அனல் பார்வை 20🔥

ei06THE54119-9a7dafd5

“ஐ நீட் யூ மஹி… இப்போவே…” என்று அருவி சொன்னதும் அதிர்ந்தவன், பின் நிதானமாக அவளின் நெற்றியை அழுந்த முத்தமிட்டு, “என் ஜானுக்கு என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? ஏதாச்சும் பிரச்சினையா? ஏன் என்கிட்ட சொல்ல மாட்டிக்கிற?” என்று அவளின் கன்னத்தை வருடியவாறு கேட்க, அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டவள், “கண்டிப்பா, சொல்லுவேன். ஆனா, இப்போ இல்லை.” என்று சொல்ல, அவனும் புன்னகையுடன் அவளின் தலையை வருடிவிட்டான்.

“பசிக்குது மஹி…” என்று அவள் பாவமாக சொல்ல, “அச்சச்சோ! ராகு கூட இல்லை. வேலை விஷயமா வெளில போயிருக்கான். கொஞ்சம் பொறுத்துக்க ஜானு! நான் எனக்கு தெரிஞ்ச ஏதாச்சும் பண்ணி தரேன்.” என்றுவிட்டு குடுகுடுவென அவன் சமையலறைக்குள் நுழைந்து, என்ன செய்வதென்று தெரியாமல் பாத்திரங்களை உருட்டினான்.

சிறிது நேரம் வெளியே காத்திருந்தவள், பின் தன்னவனை தேடி சமையலறைக்குள் நுழைந்தாள். அவனோ பழங்களை வெட்டிக் கொண்டிருக்க, புன்னகையுடன் அவனை நெருங்கியவள் பின்னாலிருந்து இறுகி அணைத்துக் கொண்டாள்.

அவனுக்கோ என்றும் இல்லாது இன்று அருவியுடனான தனிமை, அருவி நேரடியாக கேட்டது எல்லாமே சேர்ந்து உணர்வுகளை பெருக்க, அதை கட்டுப்படுத்த அவளின் கையை பிடித்து முன்னே இழுத்த அக்னி, அவளின் இடுப்பில் கைவிட்டு தூக்கி திண்டில் உட்கார வைத்தான்.

அக்னியோ முயன்றவரை தன் வேலையில் கவனத்தை செலுத்த, இவள் விட்டால் தானே! அவளோ அவனையே இமைக்காது பார்த்திருக்க, அவனும் ஒருதரம் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளின் பார்வை வீச்சின் அர்த்தம் புரிந்து பார்வையை திருப்பிக் கொண்டான்.

அதை உணர்ந்து மென்மையாக புன்னகைத்தவள், திண்டிலிருந்து தாவி குதித்து அவன் முன்னே வந்து நிற்க, தன்னவளை பொய்யாக முறைத்த அக்னி, “தீ, இப்போ நீ வீட்டுக்கு போறது நல்லதுன்னு எனக்கு தோணுது.” என்று சொல்ல, அவளோ அவளின் பாதத்தின் மேல்  ஏறி நின்றுக் கொண்டு அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“மஹி, ஐ லவ் யூ…” என்று அவள் அவனின் கண்களையே ஆழ்ந்து பார்த்தவாறு சொல்ல, அவள் ஏறியதுமே அவளின் இடையை வளைத்துப் பிடித்து கொண்டவனுக்கு ஏனோ உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. “ஜானு, நீ வீட்டுக்கு கிளம்புறியா?” என்று அவன் அப்போதும் உணர்வுகளை கட்டுப்படுத்தியவாறு கேட்க, அவள் விட்டால் தானே!

“மஹி, எனக்கு நீ வேணும்.” என்று ஏதேதோ பிதற்றியவாறு அவள் அவன் கன்னத்தில் முத்தமிட, கண்களை அழுந்த மூடி திறந்தவன் ஒன்றும் முனிவர் இல்லையே… அடுத்தநொடி அவளை மேலும் இறுக்கிக் கொண்டவன் தன் உயரத்திற்கு சற்று அவளை உயர்த்தி இதழை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.

