பகுதி 36
காற்றைக் கூட கண்டு விடலாம் போல
ஆனால் உந்தன் காதலைக் காண தான் வழியில்லை
எரிமலையின் சீற்றத்தைக் கூட தெரிந்து விடலாம் போல
ஆனால் உந்தன் சீற்றத்தைத் தான் தெரிந்துக் கொள்ள முடியவில்லை
புயலின் தாக்கத்தைக் கூட உணர்ந்து விடலாம் போல
ஆனால் உந்தன் மயக்கத்தைத் தான் உணர முடியவில்லை அன்பே
என்னால்…….
திருமணத்திற்கு முதல் நாள், எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையை கையில் எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் நடமாடிக் கொண்டு என கல்யாண வேலை, வீட்டில் கலைக் கட்டத் தொடங்கியது. ஆனால் பிரஜீயை மட்டும் ஒரு வேலையும் செய்ய விடாமல், சாப்பாடு மேஜையின் ஒரு நாற்காலியில், சரஸ் உட்கார வைத்து விட்டார். ஆம், புதிதாக உணவு மேஜையை, சரஸின் இடுப்பு வலியியனால், கீழே அமர்ந்து எழ முடியாத காரணத்தினால், அவர் மகன்கள் வாங்கியிருந்தனர்.
காணாததற்கு காலை உணவு, சாப்பிட்டு முடித்த பின், பிரஜீயிடம், தான் வாங்கி அரைத்த மருதாணியை கொடுத்து, வைக்கச் சொன்னார். “மருதாணி வைப்பியா பிரஜி இல்ல கோன் வைப்பியா?” எனக் கேட்டு, அவரே “இதையே உட்கார்ந்து வை பிரஜி, கைக்கும் நல்லது, உடம்புக்கும் குளிர்ச்சி, கோன்லாம் கெமிக்கல்… வேணாம் மா” என அவரே பதிலும் சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
அவளோ “இப்போ எதுக்கு? இரவு வைக்கலாமே” என எண்ணி, திரும்பவும் அந்தப் பக்கம் வந்த சரஸிடம், அதைக் கேட்க, அவரோ “நைட்டு பொண்ணு வீட்டுல இருந்து மண்டபத்துக்கு வந்திருவாங்க மா, அவங்கள அழைக்க போகணும்மா, வேலை இருக்கும், அதுனால இப்பவே வை, நாளைக்கு ஏழுக்கே முகூர்த்தம்கிறதால சொந்தக்காரவங்களா இன்னிக்கே வந்திருவாங்க, சாப்பாடு வெளியவே வாங்கிக்கலாம், அதுனால நீ மருதாணி வச்சிட்டு ரெஸ்ட் எடு” என்று விளக்கமளித்து விட்டு, பக்கத்து வீட்டு பெண் விசாலியை அழைத்து அவளுக்கு இரண்டு கைகளிலும் வைத்து விட சொன்னார். அதற்குள் ரங்கன் அழைக்கவும் சென்று விட்டார்.
அந்தப் பெண் விசாலியும், பிரஜீயை போன்று திருமணம் முடிந்து ஒரு வயது குழந்தையோடு இருந்ததால், பிரஜி அவளோடும் ஒட்டிக் கொள்ள, அவர்களும் நன்றாக பழகி, உதவிகளும் செய்தனர். நாளை திருமணத்திற்கு, அவர்களை அழைத்தும் இருந்தனர்.
விசாலியிடம் பிரஜி “அக்கா, இடது கைல நானே வச்சுக்கிறேன். வலது கைல நீங்க வைங்க” எனச் சொல்லி விட்டு வைக்க ஆரம்பித்தாள். “ம்ம்… சரி பிரஜி, நல்லா வை அப்போ தான் கை நல்லா சிவக்கும், அதுல தான் தெரியும், நீ அண்ணன எவ்ளோ விரும்புறன்னு… இம்ம்…” என அவளை கிண்டல் செய்தாள்.
அதற்குள் விசாலியின் மைந்தன் கத்தி ஊரைக் கூட்ட “பிரஜி, நீ வச்சிட்டு இரு, நான் அவன தூங்க வச்சிட்டு வர்றேன்” என்று கிளம்பிச் சென்றாள்.
