியாம என்ன பண்ண முடியும்?”

ஓர் அமைதி. அதிகாரத்தின் பிடியில் அலைக்கழிக்கப்படும் அதிகாரிகளுக்கு வரும் சோர்வு, அவர்கள் இருவர் முகத்திலும் தெரிந்தது.

சில நொடிகளுக்குப் பின் சசி,  “இதைப் பாரு மாறன்” என்று, தன் கைப்பேசியைக் கொடுத்தான்.

“இதென்ன சசி? யூடூயூப் வீடியோ-வா? இதெதுக்கு என்னைப் பார்க்கச் சொல்ற?” என்று கைப்பேசியை வாங்கிக் கொண்டே கேட்டான்.

“பாரு மாறன்! ஏன்னு உனக்கே புரியும்” என்று சசி சொன்னதும், மாறன் காணொளியை ஓட விட்டான்.

“வணக்கம். மதி நியூஸ் சேனலுக்காக நான் உங்கள் மதிவாணன். இன்னைக்கு நாம பார்க்கப்போற நியூஸ் என்டர்ன்ஸ் எக்ஸாம்-ல நடந்த, நடந்துக்கிட்டு இருக்கிற தவறுகள் பற்றித்தான்.

ஈரோடு என்டர்ன்ஸ் எக்ஸாம் சென்டர்-ல,  எக்ஸாம் ஹால்-ல ஆள்மாறாட்டம் செஞ்சதா சொல்லி… அதாவது ஒரு ஸ்டுடென்ட்-க்கு பதிலா இன்னொரு ஸ்டுடென்ட் எக்ஸாம் எழுதினதா சொல்லி, ஒரு பையன் கைது செய்யப்படுறான். இது பேப்பர்-ல நியூஸா வந்திருக்க.

இது நம்ம டிஸ்ட்ரிக்ட்-ல மட்டும்தான் நடந்திருக்கா-ன்னு பார்த்தா? இல்லை, இன்னும் ரெண்டு டிஸ்ட்ரிக்ட்-ல நடந்திருக்கு. அந்த ரெண்டு டிஸ்ட்ரிக்ட் அரியலூர் மற்றும் செங்கல்பட்டு. இங்க காப்பி பண்றதுக்கு ஹெல்ப் செஞ்சதா சொல்லி, ஸ்டுடன்ட்ஸ் கைது செய்யப்பட்டிருக்காங்க.

ஊடகங்கள்-ல பெருசா பேசப்படாத இந்த நியூஸ் பத்தி, நாம பேசுவோம். வாங்க ஷோ-குள்ள போகலாம்” என்று சொன்னதும், சில நொடிகள் ‘சவுண்ட் எபக்ட்ஸ்’ வந்து போனது. மீண்டும் மதி பேச ஆரம்பித்தான்.

“ஓகே! இந்த மாதிரியான தவறுகள் இப்ப மட்டும்தான் நடக்குதா? அதாவது இந்த வருஷம் மட்டும்தான் நடக்குதான்னா? இல்லை! இது ரொம்ப வருஷமா நடந்துகிட்டு இருக்கு. அதுக்குரிய ஆதாரங்களை இப்போ பார்க்கலாம்.

ஃபர்ஸ்ட்! 2015 என்ட்ரன்ஸ் டெஸ்ட்-ல பார்த்து எழுதறதுக்கு ஹெல்ப் பண்ணதா சொல்லி, மதுரையில ஒரு மாணவன் கைது செயப்படுறான். இது அப்போ பேப்பர்-ல நியூஸா வந்திருக்கு.

அடுத்து, 2016 என்ட்ரன்ஸ் டெஸ்ட்-ல ஒரு இடத்தில இல்லை… அஞ்சு இடத்தில ஆள்மாறாட்டம், காப்பி பண்ணறதுக்கு ஹெல்ப் செஞ்சதா சொல்லி 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்காங்க.

இவங்க பேர்ல போலீஸ் ஸ்டேஷன்-ல கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. பட் அதுக்கப்புறம் கேஸ் என்னாச்சுன்னு தெரியலை?! ஏன்னா விசாரணை முறையா நடக்கலை.