அவளும் அவனின் அடர்ந்த கேசத்தில் கை நுழைத்து அவனுக்கு இசைந்துக் கொடுக்க, அவளிதழை விட மனமே இல்லாது மேலும் மேலும் அவளுள் புதைந்துப் போனான் அக்னி. ஒருகட்டத்தில் அருவி தான் களைத்துப்போய் அவனிதழிலிருந்து அவளிதழை பிரித்து எடுத்து பாவமாக அவனை பார்க்க, இத்தனைநேரம் இருந்த மோனநிலை அறுபட்ட எரிச்சலில் ‘ச்சே!’ என்று சலித்துக் கொண்டவன், அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

“மஹி…” என்று அவள் கிறக்கமாக அழைக்க, தலையை நிமிர்த்தி அவளை பார்த்தவனின் கண்கள் அவளிடம் ‘சம்மதா?’ என்ற ஒரு கேள்வியை கேட்டது. அவளும் அதன் அர்த்தம் புரிந்து புன்னகைத்து தன் சம்மதத்தை அவனிதழில் அழுந்த முத்தம் பதித்து தெரிவித்தாள்.

அடுத்தகணம் தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டு அவன் அறைக்குள் நுழைய, அடுத்த நடந்த சம்பவங்களுக்கு இருவருமே பொறுப்பு!

அவளுடனான கூடல் முடித்து அவளை விட்டு விலகியவள், தன்னவளை இழுத்து தன் மார்புடன் அணைத்துக்கொள்ள, அவன் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவள், நாடியை குற்றி நிமிர்ந்து பார்த்து, “லவ் யூ மஹி…” என்று காதலாக சொல்லி அவன் மார்பில் முத்தமிட்டாள்.

ஒரு கையால் அவளை மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்ட அக்னி, தயக்கமாக அவளை ஏறிட்டு பார்த்து, “இது தப்பில்லையா தீ?” என்று உதட்டை பிதுக்கியவாறு கேட்க,  அவன் முகத்தையே சற்று நேரம் உற்று நோக்கியவள், சட்டென தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றினாள்.

அவனின் சுண்டுவிரலில் அணிவித்துவிட்டு புறங்கையில் முத்தமிட்டு தன்னவனின் முகத்தையே அவள் ஆர்வமாக பார்க்க, அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் தன் கை விரல்களை பார்த்தான்.

ஏதோ தீவிரமாக யோசித்துவிட்டு சட்டென அந்த சிந்தனையிலிருந்து விடுபட்ட அக்னி, தன் கைக்காப்பை கழற்றி அவளின் கையில் அணிவித்து தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட, அவளுக்கோ வெட்கத்தில் கன்னங்கள் குங்குமப்பூவென சிவந்து இருந்தன.

“இப்போ நமக்கு கல்யாணம் ஆகிருச்சி. பட், என்ன நீ மோதிரத்துக்கு பதிலாக காப்பு போட்டிருக்க. இதுவும் நல்லா தான் இருக்கு. சீக்கிரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். அப்றம், அம்மாக்கிட்ட சொல்லிக்கலாம். நீயும் வீட்ல சொல்லிரு. இப்போ தப்பு பண்ணிட்டோமேன்னு யோசிக்காத! புரியுதா?” என்று அருவி அவளின் தலைமுடியை செல்லமாக கலைத்துவிட்டவாறு கொஞ்ச,

அவளின் கையை பிடித்து ஒவ்வொரு விரலாக முத்தமிட்டவன், “ஜானு, உனக்கு என்னை பத்தி எதுவுமே தெரியல. நான் யாரா இருந்தாலும் என்னை நீ ஏத்துப்பியா?” என்று தயக்கமாக கேட்டான்.

சற்று எம்பி அவனின் கன்னத்தோடு கன்னத்தை வைத்து உரசியவள், “எப்போவும் நீ என்னோட மஹி தான். உனக்கு எப்போ உன்னை பத்தி என்கிட்ட சொல்லத் தோணுதோ அப்போ சொல்லு! பட், சீக்கிரம்…” என்று சொல்ல, யோசனையுடன் தலையசைத்தவனுக்கு ஏதேதோ நினைவுகள் மனதை ஆக்கிரமித்தன.