பிரஜீயோ விசாலியின் பேச்சால், நேற்று மாடியில், சஞ்சீவ் மீது கல்லை எறிந்ததும், அதனைத் தொடர்ந்த நினைவுகளில் மூழ்கிக் கொண்டே, வெட்கச் சிரிப்போடு, மருதாணியை வைத்துக் கொண்டிருந்தாள்.
நீரை பருகியதும், அவனே கைப்பிடியாக அவளைக் கீழே அழைத்துச் சென்று, மின்விசிறியை சுழல வைத்து, பழச்சாறு தந்து, மேலும் அவளை உபசரித்தான்.
ஆனால் இதையெல்லாம் பார்த்த சரஸோ “என்ன பிரஜி இவ்ளோ கவனிப்பு நடக்குது? டேய் சஞ்சீ … உனக்கு அம்மா, நான் ஒருத்தி இங்க இருக்கேன் டா” என அவனைக் கேலி செய்ய, அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல், உதட்டைக் கடிக்க, அவனோ தன் அன்னைக்கும் மீதம் இருந்த பழசாறை நீட்ட, அதை வாங்கிக் கொண்டே “ஏன் பிரஜி, இன்னிக்கு மழ வரப்போகுதா? இதுல எதுவோ இருக்குதே? என்னமா செஞ்சான் உன்ன?” எனச் சஞ்சீவை பற்றி சரியாக கணித்துத் துருவினார்.
சஞ்சீவ் “இல்ல… மா…” எனத் தொடங்கும் முன்னே, அவள் “இல்ல மா, மாடி ஏறி இறங்குனது, பட படன்னு வந்திருச்சு, அதான் அவர்ட்ட சொன்னேன்” என்று அவனோடு சேர்த்து, தன்னையும் காப்பாற்றிக் கொண்டாள். பின்னே கல் விட்டு எறிந்து, விளையாடினேன் என்றா சொல்ல முடியும்?
உடனே சரஸ், அவளைப் பிடித்துக் கொண்டார், “இதுக்கு தான் வேணாம்ன்னு சொன்னேன், நீ கேட்குறியா? என்ன பண்ணுது பிரஜி?” என்று அவரும் அவளைக் கவனிக்கத் தொடங்கி விட்டார். பிரஜீக்கு ‘ஹையோ…’ என்று உள்ளே நொந்தாலும், அவர்களின் பாச மழையில் இன்பமாய் நனைந்தாள்.
விசாலி “என்ன பிரஜி? சஞ்சீவ் அண்ணனப் பற்றி கனவா, முகமெல்லாம் சிரிப்பா இருக்கு? இல்ல நாளைக்கு நடக்கப் போற ரீஷப்சன பற்றி கனவா?” என்று கேலி செய்தாள்.
“இல்ல… கா” என அவள் வெட்க சிரிப்பிலேயே, “ஏதோ இருக்கு… இம்… இம்… என்ஜாய், சரி இங்கக் கொடு” என அவளின் வலது கையில் மருதாணி வைத்து விட்டாள்.
விசாலி, அவளுக்கு, கை விரல்களின் மேல் பகுதியில் குப்பிப் போன்று வைத்து, விரல்களின் நடுவில் கம்பிப் போல வைத்து, உள்ளங்கையில் வட்டமாயும், அதை சுற்றி சிறு சிறு வட்டங்களையும் வைத்து விட்டாள். கையின் மேற்புறத்திலும் வைத்து விட, “அச்சோ அக்கா… போதும் கா…” எனக் கூற, “நீ சும்மா இரு, இப்படில்லாம் வச்சா தான் அழகா இருக்கும். ஆமா இன்னிக்கு… மாடில வேல நடக்கலையா?” என்று வினவினாள்.
“நேற்றே காங்ரிட் போட்டுட்டாங்க கா, இன்ன இரண்டு மூனு நாள் கழிச்சு தான் பூசுறதுக்கு வருவாங்க கா, இப்ப கல்யாண வேலை வேற இருக்கா, அதுனால மாமா, ஒரு நாலு நாள் கழிச்சே வாங்கன்னு சொல்லிட்டார் கா” என்று விளக்கம் கூறும் போதே, “பிரஜி…” எனக் கூவிக் கொண்டு, அவன் தான்….. சஞ்சீவ்… வந்தான்.
