ஆட்டம்-2

ஆட்டம்-2

ஆட்டம் 2

ஒரு வருடம் ஒன்பது மாதத்திற்குப் பிறகு,

நியூயார்க், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா.

இரு வரிகளில் அவளை

நிரப்பிட இயலாத

தெய்வம் தந்த கவிமலர் அவள்

பிஞ்சு பாதங்களின் தடையில்லா உதைகளையும், ரோஜா இதழ்களினும் மென்மையாய் இருந்த ஞ்சு கரத்தின் ஸ்பரிசத்தையும், பளிங்காய் பால்மம் நிறைந்த மேனியையும், இருள் வானாய் பட்டுப்போல் மின்னிய அடர் சிகையையும், சிறு துளியாய் பேரழகுச் சேர்க்கும் செவி மச்சத்தையும், பிறை நெற்றிக்குக் கீழ் வைரமாய் ஜொலித்த திராட்சை விழிகளையும், விழிகளுக்கு இடையே எடுப்பாய் இருந்த தாமரை மொட்டு நாசியையும், இரத்தின சிவப்பில் திறந்திருந்தச் செப்பு இதழையும் என இருவரிகளில் அடக்க முடியாதச் சிறிய வைரமாய், எதிர்காலத்தில் யாருக்கும் படியாத ஒருவனைக் கண்டம் விட்டு கண்டம் சென்று, ஆட்டம் காண வைக்கும் இளவரசியை, இறைவன் வரமாய் விஜயவர்தன், ரஞ்சனி தம்பதியருக்குத் தந்திருந்தான்.

உத்ரா விஜயவர்தன். தற்போது விஜயவர்தனுக்கும் ரஞ்சனிக்கும் இருக்கும் ஒரே செல்வம். அவர்களின் செல்ல மகள். உறவுகள் இன்றி நாட்டைவிட்டு, தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரே ஆறுதல் அவர்களின் குட்டி இளவரசி. பிஞ்சு பிஞ்சாய் இருக்கும் கை, கால் விரல்களை நீவி, மகளின் பால்கோவா கன்னத்தை வருடி, நெற்றியில் முத்தமிட்டு, மகள் கீழ் பல் தெரியச் சிரித்தால் போதும் இருவருக்கும், மனதில் இருக்கும் பாரம் அனைத்தும் இறங்கிவிடும்.

இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார் ரஞ்சனி.

வைரக்குட்டிசக்கரக்கட்டிகன்னுக்குட்டிவெள்ளக்கட்டி” மகளை எதிரில் அமர வைத்துவிட்டு பொம்மையைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, மகளை ஓர விழியால் பார்த்தபடியே ரஞ்சனி கொஞ்ச, அதைக் கண்ட சிறிய உத்ரா, படபடவெனக் கால் கொலுசு சிணுங்க, அன்னையிடம் தவழ்ந்து வந்து அவரின் மடியில் இருந்த பொம்மையைத் தள்ளிவிட முயற்சித்தவள், அன்னையின் மடியில் தொப்பென விழுந்து சிணுங்கினாள்.

அவளின் அன்னை அவளுக்கு மட்டுமாம்’ என்றிருந்தது அவள் தன் பிஞ்சு கைகளை வைத்து அன்னையின் உடையை இறுக்கிப் பிடித்தது.

மகளைத் தூக்கி அவள் வயிற்றில் முகம் வைத்து குறுகுறுப்பு மூட்டிச் சிணுங்கலை நிறுத்தி சிரிக்க வைத்தவர், மகளை அணைத்து உறங்க வைக்க முயல, அப்போதுதான் பாலைக் குடித்து முடித்தவளும் உறங்க முற்பட்டாள்.

உத்ராவை மேலே போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த ரஞ்சனியின் விழிகளில் நீர் திரண்டது. அத்தனை உறவுகள் கணவனுக்கும் தனக்கும் இருந்தும் இப்படித் தனியாக இருக்க வேண்டிய நிலையை எண்ணி.