அந்த நினைவுகள் தந்த தாக்கத்திலிருந்து மீள, தன்னவளை கீழே போட்டு அவள் மேல் படர்ந்தவன் மீண்டும் அவளை நாட ஆரம்பிக்க, அவள் தான் அவனின் வேகத்தில் திணறிப் போனாள்.

அடுத்தநாள் காலை,

அழைப்பு மணி சத்தத்தில் கொட்டாவி விட்டவாறு கதவை திறந்த அருவி, வாசலில் தன்னையே விழிவிரித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த ராகவ்வை பார்த்து, “நீயா? அதுக்குள்ள வந்துட்ட கரடி…” என்று வேறு திட்டிவிட்டு மீண்டும் அக்னியின் அறைக்குள் புகுந்துக் கொள்ள, மேல்சட்டையை அணிந்தவாறு வந்த அக்னியோ தன் நண்பனை பார்த்து திருதிருவென விழித்தவாறு நின்றான்.

அவனை ஏற இறங்க பார்த்த ராகவ்விற்கு விஷயம் புரிபட, “ஆகு என்ன டா இது?” என்று அதிர்ந்துப் போய் கேட்க, “அது வந்து.. ராகு.. நான் இல்லை… தீ தான்…” என்று அக்னி முடிக்கவில்லை, அவனை உள்ளிருந்து இழுத்து அவள் கதவை சாத்த, ராகவ்விற்கு தான் ‘அய்யோ! அய்யோ!’ என்று சுவரில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

அடுத்து வந்த நாட்களும் அக்னிக்கும், அருவிக்கும் இடையே நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்தது என்னவோ உண்மை தான். தன் காயங்களுக்கு மருந்தாக அவள் அவனை நாட, தன் நினைவுகளின் தாக்கத்திலிருந்து தன்னை விடுவிக்க அவளை நாடினான் அவன். கூடவே ஆழ்கடல் அளவு காதலுடன்…

ஒரு மாதம் கழித்து அன்று,

நடுநிசி பன்னிரெண்டு மணி,

“டேய் சாகு! வந்து கதவை திற டா!” என்று அருவி அழைப்பில் கத்தவும் அடித்து பிடித்து அறையிலிருந்து ஓடி வந்தவன், கதவை திறந்து விட, அவனை முறைத்தவாறே உள்ளே வந்தாள் அவள்.

“உன்னை கதவை லாக் பண்ணாதன்னு தானே சொன்னேன். பழைய பகை எல்லாம் சேர்த்து வச்சி என்னை வெளில நிக்க வச்சிட்டல்ல? அறிவுகெட்டவனே! உன்னை…” என்று திட்டி அவன் மண்டையில் ஓங்கி கொட்டியவள் அக்னியின் அறைக்குள் நுழைய, ‘அய்யய்யோ! நாம வேணும்னு தான் கண்டுக்காம இருந்தோம்னு கண்டுபிடிச்சி கொட்டிட்டு போறா கிராதகி!’ என்று திருதிருவென விழித்தவாறு தலையை தடவி விட்டுக்கொண்டான் அவன்.

அக்னியின் அறைக்குள் நுழைந்தவள், கட்டிலில் தன்னவனருகே அமர்ந்து அவனின் முகம் நோக்கி குனிந்து இதழை குவித்து அவனின் கண்களில் ஊத, கண்கள் கூட திறக்காது அவளின் இடையை பற்றி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்,  “ஜானு…” என்றவாறு புன்னகையுடன் கண்களை திறந்தான்.

“மஹி, யூ ஃபீல் மீ ரைட்?” என்று சிரிப்புடன் கேட்டவாறு அவள் அவனின் நெற்றியில் முத்தமிட, அவளை தன் பக்கத்தில் படுக்க வைத்தவன் அவளின் குட்டை முடியை மென்மையாக வருடியவாறு, “இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்த தீ?” என்று பொய்யான முறைப்புடன் கேட்டான்.