மேலும் “இங்கப் பாரு… யாரு வந்திருக்காங்கன்னு” எனச் சொல்ல, விசாலி “நான் வர்றேன் பிரஜி” என்று தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
அவளும் “சரி… கா” என அவளுக்கு விடைக்கொடுத்து விட்டு, எழுந்து வரவேற்பறைக்கு வருவதற்குள், “பர்ஜி… த்த…” என சந்தோஷியின் குரல் முன்னேயும், பின்னே அவள் ஓடி வந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்.
கையில் மருதாணி இருப்பதுக் கூட மறந்து… குனிந்து “சந்தோஷி குட்டி……” என இருகையால், அவளை அணைக்கப் போக, “ஹை….. மது..ராணியா…” எனச் சந்தோஷி குதுகாலமிட, பின் தான் சுதாரித்தவள், அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “ஆமா டா… உனக்கு வேணுமா?” எனக் கேட்டாள்.
“இம்… விணும்…” எனக் கண்களை உருட்டிச் சொன்னது, “ஹேய்… சந்துக் குட்டி, இங்க வா… அதெல்லாம் வேணாம். அம்மா திட்டப் போறா” எனச் சந்தோஷியை ஷிவா அதட்டவும் தான், அவனைக் கவனித்தவள், “வாங்கண்ணா… அக்கா எப்படி இருக்காங்க? செல்வி, அம்மா எல்லோரும் நல்லா இருக்காங்களா?” எனக் கேட்டாள்.
“இம்… எல்லோரும் நல்லா இருக்காங்க மா” எனச் சொல்ல, சந்தோஷியைத் தூக்கி வைத்திருந்த சஞ்சீவ் “பிரஜி இவங்க நம்ம வீட்டுக்கு பக்கத்துல, அஞ்சாறு வீடு தள்ளி தான் இருக்காங்க, இப்ப ஏதேச்சையா ஷிவா சார பார்த்தேன், அவர் தான் காமிச்சார்” என விளக்கமளித்தான்.
“ஓ… அண்ணா நாளைக்கு கண்டிப்பா எல்லோரும் கல்யாணத்துக்கும், ரீசப்ஷனுக்கும் வந்திருங்க அண்ணா, நான் ஏற்கனவே அக்காக்கு போன் பண்ணி சொல்லிட்டேன், சோ கண்டிப்பா வரணும்” என்று அன்பு மிரட்டல் விடுத்தாள்.
“ஆமாம் மா, சிந்து சொன்னா, ஆனா நாளைக்கு ஆபீஸ் இருக்குமா எனக்கு. ஈவ்னிங் வர்றோம் கண்டிப்பா… இப்ப சஞ்சீவ் வந்து, வீட்ல சொல்லிட்டு தான் போனார். கண்டிப்பா ஈவ்னிங் வர்றோம்”
“சரி அண்ணா, ஆனா சிந்தாக்காவையும், செல்வி, சந்தோஷியும் வேணா காலைல எங்க கூடவே, அனுப்பி விடுங்களேன், சங்கீயும் வந்திருவாங்கள… ஆமா அவங்க எப்போ வர்றாங்க அண்ணா?” எனக் கேட்டாள்.