நெக்ஸ்ட்! 2017 வருஷத்திலயும் இது போன்ற செய்திகள் வந்திருக்கு. ஆனா, இந்த மாதிரி கேஸ்-ல கைது செய்யப்பட்ட மாணவன் விசாரணையின் போது ஒரு ஏஜென்ட் பேரைச் சொல்லியிருக்கான். அந்த ஏஜென்டையும் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.

பட் ரெண்டு பேருக்குமே பெயில் கிடைச்சிருக்கு. அன்பார்ச்சுனேட்லி அந்த ஸ்டுடென்ட் அன்ட் ஏஜென்ட் இறந்து போயிருக்காங்க. அவங்க ஏன், எப்படி இறந்தாங்-கங்கிற விவரம் சரியா சொல்லப்படலை. அப்புறம் அந்த ஏஜென்ட் யாரு? அதுவும் தெரியலை.

அதுக்கப்புறம் வரிசையா, 2018, 2019, 2020 களிலும் இது போல செய்திகள் வந்த வண்ணம்தான் இருந்திருக்கு!

ஓகே!! சில கேள்விகள் இருக்கு. அதை மக்கள் முன்னாடி வைக்கிறோம்.

ஃபர்ஸ்ட் ஒரு ஸ்டுடென்ட் அட்மிட் கார்டு-ல(HALL TICKET) என்னென்ன டீடெயில்ஸ் இருக்கும்? அட்மிட் கார்டு நம்பர், ஸ்டுடென்ட் நேம், அப்பிளிக்கேஷன் நம்பர், டேட் ஆஃப் பெர்த். ரொம்ப முக்கியமா, ஸ்டுடென்ட் போட்டோ வித் டிஜிட்டல் சிக்னேச்சர்.

இப்ப ஆள்மாறாட்டம் பண்ணனும்-னா, அட்மிட் கார்டு-ல இருக்கிற ஒரிஜினல் ஸ்டுடென்ட் போட்டோ, இந்த ஆள்மாறாட்டம் செய்யற பையனோட போட்டோவா மாத்தணும்.

இதை யாரு மாத்தியிருப்பாங்க? – இது முத கேள்வி!

செகன்ட்! செங்கல்பட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம்-ல ஒரு ஸ்டுடென்ட் காப்பி பண்றதுக்கு ஹெல்ப் பண்ணாத சொல்லி அரெஸ்ட் ஆகி, மர்டரும் நடந்திருக்கு.

இப்போ கேள்வி என்னென்னா? அந்த ஸ்டுடென்ட் ஏற்கனவே இன்ஜினியரிங் முடிச்ச பையன். அவனுக்கு எப்படி அட்மிட் கார்டு கிடைச்சிச்சு? – இது ரெண்டாவது கேள்வி.

தேர்ட்! ஏற்கனவே ஒரு ஸ்டுடென்ட் அன்ட் ஏஜென்ட் டெத் நடந்திருக்கு. இது கொலையா இல்லை இயற்கை மரணமா-ன்னு தெரியலை. பட், இந்த வருஷம் செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன்-ல ஒரு ஸ்டுடென்ட் மர்டர் நடந்திருக்கு.

இந்த மரணங்கள் எதற்காக? எதை மறைக்கிறதுக்காக நடத்தப்படுத்து? – இது மூணாவது கேள்வி!

முறையான விசாரணை நடந்தாதான், இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்

ஓகே பைனலா! ஒவ்வொரு வருஷமும் ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற கேஸ் எந்தெந்த நியூஸ் பேப்பர்-ல வந்தது-ங்கிற டீடெயில்ஸ் கீழே டெஸ்கிரிப்ஷன் …” என்று மதி சொல்லும் போதே, மாறன் காணொளியை நிறுத்திவிட்டான்.

கைப்பேசியை மேசையில் வைத்த மாறன், “யாரு சசி இது?” என்று ஆச்சிரியமாகக் கேட்டான்.

“தெரியலை! சும்மா பார்த்துக்கிட்டு வர்றப்போ இந்த வீடியோ பார்த்தேன். ஆமா எதுக்கு கேட்கிற?”

“சேஃபா இருக்கச் சொல்லத்தான். நம்மளையே மிரட்றவங்க, இந்த மாதிரி பசங்கள விடுவாங்களா?”