“இன்னைக்கு என்னோட பிறந்தநாள் மஹி…” என்று அவள் சொன்னதும் உற்சாகமானவன், “நிஜமாவா ஜானு?” என்று கேட்டவாறு, “ஃபெலிஸ் கும்ப்ளியெனொஸ்(பிறந்தநாள் வாழ்த்துக்கள்)” என்று ஸ்பானியன் மொழியில் சொன்னவாறு அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

“உனக்காக ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன்.” என்று அருவி குறும்புச் சிரிப்புடன் சொல்ல, லேசாக இதழ்பிரித்து சிரித்த அக்னி, “உன் பொறந்தநாளைக்கு நான் தான் பரிசு தரனும். ஆனா, நீ எனக்கு பரிசு தர்றீயா?” என்று கேட்க, சட்டென எழுந்தமர்ந்தவள் தான் அணிந்திருந்த ஷர்ட்டின் முதல் பட்டனை கழற்ற போனாள்.

அதில் பதறியவாறு எழுந்தவன் அவளின் கையை இறுகப்பற்றி, “தீ என்ன பண்ற? ஏற்கனவே தப்பு பண்றோம்னு மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? வேணாம்!” என்று பாவமாக சொல்ல, இப்போது அவனை செல்லமாக முறைப்பது அருவியின் முறையாயிற்று.

“எப்போ பாரு இதே நினைப்பு தானா?” என்று கேலியாக கேட்டவள், “இது வேற மஹி…” என்று சொன்னவாறு சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை திறந்து இடது பக்க சட்டையின் தோளை சற்று கீழிறக்கி வெட்கத்தில் கண்களை மூடிக் கொள்ள, அக்னியின் கண்களோ முதலில் அதிர்ந்து விரிந்து பின் கலங்கிப் போனது.

மார்பிற்கு மேல் அருவி பச்சைகுத்தியிருந்த அவனின் முகத்தை பார்த்தவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர்துளி கன்னத்தை தொட்டு விழ, அவனிதழோ “ஜானு… ஜானு…” என்று மட்டுமே முணுமுணுத்தது.

ஒற்றை கண்ணை திறந்து பார்த்தவள், அவன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து பதறி, “அய்யோ மஹி! எனக்கு டாட்டூ போடுறது ஒன்னும் புதுசு கிடையாது. எனக்கு அவ்வளவா வலிக்க கூட இல்ல தெரியுமா? உனக்கு இது பிடிச்சிருக்குல்ல? அதை மொதல்ல சொல்லு!” என்று பேசி முடிக்கவில்லை, அடுத்தகணம் அவளை இழுத்து அணைத்திருந்தான் அவன்.

“லவ் யூ ஜானு…” என்று அவன் குரலில் மொத்த காதலையும் தேக்கி சொல்ல, “பிடிச்சிருக்கான்னு சொல்லு!” என்று மீண்டும் அவள் கேட்டதில், அவளின் டாட்டூ போட்டிருந்த இடத்தில் அழுந்த முத்தமிட்டான் அக்னி. அந்த முத்தத்தை கண்களை மூடி அனுபவித்தவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போக, அதை ரசித்தவன் அவளின் கன்னத்தை வருடியவாறு, “இது ரொம்ப அழகா இருக்கு.” என்று சொல்லி அவளின் கன்னத்திலும் முத்திரையை பதித்தான்.

கன்னத்தில் தன் இதழை அழுந்த பதித்தவாறு கட்டிலில் அவளை சரித்து அவளிதழிலும் அவன் முத்தமிட போக, இரு இதழ்களுக்கும் நடுவில் விரல் வைத்து தடுத்த அருவி குறும்பாக, “இது தப்பில்லையா மஹி?” என்று கேட்டாள். அதில் அவளை பொய்யாக முறைத்தவன், “கடைசியா ஒரு தடவை ஜானு” என்றுவிட்டு தன் விரல்களாலும், இதழ்களாலும் அவள் மேனியை மீட்ட ஆரம்பிக்க, அவளும் அவனுள் அடங்கித் தான் போனாள்.

அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடியது. அறை வாசலில் மண்டியிட்டு அமர்ந்து அறைக்கதவை லேசாக வருடியவன், “ஜானு, நான் உனக்கு எந்த உறவுமில்லையா? நான் உனக்கு யாரோவா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டுவிட்டு அதற்கு மேல் முடியாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட, அறைக்குள் அறைக்கதவின் மேல் சாய்ந்தமர்ந்து வாயை பொத்தி அழுதுக் கொண்டிருந்தாள் அருவி.