பணத்தைப் பற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை. கையில் படிப்பு இருவருக்கும் இருக்கிறது என்ற தன்னம்பிக்கை அவருக்கு அதிகமாகவே இருந்தது. இப்போதைக்கு உத்ராவை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும் என்ற எண்ணமே அவருக்கு.

ஆனால், குடும்பம் பற்றியே அவருக்கு மனம் சுற்றியிருந்தது. கணவர் விஜயவர்தன் வெளியே காட்டவில்லை என்றாலும் உள்ளுக்குள் குடும்பத்தையும் தனது அக்காவையும் நினைத்து வேதனைப்படுவதை அவர் அறிவாரே.

மனம் யோசித்துக் கொண்டிருந்தாலும், மகளைத் தட்டித் தூங்க வைத்து, தொட்டிலில் மகளைக் கிடத்திவிட்டு மகளையே பார்த்திருந்தவர், எங்கனால உனக்கும் கஷ்டம் அம்மு என்று மனதுக்குள் மருகினார்.

ரஞ்சனி” என்றழைத்தபடி வந்த விஜயவர்தன் மனைவியின் தோளில் கை வைத்தபடி, மகளைப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். “என்ன இப்பதான் மொத தடவை மகளை பாக்கறீங்களா?”கணவனைத் திரும்பி பார்த்தபடியே ரஞ்சனி சிரித்தபடி கேலிச் செய்து கிசுகிசுக்க,

அப்படியே எங்கக்கா மாதிரி இருக்கா இல்ல?”ன்று குனிந்தவர் மகளின் உள்ளங்காலில் அழுந்த முத்தமிட்டு நிமிர, தூக்கத்தில் ஒரு நொடி சிணுங்கிய அவர்களின் ரோஜா குவியல் மீண்டும் உறங்க, கணவனின் தோளில் சாய்ந்த ரஞ்சனி,

நீங்களும் உங்க அக்கா மாதிரிதான் இல்ல” என்றார் மகளைப் பார்த்தபடியே.

அக்கான்னு சொல்ல முடியாது. அம்மாவா இருந்தா அக்கா எனக்கு” என்றவருக்கு குரல் கரகரக்க, கணவனிடமிருந்து விலகிய ரஞ்சனி, சமையலறைக்குள் செல்ல, மனைவியைப் பார்த்தவருக்கு தன்னவளின் முதுகு குலுங்குவது தெரிந்தது.

நெற்றியில் கை வைத்தவர், ச்ச’ தனக்குத்தானே கூறிவிட்டு, தன்னை முதலில் சமன் செய்தார். அனைத்து உறவையும் ஒதுக்கி வைத்தவர் ரஞ்சனியின் கணவனாகச் சமையலறைக்குள் செல்ல, ஓரமாக நின்று அழுது கொண்டிருந்தார் அவர்.

ரஞ்சனி ஸாரிமா. இங்க பாரு. இனிமே நான் யாரையும் ஞாபகப்படுத்த மாட்டேன். ப்ளீஸ்விஜயவர்தன் சமாதானம் செய்ய, சட்டெனத் திரும்பி கணவரைக் கட்டிப்பிடித்தவர் அனைத்தையும் கணவனிடம் கொட்ட ஆரம்பித்தார்.

எனக்கு யாரை நினைச்சும் கவலையா இல்ல. நீரஜாவை நினைச்சாதாங்க வேதனையா இருக்கு. அன்னிக்கு நாம கொஞ்சம் அவசரப்படாம இருந்திருந்தா இந்த நிலை அவளுக்கு இல்ல. எல்லாமே என்னால தான். நீங்க சொல்ல சொல்லக் கேக்காம என் பிடிவாதத்துனால தான் எல்லாமே. சுயநலவாதி நான். என்னால எல்லாரோட சந்தோஷமும் போச்சு.