“யாருக்கும் இன்னும் தெரியலை-ன்னு நினைக்கிறேன். நேத்துதான் அப்லோட் பண்ணியிருக்காங்க. வீயுவ்ஸூம் பெருசா இல்லை. சப்ஸ்கிரைபர்ஸூம் கம்மிதான்” என, இந்தச் செய்தி மக்களை சென்று சேரவில்லை என்ற அர்த்தத்தில் சொன்னான்.

மாறன் அமைதியாக இருந்ததும், “நீ என்ன யோசிக்கிற?” என்று சசி கேட்டான்.

“இந்த வருஷம் நமக்குத் தெரிஞ்சி மூணு கேஸ். பட் கேஸ் ரெஜிஸ்டர் ஆகாம, பேப்பர் நியூஸ் வராம, ஹால்-ல மாட்டாம…  இப்படி நமக்குத் தெரியாம நிறைய கேஸ் இருக்குமோ?”

“இருக்கலாம்” என்ற சசி, “பட் இந்தப் பையன் சொல்ற மாதிரி 2017-ல ஏஜென்ட் அரெஸ்ட் நடந்திருக்கு. நான் செக் பண்ணிட்டேன்” என்றான்.

“அது ஓகே. பட் ஏஜென்ட்தான் இதெல்லாம் பண்ணான்னு சொல்ல முடியாது. இல்லையா?”

இரண்டு பேரும் சற்று நேரம் அமைதியாக இருந்து யோசித்தார்கள்.

“சசி! உனக்கு டிபார்ட்மென்ட்-லருந்து ப்ரெஸ்ஸர் வந்தது, இந்த ஸ்டுடென்ட் டெத், அதுக்கப்புறம் நடந்த சப் இன்ஸ்பெக்டர் ட்ரான்ஸ்பெர், அன்ட் எவனோ என்னை மிரட்டினது… இதெல்லாம் பார்க்கிறப்போ, இங்கே தப்பும் பெரிசு! தப்பு பண்றவங்களும் பெரிய ஆளுங்க”

“உனக்கு த்ரெட்டனிங் கால் சென்னையிலிருந்து வந்திருக்கு. நம்பர் இப்போ சுவிட்ச் ஆஃப். போலீஸ் தேடிக்கிட்டுதான் இருக்காங்க”

“அதை விடு சசி!” என்றவன், “அட்மிட் கார்டு-ல போட்டோ மாத்திறது, ஒரு ஸ்டுடென்ட்-க்கு புதுசா அட்மிட் கொடுக்கிறது ஏஜென்ட் மட்டும் தனியா பண்ண முடியுமா?”

“அப்போ அட்மிட் கார்டு இஸ்யு பண்ற இடத்திலயும் தப்பு நடக்குது-ன்னு சொல்ல வர்றியா?”

“இருக்கலாம்” என்றவன், “இப்படி ஆள்மாறாட்டம் பண்றதால யாருக்கு லாபம்? இந்த ஸ்டுடென்ட்ஸ் அன்ட் ஏஜென்ட்-டோட மரணத்துக்குப் பின்னாடி என்ன இருக்கு?” என்று கேள்வி கேட்டவன், “எனக்கென்னமோ என்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சி பெரிய தப்பு நடக்கிற மாதிரி இருக்கு. இத்தனை வருஷம் நடக்குதுன்னா, இது கேஸ் இல்லை. எ பிக் ஸ்கேம்! என்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சி நடக்கிற மிகப் பெரிய ஊழல்” என்றான்.

“நம்ம டிஸ்ட்ரிக்ட் மட்டும்னா நாமளே பார்த்துக்கலாம். இது தமிழ்நாடு முழுசும் நடந்திருக்கு. ஸோ அடுத்து என்ன பண்ண?!”

“இது வெளியே வரக்கூடாதுன்னு நினைக்கிறவங்க, அவங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை வச்சி என்ன பண்ண முடியும்னு காட்டிட்டாங்க. இப்போ நமக்கு கொடுத்திருக்கிற அதிகாரத்தை வச்சி நாம என்ன பண்ணுவோம்னு காமிக்கலாம்”

“என்ன பண்ணலாம்?”