தன் வயிற்றை கட்டிக் கொண்டு, “பட்டு, என்னை மன்னிச்சிடு டா! எல்லாமே என்னால தான். நான் தான் உன்னை கொன்னுட்டேன். உன்னை இழந்துட்டேன்.” என்று கதறியவளுக்கு மட்டுமே தான் இழந்த இழப்பின் அளவு எத்தகையது என்று தெரியும்.

அவளுடைய நினைவுகளோ அன்று தன் பிறந்தநாளிலிருந்து நடந்த நிகழ்வுகளை மீட்ட தொடங்கியது.

அன்று வீட்டிற்கு செல்லாது மாலை வரை அங்கேயே தன்னவனுடன் நேரத்தை கழித்தாள் அருவி. ஒவ்வொரு நொடியும் தன்னவனின் அருகாமையை சுகமாக அனுபவித்தவளுக்கு சுத்தமாக தன் அம்மாவின் நினைவு வரவே இல்லை.

அக்னியுடன் அவள் சதுரங்க விளையாட்டை விளையாட, ஏனோ அக்னியின் விவேகத்தின் முன் அவளால் ஜெயிக்கவே முடியவில்லை. அவனும் தன்னவள் என்று விட்டுக்கொடுக்காது போட்டியுடனே விளையாட, அவளுக்கும் தன்னவனின் அந்த குணம் பிடித்துப் போக தான் செய்தது.

சட்டென்று தன் தோளில் சுரண்டலை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவள், தன்னெதிரே முகத்தை வேறுபுறம் திருப்பிய வண்ணம் கையில் ஒரு பெட்டியுடன் நின்றிருந்த ராகவ்வை புரியாமல் பார்த்தாள்.

அவனோ எங்கேயோ பார்த்துக்கொண்டு, “ஹேப்பி பர்த்டே!” என்று சொல்ல, அவனின் செய்கையில் வாய்விட்டு சிரித்தவள், “என்னை சாகு, தனியா பேசிக்கிட்டு இருக்க?” என்று கேலி செய்ய, அதில் அவளை முறைத்தவன் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல போனான்.

“அச்சச்சோ! சாகு…” என்றவாறு அவன் முன் சென்று குறும்புப் புன்னகையுடன் அவள் நிற்க, அக்னியோ அவர்களிருவரை கன்னத்தில் கை வைத்துக்கொண்டு புன்னகையுன் பார்த்திருந்தான்.

தன் கையிலிருந்த பெட்டியை டீபாயின் மேல் வைத்து ராகவ் அதை திறக்க, அதில் தனக்கு பிடித்த ப்ளக் ஃபோரெஸ்ட் கேக் இருப்பதை பார்த்து குதூகலமான அருவி, “ஹேய் சாகு! ஹவ் ஸ்வீட் யூ ஆர்.” என்றவாறு ஓடிச்சென்று கேக்கின் முன் அமர்ந்துக் கொண்டாள்.

ராகவ்வும் சிரிப்புடன் அவள் தலையை செல்லமாக கலைத்துவிட்டு கத்தியை அவள்புறம் நீட்ட, அவளும் தன் புது உறவுகளுடன் கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினாள். அப்போது தான் அவளுக்கு அந்த நியாபகம் வந்தது.

அந்த நினைவில் பதறிய அருவி, அக்னியிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு வேகமாக சென்றாள். வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்தவள், நேராக சென்று நின்றது என்னவோ மோகனாவின் அறை முன் தான்.

வாசலில் அவள் நிற்கும் போதே அறையிலிருந்து விசும்பல் சத்தம் கேட்க, கதவை திறந்துக்கொண்டு  உள்ளே சென்றவளின் கண்ணில் பட்டது என்னவோ தன் கல்யாண புகைப்படத்தை கையில் வைத்து அழுதுக் கொண்டிருந்த தன் அம்மாவின் கோலம் தான்.

-ஷேஹா ஸகி