என்னால என் பிரண்ட் வாழ்க்கைல தனியா நிக்கறா. ரொம்ப வேதனையா இருக்கு. என்னால நீங்க உங்கள அப்பா, அம்மா மாதிரி பாத்துக்கிட்டஉங்க அக்கா மாமாவை விட்டுட்டு வந்துட்டீங்க. அதுவும் அவங்கள தலைகுனிய வச்சுட்டோம்னு ரொம்பவே உறுத்துதுங்க. அதுவும் நீரஜா கல்யாணமே வேணாம்னு சொல்லி இருக்கறது எல்லாம் என்னால ஏத்துக்கவே முடியல. எல்லாம் நான் பண்ண வேலையாலதான். அவ மனசுல எத்தனை ஆசை இருந்துச்சு, எவ்வளவு கனவு இருந்துச்சுனு தெரிஞ்சும்ஆனா, இப்ப ஒண்ணுமே வேணாம்னு இருக்காளே அவ.

காலேஜ் சேந்த நாள்ல இருந்து என்னை தனியாவே விட்டதில்ல அவ. பணம் பாத்து என்கிட்ட அவ பழகுனதும் இல்ல. உங்க வீட்டுலையும் அவங்க பொண்ணு மாதிரி என்ன பாத்துக்கிட்டாங்கஎங்கையுமே என்ன விட்டிட்டு போனதே இல்ல நீரஜா. அவ செஞ்ச ஒரே ஒரு தப்பு உங்களை எனக்கு அறிமுகப்படுத்துனது தான். நானும்தான் தப்பு பண்ணிட்டேன்ங்க. நானும் உங்ககிட்ட மறைச்சிருக்க கூடாது. ஆனா, என்னால முடியல. இதை யோசிச்சு யோசிச்சே பைத்தியம் ஆகிடுவேன் போலங்க என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்து கதற, அழும் வரை அழட்டும் என்று விட்டவருக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

மனைவியின் கன்னத்தைப் பற்றி நிமிர்த்தியவர், இங்க பாரு நடந்தது நடந்திடுச்சு. இனி யாருனாலையும் எதுவுமே பண்ண முடியாது. மாத்தவும் முடியாது. விதி, காலத்துக்கு ஏத்த மாதிரிதான் நாம நம்மள மாத்திக்கணும்என்றவருக்கும் விழிகள் கலங்கி இருந்தது, அக்காள் மகளை நினைத்து.

எங்களை மன்னிச்சிடு நீரஜா என்று மனதுக்குள் மானசீகமாக மன்னிப்பைக் கேட்டார்.

நீரஜாவை அப்படி எல்லாம் மாமா விட மாட்டாருமா. கண்டிப்பா அவளுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சு வைப்பாரு. அவரோட பிடிவாதம் உனக்கு தெரியாது” சிம்மவர்ம பூபதியின் குணத்தையும் வீம்பையும் அறிந்தவராய் விஜயவர்தன்கூறி மனைவியைத் தேற்ற, அவரும் தலையை ஆட்டினார்.

ஆனால், அந்தோ பரிதாபம் யாரும் அறியவில்லை நீரஜாவின் பிடிவாதத்தையும் ழுத்தத்தையும். தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்வாள் என்பது உண்மைதான் என்பதற்கேற்ப இருந்தது அங்கு.

அரிமா அண்ணாக்கும் அதியரன் அண்ணாக்கும் பேச்சு வார்த்தை இல்லையாமே?”நீரஜாவின் சகோதரர்கள் பற்றி ரஞ்சனி கேட்க, மனைவியைப் பார்த்திருந்த விஜயவர்தன் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் விழுந்தன.

உனக்கு எப்படி தெரியும்?’ என்பதுபோல இருந்தது அவரின் ஆளைத் துளைக்கும் பார்வை.

நான் சொன்னா கோபப்பட மாட்டீங்களே?”ச்சிலை விழுங்கியபடியே ரஞ்சனி கூற, கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிய விஜயவர்தன், “ம்ம்” என்றார்.