“இம்… சரி மா வீட்ல கேட்டுப் பார்க்கிறேன், அவங்களுக்கு ஓகேன்னா வரட்டும். இம்… இப்ப தான் வந்துட்டு இருக்காங்களாம், அவங்கள பிக் அப் பண்ண தான் ரயில்வே ஸ்டேஷன் கிளம்பினேன். சந்தோஷிய பார்த்தா நீ ரொம்ப சந்தோஷப்படுவன்னு, சஞ்சீவ் தான் இழுத்துட்டு வந்துட்டார். சரி, அப்படியே சஞ்சீவ இங்க இறக்கி விட்டுட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்று அவன் கூறவும், பிரஜி தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அவர்களின் வரவு, பிரஜீக்கு ரொம்பவும், சந்தோஷமாய் இருந்தது. டீ காபி அருந்தச் சொன்னதற்கு, “வேண்டாம் இருக்கட்டும் சஞ்சீவ், கிளம்புறோம், லேட் ஆகுது, குட்டிமா வா டா” என ஷிவா அழைக்க,
“ப்பா… ப்ளஸ்… பா…. நா வர்ல பா” என சஞ்சீவின் தோளில் இருந்துக் கொண்டு, அவள் மறுக்க, ஷிவாவோ “ஹே… சங்கீ அத்தைய, ஸ்ரீராம கூப்பிட போ வேணாமா?” என அவன் கேட்க, அவளோ “அவங்களலாம் இங்க… கூட்டிட்டு வாறியா பா” என மூளையை கசக்கி சந்தோஷி யோசனை சொல்ல,
“ஏய் பிரஜி அத்த வீட்ல பங்க்ஷன் டா, பாவம் நாம அவங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுல, நாம நாளைக்கு வரலாம்” எனச் சமாதானம் செய்தான்.
ஆனால் சந்தோஷியோ “அப்பியா பர்ஜி த்த…” என விவரமாய், அவளிடம் கேட்டு சரி பார்த்துக் கொண்டாள். பிரஜீயும் “ஆமா டா குட்டி, நீ நாளைக்கு பட்டு பாவாடை எல்லாம் போட்டு, ஏஞ்சல் மாதிரி வரணும்… என்ன?” எனச் சமாதானப் படுத்திக் கொண்டே, சஞ்சீவின் கைகளில் இருந்த சந்தோஷிக்கு, காய்ந்த தன் மருதாணி விரலால், குழந்தையின் இரு உள்ளங்கையிலும் மருதாணியை சிறிய வட்டமாய் வைத்து விட்டாள்.
சந்தோஷியும், “அப்பின்னா… சரி” எனத் தன் தந்தையிடம் தாவி, “பாய் மாமா… பாய் த்த…” என விவரமாய் தன் உள்ளங்கையை வாயில் வைக்காமல், விரலை மட்டும் வாயில் வைத்து பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு சென்றாள்.
காலையில் எழுந்ததிலிருந்து தன் அன்னையின் நினைவில், எதிலும் ஒட்டாமல் இருந்த பிரஜீக்கு, மனம் முழுவதும், இப்போது சந்தோஷம் நிரம்பி இருந்தது. அவளைப் பார்த்த சஞ்சீவ் “இங்க வா…” என அவள் கை பற்றித் தங்கள் அறைக்கு அழைத்து சென்று தாழ் போட்டு, அவளை நோக்கி நகர்ந்தான்.
அவளோ “என்ன சஞ்சீவ்… என்ன பண்ணப் போறீங்க?” எனப் பயந்து பின்னே நகர்ந்தாள்.
“இத்தன நாளும், எவ்ளோ இம்சை படுத்தின? இப்ப மட்டும் ஏன் பயப்படுற பிரஜு” என மயக்கும் குரலில் கேட்டுக் கொண்டே, புன்னகையோடு, சுவற்றில் சாய்ந்தவளிடம் சென்றான். எப்பொழுதும் அவன் நெருங்கினாலே, அவள் மனம் பொறியில் மாட்டிய எலியாய் சிக்கித் தவிக்கும். இப்போதோ… கேட்கவே வேண்டாம், அவள் மனமும், மெய்யும் சேர்ந்து தவித்தன. ஆம், அவள் உடல் நடுங்க நின்றிருந்தாள்.
மேலும் அவன், அவள் அணிந்திருந்த நீல வண்ண சுடிதாரின், துப்பட்டாவை உருவினான். திடுக்கிட்ட பிரஜி, “ஐயோ… சஞ்சீவ்… என்ன இது?” என பயந்து, மேலும் “ஐயோ… சஞ்சீவ்… மருதாணி வச்சிருக்கேன்… வேணாம்…” என அழகாய், தலையை மறுப்பாக ஆட்டினாள்.
ஆனால் அவனோ, அவள் துப்பட்டாவை அளப்பது போல, இருகைகளிலும் இழுத்து, தன் கழுத்தில் போட்டுக் கொண்டு “என்னடி… வேணாம்…” என ஹஸ்கி குரலில் கேட்டுக் கொண்டே, அவளைப் பார்த்து கண்ணடித்து, சட்டென்று அவள் கழுத்தில் இருந்த, சமீபமாய் மாற்றிய புது மஞ்சள் கயிற்றை, தன் கையால் வெளியே எடுத்தான்.