“இத்தனை வருஷம் நடந்த கேஸ் பத்தி, அதோட எப்ஐஆர் காப்பில் கலெக்ட் பண்ணிக்கோ. ப்ளஸ் வேற டீடெயில்ஸ் கிடைக்கும்-னா அதையும் சேர்த்து, சிம்-கிட்ட(CM) சப்மிட் பண்ணுவோம். முறையான விசாரணை வேணும்னு கேட்கலாம்”

“அதுவும் சரிதான். கண்டிப்பா பண்ணலாம். நீ சிஎம்-கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கு. நான் ரிப்போர்ட் ரெடி பண்றேன். இனி டிலே பண்ண வேண்டாம்” என்று சொல்லும் பொழுதே, “சார்” என்று காசி வந்து நின்றார்.

“என்ன காசி?” என்று கேட்டதும், “சார்! இன்னைக்கு கோ-ஆப்டேஸ் ஓப்பனிங் இருக்கு. லேட்டாகுது” என்றார்.

“வெய்ட் பண்ணுங்க. வர்றேன்” என்றதும், காசி சென்றுவிட்டார்.

சசி எழுந்து கொண்டு, “ஓகே மாறன். நான் கிளம்பறேன். எதுனாலும் ஃபோன் பண்ணு” என சொல்லி, விடைபெற்றுச் சென்றான்.

மாறனும், தன்னை இலகுவாக்கி கொண்ட பின்பு வெளியே கிளம்பினான்.

கோஆப்டெக்ஸ் ஷோ ரூம், செங்கல்பட்டு 

தமிழக அரசின் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் நவீனமாக்கப்பட்டு, அதைத் திறந்து வைக்க கைத்தறி-துணிநுால் துறை அமைச்சர் மற்றும் அந்த மாவட்டத்தின் ஆட்சியரான யாழ்மாறனும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சரும் ஆட்சியரும் வருவதால், அந்தச் சாலையில் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் இருவரும் வந்ததும், அந்த விற்பனை நிலைய நிர்வாகி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின், மூடப்பட்ட பெரிய கண்ணாடிக் கதவுகள் குறுக்கே கட்டப்பட்டிருந்த சிவப்பு ரிப்பனை வெட்டி அமைச்சர் வளாகத்தை திறந்து வைத்துப் பேசினார்.

அதன்பின் முதல் விற்பனையை செய்யுமாறு மாறன் அழைக்கப்பட்டதும், ஒருகணம் ‘என்ன வாங்கவென்றே?’ தெரியாமல் நின்றான். ஆனால் அடுத்தகணம் சுடர் நியாபகம் வந்தது.

உடனே, வரிசையாக எடுத்துப் போடப்பட்டிருந்த புடவைகளில் இருந்து, ஒன்றை தேர்வு செய்து பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டான்.

பின் அமைச்சருடன் சேர்ந்து, விஸ்தரிக்கப்பட்டு விற்பனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தான். அதற்கடுத்து ஒரு சில வினாடிகள் மாவட்ட நிர்வாகம் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியில் கிளம்பும் முன், “கட்சி ஆளுங்க ஏதாவது பெர்மிஷன் கேட்டு வந்தா, கொஞ்சம் பார்த்துச் செய்ங்க” என்று சிரித்த முகமாக அமைச்சர் சொன்னார்.

கொஞ்சம் யோசித்த மாறன், “நீங்க கவர்ன்மென்ட் செர்வன்ட். நான் சிவில் செர்வன்ட். இதுல கட்சி எங்கே வந்தது?” என கேட்டதும், அவரின் சிரித்த முகம் கருகருத்துப் போனது.

அவன் பேச்சில் கோபமடைந்த அமைச்சர் எதுவும் பேசாமல், ‘கட்சி மேலிடத்திற்கு இவனைப் பற்றி சொல்ல வேண்டும்’ என்று எண்ணியபடி சென்றுவிட்டார்.

தனக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே ஒரு மோதல் போக்கு உருவாவதை உணர்ந்தாலும், அங்கிருந்து அலுவலகத்திற்கு வந்து அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டு அன்றைய நாளை நிறைவு செய்தான்.