நானும் கோதை அண்ணியும் பேசிட்டுதான் இருக்கோம்” என்று ரஞ்சனி விஷயத்தை உடைக்க, விஜயவர்தன் திகைத்துப் போனார். கோதை அதியரனின் மனைவி. அதாவது நீரஜாவின்இரண்டாவது அண்ணனின் மனைவி. (நீரஜா வீட்டிற்கு முதல் வருடத்திலிருந்தே சென்று பழகியவளுக்கு நீரஜாவுக்கு அனைவரும் என்ன முறையோ அதே முறைதான் ரஞ்சனிக்கும்.)

என்ன சொல்ற ரஞ்சனி. எத்தனை நாளா இது நடக்குது?” அவர் அதட்டினார். இருக்கிற துன்பம் போதாதா என்றிருந்தது அவருக்கு.

இரண்டு மாசமாதாங்க” ரஞ்சனி கூற, மனைவியைக் கடுமையானப் பார்வை பார்த்தார். கணவனின் கோபம் எகிறிக் கொண்டிருப்பதை உணர்ந்த ரஞ்சனி,

உங்களுக்கென்ன காலைல போனா சாயந்திரம் வருவீங்க. குழந்தையை எப்படி பாத்துக்கிறதுனு தெரியாம முழிச்சது நான்தான். என்னதான் நான் டாக்டர்னாலும், பெரியவங்க இருந்து சொல்ற மாதிரி வருமா. அதுதான் அண்ணி ஃபோன் பண்ணப்ப பேசுனேன் மனைவி கூற, அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் விஜயவர்தன்.

அப்பதான் இதெல்லாம் தெரிஞ்சுது. நம்ம வந்த அப்புறம் கல்யாணம் நின்னது. நீரஜா கல்யாணம் வேணாம்னு சொன்னது. அண்ணாங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டதுனு” மனைவி கூற, விஜயவர்தனுக்கோ உள்ளுக்குள் மனம் பிசைந்தது.

என்ன பிரச்சனை?” குரல் கமற அவர் சமையல் மேடையில் கையை ஊன்றி தலையைத் தாழ்த்தியபடி கேட்க, அவர் வலி புரிந்தது ரஞ்சனிக்கு.

கணவரின் தோளில் கை வைத்தவர், அரிமா அண்ணா உங்க மாமாகிட்ட அவனை நீங்க வைக்கிற இடத்துல வச்சிருக்கலாம்னு உங்கள திட்டியிருக்காரு கோபத்துல ரஞ்சனி கூற,

அவன் கோவக்காரன். நீரஜாவும் க்காவும் அழுததை அவனால தாங்கியிருக்க முடியாது. அதுவும் இல்லாம பேசறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டான்” என்றார் விஜயவர்தன். அப்போதுகூட அவரால் அரிமா பூபதியை விட்டுக் கொடுக்கமுடியவில்லை.

ம்ம். அதுக்கு அதியரன் அண்ணா தேவையில்லாம பேசாத அரிமா. மாமா வேணும்னு இப்படி பண்ண மாட்டாருன்னு சொல்லவாக்குவாதமாகி இரண்டு பேருக்கும் கைகலப்பு மட்டும்தான் ஆகலைன்னு அண்ணி சொன்னாங்க. அப்புறம்அப்புறம்...” ரஞ்சனி இழுக்க, விஜயவர்தனுக்கு இதயம் டமார் டமார் என்று அடித்தது.

தலையை மட்டும் திருப்பி மனைவியைப் பார்த்தவர், என்னாச்சு?” ன்றிட, உங்க அக்காவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு இந்த பிரச்சனை ரஞ்சனி கூற, யாரோ இதயத்தில் இறக்கிய கத்தியைத் திருகுவதுபோல இருந்தது விஜயவர்தனுக்கு.

தலையைத் தாழ்த்தியவரின் முதுகு குலுங்க, கணவனின் முதுகை நீவிய ரஞ்சனி, அப்பகூட நான் செத்துட்டா என் தம்பிய எதுவும் பண்ணிடாதீங்கனு சொல்லியிருக்காங்க. ஆனா, நல்லவேளை எதுவும் ஆகல. காப்பாத்திட்டாங்கஎன்றவருக்கும் கண்ணீர் வழிந்தது.