அதில் இருந்து இரண்டு ஊக்குகளை எடுத்து, அவள் வலப்பக்கம் வந்து நின்றுக் கொண்டே, அவனின் வாயோ “சொல்லு… பிரஜி… என்ன வேணாம்…” என அதே குரலில், அவள் காதில் கேட்க, ஆனால் அவன் கையோ துப்பட்டாவை அவளின் சுடிதாரோடு சேர்த்து ஊக்கை மாட்டியது. பின் இடப்பக்கமும் துப்பட்டாவை போட்டு, ஊக்கை மாட்டி விட்டான்.
“இம்… இப்ப போலாம்” எனக் கை கட்டிக் கூறினான்.
ஒரு வித விடுதலை உணர்வோடு, தலைக் குனிந்து நாணத்தோடு சென்றவளை, மீண்டும் “ஒரு நிமிஷம்…” எனத் தடுத்து, அருகில் வந்த சஞ்சீவ், “நீ வேணாம்னு சொன்னது… எனக்கு வேணும் பிரஜு…” எனக் காதலாய் கசிந்துருகும் குரலில், கேட்டான்.
ஆனால் அவளோ தாமரையாய் சிவந்து “நான்…. என்ன… வேணாம்….. சொன்…னே…ன்” என அவள் தடுமாறினாள்.
நிஜமாகவே, அவன் செய்த திருவிளையாடலில், பிரஜீக்கு தான் என்ன பேசினோம், என்ன உளறினோம் என்றே மறந்து விட்டது. ஆனால் அவனோ, அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்ணுக்குள் உற்றுப் பார்த்து, கண்ணடித்து விட்டு, “யோசி… மை டியர் பொண்டாட்டி” என வெளியே சென்று விட்டான்.
அவன் சென்ற பின், அறைக்கு உள்ளேயே அமர்ந்து விட்டாள் பிரஜி. அவனைப் பற்றி நினைத்துப் பார்க்க, நினைத்துப் பார்க்க, தான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என எண்ணினாள்.
ஆம், பிரஜி சந்தோஷியை தூக்கக் குனியும் போதே, அவள் துப்பட்டா நழுவ முற்பட, சஞ்சீவ் தான் அதை சரி செய்தான். நல்ல வேளை, இது உணவு மேஜை அருகே நடந்ததால், வரவேற்பறையில் மெத்திருக்கையில் அமர்ந்திருந்த ஷிவாவின் கண்களில் படவில்லை.
அதன் பின் கவனமாய் கீழே குனியாமல் இருந்தாள், மேலும் சந்தோஷியை சஞ்சீவ் தூக்கிக் கொண்டான். ஏனென்றால், தன் மனைவி சந்தோஷியைக் கொஞ்ச, கீழே குனிந்து கஷ்ட்டப்படாமல் பார்த்துக் கொள்கிறானாம். அது பிரஜீக்கும் புரிந்தது, ஆனால் அவள் துப்பட்டாவிற்கு தான் புரியவில்லை, அவள் தோளில் நிற்காமல், நழுவிக் கொண்டே இருந்தது. பிரஜி மனதினுள்ளே, ‘ஹைய்யோ… இன்றைக்கு பார்த்தா நான் இப்படி சுடிதார் போட வேண்டும். அதுவும் ஷாலை ஊக்கு வேறு குத்தாமல்… சை!’ என நொந்துக் கொண்டாள்.
பிரஜி இன்று காலை, தன் தாய் தந்தை, நாளை வருவார்களா? வந்தால் நன்றாக இருக்குமே… இவனிடம் கேட்கலாமா? இல்லை வேண்டாம்… ஏதாவது ஏடாக்கூடமாய் சொல்லி வைப்பான்… என எண்ணி, தனக்குத் தானே வருந்திக் கொண்டு, அவர்களின் நினைவில், விருப்பமே இல்லாமல், குளித்து, ஏதோ கைக்கு அகப்பட்ட ஒரு சுடிதாரைப் போட்டாள். அதன் விளைவு இப்போது அனுபவிக்கிறாள். எனினும், அவள் மருதாணி கையோடு துப்பட்டாவைச் சரி செய்தாள். அதைப் பார்த்து தான், சஞ்சீவ் இப்படி உதவிப் புரிந்தான்.