இப்ப என்ன நிலைமை அங்க?” தலையை நிமிர்த்தாது அவர் கேட்க, ரஞ்சனி, “சென்னைல அண்ணாங்க இரண்டு பேருக்கும் சேத்தி கட்டிட்டு இருந்த வீடுங்களுக்கு இடைல சுவர் வச்சு கட்டிட்டாங்களாம்” என்றார்.

அப்ப நீரஜா?” தவிப்புடன் விஜயவர்தன் வினவ, அவரின் தவிப்பை உணர்ந்த ரஞ்சனிக்கு உயிர் வரை அது வலித்தது. அவரின் வலி அவர் மனையாளின் வலி அல்லவா.

நீரஜாவைப் பற்றிய தகவல்களை அவர் கூற, அவருக்கோ உச்சக்கட்ட மன உளைச்சலாய் இருந்தது.

வாழ்க்கையை ஏன் வீண் செய்கிறாள்?” ன்ற கோபம் ஒரு பக்கம் என்றால், “அதற்கு நீயும் காரணம்” என்றது அவரின் மனசாட்சி.

திடீரென மகளின் அழும் சத்தம் கேட்க, இருவரும் படுக்கை அறைக்கு விரைய, அன்னை, தந்தையை பார்த்தவளோ பாதி பொக்கையாய் சிரித்தாள்.

அட திருட்டுப் பாப்பா. அழுகிற மாதிரி நடிச்சா எங்கள ஓடி வர வைக்கிற?” மகளைத் தூக்கி அந்த வெண்மேகக் கன்னத்தை அதரங்களால் கடித்த ரஞ்சனி மகளைக் கொஞ்ச, கிளுக்கிச் சிரித்தது, தந்தையிடம் செல்ல அன்னையிடம் இருந்து உந்தியது அந்தக் குட்டித் தேவதை.

மகளை வாங்கிய விஜயவர்தன், குட்டி வைரத்துக்கு என்ன வேணும்?” கேட்க, அவளோ தகப்பனின் முகத்தைத் தன் குட்டி விரல்களால் தொட்டு தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, ரஞ்சனி சமையல் அறைக்குள் செல்ல, மகளுடன் விளையாடியபடியே பின்னாலேயே சென்ற விஜயவர்தன், வேற என்ன கோதை சொல்லுச்சு?” வினவ,

இன்னும் ஒரு வாரத்துல நீரஜா சேர்ந்த கோர்ஸ் முடியுதாம். வந்த அப்புறம் உங்க மாமா ஏதோ பேசலாம்னு முடிவுல இருக்காரு போல” என்றார் சமையலைப் பார்த்தபடியே.

கண்டிப்பா நீரஜாவை தனியா விட்ற மாட்டாங்க ரஞ்சனி” முழு நம்பிக்கையுடன் கூறினார்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் பாருங்க. கோதை அண்ணி மறுபடியும் ப்ரெக்னென்ட்டா இருக்காங்களாம்” கூற, “அபிக்கும், விக்ரமுக்கும் ஒரு தங்கச்சியா?” சிரிப்புடன் கூறியவர், “குட்டி வைரத்துக்கும் விளையாட மினி வைரம் ரெடி பண்ணலாமா?” மகளைப் பார்த்துக் கேட்க, என்ன புரிந்ததோ அந்தக் குட்டித் தக்காளிக்கு, வெடுவெடுவென்று தலையை ஆட்ட, கணவரின் இடையில் கிள்ளிய ரஞ்சனி, “பர்ஸ்ட் உத்ராக்குஇரண்டு வயசாவது ஆகட்டும்இல்லையா தங்கம்?”ன்றார் மகளின் தாடையைக் கொஞ்சியபடியே.

Leave a Reply

error: Content is protected !!