இந்தச் சின்னச் செயலில், சஞ்சீவ் பிரஜீயின் மனதில் அவன் மீது உள்ள கோபத்தை அழித்து, அதன் சதவிகிதத்தை குறைத்துக் கொண்டிருந்தான். சொல்லாமலே, செய்யும் சின்ன சின்ன அன்பான செயலின் மூலம் கூட, பெண்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதை தெரியாமலே செய்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.
இத்தனை நாள் பிரிவில், பிரஜி அவனை எண்ணி தவித்தாள் தான். ஆனால் அந்த தவிப்பு, தன்னுடனே சில நாட்கள் இருந்து பழகிய, நெருக்கமான தோழியை பிரிந்த உணர்வே எனலாம். ஏனென்றால் இத்தனை மாதங்களும், இருவரும் ஒரே இடத்தில், ஒரே வீட்டில் ஒன்றாக பேசி, பழகி, சஞ்சீவ் அவளுடனே செலவழித்த நேரங்கள் என்ற அளவில் தான், அவன் அவளை பாதித்தான்.
ஆனால், அதற்கு நிகராகவே, தன் காதலை, அவன் தவறாக பயன்படுத்திய கோபமும், அவன் மேல் இருந்தது. இத்தனை நாட்களின் பிரிவில், அவன் முகத்தைப் பார்க்காதத் தருணத்தில், அவனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்தவளின் எண்ணத்தில், முடிவாய், தான் சண்டையிட்ட அன்று, அவன் சொன்ன வார்த்தைகளில் வந்து முடியும்.
‘ஆம், அன்று ஏதோ சொன்னானே, அரவிந்தன் வந்து சொல்வதற்கு முன்னேயே, அவன் தன்னை புரிந்துக் கொண்டு, காதல் கொண்டதாய்… ஒரு வேளை… அவன் சொன்னது உண்மை தானோ? ஆம், அவன் வந்து சொல்வதற்கு முன்பே, தன் மீது காதலாய் கசிந்துருக தானே செய்தான்’ என நல்ல விதமாய், இப்போது தான் அவள் மனம் ஆசுவாசம் அடைந்து, தன் கோபத்தை எல்லாம் ஒதுக்கி, சரியாய் கணிக்கத் தொடங்கியது.
ஆனால் மூளையோ ‘இம்… இருந்தாலும், அவன் உன்னை தொட்ட பின் தானே காதலாய் உருகினான்…’ என்று முரண்டியது. எனினும் மனம் அதை ஏற்கவும் இல்லை… விலக்கவும் இல்லாமல்… மதில் மேல் பூனை போன்ற நிலையில் இருந்தது.
அவள் அப்படியே அவனைப் பற்றி அலசிக் கொண்டிருந்த நேரத்தில், கதவு தட்டப்பட்டது. எழுந்து சென்று திறந்து பார்த்தவள், குழம்பினாள். ஏனெனில் அங்கு “ஹாய் பிரஜி…” என அழைத்துக் கொண்டு ரதி நின்றிருக்க, அவள் பின்னே சஞ்சீவ் நின்றிருந்தான்.
அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அவள் கையில், பயணம் செய்யும் போது கொண்டு செல்லும் ஒரு பையை போன்று ஒன்று இருந்தது.
அவளோ தன்னை மறந்தவளாக அதிர்ந்து, அதை முகத்தில் காட்டி விழித்துக் கொண்டிருக்க, “என்ன பிரஜி… வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா? நீங்க கூப்பிடலேன்னாலும்… நான் இங்க, இந்த ரூம்ல, உங்களோட தான் தங்கப் போறேன்” என்று சொல்லவும்,
‘என்ன இது, இவ பெட்டியும் கையுமா வந்து, இங்க தான் தங்கப் போறேன்னு வேற சொல்றா… என்ன நடக்குது இங்க?’ என்று தன் கணவனைப் பார்த்தவள், அவனோ கண் சிமிட்டிப் புன்னகைக்க ‘ஐயோ… அம்மா… மாமா… எங்க?’ என அவர்களைத் தேடி, அங்கிருந்தவாறே வரவேற்பறையில் தன் பார்வையை ஓட்ட, அங்கு சரஸ், அவர் வயதை ஒத்த பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவளைப் பார்த்த சரஸ், “பிரஜி… இங்க வா மா” என அழைத்து, அங்கு நின்றிருந்த பெண்மணியிடம் “இவ தான் என் மருமக, லஷ்மி” என அவருக்கு அறிமுகப்படுத்தி விட்டு, அவளிடம் “இவ தான், என் கூடப் பிறந்த தங்கச்சி, பிரஜி” எனச் சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார். “ஆனா… அம்மா நீங்க… இது வரைக்கும் என்ட்ட சொல்லலியே” என அவள் குழம்ப…
“நான் உனக்கு புரிய வைக்கிறேன் பிரஜி” என அவளுக்கு, ரதி உதவிக்கு வந்தாள்.
அதற்குள் “ஹே… வாலு… நீ அண்ணிய குழப்பாம இருந்தா சரி” என ஒரு ஆண்குரல் கேட்க, பிரஜி திரும்பிப் பார்த்தவள், திகைத்தாள். ஆம், அந்தக் குரலுக்கு சொந்தக்காரன், அவள் கணவன் சஞ்சீவ் போலவே இருந்தான். இருவரையும் நிற்க வைத்தால், அண்ணன் தம்பி என தாமதிக்காமல் அனைவரும் சொல்வர், தன் கணவனின் அண்ணன் மதனை விட, ஒன்று போல இருவரும் அப்படியே ஒரே ஜாடையில் இருந்தார்கள். பிரஜீக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது.
“ஏய் நீ போ சும்மா… நான் அம்மா அப்பாவோட காவியக் காதல் கதைப் பற்றி பிரஜீட்ட… சாரி அண்ணிட்ட சொல்லிட்டு வரேன். ஆமா பொண்ணுங்க இருக்க இடத்துல, உனக்கென்ன வேலை? கிளம்பு கிளம்பு… பெரியம்மா இவனுக்கு எதாவது வேலை இருந்தா கொடுங்க… சஞ்சீ அண்ணா நீங்களும் உட்காருங்க நான் சொல்றேன்” என்று தன் அம்மாவின் புராணத்தை ஆரம்பித்தாள் ரதி.
ரதி ஏன் சஞ்சீவையே வைத்தக் கண் வாங்கமால் பார்த்தால், என்று பிரஜீக்கு இப்போது புரிந்தது. தன் அண்ணனைப் போன்று இருக்கும் இவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு தான் பார்த்திருக்கிறாள், அப்புறம் எப்படியோ சொந்தத்தைக் கண்டுப் பிடித்திருப்பார்கள் போலும் என எண்ணினாள்.
அதற்குள் ரதி ஆரம்பித்திருந்தால், “ஒன்ஸ் அப் ஆன் எ டைம்… தேர் வாஸ் எ நர்சரி கார்டன்… அண்ட் தேர் ப்ளாசம்ட் டூ ப்ளவர்ஸ்… k வா… இதுக்கப்புறம் தன மெயின் பிச்சர்… சோ கவனிங்க…”
அதற்குள் ரங்கன் வந்து அங்கு செரும, அனைவரும் அமைதியாகினர். ஆனால் ஒரு குரல் மட்டும் “அப்போ தான் எங்கப்பா… லஷ்மிய பார்த்தாரு…” எனச் சொல்லிக் கொண்டிருக்க, அவளைத் திரும்பிப் பார்த்த ரங்கன் “என்ன லஷ்மி இவ தான் உன் பொண்ணா? அப்புறம்… நல்லா இருக்கியா?” எனக் கேட்டார்.
பிரஜீயோ “ஷ்… ரதி அமைதியா இருங்க” என அவளை உடனே ஒருமையில் அழைக்க முடியாமல், அவளை பன்மையில் அழைத்து நிறுத்தினாள்.
மாயம் தொடரும்………